இத்தாலிய ஆடை விற்பனை நிலையமொன்றில் ஜன்னல்களில் ஆளுயர பொம்மைகளுக்குப் பதிலாக அரை நிர்வாண மொடல்கள் நிறுத்திவைக்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மிலான் நகரிலுள்ள அந்த ஆடையகத்தில் ஆண்களும் பெண்களும் கட்டை காற்சட்டை, மற்றும் நீச்சலுடைகளை அணிந்து நின்றுகொண்டிருந்தனர்.
கோடை கால நீச்சல் மற்றும் குளியல் ஆடை விற்பனையை ஊக்குவிப்பதற்கான திட்டத்தின்படி இம்மொடல்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
ஆனால் இத்தாலிய தொழிற்சங்கங்கள் இந்நடவடிக்கையை கண்டித்துள்ளன. இது மனித உடலை வர்த்தகமாக்கும் நடவடிக்கை என இத்தாலிய தொழிற் சங்கம் விமர்சித்துள்ளது.

‘நாங்கள் இந்த விற்பனைக்கோ திறந்த சந்தைப் பொருளாதாரத்திற்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால், நாங்கள் ஊழியர்களின் நாகரீகம் மற்றும் அறிவுள்ள வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளை கருத்தில் கொள்கின்றோம்’ என அத் பில்காம்ஸ் சி.ஜி.ஐ.எல். எனும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் மேற்படி இளம் மொடல்கள் இவ்வாறான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளால் சிறிது நேரம் காணாமல் போனாலும் பின்னர் மீண்டும் அந்த வர்த்தக நிலையத்தின் கண்ணாடிகள் முன்னால் வந்து நின்றனர். மொடலிங் என்பதும் ஒரு தொழில் தான் என அவர்கள் கூறியுள்ளனர்.
மேற்படி தொழிற்சங்கங்கள் தமது வியாபாரத்திற்கு மேற்கொண்ட ‘இலவச பிரச்சாரத்திற்கு’ நன்றி தெரிவிப்பதாக அவ்வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், கூறியுள்ளார்.
‘வீதிகளில் வெட்டியாக திரிந்தவர்களுக்கு ஒரு தொழிலை வழங்கி ஊதியமும் வழங்கினோம். அதில் என்ன தவறு?’ என்கிறார் அவர்.




































சொன்ன பேச்சை இளையோர்கள் கேட்காத பட்சத்தில் திரும்பவும் மறைவிடத்துக்குச் சென்று தனது துப்பாக்கியை எடுத்து அவர் இளையோர்களை நோக்கிச் சுட ஆரம்பித்துள்ளார். அது ஒரு தீவு என்பதால் நீந்தத்தெரிந்த பல இளையோர்கள் தண்ணீரில் குதித்து நீந்தித் தப்பித்துள்ளனர். இதனிடையே குறிப்பிட்ட ஈழத் தமிழ் பெண்ணும் இவரது துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க ஏரிக்கரை நோக்கி ஓடியுள்ளார். இப் பெண்ணையும் ஆயுததாரி குறிவைத்துச் சுட்டுள்ளார். ஆனால் அவற்றில் இருந்து தெய்வாதீனமாகத் தப்பிய அவர் நீரில் குதித்துள்ளார். சாதாரணமாகவே ஐரோப்பாவில் காணப்படும் அனைத்துக் கடல், மற்றும் கடல் ஏரிகளின் வெப்ப நிலை என்ன என்று உங்களுக்குத் தெரியும். அதிலும் நோர்வே போன்ற குளிர் நாடுகளில் கடல் உறையும் நிலையில் குளிர் இருக்கும். நோர்வே நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் அதிகமாக இக் கடலில் குளித்துப் பழக்கப்பட்டதால், உறையும் குளிராக இருந்தாலும் அவர்கள் கடலில் நீந்த வல்லவர்களாக உள்ளனர். வெப்ப நாடுகளில் இருந்து வருவோர் இக் கடலில் குதித்தால் சில நொடிகளில் குளிர் தாக்கி இறக்கக்கூடும்.
இவர் தண்ணீரில் மூழ்கி ஆழத்துக்குச் சென்ற காரணத்தால் படகில் சென்றவர் இவரைக் காணவில்லை. கண்டிருந்தால் காப்பாற்றி இருந்திருப்பார். இப்படியும் ஒரு நிகழ்வா என அனைவரையும் உறையவைக்கும் நிலை அங்கே இருந்திருக்கிறது. இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு தளராத உறுதியோடு அவர் இளைப்பாறி இளைப்பாறி நீந்த ஆரம்பித்துள்ளார். இறுதியில் சுமார் 1 கி.லோமீட்டர் நீந்தி ஒரு கரையை அடைந்துள்ளார். அங்கே நின்ற நோர்வே மக்கள் சிலர் அவரின் கரங்களைப் பற்றி வெளியே இழுத்து உதவிசெய்துள்ளனர். இப் பெண் துணிச்சலாகவும் விடா முயற்சியோடும் தன்னைக் காப்பாற்றியிருந்தாலும், தனது நண்பர்கள் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அத்தோடு தொலைக்காட்சியில் பார்த்தபோது போலீஸ் சீருடையில் தன்னோடு வந்து பேசிய ஆள் தான் அந்த ஆயுததாரி என்று அவர் தற்போது உறுதியாகக் கண்டறிந்துள்ளார். அவர் அடைந்துள்ள சோகங்களில் இருந்தும் அதிர்சியில் இருந்தும் அவர் விரைவில் மீண்டுவர உதவேண்டும் என அதிர்வு இணையம் அவர்களது உற்றார் உறவினர்களை வேண்டி நிற்கிறது.
இலங்கைக்கான அமெரிக்க நிதியுதவிகளை தடைசெய்யும் பிரேரணை ஒன்று சமீபத்தில் காங்கிரஸால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது சட்ட வரமுறையாகும் சாத்தியங்களும் காணப்படுகிறது. இவ்வாறு இது ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டால், நடப்பு ஆண்டில் 13 மில்லியன் டொலர் தொகையையும், அடுத்த ஆண்டில், 55 மில்லியன் டொலர் தொகையையும் இலங்கை இழக்கவுள்ளது. இலங்கை பணத்தில் இது கிட்டத்தட்ட 7.5 பில்லியன் ரூபாய்கள் ஆகும். குறிப்பிட்ட பிரேரணை சட்டமாக்கப்படுவதற்கு முன்னர், அதைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசு அதீத பிரயத்தனங்களை எடுக்கின்றது ,அதன் ஒரு பகுதியாக சில பல்தேசிய நிறுவனங்கள் சிறிலங்காவுடனான வர்த்தக உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனைவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
சனல் 4 கொலைக்களம் வீடியோ ஆவணப்படம் தமிழில் �டப்� செய்யப்பட்டு வருவதாகவும் அது விரைவில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெலலிதாவிற்குச் சொந்தமான ஜெயா தொலைக்கட்சியில் ஒளிபரப்புச் செய்யப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று வெளியான சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழ் இத்தகவலை அரசியல் அலசல் பகுதியில் இது வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயா தொலைக்காட்சியை இலங்கையிலும் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல ஒரு வால் நட்சத்திரம் சமீபத்தில் சூரியனோடு மோதி அழிந்துள்ளது. இவ்வாறு நடக்கும் காட்சிகள் அபூர்வம் அதனை மனிதனின் கண்களால் பார்க்கவும் முடிவதில்லை. ஆனால் செயற்கைக்கோள்களின் துல்லிய கமராக்களின் கண்களில் இருந்து இவை தப்பிவிடுமா என்ன ?
ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஹமாத். சமீபத்தில் அவர் அபுதாபி அருகே உள்ள அல்புடய்சி என்ற தீவை விலைக்கு வாங்கினார். அதில் தனது பெயரை 3 கி.மீட்டர் நீளத்துக்கு எழுதி வைத்தார்.









