Monday, 6 February 2012

விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் நடிகை கைது!


வாடா செல்லம் என்ற படத்தில் நடித்த நடிகை கரோலின் மரியத், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழில் வாடா செல்லம் என்ற படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்தவர் கரோலின் மரியத். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கரோலின் விபச்சார தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் புனேயில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பானுபிரதாப் பார்கே கூறுகையில், கரோலின் பற்றி ஏற்கனவே எங்களுக்கு பலமுறை தகவல் வந்தது. ஆனால் இப்போது தான் அவரை பிடிக்க முடிந்தது. தமிழில் சில படங்களிலும், ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளதால் சென்னையில் இவர் ரொம்ப பிரபலம் என்றும், இவருடன் ஒரு இரவை கழிக்க ரூ.3 லட்சம் வரை பணம் பெறுகிறார் என்றும், கரோலினுடன் அவரது மேனஜர் ராஜ்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

இந்தி ஹீரோக்களின் வலையில் சிக்கிய இலியானா


நண்பன் பட ஹிட்டைத் தொடர்ந்து இலியானாவை தங்களுக்கு ஹீரோயின் ஆக்கிவிட வேண்டும் என்று பாலிவுட் ஹீரோக்கள் பலரும் துடித்துக் கொண்டிருக்கிறார்களாம். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இலியானாவுக்கு இந்தித் திரையுலகில் இருந்து அழைப்பு வந்தவண்ணம் இருக்கிறதாம். நடிகர் அக்ஷய்குமார் அடுத்து நடிக்க உள்ள கிலாடி 786 படத்தில் இலியானாவை ஒப்பந்தம் செய்ய துடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. "எவ்வளவு சம்பளம் கேட்டாலும் பரவாயில்லை. இலியானாவை எப்படியாவது ஒப்பந்தம் செய்யுங்கள்" என்று தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறாராம் அக்ஷய்.

இதேபோல் நடிகர்கள் இம்ரான்கான், அஜய் தேவ்கன் ஆகியோரது விருப்பப் பட்டியலிலும் இலியானா இடம்பிடித்திருக்கிறாராம். பாலிவுட்டில் டிமாண்ட் இருந்தாலும் அம்மணி தெலுங்குத்திரையுலகை விட்டு விலகுவதாக இல்லையாம். இப்போதைக்கு அடுத்த ஓராண்டுக்கு என்னுடைய கால்ஷீட் டைரி நிரம்பி இருக்கிறது. அதன் பிறகு பார்க்கலாம் என்று தன்னைத் தேடி வரும் இந்திப்பட அதிபர்களிடம் கூறி வருகிறாராம் இலியானா.

ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் அத்துமீறலா...?


நள்ளிரவு பார்ட்டியில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் ஒருவர் அத்துமீறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். சி.சி.எல் எனப்படும் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது. கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு அங்குள்ள ஸ்டார் ஹோட்டலில் விடிய விடிய உற்சாக பான விருந்து நடைபெற்றுள்ளது. பார்ட்டியில் பங்கேற்ற ப்ரியாமணி, அதிகாலையில் தனது அறைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த இந்தி நடிகர் சச்சின் ஜோஷி, ப்ரியாமணியின் கையை பிடித்து இழுத்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாகவும், ப்ரியாமணி அவரை தள்ளி விட்டு விட்டு தப்பியதாகவும் கேரள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கொச்சியில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. யாரோ வேண்டுமன்று வதந்தி கிளப்பி விட்டிருக்கிறார்கள், என்று கூறி மறுத்திருக்கிறார் முத்தழகி ப்ரியாமணி.

காதலர் தினத்தில் புதுசு! பிரபுதேவா முடிவு!!


காதலில் இருந்து தனது கவனத்தை வேறு பக்கம் திருப்பியிருக்கும் நடிகர் பிரபுதேவா, காதலர் தினத்தில் புதிய இசை ஆல்பத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். நயன்தாராவுடனான காதல் முறிவு குறித்த செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியாகி வந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஒரு இயக்குனராக, ரவுடி ரத்தோர் என்ற இந்திப்படத்தில் பிஸியாக இருக்கிறார் பிரபுதேவா.

அதேநேரம் தனது நீண்ட கால கனவான இசை ஆல்பம் தயாரிக்கும் வேலைகளிலும் மும்முரம் காட்டி வருகிறாராம் மாஸ்டர். சமீபகாலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை இசை ஆல்பம் உருவாக்குவதற்கு பயன்படுத்திக் கொண்ட பிரபுதேவா, மிகவும் வித்தியாசமான ஐந்து பாடல்களுடன் கூடிய ஒரு ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். இசை ஆல்பப் பணிகள் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த ஐந்து பாடல்களையுமே வீடியோவாக படம்பிடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

இசை ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை பிரபலப்படுத்தும் வகையில் முதலில் ஆடியோவை மட்டும் காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்துவிட்டு, விஷுவல்களை மார்ச்சில் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம் மாஸ்டர்.

யுவராஜைக் காப்பாற்ற என்னால் முடியும்-ராம்தேவ்


தனது யோகாசனம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மூலம் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு வந்துள்ள புற்றுநோயை தன்னால் குணப்படுத்த முடியும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது யோகாசன அறிவு மற்றும் ஆயுர்வதே ஞானத்தை யுவராஜ் சிங்குக்குப் பயன்படுத்தத் தயாராக உள்ளேன். புற்றுநோய் உள்ளிட்ட பல அபாயகரமான நோய்களுக்கு ஆயுர்வேதம் மூலம் பல வெற்றிகளை நாங்கள் கண்டுள்ளோம். எனவே யுவராஜ் சிங்குக்கும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார் ராம்தேவ்.

யுவராஜ் சிங்குக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வந்திருப்பது கிரேட் 1 புற்று நோய் என்றும் அது குணப்படுத்தக் கூடியதுதான் என்றும் கூறப்படுகிறது.

சங்கரன்கோவில்: முன்னணி கட்சிகளின் தற்போதைய நிலை

 


சங்கரன்கோவில் இடைத் தேர்தல் களத்தில் தற்போதைய நிலவரப்படி மதிமுகதான் படு தீவிரமாக உள்ளது. அடுத்து அதிமுக உள்ளது. 3வது இடத்தில் திமுக உள்ளது. தேமுதிகவின் நிலை குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பூர்வாங்கப் பணிகளை முதலில் தொடங்கியது மதிமுகதான். இந்தத் தொகுதி உறுப்பினரான கருப்பசாமி மறைந்ததுமே அந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான களப் பணிகளில் மதிமுக இறங்கியது. அதிமுகவே சற்று அயர்ந்து போகும் அளவில் படு சுறுசுறுப்பாக, பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர் மதிமுகவினர்.

சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுகவுக்கென்று கணிசமான வாக்குகள் உள்ளதால் அந்தக் கட்சி பெருத்த தெம்புடன் உள்ளது. இத்தொகுதியில் மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரை வேட்பாளரை அறிவித்து விட்டார்கள். நகராட்சித் தலைவராக உள்ள முத்துலட்சுமிதான் வேட்பாளராக இறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அதிமுகவும் ஆரம்ப கட்டப் பணிகளை முடுக்கி விட்டு வேலை பார்க்க ஆரம்பித்துள்ளது.

திமுக தரப்பிலும் விருப்ப மனுக்கள் வாங்க ஆரம்பித்துள்ளனர். அது முடிந்ததும் வேட்பாளரை இறுதி செய்து திமுக ஆரம்பிக்கும். பூர்வாங்கப் பணிகள் ரேஸில் தற்போது 3வது இடத்தில்தான் இருக்கிறது திமுக.

பாமகவுக்கு இந்தத் தொகுதி சற்றும் சம்பந்தமில்லாதது என்பதால் அந்தக் கட்சியும் ஒதுங்கி ஓரம் கட்டியுள்ளது. தற்போதைய பெரும் கேள்வி தேமுதிகவின் நிலை என்ன என்பதுதான்.

சட்டசபையில் நடந்த பெரும் மோதலுக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவிலில் திராணி இருந்தால் தனித்து நின்று காட்டுங்கள் என்று தேமுதிகவுக்கு சவால் விட, ஆளுநர் ஆட்சியில் தேர்தல் நடத்துங்கள், நாங்கள் தனித்து நிற்கிறோம் என்று விஜயகாந்த்தும் பதில் சவால் விட்டுள்ளார்.

இதனால் இந்தத் தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா, போட்டியிடாதா என்பதில் குழப்பம் நிலவுகிறது. பேச்சுக்குத்தான் கேப்டன் அப்படிக் கூறினார். மற்றபடி போட்டியிடாமல் இருக்க மாட்டார் என்று தேமுதிக தரப்பில் கூறுகிறார்கள். இருப்பினும் தேமுதிக போட்டியிடுமா அல்லது திமுகவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்க தீர்மானிக்குமா என்பது தெரியவில்லை.

இதுவரை சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தொடர்பாக தேமுதிகவின் நிலை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனவே அதற்காக அக்கட்சித் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

கோச்சடையான் - அசத்தல் ஸ்டில்... '8 பேக்ஸ்' ரஜினி!


ஓங்கி உயர்ந்த மலையுச்சி... அதில் விண்ணுக்குமாக மண்ணுக்குமாக, ஒற்றைக் காலில் ஆக்ரோஷமாக நிற்கும் ரஜினி. ஜடா முடியும் அதில் தங்க நிற சூலமும் நீண்ட தாடியுமாக நிற்கும் ரஜினி, இடையில் நீல நிற பட்டுக் கச்சை அணிந்திருக்கிறார். அந்தக் கச்சையின் இன்னொரு நுனி விண்ணுக்கு நீள்கிறது.

கிட்டத்தட்ட சிவபெருமானின் ருத்ரதாண்டவம் மாதிரியான ஒரு தோற்றம் அது. பார்த்த உடன் சிலிர்க்க வைக்கிறது.

இந்த ஸ்டில்லில் ரஜினியின் உடல் 8 பேக்ஸ் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. Photorealistic படம் என்பதால் இது சாத்தியம்தான்.

இந்த ஸ்டில் வெளியானது முதல் மீடியா மற்றும் ரசிகர் மத்தியில் ஒரே பரபரப்பு.

எங்கும் ரஜினியின் கோச்சடையான் ஸ்டில்களே. அதற்கேற்ப, ரஜினியும் பாரபட்சமின்றி அத்தனை நாளிதழ்களுக்கும் கோச்சடையான் டிஸைனை விளம்பரமாகக் கொடுத்திருந்தார்.

இந்தியாவின் அத்தனை முன்னணி இணையதளங்களும் 'கோச்சடையான் பர்ஸ்ட் லுக்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கில டிஸைன்களை வெளியிட்டிருந்தனர்.

கோச்சடையான் பட அறிவிப்பு வெளியானபோது, ரஜினி ரசிகர்களுக்கே அதில் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் இப்போது முதல் ஸ்டில்லைப் பார்த்ததிலிருந்து அவர்களால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் - சௌந்தர்யா ரஜினி குழுவுக்கு எடுத்த எடுப்பிலேயே வெற்றிகிடைத்துள்ளது எனலாம்!!

அதிர்ச்சி தகவல் :யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய்


இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நுரையீரல் கட்டி காரணமாக சிகிச்சை பெற ஒரு மாதத்துக்கு முன்பு யுவராஜ் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், யுவராஜ் சிங்கிற்கு இருப்பது நுரையீரல் கட்டி அல்ல புற்றுநோய் என உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து தற்போது போஸ்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

யுவராஜுக்கு நுரையீரலில் கட்டி இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டது. இதனால்தான் அவர் சமீப காலமாக விளையாடாமல் இருந்து வருகிறார்.

யுவராஜ் சிங் இதுவரை..

இந்திய அணியின் பல முக்கிய வெற்றிகளுக்கு பேருதவியாக இருந்தவர் யுவராஜ் சிங். 30வயதாகும் யுவராஜ் சிங் இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1775 ரன்களை எடுத்துள்ளார்.

274 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8051 ரன்களை எடுத்துள்ளார். யுவராஜ் ஆடிய 20-20 போட்டிகளின் எண்ணிக்கை 23. எடுத்த ரன்கள் 567.

க்டந்த உலகக் கோப்பைப் போட்டியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய யுவராஜ் 362 ரன்களையும் குவித்திருந்தார். 4 போட்டிகளில் மேன் ஆப் த மேட்சாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதனால் தொடர் நாயகனாகவும் உருவெடுத்தார்.

எத்தனையோ ஆடுகளங்களை அதிரவைத்த யுவராஜ் இப்போது புற்றுநோய்க்கு எதிராக போராடி வருவது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ரஜினியைச் சாடுகிறார் பெண்பித்தர் சாரு நிவேதிதா!



சினிமா நடிகர்களை வைத்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் போக்கு அதிகரித்து விட்டதாக தேவையில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சாடியுள்ளார் சர்ச்சை எழுத்தாளரான சாரு நிவேதிதா.

தன் எழுத்தின் பால் ஈர்க்கப்பட்டு சாட் மூலம் தொடர்பு கொண்ட ஒரு பெண்ணிடம் அத்துமீறி பாலுணர்வைத் தூண்டும் வகையில் பேசி அசிங்கப்பட்டவர் இந்த சாரு நிவேதிதா என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்டவர் ரஜினியை சாடியுள்ளது அவரது ரசிகர்களை கடும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கனடா நாட்டின் இயல் விருது பெற்றிருக்கிறார். இதற்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர்கள், திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார். மிகச் சிறப்பான உரையையும் அவர் கொடுத்திருந்தார்.

ஆனால் தற்போது ரஜினியை கடுமையாக சாடியுள்ளார் சாரு நிவேதிதா. அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் விமர்சனக் கூட்டத்தை சென்னையில் நடத்தினர்.இந்த விழாவில் நிவேதிதா பேசுகையில், ஒரு எழுத்தாளன் அதிக வாசகர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி விட்டார். அவரை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கில், நூல் வெளியீட்டுக் கூட்டங்களையும், விமர்சனக் கூட்டங்களையும் நடத்தும் போக்கு, தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் நிலவுகிறது. அதற்காக, சினிமா நடிகர்களைக் கொண்டு பாராட்டுக் கூட்டங்களை நடத்திக் கொள்கின்றனர்.

தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் என, சினிமா நடிகர் சொல்லும் அளவுக்கு, நிலைமையை மோசமாக்கி வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கை, தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தவில்லை.

காமத்தை மையமாகக் கொண்டு நாவல்களை எழுதுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. இன்றைய இளைஞர்கள், காமத்தால் சீரழியும் போது அதை எழுதாமல் இருக்க முடியாது.

ஆங்கிலப் புனை கதைகளுக்கு இருக்கும், வரவேற்பு தமிழ் புனை கதைகளுக்கு இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று சமூகத்திற்குத் தேவையான பல கருத்துக்களைத் தெரிவித்தார் நிவேதிதா.

சாரு நிவேதிதா எப்போதுமே சர்ச்சையாகப் பேசக் கூடியவர், சர்ச்சையான எழுத்துக்களை எழுதுபவர். சமூகம் ஒரு பக்கம் சிந்தித்தால் இவர் கோணல் மாணலாக மட்டுமே சிந்திப்பவர். மேலும், தன்னுடைய எழுத்தால் ஈர்க்கப்பட்டு நட்பு பாராட்டிய ஒரு பெண்ணிடம், அநாகரீகமாக, அசிங்கமாக சாட்டில் வாசகங்களை வெளியிட்டு அம்பலப்பட்டு அசிங்கப்பட்டவர் இவர் என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

இப்படிப்பட்டவர் கோடானு கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ரஜினியை சாடியிருப்பது ரஜினி ரசிகர்களை கடும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' திடீர் நிறுத்தம் : ஏ.ஆர். முருகதாஸ் அறிவிப்பு


நடிகர் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தை திடீரென நிறுத்துவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் திரைப்படத் தொழிலாளர் சம்மேளமான பெப்சிக்கும் இடையேயான மோதலால் தமிழ் திரைப்பட உலகம் முடங்கியுள்ளது.

இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் மும்பையில் விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் "துப்பாக்கி" என்ற படத்தை இயக்கி வந்தார்.

பெப்சி- தயாரிப்பாளர்கள் சங்க மோதல் நீடித்து வரும் நிலையில் திடீரென முருகதாஸ் அறிவித்திருப்பது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பெப்சி, தயாரிப்பாளர் சங்க மோதல் எதிரொலியாக பல முக்கியப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ், தானாக முன்வந்து துப்பாக்கி படத்தின் ஷூட்டிங்கை காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது விஜய் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விஜய்யிடம் முருகதாஸ் பேசினாரா என்பது தெரியவில்லை.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரேசகரின் மகன் படமே படப்பிடிப்பைத் தொடர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பெப்சி தொழிலாளர்களிடையே கேலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டு ஓடிய பிரபு தேவா தந்தை



எனக்கு தாலி கட்டிகுழந்தை பெற்ற பிறகுஏமாற்றிவிட்டு ஓடிய டான்ஸ் மாஸ்டர் சுந்தரம்அதன் பிறகுதான் பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். இப்போது நான் கஷ்டப்படுகிறேன்ஜீவனாம்சம் தரவேண்டும் என வழக்கு தொடர்துள்ளார் பெண் நடன இயக்குநர் தாரா.

பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர். இவர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவின் தந்தை ஆவார். மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் தாரா உயர்நீதிமன்றத்தில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கும் எனக்கும் 38 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எனக்கு அவர் தாலி கட்டினார். ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினோம்.

பிறகு ஊருக்கு போய் விட்டு வருவதாக சொல்லி விட்டுப் போனார் அங்கு பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறி என்னிடம் வருத்தப்பட்டார்.

எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றபின் நான்கு மாதம் என்னுடன் சேர்ந்து இருந்தார். அதன் பிறகு என்னை ஏமாற்றி விட்டு ஓடி விட்டார். இதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டுஒதுங்கியிருந்தேன். என் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவர்தான் தந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனது மகன் தந்தையின் ஆதரவின்றி இருக்கிறான்.

பொருளாதார ரீதியாக நாங்கள் இப்போது மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம்.

எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என்றுதான் இத்தனை நாள் அமைதியாக இருந்தோம். ஆனால் இப்போது நாங்களே இவ்வளவு கஷ்டப்படுவதால்எங்களுக்கு உள்ள உரிமையை கோருகிறோம்," இவ்வாறு மனுவில் கூறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு நீதிமன்றத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

ஏற்கெனவே பிரபு தேவா எக்கச்சக்க குடும்ப சிக்கலில் உள்ளார். ரம்லத்தை காதலித்து கல்யாணம் செய்துகொண்டுமூன்று குழந்தைகளையும் பெற்ற பிறகு பிரிந்துவிட்டார். அடுத்து நயன்தாராவை திருமணம் செய்வதாகக் கூறிகொஞ்சநாள் சேர்ந்து வாழ்ந்த பிறகுசமீபத்தில் பிரிந்துவிட்டார். இப்போது இன்னொரு நடிகையுடன் தொடர்பிலிருப்பதாகக் கூறுகிறார்கள்.

பிரபு தேவாவுக்கு முன்பே அவரது தந்தை சுந்தரமும்இதே வேலையைத்தான் செய்திருக்கிறார் என்பது இந்த வழக்கு மூலம் உறுதியாகியுள்ளது.

விதி படத்தில் மறைந்த நடிகை சுஜாதா பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது... 'குடும்ப வழக்கம்... வாழையடி வாழை'!

மணிரத்னத்தின் அடுத்த படம் கடல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

 தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த அறிவிப்பை இன்று அவரே முறைப்படி வெளியிட்டார்.

ராவணன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள். பூக்கடை என இந்தப் படத்துக்கு பெயரிடப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை மணிரத்னம் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் இன்று புதிய அறிவிப்பு வெளியிட்டார். படத்துக்குப் பெயர் கடல் என்றும், கார்த்திக் மகன் கவுதம்தான் ஹீரோ என்றும் அவர் கூறியுள்ளார். சமந்தா நாயகியாக நடிக்கிறார்.

அர்ஜூனும், மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சுவும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதுகிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தென் தமிழகத்தின் கடலோர கிராமப் பின்னணியில் நடக்கும் காதல் கதை இந்தப் படம் என்று கூறப்படுகிறது. தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் அடிக்கடி தாக்குவது, சித்திரவதை செய்வது பற்றியும் இந்தப் படத்தில் மணிரத்னம் காட்சிப்படுத்துவார் என்கிறார்கள். ஆனால் அதில் எந்த அளவுக்கு நேர்மையாக இருப்பார் மணிரத்னம் என்பது தெரியவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஈழப் போரையே, வல்லரசுகளின் ஆயுத வியாபாரம் என மணிரத்னம் காட்சி வைத்திருந்தது நினைவிருக்கலாம்.