பிரபல இந்திப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் கனவுப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். சல்மான் கானுக்கு பதிலாக இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பமாக இருந்ததால் கடந்த ஒரு ஆண்டாக நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் ஐஸ். குழந்தை பிறந்த பிறகு, தொடர்ந்து அவர் நடிப்பாரா, இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த சந்தேகத்துக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 1999-ல் வெளிவந்த சூப்பர்ஹிட் படம் ஹம் தில் தே சுகே சனம். இதில் சல்மான்கான், ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தனர். இதே ஜோடியை வைத்து தனது கனவு படமான பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தை இயக்க இருப்பதாக பன்சாலி 2003-ம் ஆண்டு அறிவித்திருந்தார். வெறும் அறிவிப்போடு நின்றிருந்த அந்த பிராஜக்ட்டை மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார் பன்சாலி. ஏற்கனவே திட்டமிட்டபடி, ஹீரோயின் ஐஸ்தான். ஹீரோ.. சல்மான் கான் அல்ல. அவருக்கு பதிலாக ஷாருக் கான். ஐஸ்வர்யாவுக்கும், சல்மானுக்கும் ஆகாது என்பதால் இந்த அதிரடி மாற்றம். குழந்தை பெற்ற ஐஸ்வர்யா ராயை சமீபத்தில் சந்தித்து வாழ்த்து சொன்ன பன்சாலி, படம் சம்பந்தமாகவும் அவர் காதில் போட்டு வைத்தார். குழந்தையை கவனிப்பதில் முழு நேரத்தையும் செலவிட்டு வரும் ஐஸ், இடையே கதை பற்றி பேச நேரம் ஒதுக்கினார். இயக்குநர் சொன்ன கதையை ரசித்து கேட்ட அவர், உடனே ஓகே சொல்லிவிட்டார். அடுத்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.
Sunday, 11 December 2011
சிம்புவின் தல விசுவாசம்!

தல அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, நண்பன் படத்தில் நடிக்க மறுத்தார். விஜய் நடிக்கும் படத்தில் நான் நடித்தால் சிம்பு ரசிகர்கள் என்னை கோபித்துக் கொள்வார்கள் என்று பகீரங்கமாக ஸ்டேட்மெண்ட் விடுத்து பரபரப்பு கிளப்பினார். ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத விஜய், ஒஸ்தி படத்தின் இசையை கவிஞர் வாலியுடன் சேர்ந்து வெளியிட்டார். தற்போது அஜித் மீதான தனது விசுவாசத்தை நிரூபிக்கும் விதமாக ஒரு அதிரடியான காரியத்தைச் செய்திருக்கிறார் சிம்பு. அஜித்தின் - 50-வது படமான மங்காத்தா படம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியானது. டிசம்பர் 8ம் தேதி சிம்புவின் ஒஸ்தி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளை அலங்கரிக்கும் ஒரு அதிரடி விளம்பரம்தான் சிம்புவின் தல விசுவாசத்தைக் காட்டுகிறது. மங்காத்தா நூறாவது நாள் கொண்டாடும் நாளில்தான் தனது ஒஸ்தி வெளியாக வேண்டும் என்று சொன்னாராம் சிம்பு. மங்காத்தா வெளியாகி நூறு நாட்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதை குறிப்பிடும் விதமாக ஒஸ்தி விளம்பரம் டிசைன் செய்யப்படுள்ளது. அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் இந்த விளம்பர யுத்தியை நிச்சயம் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை!
டைம் மேகசினில் கொலவெறி!
ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு பரபரப்பு , வரவேற்பு இருக்குமா என்ற கேள்விக்கு வரலாறு கூட படைக்க முடியும் என்ற அளவுக்கு வெற்றி கண்டுள்ளது மூன்று படத்தின் ஒய் திஸ் கொலவெறி பாடல்.
பிளாப் சாங் என்று ஆரம்பித்தாலும் இன்றளவில் உலக மெகா ஹிட்டாகி உள்ளது கொலவெறி பாடல். கோலிவுட்டில் காலடி எடுத்த வைத்த மாத்திரத்தில் அனிருத்துக்குத் தான் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். யூ டியூபில் அதிகம் தேடப்பட்டபாடல் என்ற வரிசையில் ஒய் திஸ் கொலவெறிக்கு கேல்ட் அவார்ட் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, தனுஷ் எழுதி பாடிய இந்த பாடல் பற்றி டைம் பத்திரிகையிலும் இடம் பெற்றுள்ளது. இது மூன்று டீமுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்கிறார் அனிருத். இப்படி ஒரு இமாலய வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டால் : மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இது எங்கள் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றார். ஏர்.ஆர்.ரஹ்மானை மிஞ்சிவிட்டீர்கள் போல என்றால் : அப்படி ஒன்றும் இல்லை ஏ.ஆர் ரஹ்மான் தான் எனது இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு மிகப்பெரிய கலைஞர், நான் இப்போது தான் என் இசைப்பயணத்தை துவக்கியுள்ளேன். ரஹ்மான் சார் சாதித்ததில் ஒரு 5% அளவுக்கு சாதிக்க முடிந்தாலே அதை மிகப்பெரிய சாதனையாக கருதுவேன். இவ்வாறு அனிருத் கூறினார்.
கோச்சடையான்: ரஜினி ஜோடி அசின்?
கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அசினுடன் பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது.
ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையான், மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கப்படும் 3 டி சினிமாவாகும். ரஜினி இதில் கோச்சடையான் என்ற பாண்டிய மன்னனாக வருகிறார்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வந்தனர். அவர் 2012 வரை படுபிஸி என்பதால், கால்ஷீட் ஒதுக்க முடியாமல் திணறினார்.
இந்த நிலையில், இப்போது அசினுடன் பேச்சு நடப்பதாகத் தெரிகிறது. அசினுக்கு கைவசம் பெரிதாக படங்கள் ஏதுமில்லை. இந்தியில் ஒரு படம் ஒப்பந்தமாகியுள்ளார்.
எனவே அவர் ரஜினியுடன் நடிக்க தாராளமாக கால்ஷீட் தருவார் என்கிறார்கள்.
இந்தப் படத்தில் ரஜினி தங்கையாக நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார்.
மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.
போராட்டம் நடத்த வரும் தமிழர்களை கண்டதும் சுட கேரள போலீசார் உத்தரவு
தேனி மாவட்டம், கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் பல்வேறு கிராம மக்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நேற்று குமுளி பகுதிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர்.
தமிழக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியும் அவர்கள் தடையை மீறி செல்ல முயன்றனர்.
குமுளி பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சுமார் 4 ஆயிரம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது கல் வீசியதாக தெரிகிறது.
இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையின் உள்ளே நுழைந்தவர்களில் 10 பேர் மலைப்பாதை வழியாக கேரளாவுக்குள் உள்ள ரோசாப்பூ கண்டம் பகுதியில் புகுந்து விட்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்த ஒரு மலையாளி வீட்டை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு 10 பேரையும் பிடிக்க வந்தனர். உடனே அவர்களில் 6 பேர் தப்பி ஓடி தமிழக பகுதிக்கு வந்து விட்டனர். 4 பேர் கேரள பகுதி மக்களிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களை பொதுமக்கள் கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதன் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டது. தப்பி வந்த 6 பேர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருந்தது. அவரை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கேரளாவில் உள்ள குமுளி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்தால் அவர்களை கண்டதும் சுட இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.
எனவே, தமிழக மக்கள் யாரும் அப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழக எல்லையில் திரண்டிருந்த மக்களிடம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் எல்லையில் குவிந்துள்ள மக்களை கிராம பகுதிக்கு அனுப்பிவைக்க போலீசார் சிறப்பு பஸ் ஏற்பாடு செய்தனர்.
34 நாட்கள் மட்டுமே அமைச்சராக இருந்த பரஞ்சோதி!
தமிழக சட்டத்துறை அமைச்சராகப் பதவி ஏற்று வெறும் 34 நாட்கள் மட்டுமே அப்பதவியிலிருந்த பரஞ்சோதி, சட்ட சிக்கல் காரணமாக பதவியை இழந்துள்ளார்.
திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்சோதி இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவரை அமைச்சராக்கியபோதே, இரண்டாவது மனைவி என்று உரிமை கொண்டாடி டாக்டர் ராணி என்பவர் புகார் கொடுத்திருந்தார். அமைச்சர் பரஞ்சோதி, தன்னை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். என்னிடம் இருந்து 60 பவுன் நகைகள் மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார் என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதைக் கண்டுகொள்ளவில்லை முதல்வர் ஜெயலலிதா. பரஞ்சோதியை அமைச்சராக்கி முக்கியமான சட்டத்துறையை கையில் கொடுத்தார்.
இந்த நிலையில் பரஞ்சோதி மீதான புகார் வழக்காக மாறியது. அந்தப் பெண் டாக்டர் கொடுத்த மோசடி புகார்களின் மீது நீதிமன்ற உத்தரப்படி, அமைச்சர் பரஞ்சோதி மீது திருச்சி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால் வேறு வழியின்றி அவரை ராஜினாமா செய்ய வைத்தார் முதல்வர். இந்த ராஜினாமாவை ஏற்குமாறு ஆளுநருக்கு பரிந்துரை செய்த ஜெயலலிதா, கூடவே செல்வி ராமஜெயத்தையும் நீக்கியுள்ளார்.
ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் 4 வது முறையாக அமைச்சரவையை மாற்றியுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷுக்கு குறிவைக்கும் 'டேம் 999' படத்தின் டைரக்டர்
போகிற போக்கை பார்த்தால் சேட்டன் கடை டீக்கும் வேட்டு வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. மணப்புரம் கோல்டு ஹவுஸ் மேலே பறக்கும் கல், சேட்டன் கடையை பதம் பார்க்க எத்தனை நேரம் பிடிக்கும் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக இளைஞர்களில் சிலர். இப்படி அண்டை மாநிலத்திற்குள் சிண்டுபிடி சினேகத்தை வளர்த்துவிட்டு ஹாயாக சுற்றிக் கொண்டிருக்கிறார் சோஹன்ராய். டேம் 999 படத்தின் இயக்குனர் இவர்தான்.
பல வருடங்களாகவே விவாதிக்கப்பட்டு வரும் முல்லை பெரியாறு பிரச்சனை இந்தளவுக்கு கொடூர முகத்தை காட்டுவதற்கு காரணமே இவரது படமும் அதற்கு விதிக்கப்பட்ட தடையும்தான். இதையடுத்து ஊரே உருமிக் கொண்டிருக்க, சத்தம் போடாமல் அடுத்த வெடிகுண்டை தயார் பண்ணிக் கொண்டிருக்கிறாராம் இந்த மேதாவி.
ராமேஸ்வரம் பகுதியில் அடித்த சூறாவளி காரணமாக ஒரு காலத்தில் காணாமலேயே போய் விட்ட தனுஷ்கோடியின் வரலாற்றை எடுக்கப் போகிறாராம். இப்போதும் அந்த பகுதியில் எலும்புக் கூடாக நிற்கும் சில வீடுகளும், தேவாலயம் ஒன்றும் இந்த குரூரத்திற்கு சாட்சியாக இருக்கிறது. இந்த சோகத்தைதான் அவர் படம் பிடிப்பதாக இருக்கிறாராம்.
இவ்வளவுக்கு பிறகும் தமிழ்நாட்டு எல்லையில் கால் வைக்க விடுவார்களா இவரை
பேஷ்புக் பாஸ்வேர்டுவை திருடி கணவரின் போலி விவாகரத்தை கண்டுபிடித்த சிவக்குமாரின் மனைவி சொர்ணலதா
என்ஜினீயர் சிவக்குமாரின் மனைவி சொர்ணலதா கூறிபதாவது:-
2004-ம் ஆண்டு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு எங்களது திருமணம் நடந்தது. வரதட்சனைபாக 100பவுன் நகையும், சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு வரை நாங்கள் கோவையில் குடும்பம் நடத்தி வந்தோம். 2 பேரும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுபணிபுரிய நினைத்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம். அப்போது எனக்கும் எனது மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டது. என்னை அவர் அடித்ததால் பிரச்சினை அதிகமானது.
இந்த நேரத்தில் எனது கணவர் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். செல்வதற்கு முன்பே எனக்கு தெரியாமல் குடும்பநல கோர்ட்டில் விவாகரத்துக்கு மனு செய்துள்ளார். கொஞ்ச காலத்துக்கு பின்பு நானும் வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்று விட்டேன். அங்கு எனக்கு விவாகரத்து நோட்டீசு வந்தது. நான் அதில் கையெழுத்திட மறுத்து திருப்பி அனுப்பினேன்.
கணவரின் நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரது பேஷ்புக்கை திறந்துபார்த்தேன். அதில் வேறு ஒரு பெண்படம் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் அந்த பெண் யார்? என்பதை எனது கணவரின் நண்பர்கள் மூலமாக விசாரித்தேன். அப்போது அந்த பெண் பீளமேட்டை சேர்ந்த பூர்னேஸ்வரி என்பதும், தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிவதும் தெரியவந்தது. அவரது பேஷ்புக்கின் பாஸ்வேர்டுவை அறிந்து அதற்குள் சென்றுபார்த்தேன். அதில் எனது கணவர் போட்டோ இருந்தது.
மேலும் அந்த பெண் சிவக்குமாருக்கும் தனக்கும் செப்டம்பர் மாதம் 12-ந் தேதி திருமண நிச்சபதார்த்தம் நடந்ததாகவும், டிசம்பர் மாதம் 5-ந்தேதி திருமணம் நடக்க இருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அந்த பெண்ணுக்கு பேஷ்புக் மூலம் தகவல் அனுப்பினேன். எனக்கும் சிவக்குமாருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இன்னமும் விவாகரத்து பெறவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறோம் என்று 15 முறை பூர்னேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தேன். ஆனால் ரகசியமாக திருமணத்தை நடத்தி முடித்து விட்டார்கள்.
என்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த சிவக்குமாரையும், பூர்னேஸ்வரியையும் சும்மா விடமாட்டேன். அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்
தனுஷ் நடிக்கும் “3” என்ற படத்தில் “ஒய் திஸ் கொலை வெறிடி” பாடல் இடம் பெறுகிறது. இந்த படாலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். இது உலகமெங்கும் வரவேற்பை பெற்றுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்கள் இண்டர்நெட்டில் பாடலை கேட்டு பாராட்டி உள்ளனர். அமிதாப்பச்சனும் பாராட்டி உள்ளார்.
இந்த பாட்டுக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. பெண்களுக்கு எதிரானது என்றும், கல்லூரி மாணவர்கள் ஈவ்டீசிங்குக்கு இந்த படாலை பயன்படுத்துவார்கள் என்றும் மகளிர் அமைப்புகள் கண்டித்துள்ளன. இந்தி பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தரும் எதிர்த்துள்ளார். தற்போது பிரபல கன்னட நடிகர் ஸ்ரீநாத்தும் கொலை வெறிடி பாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீநாத் கூறியதாவது:-
பாடல்களை இசைதான் தீர்மானிக்கும். இசைக்கும் பாட்டுக்கும் சம்பந்தம் உண்டு. ஆனால் ஒய்திஸ் கொலை வெறிடி பாடலில் இசைக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை. நிறைவு பெறாத அர்த்தம் இல்லாத பாடலாக அது உள்ளது. மக்கள் கொலை வெறிடி பாடலை விரும்புவதாக சொல்கின்றனர்.
ஆனால் அதை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். விரும்பாதவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன். கொலை வெறிடி பாடலை ரசிக்க முடியவில்லை. அபத்தமாக உள்ளது. நான் கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மனைவி, வக்கீல், விவாகரத்து... எல்லாமே போலி – 'பலே' கோவை எஞ்ஜினியர்!!
போலி மனைவியை ஆஜர்படுத்தி போலி வழக்கறிஞர் மூலம் விவாகரத்து பெற்று இரண்டாம் திருமணம் செய்துள்ளார் கோவை இஞ்சினிய ஒருவர். மோசடியில் ஈடுபட்ட அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சொர்ணலதாவுக்கும் கடந்த 2004 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சொர்ணலதா சிங்கப்பூரிலும் டிப்ளமோ என்ஜினீயரான சிவக்குமார், ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதை அடுத்து சிவக்குமார் குடும்பநல கோர்டடில் வழக்கு தொடர்ந்தார். உறவினர்கள் கணவன் மனைவி இருவரிடமும் சமாதானம் பேசியதன் அடிப்படையில் சிவக்குமாரும், சொர்ணலதாவும் சேர்ந்து வாழ சம்மதித்தனர்.
இதைத்தொடர்ந்து விவாகரத்து வழக்கு முதலில் வாபஸ் பெறப்பட்டது. இந்தநிலையில் சிவக்குமார் மீண்டும் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்றார். கோவையில் தங்கி இருந்த சொர்ணலதா, சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுவிட்டார்.
போலிமனைவியுடன் விவாகரத்து
சொர்ணலதாவுடன் சேர்ந்து வாழ விரும்பாத சிவக்குமார் சொர்ணலதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை மண முடிக்க திட்டமிட்டு கோவை வந்து தங்கினார். பின்னர் போலியாக ஒரு பெண்ணை பார்த்து அவரை தனது மனைவி சொர்ணலதாவாக நடிக்க ஏற்பாடு செய்தார்.
அந்த பெண்ணும் சிவக்குமாரும் கோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர். எளிதில் விவாகரத்து கிடைப்பதற்கு வசதியாக ரகுபதி என்பவர் சொர்ணலதாவுக்காக ஆஜர் ஆவதுபோலும், ஆனந்தராஜ் என்பவர் சிவக்குமாருக்கு ஆஜர் ஆவது போலவும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.
வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வழக்கின் முடிவில் சிவக்குமாருக்கும், சொர்ணலதாவுக்கும் விவாகரத்து வழங்குவதாக கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த ஜுன் மாதம் 23 ந்தேதி குடும்ப நல கோர்ட்டு இந்த உத்தரவை வழங்கியது.
இரண்டாவது திருமணம்
விவாகரத்து பெற்ற கையோடு 2 வது திருமண நடவடிக்கையில் சிவக்குமார் இறங்கினார். பீளமேடு சின்னச்சாமி அவென்யூவை சேர்ந்த பூர்னேஸ்வரியை சிவக்குமார் 2 வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் இம்மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்றது.
இந்த தகவல் சிங்கப்பூரில் இருந்த சொர்ணலதாவுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சொர்ணலதா கோவை திரும்பினார். சிவக்குமாரை சந்தித்து இதுகுறித்து கேட்டார். அப்போது சிவக்குமாரும், அவருடைய நண்பர் மாரிமுத்துவும் சேர்ந்து சொர்ணலதாவை மிரட்டினர்.
போலீசில் புகார்
இதுகுறித்து சொர்ணலதா போலீசில் புகார் செய்தார். அதனடிப்படையில் என்ஜினீயர் சிவக்குமார், வக்கீல்களாக ஆஜர் ஆன ரகுபதி, ஆனந்தராஜ், 2 வது மனைவி பூர்னேஸ்வரி, சிவக்குமாரின் நண்பர் மாரிமுத்து ஆகிய 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகுமார் ஆஸ்திரேலியாவிற்குத் தப்பிச் செல்லாத வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.300 கட்டணம், மது சப்ளையுடன் கல்லூரி மாணவிகளின் ஆபாச நடன “கிளப்”புகள்
சென்னையில் ஆபாச நடன கிளப்புகள் பெருகி வருகின்றன. “கலாச்சார நடனம்” என்ற பெயரில் அனுமதி வாங்கி இந்த கிளப்புகளை நடத்துகிறார்கள். சிந்தாதிரிப்பேட்டையிலும், அண்ணாசாலையில் உள்ள சாந்தி தியேட்டர் அருகிலும், ராயப்பேட்டையிலும் நடக்கும் இந்த கிளப்புகளில் கல்லூரி மாணவிகளை ஆபாச நடனம் ஆட வைப்பதாக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவியும் மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி தலைவியுமான கல்பனா கண்டித்துள்ளார்.
இந்த கிளப்புகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நடன நிகழ்ச்சி நடத்துகின்றனர். இதற்கு ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கிறார்கள். அதற்கு ரசீது கொடுப்பது இல்லை. மாடியில் நடக்கும் இந்த கிளப்புகளின் அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. அங்கிருந்து மது வாங்கி குளிர்பானத்தில் கலந்து நடன நிகழ்ச்சியை பார்ப்போருக்கு வினியோகிக்கின்றனர். அதற்கு தனியாக பணம் வாங்குகிறார்கள்.
கல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி அழைத்து வந்து ஆபாச நடனம் ஆட வைக்கின்றனர். 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளையும் ஆட வைக்கிறார்கள். அவர்களுக்கு போதையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் கைகளை தொட்டு டிப்ஸ் என்ற பெயரில் பணத்தை அள்ளி கொடுக்கின்றனர். அந்த பணத்தையும் “கிளப்” நடத்துபவர்களே பிடுங்கி கொள்கிறார்கள்.
இந்த பெண்களிடம் மொபைல் நம்பர்களை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் அவர்களின் எதிர்காலம் தடம் புரளும் பரிதாப நிலைமை ஏற்படுகிறது. கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி இளம்பெண்கள் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் இந்த நடன கிளப்புகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
ஆபாச நடன கிளப்புகளை மூடக்கோரி அவற்றின் முன்னால் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
ரகசிய கேமரா: சினிமா பாணி சந்தேக கணவர் கைது
சென்னை அம்பத்தூர், சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலா. இவரின் கணவர் மகேந்திரன். அரசு பஸ் டிரைவர். கணவர் கொடுமைப்படுத்துவதாக, அம்பத்தூர் போலீசாரிடம், கமலா புகார் கொடுத்தார்.
புகாரில் கூறப்பட்டிருந்ததாவது: பத்து வயது மூத்தவரான மகேந்திரனுக்கு, இளம் வயதிலேயே எனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஐந்து வயதில் மகனும், ஏழு வயதில் மகளும் உள்ளனர். நடத்தையில் சந்தேகப்பட்டு, தினமும் அசிங்கமாக திட்டுகிறார். அடித்து உதைக்கிறார். சந்தேகம் அளவுக்கு மீறி வீட்டில் கழிவறை, குளியலறை, சமையலறை என அனைத்து இடங்களிலும், ரகசிய கேமரா பொருத்தி சி.சி.டி.வி.,யின் மூலம் உளவு பார்க்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் கூறப்பட்டிருந்தது.
போலீசார் வழக்கு பதிந்து, மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த மகேந்திரன், மீண்டும் தவறு செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளார். மீண்டும், அவர்கள் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். சில நாட்கள் அமைதியாக இருந்த, மகேந்திரன் மீண்டும் மனைவிக்கு தெரியாமல், வீட்டில் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளார்.அதை தட்டிக் கேட்ட மனைவியை அடித்து உதைத்துள்ளார். இது தொடர்பான புகாரின்படி, மகேந்திரனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்துள்ளனர்
Subscribe to:
Comments (Atom)











