Tuesday, 18 October 2011

தங்கக்கட்டி கொடுக்கும் இயந்திரம்(வீடியோ இணைப்பு)


நாமெல்லாம் தங்கக் கட்டிகளை வங்கிகளிலும், பெரிய நிறுவனங்களிலும் தான் வாங்க முடியும். இந்த நிலையை மாற்றி சீனாவில் தங்கக் கட்டிகளை விற்பனை செய்வதற்கு என தனி இயந்திரங்களை அமைத்துள்ளனர்.





குளிர்பானங்களை விநியோகிக்கும் எந்திரங்கள் போலவே பல இடங்களில் தங்கக் கட்டிகளை விற்பனை செய்யும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாம். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் இந்த இயந்திரத்தின் மூலம் தங்கக் கட்டிகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.



ஆனால் குளிர்பான எந்திரங்கள் போல் இல்லாமல் இந்த தங்க இயந்திரங்களை பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்திய காவலர்களும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளனராம்.

வித்தியாசமான முறையில் தனது வேலையை செய்யும் மனிதர்கள்(வீடியோ இணைப்பு)


நம் அன்றாட வாழ்க்கையில் உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் நாள் முழுவதும் உற்சாகத்தோடு வேலை செய்ய வேண்டும் என்று எல்லோரும் டீ மற்றும் காபி போன்றவற்றை பருகுவார்கள்.





சில கடைகள் மற்றும் ஹோட்டல்களில் விதயாசமான முறையில் டீ கொடுத்து அசத்துகின்றார்கள். கையில் இரண்டு டி கப்களை எடுத்து சென்றாலே சிலர்க்கு கை இரண்டும் தானாகவே ஆடும் நபர்களின் மத்தியில் இந்த நபரை பாருங்கள் கையில் பதினைந்து டீ கப்களை வைத்து அதில் டீயை கொண்டு வந்து கொடுகின்றார்.





இன்னொருவர் வித்தியாசமாக நடனம் ஆடிக்கொண்டே டீ தயாரித்து பார்ப்பவர்களை அசத்துகின்றார். இந்த இரண்டு பேரையும் இந்த காணொளியில் நாம் காண்போம்.



கட்டடங்களுக்கு மேல் தாவித் திரியும் மனிதக் குரங்குகள்! (வீடியோ இணைப்பு)


குரங்கினத்தில் இருந்துதான் மனிதன் உருவாகினான் என நம்பப்பட்டு வருகின்றது. அந்த நம்பிக்கையை வீண்போகாமல் காப்பாற்றும் முயற்சியில்தான் இந்த மனிதர்கள் இறங்கியுள்ளனர்.

அதாவது கட்டங்களுக்கு மேல் தாவித் திரிந்து தாங்கள் குரங்கில் இருந்துதான் வந்தோம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இருந்தாலும் இவ்வாறான சாகசங்களைப் போற்றாமலும் இருக்க முடியாது.

ஏன் தெரியுமா? எங்களால் இதனைச் செய்ய முடியாதல்லவா...?

300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் ரைவர்! (வீடியோ இணைப்பு)


 
போயிங் விமானம் ஒன்று தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதனை அடுத்து அதனைத் தரையிறக்க டிரக் சாரதி உதவியுள்ளமை உலகில் பலரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.




விமானம் விமான நிலையத்தை அடையும் போதுதான் அதன் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வராமல் போனதை விமானி அறிந்துள்ளார்.

அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் விமானத்தின் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வரவில்லை. இந் நிலையில் விமானத்தை தரையிறக்கினால் அது விபத்துக்கு உள்ளாகி பாதையை விட்டு விலகி வெடிக்கலாம் என்ற நிலை தோன்றியது.

ஆனால் தொடர்ந்து பறக்க எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகளும் இருந்தது. ஆனால் எரிபொருள் மீதியாக அதிகம் இருந்தால் அது விமானம் தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளானால் எரிவதற்கு பெரிதும் உதவும்.

இதனால் எரிபொருள் காலியாகும் வரை வானில் சுற்றியது விமானம். இதற்கிடையில் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஒரு திட்டத்தைப் போட்டது. அதுதான் இறுதியில் கைகொடுத்துள்ளது.

அதாவது விமானம் தரையிறங்கும்போது அதன் முன் சக்கரங்கள் தரையில் முட்டாதவண்ணம் அதனை தாங்கிப் பிடிக்க ஒரு டிரக் வண்டியை அவர்கள் பாவிக்க திட்டம் தீட்டினர்.

ஆனால் அந்த டிரக் வண்டியை ஓட்டுபவர் சற்றும் பிசகாமல் அதனைச் செய்ய வேண்டும். சற்று ஆட்டம் கண்டாலும் விமானம் பாதை மாற வாய்ப்புகள் உண்டு.

அத்தோடு விமானம் தரையிறங்கும்போது அது என்ன வேகத்தில் செல்கிறதோ அதே வேகத்தில் அவர் தனது வாகனத்தைச் செலுத்தவேண்டும்.

நிசான் டிரக் வாகனம் ஒன்றைப் பாவித்தே இவர் இந்த விமானத்தை பேராபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார். எல்லோரும் இவரை ஒரு ஹீரோ என்று பாராட்டினார்கள்.

பல ஊடகங்கள் அவரிடம் பேட்டி எடுக்க வரிசை கட்டி நின்றது. ஆனால் அவர் எதற்கும் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டாராம்.தன்னை ஒரு ஹீரோ நான் நினைக்கவில்லை என்று கூறிய அவர் இது தனது கடமை என்று சொல்லியுள்ளார்.

பிறர் செய்யும் காரியங்களையே தாம் செய்வதாகச் சொல்லித் திரியும் மனிதர்கள் மற்றும் TV வானொலிகளில் பேச அலைந்து திரியும் மனிதர்களுக்கு மத்தியில் இவர் சற்று வித்தியாசமானவர். உண்மையானவர்.

உடலைக் கிழித்தும் உயிர்போகாத பெண்(வீடியோ இணைப்பு)


சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கட்டிப்போடும் வித்தைகளில் ஒன்று தான் மாயாஜாலம். இல்லாததை இருப்பது போலவும் இருப்பதை இல்லாதது போலவும் மாற்றும் சக்தி உள்ள கலை இது.





அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த இளம் மாயாஜால வித்தைக்காரர் ஒருவர். பெண் ஒருவரின் உடலினை கிளித்துக் கொண்டு நடந்து செல்கின்றார். அவரை தொடர்ந்து இன்னும் இருவர் செல்கின்றனர். ஆனால் குறித்த பெண்னிற்கு எதுவுமே ஆகவில்லை. இது எப்படி சாத்தியம் என்று நினைக்காமல் இந்த காணொளியை காண்போம்.

பிரபுதேவா உடன் சண்டை ஏதும் இல்லை: நயன்தாரா(படங்கள் இணைப்பு)


எனக்கும் பிரபுதேவாவுக்கும் சண்டை ஏதுமில்லை இருவரும் சந்தோஷமாகதான் இருக்கிறோம் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
நயன்தாரா மீது கொண்ட காதலால் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. விரைவில் இருவருக்கும் திருமணம் என்று கூறப்படடது.



தற்போது இருவருக்கும் சண்டை எனவும், திருமணம் நின்றுவிட்டதாகவும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னணிப் பத்திரிகைகளும் இதுகுறித்து விசாரித்து இருவரின் சண்டை உண்மைதான் என்று செய்திகள் வெளியிட்டன.

தற்போது இச்செய்திக்கு விளக்கம் அளித்துள்ள நடிகை நயன்தாரா எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை, நாங்கள் சந்தோஷமாக ஒற்றுமையாக உள்ளோம்.

இந்த செய்தியை பத்திரிகைகளில் படித்துவிட்டு நாங்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தோம் என்பது உண்மை. திருமணத் திகதியை விரைவில் அறிவிப்போம் என்றார்.

எங்களின் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றது என்றும், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் நடக்கும் எனவும் நயன்தாரா விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா! (படங்கள் இணைப்பு)


 
அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் கொண்டாடப்பட்ட வருடாந்த களிமண் திருவிழாவையே நீங்கள் பார்க்கின்றீர்கள்.

அங்குள்ள மிகப்பெரிய ஏரி ஒன்றில் சிறுவர்கள், வயது வந்தவர்கள் என பாகுபாடு பாராது எல்லோரும் தங்கள் உடலில் களிமண்ணை வாரி இறைத்தும் களிமண்ணில் உருண்டு பிரண்டும் திருவிழாவை சந்தோசமாக கொண்டாடினார்கள்.

குறித்த திருவிழாவுக்காக களிமண்ணுடன் 20000 கலன் தண்ணீர் இறைக்கப்பட்டதாம்.

அமெரிக்கர்களின் ஆசையைப் பார்த்தீர்களா?









தள்ளாத வயதிலும் மரதன் ஓடிச் சாதித்த சாதனைத் தாத்தா! (வீடியோ இணைப்பு)


உலகின் பழமையான மரதன் ஓட்ட வீரர் என்ற பெருமை பிரித்தானியர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

1911 ஆம் ஆண்டு பிறந்த 100 வயதான Fauja Singh என்பவரே மேற்படி பெருமையைப் பெற்றுள்ளார்.

எப்போதும் சந்தோசமாக இருப்பது தான் தனது வெற்றிக்கு காரணம் எனக் கூறினார் Fauja Singh.

தள்ளாத வயதிலும் எந்நேரமும் சுறுசுறுப்பாக காணப்படுகிறார் இந்தத் தாத்தா...




இவரை உண்மையிலேயே பாராட்டித் தான் ஆக வேண்டும்...

கிழக்கு லண்டனின் Ilford எனும் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் 100 ஆவது வயதிலும் மரதன் ஓட்டம் ஓடி நிறைவு செய்ததற்காக அவரை உலகின் பழமையான மரதன் ஓட்ட வீரர் எனக் கூறி கின்னஸ் சாதனைப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

பார்த்தீர்களா தாத்தாவின் திறமையை?