| முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நிறைவேற்றவிருக்கும் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகிய மூன்று பேர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இன்று 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். அதில் நக்கீரன் ஆசிரியர், ‘ நக்கீரன்’ கோபால் பங்கேற்றார். மூவரின் தூக்குத்தண்டனைக்கு எதிராகவும், உண்ணாவிரதம் இருக்கும் மூவருக்கு ஆதரவாகவும் நக்கீரன் கோபால் குரல் கொடுத்தார்.அவர், ’’பொதுவாக நமக்கெல்லாம் இல்லாத தைரியம் இந்த மூன்று பேருக்கும் இருக்கிறது. இதை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். யாராவது ஒரு கல்லெறியனுமே; அந்த கல்லு இந்த மூன்று பேரின் உருவமாக வந்திருக்கிறது. இன்று 4வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தேகம் ஒல்லியாக இருப்பவர்களுக்கு உண்ணாநோன்பு இருப்பதில் கஷ்டம் இருக்காது. ஆனால் உடம்பு குண்டாக இருப்பவர்கள் உண்ணாநோன்பு இருப்பதில் மிகவும் கஷ்டப்படுவார்கள். அப்படி இருந்தும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது பெரிய விசயம். ஒரு விடியலை நோக்கி இந்த மூவரும் உண்ணாவிரதம் இருப்பதை தமிழகமே இன்று கவனிக்கிறது. தூக்கில் போட வேண்டும் .மரண தண்டனையை தூக்கில் போட வேண்டும். இன்றைக்கு ஜனநாயம் பேசுகிறோம். காந்தியம் பேசுகிறோம். காந்திய முறையில்தான் நாம் சுதந்திரத்தை வாங்கியிருக்கோம் என்று படிக்கிறோம்; சொல்கிறார்கள். காந்திய வழியில்தான் நம் நாடு நடக்கிறது என்கிறார்கள். ஆனால், அரசாங்கம் இன்று மூன்று பேரை காட்டுமிராண்டித்தனமாக தூக்கில் போட்டுத்தான் ஆவேன் என்று தேதியை குறித்திருக்கிறது.நாம் காட்டுமிராண்டிகள்தான் என்று சொல்லாமல் சொல்கின்ற ஒரு நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கின்றோம். ஒரு அன்னா ஹசாரே என்கிற காந்தியவாதி உண்ணாவிரதம் இருக்கிறார். பாராளுமன்றத்தில் இந்த விவகாரத்தை விவாதிக்கிறார்கள். இந்த அளவிற்கு பாராளுமன்றம் இந்த விவகாரத்தை கையில் எடுத்ததற்கு காரணம், மீடியாதான். மீடியாவின் முயற்சியால்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. இதனால்தான் மத்திய அரசே பயந்து பாளுமன்றத்தில் லோக்பால் நிறைவேற்றியிருக்கிறது. இதே போல், இந்த மூன்று சகோதரிகளின் உண்ணாவிரதத்தை மீடியாக்கள் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். பிரிவிணை பார்க்காமல் மீடியாக்கள் இந்த விசயத்தில் ஒன்றுபடவேண்டும். கால அவகாசம் குறைவாக இருப்பதால் இந்த நிமிடத்தில் இருந்து உறுதிமொழி எடுத்து மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் மீடியாக்கள். ஏன் என்றால் விட்டுவிட்டால் பிடிக்க முடியாது.செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி இந்த விவகாரம் ஆகிவிடக்கூடாது. அதனால் அன்னா ஹசாரே மாதிரியான பொதுவான ஒரு நபரை வைத்து போராடவும் வேண்டும். தூக்குதண்டனையை தடுப்பதற்கு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கிறது. அதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதநேயமிக்க அனைவரையும் ஒன்றினைத்து பெரும் போராட்டமாக ஆரம்பித்து மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட எழுச்சியால்தான் தூக்குத்தண்டனையை நிறுத்த முடியும். மூன்று உயிர்களுக்காக நேற்று ஒரு உயிர் தீக்குளித்து இறந்தது. இப்போது மூன்று உயிர்கள் போராடிக்கொண்டிருக்கிறது.இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அனைத்து பத்திரிகை முதலாளிகளையும் சந்தித்து இந்த போராட்டத்தை மக்களிடையே பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று கெஞ்சிக்கேட்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். நிச்சயமாக நக்கீரன் மற்றும் நக்கீரன் சார்ந்த ஊடகம் இந்த பிரச்சனையை மக்களிடம் தொடர்ந்து எடுத்துச்செல்லும். மக்கள் எழுச்சி மூலமாக இந்த மூன்று பேரின் மரணதண்டனை நிச்சயமாக நிறுத்தப்படும். நான்காவது நாளாக இந்த பெண்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். இந்த உண்ணாநோன்பு, வெற்றி பெற்ற உண்ணா நோன்பாக முடியும் என்று நம்புகிறேன்’’ என்று பேசினார் ![]() ![]() ![]() |
Tuesday, 30 August 2011
கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் இன்று 4வது நாளாக உண்ணாவிரதம் (படங்கள் இணைப்பு)
கோவையில் பதட்டம்: தூக்குக்கு எதிராய் நடுவன் அரசு அலுவலகங்கள் முற்றுகை! பரபரப்பு காணொளி இணைப்பு (வீடியோ இணைப்பு)
கோவையில் இன்று மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராய் சட்டக்கல்லூரி மாணவர்கள் அணி அணியாக பிரிந்து ஒவ்வொரு நடுவன் அரசு அலுவலகங்களாக சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று கோவையில் அனைத்து கட்சிகளின் சார்பில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததற்கு இணங்க, அனைத்துக்கட்சியினரும் தொடர்வண்டி நிலையம் அருகில் குவிந்திருக்க, அங்கு காவல் துறையும் பெரும்படையை குவித்திருந்தது. இந்த நிலையை மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொண்டு கோவை மாநகரில் அமைந்துள்ள நடுவன் அரசு அலுவலகங்களை நோக்கி அணி அணியாக படையெடுத்தனர். முதலில் ஒரு அணி அவினாசி சாலை மேம்பாலம் அருகில் அமைந்துள்ள கடவு சீட்டு அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. இன்னொரு அணியோ கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள மண்டல வருமான வரி ஆணையர் அலுவலகத்தினை முற்றுகையிட்டது. மேற்படி நிகழ்ந்த போராட்டங்கள் குறித்து காவல்துறைக்கு தெரிந்திருக்கவில்லை. காவல்துறையின் கவனம் தொடர்வண்டி நிலையத்திலேயே இருந்தது. மாணவர்கள் தொடர்ந்து முக்கிய சாலை சந்திப்புகள் வழியாக நடுவன் அரசு அலுவலகங்களை நோக்கி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். இதனைக்கண்ட பாதசாரிகள், பயணிகள், மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் பதட்டம் அடைந்தனர். என்ன நிகழ்கிறது என்று யாருக்கும் அங்கு தெரிந்திருக்கவில்லை. இதனால் கோவை மாநகரில் நாள் முழுதும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. |
லண்டனில் இருந்து நளினி முருகன் மகள் ஹரித்ரா அவர்களின் மனதை உருக்கம் பேட்டி! (ஓடியோ இணைப்பு)
![]() |
| அப்பா அம்மா இல்லையென்றால் எவ்வளவு கஸ்டமென எல்லோருக்கும் தெரியும் என் தந்தையைக் காப்பாற்றி தாருங்கள் என உருக்கமாக லங்காஸ்ரீ வானொலி மூலம் கேட்டிருக்கின்றார் முருகன் நளினி தம்பதிகளின் மகள் ஹரித்ரா. எனது தந்தை இதுவரை சிறையில் இருந்தாலும் எனக்கும் அம்மா அப்பா இருக்கின்றார்கள் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இப்போது அதையும் பறிக்கப் பார்ப்பது நியாயமற்றது. இதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன். எனது தந்தையைக் காக்க தமிழகம் வந்து அங்கு போராடி வருவோருடன் இணைந்து போராட்டம் நடத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் முருகன்-நளினி தம்பதியின் மகள் ஹரித்ரா. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்ரா. நளினி கைது செய்யப்பட்டபோது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். வேலூர் சிறையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை பின்னர் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வளர்ந்து வந்தது. இப்போது ஹரித்ராவுக்கு 20 வயதாகிறது. தற்போது அவர் லண்டனில் தங்கியுள்ளார். இந்த நிலையில் தனது தந்தை முருகனை தூக்கில் போடப் போகிறார்கள் என்ற தகவல் அறிந்தது முதல் நிம்மதியில்லாமல் பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கிறார் ஹரித்ரா. மேலும் ஹரித்ரா கூறுகையில், நான் சிறையில் பிறந்தது முதலே பல்வேறு சிரமத்தை சந்தித்து வளர்ந்து வந்துள்ளேன். ஆரம்பத்தில் பெற்றோரைப் பிரிந்து பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்தேன். பிறந்த உடனேயே பெற்றோரைப் பிரிந்து வாழ்ந்து வரும் நான் 12 வயதாக இருந்தபோதுதான் கடைசியாக அவர்களைப் பார்த்தேன். அதன் பிறகு என்னால் அவர்களை சந்திக்க முடியவில்லை. பெற்றோரைப் பார்க்க முடியவில்லை. அவர்களுடன் இருக்க முடியவில்லை. அவர்களை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். கூட இருந்து வாழக் கொடுத்து வைக்கவில்லையே என்று கவலையாக இருக்கிறது. இத்தனை நாட்களாக அவர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்ற நிம்மதியில் இருந்து வந்தேன். இப்போது அதையும் கூட பறிக்கப் பார்க்கிறார்களே. இது கொஞ்சமும் நியாயமில்லை. இதை விட ஒருவருக்கு கொடுமையான விஷயம் எதுவும் இல்லை. யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக் கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். வேறு என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனது தந்தையை தூக்கில் போடப் போகிறார்கள் என்ற செய்தி வந்தது முதல் நான் தூக்கமின்றி தவித்து வருகிறேன். முதல்வர் ஜெயலலிதா எனது தந்தையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். இந்தியா வர நான் விசா கோரி விண்ணப்பித்துள்ளேன். எனது தந்தையைக் காப்பாற்றக் கோரி அங்கு பலர் போராடி வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த நானும் விரும்புகிறேன் என்றார் உருக்கமாக. |
நெருப்பாகிவிட்டாள் செங்கொடி : கண்ணகி விழாவில் வைகோ முழக்கம்
சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த பாரதி இலக்கியப் பேரவையில் நேற்று கண்ணகி விழா நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, ![]() இந்த இலக்கிய அமைப்புகள் எதற்க்காக நடத்தப்படுகிறது என்பது பலருக்கு புரிவதில்லை. தமிழர்களுக்கு உள்ள வரலாறு, பண்பாடு, வீரம், மேன்மை, ஒழுக்கம், நீதி போன்ற உயரிய பண்புகளை எடுத்துக்காட்டவும், அந்த குணங்களை நம் சமுகம் கடைபிடிக்கவும் எடுத்துச் சொல்வதுதான் இந்த விழாவின் நோக்கம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய முன்னோடி நாடுகளில் வாழ்ந்த மக்கள் எல்லாம், ஆடைகள் அணியாமல் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், நாம்முடைய சோழ நாட்டில் மக்கள் பகலில் அணிவதற்கு பட்டாடையும், இரவில் அணிவதற்கு பருத்தி ஆடையும் பயன்படுத்தினார்கள் என்று நமக்கு சொல்லுகிறது சிலப்பதிகாரம். உலகத்துக்கே ஆடையணியும் நாகரீகம் கற்றுக்கொடுத்தவர்கள் நம் தமிழ் பெண்கள், இன்றும் உலகத்துக்கே ஆடைகள் கொடுப்பது தமிழகம் தான், ஆனால், சேனல்-4 தொலைக்காட்சியில் இசைப்பிரியா என்ற அந்த தமிழ் சகோதரியை ஆடைகளை அவிழ்த்து காட்டும் கட்சிகளை காட்டும் பொது நம் ரத்தம் கொதிக்கிறது. சிலப்பதிகாரத்தில், குற்றமில்லாத தன் கணவனை குற்றவாளி என்று நினைத்து அந்த பாண்டியமன்னன் நெடுஞ்செழியனின் குற்றமிழைத்த காரணத்தால் அவன் நாடு நகரமெல்லாம் எரித்தால் கண்ணகி. ஆனால், இன்று தன் சகோதரன்..., உடன் பிறவா சகோதரன், நம் தமிழ் சகோதரன், பேரறிவாளன்.... “குற்றமற்றவன்” என்பதை மெய்ப்பிக்க வேண்டி காஞ்சிபுரத்தில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்கிற ஒரு தமிழ் சகோதரி. அந்த பத்தினி பெண்ணான கன்னகியில் சாபத்திலும் நீதியிருந்தது... இந்த செங்கொடியின் சாவிலும் நீதி இருக்கிறது.... நீதி வென்றே தீரும், நம் தேசபிதா காந்தியவர்கள் 1931 வருடத்திலேயே தூக்கு தண்டனை கூடாது என்றார். பண்டித நேரு அவர்களும், ஒரு மனிதனை தேதி குறித்து வைத்து கொல்லும் கொடுரம் கூடாது என்றார்கள். 1941-ம் வருடத்தில் இந்திய அரசியல் சட்ட அமலாக்க விவாதத்தில் பேசிய அண்ணல அம்பேத்கார் அவர்களும் தூக்கு தண்டனை கூடாது என்றார்கள். இன்று உலகில் உள்ள 137 முன்னேறிய நாடுகள் தூக்கு தண்டனையை ஒழித்து விட்டார்கள். ஆனால் நம் நாட்டில் கூட நீன்ட நாட்களாக தூக்கு தண்டனை கொடுப்பதில்லை. அன்று திருப்பெரும்புதூரில் நடந்த சம்பவத்திற்கும் இந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் சம்பந்தமில்லை..... முதலில் இதே வழக்கில் 24 நபர்களுக்கு தூக்கு கொடுத்தார்களே. பின்னர் எப்படி அவர்கள் மீது குற்றமில்லை என்று முடிவு செய்யப்பட்டதோ அது போலவே, இவர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் பொய்யானது. அதை நிருபிக்க இன்னும் ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அன்று பாண்டிய மன்னன் அரண்மனையில் நடந்த கொடூரம் இப்போது தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது.. தமிழக முதல்வர் அவர்களால் இதை தடுக்கும் வாய்ப்புள்ளது... நாடே இப்போது முதல்வரின் முடிவை எதிர்பார்க்கிறது’’என்று பேசினார் |
என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிர்களை காப்பாற்ற பயன்படும் என்று நம்பிகையுடன் செல்கிறேன் (படங்கள் இணைப்பு)
| 21 வருட வாழ்க்கை சிறை கம்பிகளுக்குபின்னால் தமது வாழ்கையை கழித்துவிட்ட மரண தண்டனை தீர்க்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு 11 வருடங்கல்லுக்கு முன் இந்திய ஜனாதிபதி அனுப்பட்ட கருணை மனுஇந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு...அவர்கள் தண்டனை ஊர்ஜிதப்பட்டு தூக்குகையிற்றை எதிர்பார்த்து இருக்கும் நிலையில், உலகத்தில் மிக பெரிய ஜனநாயகநாடாகவும், ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் கேட்டு நிற்கும் நாடாகிய இந்தியஇந்திய மரண தண்டனையை நிறைவேற்றலாமா? 11 வருடங்கள், இந்திய ஜனாதிபதியிடம் கருணை மனுஅனுபிவைகப்பட்ட பின், 3ஜனாதிபதிகளுக்கு பின் இன்றைய ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டிலால் பேரறிவாளன், சாந்தன், முருகன் முன்வைத்த கருணை மனுநிரகரித்தப்பட்டது. 21 வருட சிறை தண்டனைக்கு பின் இந்த 3தமிழர்களுக்கு தூக்கு தண்டனை தீர்மானமான பின் தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், தூக்கு தண்டனைக்கு எதிரானஅமைப்புகள், தமிழ்இளைஜர் அமைப்புகள் என்று எல்லோரும் கட்சி பாகுபாடின்றி தமிழகம் என்றும்போராட்டத்தில் இறங்கினார்கள். மனித சங்கிலி போராட்டம், மோட்டார் வண்டி ஊர்வலப்போரட்டம், உண்ணாவிரதப் போராட்டம்என்று தமிழகம் எங்கும் போராட்ட களமாக மாறுகிறது. மீண்டும்நீதிமன்றங்கள் முன் இந்திய முன்னிலை சட்டத்தரணிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தீர்ப்பை தடுத்துநிறுத்தம் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதேநேரத்தில் முன்று இளம் தமிழ் பெண் சட்டத்தரணிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்குதித்தார்கள். இந்தபோர்ரட்டங்களுகிடையே காஞ்சிபுரம், ஊரிகையை சேர்ந்த செங்கொடி என்ற ௨௨ வயது சகோதிரி "தோழர்முத்துகுமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிர்களை காப்பாற்ற பயன்படும் என்றுநம்பிகையுடன் செல்கிறேன்" என்று எழுதிவைத்து விட்டு தன்னை தீக்கிறைக்கு இரையாகி ஈகைஏந்தினால் இந்த தமிழ் பெண். இந்தஇளைஜர்கள் தமிழ் மக்கள் விடுதலைக்காக தொடர்ந்தும் தமது உயிரை தியாகம் செய்துகொண்டிருகிறார்கள். உங்கள் உன்னதமான உயிர் இந்த தமிழ் மண்ணுக்கு தேவை, தமிழ் மக்களின் விடுதலைக்கு தேவை, உங்கள் வாழ்வு தான் அடுத்த விடுதலைஅடைத்த சமுதாயத்தை உருவாக்கம் உதவும். இந்த ௩ தமிழர்களின் விடுதலைக்காக போராடநீங்கள் வேண்டும், தியாகங்கள்போதும் நாம் ஒன்ற இருந்து போராடுவோம் என்று எமது தமிழக உறவுகளுக்கு பிரான்ஸ்தமிழீழ மக்கள் பேரவை சார்பாகவும் உலக தமிழ் மக்கள் சார்பாகவும் கேட்டு கொள்கிறோம். இன்றுஜனநாயத்தில் முன்னோடிய இருக்கும் நாடுகளில் எல்லாம் மரண தண்டனை சட்டத்தில் இருந்துஅகற்றப்பட்டு கொலைக்கு தண்டனை கொலை அல்ல என்ற புனித யதார்த்தத்தின் அடிப்படையில்மரண தண்டனை அழிக்கப்பட்டு வருகிறது. அத்துடன்பல நிரபராதிகள் இந்த சட்டங்களினால் பாதிக்கப்படுகிறார்கள். பலஅரசியல் காரணங்கள், நீதிமன்றங்களில், போலீஸ்இடையே அரசில் கட்சிகளின் மேலாட்சி குற்றம் செய்யாதவர்களை எல்லாம் குற்றவாளிகளாககாணப்பட்டு தண்டிகப்படுகிரார்கள். இன்று பல ஜனநாய நாடுகளில் நீதி துறையில் இருந்துஅரசு பிரிக்கப்பட்டு தனித்தன்மையோடு இயங்குகிறது. இந்த புது உலகத்தில் கால் பதிக்க நினைக்கும்இந்திய, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இடம் கேட்டுநிற்கும் இந்திய இன்று இந்த மரண தண்டனை என்ற கோரமான தண்டனையில் இருந்து விடுபட்டுபல ஜனநாயக நாடுகள் போல் மரண தண்டனையை தமது சட்ட புத்தகத்தில் இருந்து அகற்றவேண்டும் மேலயதய நாடுகளில் revising கமிட்டி என்று தீர்ப்புகளில் பிழைகள் இருக்குமானால்அதை மறு பருசீலனை அளிக்க பல வழிகள் உள்ளது. மிகப்பெரிய ஜனநாயக நாடாகி இந்தியாவில்சட்டத்தில் அரசியல் கட்சிகளின் ஆளுமை உள்ள நிலையில் ஒரு நிரபராதி தன்னை காப்பாற்றிகொள்ளை என்ன வழி இருக்கிறது என்பது மிகப்பரிய கேள்வி. இதை மக்கள் சிந்தனையில் எடுத்து கொண்டு சட்டமாற்றங்களை உருவாக்க போராட வேண்டும். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து இவர்களுக்கு ஒரு நியமானதீர்ப்பு கிடைக்கும் வரை, உயிர் தியாகங்களை விட்டு விட்டு தமிழர்கள்எல்லோரும் போராட வேண்டிய நேரமிது. ![]() ![]() ![]() |
லிபியாவில் கடாபியின் வீழ்ச்சி - மௌனம் காக்கிறார் மகிந்த
![]() |
| லிபியாவின் தலைநகர் திரிபொலி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், புரட்சிப்படையினர் அமைத்துள்ள இடைக்கால தேசிய சபை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது. சிறிலங்கா அரசுக்கு நெருங்கிய நட்பு நாடாக லிபியா இருந்துடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், லிபிய அதிபராக இருந்த கேணல் கடாபிக்கும் இடையில் மிகநெருங்கிய நட்புறவும் இருந்து வந்தது. லிபியாவுக்காக குரல் கொடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கம் அங்கு புரட்சிப்படையினர் கை ஓங்கத் தொடங்கியதும் அடக்கி வாசிக்கத் தொடங்கியிருந்தது. திரிபொலியின் வீழ்ச்சியடைந்து பல நாட்களாகியுள்ள போதும் சிறிலங்கா அரசாங்கம் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனமாக உள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா அரசஅதிகாரி ஒருவரிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியதற்கு, தாம் நிலைமைகள அவதமானித்து வருவதாக பதிலளித்துள்ளார். லிபியாவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை தேசிய சபையை இன்னமும் ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகரிக்கவில்லை என்றும் கூறியுள்ள அந்த அதிகாரி, சிறிலங்காவின் முடிவு பின்னரே அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதேவேளை லிபியாவில் கேணல் கடாபியின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு தனிப்பட்ட ரீதியாக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. |
எல்லை தாண்டக்கூடாது : நடிகை ராதா
![]() |
| கோ பட நாயகி கார்த்திகா அறிமுகமான முதல் படத்திலேயே நல்ல பெயரை எடுத்திருந்தார். தற்போது அவரை தேடி நல்ல பல வாய்ப்புக்கள் வந்துகொண்டிருக்கிறனவாம். இதனால் கார்த்திகாவின் அம்மா, முன்னாள் நடிகை ராதா, கார்த்திகாவுக்ககு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். இது தொடர்பில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், கர்த்திகாவை பெரிய டான்சர் ஆக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. அதே சமயம் அவளுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்குச் சுதந்திரமும் கொடுத்திருந்தோம். அவளும் சிறு வயதிலிருந்தே முறையாக பரத நாட்டியம் கற்றுக்கொண்டாள். படிப்பிலும் சுட்டி அவளுடைய முதல் பரதநாட்டிய அரங்கேற்றம் சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் நடைபெற்றது. பல சினிமா வாய்ப்புகள் வந்தன. தமிழில் நல்ல டைரக்டர்இ நடிகர் படத்தில் அறிமுகமாக வேண்டும் என விரும்பினேன். என்று தெரிவித்துள்ளார். மேலும, எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டக்கூடாது என்று நடிகை கார்த்திகாவுக்குஇ அவரது அம்மா ராதா எச்சரித்துள்ளாராம் |
ஒரு நூலேனும் தலை அசைந்தால் சங்குதான். (வீடியோ இணைப்பு)
| சிலரது முட்டாள்தனாமான செயற்பாடுகளுக்கு இந்த வீடியோவும் ஒரு சிறந்த உதாரணம். ரயில் தண்டவாளத்தின் கீழ் படுக்கிறான் ஒரு இளைஞன்.. மேலாக ரயில் கட கட வென 10 விநாடிகள் பயணிக்கிறது… அந்த 10 விநாடிகளும் இளைஞனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.. ஒரு நூலேனும் தலை அசைந்தால் சங்குதான். காமாரா முன் இந்த முட்டாள் தனமான விளையாட்டை மேற்கொள்ளுகிறான் இந்த இளைஞன். இதைப்பார்க்கும் போது பந்தயத்துக்காக சக நண்பர்கள் முன்னிலையில் செய்யப்பட்டதாகவே தெரிகிறது. இருந்தாலும் இதைப்பார்ப்பவர்கள் தயவுசெய்து இவ்வாறு முயற்சிக்க வேண்டாம். |
அரிய விண்கல் விழும் காட்சி வீடியோவாகப் பதிவு ! (வீடியோ இணைப்பு)
பெரு நாட்டில் ஒரு மலைப்பிரதேசக் கிராமம் ஒன்றில் விண் கல் வீழ்வதை ஒருவர் வீடியோவில் பிடித்துள்ளார். வேற்றுக்கிரக வாசிகளின் பறக்கும் தட்டு வீழ்கிறதா இல்லை பயணிகள் விமானம் வீழ்கிறதா என்று கூடத்தெரியாமல், அந் நபர் அதனை வீடியோ எடுத்துள்ளார். ஆனால் பின்னர் தான் அது ஒரு சிறியரக விண் கல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மிகுந்த பிரகாசத்துடன் எரிந்தவண்ணம் வந்து பூமியோடு மோதிய அந்த விண்கல்லினால் தற்போது காட்டுத் தீ மூண்டுள்ளதாக அறியப்படுகிறது. பூமியில் இக் கல் வந்து விழும் போது சுமார் 40 அடி விட்டம் கொண்ட தாக அது இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த விண் கல் விழுந்த இடத்தில் தீ பற்றியதால் தற்போது அதனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், தீயை அணைத்த பின்னரே விண் கல்லை தாம் தேடவுள்ளதாகவும் பெரு நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் |
தனது மெய்ப் பாதுகாவற் படைப் பெண்களை துஷ்பிரயோகம் செய்த கடாபி
![]() |
| லிபிய ஜனாதிபதி கடாபி தனது மெய்ப்பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கடாபிக்கு விசேட பயிற்சி பெற்ற கன்னிப் பெண்களைக் கொண்ட படையொன்று பாதுகாப்பு அளித்து வந்தது தற்போது கடாபி தலைமறைவாகியுள்ள நிலையில் அப்படையைச் சேர்ந்த பெண்கள் சிலர் தங்களது வாழ்க்கை தொடர்பில் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளனர். கடாபி மற்றும் அவரது அரசாங்கம் தங்களை வற்புறுத்தி படைக்குச் சேர்த்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் கடாபி தங்களை முதலில் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகவும் பின்னர் அவரது மகன்களில் ஒருவருக்கு அனுப்பியதாகவும் பின்னர் மற்றையவர்களுக்கு அனுப்பியதாகவும் அப்பெண்கள் தெரிவித்துள்ளனர். தங்களை சடப்பொருட்களைப் போல உபயோகப்படுத்தியதாகவும் தங்கள் தேவை முடிந்தவுடன் வீசி எறிந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். தாங்கள் கடாபியை தந்தை போல நினைத்ததாகவும் அவர் இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடாபிக்கு 1970 ஆம் ஆண்டு முதல் விசேட பயிற்சியளிக்கப்பட்ட பெண்கள் மெய்ப்பாதுகாவலர்களாக செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் 'அமெசொனியன் கார்ட்ஸ்' என அழைக்கப்படுகின்றனர். விசேட பயிற்சியளிக்கப்பட்ட இப்பெண்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே படையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இவ் விடயம் தொடர்பான ஆதாரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன. இவை சர்வதேச நீதிமன்றத்தில் கடாபி மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பெண்கள் மீதான வல்லுறவை கடாபி போரியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது |
Subscribe to:
Comments (Atom)










