Tuesday, 2 August 2011

பொஸ்பரஸ் குண்டுகளை இலங்கை இராணுவம் பாவித்தது: ஆதாரப் புகைப்படங்கள் !



இறுதி யுத்தம் ஒரு மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்றும், விடுதலைப் புலிகள் பிடித்துவைத்திருக்கும் பொதுமக்களை இலங்கை இரணுவம் மீட்கவே இப்போரை இராணுவம் மேற்கொள்வதாக இலங்கை கூறிவந்தது. பொதுமக்களை கொண்று குவித்த இராணுவம் மக்கள் குடியிருப்பு மீதும் பொஸ்பரஸ் குண்டுகளைப் போட்டுத் தாக்கியதற்கான ஆதாரப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பெண்களை மானபங்கப்படுத்தியும் இளைஞர்களின் கைகளைக் கட்டி அவர்களின் தலையில் சுட்டுக்கொலைசெய்தது போதாது என்று மக்கள் வீடுகள் மீதும் இலங்கை விமானப்படை பொஸ்பரஸ் குண்டுகளைப் போட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

கீளே காணப்படும் புகைப்படங்கள் புதுமாத்தளான் பகுதியில் கடற்கரையை அண்டிய சிறிய குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று சொல்லப்படுகிறது. இத் தாக்குதலில் பலர் சம்பவ இடத்திலேயே கருகிக் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இலங்கை விமானப்படை பாவித்த சில குண்டுகள் முதலில் வெடிக்கும்போது காற்றில் உள்ள பிராணாவாயு (ஆக்சிஜனை) உரிஞ்சிப் பின்னர் வெடித்து எரிகிறது. இதன் காரணமாக இக் குண்டு வெடிக்கும் இடத்தில் உள்ள அயலவர்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி மயங்கிவிழுவதும் உண்டு. இல்லையேல் ஓட முடியாத நிலை தோன்றுவதும் உண்டு. இதனாலேயே பலர் பொஸ்பரஸ் குண்டுத் தாக்கத்தால் இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தடைசெய்யப்பட்ட இக் குண்டுகளை எதிரிப் படைகள் மீது கூடப் போடக்கூடாது என்று சர்வதேச நாடுகள் பல சேர்ந்து ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. ஆனால் இக் குண்டுகளை இலங்கை பொதுமக்கள் மீது போட்டு பலரைக் கொத்துக் கொத்தாகக் கொலைசெய்துள்ளது இதுவரை உலகின் கண்களுக்கு கொண்டுசெல்லப்படவில்லை. போர்குற்றங்கள், கற்பழிப்புகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து சர்வதேசம் கவனம்செலுத்தும் அதேவேளை, தடைசெய்யப்பட்ட குண்டுகள் பாவிக்கப்பட்டது தொடர்பாகவும் சர்வதேசம் கவணத்தில் எடுக்கவேண்டும்.


வெட்கம் வெட்கம் திரும்பிப் போ கோஷம் !

வெளிநாட்டு விருந்தினர்களாக இந்திய நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்திருந்த ஸ்ரீலங்கா எம்.பி.க்கள் நேற்று (திங்கட்கிழமை) எதிர்பாராத வகையில் மிக மோசமான அவமானத்தைச் சந்தித்தனர். இவர்களை நோக்கி, �வெட்கம்.. வெட்கம்� என்ற கோஷம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விருந்தினர்களாக ஒரு நாட்டுக்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு (எம்.பி.கள்) எதிராக, அவர்களை வரவேற்று அழைத்திருந்த மக்கள் மன்றத்தில் (நாடாளுமன்றம்) வைத்தே எதிர் கோஷங்கள் எழுப்புவது, ராஜதந்திர நடைமுறைகளில் மிக அவமானத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படும். அவமானப்படுத்தப்பட்ட எம்.பி.க்கள் தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது, இந்தச் சம்பவத்தை தமது நாடாளுமன்றக் குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டியிருக்கும். அது, சர்வதேச அரங்கில், �அவமானத்துக்குரிய பதிவு� என்ற முறையில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஸ்ரீலங்கா எம்.பி.க்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க.வின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் !

இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாகப் பார்க்கப்படும்.

ஸ்ரீலங்கா எம்.பி.க்களுக்கு தலைமை தாங்கியிருந்தவர் ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சகோதரரும், சபாநாயகருமாக சமல் ராஜபக்ஷே என்பது இதிலுள்ள முதலாவது முக்கிய விஷயம். அதாவது அவமானப்படுத்தப்பட்ட குழுவின் தலைவர், அவரது சொந்த நாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்.

இரண்டாவது, கோஷம் எழுப்பிய எம்.பி.க்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். இந்தக் கட்சிதான் தமிழகத்தில் ஆளும் கட்சி. அந்த வகையில், தமிழக அரசே, ஸ்ரீலங்காவுக்கு இந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இது இலங்கை அரசுக்கு கிடைத்த பெரும் சாட்டை அடி !

இந்தச் சம்பவம் எப்படி நடைபெற்றது ? இதோ, இப்படித்தான் !

சமல் ராஜபக்ஷே தலைமையில் ஸ்ரீலங்கா எம்.பி.கள் இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் காண்பதற்காக அவைக்கு வந்திருந்தனர். அவர்களை சபாநாயகர் மீரா குமார் வரவேற்றார். ஸ்ரீலங்கா எம்.பி.க்கள் குழு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருக்கின்றது என்று அவைக்கு அறிவித்தார். அவர்களை அறிமுகம் செய்யத் தொடங்கினார். வழமையாக இப்படி வெளிநாட்டு விருந்தினர்கள் வருகைதரும்போது, நாடாளுமன்றத்தில் அவர்களை அறிமுகம் செய்துவைக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகளைத் தட்டியோ, அல்லது தமக்கு முன்புள்ள மேஜையைத் தட்டியோ வரவேற்பது வழக்கம்.

இன்றும், ஸ்ரீலங்கா எம்.பி.களை சபாநாயகர் மீரா குமார் அறிமுகப்படுத்தத் தொடங்கியபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி வரவேற்கத் தொடங்கினர். ஆனால், அந்த ஒலியை அடக்கியபடி பெரிதாக சில குரல்கள் �shame, shame� என்று ஒலிக்கவே, அனைவரும் திகைத்துப்போய், இந்தக் குரல்கள் வரும் திசையில் திரும்பிப் பார்த்தனர். அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஒன்பது பேரும், எஸ்.செம்மலை, முனிசாமி தம்பித்துரை ஆகியோரின் தலைமையில் எழுந்து நின்று, ஸ்ரீலங்கா எம்.பி.க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். �வெட்கம், வெட்கம்� என்ற அவர்களது கோஷம் அவை முழுவதும் ஒலித்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.களும் அவையில் இருந்தனர். அவர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. தி.மு.க. எம்.பி.க்கள் பலரும் அவையில் மௌனமாக அமர்ந்திருந்தனர். கோஷம் எழுப்பிய அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஆதரவாக வேறு யாரும் எழுந்திராத நிலையில், மிக ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. தமிழக எம்.பி.க்களில் ஒருவர், தமது கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றிக் கவலைப் படாமல் அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஆதரவாக எழுந்தார்.

அவர், பி.லிங்கம். தென்காசி தொகுதியின் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. இவர் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக சபாநாயகரின் இருப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்குவதைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அவர் சபாநாயகரை நெருங்குமுன், தடுக்கப்பட்டார். அவரது கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா ஓடிச்சென்று, லிங்கத்தின் கைகளைப் பிடித்துத் தடுப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அதன்பின் அவர் உட்கார்ந்து விட்டார். அ.தி.மு.க. எம்.பி.கள் கோஷம் எழுப்பியதை, சபாநாயகர் மீரா குமார் கண்டித்தார். ஸ்ரீலங்கா எம்.பி.கள் நமது அழைப்பின் பேரில் வந்துள்ள விருந்தினர். அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றார். ஆனால், இதனை ஏற்காத அ.தி.மு.க. எம்.பி.க்கள், �வெட்கம் வெட்கம்� என்று தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

சமல் ராஜபக்ஷே தலைமையில் ஸ்ரீலங்கா எம்.பி.கள், இந்தியாவில் ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வந்துள்ளனர். இனி இனி என்ன ஆகப்போகிறதோ ?

 

ப.நடேசன் கொலைசெய்யப்பட்ட வீடியோ இதுவாக இருக்கலாம் எனச் சந்தேகம் !

இறுதிப் போரில் இலங்கை இராணுவத்திடம் சுமார் 300 காயப்பட்ட போராளிகள் மற்றும் பெண்களோடு சென்று சரணடைந்தார் ப.நடேசன் அவர்கள். அவரையும் சமாதானச் செயலாளர் புலித்தேவனையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொண்றது. அவர்களது புகைப்படங்களை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இருப்பினும் தற்போது பெருமளவான போராளிகள் கொல்லப்பட்ட நிலையில் உள்ள காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. இக் காணொளியில், இருக்கும் உடலங்களின் தலையில் மிகவும் அருகில் இருந்து சுடப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது. சரணடைந்த அல்லது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த போராளிகளை இலங்கை இராணுவம் தலையில் சுட்டுக் கொலைசெய்துள்ளது இங்கே தெள்ளத் தெளிவாக உள்ளது.

அதுமட்டுமல்லாது இங்கே காணப்படும் 1 உடலம் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்களின் உடலை ஒத்தாக இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அருகில் இருக்கும் போராளிகளின் உடலங்கள் அவருடன் சரணடையச் சென்றவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் இக் காணொளி எங்கு அல்லது எந்த நாளில் எடுக்கப்பட்டது என்பது போன்ற சரியான விபரங்களைப் பெற்றுகொள்ள முடியவில்லை என்பதனை அதிர்வு இணையம் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது.

ப.நடேசன் அவர்களின் உடலை ஒத்த உடலம் ஒன்று இங்கே காணப்படுவதனால் இக் கொலைகள் எபோது நிகழ்ந்திருக்கலாம் என ஊகிக்கமுடியுமே தவிர இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.


சவேந்திர சில்வாவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு சூழ்ச்சி? சனல் 4 காணொளியில் தோன்றியவர் ருவாண்டா படைவீரராம்!

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக செயற்பட்டு வரும் சவேந்திர சில்வாவை பதவியிலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சனல்4 தொலைக்காட்சி சேவையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அமெரிக்கப் பிரிவினரும் இணைந்து இந்த சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ருவாண்டா படைவீரர் ஒருவரினால் போர்க் குற்றச்செயல் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களே, அண்மையில் 58ம் படைப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் வெளியிட்டதாக சனல்4 தொலைக்காட்சி சேவை ஒளிபரப்புச் செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலம்பெயர் புலி அமைப்பினர் பெரும் தொகையான பணத்தை செலவிட்டு இந்த சூழ்ச்சித் திட்டத்தை மேற்கொண்டு வருவதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் ஓர் கட்டமாகவே சனல்4 ஊடகத்தின் ஜொனதன் மில்லர் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஜொனதன் மில்லர் சுற்றுலாப் பயணி என்ற போர்வையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சனல்-4 அதிகாரிகளுடன் சவேந்திர சில்வா சந்திப்பு
இலங்கையின் கொலைக்களங்கள் என்ற போர்க்குற்ற ஆவணப்படம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சனல் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
மனித உரிமை பேரவை மாநாட்டில் உரையாற்றிய சவேந்திர சில்வா இலங்கையின் கொலைக்களங்கள் என்ற பெயரில் வெளியான ஆவணப் படம் தொடர்பாக விவாதிக்க நியூயோர்க் வருமாறு சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்குப் பகிரங்க சவால் விடுத்தார்.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் சவாலை ஏற்று சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளர் உள்ளிட்ட குழுவொன்று நேற்று முன்தினம் நியூயோர்க் சென்றது. அவர்கள் நியூயோர்க் சென்ற வேகத்திலேயே சவேந்திர சில்வாவிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.
தயவுசெய்து நீங்கள் தூதரகத்துக்கு வாருங்கள். அங்கு இது தொடர்பாக பேசலாம்'' என சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டார். அழைப்பை ஏற்று அங்கு சென்ற சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன் சுமார் ஒரு மணித்தியாலம் அவர் பேசினார்.

இதன் போது, சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஆவணப் படத்தை இலங்கை எவ்வாறு வெற்றிகரமாக கையாண்டது என்பது குறித்தும் விடியோவின் உண்மைத் தன்மை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு சவேந்திர சில்வா தெளிவுபடுத்தினார்.
சவேந்திர சில்வாவின் விளக்கத்தைத் தொடர்ந்து அவர்கள் இலங்கை வருவதற்கு சந்தர்ப்பம் கிட்டுமா என சவேந்திர சில்வாவிடம் கேட்டனர்.
அதேவேளை, இந்தச் சந்திப்பு குறித்து உள்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு சவேந்திர சில்வா கருத்துத் தெரிவித்த போது கூறியவை வருமாறு:
இலங்கை அரசுக்கும், இராணுவத்தினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெட்டத் தெளிவு.
புலிகள் தோற்கடிக்கப்பட்டதையடுத்து புலி ஆதரவாளர்களும், இலங்கைக்கு எதிரான அமைப்புகளும் இவ்வாறான நிறுவனங்களை விலைக்கு வாங்கி இலங்கைக்கு எதிராகச் சதி முயற்சிகளை கட்டவிழ்த்து விடுகின்றன.
சனல் 4 தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகள் என்னை தொடர்ந்தும் அவதானித்த வண்ணமுள்ளனர். நான் எங்கு சென்றாலும் என்னை தொடர்கின்றனர். புகைப்படம் எடுக்கின்றனர் என்றார்.

கொலைக்களங்களை மறுக்கும் வகையில் இலங்கை புதிய காணொளி வெளியீடு (வீடியோ இணைப்பு)




சனல் 4 ஆவணத் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் நேரில் கண்டனர் என்று கூறிய நேர்முகக்காணல்கள் பெய்யானவை எனக்கூறி இலங்கை இன்று லைஸ் அக்ரீட் அப்போன் என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் தோன்றி இருந்த தமிழ்வாணி ஞானகுமார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஆவார் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்து உள்ளார்.

இராணுவத்தால் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்புப் பணிகளை விவரிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை: உண்மை மற்றும் பகுப்பாய்வு - ஜூலை 2006 மே 2009 என்கிற அறிக்கையை இவர் நேற்றுக் காலையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து வெளியிட்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு முக்கியமாக குறிப்பிட்டவை வருமாறு:-

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாடுகள் தொடர்பாக இவ்வறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. சமாதானத்தை ஏற்படுத்த விடுதலைப் புலிகள் எப்போதும் விருப்பம் கொண்டிருக்கவே இல்லை.

விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என வகை தொகை அற்றோர் பலியாகினர்.

ஆகவே இம்மனிதகுல அழிவைத் தடுப்பதற்கே மனிதாபிமான மீட்பு நடவடிக்கையை அரசு ஆரம்பித்தது, நாட்டை மீட்டெடுக்க முயன்றது.

நாடு தற்போது மீளக் கட்டி எழுப்பப்பட்டு வருகின்றது. யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு உள்ளனர். எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புகளுடன் இணைந்து புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் போராளிகள் சரண் அடைகின்றமை தொடர்பாக எனக்கு எவரும் அறிவித்து இருக்கவில்லை. இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கவும் இல்லை.

சரணடைந்த புலி உறுப்பினர்களை கொல்ல வேண்டிய தேவைப்பாடு அரசிடம் இருக்கவில்லை. இறுதி யுத்தத்தின்போது சுமார் 11 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரண் அடைந்தார்கள். இவர்கள் கட்டம் கட்டமாகப் புனர்வாழ்வு பெற்று கணிசமான தொகையினர் தற்போது சமூகமயப்படுத்தப்பட்டு உள்ளனர்.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான தமிழ்ச்செல்வன், சூசை மற்றும் ரூபன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களும் சரண் அடைந்து இருந்தார்கள். தமிழ்ச்செல்வன் இராணுவத்தினரின் விமானத் தாக்குதலில் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்லப்பட்டு இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரும் இராணுவத்திடம் சரணடைந்து இருந்தனர்.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து இறுதி நாட்களில் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, உலக உணவு ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களும், பணியாளர்களும் பின்வாங்கி இருந்தனர். ஆனால், அந்நிலைமையிலும் அரச தொண்டு உதவியாளர்கள் மக்கள் சேவைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.

சனல் 4 தொலைக்காட்சியில் தோன்றி இருக்கின்ற தமிழ்வாணி ஞானகுமார் சிவிலியன் அல்லர். இவர் விடுதலைப் புலி உறுப்பினர். புலிகளுடன் இணைந்து செயற்பட்ட ஒருவர். இவர் விடுதலைப் புலிகளின் சர்வதேச நடவடிக்கைகளில் தொடர்புபட்டு செயற்பட்டு இருந்தார்.

துர்கா என்பவரும் புலி உறுப்பினரே. புலிகள் இயக்கத்தின் முன்னிலைத் தளபதிகளில் ஒருவராக செயல்பட்டு இருந்தார்.

இந்தியாவில் உள்ள முகாம்களில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலர் தலைமறைவாக வாழ்கின்றனர். ஆனால், இவர்களின் விபரங்கள் எம்மிடம் இல்லை. திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா ஆகிய நாடுகளிலும் சிலர் தலைமறைவாக உள்ளனர்.

இலங்கையின் நற்பெயருக்குப் பங்கம் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு சனல் 4 தொலைக்காட்சி சில வீடியோக்களை வெளியிடுகிறது. எந்தவித ஆதாரமும் இல்லாமல், போலியான தகவல்களை வைத்து வீடியோக்களை வெளியிடுகிறது.

இராணுவச் சிப்பாய்கள் இருவருடைய வீடியோ பேட்டி என்று ஒன்றை சனல் 4 அண்மையில் வெளியிட்டது. சில நோக்கங்களை அடைந்து கொள்ளவே சனல் 4 இவ்வாறு செயற்பட்டு வருகிறது.

ஆனால் இலங்கையின் இறைமைக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினர், விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் இணைந்து வெளிநாடுகளில் செயல்படுகின்ற புலம்பெயர் தமிழர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற செயற்பாடுகளுக்கு இந்த அறிக்கை முற்றுப் புள்ளி வைக்கும்.

யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! (வீடியோ இணைப்பு)



இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் ஆராய்ந்துவரும் சனல் 4 தொலைக்காட்சி கடந்த புதன்கிழமை ஒளிபரப்பிய இலங்கையின் யுத்த களத்தில் இருந்த வீரர்கள் எனக் கூறி இருவர் வெளியிட்ட கருத்துகள் மேலும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் அதிகாரி மற்றும் இராணுவ வீரரின் சாட்சியங்களை சனல் 4 பதிவுசெய்திருக்கிறது.

சாட்சியங்களின் பாதுகாப்புக் கருதி அவர்களின் உண்மையான பெயர்கள் மறைக்கப்பட்டிருந்தன. சவீந்திர சில்வாவின் கீழ் அப்போது பணியாற்றிய இந்த அதிகாரியின் சாட்சியத்துக்கமைய கைதிகள் எல்லோரையும் கொல்லும்படியான உத்தரவு கோத்தபாயவினால் அனைத்துப் படைப்பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சனல் 4 இனால் பெர்ணான்டோ என்று பெயரிடப்பட்ட இந்த படைவீரர் தான் கண்ட இறுதிநாட்களின் கொடூரத்தை விபரித்துள்ளார். பெருமளவான அப்பாவிச் சிறுவர்களை படுகொலை செய்தனர், கூட்டாகப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார்கள், ஓலமிட்ட மக்களின் நாக்குகளை அறுத்தெறிந்தார்கள், வண்புனர்வுள்ளாகிய பின் பெண்களின் மார்பகங்களை அறுத்தெறிந்தார்கள். இவையெல்லாவற்ரையும் நான் எனது கண்களால் பார்த்தேன். நூற்றுக்கணக்கான சிறுவர்களின் உடல்கள் அந்தப் பிரதேசமெங்கும் சிதறிக்கிடப்பதையும் கண்டேன். யாராவது ஒரு தமிழ்ப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய வேண்டுமென்றால் அவளை அடித்துத் துன்புறுத்தி அவர்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார்கள்.

அவளது பெற்றொர்கள் அதைத் தடுக்க முற்பட்டபோது அவர்களை அடித்துக் கொன்றார்கள்.அது அவர்களின் இராச்சியமாக அவர்களுக்குத் தெரிந்தது. யுத்தகளத்திலிருந்த படைவீரர்களைப் பொறுத்தவரை அவர்களின் இதயங்கள் கல்லாக மாறியிருந்தன. இரத்தத்தையும், படுகொலைகளையும், மரணங்களையும் தொடர்ச்சியாகப் பார்க்கப் பழகிவிட்ட அவர்களுக்கு மனிதநேயம் என்பது துளியளவும் இருக்கவில்லை. அவர்கள் ஒரு கட்டத்தில் இரத்தக் காட்டேரிகளாகவே மாறியிருந்தனர். நிர்வாணமாக்கப்பட்டுத் தலை துண்டிக்கப்பட்ட பெருந்தொகையான பெண்களின் உடல்களைக் கண்டேன். அந்த உடல்களில் இன்னும் பல உறுப்புகளும் வெட்டி அகற்றப்பட்டிருந்தன.

புதுமாத்தளான் பிடிபடும்போது அன்றய தினம் மட்டும் சுமார் 1,500 பொதுமக்கள் இறந்ததாகத் அவர் தெரிவித்தார். எல்லா இடங்களிலும் சேர்த்து குறைந்தது 50 ஆயிரம் உடல்களைக் கண்டேன். தம்மால் படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்களின் உடல்களை உடனடியாக அகற்றவேண்டிய தேவை அவர்களுக்கிருந்தது. எனவே அதற்காகவே பாரிய புல்டோசரைக் கொண்டுவந்து கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உடல்கள் மீது மண்ணை அணைபோலப் போட்டு மூடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மற்றைய சாட்சி சனல் தொலைக்காட்சியில் விபரிக்கையில், மே 15, 2009 இல் இறுதியான தாக்குதலை ஒருங்குசெய்யுமுன்னர் பிரிகேடியர் சவீந்திர சில்வா தனது படையினரை ஒன்றுதிரட்டி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலை கூறியுள்ளார். “நேற்றிரவு பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. இன்னுமொரு சிறிய நிலப்பரப்பு மட்டுமே எம்மால் கைப்பற்றப்பட வேண்டி இருப்பதாக என்னிடம் அவர் கூறினார்.

அதைக்கைப்பற்றுவதற்கு உங்களால் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்யுங்கள். இறுதி முடிவு எப்படியாக அமைய வேண்டுமோ அவ்வாறே நீங்கள் செய்யுங்கள் என்று கோத்தபாய கூறியதாக சவேந்திர சில்வா அவர்களிடம் கூறியுள்ளார். புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைபொறுப்பாளர் நடேசன், புலித்தேவன், அவர்களது குடும்பங்கள், மற்றும் பல நூற்றுக்கணக்கான போராளிகள் சரணடைந்த நிகழ்வு இதற்கு அடுத்தநாள் நடைபெற்றது. சரணடைந்த அனைவரையும் இராணுவம் கொன்று குவித்தது என்று அவர் அங்கு மேலும் வாக்குமூலமளித்துள்ளார்.

இராணுவத்தினர் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லையாம்!: தமிழ்செல்வன், சூசையின் மனைவியர்

அரசாங்கப் படையினர் சிவிலியன்கள் மீது எவ்வித தாக்குதல்களையும் நடத்தவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் மனைவியும், புலிகளின் முன்னாள் கடற்படைத் தளபதி சூசையின் மனைவியும் தெரிவித்துள்ளனர். ரிவிர என்ற சிங்களப் பத்திரிகை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களைத் தவிர வேறு பொதுமக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை என தமிழ்ச் செல்வனின் மனைவி தெரிவித்துள்ளார்.

போராட்டம் முடிவடையும் வரையில் தாம் போர் வலயத்தில் இருந்ததாகவும் படையினர் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ச் செல்வன் உயிரிழந்ததனைத் தொடர்ந்து புலிகள் தம்மை சரியாக கவனிக்கவில்லை எனவும் அவர் முறைப்பாடு செய்துள்ளதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதிக் கட்ட போரின் போது புலிகளின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட சிவிலியன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, கடல் வழியாக தப்பிச் செல்ல முற்பட்ட போது கடற்படையினர் தம்மையும் பிள்ளைகளையும் காப்பாற்றியதாக சூசையின் மனைவி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் சனல்4 ஊடகத்தினால் இலங்கைப் படையினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிக்கும் நோக்கில் இலங்கை ஊடகவியலாளர்கள் விசேட விவரணமொன்றை தயாரித்து வருகின்றனர்.

இந்த விவரணச் சித்திரத்தில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களான சூசை மற்றும் தமிழ்ச் செல்வன் ஆகியோரின் மனைவியர் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

தமது பிள்ளைகள் கொழும்பு பாடசாகைளில் கல்வி பயில்வதாகவும், இராணுவத்தினர் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் குறித்த இருவரும் படையினருக்கு புகழ்மாலை சூட்டியுள்ளனர்.

ரிவிர என்ற சிங்களப் பத்திரிகை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதிஸ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஒட்டுனர் (படங்கள் இணைப்பு)

சீனாவில் உள்ள Nanchang என்ற நகரத்தில் அவசரமான சாலை ஒன்று உள்ளது. அந்த சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீர் ஒரு புதைக்குழிக்குள் கார் சிக்கி கொண்டது. 13 அடி உயர அந்த பள்ளத்தில் காரை விட்டு விட்டு ஒட்டுனர் தப்பித்தார்.







நகை கடை திருட்டு தோல்வியில் முடிந்தது (வீடியோ இணைப்பு)

நகை கடையில் திருடவந்த திருடர்களின் முயற்சி தோல்வியில் முடிந்த நேரடிக்காட்சியை தான் இப்போது நம்முடைய தளத்தில் பார்க்க போகிறோம்.





போர்க் குற்ற வீடியோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் முரளி!


பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டு இருக்கின்ற இலங்கையின் கொலைக்களம் என்கிற வீடியோவை ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒளிபரப்பியமையை ஆட்சேபித்து இலங்கையர்களில் ஒரு சாரார் மெல்பேர்ன் சதுக்கத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் நேற்று ஈடுபட்டனர்.

இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள், சனல் 4, ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியோருக்கு எதிராக சுலோக அட்டைகளை கைகளில் ஏந்திக் கொண்டு பலத்த எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர்.

இலங்கை கிறிக்கெற் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் படத்துடன் கூடிய சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தமையை காண முடிந்தது.

நாங்கள் தமிழரான முரளியை நேசிக்கின்றோம்..... ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமே கண்ணைத் திறந்து பார் என்கிற அர்த்தப்பட இச்சுலோக அட்டைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.




துணியில் கைதான 147 ஈழத்தமிழர்களையும் வழக்கு பதியாமல் சென்னைக்கு அனுப்பியது ஆந்திர காவல்துறை (படங்கள் இணைப்பு)

ஆந்திர மாநிலத்தில் உள்ள துணி காவல்நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 147 ஈழத்தமிழர்களும் நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர காவல்துறையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இவர்கள் தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சிர்கார் விரைவு தொடருந்து மூலம் நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களின கடவுச்சீட்டுகள், அகதிமுகாம்களில் வழங்கப்பட்ட அடையாளச் சான்றுகள், சரிபார்க்கப்பட்ட பின்னர், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கிழக்கு கோதாவரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரிவிக்ரம் வர்மா தெரிவித்துள்ளார்.

சந்தேகத்துக்கிடமான முறையில் லோவாவில் உள்ள தலுபுல்லம்மன் ஆலயப் பகுதியில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தம்மை ஐந்து முகவர்கள் கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி அழைத்து வந்ததாக கூறியுள்ளனர்.

ஒவ்வொருவரிடம் இருந்தும் முகவர்கள் 5000 ருபா பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், லோவா ஆலயத்தில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

13 நாட்களுக்கு முன்னர் இவர்கள் லோவாவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் உள்ளூர் முகவர்கள் காவல்துறையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட அகதிகள் மீது தாம் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை என்றும் அவர்களை சென்னை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும், ஆந்திர காவல்துறை கண்காணிப்பாளர் திரிவிக்ரம் வர்மா தெரிவித்துள்ளார்.

சென்னை காவல்துறையினர் அகதிகளை ஏமாற்றியதாக முகவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வார்கள் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மும்பையில் நயன்தாரா, பிரபுதேவா திருமணம்

அண்மையில் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்த பிரபுதேவா தற்போது தனது காதலியான நயன்தாராவை வெகுவிரைவில் திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

சென்னை அல்லது கேரளாவில் கல்யாணத்தை நடத்தினால் ரசிகர்களும் பத்திரிக்கைக்காரர்களும் 'தொல்லையாக' அமைவார்கள் என்று அஞ்சுவதால் கல்யாணத்தை மும்பையில் நடத்த தீர்மானித்துள்ளார்களாம்

மும்பைக்கு கல்யாணத்தை மாற்றலாம் என்று முக்கிய நடிகர் ஒருவர்தான் பிரபுதேவாவுக்கு புத்திமதி கூறியுள்ளாராம். அங்கு வைத்தால்தான் இந்த மீடியா தொல்லையைத் தவிர்க்கலாம் என்பது அவரது அறிவுரையாம். தற்போது நயனதாராவைக் கல்யாணம் செய்து கொள்ள படு வேகமாக ஏற்பாடுகளை செய்துவருகிறார்.

மிக மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் திருமணத்திற்கு அழைக்கப் போகிறார்களாம் இருவரும்

பாம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஆடும் நடனம் (வீடியோ இணைப்பு)


நம்முடைய தளத்தில் பாம்புகள் சண்டையிட்டு கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் பாம்புகள் மகிழ்ச்சியாக இருக்கும் போது பிண்ணி பிணைந்து ஆடும் நடனத்தை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.







இலங்கை அரசுக்கு எதிராக சுவிற்சர்லாந்து பாராளுமன்றில் பிரேரணை தயாராகிறது?!

இலங்கை அரசுக்கும் அரசாங்கத் தலைவர்களுக்கும் எதிராகப் போர்க்குற்றம் சாட்டியும் போர்க்குற்றங்களுக்காக சம்பந்தப்பட்ட அரச தலைவர்களும் பாதுகாப்புப் படைத் தலைவர்களும் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டுமென கோரும் பிரேரணை ஒன்றை சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் முன் வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் வாழும் புலிகள் இயக்கத் தலைவர்களும் ஆதரவாளர்களாகிய அரசியல் பிரமுகர்களும் இவ்வாறு சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் இலங்கைக்கெதிராக போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் பிரேரணையைக் கொண்டு வருவதற்காக சுவிற்சர்லாந்து ஆளும் அரசியல் கட்சி முதலாக ஏனைய கட்சித் தலைவர்கள்,கட்சிப் பிரமுகர்களுடன் தீவிர தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் விரைவில் இவ்வாறு இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுப் பிரேரணையை சுவிற்சர்லாந்து கிறீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புலிகள் இயக்கத்தின் பிரபல ஆதரவாளருமான லீ ஸ்கொட் எனப்படும் சுவிற்சர்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் மூலமாகவே இவ்வாறு இலங்கைக்கு எதிரான போர்க்குற்றப் பிரேரணை சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் எனவும் மேலும் குறித்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கிறீன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மூலம் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுப் பிரேரணை கொண்டு வருவதற்கான ஊடகத்தரப்பு,தகவல் வழங்கல் மற்றும் உதவிகளை செய்வதற்காக இலங்கையைச் சேர்ந்த முன்னாள் ஊடக அமைப்பின் தலைவர் ஒருவர் சுவிற்சர்லாந்து சென்றடைந்திருப்பதாக மேலும் குறித்த தகவல்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு அண்மையில் சுவிற்சர்லாந்து விமான நிலையத்தில் இந்த குறித்த இலங்கை ஊடக அமைப்பின் முன்னாள் தலைவர் அரைக்காற்சட்டை மற்றும் பயண உடைகளுடனேயே வந்திறங்கியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக கிறீன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மூலம் போர்க்குற்றப் பிரேரணையை கொண்டு வர ஏற்பாடுகளைச் செய்து வரும் புலிகள் இயக்கத் தலைவர்கள் மற்றும் ஆதரவுப் பிரமுகர்கள் மேற்படி குறித்த முன்னாள் ஊடக அமைப்புத் தலைவருக்கு பெரும் தொகைப் பணம் வழங்கி இந்த ஏற்பாட்டுக்கான உதவியைப் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து குறித்த இலங்கை ஊடக அமைப்பின் முன்னாள் தலைவர் கிறின் கட்சித் தலைவர் லீ.ஸ்கொட் மற்றும் அவருடன் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளைச் சந்தித்து குறித்த போர்க்குற்ற பிரேரணைக்கு வேண்டிய ஊடகத் தகவல்களை வழங்கி வருவதாகத் தெரிய வருகின்றது.

இதற்கான முக்கிய ஏற்பாடுகளை சுவிற்சர்லாந்து பேர்ண் நகரத்தில் வாழும் புலிகள் இயக்கப் பிரமுகர் ஒருவர் பொறுப்பாகச் செய்து வருவதாக மேலும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு போர்க்குற்ற பிரேரணையை சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் கிறீன் கட்சி உறுப்பினர் லீ ஸ்கொட் தலைமையில் சமர்ப்பிக்கவிருப்பது பற்றிய மற்றுமொரு தகவலில் குறித்த இலங்கை ஊடக அமைப்பின் முன்னாள் தலைவர் இலங்கையில் சுதந்திர ஊடக அமைப்பு ஒன்றின் தலைவராக இருந்த காலகட்டத்தில் பாதுகாப்பு புலனாய்வுத்துறையால் விசாரணைக்குட்படுத்தப்படவிருந்தார் எனவும் ஆயினும் பின்னர் நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்குத் தப்பியோடினார் எனவும் மேலும் தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும் அண்மையில் இவர் சுவிற்சர்லாந்துக்கு கட்டார் விமான நிலையத்திலிருந்தே வந்து சேர்ந்துள்ளதாக மேலும் சுவிற்சர்லாந்து விமான நிலையத் தரப்பிலிருந்து தெரிய வந்துள்ளது.

இதுபற்றி தெரிவிக்கப்படும் பாதுகாப்பு விமர்சனங்களில் இவ்வாறு இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தவும் இலங்கை அரச தலைவர்கள் மற்றும் படைத்தலைவர்கள் சர்வதேச நீதிமன்றத்திலும் ஏற்றுவதற்காக சர்வதேசப் புலிகளின் ஆதரவாளர்கள் கோடிக்கணக்காகப் பணம் கொடுத்து கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் நாடுகளில் பிரபல அரசியல்வாதிகளையும் ஊடகத் தரப்பினரையும் தூண்டி வருவதாகவும் இந்நிலையில் இலங்கை அரசு புலிகள் இயக்கத்தினரும் ஆதரவாளர்களும் தீவிரமாக இயங்கி வரும் மேற்படி நாடுகளிலுள்ள தூதரகங்கள் மூலம் அந்நாடுகளின் அரசு தரப்புகள் மற்றும் அரசியல்வாதிகளிடையே இலங்கை அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இல்லாவிடில் இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக் கூண்டில் ஏற்றும் சர்வதேச புலிகள் முயற்சிகளுக்கு இந்நிலை சாதகமாக அமைந்து விடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் மூலம் திவயின