Sunday, 7 August 2011

ஐ.நா அறிக்கையில் ஆப்பம் சுட்டு காசு சம்பாதிக்கும் ஆசாமிகள்: எக்ஸ்ரே ரிப்போட் !

ரூபாவாஹினி தொலைக்காட்சியில் தலைவர் உடல் காட்டப்படுவதுபோலவும், அதனைத் தலைவரே பார்த்துக்கொண்டு இருப்பதுபோலவும் கிராபிக்ஸில் படம் ஒன்றைச் செய்து அதனை முதல் பக்கத்தில் பிரசுரித்து தமிழ் நாட்டில் லட்சக்கணக்கான பிரதிகளை விற்றுத் தீர்த்தது நக்கீரன். அப்போது தேசியத்தையும் ஈழத் தமிழர் போராட்டத்தையும் விற்கவேண்டாம் என்று அதிர்வு இணைய எழுதியது. ஆனால் அவர்களிடம் இருந்து கிடைத்தது என்னமோ மிரட்டல் தான் ! தற்போது இதே பாணியில் ஐ.நா வின் 3வர் அடங்கிய குழு வெளியிட்ட அறிக்கையை வைத்து புதிதாக ஒரு வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது மனிதம் என்னும் அமைப்பு. இதன் தலைவர் அக்கினி சுப்பிரமனியம் என்பவர் ஆவார். "அக்கினிக்கும் வணங்கா மண் கப்பலுக்கும்"... "அக்கினிக்கும் சமீபத்தில் கனடா செல்லவிருந்த புத்தங்கள் இலங்கையில் மாட்டிக் கொண்டதற்கும்" ... "அக்கினிக்கும் காஸ்பர் அடிகளாருக்கும்"... "அக்கினிக்கும் ரி.ஆர்.ஓ ரெஜிக்கும்" என்ன சம்பந்தம் என்று எல்லாம் எங்களைக் கேட்கவேண்டாம். வணங்கா மண் கப்பல் சென்றபோது இவர் என்ன செய்தார் என்பது தொடக்கம், சமீபத்தில் இவரூடாக கனடாவுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்கள் இலங்கை துறைமுகத்தில் பறிமுதலான கதைவரை எல்லாமே இணையத்தில் வெளியாகியது யாவரும் அறிந்ததே. இதனை நாம் திருப்பிக் கூறத் தேவையில்லை.

சரி விடையத்துக்கு வருவோம் ! ஐ.நா வின் 3வர் அடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழில் வெளிவிடுவதாக தமிழ் நாட்டில் இயங்கும் மனிதம் என்னும் அமைப்பு கூறியுள்ளது. "ஆஹா " இது அருமையான விடையம் அல்லவா என்று நினைத்து எமது பார்வையை அதன்பால் திருப்பினால் அங்கே உள்ள வண்டவாளங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றது. ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையை தாம் வெளிவிடுகிறோம் என்று இவர்கள் கூறுகிறார்கள் அப்படி என்றால் அதனை முதல் பதிப்பாக வெளியிடவேண்டியது தானே ? அப்படிச் செய்யாமல் முதலில் ஒரு புத்தகம் வருமாம் அதில் சிலரது கருத்துகளும் கட்டுரைகளும் இருக்குமாம்... பின்னர் அடுத்த( 2ம் வெளியீட்டில்) தான் ஐ.நா அறிக்கை வருமாம். ஐ.நா அறிக்கை என்ன தொடர்கதையா 2ம் பாகம் எழுத ? இல்லை சின்னத்திரை நாடகமா விறுவிறுப்பான காட்சி ஒன்றோடு முடித்து, நாளை தொடரும் என்று முடிக்க ?

அதிலும் முதல் பாகத்தில் கட்டுரை எழுதியுள்ளோர் விபரங்களைக் கேட்டால் கொஞ்சம் ஷாக் அடிக்கும். அதற்காக எழுதாமல் இருக்கமுடியுமா ? அது யார் யார் என்று பார்ப்போமா...

நாடு கடந்த அரசின் பிரதமர் ருத்திரகுமார் அவர்கள் இப் புத்தகத்தில் எதோ எழுதி இருக்கிறாராம் என்றும் பின்னர் GTF தலைவர் வணக்கத்துக்குரிய இமானுவேல் அடிகளார் இதில் எழுதியுள்ளதாகவும் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு மத்தியில் புலிகளையும் போராட்டத்தையும் படுமோசமாக கொச்சைப்படுத்தி எழுதும் டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்களின் கட்டுரையும் இப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதாவது ருத்திர குமார் மற்றும் இமானுவேல் அடிகளார் வரிசையில். இவர்களோடு சரிசமமாக டி.பி.எஸ் ஜெயராஜ் வைக்கப்படுகிறார் என்றால் இது என்ன சூழ்ச்சியா ? தெரிந்து தான் இவை அனைத்தும் நடக்கிறதா இல்லை தெரியாமல் நடக்கிறதா ? சிங்களம் போடும் எலும்புத்துண்டுக்காக அலையும் இந்த டி.பி.ஸ் ஜெயராஜ் போன்றோரை ஐ.நா அறிக்கையின் தமிழாக்க புத்தகத்தில் கட்டுரை எழுதச்சொன்னதை ஐ.நா அறிந்தால்.... நிபுணர் குழுவே கைகொட்டிச் சிரிக்குமே. இது ஒரு கேலிக்கை கூத்து என்று வேற்றின மக்களே கூறுவார்களே , இவர்களுக்குத் தெரியவில்லையா என்ன ? டி.பி.எஸ் ஜெயராஜ் கே.பியின் கூட்டாளி என்பது உலகறிந்த உண்மை, அப்படி இருக்கும்போது இவர் கட்டுரைடை புத்தகத்தில் இணைத்தது யார் ? அப்படி என்றால் தொடர்புகள் எங்கே எங்கே விரிந்துசெல்கிறது ?

சரி அதுவும் போகட்டும், அக்கினி சுப்பிரமணியனோடு அதிர்வு இணையம் இப் புத்தகம் தொடர்பாகக் கேட்டபோது, இப் புத்தகத்தை 225/= ரூபாய்க்கு விக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். 50 ஆயிரம் பிரதிகள் விற்றால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும். போதாக்குறைக்கு 2ம் பாகம் வேறு. ஐ.நா அறிக்கை தமிழில் இருக்கிறது என்று நம்பி மக்கள் முதலாம் பாகத்தை வாங்க அதில் இல்லை 2ம் பாகத்தில் தான் அறிக்கை இருக்கிறது என்று பின்னர் தானே தெரியவரும். இதற்காக அவர்கள் 2ம் பாகத்தையும் வாங்கவேண்டி இருக்கும். ஆக மொத்தம் 450/= ரூபாவுக்கு 2 பாகங்களும் விற்பனையாக உள்ளது. என்ன ஒரு பிசினஸ் மயின்ட் பார்த்தீர்களா ? இதில் இருந்து கிடைக்கவிருக்கும் பணத்தை எதற்காகச் செலவுசெய்யப் போகிறோம் என்று மனிதம் என்னும் அமைப்பு இதுவரை வாய் திறக்கவில்லை. மொத்தத்தில் தமிழீழப் போராட்டத்தையும், இறந்த மாவீரர்களையும் வைத்து கேவலமான பிழைப்புகளை நடத்திவருகின்றனர் ஒரு சிலர். தற்போது போதாக்குறைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தையும் விலைபேசி விற்று, ஐ.நா அறிக்கையையும் வித்துக் காசாக்க ஒரு கூட்டம் ரூட்டுப்போடுகிறது.

தமிழர்களின் போராட்டங்கள் எல்லம் "பாகம் 1" "பாகம் 2" என்று வர இருக்கு ! இதனைத் தமிழினம் தொடர்ந்தும் அனுமதிக்குமா ? இல்லை இவர்களைப் போன்றோரை களையெடுக்குமா ? உங்கள் கைகளில் விட்டுவிடுகின்றோம் !

முல்லை. புதுக்குடியிருப்பில் நூற்றுக்கணக்கான மனித எச்சங்களுடன் பெரும் புதைகுழிகள் கண்டுபிடிப்பு

பெருமளவிலான மனித எச்சங்களோடு பெரும் புதைகுழிகள் வன்னி புதுக்குடியிருப்பு பகுதியில் மீளக் குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கான தற்காலிக வாழ்விடங்களை அமைக்கும் போது கண்டுபிடித்துள்ளனர்.
இதைவிட இன்னும் மனித எச்சங்கள் இருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த மனித எச்சங்கள் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட ஆக்கிரமிப்பு போரின்போது சிறீலங்கா சிங்களப் பேரினவாதப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களினுடையதாக இருக்கலாம் என்று அப்பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்களப் படைகளால் துப்பரவு செய்யப்பட்ட பகுதியாகவுள்ள, முற்றாக வெடிபொருட்கள் அகற்றப்படாத நிலையிலுள்ள, மக்கள் மீளக் குடியேற்றப்பட்டுள்ள அந்தப் பகுதியிலேயே மனிதப் புதைகுழிகள் இனங்காணப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

சுறாமீனை வேட்டையாடிய Octopus (வீடியோ இணைப்பு)


ஆழ்கடல் பகுதியில் இருந்த சுறா மீனை பாறைகளின் நடுவில் ஒழிந்து கொண்டிருந்த Octopus, மிகவும் புத்திசாலித்தனமாக வேட்டையாடிய நேரடிக் காட்சியை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

கார் விபத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பிய மிஸ்டர் பீன்!














நகைச்சுவையின் மூலமாக உலகையே கட்டிப் போட்டவர் மிஸ்டர் பீன். இவரது இயற்பெயர் ரோவன் அட்கின்ஸன். 56 வயதான இவர் பி.பி.சி.யின் பிளாகேடர் என்னும் தொலைக்காட்சி தொடரில் மிஸ்டர் பீன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

பிரிட்டனில் உள்ள பீட்டர்போரோ என்னுமிடத்துக்கு அருகேயுள்ள கேம்ப்ரிட்ஜ்ஷயர் என்னுமிடத்தில் இவர் பயணம் செய்த இவரது மாக்லொரேன் சூப்பர் கார் விபத்துக்குள்ளானது.
இதில் லேசான காயங்களுடன் பீன் தப்பித்தார். இவர் ஒரு கார் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.பி.சி.யின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக அவர் சென்று கொண்டிருந்தபோது ஒரு விளக்குக் கம்பத்துக்கும், ஒரு மரத்துக்கும் நடுவில் கார் மோதி தீப்பிடித்தது.

தீப்பிடித்து நொறுங்கிப்போன காரின் இடிபாடுகளிலிருந்து எழுந்து பீன் உயிர் தப்பியமை இங்கே குறிப்பிடத்தக்கது.



மூத்த புலித் தலைவரின் மறைவிடம் முற்றுகை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரின் ஆயுதங்கள், சீருடைகள் ஆகியவற்றை முல்லைத்தீவில் உள்ள மறைவிடம் ஒன்றில் இருந்து இலங்கைக் கடல் படையினர் கைப்பற்றி உள்ளார்கள்.

பல்வகையான வெடிபொருட்கள், மோட்டார் குண்டுகள் - 05, ரிமோட் கொன்றோலர், மைக்ரோ பிஸ்டல், புலிச் சீருடைகள் - 04, புலித் தொப்பிகள் - 03, புலிக் கொடிகள் ஆகியவற்றை எடுத்து உள்ளார்கள்.

பொதுமக்கள் வழங்கி இருந்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் இடத்தை படையினர் முற்றுகை இட்டு இருந்தனர்.



இன்டர்நெட்டில் என் பெயரில் மோசடி - ரஜினி, தனுஷ் இணைந்து நடிப்பார்களா? - ஐஸ்வர்யா

ரஜினி மகளும் தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா இன்டர்நெட்டில் தனது பெயரில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:-

நான் இன்டர்நெட்டில் பேஸ்புக்கில் இல்லை. ஆனால் யாரோ எனது பெயரை போலியாக பேஸ் புக்கில் உருவாக்கியுள்ளார் என் சம்பந்தப்பட்ட செய்திகளையும் அதில் போட்டு வைத்துள்ளார். நான் இயக்கும் படம் பற்றிய தகவல்கள் எனது தந்தை ரஜினி, கணவர் தனுஷ் பற்றிய விவரங்களையும் அதில் சேர்த்துள்ளார்.

இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த பேஸ் புக்கை உண்மை என நம்பி எனது நண்பர்கள் உறவினர்கள் அதில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். ரஜினி, மற்றும் தனுசுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர்களும் போலி பேஸ் புக்கில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இது பெரிய மோசடித்தனம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சைபர் கிரைம் போலீசில் இது பற்றி புகார் அளிக்கவும் ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளார்.

ரஜினி - தனுஷ் இணைந்து நடிப்பார்களா? - ஐஸ்வர்யா பதில்


கணவர் தனுஷை வைத்து தான் இயக்கும் முதல் படத்துக்கு 3 என்று வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா.

இந்தப் படம் குறித்து அறிமுகம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்தனர் ஐஸ்வர்யாவும் தனுஷும். நாயகி அமலா பாலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

இந்த சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு ஐஸ்வர்யா மற்றும் தனுஷும் அளித்த பதில்களும்:

கேள்வி: எந்த நம்பிக்கையில்ஒரு இயக்குநராக களமிறங்குகிறீர்கள்?

ஐஸ்வர்யா: என் கதையைக் கேட்ட அப்பா, அந்தப் படத்தை தானே தயாரிக்க விரும்புவதாகக் கூறினார். அந்த அளவு அவருக்கு நம்பிக்கை தந்த ஸ்கிரிப்ட் இது. இப்போது என் மாமனார் தயாரிக்கிறார்.

கேள்வி: உங்கள் மனைவி ஐஸ்வர்யா ஒரு இயக்குநராக உங்களை விரட்டி வேலை வாங்குகிறாரா, அன்பாக வேலை வாங்குகிறாரா?

தனுஷ்: விரட்டியும் வேலை வாங்குகிறார். அன்பாகவும் வேலை வாங்குகிறார். நான் மற்ற இயக்குநர்களின் படங்களில் எப்படி வேலை செய்கிறேனோ, அப்படித்தான் இந்தப் படத்திலும் வேலை செய்கிறேன்.

கேள்வி: உங்களுக்கு தனுஷ் உதவியாக இருக்கிறாரா?

ஐஸ்வர்யா: படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிகர். நான் இயக்குநர். என் வேலையில் அவர் தலையிடுவதில்லை. வீட்டில் எனக்கு உதவியாக இருக்கிறார். குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார்.

கேள்வி: இந்த படத்தின் கதை தனுஷுக்காக எழுதப்பட்டதா?

ஐஸ்வர்யா: எங்க வீட்டில் இரண்டு நடிகர்கள் இருக்கிறார்கள். கதை எழுதும்போது இரண்டு பேருமே நினைவுக்கு வருவார்கள். இந்த கதையை பொறுத்தவரை தனுஷை மனதில் வைத்து எழுதப்பட்டதுதான்.

ரஜினி நடிப்பாரா?

கேள்வி: இந்த படத்தில் தனுஷூடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறதா?

ஐஸ்வர்யா: இல்லை. அப்பாவிடம் நான் இதுபற்றி பேசவே இல்லை.

கேள்வி: அமலா பால்தான் ஹீரோயின் என்பதை நீங்கள் முடிவு செய்தீர்களா? தனுஷா?

ஐஸ்வர்யா: நான்தான் ('சொன்னா நம்புங்க... நான் இதிலெல்லாம் தலையிடுவதில்லை' என்கிறார் தனுஷ்!).

கேள்வி: படத்தை இயக்குவது சிரமமாக இருக்கிறதா, சுலபமாக இருக்கிறதா?

ஐஸ்வர்யா: படம் இயக்குவது சுலபம் இல்லை. நிறைய பொறுப்புகளை தோளில் சுமக்க வேண்டியிருக்கிறது.

செல்வராகவன்தான் குரு:

கேள்வி: படம் இயக்குவதைப் பொறுத்தவரை உங்களுக்கு குரு யார்?

பதில்: செல்வராகவனிடம் இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்தேன். நிறைய விஷயங்களை அவர் எனக்கு கற்றுத் தந்தார். அந்த வகையில் செல்வராகவன்தான் என் குரு.

கேள்வி (தனுஷிடம்): சமீபத்தில் விரதம் இருந்து சபரிமலை சென்றீர்களே... என்ன வேண்டுதல்?

தனுஷ்: வேண்டுதலை வெளியில் சொல்லக்கூடாது.

கேள்வி: நீங்கள் படம் இயக்குவதாக கூறி வந்தீர்கள். இப்போது உங்கள் மனைவி ஆகிவிட்டார். உங்கள் ஆசையை உங்கள் மனைவி மூலம் நிறைவேற்றிக் கொள்கிறீர்களா?

தனுஷ்: எனக்கு முன்பே இயக்குநராகும் திட்டத்தோடு இருந்தவர் ஐஸ்வர்யா. அவர் இயக்குநரானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் இயக்குநராவது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை.

-இவ்வாறு இருவரும் பதிலளித்தனர்.

ஏற்காடு மலைக் கிராமத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன்! பெயரில் சாப்பாட்டுக் கடை (படங்கள் இணைப்பு)


இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் பெயரில் சாப்பாட்டுக் கடை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகின்றது.


தம்பி பிரபாகரன் உணவகம் என்பது இதன் பெயர்.

புலிகள் இயக்க சீருடையில் பிரபாகரன் கடையின் பெயர்ப் பலகையில் தோன்றுகின்றார்.

உறுமும் புலிச் சின்னமும் அருகில் காட்சி கொடுக்கின்றது.

அச்சத்தின் மத்தியில் சிங்களவர்கள் சென்னையில் இருந்து திரும்பினர் ! (வீடியோ இணைப்பு)

சென்னையில் சிங்கள யாத்திரிகர்கள் சிலர் தாக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கான பாதுகாப்பை, இலங்கை துணைத்தூதரம் மேற்கொண்டது. இந்திய மத்திய அரசு இது குறித்து கவலை தெரிவித்ததோடு தமிழ் நாட்டு அரசு இது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்றும் அது அறிவித்தது.


ஆனால் செல்வி ஜெயலலிதா இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை(அம்மாவிற்கு  நன்றி). சிங்கள  யாத்திரிகள் மீது இனந்தெரியாத குழுவொன்றினால் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அனுமதிக்க முடியாதென இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகிறது. உடல் ரீதியாக தாக்கப்பட்டும் தகாத வார்த்தைப் பிரயோகத்தால் புண்படுத்தப்பட்டதுமான இச் சம்பவம் துரதிர்ஷ்டவசமான ஒன்றென இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஸ் கூறியுள்ளார்.

இதனிடையே சென்னைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தச் சிங்களவர்கள் அனைவரும் இலங்கைக்குத் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பாதுகாப்பாக இலங்கை செல்ல தூதுவராலயம் உதவிகளைச் செய்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. இந்திய கடல் எல்லைக்குள் நின்று மீன் பிடிக்கும் தமிழ மீனவர்கள் பலரை இலங்கை இராணுவம் சுட்டுப்படுகொலைசெய்தது, அடித்து துன்புறுத்துத் துன்புறுத்தியது. இதன்போது வாய் திறக்காத இந்திய அரசு, சிங்களவர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது அதிர்ச்சி தருவதாக தமிழக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன