Thursday, 10 November 2011

ஐஸ்வர்யா ராய்க்கு பிரசவம்: மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நாளை அதாவது 11-11-11ல் பிரசவம் நடக்கிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் 2வது வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். நாளை 11-11-11 என்னும் அரிய தேதி வருவதால் அன்றே பிரசவம் நடக்கவிருக்கிறது.
இதற்காக ஐஸ்வர்யா ராயை மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு துணையாக கணவர் அபிஷேக், மாமனார் அமிதாப் மற்றும் மாமியார் ஜெயா பச்சன் ஆகியோர் தங்கியுள்ளனர்.
பச்சன் குடும்பத்தினருக்காக மருத்துவமனையின் 5வது மாடியில் ஸ்பெஷல் அறை கொடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் முக்கியமான குடும்பம் தங்கியிருப்பதை அடுத்து மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மருத்துவமனை பாதுகாவர்கள் வழக்கமாக 6 மணி நேரம் பணியாற்றுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராய் பிரசவத்தை முன்னிட்டு அவர்களை 12 மணி நேரம் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர தனியார் பாதுகாப்பு நிறுவன பாதுகாவலர்களும், போலீசாரும் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஐஸ்வர்யா ராய் தங்கியிருக்கும் அறைக்குள் பார்வையாளர்கள் யாரும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சவீந்திர சில்வாவை ஐ.நா பதவியில் இருந்து நீக்குமாறு 10 மனிதஉரிமைக் குழுக்கள் பான் கீ மூனுக்கு கடிதம்

தனக்கு எதிரான போர்க்குற்ற வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியுயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு சட்டவாளர்கள் பதில் மனு ஒன்றை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்துள்ளனர்.அதேவேளை, பத்து அனைத்துலக மனிதஉரிமைகள் குழுக்கள் ஒன்றிணைந்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் பதவிக்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சமர்ப்பித்த அறிமுக ஆவணத்தை நிராகரிக்குமாறு கோரியுள்ளன.

சித்திரவதைகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்கள் போன்ற போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது சமஸ்டி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

“போர்க்குற்றவாளி ஒருவரை ஐ.நா தனது பதவித் தரத்தில் வைத்துள்ளது. இது ஒரு உளவியல் மற்றும் சட்ட நடவடிக்கை“ என்று அமெரிக்க பல்கலைக்கழக வொசிங்டன் சட்டக் கல்லூரியின் மனிதஉரிமைகள் பிரிவின் பணிப்பாளர் அலி பேடன் தெரிவித்துள்ளார்.

“மிகப்பெரிய அனைத்துலக கட்டமைப்பான ஐ.நா அமைதி மற்றும் நீதியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலுள்ளது.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டியது ஐ.நாவின் கடமை.

தனது குற்றங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு அவர் இராஜதந்திர விலக்குரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் இராஜதந்திர விலக்குரிமையை ரத்துச் செய்து அவரது அறிமுக ஆவணத்தை நிராகரித்து, அவரை விசாரணை செய்வதற்கு ஒத்துழைக்க வேண்டும்“ என்று பத்து மனிதஉரிமை அமைப்புகள் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன.

மனிதஉரிமைகள் மற்றும் அரசியலமைப்புக்கான ஐரோப்பிய நிலையம், மனிதஉரிமைகள் - அமெரிக்கா, சித்திரவதைகளுக்கு எதிரான உலக அமைப்பு, அரசியலமைப்பு உரிமைகளுக்கான நிலையம், ட்ரயல், யால் சட்டப் பாடசாலை அலாட், லொவென்ஸ்டன் அனைத்துலக மனித உரிமைகள் கிளினிக், குற்றமயப்படும் சமூகங்களுக்கு எதிரான பரப்புரை மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட மக்கள் சமூகம் ஆகியன இணைந்தே இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளன.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் அறிமுக ஆவணத்தை நிராகரித்து- சட்டத்தை மீறும் அரசாங்கங்களின் அநீதிகளுக்கு, ஐ.நா பாதுகாப்பு அளிக்காது என்றதும், போர்க்குற்றவாளிகளுக்கும் பாரிய கொடூரங்களைப் புரிந்தவர்களுக்கும் தங்குமிடமாக அமையாது என்றதுமான ஒரு செய்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

“சிறிலங்கா இராணுவத்தில் போர்க்குற்றங்களைப் புரிந்த அதிகாரிகளை சிறிலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகளில் அமர்த்தியுள்ளது.

உலகெங்கும் 22 முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் இராஜதந்திரப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் அனைத்துலக முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது“ என்றும் இந்த அமைப்புகள் கூறியுள்ளன.

உலகில் மிக நீளமான மலைப்பாம்பு

உலகில் தற்போது உயிருடன் உள்ள பாம்புகளில் மிக நீளமான பாம்பு என்ற சாதனையை Columbus -Ohio நாட்டு மிருகக்காட்சி சாலையில் வளர்க்கப்பட்டு வரும் ஒரு மலைப்பாம்பு பெற்றுள்ளது.
இப்பாம்பு 300 பவுண்டுகள் எடை கொண்டதாகவும் 24 அடி நீளம் கொண்டதாகவும் காணப்படுகிறது.
15 வயதுடைய இந்த மலைப்பாம்பு Fluffy என அழைக்கப்படுகிறது.
கடந்த 2005ம் ஆண்டில் உலகின் மிக நீளமான பாம்பாக 32 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு காணப்பட்டது. இந்தப்பாம்பு இந்தோனேசியாவில் கொல்லப்பட்டது.

இதன் பின்னர் உலகில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மிக நீளமான பாம்பு என்ற சாதனை இந்தப் பாம்புக்கு கிடைத்துள்ளது.
இது 2011ம் ஆண்டிற்கான உலகசாதனை புத்தகத்தில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கதறி அழும் இளம் பெண் -கண்ணீர் துடைப்பார் யாருமில்லை ..? சோக கதை ..!

தனது மனைவி பிள்ளைகளை பார்க்க முடியாமல் தூக்கிட்டு கணவன் தற்கொலை. மனைவி பிள்ளைகள் வீதியில், அழகிய இளம் பெண்ணின் விழிகள் உடைக்கும் கண்ணீரில் எங்கள் விழியும் நனைந்தது, இந்த கண்ணீர் காட்சிகளை பார்த்தல் நீயும் அழுவாய் .

குத்தாட்டம் போடும் 95 வயது கிழவி

உங்களில் எத்தனை பேருக்கு நடனம் ஆடத்தெரியும். நீங்கள் ஒரு இளைஞர் அல்லது யுவதியாக இருந்தால் முடியும் என்று பதில் கூறுவீர்கள்.
இதே கேள்வியை உங்கள் வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டியிடம் கேட்டுப்பாருங்கள் என்னால முடியாதுடா ராசா என மறுத்துவிடுவார்கள்.
ஆனால் இந்த காணொளியில் ஒரு பாட்டி ஆடும் நடனத்தை பாருங்கள். நடப்பதற்கு கூட தென்பில்லாத இந்த பாட்டியின் வயது என்ன தெரியுமா? 95 வயது. ஆம் இந்த தள்ளாத வயதிலும் டப்பாங்கூத்து ஆடுகிறார் இந்த பாட்டி.
மரண வீடு ஒன்றிலே இவ்வாறு மழைத்தூறல் என்றும் பார்க்காது அசத்தலாக ஆடுகிறார் இந்த 95 வயது பாட்டி. ம்ம்.. நீங்களும் தான் பாருங்களேன் பாட்டியின் பலே நடனத்தை.

நாட்டை ஆட்டிப்படைக்கும் நவம்பர்

நவம்பர் மாதம் என்பது அனைத்து மக்களுக்கும் ஒரு வரபிரசாதமான மாதம். ஏனெனில் அந்த மாதம் வருணபகவான் மழையை வாரி வழங்கும் மாதம்
அதனுடன்தான் விவசாயப் பெருமக்களின் அனைத்து விவசாய நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படுகின்றது.

அந்த விவசாய மக்களின் வியர்வையில் நாம் எமது வயிற்றுப் பசியையும் போக்குகின்றோம்.

இது இவ்வாறிருக்க கார்த்திகை விளக்கீடும் இம் மாதத்தில் வருகை தந்து எமது நாட்டைப் பிரகாசிக்க வைக்கின்றது. எங்கும் ஒளிமயமான மாதமும் பயனுள்ள மாதமும்தான் இந்த நவம்பர் மாதம்.

ஆனால் இந்த நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இந்த நாட்டை ஆட்டிப்படைத்துள்ளார்கள், ஆட்சி செய்து வருகின்றார்கள், அரிவருடிகளாக ஒட்டியும் இருக்கின்றார்கள்.

அதாவது இந் நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (நவம்பர்-18), தமிழீழத் தேசியத் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர்-26), இவர்களுடன் ஒட்டுண்ணிகளின் தலைமைத்துவங்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (நவம்பர்-10), கருணா அம்மான் என அழைக்கப்படும் முரளிதரன் (நவம்பர்-07).

எனவே இவர்களில் யார் நல்வர்கள், யார் கெட்டவர்கள் என மக்கள் ஆகிய நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால் நவம்பர் மாதம் ஒரு நல்ல மாதம் என்பதை மறந்து விடாதீர்கள்.

கட்டிலுக்கு கீழே 40 அடி ஆழத்தில் பாரிய துளை! அதிர்ச்சியடைந்த பெண்

சும்மா ஒரு கற்பனை பண்ணிப் பாருங்கள்... குண்டு வெடிப்பது போல பெரியதொரு சத்தம் கேட்கின்றது.
ஆனால் அந்த சத்தம் வெளியில் இருந்து அல்ல உங்களின் வீட்டுக்குள் இருந்து தான்... உங்களுக்கு எப்படி இருக்கும்...?
உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. எப்படி என்றால் வெளியே வெடிக்கவில்லை பூமிக்குள் தான் வெடிப்பு ஏற்பட்டு பாரிய சத்தம் வந்துள்ளது.
கௌதமாலாவைச் சேர்ந்த Inocenta Hernandez என்ற பெண் வசிக்கும் வீட்டின் படுக்கையறையில் இருந்து அதுவும் அவரது கட்டிலுக்கு கீழாக 3 அடி அகலத்திலும் 40 அடி ஆழத்திலும் பாரிய துளையாக காணப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தால் குறித்த பெண் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளார். கடவுள் செயலால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பாக நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள். இனியும் அந்த வீட்டில் வாழ விரும்புவாரா குறித்த பெண்?