Sunday, 29 January 2012

மீண்டும் தேதி மாறியிருக்கிறது சகுனி படம்

மாஸ் ஹீரோக்களின் படங்கள் திருவிழா தினங்களில்தான் வெளியிட வேண்டும் என்று பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, மே தினம், தீபாவளி என ஐந்து தினங்களை மட்டுமே தயா‌ரிப்பாளர்கள் சங்கம் ஒதுக்கியிருக்கிறது.

இந்த புதிய விதிமுறையால் பிப்ரவ‌ரியில் வெளியாவதாக இருந்த சகுனி ‌ரிலீஸ் ஏப்ரல் 13ஆம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. இந்தப் படம் மட்டுமின்றி பிப்ரவ‌ரியில் வெளியாவதாக இருந்த தனுஷின் கொலவெறி படமும் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது.

தொலைக்காட்சி லாட்டரியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள்

“விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு” என்ற கோஷத்துடன் லாட்டரிச் சீட்டு திட்டத்தை அண்ணாதுரை அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில்  தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஆனால் தனியாரும் லாட்டரி தொழிலில் வந்த பிறகு மக்களி்ன வருமானம் அதில் கரைந்து போய், குடும்பங்கள் சீரழிந்தன இதனால் முந்தைய ஆட்சிகாலத்தில் ஜெயலிலதா அவர்களால் தடைசெய்யப்பட்டு இன்றளவும் அமலில் உள்ளது.

ஆனால் மக்களின் ஆசை என்ற பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு டி.விக்கள் வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான கொள்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏதாவது ஒரு பரிசு திட்டத்தை அறிவித்து விட்டு குறிப்பிட்ட எண்ணுக்கு SMS அனுப்புங்கள் என்று  சொல்வதை நம்பி பல லட்சம்  மக்கள் SMS அனுப்புகிறார்கள் அதில் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானம். அவர்கள் தரும் பரிசுத்தொகைவிட பல நூறு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியாது,

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஒடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியை கேட்டு அதற்கான விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் டி.வியில் ஒளிபரப்பானது. அவர்களின் கேள்விக்கு உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கூட தெரியும் எனவே ரூ.5000 பரித்தொகை பெற்றுவிடும் ஆசையில் உடனே ஆர்வலர்கள் தொடர்பு கொள்ள முயல்வார்கள் ஆனால் ஒருவருக்கும் சிறிது நேரம் லைன் கிடைக்குது அவர்களின் ரேட்டிங் உயரும்.

ஆனால் நிமிடத்திற்கு ரூ.10 என மக்களின் பணம் கரைந்து கொண்டிருக்கும் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் ரூ. 20 போய்விடும் இந்த ரூ. 20 யில் 14 ரூபாய் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மீதி கூட கொள்கையடிக்கும் செல்போன் நிறுவனத்திற்கும் சேரும். சுமார் ஒரு லட்சம் போர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்து கொண்டாலும் மொத்த வருமானம் ரூ. 20 லட்சம் பரிசுத்தொகை உள்ளிட்ட எல்லா செலவும் ரூ.2 லட்சம் மட்டுமே மீதியெல்லாம் கொள்ளை லாபம்.

 இதற்கும் ஒரு படி மேலே போய் மக்களை கோடிஸ்வரன் ஆக்கிடுவோம் என்று  மக்களை ஏமாற்ற பெரிய நிறுவனம் கவர்ச்சி நடிகர் என மக்களின் பணத்தை சுரண்ட ஒரு பெரிய பட்டாளம் இறங்விட்டார்கள. இந்நிகழ்ச்சிக்கு குறைந்தது 2sms அனுப்ப வேண்டும். 



தமிழகத்தின் ஏழு கோடி மக்களில்  தினமும் 10 லட்சம் மக்களையாவது பலிகட ஆக்க வேண்டும் என்பது இவர்கள் திட்டம். டி.வி. நியுஸ் பேப்பர். பேஸ்புக். Fm அனைத்திலும் மிகப்பெரிய விளம்பரம் செய்து  ஒருநாளுக்கு SMS மூலம் செல்போன் நிறுவனங்களின் தினமும் வருமானம் 1கோடி. நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு ரூ. 50 லட்சம் இப்படி 7 நாட்களின் வருமானம் 7 கோடி இது 10லட்சம் பேரின் கணக்குதான் இதுவே தினம் 1கோடி மக்கள் கூட SMS அனுப்புகிறார்களாம் அப்படி என்றால் வருமானம் ????

பரிசு பெரும் அந்த நபர் 10 லட்சமோ 15 லட்சமோ தான் இருக்கும்  இது தவிர விளம்பரம்  போன்றவை மொத்தமாக பார்த்தால் ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 20 கோடி வருமானம் கிடைக்குமாம்.

இப்படி தழிழர்களின் பணத்தை சுரண்டப்படுவதை பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை அரசாங்கமும் இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.

உதாரணமாக எனது சகோதரர் முதல் வாரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் sms அனுப்பி ரூ. 120 இழந்துள்ளார்.  இப்படி பல கோடி மோசடி செய்து இன்னும் அந்தகோடீஸ்வர நிழ்ச்சி இன்னும் ஆரம்பித்ததாக தெரியவில்லை.

கோடிகளுக்காக அலைந்து தெருக்கோடியில் நிற்கும் ஏமாளி தழிழர்களா நாம்???????????

இலங்கையை சிக்க வைக்க ஊடகவியலாளர்கள் இரகசிய சதி திட்டம்!- அரசாங்கம் குற்றச்சாட்டு.

ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருபகுதியும் மேலதிக நேர வேலையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக ஊடகவியலாளர்களும் கூட இந்த இரகசியச் சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலும், வடக்கு, கிழக்கிலும் அண்மைக் காலத்தில் இடம்பெறும் போராட்டங்கள், இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தும் நோக்கத்தைக் கொண்டவை என்றும் அரசாங்கம் விமர்சித்துள்ளது.
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் பெப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறுவதற்கு முன்னர், அடுத்த சில வாரங்களுக்கு இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்கள் மேலும் தீவிரமடையலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் அரச வட்டாரங்கள் எதிர்வு கூறியுள்ளன.
ஐதேக, ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களே அரசாங்கத்திற்கு எதிராக இந்த இரகசிய சதியில் ஈடுபட்டுள்ளதாக அரச தரப்பினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரெயிலில் 2 இளம் பெண்களுடனும் உல்லாசமாக

மைசூரில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில் வெள்ளிக்கிழமை காலை 10 30 மணிக்கு புறப்பட்டது. இந்த ரெயிலில் மைசூர் ரெயில் நிலையத்தில் புத்தக விற்பனை கடை வைத்திருக்கும் அருண்குமார், டீ கடை வைத்திருக்கும் சந்தோஷ் ஆகிய 2 வாலிபர்கள் முதல் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் ஏறினார்கள்.
ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அருண்குமார் செல்போனில் 2 இளம் பெண்களிடம் தொடர்பு கொண்டு பேசி அசோக்புரம் ரெயில் நிலையத்தில் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் ஏறும்படி கூறி உள்ளார். அதன்படி அந்த 2 இளம் பெண்களும் அசோக்புரம் ரெயில் நிலையத்தில் ஏறினார்கள். அவர்கள் ரெயிலில் ஏறியதும் அருண்குமார், சந்தோஷ் ஆகிய இருவரும் முதல் வகுப்பு பெட்டி அறையை திறக்க முடியாதவாறு உள்புறம் பூட்டி விட்டு 2 பெண்களுடனும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மைசூர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது. உடனடியாக அவர்கள் சாம்ராஜ்நகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். சாம்ராஜ்நகர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்ததும், முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிக்கு ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அறை கதவை தட்டினார்கள். உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. கதவை திறக்க முடியவில்லை.
எனவே ரெயில் பெட்டி அறை கதவு லாக்கரை திறக்கும் நிபுணர்களை போலீசார் அழைத்து வந்து கதவை திறந்தனர். அங்கு 2 இளம் பெண்கள் உள்பட 4 பேரும் விபசாரத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சாம்ராஜ்நகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசாரத்தில் ஈடுபட்ட அருண்குமார், சந்தோஷ் மற்றும் 2 இளம் பெண்களையும் கைது செய்தனர்.

இங்கே தமிழனை விட மலையாளி பல படி மேல்

 


சில புகைப்படங்களைப் பார்க்கும் போது எம்மையறியாமல் மனதிற்குள் சந்தோசம் பொங்கும்.அதே போல் சில படங்களைப் பார்க்கும் போது வெறுப்பும் கோவமும் ஒருங்கே ஏற்படும்.இந்தப் படத்தைப் பார்த்த மானமுள்ள தமிழனுக்கு மேலே சொன்னதில் எந்த உணர்வு ஏற்ப்படிருக்கும் என்று நான் சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை.

எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால்,அந்த அம்மாவின் காலில் இப்படி பகிரங்கமாக சாஷ்டாங்கமாக விழுந்து சில்லறை பொறுக்கி  விட்டு,தன் மனைவி,பிள்ளைகள் முன் மீசையை முறுக்கிக்கொண்டு எப்படித் திரியமுடிகின்றது என்பதுதான்.

ஏதோ நான் பெண் ஆதிக்கவாதி என்று முத்திரை குதிவிடாதீர்கள்.இதே போல் ஓர் ஆண் அரசியல்வாதி காலில் விழுந்திருந்தாலும்,இதே உணர்வே ஏற்ப்பட்டிருக்கும்.

பெற்ற தாய்,தந்தை காலில் விழுந்து வணங்கத்தயங்கும் நமது சமுதாயம்,இப்படியான அரசியல் வாதிகளின் காலில் விழுவதுதான் வேதனையாக உள்ளது.காலப் போக்கில் இதுவும் அரசியல் கலாச்சாரமாகிவிடும்.ஆனால் காமராசர் போன்ற அவதாரபுருசன் என்றால் வேறு கதை.

அந்த அம்மாவும் தன் கறைபடியாத கரத்தால்,எப்படி ஆசீர்வதிக்கின்றார்...................அன்னை தெரேசா கூட இப்படி போஸ் கொடுத்து நான் பார்த்ததில்லை. எல்லாம் காலத்தின் கொடுமை!!!!!

அருகில் உள்ள படம்,கேரளா முதலமைச்சருடையது.
கற்றுக் கொள்ளுங்கள் மலையாளிகளிடம் இருந்து,இத்தகைய நற்ப்பண்புகளை..........................

ஏதோ நான் மலையாளி மக்களை உயர்த்தியும்,தமிழனை கேவலப்படுத்தியும் விட்டதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமையே.

--எப்படியோ,இந்தப் படத்தைப் பார்த்ததால் எனக்கு ஏற்ப்பட்டவயிற்றெரிச்சலில் ஒரு பகுதியை இங்கே கொட்டித் தீர்த்துவிட்டேன்.--

அமிதாப் - ரஜினி இணைந்து நடிக்கிறார்கள்


அமிதாப் பச்சன், ரஜினி இருவரும் இறுதியாக சேர்ந்து நடித்த படம் அந்தா கானூன்.  இப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. எனக்கு மிகவும் பிடித்த படம் அது. ஐந்து முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். மறுபடியும் இருவரும் சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தினை இயக்க இருக்கிறார் பூரி ஜெகன்நாத். 

இது குறித்து அவர் கூறியிருப்பது " சமீபத்தில் ரஜினி சாரை சந்தித்துப் பேசியபோது, நான் அமிதாப் பச்சனை வைத்து இயக்க போகும் படம் குறித்து பேசினேன். அப்புதிய படத்தில் நீங்களும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். ரஜினி சார் அவ்வேண்டுகோளை ஏற்றுக்  கொண்டார். அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து அவர் சந்தோஷம் தெரிவித்தார். நீண்ட காலமாகவே ரஜினி சாரை இயக்க வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது.  அதேசமயம், இரு பெரும் ஸ்டார்களான அமிதாப் மற்றும் ரஜினியை இணைத்து இயக்கப் போவது எனக்கே மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

அமிதாப் நாயகனாக நடித்த 'Buddah Hoga Tera Baap' என்ற படத்தை இயக்கியவர் பூரி ஜெகன்நாத் என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் இருவரும் இணைந்து நடித்து வெளிவரும் அந்த நாளை எதிர் பார்த்து காத்திருப்போம்.

பதவிக்காக தன்னை நாடி வந்த சில பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சசிகலா ராவணனின் அட்டகாசங்கள் ?

 


கான்ட்ராக்டரை மிரட்டிய வழக்கில் கைதாகியுள்ள, மன்னார்குடி கும்பலைச் சேர்ந்த ராவணன் மீது, சென்னையில் மேலும் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. அவர் மீது, மேலும் புகார்கள் வந்தவண்ணம் இருப்பதால், "ஏழரை' துவங்கிவிட்டது.


பாலியல் புகாரும் வருது...: கடந்த 2001-06 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பதுங்கி, எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த ராவணன், கடந்த ஐந்தாண்டுகளில், கொங்கு மண்டல பொறுப்பாளராக மாறிய பின் தான், தன் அரங்கேற்றத்தை துவங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், பாலியல் புகாரும் இவர் மீது வருவதாகக் கூறப்படுகிறது. பதவியை நாடி வரும் சிலரிடம் இவர், கேட்கும் பரிகாரமே வேறு என்று எதிர்தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பதவிக்காக தன்னை நாடி வந்த சில பெண்களை இவர், மிரட்டி பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவையும் விரைவில் வெளியாகும்.

ராவணனின் அட்டகாசம்: சசிகலா கும்பலில் அனைவருமே அட்டகாசம் செய்தனர் என்றாலும், அவர்களை விட ராவணன் ஒரு படி அதிகம் என்றே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன், வேட்பாளர்கள் பட்டியல் முடிவு செய்வது முதல், ஆட்சியை பிடித்த பின், அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரையில் தேர்வு, தூக்கியடிப்பு உள்ளிட்ட பல வேலைகளை செய்து வந்தார். கூடுதலாக, டெண்டர் போன்ற பல விவகாரங்களில் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தி வந்தார். உளவுத் துறை போலீசார் இதை கண்காணித்து, விவரங்களை சேர்த்து வந்தாலும், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வழி, சசிகலாவால் தடுக்கப்பட்டிருந்தது.

புகார்களுக்கு வழிகிடைத்தது: தற்போது, உளவுத் தகவல்களும், ராவணன் குறித்த தகவல்களும்முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, தனிப்படை போலீசார், ராவணனை குறி வைத்து தூக்கிச் சென்று விசாரணை நடத்தி, அனைத்து தகவல்களையும் கறந்தனர். அதன் பின் தான், அண்மையில் நடந்த அதிகாரிகள், அமைச்சர்கள் களையெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ராவணனால் பாதிக்கப்பட்ட பலர் மோசடி, கொலை மிரட்டல், அபகரிப்பு உள்ளிட்ட புகார்களை ஆங்காங்கே கொடுத்து வருகின்றனர்.

ராவணன் கைது: இப்படி கொடுக்கப்பட்ட, ஒரு மிரட்டல் வழக்கில் தான் நேற்று முன்தினம், ராவணன் கைது செய்யப்பட்டுள்ளார். காரமடையைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற கான்ட்ராக்டரை கடத்தி, 10 லட்சம் ரூபாய் பறித்துக் கொண்டதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்த விசாரணையும் நடத்தப்பட்டு, மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். சூலூர் பகுதியில் ஜீப் மீது லாரி மோதிய வழக்கிலும் ராவணன் மீது புகார் வந்துள்ளது.

ரூ.1 கோடி மோசடி: இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்த, திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், ராவணன் உள்ளிட்டோர் மீது மோசடி புகார் ஒன்றை அளித்தார்.
திருப்பூரில், ஆர்.கே.ஐமே பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி. அவர் கொடுத்திருக்கும் புகாரில் உள்ள விவரப்படி; ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் இவர், கரூர் மற்றும் திருச்சி பகுதியில் மணல் குவாரி எடுக்க விரும்பினார். இது தொடர்பாக, ராவணனின் உறவினர் சத்யா என்பவர் மூலம், ராவணனின் உதவியாளர் ராஜாவை அணுகி, அவர் மூலம் ராவணனிடம் பேசி, குவாரி லைசென்ஸ் பெற்றுத் தர கோரினார். அதற்கு, ராவணன் தரப்பினர் ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளனர்.


மூன்று பிரிவுகளில் வழக்கு: தொடர்ந்து, ஜூன் மாதம் முதல் வாரத்தில், சென்னை நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் பகுதியில் உள்ள, ராவணன் உறவினர் வீட்டில், பணத்தை கிருஷ்ணமூர்த்தி கொடுத்துள்ளார். ஆனால், இரண்டு இடங்களிலும் மணல்குவாரி லைசென்ஸ் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைக்கவில்லை. பணத்தையாவது திருப்பித் தரும்படி, ராவணன் உள்ளிட்டோரை சந்தித்து கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார். பணத்தை திருப்பித் தர மறுத்ததுடன், கிருஷ்ணமூர்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து, புகாரில் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில், ராவணன், உறவினர் சத்யா மற்றும் ராவணன் உதவியாளர் ராஜா ஆகியோர் மீது, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

துவங்கியிருச்சு ஏழரை: இந்த வழக்கு தொடர்பாக ராவணனை கோர்ட் அனுமதி பெற்று தங்கள் வசம் வைத்து போலீசார் விசாரணை செய்ய உள்ளனர். அடுத்து, யார் மீது வழக்கு பாயுமோ என்ற அச்சத்தில் சசிகலா தரப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ராவணன் மீது தற்போது இரண்டு வழக்குகள் உள்ள நிலையில் மேலும் சிலர் புகார் அளித்துள்ளதால், ஏழரை துவங்கிவிட்டது. விரைவில் அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற கருத்தும் நிலவுகிறது.


வசூல் புகாரும் சேருகிறது...! ராவணன் மீது வடவள்ளியில் நிலம் அபகரிப்பு, நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., செயலர் செல்வராஜ் விபத்தில் பலியானது, திருப்பூரில் நில மோசடி என, பல்வேறு புகார்களும் வழக்குகளாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த வழக்குகள் எதிலுமே அவருக்கு, நேரடித் தொடர்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த வழக்குகளின் எதிரொலியாக, ராவணன் தரப்பால் பாதிக்கப்பட்ட அல்லது மிரட்டப்பட்ட வேறு யாரிடமிருந்தாவது புகார் வரும் என்ற எதிர்பார்ப்பு, போலீசாரிடம் உள்ளது. தமிழகத்திலுள்ள குவாரிகள், கிரானைட் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களில் ராவணனின் பெயரில் பெரும் தொகை வசூலிக்கப்பட்டதாகவும் பரவலான புகார்கள் உள்ளன.

நாசாவுக்கே அதிர்ச்சியளித்த இந்துமதம்

' இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
 இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
 ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
  
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.'
 இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
 எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

படு கவர்ச்சியாக ப்ரியாமணி ? (ஹாட் வீடியோ)


தமிழில் என்னவோ கருத்தான ரோலில் நடித்து வந்த ப்ரியாமணி, இப்போது தெலுங்கில் கவர்ச்சியாக படு க்ளாமர் நடிகையாக மாறிவிட்டார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ராஜ் படம் இப்போது, தமிழில் மகாராணியாக டப் செய்யப்படு, இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.

கதைப்படி இரண்டு தோழிகளுக்குள் நடக்கும் ஈகோ பிரச்னையால் அவர்கள் இறுதியில் எந்த அளவுக்கு கஷ்படப்படுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பது தான் கதை.

இதில் நெருங்கிய தோழிகளாக ப்ரியாமணியும், விமலாராமனும் நடித்துள்ளனர்.

ஹீரோவாக நாகர்ஜூனாவின் அக்கா மகன் சுமந்த் நடிக்க ஆதித்யா இயக்கியுள்ளார். படத்தில் ப்ரியாமணி படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.


தமிழில், பட வாய்ப்பு இன்றி தவித்து வரும் ப்ரியாமணிக்கு, இந்த "மகாராணி" படமாவது, அவரை "மகாராணி"யாக மாற்றுமா...?! என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

ஆடம்பரத்துக்காக படித்த பெண்களும் விபச்சாரத்தில்..

பட்டதாரி பெண்களும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பணத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கு, உச்சநீரிமன்றத்தில் நீதிபதிகள் அல்டமஸ் கபீர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மறுவாழ்வு நடவடிக்கை

அப்போது நீதிபதிகள் கூறுகையில், "இன்றைய தினம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண்களும், பட்டதாரிகளும் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதை காண்கிறோம். அவர்கள் தாங்களாக விருப்பப்பட்டு இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்துடைப்பு கூடாது

விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக, நாம் எத்தனையோ கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துகிறோம். ஆனால் அத்துடன் அந்த பிரச்சினையை முடித்துக்கொள்கிறோம். உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஏதாவது நடவடிக்கை எடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அது நமது மனசாட்சிக்கு திருப்தியாக அமைய வேண்டும். வெறும் கண்துடைப்பாக அமைந்துவிடக்கூடாது. எனவே, மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வரும்," என்றனர்.

மேலும், வக்கீல்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு கமிட்டி செயல்பட சட்ட கமிஷன் அலுவலகத்தில் 3 வாரங்களுக்குள் இடம் ஒதுக்குமாறு கூடுதல் அட்டர்னி ஜெனரல் பி.பி.மல்கோத்ராவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உ .பி :தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் அதற்க்கு காரணம் ராகுல்: பவார் பாய்ச்சல்


உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் ,அந்த பழி  ராகுல் காந்தியை சேரலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார் .

மேலும் ,ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியில் ஒரு முக்கிய அங்கமாக  இருக்கும் வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறுகையில்:காங்கிரஸ் முக்கிய மாநிலங்களில் நன்கு என்றாலும் உடனடியாக ராகுல் காந்தியை  பிரதமர் வேட்பாளர் என்று கணிக்க சாத்தியம் இல்லை.

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முக்கிய பிரச்சாரகரார் திக்விஜய் சிங் மற்ற வேறு எந்த தலைவர்களும் இல்லை காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் எதுவும் சொல்லலாம் ஆனால் தேர்தல் பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியம் அது அவர்களிடம் இல்லை

தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும்  நல்ல முடிவுக்கு பிறகு உடனடியாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என்பது   எனக்கு தெரியாது. காங்கிரசின் அடுத்த திட்டம் கூட எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.தேசிய தலைமையில் பிரதமர் வேட்பாளர்  என்ற அடிப்படையில் எந்த மாற்றத்தையும் இன்று வரை நான் பார்க்கவில்லை என கூறினார்.

கலாமின் "புரா' திட்டம் அமலுக்கு வருகிறது


கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, அப்துல்கலாம் முன்வைத்த, "புரா' திட்டத்தை கொண்டு வருவது குறித்தும், தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்குவதும் குறித்தும், தலைமைச் செயலருடன் அணுமின் நிலைய அதிகாரிகள், பேச்சு நடத்தி உள்ளனர். இதற்கு, மாநில அரசு ஒப்புதல் அளித்ததாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பாக, தமிழக தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கியுடன், இந்திய அணுமின் கழக அதிகாரிகள், மின்வாரிய சேர்மன், எரிசக்தி துறை செயலர் ஆகியோர், நேற்று முன்தினம் பேச்சு நடத்தினர்.

கூடுதல் மின்சாரம் : 

இதில், தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் குறித்து, எரிசக்திதுறை செயலர் விளக்கி இருக்கிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் உற்பத்தி துவங்கியதும், 1,000 மெகாவாட் மின்சாரத்தை முழுமையாக, தமிழகத்திற்கு தர வேண்டும்; அதன்பின், இரண்டாவது உலையில் உற்பத்தி துவங்கியதும், கேரளா, புதுவை மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு தரலாம் என, அவர் பரிந்துரைத்து உள்ளார். இதுதவிர, தமிழகத்திற்கு கல்பாக்கத்திலிருந்து, 75 சதவீத மின்சாரம் தருவது போல், கூடங்குளத்தில் இருந்தும், 75 சதவீத மின்சாரத்தை தர வேண்டும் என்றும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கூடங்குளம் பகுதி மக்களுக்கு, பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றும், அரசின் சார்பில் பேசப்பட்டுள்ளது; தற்போது செய்த சமூக பாதுகாப்பு மக்கள் திட்டங்கள் போதாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"புரா' திட்டம் : 

இதற்கு, அணுமின் கழக சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி, தப்கீர், பதில் அளிக்கையில், "அப்துல்கலாம் பரிந்துரைந்த, "புரா' திட்டப்படி, மீனவர்களுக்கு குளிர்பதன கிடங்குகள், கப்பல் இறங்குதளம், உயர்தர மருத்துவமனை, கல்வி மையங்கள், அதிக வேலைவாய்ப்பு போன்ற திட்டங்களை செய்து தர முடியும்' என, கூறி உள்ளார்.

மாநில அரசு ஒப்புதல் :

இதை தமிழக அரசு ஏற்று, வரும் 31ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில், அணு எதிர்ப்புக் குழுவினருடன் சமரசம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும்; அணு எதிர்ப்புக் குழுவின் மூலமே, அப்பகுதி மக்களுக்கு அச்சம் தீர்க்கவும், அவர்களுக்குரிய கூடுதல் நலத்திட்டங்களை மேற்கொள்வது குறித்தும், பேச்சு நடத்தப்படும் என, தமிழக அரசு தரப்பில் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு, தமிழக அரசு மற்றும் அணுமின் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

தி.மு.க., அறிவாலயத்துக்கு சிக்கல் : 'அனாதை இல்லம்' என்ற பெயரில் ஆக்கிரமிப்பு


ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதாகக் கூறி, சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய இடத்திற்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். விதிப்படி ஆதரவற்றோர் இல்லம் அமைக்காததால், சிறப்பு அனுமதியை ரத்து செய்து, திறந்த வெளி இடத்தை மாநகராட்சியிடமே ஒப்படைக்கும் வகையில், அரசு ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, சென்னை மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். இதனால், அறிவாலயஇடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும் கேள்வி நேரம் நடந்தது. கவுன்சிலர் ஆறுமுகம் (எ) சின்னையன், ""அறிவாலயத்தில் திறந்த வெளி நிலங்களுக்கு சி.எம்.டி.ஏ., மூலம் தான பத்திரம் வழங்கி, பத்திரப்பதிவு செய்திருக்கின்றனரா, பொதுமக்கள் அங்குள்ள பூங்காவை பயன்படுத்த அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா?'' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து சைதை துரைசாமி பேசியதாவது: கடந்த 1980ல் எம்.ஜி.ஆர்., ஆட்சி கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சியின் போது, தி.மு.க., அறக்கட்டளை ஒரு கோரிக்கை வைத்தது. அறிவாலய இடத்தில் பல மாடி கட்டடம் கட்ட, அரசாணை வெளியிடப்பட்டது. இதில், 10 சதவீத திறந்தவெளி நிலத்தை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

ஆறு ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க., அறக்கட்டளை சார்பில், சில சலுகைகள் கேட்டு அரசாணையில் திருத்தம் வேண்டி மேல்முறையீடு செய்தனர். அது நிலுவையிலேயே இருந்தது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், கவர்னர் ஆட்சியின் போது, "அனாதை இல்லம்' கட்டுவதாகக் கூறி, அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றனர். கடந்த 2004ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது, அறக்கட்டளைக்கு அனுமதி அளித்ததை ஏன் ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்து தி.மு.க., ஆட்சிவந்ததும், 2007ம் ஆண்டில்,தி.மு.க., அறக்கட்டளை எழுதிய விளக்க கடிதத்தை ஏற்று, மேல் நடவடிக்கை தேவையில்லை என கோப்பு முடிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்றோர் இல்லம் கட்ட சிறப்பு அனுமதி பெற்று, இதுவரை அதை செயல்படுத்தாமல் இருப்பதால், தி.மு.க., அறக்கட்டளை திறந்தவெளி நிலத்தை பதிவு செய்யாமல் பெற்ற சிறப்பு ஆணையை ரத்து செய்யவும், நிலத்தை மாநகராட்சிக்கு வழங்க அரசு ஆணை பிறப்பிக்கக் கோரி, அரசுக்கு பரிந்துரைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்தார். இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அவர்களை பேச விடாமல் சத்தம் போட்டனர். இதனால், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. "அந்த இடத்தில் பூங்கா உள்ளது; பொது நூலகம் உள்ளது. மன்றத்தில் தவறான தகவல்களை மேயர் தருகிறார்' எனக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர்
போஸ் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் போஸ் கூறும்போது, ""தி.மு.க.,வினர் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதிக்கப்படுவதில்லை. வீடியோகிராபர்களை உள்ளே அனுப்ப மறுக்கின்றனர். மன்றம் மன்றமாக நடக்கவில்லை. மேயர் சர்வ அதிகாரம் படைத்தவர் போல் செயல்படுகிறார். எனவே,வேறு வழியின்றி தான் வெளிநடப்பு செய்தோம்,'' என்றார். கவுன்சிலர் மீது தாக்குதல்: தி.மு.க., கவுன்சிலர் வாசு, "விரிவாக்கப் பகுதிகளில் ஏற்கனவே கட்டிய கட்டடங்களின் மேல், கட்டடம் கட்டப்படுகிறது. இதில் விதிமீறல் இருந்தால் என்ன செய்வது' என, கேள்வி எழுப்பினார். பதிலளித்த மேயர், "எவ்வித கட்டடமாக இருந்தாலும், விதிமுறைப்படி தான் கட்ட வேண்டும். புதிதாக கட்டுமானப் பணி துவங்கும்போதே, விதிமுறை மீறல் உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது' என்றார். வாசு மேலும் கேள்விகள் கேட்க முயன்றபோது, "ஒரு துணை கேள்வி தான்; அதற்கு மேல் அனுமதிக்க முடியாது,'' என்று மேயர் அனுமதி மறுத்தார். அப்போது வாசு, மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்படுவதாகக் கூறி, தி.மு.க., கவுன்சிலர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்தனர். வெளியேறிய வாசுவை, பெண் கவுன்சிலர்கள், கையில் இருந்த தீர்மான நோட்டு மற்றும் கைகளைக் கொண்டு தாக்கினர். ஆத்திரமடைந்த கவுன்சிலர் சத்தம் போட்டுக் கொண்டே மேயர் இருக்கை நோக்கிச் சென்றார். அவரது சத்தம் கேட்டு, தி.மு.க., கவுன்சிலர்களும் வந்தனர். மேயர் இருக்கை அருகே சென்று தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்துவிட்டு மீண்டும் வெளியேறினர்.



மைக்கல் ஜாக்சன் வழியில் பிரபுதேவா 'ஆல்பம்' !


பிரபுதேவா இப்போது 'சிறுத்தை' படத்தின் இந்தி பதிப்பான 'Rowdy Rathore' படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே, தன் நண்பர்களுக்காக ஒரு டான்ஸ் ஆல்பம் தயாரிக்கும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த வீடியோ ஆல்பத்தில் 5 பாடல்கள் இருக்குமாம். பாடல்களுக்கு இசையமைத்து, பாடி, ஆடவும் திட்டமிட்டுள்ளார் பிரபுதேவா.

மும்பையில் 7D கேமராவில் இதற்கான படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள். பிரபுதேவா இந்த ஆல்பம் உலகத் தரத்திற்கு நிகராக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.

ஆடியோ ஆல்பத்தை காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியும், வீடியோ ஆல்பத்தை பிரதேவாவின் பிறந்த நாளான ஏப்ரல் 3-ம் தேதியும் வெளியிட  இருக்கிறார்கள்.

பிரபுதேவா நடனத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதால், இந்த ஆல்பம் வெளியிட்ட பின்னர், அதை விளம்பரப்படுத்த பல்வேறு நாடுகளுக்கு குழுவினருடன் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.


நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!


நடிகர் விஜய் நடித்த "நண்பன் படத்தில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வசனங்கள் வருவதால், அவற்றை நீக்கக் கோரி விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகர், இயக்குனர் ஷங்கர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு அக்கூட்டமைப்பின் தலைவர் சேம நாராயணன் அனுப்பியுள்ள கடிதம்: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்த ஆண்டி, பண்டார சமூகத்தினர்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளனர். அவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

நண்பன் திரைப்படத்தில் சில காட்சிகளில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வரும் வசனங்கள் அச்சமுதாய மக்கள் மனம் புண்படும் அளவிற்கு அமைந்துள்ளது. ஆண்டி என்றும், பண்டாரம் என்றும் வரும் அந்த வார்த்தைகளையும், பாரி, பூரி, கக்கூஸ் நாரி என்ற வார்த்தைகளையும் அப்படத்தில் இருந்து நீக்க வேண்டும். அந்த வசனத்தை நீக்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

"டாஸ்மாக்கும் கவிஞர் வாலியும்"


'அருபெரே ஆர்ட் வென்சுரா பி லிமிடெட்' என்ற நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஸ்ரீதரன் தயாரிப்பில், கணேசன் காமராஜ் இயக்கியிருக்கும் படம் 'யாருக்கு தெரியும்'. 'தமிழ்ப் படம்' படத்தின் இசையமைப்பாளர் கண்ணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (ஜன.23) சென்னையில் நடைபெற்றது.

முதல் இசை குறுந்தகடை இயக்குநர் வசந்த் வெளியிட, 'மெளன குரு' படத்தின் இயக்குநர் சாந்தகுமார் பெற்றுகொண்டார்.

இப்படத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெறுகிறது அதில் ஒன்றை வாலியும், மற்றொரு பாடலை யுகபாரதியும் எழுதியிருக்கிறார்கள். வாலி எழுதிய பாடல் டாஸ்மாக் மதுபானக் கடையைப் பற்றிய பாடலாம். டாஸ்மாக் கடையில் மது அருந்துபவர்கள், அங்கு செல்பவர்கள் உள்ளே போன பிறகு எப்படி பேசுவார்கள். என்ன என்ன செய்வார்கள் போன்றவற்றை இப்படாலில் சொல்லியிருக்கிறாராம் வாலி. இப்பாலைப் பற்றி பேசிய தயாரிப்பாளர் ஸ்ரீதரன், "வாலி சார் டாஸ்மாக் உள்ளே போனாரா இல்லையா என்று தெரியாது ஆனால் இப்படால் கேட்டபோது அப்படி டாஸ்மாக் கடையினுள் உள்ளே இருக்கும் அனுபவம் தான் ஏற்படுகிறது. எனக்கு ரொம்பவே ஆச்சரியம் இதுபோன்ற தகவல்களை வாலி சார் எப்படி எழுதியிருப்பாற் என்று, இப்பாடலை கேட்டால் உங்களுக்கே அது தெரியும்." என்றார்.

தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் நிஷாந்த், திலீப், அச்சுதா, ஹரிஸ் ராஜா ஆகிய புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கலாபவன் மணி, சுஜா, சஞ்சனா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படம் புதுமையான திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

ஒரு கோடி ரூபாயும் : சிவபதி அமைச்சரான பின்னணியும்


"சசிகலா அண்ட் கோ, தன்னிடம், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு, தான் கொடுக்காததால் தான், மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது' என, கட்சித் தலைமையிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், மீண்டும் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் பதவி, சிவபதியை தேடிவந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவை நேற்று முன்தினம், மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. இதில், யாரும் எதிர்பாராதவிதமாக, திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., சிவபதி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, முக்கிய துறையான பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர், திருச்சி புறநகர் மாவட்ட செயலராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். புறநகர் மாவட்ட செயலர் பதவிக்கு, கடந்த டிசம்பரில் தான், முன்னாள் அமைச்சர், கே.கே.பாலசுப்பிமணியன் நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட ஒரே மாதத்தில், அவருக்கு மாவட்ட செயலர் பதவியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்துக்கு முன், மாவட்ட செயலர் பதவி மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்ட சிவபதிக்கு, மீண்டும் அப்பதவிகள் தேடிவந்தது, கட்சியினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, அ.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 

சிவபதி, மூன்று மாதங்களுக்குமுன், மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவியை அடுத்தடுத்து இழந்தார். சசிகலா கணவர் நடராஜன் தம்பி ராமச்சந்திரன் மூலம் தான் இவர் எம்.எல்.ஏ., மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவிகளைப் பிடித்தார் என்ற பேச்சு, கட்சியினர் மத்தியில் பரவலாக எழுந்தது. கடந்த, டிசம்பர் 19ம் தேதி, சசிகலா அண்ட் கோ, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டது. அதன் பின், தன்னிடம் சசிகலா அண்ட் கோ (திவாகரன், ராவணன்) ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டது; நான் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் தான், மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவியை இழந்தேன் என்று புகார் கூறி, முதல்வர் ஜெயலலிதாவிடம், சிவபதி கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில், மேற்சொன்ன பணத்தை பரஞ்ஜோதி கொடுத்து, மேற்கு தொகுதி இடைத்தேர்தலில்,எம்.எல்.ஏ., சீட், மாவட்ட செயலர், அமைச்சர் பதவியை பிடித்தார் என்றும் புகார் கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சிவபதி கூறியதில் உண்மை இருப்பதாக தெரிந்ததால், உடனடியாக அவரிடமிருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலர் பதவியும், அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவர், மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவியில், முறையாக செயல்படவில்லை என்று புகார் இருந்த நிலையிலும், திவாகரன் மீதுள்ள கோபம் காரணமாகவே, மீண்டும் சிவபதிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. பரஞ்ஜோதி மீது அவர் கொடுத்த புகார் நிரூபணம் ஆனதாக தெரிவதால், அவருக்கு, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து விரைவில் கல்தா கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

தற்போது, புறநகர் மாவட்ட செயலராக பதவியேற்ற பாலசுப்பிரமணியன் மீது, பெரிதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றாலும், கட்சியினர் சிலர், அவர் மீது சில புகார்களை, கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். பொதுவாக, அமைச்சர் பதவி கொடுப்பவர்களுக்கு, அந்தந்த மாவட்ட செயலர் பதவியும் சேர்த்து வழங்குவதை, முதல்வர் ஜெயலலிதா வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆகையால் தான், அமைச்சர் பதவியுடன், புறநகர் மாவட்ட செயலர் பதவியும் சேர்த்து சிவபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சராக ஆசைப்பட்ட கு.ப.கிருஷ்ணனுக்கு "செக்': திருச்சி மாவட்டத்தில் முத்தரையர் பெரும்பான்மையாக இருப்பதால், அந்த சமுதாயத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவபதிக்கும், அடுத்ததாக பரஞ்ஜோதிக்கும், அடுத்தடுத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இருவரும் அடுத்தடுத்து அமைச்சர் பதவியை இழந்ததும், முத்தரையர் சமுதாயத்தில் யாருக்கும் அமைச்சரவையில் இடம் இல்லாமல் இருந்தது. இதனால், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருக்கும், கு.ப.கிருஷ்ணனுக்கு, முத்தரையர் சமுதாய கோட்டாவில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. அதுபோன்ற வதந்திகள் அடிக்கடி பரவியது. இந்நிலையில், சிவபதி மீண்டும் அமைச்சராகியுள்ளதால், கு.ப.கிருஷ்ணன் அமைச்சர் கனவுக்கு, "செக்' வைக்கப்பட்டுள்