| நியுயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 66வது கூட்டத்தொடரில் பங்கேற்க நியுயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அங்கு பல்வேறு நாடுகளினதும் தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் அவர், நைஜீரிய அதிபர் குட்லக் எபெலே ஜொனாத்தனையும், கிர்கிஸ்தான் அதிபர் றோசா ஒட்டுன்பயேவா அம்மையாரையும், ஸ்லோவேனிய அதிபர் டானியோ டக்கையும், செனகல் அதிபர் அப்துலாவ் வாடேயையும் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்புகளின் போது இருதரப்பு வர்த்தக உறவுகளை விரிவுபடுத்திக் கொள்வது குறித்துக் கலந்துரையாடியுள்ள சிறிலங்கா அதிபர், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து விளக்கமளித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் செயலக செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. அதேவேளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக்கையும் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை சிறிலங்கா அதிபருக்கும் ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையில் முக்கியமான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை பான் கி மூன் வெளியிட்ட பின்னர் முதல்முறையாக மகிந்த ராஜபக்ச அவரைச் சந்திக்கவுள்ளார். அதேவேளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்தவாரம் சந்திக்கவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடவுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் பேச்சுக்கள், மீள்குடியமர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மன்மோகன்சிங்கிற்கு மகிந்த ராஜபக்ச விளக்கமளிப்பார் என்றும் புதுடெல்லித் தகவல்கள் மேலும் கூறுகின்றன. ![]() ![]() ![]() ![]() ![]() |
Thursday, 22 September 2011
பான் கீ மூனை சனியன்று சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர் - மன்மோகனுடனும் பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment