Sunday, 18 September 2011

ரஜினி பற்றி தவறான காட்சிகள் - சில்க் ஸ்மிதாவின் உண்மைக் கதையான தி டர்ட்டி


 
சில்க் ஸ்மிதாவின் உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்திப் படமான தி டர்ட்டி பிக்சரில், சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி காட்சிகள் உள்ளதாகவும், அவை ரஜினியை அவமதிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியதையடுத்து ரசிகர்கள் கொதிப்பில் உள்ளனர்.


உடனடியாக அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏக்தா கபூர் தயாரிப்பில், வித்யா பாலன் - நஸ்ருதீன் ஷா நடிக்கும் படம் தி டர்ட்டி பிக்சர். இந்தப் படம் மறைந்த தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளது. இப்போது எழுந்துள்ள சர்ச்சை, படத்தில் ரஜினியை அவமானப்படுத்தியுள்ளனர் என்பது.

இந்தப் படத்தில் வயதான முன்னணி நடிகராக தோன்றுகிறார் நஸ்ருதீன் ஷா. அவரும் சில்க்கும் இணைந்து வருகிற காட்சிகளும் வசனங்களும் ரஜினியை அவமானப்படுத்துவது போல உள்ளனவாம்.

எனவே இந்தக் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரஜினியின் பெரும்பாலான படங்களில் சில்க் ஸ்மிதா முக்கிய இடம்பெற்றிருப்பார் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் விளக்கம் வேறு மாதிரி உள்ளது. அவர் கூறுகையில், "தி டர்ட்டி பிக்சரில் நஸ்ருதீன் ஷா சீனியர் நடிகராக வருவார். ஆனால் சில்க் ஸ்மிதா காலத்தில் ரஜினி இளமையான சூப்பர் ஸ்டார். இந்த வித்தியாசத்தை ரசிகர்கள் புரிந்து கொண்டால் கோபப்பட மாட்டார்கள். ரஜினியை நாங்கள் அவமானப்படுத்தவில்லை. அவர் மட்டுமல்ல, யாரையுமே இந்தப் படத்தில் தவறாக சித்தரிக்கவில்லை," என்றார்

நடிகை சோனா மானபங்கம் புகார்: எஸ்.பி.பி. சரண் மீது வழக்கு (வீடியோ இணைப்பு)


பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் ரஜினியுடன் குசேலன், மற்றும் கோ, பத்துக்கு பத்து, குரு என் ஆளு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கனி மொழி என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார். நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் மீது நடிகை சோனா பாண்டிபஜார் போலீசில் பரபரப்பான பாலியல் புகார் அளித்துள்ளார்.


எஸ்.பி.பி. சரண் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் ஆவார். உன்னை சரண் அடைந்தேன் என்ற படத்தில் நடித்துள்ளார். சென்னை-28 ஆரண்ய காண்டம் போன்ற படங்களையும் தயாரித்து உள்ளார். சோனா போலீசில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா, படத்தில் நடித்த வைபவ் அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். வெங்கட்பிரபு, பிரேம்ஜி, எஸ்.பி.பி. சரண் உள்பட 30 பேர் அந்த விருந்தில் பங்கேற்றனர். அங்கு மது பரிமாறப்பட்டது. எல்லோரும் மது அருந்தினர். அப்போது எஸ்.பி.பி. சரண் திடீரென என்னை மானபங்கம் செய்தார். இன்று இரவு என்னோடு இருக்கிறாயா என்று கேட்டு கட்டாயப்படுத்தினார். அவரிடம் இருந்து நான் தப்பி ஓடினேன். இந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது. எஸ்.பி.பி. சரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

பின்னர் சோனா கதறி அழுதபடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும் போது எஸ்.பி.பி. சரண் என் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தார். பலர் முன்னிலையில் அசிங்கமாக நடந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். உன்னைப்பற்றி தெரியாதா நீ நடிகை தானே என்று அசிங்கமாக பேசினார். உன் ரேட் என்ன சொல் என்றார். நான் விலை மாது அல்ல. என்னிடம் அசிங்கமாக நடந்த எஸ்.பி.பி.சரண் சட்டையை வெங்கட் பிரபு பிடித்து இழுத்து சண்டைக்கு போனார்.

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏற்கனவே நான் தயாரித்த படம் தோல்வி அடைந்து பணக்கஷ்டத்தில் இருக்கிறேன். அதை மறைத்து எல்லோரிடமும் சிரித்து பழகினேன். எஸ்.பி.பி. சரண் மன்னிப்பு கேட்காவிட்டால் தற்கொலை செய்து கொண்டு சாவேன் என்றார்.

சோனா புகார் மீது போலீசார் பெண்கள் வன் கொடுமை சட்டம் (4), ஐ.பி.சி. (354), மானபங்க படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி கூறும் போது மது விருந்தில் பங்கேற்ற வெங்கட் பிரபு, வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட நடிகர்களிடம் நேரில் விசாரணை நடத்தப்படும். சோனாவை மானபங்கம் செய்தது உண்மை என தெரியவந்தால் எஸ்.பி.பி. சரண் கைது செய்யப்படுவார் என்றார்.

சோனா பப்ளிசிட்டி தேடுகிறார்! � சரண்!


விளம்பரத்திற்காக தன் மீது நடிகை சோனா வீண் பழி சுமத்துவதாக தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் கூறியுள்ளார்.

பிரபல கவர்ச்சி நடிகை சோனா, மங்கத்தா படத்திற்காக இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் தனக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாக குற்றஞ்சாட்டினார். பாண்டி பஜார் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுத்துள்ளார்.

மேலும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, பகிரங்கமாக தன்னிடம் சரண் மன்னிப்பு கேட்காவிட்டால் தீக்குளிப்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் எஸ்.பி.சரண் சோனா புகாருக்கு மறுப்பு கூறியுள்ளார்.

சோனா தன் மீது வீண் பழி சுமத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''விருந்து நிகழ்ச்சியில் நான் எதுவும் முறை தவறி நடக்கவில்லை. சோனாதான் பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் செய்கிறார். படம் தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசினேன்,' என்றார்.

இதனிடையே விருந்து நிகழ்ச்சியில் இத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று இயக்குனர் வெங்கட்பிரபுவும் மறுத்துள்ளார்.

வெங்கட் பிரபுவும் சரணும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதுங்கி இருக்கும் கடாபியை சிறை பிடிக்க இங்கிலாந்து-பிரான்ஸ் உதவி


லிபியாவில் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. தற்போது தேசிய மாற்று கவுன்சில் அமைப்பின் இடைக்கால அரசு பதவி வகித்து வருகிறது. எனவே கடாபியின் குடும்பம் அல்ஜீரியாவுக்கும், நைஜர் நாட்டுக்கும் தப்பி ஓடிவிட்டது. ஆனால் கடாபி லிபியாவில் தலைமறைவாகி விட்டார்.

அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. எனவே, அவரை ரகசிய இடங்கள் மற்றும் பதுங்கு குழிகளில் புரட்சி படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். லிபியாவில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் உருவானதால் வெளிநாட்டு தலைவர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சார்கோஷி ஆகியோர் நேற்று தலைநகர் திரிபோலி வந்தனர்.
அங்கு புதிதாக அமைந்திருக்கும் இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீலை சந்தித்து பேசினார்கள்.

அப்போது, அவரிடம் இருவரும் கூறியதாவது:-

கடாபியின் ஆட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழும் வரை இங்கு நெட்டோ படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும். மேலும் தலை மறைவாக இருக்கும் கடாபியை சிறை பிடித்து நீதியின் முன்நிறுத்த இங்கிலாந்தும், பிரான்சும் உதவும். மேலும் கடாபியின் ராணுவம் புதைத்து வைத்துள்ள கண்ணி வெடிகள் மற்றும் ஏவுகணைகளை கைப்பற்றி அழிக்கவும் உதவி செய்வோம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே கடாபியின் சொந்த நகரமான சிர்த் மற்றும் பாலைவன நகரமான வாடிபே ஆகியவற்றை கைப்பற்றும் நடவடிக்கையில் புரட்சிப்படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அங்கு ராணுவத்துடன் 2 மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அந்த நகரங்கள் முழுவதும் விரைவில் புரட்சி படை கட்டுப்பாட்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிஸ் வங்கியில் ராஜீவ்காந்தி பெயரில் கோடிக்கணக்கில் கறுப்பு பணம்;

ஆந்திர மாநிலம் குண் டூர் மாவட்டம் கொத்தபேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஊழலுக்கு எதிரான பேரணி நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் நாராயணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தலைவர்கள் பலர் ஊழல் மூலம் கொள்ளையடித்த பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். அதில் ராஜீவ்காந்தி பெயரில் ரூ.1.9 லட்சம் கோடி கறுப்பு பணம் போடப்பட்டுள்ளது. இந்த விவரம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நன்றாகத் தெரியும். இதை வெளியிட்டால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவர் கருதுகிறார்.

சில சுவிஸ் வங்கிகள் தாமாக முன்வந்து கறுப்பு பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியது. ஆனால் அதை வாங்க காங்கிரஸ் அரசு மறுத்து வருகிறது. அப்படியானால் சுவிஸ் வங்கிகளில் உள்ள பெரும் பாலான கறுப்பு பணத்தை காங்கிரஸ் தலைவர்கள் போட்டு வைத்துள்ளார்களா! அந்த கறுப்பு பணத்தை எடுத்து வந்து ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம்.

இதன்மூலம் தனிநபர் வருமானம் அதிகரிக்கும். வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும். கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமானால் நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். ஊழல் ஒழிந்தால் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையை அரசு உயர்த்த வேண்டியதில்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் ஊழலை ஒழிக்க மாணவ-மாணவிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பூமியை போன்ற, புதிய கிரகம் கண்டுபிடிப்பு


 
ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் கிரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிநவீன டெலஸ் கோப் மூலம் விண் வெளியில் ஆய்வு நடத்திய போது பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்தனர். இது பூமியை விட 3.6 மடங்கு பெரியது. இதை சுற்றி விண்மீன் (நட்சத்திரங்கள்) கூட்டம் உள்ளது.

அதற்கு எச்.டி.85512 பி என பெயரிட்டுள்ளனர். இந்த கிரகம் பூமியில் இருந்து 36 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதன் வலது புறம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எனவே, இங்கு உயிர்கள் வாழ முடியும் என கருதப்படுகிறது. மேலும் இந்த புதிய கிரகத்தின் வெளிப்புற தோற்றம் பாறை போன்று காட்சி அளிக்கிறது.

மேகக் கூட்டங்களும் காணப்படுகிறது. ஆகவே இங்கு உயிர் வாழ முடியும் என கருதப்பட்டாலும் கூட தீவிர ஆய்வுக்கு பிறகே இறுதியான முடிவுக்கு வரமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்:


முகூர்த்த நேரத்திற்கு, வெளிநாட்டில் இருந்து மணமகன் வந்து சேரவில்லை. இருப்பினும், நிச்சயித்தபடி, மணமகனின் சகோதரி திருமண சேலை கொடுத்து திருமணம் நடந்தது.

கேரளா கொல்லம் மாவட்டத்தில் பந்தளம் அருகே கிடங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் ராஜி. இவருக்கும் நூறுநாடு பகுதியைச் சேர்ந்த சதானந்தன் மகன் அனிஷ்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அனிஷ், சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணத்தை குளநாடு பகவதி கோவிலில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அனிஷ் பணியாற்றும் நிறுவனம் கடைசி வரை அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்து விட்டது.

அவரது பெற்றோர் மற்றும் இந்திய தூதரகம் சார்பில் முறையீடுகள் வைக்கப்பட்டும் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இந்நிலையில், இரு வீட்டாரும் பதட்டத்தில் இருந்தனர்.

மணமகனுக்கு விடுமுறை கிடைக்காததால், திருமணத்தை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், மணமகன் வரும்போது வரட்டும், திருமணத்தை நிச்சயித்தபடி நடத்தலாம் என, பெரியவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, நிச்சயித்த நாளில் திருமணத்திற்கு இரு வீட்டு உறவினர்களும் திரண்டனர். மணமகனுக்காக அவரது சகோதரி மணமகளுக்கு திருமண சேலை கொடுத்து திருமணத்தை நடத்தினார்.

விடுமுறை கிடைத்து மணமகன் தாயகம் திரும்பியதும் முறைப்படி, மணமகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடத்தலாம் என, முடிவானது.

திருமணத்திற்கு பின் மணமகள், மணமகன் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

தன்னாட்சி உரிமையே தமிழரின் தேவை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் முழக்கம்


தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையை பெற்றுக்கொடுப்பதே இலங்கையில் பிரச்சினை தீர்வதற்கான ஒரே வழி என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை இலங்கை மற்றும் காஷ்மீர் நிலைமைகள் தொடர்பாக சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது.

விவாதத்தில் உரையாற்றிய கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இல்போட் வடக்கு தொகுதி உறுப்பினர் லீஸ்கொட், இலங்கையில் உள்ள தமிழருக்கு நாம் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகச் சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொழிலாளர் கட்சி உறுப்பினர் இயன் ஒஸ்ரின், கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் ஜொனாதன் லோட், அன்றூ கிரிபத்ஸ் உள்ளிட்ட பலரும், இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமைகளை வழங்குவதே இந்தப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்று கூறினர்.

இந்த விவாதத்தில் பதிலளித்துப் பேசிய பிரிட்டிஷ் வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், இலங்கையில் நடந்த போரின் போது இரு தரப்பினரும் புரிந்த போர்க்குற்றங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் தாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.

பொங்குதமிழ் நிகழ்வு தொடர்பாக கருத்துரைக்கும் முக்கியத்தர்கள் (வீடியோ இணைப்பு)


















பொது நிகழ்ச்சிகளுக்கு போக முடியவில்லை: ஐஸ்வர்யாராய் ஆவேசம்


ரசிகர்கள் தொல்லையால் ஐஸ்வர்யாராய் விரக்தி அடைந்துள்ளார். கர்ப்பமான பின் அவரை வெளியில் அதிகம் காணமுடியவில்லை. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார்.

குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பதற்காக டாக்டர்களை சந்திப்பது, அவர்கள் ஆலோசனைப்படி உணவு எடுத்துக் கொள்வது, லேசான உடற்பயிற்சிகள் செய்வது என்று இருக்கிறார்.

சமீபத்தில் மும்பையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முக்கியஸ்தர்கள் விரும்பி அழைத்ததால் சென்றார். அங்கு அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்தனர். கூட்டத்தினர் மத்தியில் சிக்கி தவித்தார். போலீசார் மீட்டனர். இதனால் திருப்தியாக சாமி கும்பிட முடியாமல் கோபத்தோடு வீட்டுக்கு திரும்பினார்.

இது குறித்து ஐஸ்வர்யாராய் கூறியதாவது:-

ரசிகர்கள் நடவடிக்கைகளால் சந்தோஷப்படுவதா அல்லது வேதனைப்படுவதா என்று புரியவில்லை. நானும் சாதாரண பெண்தான். நடிகை என்பதால் சொந்த வாழ்க்கை இருக்கக்கூடாது என்று அர்த்தம் அல்ல. வீடு, பெற்றோர், உறவினர்கள் எல்லாம் உண்டு. இது போன்று ரசிகர்கள் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது என்றார்.

2 சூரியன்கள் உதிக்கும் கிரகம்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் “ஹெப்லர்” என்ற பெயர் கொண்ட விண்கலம் ஒன்றை விண்ணுக்கு அனுப்பினார்கள்.

இந்த விண்கலம் 2 சூரியன்கள் உள்ள கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகம் பூமியில் இருந்து 200 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது. ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருடத்தில் கடக்கும் தூரம் ஆகும். அதாவது 9 1/2 லட்சம் கோடி கி.மீட்டர் ஆகும்.

2 சூரியன்களை சுற்றி வர இந்த கிரகம் 229 நாட்களை எடுத்துக் கொள்கிறது. 2 சூரியன்கள் இருந்தாலும் இவை ஒரே திசையில் இருப்பதால் பூமியைப் போலவே இந்த கிரகத்திலும் பகல்-இரவு இருந்து வருகிறது. இதனால் ஒரு நாளைக்கு இரண்டு சூரிய உதயங்களும், இரண்டு சூரிய அஸ்தமனங்களும் நிகழ்கின்றன.

மேலும் இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு சூரியன்களும் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. இதனால் 20 நாட்களுக்கு ஒருமுறை கிரகணம் ஏற்படுகிறது. சூரியன்கள் இரண்டும் நமது பூமியில் காணப்படும் சூரியனை விடச் சிறியவை. ஒன்று ஆரஞ்சு நிறத்திலும், மற்றொன்று சிவப்பு நிறத்திலும் தோன்றி மறைகின்றன.

ஒன்று நாம் காணும் சூரியனைவிட முக்கால் பங்கிற்கும் குறைவான அளவை உடையது. மற்றொன்று கால் பங்கிற்கும் குறைவானது.

இந்த பிரபஞ்சத்தில் பல வகை சூரியன்களும் (நட்சத்திரங்கள்), கிரகங்களும் உள்ளன என்பதையே இது காட்டுகிறது. ஹெப்லர் விண்கலம் கண்டுபிடித்ததால் இந்த கிரகத்துக்கு “ஹெப்லர் 16பி” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் கலிபோர்னியா கார்ல்சேகன் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்