Monday, 19 December 2011

கேரள அரசியல்தலைவர்களிடம் மண்டியிட்ட ப.சிதம்பரம்

 கேரளத்தைச் சேர்ந்த மலையாளக் கட்சிகள், அரசியல்தலைவர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு மற்றும் நெருக்குதலைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தான் கூறிய கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாபஸ் பெற்றுள்ளார். தேவையில்லாமல் தான் பேசி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்களின் நெருக்குதலைத் தொடர்ந்தே ப.சிதம்பரம் இந்த வாபஸ் முடிவுக்குத் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் 17-12-2011 அன்று நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நான் பேசினேன். எனது பேச்சு சில பத்திரிகைகளில் முழுமையாக வெளியாகி உள்ளன. எனது முழுமையான பேச்சை தமிழக-கேரள மக்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொருவரும், கவுரவம், கட்டுப்பாடு மற்றும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று எனது பேச்சில் கேட்டுக் கொண்டேன். முல்லைப் பெரியாறு அணை குறித்த அச்சம் நியாயமானது அல்ல. அதே சமயம் அணையின் பாதுகாப்பு குறித்த இரு மாநில மக்களின் அச்சத்தை போக்குவதும் மத்திய அரசின் கடமை என்றும் குறிப்பிட்டேன்.

அணையின் பாதுகாப்பு என்பது கேரளாவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் கவலை அளிக்ககூடிய விஷயம்தான். முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அந்த குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அதுவரையில் அனைவரும் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மற்ற பேச்சாளர்கள் சுட்டிக் காட்டியது போல நானும் அங்கு (கேரளாவில்) இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், இந்த பிரச்சினை பெரிதாக்கப்படுவதாக கூறினேன். அந்த கருத்தை திரும்ப பெறுகிறேன்.

அப்படி நான் கூறியது தேவையற்ற கருத்து. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. இரண்டு மாநில மக்களின் ஒத்துழைப்பு, மற்றும் சகோதரத்துவம் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.

சென்னை காமராஜர் அரங்கில் நடந்த முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினை ஒரு விளக்கம் என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், பிரவோம் இடைத் தேர்தலை மனதில் கொண்டே கேரள கட்சிகள் முல்லைப் பெரியாறு பிரச்சினையை தீவிரப்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இதில் கலந்து கொண்டு பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

சட்ட நிபுணரான ப.சிதம்பரம் தனது பேச்சின்போது தமிழகத்திற்கு ஆதரவாகவே உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் என்றும் அடித்துக் கூறினார். இதையெல்லாம் பொறுக்க முடியாமல் கேரள லாபியிலிருந்து பெரும் நெருக்கடி கிளம்பவே தனது பேச்சை வாபஸ் பெறுவதாக ப.சிதம்பரம் அறிவிக்க நேரிட்டுள்ளது.

கேரள அரசியல்வாதிகள் தங்களது இஷ்டத்திற்குப் பேசி வரும் நிலையில், ப.சிதம்பரத்திற்கு மட்டும் அந்த உரிமை கொடுக்கப்படாமல் நெருக்குதலுக்குள்ளாக்கியிருப்பது ஆச்சரியமாக உள்ளது..

நிர்வாண நாயகி வீணா மாலிக் பாகிஸ்தானுக்கு ஓட்டம்...!


சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மாயமாகி போனதாக கூறப்பட்ட நிர்வாண நாயகி வீணா மாலிக், மும்பையிலிருந்து, பாகிஸ்தானுக்கு ரகசியமாய் போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் எப்.எச்.எம்., என்ற பத்திரிக்கைக்கு முழு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார் வீணா மாலிக். அதுமட்டுமல்ல தனது தோளில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., முத்திரையை பச்சைகுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் தான் அப்படி ஒரு போஸ் கொடுக்கவே இல்லை என்றும், தனது படத்தை மார்ப்பிங் ‌செய்து விட்டதாகவும் கூறி, சம்பந்தப்பட பத்திரிக்கைக்கு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அது உண்மையான படம் தான் என்று எப்.எச்.எம்., கூறியது.

இந்நிலையில், ஒரு படத்தின் சூட்டிங்கிற்காக மும்பை வந்திருந்தார் வீணா மாலிக். இப்படத்தின் சூட்டிங்கில் தொடர்ந்து நடித்து வந்த வீணா, கடந்த 15ம் தேதி முதல் மாயமாகிவிட்டார். போனில் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து அவரது மேலாளர் பந்த்ரா, மும்பை காவல் நிலையத்தில் வீணாவைக் காணவில்லை என்று புகார் கூறினார்.

மேலும் இதுதொடர்பாக படத்தின் டைரக்டர் ஹேமந்த் மதுகர் கூறும்போது, கடந்த சில தினங்களாகவே சூட்டிங்கில் சோர்வுடன் காணப்பட்டார் வீணா. கடந்த 15-ந்தேதி அன்று மிகவும் மனஉளைச்சலுடன், வேதனையிலும் இருந்தார். எனவே, அவரை மேக் அப்வேனில் ஓய்வு எடுக்கும்படி அனுப்பி வைத்தோம். அங்கு சென்றார். படப்பிடிப்புக்கு அவரை அழைத்து வர சென்ற உதவி டைரக்டர், அவர் அங்கு இல்லை என கூறினார். எனவே, அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டேன். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப்செய்யப்பட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய அவர், தனக்கு காய்ச்சலாக இருப்பதாகவும், எனவே படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாதுஎன்றும் தகவல் அனுப்பி இருந்தார் என்றார்.

இதனிடையே மாயமாகி போன நடிகை வீணா மாலிக், ரகசியமாக பாகிஸ்தான் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வீணாவின் விசா இன்னும் ஒரு சில தினங்களில் முடிய இருப்பதால், அதனை நீட்டிக்க அவர் பாகிஸ்தான் சென்றுள்ளதாகவும், அவரின் நண்பர் ஒருவர் அவரை பாகிஸ்தானில் கொண்டு போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. 

மெரீனா பீச்சில் 'ஒய் திஸ் கொல வெறி' பாடல்




சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா.ஆர்.தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் '3'. '3' 'ஒய் திஸ் கொல வெறி' என்ற பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை பட்டையை கிளிப்பிக் கொண்டிருக்கிறது. பாட்டு ஹிட்டான அளவுக்கு பாடல் காட்சியும் ஹிட்டாக வேண்டும். இதற்காக டான்ஸ் மாஸ்டருடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார்கள். இதனையடுத்து பாடல் ஒளிப்பதிவு சென்னை மெரீனா பீச்சில் நடக்கிறது.

அன்னா இந்தியில் பேசியது புரியாமல் கூச்சலிட்ட மக்கள்!


சென்னை வந்திருந்த அன்னா ஹசாரே இந்தியில் பேசியது புரியாததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அன்னாவின் பேச்சு மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டது.

நேற்று அன்னா ஹசாரே சென்னைக்கு வந்திருந்தார். பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் ஆரம்பித்து ஆங்கிலத்தில் பேசினார். தொடர்ந்து கிரண் பேடி பேசினார். இதையடுத்து அன்னா பேசினார்.

வணக்கம் என்று தமிழில் கூறி விட்டு இந்திக்குத் தாவினார் அன்னா. தன்னால் தமிழில் பேச முடியாததற்காக வருத்தப்படுவதாக கூறி விட்டு இந்தியில் தொடர்ந்து பேசினார் அன்னா.

அன்னா பேசுகையில், எனது போராட்டங்கள் மூலம் 6 அமைச்சர்களின் பதவி பறிபோயுள்ளது. லோக்பால் தொடர்பாகமத்திய அரசு எங்களை பலமுறை முட்டாளாக்கியுள்ளது. இளைஞர்கள், மக்களின் சக்தியுடன் எனது போராட்டம் வெல்லும்.

வருகிற 26ம் தேதி ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். அதுவும் சரிப்பட்டு வராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றார் அன்னா.

முதலில் அன்னா இந்தியில் தொடர்ச்சியாக பேசினார். இதனால் அவர் பேசுவது யாருக்கும் புரியவில்லை. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பலர் கிளம்பிச் செல்ல ஆரம்பித்து விட்டனர். இதையடுத்து அன்னா தனது பேச்சை நிறுத்தினார். கிரண் பேடி மைக்கைப் பிடித்து அனைவரும் அமைதியாக அமருங்கள். உங்களுக்காகத்தான் அன்னா வந்துள்ளார். அவரது பேச்சு தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்றார். இதையடுத்து கூட்டத்தில் அமைதி திரும்பியது.

பின்னர் அன்னா நிறுத்தி நிறுத்திப் பேச அவரது பேச்சு மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டது.

காய்கறி, பழம், உணவுக்கு தமிழகத்தை சார்ந்தே இருக்கிறோம்-உம்மன




காய்கறி, பழம், உணவுப் பொருட்களுக்கு தமிழகத்தை சார்ந்தே இருக்கிறது கேரளா என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கவே நாங்கள் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி.

பெங்களூர் வந்த சாண்டி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை 100 ஆண்டுகளைக் கடந்து விட்ட பழமையான அணை. இதனால் இடுக்கி உள்ளிட்ட மாவட்ட மக்கள் மனதில் அணை உடைந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. இந்த அச்சத்தைப் போக்கவே புதிய அணை கட்ட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

தமிழகத்திற்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை. கேரள மக்களுக்குப் பாதுகாப்பு, தமிழக மக்களுக்கு தண்ணீர் என்பதுதான் எங்களது இலக்கு.

கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படவில்லை. பாதுகாப்பாகவே உள்ளனர். ஆனால் சில பத்திரிகைககள்தான் திரித்துக் கூறி செய்தி வெளியிடுகின்றன.

தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முல்லைப் பெரியாறை நம்பியே உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். அதேபோல காய்கறிகள், பழம், உணவு ஆகியவற்றுக்கு நாங்கள் தமிழகத்தை நம்பியே உள்ளோம். இதை நாங்கள் மறுக்க விரும்பவில்லை.

தமிழகத்துடன் உள்ள நீண்ட கால நல்லுறவைப் பேணிக் காக்க விரும்புகிறோம் என்றார் சாண்டி.

பொங்கலுக்கு வருமா நண்பன் : டைரக்டர் ஷங்கர் தீவிரம்!!


பொங்கல் பண்டிகை தினத்தில் நண்பன் படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் டைரக்டர் ஷங்கர் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.  விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா மூவரும் நடித்துள்ள படம் நண்பன். டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் இப்படத்தின் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவினை ஹாரிஸ் ஜெயராஜின் மேடை இசை நிகழ்ச்சியோடு நடத்த முடிவெடுத்துள்ளனர். இப்படம் இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பதால் அப்படத்தில் நடித்த அமீர்கானையும் விழாவுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஒருபுறம் பாடல் வெளியீட்டு விழா வேலைகள் விறுவிறுப்பாக நடந்தாலும், படத்தினை பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவரும் எண்ணத்தில் விறுவிறுப்பாக இயங்கி  வருகிறார் டைரக்டர் ஷங்கர்.

ஒரு தலை காதல்! மீண்டும் களமிறங்குகிறார் டி.ஆர்!!


ஒரு தலை காதலை கருவாக வைத்து, 1980ம் வெளிவந்த படம், `ஒரு தலை ராகம். அந்த படத்தை இயக்கிய டி.ராஜேந்தர், 31 வருடங்களுக்குப்பின் மீண்டும் ஒரு தலை காதலை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு, `ஒரு தலை காதல் என்றே பெயர் சூட்டியிருக்கிறார். படத்தில் டி.ராஜேந்தர் முரட்டுத்தனமான இசைக் கலைஞராக, மதுரை தமிழ் பேசி நடிக்கிறார். மும்பையை சேர்ந்த 3 புதுமுகங்கள் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை டி.ராஜேந்தர் கவனிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு கொல்லிமலையில் 18 நாட்கள் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல், தேனி பகுதிகளில் நடைபெற இருக்கிறது. முழுக்க முழுக்க கிராமிய பின்னணியில் இந்த படம் தயாராகிறது. படித்த பெண்ணுக்கும், படிக்காத ஒருவனுக்கும் இடையே மலரும் காதலை, கதை சித்தரிக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆர்யா என்கிட்ட ரொம்ப காசு அடிச்சுட்டான் : மாதவன்!

 


மணிரத்னத்தின் அலைபாயுதே படம் மூலம் சாக்‌லெட் பாயாக அறிமுகமாகி, இளம் பெண்களின் கனவு நாயகனாக மேடி எனும் பெயரில் வலம் வந்தவர் நடிகர் மாதவன். தொடர்ந்து ரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்த மாதவன், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். சிறு தடுமாற்றத்திற்கு பிறகு, தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்போது லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடித்து வருகிறார்.

வேட்டை படத்தில் நடித்த அனுபவம் குறித்து மாதவன் நம்மிடம் பேசியதாவது, அலைபாயுதே படத்தில் அறிமுகமாகி, திரும்பி பார்ப்பதற்குள் பல வருஷம் உருண்டோடி விட்டது. நான் நடித்து சூப்பர் ஹிட் ஆன படங்களில் லிங்குசாமியின் ரன் படமும் ஒன்று. கிட்டத்தட்ட அந்த படம் வந்து 10 வருஷமாச்சு. இந்த பத்து வருஷத்துல, லிங்குசாமி பத்துபேர் கொண்ட எனர்ஜி வச்சிருக்கார். ஆனால் நான் பத்து கிலோ எடை வெயிட் போட்டிருக்கேன். ரொம்ப நாள் கழித்து தமிழில் எனக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சுருக்கு.

வேட்டை படத்‌தின் கதையை லிங்குசாமி சொன்னபோது, நீங்க தான் இந்த படத்தில் நடிக்கணும், இல்லேனா, இந்த கதையை அப்படியே தூக்கி வச்சுடுவேன் என்று லிங்குசாமி கூறினார். அந்தளவுக்கு என் மேல் அவர் நம்பிக்கை வச்சிருந்தார். அவருக்காக நான் ஒப்புக்கொண்டு இந்த படத்தில் நடித்தேன். நான் எப்பவும் ஒன்று சொல்வேன். தமிழில் யங் சூப்பர் நடிகர்னா அது ஆர்யா தான். அவர் இந்த படத்துல என் தம்பியா நடிச்சுருக்காரு. படப்பிடிப்பில் எப்போதும் என்னை லந்து பண்ணிக்கிட்டே இருப்பான் ஆர்யா. இரண்டு பேரும் இந்தபடத்துல சூப்பரா நடிச்சிருக்கோம். படப்பிடிப்பின் போது எங்களுக்குள் எந்த போட்டியும் கிடையாது. எல்லாமே செட்டுக்கு வெளியே தான். குறிப்பாக சீட்டு விளையாடுவதில் தான் எங்களுக்குள் அதிகம் போட்டியிருக்கும். சீட்டு விளையாட்டுல ஆர்யா, என்கிட்டே இருந்து ரொம்ப காசு அடிச்சுட்டான். அதிகமுறை அவன் தான் ஜெய்ச்சிருக்கான்.

படப்பிடிப்பு தளத்திலேயே நான் தான் ரொம்ப சீனியர்னு எல்லோரும் என்னை பீல் பண்ண வச்சிடாங்க. லிங்குசாமி கூட மாதவன், செட்டிற்கு வந்த மம்முட்டி வந்த மாதிரி ஒரு உதறல் இருக்கும் என்று சொல்றார். ஆனால் செட்டில் நான் ரொம்ப ஜாலியாத்தான் இருப்பேன். மன்மதன் அம்பு சூட்டிங்கில் கமல் சார் கூட சேர்ந்து நடிச்சப்போ, அவர் என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கொண்டார். அதை என்னால் எப்பவும் மறக்கவே முடியாது.

தமிழில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்று கேட்கீறாங்க...? நான் வருஷத்துக்கு ஒரு படம் பண்ணிகிட்டுதான் இருந்தேன். இடையில் ஏனோ, தானோ என்று சில படங்களில் நடித்து மாதவன் மரியாதையை குறைச்சிட்டேன். அப்புறம் தான் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பிச்சேன். இந்தியில் கூட இரண்டு படத்தில் பிஸியாக இருக்கேன். அடுத்து இரண்டு தமிழ் படங்களில் நடிக்க உள்ளேன்.

தமிழ் சினிமாவிற்கு நான் அறிமுகமானதை விட இப்போது பலமடங்கு வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. ரசிகர்கள் ரொம்ப மாறிட்டாங்க, படத்தோட ரிசல்ட்ட கூட உடனே சொல்றாங்க. நான் சினிமாவில் அறிமுகமாகும் ‌போதே எனக்கு 30வயசு. அதற்கு அடுத்து எவ்வளவோ மாற்றங்கள். இப்பகூட என்னை பாருங்க, உடல் பருமனாக, முடி எல்லாம் நரைத்து விட்டது. காலம் போய்கிட்டே இருக்கு. அதேசமயம் எனக்கான ரசிகர்கள் எப்பவும் இருப்பாங்க என்று நம்புகிறேன்.

இவ்வாறு மாதவன் கூறினார்.

ராணா படம் தள்ளிப்போனது ஏன்?


ரஜினிகாந்த்-கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரும் ஏற்கனவே `முத்து,` `படையப்பா' ஆகிய 2 படங்களில் இணைந்து பணிபுரிந்தார்கள். அதையடுத்து இருவரும் `ராணா' படத்தில் இணைவதாக இருந்தார்கள்.


`ராணா' படத்தில் நிறைய சண்டை காட்சிகளும், சாகசங்கள் நிறைந்த குதிரை சவாரி காட்சிகளும் இருப்பதால், அவருடைய உடல் நலனை கருதி, அந்த படம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.


அதற்கு முன்பாக, `கோச்சடையான்' என்ற புதிய படத்தை உருவாக்க ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இது, ஒரு மாவீரனை பற்றிய கதை.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் கவனிக்கிறார். ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா டைரக்டு செய்கிறார்.


`கோச்சடையான்' படம் பற்றியும், முதன்முதலாக ஒரு இந்தி படம் டைரக்டு செய்வது பற்றியும் `தினத்தந்தி' நிருபருக்கு டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


"கோச்சடையான் படத்துக்கு திரைக்கதை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. கதை, ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. இந்த கதைக்கும், ஒரு வார பத்திரிகையில் வந்து கொண்டிருக்கும் `கோச்சடையான்' என்ற கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.


ஜனவரி 15-ந் தேதிக்கு மேல் `கோச்சடையான்' படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம். மார்ச் மாதத்துக்குள் படப்பிடிப்பை முடித்து விடுவோம்.


அதன்பிறகு, நான் ஒரு இந்தி படத்தை டைரக்டு செய்கிறேன். அந்த படத்தில், சஞ்சய்தத் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தி படம் முடிவடைந்த பின், `ராணா' படத்தை டைரக்டு செய்வேன் என்றூ கூறினார்.


மு.க.ஸ்டாலின் மீது கைது நடவடிக்கையா? கமிஷனர் திரிபாதி பேட்டி


சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை பெருநகரத்தில் நடந்த குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் 131 வழக்குகளில் 117 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 2.16 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 526 பவுன் தங்க நகை, 3260 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ. 1 1/2 லட்சம் ரொக்கப் பணம், நான்கு சக்கர வாகனங்கள் 7, 2 மோட்டார்சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டன. சென்னையில் 6 கொலை வழக்குகளில் இன்னும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை.

ஆதாய கொலைக்காக நடந்த இந்த வழக்கு துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடிகை புவனேஸ்வரி மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் மீதான வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனருக்கு மாற்றப்பட் டுள்ளது. மு.க.ஸ்டானின் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

கைது நடவடிக்கை குறித்து விசாரணை அதிகாரிதான் முடிவு செய்வார். சென்னையில் தனிப்பட்ட முன்விரோத கொலைகள் நிறைய நடக்கின்றன. இதற் கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க இயலாது. ஆதாய கொலை தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப் படும். வெளி மாநிலத்தவர் சென்னையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை இனி வரும் காலங்களில் கணக்கெடுக்கப்படும். சென்னையில் 20 கேரளா கடைகள் தாக்கப்பட்டுள்ளன.

இதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரை தேடிவருகிறோம். கேரளாக்காரர்கள் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் தண்ணீர் லாரி கிளீனர் ஜெகன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ராஜு, வியாசர்பாடியைச் சேர்ந்த மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு 1 மாதத்துக்குள் வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிபதி ஹசீனா குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார். சென்னையில் வயதானவர்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, இணை கமிஷனர்கள் சேஷசாயி, சங்கர், செந்தாமரைக்கண்ணன், நல்லசிவம் ஆகியோர் உடன் இருந்தனர்.

கலக்கும் பவர் ஸ்டார் கதிகலக்கும் ரசிகர்கள்…


ஒரே தியேட்டரில் ஒரே படத்தை ஓட்டி ஓட்டி ரொம்ப பிரபலமாகிவிட்டார் பவர் ஸ்டார், சமூக வலைத்தளங்களில் இவரை வைத்து தான் பலர் பொழுதுபோக்கி வருகிறார்கள். அந்த அளவுக்கு புகழின் உட்சத்தை அடைந்து வருகிறார் என்பது உண்மையா இல்லையா என்பதை சிபிஐ வைத்து தான் கண்டுபிடிக்கணும்..

சென்னை திரைப்பட விழாவில் பவர்ஸ்டாரை பார்த்த பலர் சூப்பர் ஸ்டாரை பார்த்தது போல ( தலைவா மன்னிச்சுடுங்க உங்ககூட ஒப்பிட்டு விட்டேன் ) பரபரப்பாகி வருகிறார்கள். பவர்ஸ்டாருடன் நின்று போட்டோ எடுக்க கூட்டம் அலை மோதுகிறது. பல சமயங்களில் பவர்ஸ்டாரை காப்பாத்த பாதுகாவலர்கள் தேவைப்படுகிறார்கள் .

சில ரசிகர்கள் நாளைய முதல்வரே என்றெல்லாம் கத்த ஆரம்பித்தனர். இதெல்லாம் அவருக்கான உண்மையான ரசிகர்கள் என்று நம்புகிறார் போல, ஃபேஸ்புக் பார்த்தா தான் தெரியும் பவர் ஸ்டார் காமெடி பீசா டெரர் பீசா என்று

உங்களை வச்சு கண்டிப்பாக யாரும் காமெடி பண்ணல பவர்ஸ்டார்…!!!!

கேரள அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள்!- இளங்கோவன் பேச்சு


கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள் என சோனியா காந்திக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பிறந்த நாள் விழா, கூடங்குளம்- முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்த விளக்கக் கூட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மத்திய அமைச்சர்கல் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுனர்.

கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியது.

அவர் பேசுகையில், "இங்கே பேசிய தலைவர்கள் முல்லைப்பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சினைகள் குறித்து பல்வேறு கண்ணோட்டத்துடன் பேசினார்கள்.

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது வரை எந்த பிரச்சினையும் இல்லை. 1967-ம் ஆண்டுக்கு பிறகு திராவிட கட்சிகளின் ஆட்சி நடந்தபோதுதான் முல்லைப் பெரியாறு பிரச்சினை உருவாகி 146 அடியில் இருந்து 136 அடியாக நீர்மட்டத்தை குறைத்தனர்.

எம்.ஜி.ஆர். ஆட்சியின் போதுதான் இப்படி குறைக்கப்பட்டது. எனவே முல்லைப் பெரியாறு விஷயம் பிரச்சினை ஆனதற்கு திராவிட கட்சிகள்தான் காரணம். அது 3 எழுத்து கட்சியாகவும் இருக்கலாம், 4,5 எழுத்து கட்சியாகவும் இருக்கலாம். அதில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் மொத்தத்தில் இன்று கேரள அரசுக்கு இளிச்சவாயராக நாம் காட்சி அளிக்கிறோம். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

அங்கு ஆட்சி நடத்தும் அரசாங்கம்தான் பிரச்சினையை உருவாக்கி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேட்க மறுக்கிறார்கள். எனவே இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

மத்திய அரசுக்கும் கேரளா அரசு பணியாது. எனவே கேரள அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். 'டிஸ்மிஸ்' செய்வது நமக்கு புதிதல்ல. கேரளாவுக்கும் புதிதல்ல. மேடையில் இருக்கிற மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசனுக்கு இக்கட்டான சூழ்நிலையை நான் உருவாக்க விரும்பவில்லை.

தமிழ்நாட்டுக்கு கேரளா கேடு விளைவிக்கும்போது உம்மன்சாண்டியை அங்கே முதல்வராக உட்கார வைக்க கூடாது. டெல்லிக்கு வா என்று அழைத்துக் கொள்ள வேண்டும்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து அல்ல. இதை அவர்கள் ஏற்கவும் மாட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற இதை சோனியா காந்தி செய்தே தீர வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் தமிழக மக்கள் திசை திருப்பப்படுகிறார்கள். ஒவ்வொரு கட்சியும் இதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கூடங்குளம் பிரச்சினை தானாக உருவான பிரச்சினை அல்ல. சிலரால் உருவாக்கப்பட்ட பிரச்சினை. எனவே இந்த பிரச்சினையை காங்கிரஸ் கையில் எடுத்து மக்களுக்கு விளக்க வேண்டும்," என்றார்.