Sunday, 27 November 2011

நாசமா போயிருவீங்க! ஜெயலலிதா ஆட்சி பற்றி சீமான் ஆவேசம்!


25.11.2011 அன்று சென்னை அம்பத்தூரில் உள்ள ஆஸ்ஸிபள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.


அவர் பேசுகையில்,


ஒருத்தன் கேட்கிறான் பால் விலை, பேருந்து கட்டணம் எல்லாம் ஏறிவிட்டது. ஏன்னென்றால், பொதுநிறுவனங்களை பாதுகாக்க நிதி இல்லை. உடனே ஒருத்தன் எடுத்து பேசுறான், அண்ணா நூலகத்தை மாற்ற காசு இருக்கு. இதுக்கு காசு இல்லையா. இதுக்கு யாரிடம் பதில் இருக்கு.


மத்திய அரசு, மாநில அரசு கேட்ட நிதியை ஒதுக்கி தரவில்லை. மத்திய அரசுடன் கூட்டணி அமைக்காமல் இந்த அரசு அமைந்திருக்கிறது. பெரும்பான்மையோடு அமைந்திருக்கிறது. தனக்கு அடிபணியவில்லை. அதனால் வஞ்சிக்கிறது. பொதுவாகவே இந்தியாவை ஆளுகிற காங்கிரஸ் அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரானது.


மேற்கு வங்காளத்தை ஆளுகிற மம்தா பானர்ஜியோடு கூட்டணி வைத்திருக்கிறது. அதனால் கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. இங்கே ஆளுகிற அதிமுக அரசு காங்கிரசோடு கூட்டணி வைக்கவில்லை. அதனால தேவையான நிதியை தரவில்லை. அப்ப நீங்க என்ன செய்திருக்க வேண்டும். மக்களிடம் சொல்லியிருக்க வேண்டும். கேட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கி தராததால், நான் விலைவாசியை உயர்த்தினால் பால் விலை 6 ரூபாய் 25 காசு கூடும். பேருந்து கட்டணம் இரட்டிப்பாகும். பேருந்தில் எவன் போவான். ஷேர் ஆட்டோவில் போகமுடியாதவன். இருசக்கர வாகனம் வைத்துக்கொள்ள முடியாதவன். கார் வைத்துக்கொள்ள முடியாதவன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். மாதச் சம்பளம் 3 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய் வாங்குபவன்தான் பேருந்தில் போவான். அவன் காசை பறித்து, அதில் இருந்து நிதியை பெருக்கி, நிர்வாகத்தை சீர்செய்ய வேண்டும் என்பது எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு மோசமானது என்பதை சிந்திக்க வேண்டும்.




அப்ப என்ன செய்திருக்க வேண்டும். என் அன்பு மக்களே, இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. தமிழக அரசுக்கு நிதி தரவில்லை என்றால், பால் விலையை ஏற்றினால், பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் உங்களுக்கு இவ்வளவு சுமை இருக்கும். இவ்வளவு கஷ்டத்தை மக்கள் மீது சுமத்த முடியாது. எனவே எனக்கு ஆதரவாக நில்லுங்கள். நான் போராடுகிறேன். அப்படித்தான் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் போராடினார்கள். மத்திய அரசு வேண்டிய அறிக்கையை கொடுக்காதபோது, மக்களைத் திரட்டி ஒரு நாள் போராட்டம். அடுத்த நாள் பதறிக்கொண்டு அறிக்கையை கொடுத்தது மத்திய அரசு. அப்படி போராடி இருக்க வேண்டும்.

மத்திய அரசு, நான் உங்களை அடிக்கிறேன். நீங்கள் திருப்பி என்னைத் தான் அடிக்க வேண்டும். பக்கத்தில் இருக்கும் அப்பாவியை அடிக்கக் கூடாது. அது சரியல்ல.


ஆர்ப்பாட்டத்தில் பேச அனுமதி இல்லை. பெரம்பலூரில் டிசம்பர் 15ல் தம்பி அப்துல் ரசக்கின் நினைவுத் தினத்திற்கு கூட்டம் போட்டால் அந்த இடத்தில் அனுமதியில்லை. ஏன், பக்கத்தில் அகதிகள் முகாம் இருக்கிறது. சீமான் பேசினால், பக்கத்தில் இருக்கிற அகதிகள் எல்லாம் துப்பாக்கியை தூக்கிக்கிட்டு இலங்கைக்கு போய்விடுவானா. சீமான் பேசினால் உணர்வு பெற்றுவிடுவான். ஏண்டா ஒரு தமிழன் கூட உணர்ச்சியே பெற்றுவிடக் கூடாதா. உணர்வே பெற்றுவிடக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தீங்கன்னா, இதை எங்கப்போய் சொல்லறது. நான் இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கும், எங்கோ ஓரத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருக்கும் தமிழர்கள் உணர்வு பெறுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. அதுக்காக அந்த இடத்தில் பேச அனுமதி இல்லையென்றால், இதைவிட ஒரு கொடுமை, இதைவிட ஒரு சர்வாதிகாரம், இதைவிட அடக்கமுறை எதாவது இருக்கா.


கலைஞர் கருணாநிதி அவர்கள் என்னை பேச வைத்து இறையாண்மைக்கு எதிரா பேசுறான். விடுதலைப்புலிகளை ஆதரிச்சு பேசுறான். சட்டத்துக்கு எதிரா பேசுறான் என்று தூக்கி தூக்கி உள்ளே போட்டாரு. இதுக்கு அதுவே பரவாயில்லை. இங்கே நீ பேசவே விடல. அந்த கொடுமையை தொலைக்கத்தான் இந்த வேலையை செய்தோம். இது அதைவிட பெரிய கொடுமையா இருக்கு. இதை தொலைக்க பெரிய வேலை செய்யணும் போலிருக்கு நாங்க.

நான் சொன்னேன் ஒரு அதிகாரிகிட்ட எடுத்து, நாசமா போயிருவீங்கன்னு சொன்னேன். இது நடக்கும். இந்த சேட்டையெல்லாம் நீங்க வைச்சிக்கக் கூடாது. ஒண்ணு தெரிந்துக்கொள்ளுங்கள் அப்படியே ஒரு வாய்க்காலில் ஓடுகிற தண்ணீரை நீங்க அடக்கி தேக்கி தேக்கி வைச்சி வைச்சி திறந்தீங்கண்ணா, அது வேக வேகமா பாயும். அதைத்தான் நீங்க செஞ்சிக்கிட்டு இருக்கீங்க. இரவு முழுவதும் பட்டியில் கட்டி வைத்திருந்த மாடுகளும், ஆடுகளும் காலையில் திறந்து விட்டால் எவ்வளவு வேகமா வெளியே பாய்ந்து வருமோ, அவ்வளவு வேகமா நாங்க வருவோம். ஆடு, மாடுமே அப்படி பாயும்போது, வீரத்தமிழ் புலிகள் நாங்கள் எப்படி பாயுவோம் என்று நீங்க புரிந்துக்கொள்ளுங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.

சீமான் இப்படி ஆவேசப்பட்டு பேசுவதால் கிடப்பில் இருக்கும் விஜயலக்ஸ்மி புகாரை ஜெயலலிதா கையில் எடுப்பார் என்றே தெரிகிறது. சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஜெயலலிதாவுக்கு பல நன்மைகள் கிடைக்கலாம். விடுதலைபுலிகளின் தீவிர ஆதரவாளரான சீமானை மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழக பெண்கள் மத்தியில் ஒரு பெண்பித்தனை போன்று சித்தரிக்கலாம், இதனால் சீமானின் புகழை அடியோடு இல்லாமல் செய்யலாம், சீமான் மீது கொலைவெறியில் இருக்கும் காங்கிரஷ்கரர்களை குளிரவைகலாம். அதுவே அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வழிவகுக்கலாம்...இதன் மூலம் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக , காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான சீமானின் பிரசாரத்தை கேள்விக்குறியாக்கலாம் இப்படி பல நன்மைகள் இருப்பதால் விஜயலட்சுமி புகார் மீது நடவடிக்கை எடுத்து சீமான் கைது செய்யப்படும் நாட்கள் என்னப்படுவதாகவே தெரிகிறது.

டேம் 999... தெரியாம நடிச்சிட்டேன்! - பம்மும் விமலாராமன்


முல்லைப்பெரியாறு அணையின் வரலாறு பற்றி தெரியாமல் டேம் 999 படத்தில் நடித்துவிட்டேன் என்று அப்படத்தின் நாயகி விமலாராமன் தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்டுள்ள படம் டேம் 999. இதில் விமலாராமன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த விமலாராமனுக்கு தமிழ் படங்களில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து விமலாராமனை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவர், "நான் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்புக்காக கடந்த 1 வார காலமாக குலுமணாலியில் உள்ளேன். படப்பிடிப்பு ஒரு குக்கிராமத்தில் நடப்பதால் டேம் 999 படத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை.

சென்னையில் இருக்கும் எனது நண்பர்கள் படத்துக்கு எதிர்ப்பு இருப்பது குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள்.

நான் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர். நான் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவள். கே. பாலசந்தர் தனது 'பொய்' படம் மூலம் என்னை அறிமுகப்படுத்தினார். எனக்கு அணையின் வரலாறு பற்றி எதுவும் தெரியாது. இயக்குனர் என்னிடம் கதை சொன்னபோது அதை படமாகத் தான் பார்த்தேன். தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் எண்ணமே எனக்கு இல்லை," என்றார்

' WHY THIS KOLAVERI DI 'க்கு போட்டியாக 'WHY THIS KOLAVERI DA'


தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் ' 3 '. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் இருந்து ' WHY THIS KOLAVERI DI ' பாடல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அந்த பாடலை மட்டும் முதலில் வெளியிட்டார்கள். YOUTUBE, GOOGLE மற்றும் இந்தியா முழுவதும் இப்பாடல் மிகப் பிரபலமானது.

பல்வேறு பிரபலங்கள் இப்பாடலை கேட்டு விட்டு தங்களது டிவிட்டர் இணையத்தில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

WHY THIS KOLAVERI DI பாடலை தொடர்ந்து ' WHY THIS KOLAVERI DA ' பாடலையும் சேர்க்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது படக்குழு.

இது குறித்து ' 3 'பட இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் " காதல் தோல்விக்கு ஆண்களை யாரும் ஏன் குறை சொல்வதே இல்லை என்று பல பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். பலரின் விருப்பத்திற்கு இணங்க நான் WHY THIS KOLAVERI DA பாடலை எழுதலாமா என யோசித்து வருகிறேன் " என்று கூறியுள்ளார்.

இளைஞர்களிடம் WHY THIS KOLAVERI DI பிரபலமானது போல், இளம் பெண்களிடம் WHY THIS KOLAVERI DA பாடல் பிரபலமாகிறதா என்று பார்ப்போம். !

அஞ்சலி அறிக்கை பின்னணியில் மறைந்திருக்கும் மர்மம் ?


அஞ்சலி ஜெய் காதல் அதற்குள் புட்டுக்கொண்டது ஏன்? இதற்கான காரணத்தை தேடி மூளையை அலைய விட்ட கோடம்பாக்கத்தின் புலனாய்வு புலிகளுக்கு கிடைத்த தகவல்கள் அவ்வளவு பரபரப்பு. 'அந்த நடிகர்' என்று பெயரை கூட உசசரிக்க பிடிக்காமல் அறிக்கை கொடுக்கிற அளவுக்கு அஞ்சலியை து£ண்டிய அந்த நபர் வெளிநாட்டில் இருக்கிறாராம் இப்போது.

ஆட்சி மாறியதும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கிக் கொண்டார் அவர். திரும்பி வந்தால் நில ஆக்ரமிப்பு வழக்கு உறுதி என்ற நிலையில் குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் மேற்படி பிரமுகர். இவருக்கும் அஞ்சலிக்கும்தான் நெருங்கிய பழக்கம் இருந்ததாம்.

வெளிநாட்டிற்கு போய்விட்டாலும் உள்ளூர் விஷயங்களை இணையங்களின் மூலமாகவும் இங்கிருப்பவர்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளும அவர், இந்த ஜெய் விவகாரத்தில் ரொம்பவே கொந்தளித்தாராம். இனிமேல் நீங்கள் இருவரும் இணைந்து நடிக்கவே கூடாது. போனில் பேசுவதாக நான் கேள்விப்பட்டாலும் பொருத்துக் கொள்ள முடியாது என்று பொறிந்து தள்ளிவிட்டாராம்.

இப்ப புரிஞ்சுருக்குமே ஏன் இந்த டிராமா என்று?

சுல்தான் தி வாரியர், கோச்சடையானா! - கே எஸ் ரவிக்குமார் விளக்கம்


கோச்சடையான் படம் புதிய கதை, புதிய தொழில்நுட்பத்துடன் உருவாகிறது. சுல்தான் படத்துக்கும் கோச்சடையானுக்கும் தொடர்பில்லை என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் சுல்தான் - தி வாரியர் என்ற படத்தை தயாரித்து இயக்குவதாக அறிவித்தார் சௌந்தர்யா ரஜினி. அனிமேஷன் தொழில் நுட்பத்தில் அந்தப் படத்தை உருவாக்கினார். இடையில் ரஜினி எந்திரனில் நடிக்கத் தொடங்கியதால், அந்தப் படம் நிறுத்தப்பட்டது.

எந்திரன் வெளியான பிறகு சுல்தான் வரும் என்றார்கள். ஆனால் பல்வேறு தடைகளால் சுல்தான் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்ட நிலையில் ராணா படத்தை அறிவித்தார் ரஜினி.

ராணா தொடங்கிய ஏப்ரல் 29-ம் தேதியன்றே, ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து வந்த ரஜினி, ராணா படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டது. இதோ அதோ என பல தேதிகளை பத்திரிகைகள் ஹேஷ்யங்களாக வெளியிட்டு வந்தன. ஆனால் ரஜினி தரப்பில் இதுகுறித்து எதுவும் சொல்லப்பட வில்லை. வரும் ஜனவரியில் இதுகுறித்து சொல்வதாக கூறியிருந்தனர். ரஜினியும் இதை பின்னர் உறுதி செய்தார்.

இந்த நிலையில், திடீரென ரஜினியின் புதிய படம் கோச்சடையான் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படம் அனிமேஷனாகக் கூட இல்லாமல், ஜோம்ஸ் கேமரூனின் அவதார், ஸ்பீல்பெர்கின் டின் டின் படங்களைப் போல மோஷன் கேப்சரிங் உத்தியில் படமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க 3 டி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் இந்தப் படம் முன்பு கைவிடப்பட்டதாக கூறப்பட்ட சுல்தானா என்று கேட்டபோது, இந்தப் படத்தின் இயக்குநர் மேற்பார்வை பொறுப்பை ஏற்றுள்ள ரவிக்குமார் கூறுகையில், "சுல்தான்தான் ராணா என்று முன்பு சொன்னார்கள். இரண்டு வேறு வேறு என்று முன்பு நான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன், சுல்தானுக்கும் கோச்சடையானுக்கும் சம்பந்தமில்லை. கோச்சடையான் முற்றிலும் புதிய கதை, புதிய திரைக்கதை.

ரஜினி சார்தான் இதில் நடிக்கிறார். இதில் ஒரு ஹைடெக் செட்டுக்குள் அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கி, அவற்றை மோஷன் கேப்சரிங் உத்தியில் மாற்றுகிறோம். அவ்வளவுதான். மற்றபடி, இது முழுக்க முழுக்க ரஜினி படம்.

ராணா ஒரு ஹெவியான படம். அதற்கு முன் இந்தப் படத்தில் நடிப்பது ரஜினிக்கு ஒரு ரிலாக்ஸான அதேநேரம் சுமையற்றதாக இருக்கும். அதனால்தான் இந்த முடிவு. ராணா நிச்சயம் 2012-ல் தொடங்கும்," என்றார்

அஜீத் விஜய் போல சிம்பு தனுஷ்?


ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த விஜய்யும் அஜீத்தும் இப்போது அவ்வளவு குளோஸ் ஆகிவிட்டார்கள். வேலாயுதம் படத்தில் வரும் மங்காத்தா பட பாடலை கூட விஜய்யின் சம்மதத்தோடுதான் வைத்தாராம் ஜெயம் ராஜா. ஓய்வு நாட்களில் இரு வீட்டு திருமதிகளும் குழந்தை குட்டிகளுடன் சந்தித்து பொழுது போக்கிக் கொள்கிற அளவுக்கு ஆரோக்கியமாக போய் கொண்டிருக்கிறது பிரண்ட்ஷிப்.

இவர்களை அப்படியே பின் பற்றி வருகிறார்கள் தனுஷும் சிம்புவும். ஒருவர் படத்தில் மற்றவரை கேலி செய்த காலங்கள் போயே போச். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் சந்தித்து பேசவும் செய்கிறார்கள். இந்த நிலையில்தான் தனது திடீர் அதிரடியால் மீடியாவையும் மக்களையும் அதிர வைத்திருக்கிறார் சிம்பு.

தனுஷின் வொய் திஸ் கொல வெறிடி பாடலும், ஒஸ்தியில் வரும் கலாசலா பாடலும்தான் இன்று இணையத்தை பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டி வைக்கும் பாடல். இதில் வெறுத்துப்போன பல சிம்பு ரசிகர்கள் ஃபேஸ்புக், ஆர்குட் இணையதளங்களில் தனுஷை அநியாயத்திற்கு கேலி பேசி வருகிறார்கள்.

இச்செயலை சிம்பு வன்மையாக கண்டித்துள்ளார். இது குறித்து சிம்பு தனது ஃபேஸ்புக் இணையத்தில் " எனது ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு ஒர் வேண்டுகோள். தனுஷ் எழுதி பாடியுள்ள பாடலை எனது பாடலுடன் ஒப்பீடு செய்யாதீர்கள். தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மற்றும் எனது நண்பர். இருவருமே ஒரே துறையில் தான் இருக்கிறோம். யாருக்கும் ஒரு பாடலை எழுதி பாட உரிமையுள்ளது.

சிறு சிறு வார்த்தைகளை சேர்த்து பாடலாக்கி வருவது தற்போது பேஷனாகி உள்ளது. அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆகையால் பாடலை கேட்டு சந்தோஷப்படுங்கள். கேலி செய்த என்னுடைய ரசிகர்கள் மீது கோபமாக இருக்கிறேன். கேலி செய்வதை நிறுத்துங்கள். நான் பாத்துக்குறேன்... ரிலாக்ஸ்! என்று கூறியுள்ளார்.

காமெடியில் இருந்து வில்லன் வேடத்துக்கு மாறிய விவேக்


பிரபல காமெடி நடிகர் விவேக். இவர்  தமிழ், கன்னட  மொழிகளில் தயாராகும் வழிப்போக்கன் என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இது அவரது முதல் வில்லன் வேட  படமாகும்.

இப்படத்தின் பூஜை  பெங்களூரில் நடந்தது. இதில் விவேக் பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-

வழிப்போக்கன் படம் கன்னடம், தமிழ் மொழிகளில் தயாராகிறது.  இது எனது முதல்  கன்னட படம். இப்படத்தில் நான் வில்லனாக  படம் முழுக்க வருகிறேன். கிளைமாக்சில் எனது வில்லத்தனம் வெளிப்படும். எனக்கு கன்னட மொழி தெரியாது.  படப்பிடிப்பில் அதை கற்றுக் கொள்வேன்.

கன்னடத்தில்  டப்பிங் பேசுவேன் என்ற  நம்பிக்கை உள்ளது.  இது எனக்கு சவாலான படமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்திலும் எதிரொலித்த பிரபாகரனின் பிறந்தநாள்! இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது!!

 தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகப் பெண்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.
தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புப் பண்டங்களை வழங்கி மேற்படி கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

பேருந்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியதாகவும் தமிழகப் பெண்கள் செயற்கள் ஒருங்கிணைப்பாளர் இசைமொழி தலைமையில் 100 பேர் குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

விமானத்தில் அடாவடி செய்த குண்டு ஆசாமி

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இருந்து பிலடெல்பியாவுக்கு நேற்று விமானம் புறப்பட்ட தயாராக இருந்தது. எல்லா பயணிகளும் ஏறிவிட்டனர். ஒருவர் மட்டும் வரவில்லை.
விமானம் புறப்பட 2 நிமிடங்கள் இருந்த போது, 180 கிலோ உடம்பை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஓடிவந்தார் அந்த நபர். நுழைவாயிலில் திணறித்தான் ஏறினார்.
ஆர்தர் பெர்கோவிட்ஸ்(57) என்பவருக்கு பக்கத்து இடம் தான் குண்டு ஆசாமிக்கு. ஏறக்குறைய ஒன்றரை இடத்தை அவர் ஆக்கிரமித்தார். அரை சீட்டில் ஆர்தர் எப்படி உட்காருவார்? எழுந்தார்.
7 மணி நேர பயணத்தில் பெரும்பாலான நேரம் நடந்துகொண்டே இருந்தார். உடம்புதான் குண்டு. பாவம் நல்ல மனிதன். வேறு சீட்டும் காலியாக இல்லை.
பணிப்பெண் இடத்திலும் உட்காரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். விமானத்தில் அதிக நேரம் நடந்துகொண்டுதான் இருந்தேன். அலாஸ்காவில் இருந்து பிலடெல்பியாவுக்கு நடந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும் என்றார் ஆர்தர்.
பயண கட்டணம் ரூ.40 ஆயிரம். ரூ.10 ஆயிரத்தை ஆர்தரிடம் திருப்பி கொடுத்துவிட்டது விமான நிறுவனம்.

7ம் அறிவு வில்லன் JOHNY TRI NGUYEN எப்படித் தெரிவு செய்யப்பட்டான்?

ஏழாம் அறிவு படம் வெளியானதும் அப்படத்தில் நடித்த JOHNY TRI NGUYEN பற்றி தான் பேச்சாக இருந்தது.
அவரது மிரட்டும் கண் பார்வை, அனல் பறக்கும் சண்டை காட்சிகள் என அனைத்து விதத்திலும் ரசிகர்களைக் கவர்ந்தார். சிறு குழந்தைககளுக்கும் கூட அவரை பிடித்துப் போனது. ஏழாம் அறிவு படத்தில் நடிக்க இவரை எங்கு தேடி பிடித்தார்கள், ஒப்பந்தம் செய்தது எப்படி என்று விசாரித்த போது பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் நமக்கு கிடைத்தன.
அத்தகவல்கள் இதோ ஏழாம் அறிவு படத்தில் JOHNY TRI NGUYEN நடிக்க முதற்காரணமாக இருந்தவர் சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன். பீட்டர் ஹெய்ன் அந்நியன் படத்தில் செய்த சண்டை காட்சிகளை பார்த்து அவரது பேஸ்ஃபுக் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் JOHNY TRI NGUYEN. அப்படத்தில் வரும் SLOW MOTION சண்டைக்காட்சிக்களில் சுமார் 60 சண்டை கலைஞர்களை வைத்து படமாக்கினார்கள்.
இந்த காட்சியை பார்த்த JOHNY TRI NGUYEN பீட்டர் ஹெய்னிடம் நாங்கள் ஹாலிவுட்டில் இந்த சண்டைக்காட்சிகளை எல்லாம் 3Dல் தான் படமாக்குவோம் ஆனால் நீங்கள் எப்படி படமாக்கினீர்கள் என்று ஆச்சர்யப்பட்டு பாராட்டு தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் கிடைத்த நட்பு நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.
J OHNY TRI NGUYEN வியட்நாமில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலானவர். உலகம் முழுவதும் உள்ள சண்டை இயக்குனர்களுக்கிடையே கொடுக்கப்படும் TAURAS STUNT AWARD என்னும் விருதினை பீட்டர் ஹெய்னுக்கு 2ம் முறை சிபாரிசு செய்தது JOHNY TRI NGUYEN தான். ஏழாம் அறிவு படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் பீட்டர் ஹெய்னிடம் கூறியவுடன் முதலில் வில்லனாக நடிக்க சொல்லி கேட்டது புகழ்பெற்ற JET LI -யிடம் தான்.
ஆனால் அவரோ கதை சீன நாட்டிற்கு எதிராக இருப்பதால் நடிக்க முடியாது என்று விலகி விட்டாராம். JETLI நடிக்க முடியாது என்ற கூறியதால் அடுத்த நிமிடமே JOHNY TRI NGUYEN-வை ஏழாம் அறிவு படத்தின் வில்லனாக்கி விட்டார் பீட்டர் ஹெய்ன். இந்த சண்டைக் கலைஞர்களின் நட்பு குறித்து பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் மற்ற ஸ்டண்ட் கலைஞர்கள்.

உலகிலேயே அதிக ஆபத்தைச் சந்தித்து வேலை செய்பவர்கள் இவர்களாகத் தான் இருப்பர்

வயிற்றுக்காக மனிதன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு" என்ற எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாடல் ஒன்று இவர்களுக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும்.
இந்தப் படங்களை உங்களால் நம்ப முடிகிறதா? இவர்களைப் பார்க்க வானத்தில் ஏதோ வேலை செய்கிறார்கள் போல தான் உள்ளது.
உலகிலேயே அதிக ஆபத்தைச் சந்தித்து வேலை செய்பவர்கள் இவர்களாகத் தான் இருப்பர். ஆம், இவர்கள் சீனத் தொழிலாளர்கள்.
சீனாவில் உள்ள Shifou என்ற மலையைச் சுற்றி நடைபாதை அமைக்கும் திட்டத்தோடு களமிறங்கிய சீனத் தொழிலாளர்கள் குழு வேலையையும் சிறப்பாக செய்து முடித்திருக்கிறது.
இவர்கள் எந்தவொரு பாதுகாப்பு சாதனங்களையும் கையாளாமல் உயிரைத் துச்சமென மதித்து இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளார்கள். இது தான் சீனாவிலுள்ள மலையைச் சுற்றி உள்ள நடைபாதைகளில் நீளமானதாம்.
9843 அடிகள் நீளமான இப்பாலத்தை வியக்கத்தக்க முறையில் செய்து முடித்திருக்கிறார்கள் இந்த சீனத் தொழிலாளிகள். இந்த நடைபாதை அமைக்கும் செயல் திட்டத்தில் நன்கு அனுபவமான தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி

பாகிஸ்தானில் உள்ள கராச்சியை சேர்ந்தவர் அகமது அப்பாஸ். இவரது மனைவி ஷினாப்பீவி (32) அகமது அப்பாஸ் தனது மனைவி ஷினாப் பீவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் கள்ளதொடர்பு வைத்திருந்தார். மேலும் அவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.அதை அறிந்த ஷினாப்பீவி ஆத்திரம் அடைந்தார். எனவே, தனது கணவர் அகமது அப்பாசை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் உடலை மறைக்க என்ன வழி என யோசித்தார். கணவர் அகமது அப்பாசின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சமைத்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து ஷினாப் பீவியை கைது செய்தனர்.

மேலும், இக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது உறவினர்கள் ஷாகீர் (22), ஷாபைசல் ஆகியோரும் பிடிபட்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

பயத்தை ஏற்படுத்திய பேஸ்பால் விளையாட்டு

பேஸ்பால் விளையாட்டு என்பது நாம் எல்லோரும் மிகவும் அறிந்த ஒன்று.
இந்த விளையாட்டை இரு அணிகளாக பிரிந்து ஒன்றுடன் ஒன்று போட்டியிடும். ஒவ்வொரு குழுவிழும் 9பேர் வீதம் விளையாட்டு இந்த விளையாட்டு பார்வையாளர்களை மிகவும் கட்டி போட்டுள்ளது என்றே செல்லலாம்.
ரசிகர்கள் வெகுவாக அதிகரித்து வரும் இந்த விளையாட்டில் சில அபாயமான நிகழ்வுகளும் நடப்பதுண்டு அவ்வாறான புகைப்படங்களை நாம் காணலாம்.

சரத்பவார் கன்னத்தில் அறைந்த இளைஞர் கைது : டில்லியில் பரபரப்பு!

மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் மீது சீக்கிய இளைஞர் ஒருவர், கன்னத்தில் அறைந்த சம்பவம் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
என்.டி,எம்.சி அரங்கில் நடைபெற்ற விழா ஒன்றில் சரத்பவார் கலந்து கொண்டு திரும்பும் போது, எதிர்பாராத விதமாக, ஹர்விந்தர் சிங் என்ற அந்த இளைஞர், பவாரின் கன்னத்தில் அறைந்தார். இதனையடுத்து சரத்பவார் அருகே இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரைத் தாக்கிப் பின் கைது செய்தனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் சரத்பவாரே காரணம் என்று அந்த இளைஞர் கோஷமிட்டார்.
மேலும் சரத்பவாரை கொல்லத்தான் நினைத்தேன் என்று கூறிய அந்த இளைஞர், விளம்பரத்துக்காக அவர் கன்னத்தில் அறையவில்லை என்று கூறித் தனது கையைக் கத்தியால் கிழித்துக் கொண்டார்.
மேலும், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அந்த இளைஞர் ஆவேசமாக கூறினார்.
இந்தச் சம்பவம் புதுடில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே இளைஞர் தான், ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மீது தாக்குதல் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பிச் சென்ற புலிகளை இலக்குவைக்கும் சிறீலங்கா.

சிறீலங்கா அரசின் தற்போதைய அச்சம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகமே. அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் பலம் சிறீலங்கா அரசிற்கு தொடர்ந்து இருக்கக்கூடிய தலையிடியாகவே உள்ளது.
தமிழ் மக்கள் வாழுகின்ற நாடுகளில் அவர்களிற்கு வளர்ந்துவரும் அரசியல் செல்வாக்கும் எதிர்காலத்தில் சிறீலங்காவிற்கு பிரச்சினைக்குரிய ஒன்றாகவே அமைந்தவிடும் என்பதே, சிறீலங்கா அரசிற்கு இருக்கக்கூடிய கவலை.
சிறீலங்காவில், தமிழர்கள் முன்வைக்கும் தமிழீழக் கோரிக்கைக்கு, புலம்பெயர் தமிழ்ச்சமூகம் தொடர்ந்து வலுவான ஆதரவை வழங்கும் என்பதுடன், தமிழ்த்தேசியக் கோட்பாட்டிற்கு முரணாக தமிழ்த் தேசியக் கட்சிகள் செல்லமுடியாதவாறு ஒரு நாணயக் கயிற்றை வைத்திருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்களே என்பது சிறீலங்கா அரசின் கணிப்பாகும்.
போரின் பின்னர் புலம்பெயர்ந்த சமூகம் மெல்ல மெல்ல தளர்ச்சியடைந்துவிடும் என்பதும், உள்நாட்டில், தமிழ்த் தேசியவாதம் நீர்த்துப்போய்விடும் என்பதும் சிறீலங்கா அரசின் கணிப்பீடாகவும் இருந்தது.
அதேவேளை, புலம்பெயர்ந்த தேசங்களில், தமிழ்த்தேசியக் கட்டமைப்புக்கள் சிலவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய வகையில், தன் வலையமைப்புக்களை சிறீலங்கா அரசும், அதன்நேசநாடுகளும் கொண்டிருந்தன. புலத்தில் தமிழ்த்தேசிய எழுச்சியை மெல்ல மெல்ல மழுங்கடிப்பதே அவற்றின் நோக்கமாக இருந்தது. புலத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி, சர்வதேச ஆதரவை ஒரு நிலைப்படுத்தும், ஏற்பாடுகளை அல்லது பிரதிநிதிகளின் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்வதும் அதன் நோக்கமாகும்.
இந்தவகையில் நாடுகடந்த தமிழீழ அரசையும் அதன் பிரதமர் உருத்திரகுமாரையும் தமிழ்மக்கள் மத்தியில் இருந்து அந்நியப்படுத்தும் முயற்சியில் சிறீலங்கா தரப்பு ஈடுபட்டுள்ளது. அதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசை அங்கீகரிக்கக்கூடாது எனவும், உருத்திரகுமார் கைதுசெய்யப்படவேண்டும் எனவும் சிறீலங்கா அரசு ஏனைய நாடுகளை வலியுறுத்திவருகின்றது.
போர்க்காலத்திலும், அதற்கு முன்னரும் போருக்குப் பின்னருமான காலகட்டத்தில், தப்பிச் சென்ற போராளிகள் குறித்து குறைந்த மதிப்பீட்டையே சிறீலங்கா அரசு கொண்டிருந்தது. உயிர்தப்பி வெளியேறியவர்கள், தமது சொந்த வாழ்க்கைக்குத் திரும்பி, அமைதியடைந்துவிடுவார்கள் என்பதும், விடுதலைப் புலிகளின் முக்கியமான தனபதிகள், அதன் தலைமைக் கட்டமைப்புக்கள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில், தப்பிச் சென்றவர்களால், நெருக்கடிகள் உருவாக வாய்ப்பில்லை என்பதுவுமே சிறீலங்கா அரசின் நம்பிக்கையாக இருந்தது.
ஆனால், சிறீலங்காவை விட்டு தப்பி வெளியேறிச் சென்ற போராளிகள், மீள இயங்குவது குறித்த அச்சம் சிறீலங்கா அரசிற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அவர்கள், மீள்கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக சிறீலங்கா அரசின் புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது.
போர் மௌனித்த பின்னர், தப்பிச் சென்ற போராளிகள், அரசியல் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
போரை மையப்படுத்தியதாக அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தால், அதனை சிறீலங்கா அரசால், மீள்பயங்கரவாதத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன எனக் கூச்சலிட்டு, சர்வதேச நாடுகளின் ஆதரவைப்பெற்று அவற்றை அடக்க அதற்கு இலகுவாக இருந்திருக்கும்.
ஆனால், உலகின் போக்கையும் அதன் எதிர்பார்ப்பையும் புரிந்துகொண்டு, தமது செயற்பாடுகளை அரசியல் ரீதியாகவும், இராஜதந்திரவழிமுறைகளுக்கூடாகவும் நகர்த்திவரும் புலம்பெயர்ந்த புலிகள் சிறீலங்கா அரசிற்கு மிகப்பெரும் நெருக்கடியாக உருமாறியுள்ளனர்.
நேரடியாக கொடிய யுத்தத்தை எதிர்கொண்டவர்கள், மக்களின் அவலங்களைப் பார்த்தவர்கள், அவற்றை நேரடியாக அனுபவித்தவர்கள், வெளிநாடுகளிற்குத் தப்பிச் சென்று, அமைதியாக சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள் என, நம்பியதே சிறீலங்காவின் தப்பாகிப்போய்விட்டது.
இப்போது, தமிழ்மக்கள் மத்தியில் அவர்களைச் செயற்பட முடியாத சூழ்நிலைகளை உருவாக்குவதே சிறீலங்கா அரசின் திட்டம்.
தப்பிச் சென்ற புலிகள், சிறீலங்கா புலனாய்வுப் பிரிவின் கைக்கூலிகள் என்று, சிறீலங்கா அரசின் புலனாய்வுப் பிரிவே ஒருபரப்புரைத் திட்டத்தை வரைந்து, புலம்பெயர் தமிழர்கள் சிலருக்கூடாக அதனைப் பரவவிட்டுள்ளது.
அதேவேளை, விசா மற்றும் தங்குமிடவசதிகள் வேலைகள் இன்றி வாழும் இவர்கள், ஒரிடத்தில் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியாத வகையில், நெருக்கடிகளை ஏற்படுத்தி, அவர்களை சட்டச் சிக்கல்களில் மாட்டவைக்கும் முயற்சிகளும், அவர்களைப் பற்றிய விபரங்கள் புகைப்படங்களுடன், இணையத்தளங்கள் பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் சிறீலங்காப் புலனாய்வுத் துறை ஈடுபட்டுள்ளது.
தமிழர்களைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும், அவர்கள் சிறீலங்கா புலனாய்வத் துறைக்கு வேலை செய்பவர்கள், சிறீலங்கா அரசுடன் தொடர்புபட்டவர்கள் என்று கூறினால், அவர்களை முற்றாக நிராகரித்துவிடுவார்கள் என்பது சிறீலங்காப் புலனாய்வுத் துறைக்கு நன்கு தெரியும். அதனையே அது தன்கையில் எடுத்துள்ளது.
அது சிறீலங்காப் புலனாய்வுத் துறைக்கு பெரிதும் உதவும் ஒன்றாக உள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக அன்றுதொடக்கம் நிற்கும் ஊடகங்கள், தாயகத்தில் தமிழ்மக்களுக்காக சேவையாற்றும் பொது அமைப்புக்கள், மற்றும் புதிய சூழ்நிரையில் தோற்றம்பெற்றிருக்கும் அமைப்புக்கள் யாவும், சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவுடன் இயங்குகின்றன என்ற செய்தி,
அவற்றை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் சிறீலங்காப் புலனாய்வப் பிரிவால் வரையப்பட்ட திட்டமே.
அந்தத் திட்டத்தின் அடுத்த அத்தியாயமே, புலம்பெயர்ந்த புலிகள் மீதான குற்றச்சாட்டு.
சிங்களத்தின் இந்தச் சதித்திட்டத்தை, அறிவுள்ள தமிழ் இனம் நன்கு புரிந்துகொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
தாயகத்தில் மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராளிகள், இந்த மக்களின் விடுதலைக்காக, புலத்திலும், தமது அயராத பங்களிப்பை வழங்கி, அந்த மக்களின் விடுதலைக்கு வழிசமைப்பார்கள். அதுவே தேசியத் தலைவரின் விருப்பமும், எதிர்பார்ப்புமாகும்.

உலகின் விசித்திரமானதும் விபரீதமானதுமான பாதையில் ஒரு விறுவிறுப்பான பயணம்!

பல விதமான பாதைகளை பார்த்திருக்கிறோம், ஆனால் இது சற்று விசித்திரமானது மலையில் ஏறும்போது கடினமாக இருந்தாலும் இறங்கும்போது மிகவும் இலகு,
பைப் போன்ற மெல்லிய பாதைவழியே சில்லு பூட்டிய சக்கரங்களுடன் ஏறி அமர்ந்தாலே போதும், மலையின் அடிவாரத்தில் அழகாய் இறக்கிவிடும், இதிலிருக்கும் ஆபத்து இதை நிறுத்தவே முடியாது
நிறுத்துவதற்கான எந்தவித வசதிகளும் இதில் இல்லை , மலையின் சாய்வே இதற்கு எரிபொருள் , உல்லாசப்பயணிகள் மிகவும் விரும்பும் இப்பாதை பல மலைகளில் அமைக்கப்படவுள்ளது

அமெரிக்க அதிபருக்கு விரல் மூலமாக ஆபாச செய்கைகளை செய்த ரஷ்ய செய்திவாசிப்பாளர்!

அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் உள்குத்து வெளிக்குத்து இருந்தாலும் அமெரிக்க அதிபருக்கு ரஷிய பெண்ணொருவர் இதுபோன்ற தகாத விரல் பிரயோகங்களை பகிரங்கமாக தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது,
Tatyana Limanova பல விருதுகளை வென்ற ஊடகவியலாளர், இவர் ரஷியாவின் REN TV யில் அமெரிக்காவின் பொருளாதார நிலை தொடர்பான செய்தியில் அமெரிக்க அதிபரின் பெயர் வந்தபோது விரல் மூலமாக தகாத செய்கையை வெளிப்படுத்தியுள்ளார்
இது அமெரிக்காவில் கடும் எதிர்ப்பைக்கிளப்பியுள்ளது, ஆனாலும் ரஷியாவின் மூலம் இவருக்கு எந்த வித தண்டனைகளும் வழங்கப்பட மாட்டாதென நம்பப்படுகிறது, இவராக செய்தாரோ செய்யும்படி தூண்டப்பட்டாரோ யாருக்கு தெரியும்!