இந்திய - சிறிலங்கா கடற்படைகளின் ஆறு நாள் கூட்டுப் போர்ப்பயிற்சி நான்காவது நாளான இன்றுடன் திடீரென நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ![]() இன்றுடன் இந்தப் போர்ப்பயிற்சி முடிவுக்கு வரவிருப்பதாக சிறிலங்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சண்டேரைம்ஸ் ஒன்லைன் தகவல் வெளியிட்டுள்ளது. திருகோணமலையில் துறைமுக, கடல்சார், மற்றும் கடற்கொள்ளை முறியடிப்பு சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடுவது குறித்து இருநாட்டுக் கடற்படைகளும் இணைந்து கடந்த 19ம் நாள் தொடக்கம் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இருநாடுகளினது கடற்படைகளையும் சேர்ந்த 16 போர்க்கப்பல்கள் மற்றும் படகுகள் இந்தப் பாரிய போர்ப்பயிற்சி நாளை மறுநாள் 24ம் நாள் வரை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென நான்காவது நாளுடன் இந்தப் பயிற்சி நிறைவடைவதாக சிறிலங்கா அதிகாரி கூறியுள்ள போதும், அதற்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை. சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள பாமக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. அத்துடன் இராமேஸ்வரம் மீனவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடியாகப் போர்ப்பயிற்சியை நிறுத்தக் கோரியும் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த எதிர்ப்புகள் காரணமாக போர்ப்பயிற்சி இடைநடுவில் கைவிடப்படுகிறதா அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளதா என்பது பற்றிய விபரங்கள் ஏதும் இன்னமும் தெரியவரவில்லை. |
Saturday, 24 September 2011
சிறிலங்காவுடனான ஆறுநாள் போர்ப்பயிற்சியை இன்றுடன் இடைநிறுத்துகிறது இந்தியா
யாழ்ப்பாண மக்கள் செய்த பாவம்தான் என்ன...?
| யாழ்.குடாநாடு தமிழ் பேசும் மக்களின் கோட்டையாக இருந்து வருகின்றது. அந்த கோட்டையைத் தகர்த்தெறியும் நோக்கில் சில விசமிகள் அதீத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் இந்த விசமிகளுக்குப் பின்னர் சகல அதிகாரம் கொண்ட ஒரு படையணி இயங்கி வருகின்றது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. அந்தளவுக்கு இந்த விசமிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் தமிழ் மக்களின் நிம்மதியைக் குலைத்து அவர்களைக் குகைக்குள் அடைக்கும் ஒரு திட்டமிட்ட நயவஞ்சகச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட நாளுக்கு மர்ம மனிதன், கிறிஸ் பூதம் என சில விசமிகளால் வேண்டத்தகாத செயற்பாடுகள் முடுக்கி விடப்பட்டிருந்தது. பின்னர் அதற்கு ஓய்வு கொடுத்து விட்டு தமிழர் பகுதிகளில் களவுகள் என்ற போர்வையில் அவர்களின் வாழ்வியலைச் சிதைக்கும் ஒரு சதிவேலை நடந்தேறுகின்றது. இக் கொடுமைகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் தமது வாழ்க்கைக் கொண்டு செலுத்தும் மனோ நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சறுக்கி வருகின்றனர். என்ன செய்வது? சிறுபான்மையினம் என்ற ஒரு சொற்பதத்தைக் கொண்டு அவர்கள் மீது சொல்லொண்ணாத் துன்பங்களைக் கட்டவிழ்த்து விடுவதென்பது நாம் என்ன பாவம் செய்தோம் எனக் கேள்வி கேட்கும் அளவுக்கு தமிழ் மக்களைக் கொண்டு செல்கின்றது. இத்துணை துன்பங்களுக்கும் காரணம், எமக்கென்று ஒரு தலைமைத்துவம் இல்லை என்பதுடன், நாம் எமது பிரதிநிதிகள் எனப் பாராளுமன்றம் அனுப்பியவர்கள் தமது சொந்தப் பிரச்சினைகளை முதன்மைப்படுத்திக் கொண்டிருப்பதுவுமே காரணம் எனலாம். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக நடந்தேறி வருகின்ற அட்டூழியங்களை எதிர்த்து எந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர் எனக் கேள்வி எழுப்பினால், கையை விரிப்பதைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. சில வேளைகளில் யாழ்ப்பாணம் எங்கு இருக்கின்றது என்று கேட்டால் அவர்கள் தமது கையை விரித்துத் தெரியாது என்று கூறும் அளவுக்கு அவர்களின் செயற்பாடுகள் அமைந்து வருகின்றது. களவுகள், கொலைகள், மர்ம மனிதன் என எல்லாவிதமான துன்ப, துயரங்களைத் தமிழ் மக்கள் மீது சுமத்தி, அதில் சுகம் காணுகின்றது அரசு. அதற்குத் துணைபோகின்றனர் எம்மில் சிலர். |
கடற்புலிகளின் போர்த்தந்திரங்களை இந்தியாவுக்குக் கற்றுக் கொடுத்தது சிறிலங்கா (படங்கள் இணைப்பு)
| இந்திய-சிறிலங்கா கடற்படைகள் திருகோணமலைக் கடற்பரப்பில் மேற்கொண்டு வந்த கூட்டுப் போர்ப்பயிற்சி ஒரு நாள் முன்னதாக- நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. போர்ப்பயிற்சியின் இறுதி நாளான நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவும், இந்தியாவின் ஏவுகணைப் போர்கப்பலான ‘ஐஎன்எஸ் சிவ்லிக்‘ இல் இருந்து இறுதிநாள் போர்ப்பயிற்சிகளை அவதானித்துள்ளனர். செடெக் உலங்குவானூர்தி மூலம் இவர்கள் இந்தியப் போர்க்கப்பலுக்குச் சென்றிருந்தனர். இந்தப் போர்ப்பயிற்சியின் ஒரு கட்டத்தில் கடந்த ஆண்டில் இந்தியக் கடற்படையில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ‘ஐஎன்எஸ்.சிவ்லிக்‘ இல் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்க இயந்திரத்துடன், கட்டப்பட இந்தப் போர்க்கப்பலில் ரஸ்ய - இந்திய ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் போர்ப் பயிற்சியில் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் ரண்விஜய், ஐஎன்எஸ் சிவ்லிக், ஐஎன்எஸ் காரியல், ஐஎன்எஸ் கஞ்சர், ஐஎன்எஸ் செரியம், ஐஎன்எஸ் கோரதீவ் ஆக ஆறு போர்க்கப்பல்களுடன் கடற்படை உலங்குவானுர்திகளும், டோனியர் கண்காணிப்பு விமானம் ஒன்றும் பங்குபற்றியிருந்தன. சிறிலங்கா கடற்படையின் சார்பில் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான சாகர மற்றும் சமுத்திர, ஏவுகணைப் போர்க்கப்பலான நந்திமித்ர, அதிவேக பீரங்கிப் படகுகளான பிரதாப, ரணஜய மற்றும் ஆறு அதிவேகத் தாக்குதல் படகுகள் என மொத்தம் 11 போர்க்கலன்களும் பங்கேற்றிருந்தன. இந்தியக் கடற்படை சார்பில் சுமார் 1200 துருப்புகளும், கிட்டத்தட்ட அதேயளவான சிறிலங்கா கடற்படையினரும் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர். இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் போர்ப்பயிற்சியை அனைத்துலக சமூகமும், கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளும் கவனமான அவதானித்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிய படகுகளின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்த அனுபவங்கள் சிறிலங்கா கடற்படைக்கு நிறைவே இருப்பதாகவும், இத்தகைய தாக்குதல்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பது குறித்து தாம் அறிந்து கொண்டுள்ளதாகவும் இந்தப் போர்ப்பயிற்சிக்கு தலைமை தாங்கிய இந்திய கடற்படையின் கிழக்கு தளபதி றியர் அட்மிரல் எச்.சி.எஸ்.பிஸ்ற் தெரிவித்துள்ளார். சிறிய படகுகள் மூலமான தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த பயிற்சி ஊடகவியலாளர்களுக்கும் காண்பிக்கப்பட்டது. சிறிலங்கா கடற்படையின் சிறிய தாக்குதல் படகுகளைக் கொண்ட அணியொன்று இந்தியப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சிவ்லிக் மீது தாக்குதல் நடத்திய போது, மரபுசார்ந்த ஆயுதங்களைக் கொண்ட பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. அது பயனற்றுப் போக சிறிய ஆயுதங்களைக் கொண்ட படகுகள் மூலம் அந்தத் தாக்குதலை முறியடிப்பது போன்று அந்தப் போர் ஒத்திகை அமைக்கப்பட்டிருந்தது. இதன்போது கடற்புலிகள் சிறிய படகுகளைக் கொண்டு போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கையாண்ட போர் உத்திகளை சிறிலங்கா கடற்படை, இந்தியக் கடற்படைக்கு செயல்முறையில் விளக்கமளித்துள்ளது. இந்திய- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் முதலாவது கூட்டுப்பயிற்சி 2005ம் ஆண்டில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் போர்ப்பயிற்சி சிறிலங்காவில் போர் தீவிரமடைந்ததை அடுத்துக் கைவிடப்பட்டது. போர் முடிவுக்கு வந்த நிலையில் இந்தப் போர்ப் பயிற்சி மீளத் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டிருந்ததாகவும், இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார். இந்தப் போர்ப்பயற்சி கடந்த 19ம் நாள் தொடக்கம் 24ம் நாள் வரையான ஆறு நாள்கள் நடைபெறும் என்று முன்னதாக இருதரப்பினாலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன்னதாகவே இந்தப் போர்ப்பயிற்சி முடித்து கொள்ளப்பட்டுள்ளது. போர்ப்பயிற்சிகளை இன்று முடித்துக் கொண்டு திருகோணமலையில் இருந்து புறப்படத் திட்டமிட்டிருந்த இந்தியப் போர்க்கப்பல்கள், ஒருநாள் முன்னதாகவே பயிற்சிகளை முடித்துக் கொண்டு நேற்று மாலையே புறப்பட்டுச் சென்றுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். எனினும் ஒருநாள் முன்னதாகவே போர்ப்பயிற்சி முடித்துக் கொள்ளப்பட்டு, இந்தியப் போர்க்கப்பல்கள் அவசரமாக புறப்பட்டுச் சென்றதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
களியாட்டங்களுக்கு சென்றதால் கைமேல் கிடைத்தது பலன்
நடிகை சோனியா அகர்வால் விவாகரத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் எப்படி வாய்ப்பு தேடுகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?![]() பிரபலங்கள் கொடுக்கும் அனைத்து பார்டிகளிலும் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். பார்ட்டி என்றால் பல பேர் வருவார்கள். புதிதாக பலர் அறிமுகமாவார்கள். அதன் மூலம் படவாய்ப்புகள் கிடைக்கும் என்பது சோனியாவின் கணிப்பு. அவர் கணிப்பு தவறாகவில்லை. ஆம், பார்ட்டிகளுக்கு சென்றது வீண் போகவில்லை. தற்போது கை நிறையப் படம் வைத்திருக்கிறார் சோனியா. குணசித்ர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, ஒரு கை பார்த்துவிடலாம் என்று ஒப்புக் கொள்கிறார். |
சோனாவின் பலாத்கார வீடியோ தமக்கு கிடைக்கவில்லையாம் போலீசார் கவலை!
![]() |
| நடிகர் எஸ்.பி.பி. சரண் தன்னிடம் தவறாகநடந்து கொண்டதாக கூறப்பட்ட வீடியோஆதாரத்தை நடிகை சோனா கொடுக்கவில்லை என்று காவல்துறை மறுத்துள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையரை நேரில்நடிகை சோனா நேற்று சந்தித்து புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், எஸ்.பி.பி. சரண் மீதுவிளம்பரத்துக்காகவோ பணத்துக்காகவோபாலியல் புகார் கூறவில்லை. தன்னிடம் எஸ்.பி.பி. சரண் தவறாக நடந்துகொண்டதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் அதை ஆணையரிடம் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார். ஆனால் நடிகை சோனா வீடியோ ஆதாரம் எதுவும் தரவில்லை என்று காவல்துறை தரப்பில்மறுக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு சென்ற பின் வீடியோவை உதவியாளரிடம் கொடுத்து அனுப்புவதாக கூறிய சோனா, ஆனால் இதுவரை வீடியோ ஆதாரத்தைஅனுப்பி வைக்க வில்லை என்று காவல்துறை உயரதியாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் இது பற்றி கருத்து கேட்க நடிகை சோனா தொடர்பு கொண்டபோதுசெல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எஸ்.பி.பி. சரணை மிரட்டுவதற்காகவே சோனா இப்படி வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறியதாக தெரியவந்துள்ளது ![]() |
சட்டி சுட்டதடா... மீண்டும் தனி பாதைக்குத் திரும்பிய விஜயகாந்த்!
![]() |
| தேமுதிக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கட்சி தொடங்கிய இந்த 7 ஆண்டு காலத்தில் தொடர்ந்து தனித்தே போட்டியிட்டு வந்த தேமுதிக இடையில் சட்டசபைத் தேர்தலில் மட்டும் கூட்டணி அரசியலுக்குள் புகுந்து தற்போது மீண்டும் தனியே வந்துள்ளது தேமுதிகவின் எதிர்காலத் திட்டம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. தேமுதிகவின் இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. 2004ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் வைத்து தனது கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். தொடங்கியது முதல் தொடர்ந்து அனைத்துத் தேர்தல்களிலும் தனித்தேப் போட்டியிட்டு வந்தது தேமுதிக. 2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிட்டது. ஆனால் விஜயகாந்த் மட்டும் விருத்தாச்சலத்தில் வென்றார். இருப்பினும் அக்கட்சிக்கு கிடைத்த 27.64 லட்சம் ஓட்டுக்கள் அனைவரையும் வியக்க வைத்தது. ஒரு இடத்தில் மட்டும் அக்கட்சி அப்போது ஜெயித்தாலும் கூட பல தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்களின் தோல்விக்கு வித்திட்டது. இதனால் தமிழகத்தில் முதல் முறையாக யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையை ஏற்படுத்தினார் விஜயகாந்த். பின்னர் 2009ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் தேமுதிக அசத்தலான வாக்குகளை அள்ளியது. இந்த முறை 30 லட்சத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றது தேமுதிக. ஆனால் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. அதேசமயம், அதிமுகவின் பல வெற்றிகளை தட்டிப் பறித்தது. திமுகவுக்கு இது சாதகமாக அமைந்தது. தோற்கும் எனக் கருதப்பட்ட திமுக கூட்டணி வெற்றி பெற விஜயகாந்த் பிரித்த வாக்குகளே காரணம் என்று தெரிய வந்தது. இதனால்தான் கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது கடுமையாக முயன்று விஜயகாந்த்தை தன் பக்கம் இழுத்தார் ஜெயலலிதா. விளைவு, அதிமுகவுக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்தது. தேமுதிகவுக்கும் அதிமுகவின் புண்ணியத்தால் 29 தொகுதிகள் கிடைத்தன, கூடவே எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் கிடைத்தது. அதுவரை வெறும் ஓட்டுப் பிரிக்கும் கட்சியாகவே இருந்து வந்த தேமுதிக, ஒரு முழுமையான அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியது இந்த தேர்தலில்தான். தொடர்ந்து தனித்தே போட்டியிட்டு வந்த விஜயகாந்த், போகும் இடமெல்லாம் மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கூறி வந்தார். ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது மட்டும் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். அப்போது அவரது முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் திமுகவின் மீதான மக்களின் கடும் அதிருப்தி, அதிமுகவுடன் இணைந்ததால் கிடைத்த பலம் ஆகியவற்றாலும், அவருக்கென்று இருந்த வாக்கு வங்கியாலும் அந்தப் பிரசாரம் தவிடுபொடியானது. அதிமுக கூட்டணி வென்றது. இப்போது உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தில் அதிமுகவால் கேவலப்படுத்தப்பட்ட விஜய்காந்த் மீண்டும் தனியாக வந்து விட்டார். இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமான பிரிவா என்பது தெரியவில்லை. தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வந்த தேமுதிக சின்ன பிரேக்குக்குப் பின்னர் மீணடும் தனிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இது அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் தங்களது பலத்தை நிரூபித்துக் காட்டினால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவே தங்களிடம் ஓடி வரும் என்று விஜய்காந்த் கருதுகிறார். இல்லாவிட்டால், திமுகவை கழற்றிவிடும் திட்டத்தில் உள்ள காங்கிரசுடனும் அவர் கூட்டணி சேரலாம். எது எப்படியோ மீண்டும் ஒரு வாக்குப் பிரிப்புக்கு தேமுதிக தயாராகி விட்டது. தற்போதைய நிலவரப்படி திமுக, அதிமுக, பாமக, மதிமுக, தேமுதிக என கிட்டத்தட்ட முக்கியக் கட்சிகள் அனைத்துமே தனியாக நிற்கின்றன. இதனால் அடிபடப் போவது யார், அள்ளப் போவது யார் என்ற அரசியல் விளையாட்டு சூடுபிடித்துள்ளது. |
பிரான்ஸில் உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க 11வது உலக மாநாடு
| உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை நடாத்தும் 11 வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு செப்டம்பர் 24ம், 25 ம் திகதிகளில் பிரான்ஸில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய மாநாட்டு அமைப்பாளரும் செயலாளர் நாயகமுமாகிய துரை கணேசலிங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய செயலாளரும் மாநாட்டின் துணைத் தலைவருமாகிய இ.ராஜசூரியர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளைத் தலைவரும் மாநாட்டு தலைவருமாகிய விசு செல்வராசா, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை செயலதிபரும் மாநாட்டின் செயலாளருமாகிய ம. இரவீந்திரநாதன் ஆகியோர் இணைந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர். ![]() அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள்: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் கிளையினால் இவ் ஆண்டு புரட்டாதி மாதம் 24, 25 ம் திகதிகளில் திருவள்ளுவர் ஆண்டு 2042 சனி ஞாயிறு இரு தினங்களில் பிரான்ஸில் எவ்றி மாநகரில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இவ் இயக்கம் தென் ஆபிரிக்காவை தலைமையகமாகக்கொண்டு செயற்பட்டு வருவதோடு உலகத்தமிழ் மக்களை ஒன்றிணைப்பதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளது. இவ் இயக்கத்தின் கிளைகள் 42 நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 1977ல் சென்னையிலும். 1980ல் மொரீஸிசியசிலும் 1985ல் சேலத்திலும்.1989ல் மலேசியாவிலும்.1992ல் அவுஸ்ரேலியாவிலும். 1996ல் கனடாவிலும். 1999ல் சென்னையிலும். 2001ல் தென் ஆபிரிக்காவிலும். 2004ல் புதுவையிலும்.2007ல் மலேசியாவிலும் ஆக பத்து உலகத்தமிழ் மாநாடுகளை நடத்திய பெருமையோடு 11வது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற உள்ளது. உலகத் தமிழர் மொழி, பண்பாட்டு. வாழ்வியல் மேம்பாடு என்ற கருப்பொருளில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதுவரை இவ் இயக்கம் உலகளாவிய மாநாடுகளின் மூலம் தமிழர் கலைகள் பண்பாடு ஊக்குவிப்பு.தமிழ் ஆண்டு, தமிழ் மொழிக்கல்வி. தமிழர் வரலாற்று ஆவண சேமிப்பு. தூய தமிழ் வழக்கு. தமிழ் செம்மொழி உருவாக்கம். உலகத்தமிழர் ஒற்றுமை பேணல்.முதலான விடயங்களில் பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளது. இந்த நோக்கத்துடன் தமிழ் வழி இறை வழிபாடு. தமிழ் மரபுகளை நிலைப்படுத்துதல்.தமிழர் இறையாண்மை. தமிழ்ப்பாதுகாப்பு. தமிழ்க்கலை மீட்பு. தமிழ்க் கல்வி. தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு.மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றுத் தேடல்கள்.எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள். தமிழ் ஊடகங்கள். போன்ற விடயங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். மாநாட்டு ஆய்வுகளும் தமிழ் அறிஞர்கள் துறைசார் புத்தாய்வுகளும் கொண்ட மாநாட்டு மலர் வெளியிடப்படும். மாநாட்டில் தமிழ் மொழி. தமிழ் இனம். தமிழ்ப்பண்பாடு. தொடர்பான ஆவணக்காட்சியும். தமிழர் வாழ்வியல் வரலாறு. மொழி இலக்கியம் சார்ந்த நூல்கள். இறுவெட்டுக்கள். ஒலி இழை நாடாகள். நிழற்படங்கள். முதலியன கண்காட்சிக்கு வைக்கப்படும். அத்துடன் மா நாட்டுக் கருப்பொருளை ஒட்டி உலகளாவிய கட்டுரைப் போட்டி. கவிதைப் போட்டி. என்பன இடம் பெறுவதுடன் உலகளாவிய அளவில் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும். உலகளாவிய தமிழர் சமூகத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனும் இலங்கை இந்திய நாடுகளில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் குறிக்கோளுடனும் அரசியல் சார்பற்று இன மத பேதங்களைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் என்ற ஒரே குடையின் கீழ் செய்ற்படுவதற்கும் தமிழ் மொழியை மறந்தவர்களை மொழி உணர்வாளர்களாக மாற்றும் நேர்த்தியான கொள்கைகளுடனும் 1974 ம் ஆண்டு தை திங்கள் 8ம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மா நாட்டில் பல நாட்டு அறிஞர்கள் ஒன்றிணைந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை உருவாக்கினார்கள். எனவே வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் மா நாட்டு மலருக்கு ஆக்கங்களைத்தர விரும்புவோர்கள். கண்காட்சிகளில் இணைந்து கொள்ள விருபுவோர்கள். அனைவரும் வரும் 31.07.2011 க்கு முன்பாக மாநாட்டுப்பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் |
இரு விமானங்களால் மட்டும் செப். 11 இரட்டைக் கோபுர தகர்ப்பை மேற்கொண்டிருக்கமுடியாது:
![]() |
| அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு இரு விமானங்கள் மட்டும் மோதி தகர்க்கப்பட்டமை தொடர்பில் தனக்கு சந்தேகம் நிலவுவதாக ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாட் தெரிவித்துள்ளார். தான் ஒரு பொறியியலாளர் என்பதனால் இரண்டு விமானங்களால் மட்டும் இவ்வாறானதொரு பாரிய சேதத்தினை ஏற்படுத்தமுடியாதெனவும் வேறு ஏதாவது திட்டமிடப்பட்ட வெடிப்பு சம்பவமும் அதனோடு தொடர்புபட்டிருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அமெரிக்காதான் இதனை நடத்தியதாக அவர் கருத்தெதனையும் குறிப்பிடவில்லை. ஐ.நாவின் பொதுக் கூட்டத்திற்காக தற்போது நியூயோர்க் சென்றுள்ள அவர் ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணலின் போதே இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பல வெளியிட்டு புகழ் பெற்றுள்ள அஹமட் நிஜாட்டின் இக்கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. |
என் சாவு அஜித்குமார் யார் என்று நிச்சயமாக இந்த உலகிற்கு எடுத்துக்காட்டும்
![]() |
| சினிமா உலகைப் பொறுத்த வரையில் ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டால், சம்பளத்தை உயர்த்திக் கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அதுமட்டுமின்றி சில நடிகர்கள் சம்பளத்துடன் சில ஏரியாக்களின் விநியோக உரிமையும் வாங்கிக் கொள்கிறார்கள். இதற்கு தமிழ் சினிமாவும் விதிவிலக்கல்ல. சரி உங்கள் அபிமான திரை நட்சத்திரங்களின் (ஒரு படத்திற்கான) சம்பள விவரங்களை பார்ப்போம். அஜித் - 15 கோடி ரூபாய் விஜய் - 15 கோடி ரூபாய் சூர்யா - 15 கோடி ரூபாய் + தெலுங்கு உரிமை விக்ரம் - 10 கோடி ரூபாய் கார்த்தி - 10 கோடி ரூபாய் + தெலுங்கு உரிமை தனுஷ் - 5 முதல் 7 கோடி ரூபாய் சிம்பு - 5 கோடி ரூபாய் + சென்னை விநியோக உரிமை விஷால் - 3 கோடி ரூபாய் ஆர்யா - 2 கோடி ரூபாய் ஜீவா - 1.50 கோடி ரூபாய் இனி சூப்பர் ஸ்டார், உலகநாயகன் ஆகியோரின் சம்பள விவரங்களை பார்ப்போம். ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர் 'எந்திரன்' படத்தில் நடிப்பதற்கு 24 கோடி ரூபாயும், படத்தின் லாபத்தில் ஒரு பங்கும் சம்பளமாக பேசப்பட்டதாம். உலக நாயகனுக்கு எப்படியும் 20 கோடி ரூபாய் சம்பளமாக இருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம். 'பில்லா' வெற்றிக்குப் பிறகு 'ஏகன்', 'அசல்' என தொடர்ந்து இரு தோல்விப் படங்களைக் கொடுத்தவர் அஜீத். அதன் பிறகு வந்த வெற்றிப் படம் 'மங்காத்தா'. இந்த ஒரு படம் மூலம் இழந்த தன் மார்க்கெட் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ள அஜீத், தனது அடுத்த படத்துக்கு கேட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா ரூ 17 கோடி! இந்த சம்பளம் இப்போது அவர் நடிக்கும் 'பில்லா 2' படத்துக்கு கிடையாது ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கானது. ஒருவேளை 'பில்லா 2' ஜெயித்துவிட்டால், அஜீத்தின் கால்ஷீட் ரேட் இன்னும் எகிறிவிடும் என்பதால், இந்தத் தொகையை உடனடியாகத் தர சம்மதித்தாராம் ரத்னம். இதற்கிடையே முதல் கட்டப்படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள 'பில்லா 2' படத்தை ரூ. 40 கோடிக்கு வாங்கிக் கொள்ள இரு நிறுவனங்கள் பேரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் படத்தைத் தயாரித்துவரும் இந்துஜா குழுமமோ ரூ. 50 கோடிக்கு மேல் எதிர்ப்பார்க்கிறார்களாம். யாரும் எதிர்பாராமல், இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸே வாங்கி வெளியிடவும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள். என் சாவு அஜித்குமார் யார் என்று நிச்சயமாக இந்த உலகிற்கு எடுத்துக்காட்டும் அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு குறித்து அவர் குறிப்பிடுகையில், 'அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன். அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். அப்போது என்னை அவரது சொந்த மகனைப்போல பாசம் காட்டினாங்க' என்று கூறியுள்ளார் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் அஜித்தின் பேச்சினால் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அஜித்தை மிரட்டியதாகக் கூறப்பட்டது இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் 'ஜனநாயகப் பண்புகளில் நம்பிக்கை உள்ளவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்போதும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனதில் தோன்றியதை விழாவில் பேசினேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா அவர்களும் நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்போதும் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்இ' என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'இப்போது எனக்கு 40-வயதாகின்றது. இன்னும் 20-வருடம் உயிரோடு இருப்பேனா என்று கூடத் தெரியாது. ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ்ந்தான் என்ற அடையாளம்இ அவன் சாவுக்குக் கூடுகின்ற கூட்டத்தில்தான் தெரியும் என்று சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜித்குமார் யார் என்று நிச்சயமாக இந்த உலகிற்கு எடுத்துக்காட்டும்' என்று தெரிவித்துள்ளார் |
சுவிற்சர்லாந்தினுள் நுழைந்தால் ஜெகத் டயஸ் மீது போர்க்குற்ற விசாரணை சுவிஸ் சட்டமா அதிபர் அறிவிப்பு
![]() |
| மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிற்சர்லாந்தில் போர்க்குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், தமது நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவர் மீது குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், மருத்துவமனைகள், மற்றும் வழிபாட்டு மையங்கள் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிட்டவர் என்ற அடிப்படையில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சமத்தப்பட்டுள்ளன. தீங்குகளுக்கு எதிரான சுவிஸ் அமைப்பும், அச்சுறுத்தல்களுக்குள்ளான மக்களின் சமூகம் என்ற அமைப்பும் இணைந்து மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீதான போர்க்குற்ற வழக்கை சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்திருந்தன. இதைடுத்தே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்தால் அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று சுவிற்சர்லாந்தின் சட்டமாஅதிபர் அறிவித்துள்ளார். சுவிற்சர்லாந்து, வத்திக்கான், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் பிரதி தூதுவராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் கடந்த 18ம் நாளுடன் கொழும்பு திரும்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
மூன்றாம் தரப்பு தேவை! அமெரிக்காவிடம் சிறிதரன் கோரிக்கை (படங்கள் இணைப்பு)
| இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெற்றீசியா பியூட்டினியஸ் இன்று வன்னிக்கான விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது அவர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். அங்கு தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனையும் சந்தித்து இனப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார். அரசாங்க அதிகாரிகளை மட்டுமன்றி பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்தித்து அமெரிக்க தூதுவர் கலந்துரையாடினார். வன்னிக்குப் பொறுப்பான இராணுவக்கட்டளைத் தளபதியையும் அவர் சந்தித்தார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனையும் அவர் கிளிநொச்சியில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தகவல் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், வன்னியில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதை தாம் அமெரிக்க தூதுவரிடம் சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டார். முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாய் கொக்கிளாய் பகுதிகளில் இடம்பெறும் சிங்கள குடியேற்றம், வெலிஓயா பிரதேசத்துக்கு வர்த்தமானி அறிவித்தல் இன்றி உதவி அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் முல்லைத்தீவின் 6 வது உதவி அரசாங்க அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்றும் முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியின் பரவிபாஞ்சான் மற்றும் 5 ஆம் வாய்க்கால் பகுதிகளில் இன்னும் 300 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. அங்கு இராணுவ வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கந்தசாமி கோயிலின் அன்னச்சாலை இன்னமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வன்னேரிக்குளத்தில் உள்ள வயோதிபர் மடம், பூநகரி பாடசாலை உட்பட்ட முக்கியமாக பொதுமக்களின் கட்டிடங்கள் இன்னமும் இராணுவத் தளங்களாக உள்ளன போன்ற விடயங்கள் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டதாக சிறிதரன் குறிப்பிட்டார். சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டும். காணாமல் போனவர்கள் கணவர்மாரை இழந்த பெண்கள், வடக்கு, கிழக்கில் உள்ள 12 ஆயிரம் பட்டதாரிகளின் விடயங்களில் கவனம் செலுத்தப்படவேண்டும். அத்துமீறி சிங்கள குடியேற்றமே இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணம் என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதாக சிறிதரன் கூறினார். இலங்கை இனப்பிரச்சினை வடக்குகிழக்கு இணைந்த நிலையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாக்கும் வகையில் காணப்படவேண்டும். வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை அரசாங்கமும் பேச்சு நடத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது. இந்த பேச்சுவாhர்த்தைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமாகும். இதன்போதே இனப்பிரச்சினைக்கான தீர்வை காணமுடியும் என்றும் தாம் பெற்றீசியா பியூட்டினியஸிடம் தாம் சுட்டிக்காட்டியதாக சிறிதரன் கூறினார். தமிழர்களின் நீண்டகால அரசியல் விருப்பை நிறைவேற்ற மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் அவசியம்!- அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் பற்றீசியாவிடம் சிறிதரன் எம்,பி எடுத்துரைப்பு அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் பற்றீசியாவும் அவருடைய குழுவினரும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களை கிளிநொச்சியில்; அமைந்துள்ள கூட்டமைப்பின் பணிமனையான அறிவகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். சுமார் 40 நிமிடம் நீடித்த கலந்துரையாடலின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு வாழ்வியல் சவால்கள் குறித்தும் அவசரகால சட்டத்தின் நீக்கத்தின் பின்னரான களநிலவரம் குறித்தும் தூதுவர் விரிவாக கேட்டறிந்தார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பரவிப்பாஞ்சான் உட்பட கிளிநொச்சியின் உயர்பாதுகாப்பு வலயங்கள், பூநகரி விக்னேஸ்வரா பாடசாலை, பூநகரி அரச வைத்தியசாலை என்பவற்றில் இராணுவம் நிலைகொண்டுள்ளமை குறித்தும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல்களிலும், மக்களின் நாளாந்த விடயங்களிலும் இராணுவத்தினரின் நேரடி தலையீடு குறித்தும் பல உதாரணங்களை சுட்டிக்காட்டி விளக்கமளித்தார். தொடர்ந்து முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் செயற்படுத்தப்படுகின்ற திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் காணிப் பிரச்சினைகள், கிறீஸ் மனிதன் விவகாரத்தால் எழுந்துள்ள பாதுகாப்பின்மைகள், 2009 மே க்கு பின்னர் தமிழ்மக்கள் கொண்டுள்ள அரசியல் அச்சநிலமை என்பவை தொடர்பிலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேற்சொன்ன விடயங்களை கேட்டறிந்த தூதுவர் நிரந்தர தீர்வு காணுவது தொடர்பில் தமிழ் மக்கள் எதனை எதிர்பார்க்கின்றனர் என வினவிய போது அவர்களுடைய வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு சர்வதேச தராதரம் உள்ள அதிகாரப்பகிர்வு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படும்போது சர்வதேச ரீதியான மூன்றாந்தரப்பு மத்தியஸ்தம் ஒன்றினூடாகவே முழுமையான அதிகாரப்பகிர்வு நடைபெற முடியமென்பதையும், அத்தகைய அதிகார பகிர்வில் பொலிஸ், காணி அதிகாரங்கள் உள்ளடக்கப்பட்டால் கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் எதிரநோக்கி வருகின்ற அடக்குமுறைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் பாராளுமன்றத் தெரிவு குழு அமைக்கும் முயற்சி காலத்தை கடத்தும் அரசின் செயல் என கடந்த கால சம்பவங்களை நினைவூட்டி வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை தீவில் அமைதி, சமாதானம் இனங்களுக்கிடையில் நல்லுறவு நிலவ வேண்டுமாக இருந்தால் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் புலம்பெயர் சமூகத்தினுடைய பங்களிப்பையும் பெற்று அதிகார பகிர்வொன்றை இலங்கையில் மேற்கொள்ளுதலே நீடித்த சமாதானத்திற்கும், நிலையான அபிவிருத்திக்கும் வழிவகுக்கும் என்றார். இதன் போது அனைத்து விடயங்களையும் கேட்டறிந்த தூதுவர் தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுதலில் அக்கறை செலுத்துவதாக தெரிவித்ததுடன் கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது, ஈ பி டி பி யின் தாக்குதலுக்குள்ளான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தொடர்பாகவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடையதும் குறிப்பாக சிறிதரன் அவர்களின் பாதுகாப்பு நடைமுறை குறித்தும் விசாரித்து அறிந்ததுடன், எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொடர்புகள் ஊடாக தமிழ் மக்களின் விடயங்களில் தாம் கரிசைனையுடன் செயற்படுவோம் என கூறிச்சென்றார். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Subscribe to:
Comments (Atom)




















