Sunday, 23 October 2011

பரமக்குடி தாக்குதல் (வீடியோ இணைப்பு)

கீழ்காணும் வீடியோ, எடிட் செய்யப் படாத அசல் வீடியோ.   பரமக்குடி பற்றிய முந்தைய பதிவில், பதிப்பிக்கப் பட்ட புகைப்படங்கள் எடிட் செய்யப் பட்டுள்ளன என்று சில குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டதால், அந்த வீடியோ அப்படியே பதிவேற்றப் பட்டுளள்து.


இறந்தும் பிரியாத காதலர்கள்(படங்கள் இணைப்பு)


சுமார் 1500ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததாகக் கருதப்படும் இரு காதலர்களின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக் கூடுகளை இத்தாலிய மாளிகையில் உள்ள புதைகுளியில் இருந்து வேலையாட்கள் கண்டெடுத்தனர்.



இவர்கள் மரணிக்கும் கடைசித்தருவாயில் தங்களது கைகளை பிடித்தவ வண்ணம் இருந்துள்ளனர். அவர்கள் இறந்த அதேநிலையில் புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

இத்தாலியின் மொடெனா மாளிகையின் சுவர் அருகில் உரோம சாம்ராஜ்யத்தில் இறுதிக் காலப்பகுதியில் அரச குடும்பத்தினர் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இந்த காதலர்களது எலும்புக் கூடு தற்போது ஒரே பக்கத்தை பார்ப்பதாக உள்ளது.

அது அவ்வாறு இல்லை எனவும் பெண் தனது காதலனை அன்போடு பார்த்த வண்ணம் இருந்திருக்க வேண்டும் அல்லது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருந்திருக்க வேண்டும் என ஆய்வாரலர்கள் தெரிவிக்கின்றனர்.

காலப்போக்கில் உடல் சிதைவடையும் போது ஆணின் முதுகெழும்பு சிதைவடைந்ததால் தலைஓடு திரும்பி இருக்கலாம் என கருதப்படுகிறது. கி.பி 500ம் ஆண்டில் இச்சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என புதைபொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உயிரையே அதிர வைக்கும் நடனம்(வீடியோ இணைப்பு)


பொதுவாக நடனத்தை நாம் ரசிப்போம் ஆனால் இந்த நடனத்தை பார்த்தல் நாம் மிகவும் அலற வேண்டியதாக இருகின்றது. இன்றைய இளைஞர் மத்தியில் உயிர் எனபது ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை என்பதற்கு இந்த காணொளி தான் ஒரு சாட்சி.





ஒரு தனியார் தொலை காட்சியில் நடத்தப்பட்ட நடனப் போட்டியில் இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த கலைகர்கள் எப்படி தங்கள் உயிரையே பணயம் வைத்து நடுவர்கள் முதல் பார்ப்பவர் அனைவரயும் அலற வைகிறார்கள். தலை மீதும் உடம்பு மீதும் வாகனங்களை ஏற்றுவதும் சுத்தியல் கொண்டு தன்னுடைய மார்பில் அடித்துக் கொள்வதும் கண்ணாடியில் விழுவதும் முள் படுக்கையில் அடுக்கடுக்காக படுப்பதும் என்று பார்க்கவே ஏதோ ஒரு த்ரில்லர் படத்தை பார்த்து போல் இருகின்றது


இதை பார்த்து இவர்களின் அறியாமையை தெரிந்து கொள்ளுங்கள் ஆனால் இதை தாங்கள் செய்து பார்க்க ஆசை கொள்ள வேண்டாம் நடனத்தை மட்டும் ரசிப்பதை விட்டுவிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக செய்த நடன காணொலியைப் பார்ப்போம்.

லியனோ டாவின்ஸியின் ஓவியம் ஏலத்தில் விற்பனை(படங்கள் இணைப்பு)


உலகப் பிரசித்தி பெற்ற ஓவியர் லியனோ டாவின்ஸியின் 500 வருடங்கள் பழமையான ஓவியம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. டாவின்ஸியி நலன் விரும்பியாக இருந்த பிரபு ஒருவரின் மகளின் திருமண வைபவத்தின் போது இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.



இவ்ஓவியத்தில் உள்ள முகத்தின் இடதுபக்க உருவம் இதில் பிரதிபலிக்கிறது. இந்த ஓவியம் ஏல விற்பனையில் 21,850 ஸ்டேர்லிங் பவுணுக்கு விலை போனது. விலை மதிக்க முடியாத இந்த ஓவியம் 1998ம் ஆண்டு நிவ்யோர்க் ஏலம் ஒன்றில் 14,000 பவுண்களுக்கு மாத்திரம் விலை போயிருந்தது.



குறித்த ஓவியம் 150 வருடங்கள் பழைமை வாய்ந்ததாகவே முன்னர் கருதப்பட்டது. எனினும் இது 500 வருடங்கள் பழைமை வாய்ந்த ஓவியம் என தற்போது தெரிய வந்துள்ளது.

அந்த திருமணம் நடைபெற்ற 1496ம் ஆண்டு, வைபவத்தை சித்தரிக்கும் அல்பத்திலிருந்து இவ் ஓவியம் களவாக கிழித்து எடுக்கப்பட்டிருக்க வேண்டுனெக் கருதப்படுகிறது.

இந்த ஓவியத்தில் லியானோ டாவின்ஸயின் விரல் அடையாளங்கள் இருப்பது இவ் ஓவியத்தின் மதிப்பை மேலும் உயர்த்துகிறது. இத்தகைய நிலையில் இந்த ஓவியம் டாவின்ஸியின் கைவண்ணத்தில் தான் வரையப்பட்டது என்பதை ஆய்வாரள்கள் உறுதி செய்துள்ளனர்

சிறிலங்காவின் புதிய நுழைவுவிசா நடைமுறையால் இந்தியா அதிருப்தி


சிறிலங்காவின் புதிய நுழைவுவிசா நடைமுறை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நுழைவிசைவு பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 50 டொலர் கட்டணத்தைக் குறைக்குமாறும் சிறிலங்காவிடம் இந்தியா கோரியுள்ளது.

இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் இது தொடர்பாக சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பணிப்பாளர் சூலானந்த பெரேராவை கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன்போது, இந்தியக் குடிமக்கள் சிறிலங்கா நுழைவிசைவைப் பெறுவதற்கு 50 டொலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிகமானது என்றும் இந்தக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் இந்திய தூதுரக அதிகாரி தம்மிடம் கேட்டுக் கொண்டதாக சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசின் பதிலை அவர் கோரியதாகவும், ஆனால இது அரசாங்கத்தின் கொள்கை சார்ந்த விடயம் என்பதால் தமது திணைக்களம் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும், ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்கலாம் என்று நம்புவதாகவும் சூலானந்த பேரேரா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா குடிமக்கள் இந்திய நுழைவுவிசா பெறுவதற்கு 650 ரூபா கட்டணத்தை மட்டுமே செலுத்தி வரும் நிலையில், சிறிலங்கா 50 டொலர் கட்டணமாக அறவிட முடிவு செய்துள்ளது இந்தியாவைக் கடும் அதிருப்தி கொள்ள வைத்துள்ளது.

சார்க் நாடுகளுக்கு இடையில் உறவுகளையும் தொடர்புகளையும் அதிகரித்துக் கொள்வதற்கு நுழைவுவிசா நடைமுறைகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா இறுக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடாஃபி உடலை ரகசியமாகப் புதைக்கத் திட்டம்?


லிபியாவின் மிஸ்ரதா நகரில் உள்ள பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் மம்மர் கடாஃபியின் உடல். )


லிபியாவில் புரட்சிப் படையினரால் வியாழக்கிழமை கொல்லப்பட்ட அந்நாட்டின் முன்னாள் அதிபர் மம்மர் கடாஃபியின் உடலை ரகசியமாகப் புதைக்க இடைக்கால அரசு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எங்கே எவ்வாறு அவரது உடலைப் புதைப்பது என்பது குறித்து லிபிய அதிகாரிகள் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை என பிபிசி கூறுகிறது.

அதேநேரத்தில் ஒசாமா பின் லேடனை புதைத்தது போல் கடாஃபியின் உடலை கடலில் புதைப்பது குறித்தும் அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர். எதிர்காலத்தில் கடாஃபியின் கல்லறை புனிதச் சின்னமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

சிர்டே நகரில் அவர் பிடிபட்டதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது பற்றி நிறைய கேள்விகள் எழுந்துள்ளன. அவரது உடல் இப்போது மிஸ்ரடா நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுவதை அதிகாரிகள் மறுத்தனர். அவர் பிடிபட்டபோது அவரது விசுவாசிகளின் படைக்கும் புரட்சிப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது அவரது தலையில் குண்டு பாய்ந்தது என்று ஜிப்ரில் எனும் அதிகாரி கூறினார். தெரு வழியாக கடாஃபி இழுத்துச் செல்லப்படுவதை விடியோ பதிவுகள் காட்டுகின்றன.

பிபிசியிடம் பேசிய புரட்சிப்படை வீரர் ஒருவர், பாதாள சாக்கடை குழாய்க்குள் கடாஃபி பதுங்கி உட்கார்ந்திருந்ததாகவும் தன்னை சுட்டு விட வேண்டாமென கெஞ்சியதாகவும் கூறினார். கடாஃபியிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத் துப்பாக்கியையும் அவர் காட்டினார்.

'கடாஃபி வேண்டுமென்றே கொல்லப்பட்டிருந்தாலும் அதற்கு அவர் பொருத்தமானவரே. அவரை ஆயிரம் முறை கொன்றால் கூட, அது லிபியாவுக்கு அவர் செய்திருக்கும் கொடுமைகளுக்கு ஈடாகாது. அவரால் 70 ஆயிரம் பேரை நாங்கள் இழந்திருக்கிறோம்' என்று இடைக்கால அரசின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறினார்.

இன்னும் சில மணி நேரங்களில் தங்களது லிபியப் பணி முடிவடைந்து விட்டதாக நேச நாடுகளின் படை (நேட்டோ) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ், அமெரிக்கா கருத்து: கடாஃபி இறந்துவிட்டார் என்றால், லிபியாவில் நேட்டோவின் ராணுவத் தலையீடு முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருள் என பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சார்கோஸி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாஃபியின் மரணம் லிபிய மக்களுக்கான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றார்.

கடாஃபி கொல்லப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த வெனிசூலா அதிபர் ஹுயூகோ சாவெஸ், இந்தச் சம்பவம் கண்டிக்கத்தக்கது. அவரை வேண்டுமென்றே கொன்றுவிட்டார்கள் என்றார்.

சிறிலங்காவில் சீனாவின் தலையீட்டை முறியடிக்க அமெரிக்கா வகுத்துள்ள திட்டம்


சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளது குறித்தும், சிறிலங்காவுடன் கொண்டுள்ள இராணுவ ரீதியான உறவுகள் குறித்தும் அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜக் கிங்ஸ்ரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், தனது பயணத்தின் முடிவில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

"முன்னர் சிறிலங்காவுடன் அமெரிக்கா நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தது.

சீனாவுடன் இராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை சிறிலங்கா அதிகரித்துக் கொண்டதால், இந்த உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்திருப்பது அதிகம் கவலையடைய வைத்துள்ளது.

சிறிலங்காவுடன் வர்த்தக, இராணுவ, அரசியல் ரீதியான உறவுகளை பலப்படுத்திக் கொள்வதன் மூலமே, சீனாவின் தலையீட்டை முறியடிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

புவியியல் ரீதியாக சிறிலங்காவின் அமைவிடம் முக்கியமானது. எனவே அமெரிக்கா அதன் மீதான தனது கவனத்தை நிச்சயமாக இழக்கவில்லை" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் எண்ணெய் வளமா? அப்ப அமெரிக்காட்ட அடி வாங்கத்தான் வேணும்?


சர்வதேசத்தில் வல்லரசாக இருக்கும் அமெரிக்காவின் நீண்ட நாள் கனவுகள் ஏராளம். அதில் ஒன்று எண்ணெய் வளம் கொண்ட நாடுகளை வளைச்சுப் போடுவது.

அத்தோடு சர்வதேசத்தைத் தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நினைப்பும் ஒரு பக்கத்தில் அமெரிக்காவுக்கு இருக்கத்தான் செய்கின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் மீது ஒரு வகைப் பார்வையைச் செலுத்தி வரும் அமெரிக்கா, அதனைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வர பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களைப் பறிகொடுக்க, பலியெடுக்கத் தயங்குவதில்லை.

அந்த வகையில்தான் ஈராக் மீதான தாக்குதலும், சதாம் உஷைனுக்கான மரண தண்டனையும் அரங்கேற்றப்பட்டது.

இந்த வரிசையில்தான் தற்போது கிளர்ச்சிப் படைகளின் உதவியுடன் லிபியாவில் கால் பதித்த அமெரிக்கா, நேற்று முன்தினம் அந் நாட்டைப் பல ஆண்டுகளாகத் தனது சர்வாதிகாரத்தின் கீழ் வைத்திருந்த கடாபியையும் போட்டுத் தள்ளியுள்ளது.

எனவே அமெரிக்காவின் எண்ணெய் வளத்தைச் சுரண்டும் கபட நாடகத்தின் பல வழிகள் வெற்றி பெற்று வருகின்றது.

அதாவது வன்னிப் பெருநிலப்பில் இலட்சக் கணக்கான மனித உயிர்கள் காப்பாற்றுமாறு கதறும் போது கண்டுகொள்ளாத அமெரிக்கா, லிபியாவின் மீது தாக்குதல் நடத்திக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கியமைக்கான உள்நோக்கம் என்ன?

ஆகவே எண்ணெய் வளம் கொண்ட நாடுகளைச் சூறையாடும் வேட்டையில் இறங்கியுள்ள அமெரிக்காவுக்குத் தற்போது எங்கள் நாட்டு ஜனாதிபதி மன்னாரில் எண்ணெய் வளம் இருக்கிறது என்று கிடங்கு வெட்டிக் காட்டி விட்டார்.

எனவே இலங்கையில் இனியொரு போராட்டமோ, இனப்படுகொலைகளோ அல்லது போர்க் குற்ற விசாரணைகள் என்ற கோணத்திலோ நிச்சயம் அமெரிக்கா, இலங்கை மீது படையெடுக்கும் என்பது நிறுத்திட்ட உண்மை.

அதிலும் கடாபி மீது போர் தொடுத்தவேளையில் கடாபி கலங்காதே என உசுப்பேத்தியவர் இலங்கை ஜனாதிபதி மகிந்த. எனவே இது எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு நாள் இலங்கை வேண்டிக்கட்டுவது உறுதி.

எது எவ்வாறாயினும் எமது இனத்தை அழித்தவர்கள் அழிவதில் சந்தோசப்படாது விடினும், தடுக்கும் நினைப்பில் தமிழர்கள் இல்லை.

கடாபியின் கடைசி நிமிடங்கள் (வீடியோ இணைப்பு)


லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிபர் கடாபிக்கு எதிரான புரட்சிப்படை லிபியாவின் தலைநகர் திரிபோலியை கைப்பற்றியதும் அவர் ரகசியமாக தன் சொந்த ஊரான சிர்ட்டேக்கு ஓடி வந்து விட்டார்.

அங்கு அவர் பதுங்கி இருந்தார். அவரது ஆதரவு ராணுவம் அந்த ஊரில் அவருக்கு பாதுகாப்பாக இருந்தது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை கடாபி தன் ஆதரவு ராணுவ வீரர்கள் சூழ சிர்ட்டே நகரை விட்டு வெளியேறினார்.

அவருடன் ராணுவ தளபதி அபு பக்கீர் யூனிஸ் ஜபீர் உடன் இருந்தார். அவர்கள் மேற்கு திசை நோக்கி புறப்பட்டனர். கடாபியும் வீரர்களும் வாகனங்களில் பயணம் செய்தபோது பிரான்சு நாட்டு போர் விமானங்கள் கடாபி ஆதரவு படையின் வாகனங்கள் மீது குண்டு வீசி தாக்கின.

இதில் கடாபி காயம் அடைந்தாரா என்பது தெரியவில்லை. சிர்ட்டேக்கு மேற்கு திசையில் 2 கி.மீ. தொலைவில் 15 ராணுவ வாகனங்கள் கருகி கிடந்தன.

இந்த வாகனங்கள் விமானத்தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த தாக்குதலில் இருந்து தப்பிய கடாபியும், சில ராணுவ வீரர்களும் தெருக்களில் ஓடினார்கள்.

கடாபி பிரதான சாலைக்கு வந்ததும் சில வீரர்களுடன் அங்கு இருந்த சாக்கடை குழாய்க்குள் இறங்கி பதுங்கிக் கொண்டனர். அப்போது சாலையில் நின்று இருந்த புரட்சிப்படை வீரர்கள் அவர்களை பார்த்து விட்டனர்.

இந்த வீரர்களில் ஒருவரான பக்கீர் அப்போது நடந்த சம்பவத்தை பற்றி கூறியதாவது:

கடாபியும் அவரது பாதுகாவலர்களும் சாக்கடை குழாயில் பதுங்கி இருந்ததைப் பார்த்ததும் நாங்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டோம். இதில் யாரும் காயம் அடையவில்லை.

இதனால் நாங்கள் அவர்களை நோக்கி நடக்க தொடங்கினோம். அப்போது எங்களை நோக்கி கடாபி ஆதரவாளர் ஒருவர் தன் கையில் இருந்த துப்பாக்கியை அசைத்தபடி வந்தார்.

அவர் சரண் அடைவதாக கூச்சல் போட்டார். அவர் என் முகத்தை பார்த்ததும் என்னை நோக்கி சுட தொடங்கினார். சுடவேண்டாம் என்று கடாபி அவரை தடுத்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அவர் என்னிடம் கடாபி இங்கே தான் இருக்கிறார். அவர் காயம் அடைந்து இருக்கிறார் என்று சத்தம் போட்டு கூறினார். நாங்கள் அவருடன் சென்று சாக்கடை குழாய்க்குள் இருந்த கடாபியை வெளியே கொண்டு வந்தோம்.

அப்போது அவர் கால்களில் குண்டு காயங்கள் இருந்தன. அவரை நாங்கள் காரில் ஏற்றினோம். இவ்வாறு பக்கீர் கூறினார். கடாபியை அவரது ஆதரவு படை வீரர்களே சுட்டுக்கொன்று விட்டனர் என்று அவர் கூறினார்.

ஆனால் காரில் கடாபியுடன் நகரின் முக்கிய பகுதிக்கு சென்றபோது மேலும் அதிகமான புரட்சிப்படை வீரர்கள் அங்கு வந்து விட்டார்கள்.

அவர்கள் கடாபியை காரில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு அடித்து உதைத்தனர். இப்படி அடித்து உதைத்ததில் தான் அவர் இறந்து போனார். இறந்து போன அவரது உடலை புரட்சிப்படை வீரர்கள் தெருவில் இழுத்துச் சென்றனர்.

கடாபியை பிடித்தபோது அவர் தங்கத்துப்பாக்கியை வைத்து இருந்தார் என்றும் அதை தாம் பார்த்தாகாவும் ஒரு புரட்சிப்படை வீரர் கூறினார்.

கடாபி மரணத்தை பற்றி முதன்முதலாக அறிந்த போது ஹிலாரியின் பிரதிபலிப்பு (வீடியோ இணைப்பு)


 
லிபிய தலைவர் கேணல் மும்மர் கடாபி பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட முதல் செய்தியை "பிளக்பெறி' கையடக்க தொலைபேசியின் மூலம் அவதானித்த ஹிலாரி அதிர்ச்சியை முகத்தில் வெளிப்படையாக காண்பித்துள்ளார்.

கடாபி கொல்லப்பட்ட செய்தி வெளியான போது ஹிலாரி ஆப்கான் தலைநகர் காபூலில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்தார்.

இதன் போது அவரது உதவியாளரான ஹூமா அபெடின் "பிளக்பெறி' தொலைபேசியை ஹிலாரியிடம் கையளித்து அதில் வெளியாகியிருந்த கடாபி கொல்லப்பட்ட செய்தியை அவருக்கு காண்பித்துள்ளார்.

"வாவ்' என தன்னை மறந்து அதிர்ச்சியில் கூவிய ஹிலாரி கிளின்டன் உறுதிப்படுத்தப்படாத செய்திகளின் பிரகாரம் கடாபி பிடிக்கப்பட்டு விட்டார் என அச் செய்தியை சத்தமாக வாசித்துள்ளார்.

மகன் சாப்பாடு போடவில்லை: நடிகர் லூஸ்மோகன் கமிஷனரிடம் புகார்


சாப்பாடு போட மகன் மறுக்கிறார் என நடிகர் லூஸ்மோகன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். லூஸ்மோகன் மயிலாப்பூரில் வசித்து வருகிறார்.

போலீஸ் நிலையத்துக்கு ஆட்டோவில் வந்த அவர் போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் எனது மகன் கார்த்திக் மனைவியுடன் சேர்ந்துகொண்டு சாப்பாடு போட மறுக்கிறார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் வேறு எதுவும் கேட்க வில்லை. மூன்றுவேளை சாப்பாடு கொடுத்தால் போதும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. புகார் அளித்துவிட்டு வெளியேவந்து செய்தியாளர்களிடம் லூஸ்மோகன் கூறியதாவது:

சினிமாவில் பலரை சிரிக்க வைத்த எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நினைத்துக் கூட பார்க்க வில்லை. எனக்கு 3 மகள்களும் கார்த்திக் என்ற மகனும் உண்டு. மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகனுக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது. எனது மனைவி 2004-ம் ஆண்டு இறந்து விட்டார். மகனுடன் நான் தங்கி இருக்கிறேன். அவரை நான்தான் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டேன்.

கடந்த 3 நாட்களாக மனைவி பேச்சை கேட்டு அவர் வீட்டுக்கு வருவதில்லை. எனக்கு சாப்பாடு வாங்கி தருவது இல்லை. வயதாகி விட்டதால் காலையில் 2 இட்லியும் இரவு 2 இட்லியும் மட்டுமே சாப்பிடுகிறேன். அதைக் கூட தர மறுக்கிறார்.

எனக்கு சொந்தமாக வீடு உள்ளது. அதனால் தங்குவதற்கு பிரச்னை இல்லை. என் பையன் என்னை கவனித்து சாப்பாடு மட்டும் கொடுத்தால் போதும். இவ்வாறு லூஸ்மோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கமிஷனரிடம் இவர் அளித்த புகார் மயிலாப்பூர் போலீசாருக்கு அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சுட வேண்டாம் சுட வேண்டாம் கடாபியின் கடைசி வார்த்தை (படங்கள் இணைப்பு)


2011- 10- 20 லிபியர்களின் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். காரணம், அந்நாடு முழுமையாக சர்வாதிகாரியின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது.

காலை 8.30 - கடாபி மற்றும் அவரது சிறிய படையணியொன்றும் சிர்தே நகரைவிட்டுத் தப்பியோட முயற்சித்த போது அப் படையணி மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கடாபியின் முக்கிய ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

காலை 11.05 - லிபிய இடைக்கால அரசபடைகள் அந்நாட்டின் இறுதிப் பகுதியான சிர்தே நகரை முற்றிலுமாகக் கைப்பற்றியதுடன், மீதமிருக்கும் கடாபி ஆதரவாளர்களைத் தேடிக்கொண்டிருப்பதாக அறிவித்தனர். பகல் 2.00 - இதில் தப்பித்த கடாபி கொன்கிறீட் குழாய் ஒன்றினுள் நுழைந்து பதுங்கியுள்ளார்.

பின்னர் அவ்விடத்திற்கு வந்த இடைக்கால நிர்வாக அரச படையினர் அவரை அதற்குள் இருந்து இழுத்து வெளியே எடுத்துள்ளனர்.

அதன்போது அவரிடம் தங்கத் துப்பாக்கியொன்று இருந்துள்ளது.

தனது உயிருக்கு அஞ்சிய கடாபி தன்னைச் சுட வேண்டாம் எனக் கெஞ்சியுள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் கோபத்தில் அவரை மோசமாகத் தாக்கியுள்ளனர்.

இறுதியில் அவரது தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பகல் 2.30 - கடாபி கொல்லப்பட்டதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பகல் 2.45 - கடாபி கொல்லப்பட்டமையை கடாபி ஆதரவு ஊடகமொன்று மறுக்கின்றது.

பகல் 3.00 - லிபியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்குகின்றன. மக்கள் வெற்றியைக் கொண்டாடுகின்றனர்.

பகல் 3.44 - கடாபி கொல்லப்பட்ட காட்சி வெளியாகிறது.

பகல் 4.30 - கடாபி கொல்லப்பட்டுள்ளதாக லிபியாவின் இடைக்கால பிரதமர் மஹுமூட் ஜிப்ரில் தொலைக்காட்சியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றார்.

பகல் 4.31 - கடாபியின் மகன்முடாசிம் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இரவு 7.50 கடாபியின் மகன் சயிப் கொல்லப்பட்டுள்ளதாக அல்ஜெசீரா ஊடகம் செய்தி வெளியிட்டது

இவ்வாறு கடாபி மற்றும் அவரது எஞ்சிய படையணியின் ஓட்டம் முடிவுக்கு வந்தது.

எனினும் கடாபி கொல்லப்பட்ட விதம் தொடர்பில் பல சமூக ஆர்வலர்கள் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

மனிதாபிமானமற்ற முறையில் அவர் தனது இறுதித்தருணத்தில் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.













உலக செல்வந்த நாடுகள் பட்டியலில் முதலாம் இடத்தில் சுவிஸ்!


உலக செல்வந்த நாடு என்ற பெயரைக்கொண்ட நோர்வையை சுவிஸ் முந்திவிட்டதாக வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் செல்வந்த நாடு என்ற பட்டியலில் முதலாம் இடத்திற்கு சுவிஸ் வந்துள்ளது.

இரண்டாம் இடத்தில் நோர்வேயும், மூன்றாம் இடத்தில் ஒஸ்ரேலியாவும், நான்காம் இடத்தில் சிங்கப்பூரும் உள்ளன.

இந்த வருடத்தில் சுவிஸ் பிறாங்கின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாகவே சுவிஸ் செல்வந்தநாடுகள் பட்டியலில் முதலாம் இடத்திற்கு வந்துள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சராசரி சுவிஸ் பிரசை 207.393 ஆயிரம் யூரோ வைத்திருக்கிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த சம்பளம், சுவிஸ் பிறாங்கின் பெறுமதி அதிகரிப்பு ஆகியன தலா வருமான அதிகரிப்புக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கால்வாய் குழியிலிருந்து உயிருடன் பிடிக்கப்பட்ட கடாபி! (வீடியோ இணைப்பு)






லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் கேணல் கடாபி அவரின் சொந்த ஊரான சேர்ட்டேவில் நேற்று வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர் கால்வாய்க் குழியொன்றிலிருந்து தேசிய இடைக்கால கவுன்ஸில் படைகளினால் பிடிக்கப்பட்டதாகவும் தன்னை சுட வேண்டாம் என அவர் மன்றாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பினன்ர் அவர் தலையிலும் வயிற்றிலும் சுடப்பட்டு கொல்லப்பட்டார். கால்வாய்க் குழியொன்றிலிருந்து கேணல் கடாபி கிளர்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டபோது அவர் இராணுவ பாணி ஆடை அணிந்திருந்தார். பிக் வாகனமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட கேணல் கடாபி பின்னர் ஓரிடத்தில் வைத்து வாகனத்திலிருந்து இறக்கப்படும் காட்சிகளை லிபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

தன்னை சுட்டுவிட வேண்டாம் என கடாபி கோரியதாகவும் கிளர்ச்சிப் படை வீரர் ஒருவரிடம் ‘ நான் உங்களுக்கு என்ன செய்தேன்’ எனக் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அவரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் தலையிலும் வயிற்றிலும் சுடப்பட்டார். அவரின் சடலத்தை கிளரச்சிப்படையினர் இழுத்துச் செல்லும் காட்சியை அல் ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பின்னர் அவரின் சடலும் அம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றப்பட்டது.

1942.06.07 ஆம் திகதி பிறந்த முவம்மர் கடாபி 1969 ஆம் ஆண்டு தனது 27 ஆவது வயதில் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். . தனது 42 வருடகால ஆட்சிப்பிடியை நேட்டோ ஆதரவுடனான கிளர்ச்சிப்படையினரிடம் கடந்த ஓகஸ்ட் மாதம் அவர் இழந்தார். தனது 69 ஆவது வயதில் அவர் நேற்று வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க சொல்ஹெய்மிடம் சரணடைந்தது சிறிலங்கா


சிறிலங்காவின் தலைமையை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளை முறியடிக்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் நாடியுள்ளது.

சிறிலங்கா அரசை குறிவைத்து விடுதலைப் புலிகள் போர்க்குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் நிலையிலேயே, சிறிலங்கா அரசு இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் சிறப்பு தூதுவராக அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஒஸ்லோ சென்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மையும், நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜெனாஸ் கார்ஸ்ரோரையும் தனித்தனியாகச் சந்தித்து, இதுதொடர்பாகப் பேசியுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஜெனிவாவில் விடுதலைப் புலிகளுடன் நடத்திய இரண்டு சுற்றுப் பேச்சுக்களிலும் அரசதரப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவையே, நோர்வேயிடம் உதவி கோருவதற்கு சிறிலங்கா அதிபர் அனுப்பி வைத்துள்ளார்.

இவருடன் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவும் ஒஸ்லோ சென்றுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் பரப்புரைகளை முறியடிப்பதற்கு சிறிலங்கா அதிபர் இவர்களுக்கு முழுமையான அதிகாரங்களையும் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜுலை மாதம் ஒஸ்லோவில் தனிநபர் ஒருவர் நடத்திய தாக்குதல் ஒன்றில் சுமார் 80 பேர்வரை கொல்லப்பட்டதை அடுத்து- தீவிரவாதத்துக்கு எதிராக நோர்வே எடுத்துள்ள கடுமையான நிலைப்பாட்டை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிறிலங்கா அரசு போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க நோர்வேயைப் பயன்படுத்த முனைவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவின் முன்பாகவே விஜய் நம்பியாரைக் கடிந்து கொண்டார் பான் கீ மூன்


சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு அளித்த அறிக்கை, “சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் அறிக்கையே” என்று அதன் தலைவரான மர்சுகி தருஸ்மன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் ஐ.நா நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் ‘தருஸ்மன் அறிக்கை‘ என்றே கூறி வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மர்சுகி தருஸ்மனிடம் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த மர்சுகி தருஸ்மன்,

“இது ஐ.நாவின் அறிக்கையே, அதற்குக் குறைவானது அல்ல. நிபுணர் குழு ஐ.நா பொதுச்செயலராலேயே நியமிக்கப்பட்டது. எனவே இதனை சிறிலங்கா தொடர்பான ஐ.நா அறிக்கை என்று மட்டுமே கூற முடியும்.“ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, நிபுணர் குழு அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பும் தகவலை, சிறிலங்கா அரசுக்குள் முன்கூட்டியே தெரியப்படுத்தாதது குறித்து ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் விஜய் நம்பியார் உள்ளிட்ட தனது அதிகாரிகளிடம் கடிந்து கொண்டதாகவும் இன்னர்சிற்றி பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் சிறிலங்கா அதிபர் பான் கீ மூனை சந்தித்த போது, அவரது முன்னிலையிலேயே சக அதிகாரிகளை ஐ.நா பொதுச்செயலர் கடிந்து கொண்டதாக பல தரப்புகள் தமக்குத் தகவல் தந்ததாகவும் இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

லண்டனில் 100 , 000 ஸ்டேர்லிங் பவுண்கள் சம்பாதிக்கும் சிறுவன்!


சிறுவன் ஒருவன் சம்பாதிக்கும் தொகையைப் பார்த்தீர்களா? பிச்சை எடுக்கும் சிறுவன் ஒருவன் வருடாந்தம் 100 000 ஸ்டேர்லிங் பவுண்கள் சம்பாதிப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிச்சை எடுக்கும் சிறுவர்களை வெளிநாடுகளைச் சேர்ந்த கொலைகாரக் குழுக்கள் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ரோமானியாவைச் சேர்ந்த கிப்ஸி இனத்தவர்கள் தான் குறித்த சிறுவர்களைப் பிச்சை எடுக்க பயன்படுத்தி பகட்டு வாழ்க்கை வாழ்வதாக தெரிய வந்துள்ளது.

இவர்கள் அரண்மனைகள், ஆடம்பரக் கார்கள் என்று வசதியாக மன்னர்கள் போல் வாழ்ந்து வருகிறார்கள். பிச்சைக்காரர்கள் தங்கள் குழந்தைகளையும் பிச்சை எடுப்பதிலேயே ஈடுபடுத்தி வருகிறார்கள்.

இப்படியான செயல்கள் பிரிட்டனில் ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

பி.பி.சி இன் செய்தியாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

லண்டனில் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் அம்மாக்களின் தொகையும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நான்கு வயதுடைய ஆலிஸ் என்ற பெண் குழந்தை ஒன்று கொண்டுவரப்பட்டு பெரிய அங்கி ஒன்றை அணிவித்து லண்டனின் முக்கிய தெருக்களில் விடப்பட்டதாகவும் குறித்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



வரலாற்றில் கேணல் கடாபியின் சரித்திரம் � ஒரு பார்வை! (வீடியோ இணைப்பு)




இளம் வயதிலேயே பல வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் தனக்கு இணையான தலைவர் எவரும் இருக்க முடியாது. எவ்வாறான வல்லரசுகள் வந்தாலும் அதற்கு இணையாக எனது நாட்டை வழி நடத்திச் செல்வேன் என்ற மன உறுதியுடன் நான்கு தசாப்த காலமாக லிபியாவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சர்வாதிகாரி முவம்மர் கடாபி மட்டுமா? அவரது இராச்சியமும் இன்றுடன் வீழ்ந்தது. பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்வென்று தெரியாமல் பல நாடுகளை கதிகலங்க வைக்கும் வகையில் தனது நாட்டு மக்களை தன் பிடியில் வைத்து ஆட்சி நடத்தி வந்த கடாபியின் வரலாற்றை சற்று பின்நோக்குவோம்…

1942ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி பிறந்த முஅம்மர் கடாபி சிறு வயது முதல் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வந்துள்ளார். இளம் வயதிலேயே லிபிய இராணுவத்தில் வீரராக இருந்த இவர் 1965ஆம் ஆண்டு பெங்காசி இராணுவ பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார். 1966ஆம் ஆண்டு பிரிட்டன் ரோயல் மிலிட்டரி பயிற்சிக்குச் சென்றார்.

மீண்டும் படைக்குத் திரும்பிய அவர், தனக்கென ஆதரவாளர்களைத் திரட்டியதுடன் தனி இராச்சியம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற மன உறுதியை வளர்த்துக்கொண்டார். இச் சந்தர்ப்பத்தின்போதே லிபிய மன்னர் இத்ரீஸ் சிகிச்சை ஒன்றுக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில் இரத்தம் சிந்தாத இராணுவப் புரட்சி மூலம் தனது 29 ஆவது வயதிலேயே ஆட்சியைக் கைப்பற்றினார்.

1969ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆட்சியைக் கைப்பற்றி லிபிய அரபுக் குடியரசு என்று அறிவித்தார். 41 வருடங்களாக தொடர்ந்து ஆட்சியைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்து ஆட்சி செய்துள்ளார். கடாபி முப்படைத் தளபதியாகவும், ஆளும் கவுன்சில் தலைவராகவும் ஆனார். 1970 ஆண்டு முதல் 1972 பிரதமராகவும், இராணுவ அமைச்சராகவும் இருந்தார். மன்னராட்சி முறையை ஒழிப்பதாகக் கூறியவர், தொடர்ந்து அதிபராக தானே நீடித்தார். ஏழைகளுக்கு அடிப்படை வாழ்க்கை வசதிகளை அளிப்பதாகக் கூறிய அவரது குடும்பம் கடந்த 41 ஆண்டுகளில் ஏராளமான சொத்துக்களை சேர்த்ததாகக்கூட குற்றச்சாட்டு எழுந்தது.

தன் உயிர் உள்ள வரை தனது உயிர் நாடியாக லிபியா இருக்க வேண்டும் என்பதே கடாபியின் கனவாக இருந்தது. ஆனால், இது முழுமையான அளவு நிறைவு பெறாமல் முற்றுப்புள்ளியை நோக்கிச் செல்லும் என்று கடாபி கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டார். ஆம், முஅம்மர் கடாபி…ஆட்சியை தன் கையில் எடுத்த ஆரம்பத்தில் அவருக்கு அதிகளவு ஆதரவு இருந்தது. ஆனால், நாள் செல்லச்செல்ல கடாபிக்கான மக்களின் ஆதரவு வலுவிழந்தது.

ஆபிரிக்காவின் வட எல்லையில் மத்திய தரைக்கடல் பகுதிக்கு அண்மையில் சூடானுக்கும் எகிப்துக்கும் இடையில் அமைந்திருப்பது தான் லிபியா. இவ்வாறான புரட்சி வெடிக்கும் நாடாகவே லிபியாவும் இருந்து வந்தது. இந்நாட்டின் அதிபதியாக, தலைவனாக மக்களை தன் வசம் வைத்திருந்தவர் தான் முஅம்மர் கடாபி… அரபு தேசியம் என்றும், இஸ்லாமிய சோசலிசம் என்றும், மக்களின் நேரடிக் குடியரசு என்றும், பலவிதமாக தன் அரசை சித்திரித்துக் கொண்டிருக்கிறார். நவீன குடியரசு என்று சொல்லிக்கொண்டே 41 ஆண்டுகளாக சர்வாதிகாரம் செய்துகொண்டிருந்தவர் தான் கடாபி. இவருக்கு இரண்டு மனைவிகளும் எட்டுப் பிள்ளைகளும் (7 ஆண் பிள்ளைகள், 1 பெண்) உள்ளனர்.

மூத்த மகன் முஹம்மது அல் கடாபி  இவர் லிபியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தவராவார். இரண்டாவது மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி இவர் அரசாங்கத் தரப்பில் ஒரு பெரிய தர்ம ஸ்தாபனத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது மகன் சாதி கடாபி  தேசிய உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். நான்காவது மகன் முடாசிம் கடாபி லிபிய இராணுவத்தில் உயர்ந்த பதவியை வகிக்கிறார்.

நாட்டின் மிக உயர்ந்த பதவியான  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி இவருடையதாகவே இருந்து வந்துள்ளது. ஐந்தாவது மகன் ஹன்னிபால் கடாபி  நாட்டின் எண்ணெய் வளம் முழுவதையும் மேற்கொண்டிருக்கும் நிறுவனத்தை நிர்வகித்து வந்துள்ளார். ஆறாவது மகனான சைப் அலி கடாபியும், ஏழாவது மகனான காமிஸ் கடாபியும் நாட்டின் பொலிஸ் நிர்வாத்தைக் கவனிக்கிறார்கள். அவரது ஒரே மகளான  ஆயிஸா அல் கடாபி ஒரு சட்டத்தரணியாவார். நாட்டின் நீதி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிப்பவராவார்.

கடாபி புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதை எழுதியது தான் என்றும் சொல்கிறார் ! தனக்கென சொந்தப் பாதுகாப்பு படையைக் கொண்டு சர்வ வல்லமை மிக்கவராகவும் விளங்கிய கடாபி 40 உறுப்பினர்களைக் கொண்ட முற்றிலும் திருமணமாகாத இளம்பெண்களைக் கொண்ட படையொன்றை அமைத்து வைத்திருந்தார். லிபியாவின் எண்ணெய் வளம்தான் கடாபியின் பலமும், பலவீனமுமாக இருந்து வந்தது.

கடாபியின் அராஜக ஆட்சியில் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் தலைமையில் புரட்சிப் படை அமைந்தது. கடந்த பெப்ரவரி மாதம் கடாபிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியது. அதனை ஒடுக்குவதற்கு இராணுவத்தை ஏவினார் கடாபி. இரு தரப்புக்கும் பயங்கர மோதல் நீடித்தது. புரட்சிப் படைக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தலையிட்டு கடாபியை பதவி விலக வலியுறுத்தினர். மறுத்த அவர், கடைசி லிபியா இருக்கும் வரை அந்நியப் படைகளையும், எதிரிகளையும் எதிர்த்துப் போராடுவேன் என்றார்.

இதையடுத்து, ஐ.நா. அனுமதி பெற்று புரட்சிப் படைக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் கடாபி ஆதரவு இராணுவம் மீது தாக்குதல் நடத்தின. இந்நிலையில், கடந்த 9 மாதங்களாக நீடித்த சண்டையில் தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றினர். கடும் தாக்குதலுக்கு மத்தியில் மேற்படி நகரம் கைப்பற்றப்பட்டதுடன் கடாபி தலைமறைவானார். இதையடுத்து, கடாபியின் மாளிகையை புரட்சிப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொடி நாட்டினர். இந்த வெற்றியை லிபியா முழுவதும் கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘லிபியா சர்வாதிகாரியின் பிடியில் இருந்து விடுபட்டு விட்டது” என்று அந்த அறிக்கையில் அறிவித்தார். லிபியாவின் எதிர்காலம் இனி அந்த நாட்டின் மக்கள் கைகளில் இருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னரே தொடர் போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில் இன்று சிர்தே நகரை அந்நாட்டு இடைக்கால அரச படையினர் கைப்பற்றியதையடுத்து கடாபி கைது செய்யப்பட்டு, காயம் காரணமாக அவர் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்படடுள்ளது.

அப்பாவையும் மகனையும் ஒரே பெண்ணுடன் இணைத்து கிசுகிசு எழுதிய ஊடகங்கள்!


சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்று ஆந்திராவில் செய்திகள் வெளியாயின. அதற்கு முன் அனுஷ்காவை நாகர்ஜுனா காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அந்த செய்தியை வெளியிட்ட ஆங்கில பத்திரிகையின் நிருபரை, நாகார்ஜுனா அவதூறாகப் பேசினார் என்று கூறப்பட்டது. இதுபற்றி நாகார்ஜுனா கூறியிருப்பதாவது:

சினிமா துறையில் வெள்ளிவிழாவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். பல்வேறு நடிகைகளுடன் இணைத்து கிசு கிசு வருகிறது. முதலில் தபு, அனுஷ்கா, சார்மி, இப்போது பூனம் கவுர். பத்திரிகைகளில் இந்த செய்திகளைப் படித்துவிட்டு சிரிப்பதை தவிர வேறும் எதுவும் எனக்கு தெரியாது. ஆனால், இவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள்.

அனுஷ்கா நடிகை என்பதை தாண்டி என் குடும்பத்தில் ஒருவர். என்னை விட என் மனைவி அமலாவிடம்தான் அதிகம் பேசுவார். சார்மியுடன் மாஸ் படத்தில் நடித்தேன். அவர் சிறந்த நடிகை. ஏதாவது விஷயங்களில் என்னிடம் கருத்துக் கேட்பார். இந்த இடத்தில் அபார்ட்மென்ட் வாங்க போகிறேன். என்ன நினைக்கிறீர்கள் என்றால், வாங்கு என்பேன். உடனே, நாகார்ஜுனா அபார்ட்மென்ட் வாங்கி கொடுத்தார் என்று எழுதிவிடுகிறார்கள்.

இதே போல பூனர் கவுருடன் பயணம் படத்தில் நடித்தேன். படத்தில் இருவரும் சேர்ந்து வருவது போல ஒரு ஷாட் கூட கிடையாது. ஆனால் எப்படித்தான் அவருடன் இணைத்து பேசுகிறார்களோ தெரியவில்லை. இப்படி எழுதுவதற்காக, நான் என் நட்பை நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லையே. நான் இப்போதும் அவர்களுடன் நட்பாகத்தான் இருக்கிறேன். இதையெல்லாம் கூட என்னால் விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடிந்தது.

ஆனால், அனுஷ்காவுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இது அறுவறுப்பான ஜர்னலிஷம். இதுதான் என்னை ரொம்ப அப்செட் பண்ணியது. அப்படியென்றால் இதுவரை நீங்கள் இதுபற்றி கருத்து சொல்லவில்லையே என்கிறார்கள். இதற்கெல்லாம் நான் ஏன் கருத்துச் சொல்லவேண்டும். அது என் தகுதிக்கு குறைவானது. இவ்வாறு நாகார்ஜுனா கூறினார்.

எகிப்து பாணியில் ”மம்மி”யாக்கப்படும் இங்கிலாந்து டாக்சி டிரைவரின் உடல்!


இங்கிலாந்ச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் 'மம்மி' ஆகியுள்ளார். அதாவது உடல் எகிப்து நாட்டில் அந்தக் காலத்தில் மம்மியாக பதனப்படுத்தப்படுவதைப் போல இந்த டாக்சி டிரைவரின் உடலும் பதனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், 3,000 ஆண்டுகள் கழித்து முதன்முதலாக மம்மியாகும் முதல் மனிதர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.

பண்டைய கால எகிப்திய மன்னர்கள் உடல்களை பாடம் செய்து மம்மியாக வைத்தனர். அந்த ரகசியம் இத்தனை ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் மம்மி ரகசியத்தை கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஆலன் பில்லிஸ் (61). டாக்சி டிரைவர். அவர் கடந்த ஜனவரி மாதம் நுரையீரல் புற்றுநோயால் உயிர் இழந்தார். ஆலன் தான் இறப்பதற்கு முன்பு மருத்துவ ஆராய்ச்சிக்காக தனது உடலைத் தானமாக வழங்குவதாக உறுதியளித்தார். மேலும் தனது உடலை மம்மி போல பதனப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்படி அவர் இறந்ததும் அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது. முதலில் ஒரு மாதத்திற்கு ஆலனின் உடல் உப்புத் தண்ணீரில் முக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அவரது உடல் உலர்த்தப்பட்டது. இவையெல்லாம் செய்வதற்கு முன்பாக ஆலனின் உள்ளுறுப்புகள் நீக்கப்பட்டு லினன் என்னும் நூல் வைத்து அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டது.

எகிப்தியர்கள் செய்த மம்மி போன்று ஆலன் உடல் முழுவதும் லினன் துணி சுற்றப்பட்டது. ஷெப்பீல்டு மெடிகோ-லீகல் சென்டரில் வைத்து இந்த பதப்படுத்தும் பணிகள் 3 மாத காலமாக நடந்தது. இறுதியில் ஆலன் மம்மி வடிவம் பெற்றுள்ளார்.

ஆலனை மம்மியாக்கிய தொல்பொருள் வேதியியலாளர் ஸ்டீபன் பக்லீ கூறுகையில், ஆலன் பண்டைய கால எகிப்தியர்கள் செய்த மம்மி போன்று காணப்படுகிறார். 3,000 ஆண்டுகள் கழி்த்து மம்மியாகியுள்ள முதல் நபர் என்ற பெருமையை ஆலன் பெறுகிறார். எகிப்தியர்களின் ரகசியத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்றார்.

ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11-ல் பிரசவம்? பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!!


நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசவத்தை வைத்து பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பமாகியுள்ளது. ஏராளமான புக்கிகள் இந்த பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபிஷேக்பச்சனை திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய் தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். நேற்று மும்பையில் உள்ள வீட்டில் அவருக்கு ஆடம்பரமாக வளைகாப்பு விழா நடந்தது. இதில் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், உறவினர்கள் மற்றும் பாலிவுட் நடிகைகள் பங்கேற்றனர்.

அப்பாவாகும் சந்தோஷத்தில் உள்ள அபிஷேக் பச்சன் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்புகளை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். பிரசவத்தின் போதும், அதற்கடுத்த தினங்களிலும் ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையுடன் இருக்க திட்டமிட்டுள்ளார் அபிஷேக் பச்சன்.

இதற்கிடையே, ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என டாக்டர்கள் தேதி குறித்துள்ளனர்.

நவம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அவருக்கு டெலிவரி நடக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இருந்தாலும் குழந்தையின் பிரசவத் தேதி யார் கையிலும் இல்லை அல்லவா? அமிதாப்பச்சனின் மொத்த குடும்பமும் குழந்தையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவருக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும் என சில ஜோசியர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் பிரசவம் 11-ம் தேதிதான் நடக்கும் என இந்த ஜோசியர்களும் கூறியுள்ளனர்.

பல கோடி பெட்டிங் ஆரம்பம்…

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11ல் பிரசவம் நடக்குமா நடக்காதா என்று பெரிய பெட்டிங்கே ஆரம்பித்துள்ளது மும்பையில். இதில் ஏராளமான புக்கிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல, இந்த பெட்டிங்கில் பல கோடி ரூபாய் பணத்தையும் கட்டி வருகின்றனர் மக்கள். ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11 தேதியிலேயே பிரசவம் நடக்க வேண்டும் என்றும் இவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்களாம்.

காரணம், “எங்களுக்கு பெட்டிங்கில் பணம் வரும் என்பது மட்டுமல்ல, ஐஸ்வர்யா ராய் என்ற உலக அழகிக்குப் பிறக்கும் குழந்தை ஒரு சிறப்பான நாளில் பிறந்தால் நல்லதுதானே,” என்றார் இந்த பெட்டிங்கில் பணம் கட்டியுள்ள ஒரு நபர்.

நடிகை ஒருவரின் பிரசவத்துக்காக பெட்டிங் நடப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை.

5ஆணுக்கு 1பெண் பொண்டாட்டி (வீடியோ இணைப்பு)


வன்தட்டின் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு(படங்கள் இணைப்பு)


உணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்ளது. உணவுக்கு சுவை கூட்டும் உப்பு கணணியின் அளவை கூட்டும் அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கணணி இயங்குவதற்கு தேவையான மென்பொருட்கள், கணணியில் நாம் பதிவு செய்கிற புகைப்படம், பாட்டு, சினிமா உள்ளிட்ட கோப்புகள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கிலேயே பதிவாகின்றன.



கணணி கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் ஹார்ட் டிஸ்க்குகளை வைப்பதற்கு பெரிய அறைகள் தேவைப்பட்டன. டிஸ்க் அளவை குறைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்பது தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், கோப்புகளை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன.

இதுதொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது: கணணி மிக முக்கியமான பகுதி ஹார்ட் டிஸ்க். பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.

டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கணணி ஹார்ட் டிஸ்க்கின் டேட்டா ரெகாடிங் திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் தயாரிப்பின் போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும் போது ஹார்ட் டிஸ்க்கின் பதிவு திறன் ஒரு சதுர இன்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது.

அதாவது டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. உப்பு சேர்ப்பதால் கணணிக்கோ, இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி ஹார்ட் டிஸ்க்கின் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது.

11வயது சிறுமியின் சாகசம்(வீடியோ இணைப்பு)


எத்தனையோ விதமான சாகசன நிகழ்ச்சிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்படி ஒரு நிகழ்வை பார்த்ததுண்டா. உடலினை இறப்பர் போல் வளைந்து இச்சிறுமி புரியும் சாசகம் அரங்கம் முழுவதும் புல்லரிக்க வைக்கின்றது.





அமெரிக்க தொலைக்காட்சியினால் நடாத்தப்படும் 'America's Got Talent' எனும் நிகழ்ச்சியில் ஒரு சிறுமி தனது திறமையை காட்டி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 11 வயது நிரம்பிய விக்டோரியா எனும் சிறுமியே இச்சாதனை மேற்கொண்டுள்ளார்.

சீனாவில் பிறந்த இச்சிறுமி தனது 6வது மாதத்தில் அமெரிக்க பெற்றோரின் தத்துப் பிள்ளையாக அமெரிக்காவிற்கு வந்துள்ளார். தனது தாயின் வழிகாட்டலில் தனது திறமையை வளர்த்துக் கொண்ட விக்டோரியாக இன்று உலகமறிந்த சாதனை சிறுமியாக திகழ்கின்றாள்.

அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் மட்டம் 2 அடி உயரும்(படங்கள் இணைப்பு)


பூமி வெப்பமயமாகி வருவதால் அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என கோபன்ஹெகன் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் இதர சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது.



இதனால் அட்லான்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது உள்ள நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 2 அடியும், அதற்கடுத்த 4 ஆண்டுகளில் 6 அடியும் உயரும்.

இதனால் கடற்கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடல் மட்டம் சில இடங்களில் உயர்வதாலும், சுனாமி ஏற்படுவதாலும் சிறிய தீவுகள் காணாமல் போவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஒற்றைச்சக்கர சைக்கிள் ஓட்டும் வீரர்(வீடியோ இணைப்பு)


சீன மனிதர் ஒருவர் ஒற்றைச் சில்லுடன் கூடிய சைக்கிளை சூப்பராக ஓட்டி அசத்தி வருகின்றார். இவரது சைக்கிளில் முன் சில்லை காண முடியாது உள்ளது.





அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விடாமுயற்சி ஆகியன இருந்தால் மனிதனால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் நல்ல உதாரணம். இவர் சைக்கிள் ஓட்டும் காட்சிகளைக் கொண்ட வீடியோ இணைய உலகில் மிகுந்த பிரபலம் அடைந்து உள்ளது

குருவியை உணவாக உட்கொள்ளும் தவளை(படங்கள் இணைப்பு)


மனிதனும் தவளை இனத்தை சாப்பிடுகின்றார்கள். ஆனால் தவளை உணவாக இங்கு எதை சாப்பிடுகிறது. தவளை என்றாலே சிறிய பூச்சி புழுக்களை உண்பதனை பார்த்திருக்கிறோம். அமெரிக்காவில் வாழும் பெரிய இனத்தைச்சேர்ந்த தவளை எப்படி இந்த அழகான சிறிய குருவியை உணவாக கொள்கிறது என்பதனை பாருங்கள்.









கணவன் இன்னொரு பெண்ணுடன் தப்பான உறவு


சீனாவின் நான்ஜிங் ஹோட்டலில்கணவன் மீது கோபம் கொண்ட மனைவி ஒருவர் நிர்வாணமாக மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

ஹோட்டலின் இராண்டாவது மாடியிலிருந்து இருந்து இப் பெண் குதித்துள்ளார்.

நிர்வாணமாக குதித்த பெண்ணை பலர் பேர் வேடிக்கை பார்த்துள்ளனர்.

அக் கூட்டத்தில் இருந்த ஒருவரினால் பிடிக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணைத்தில் வெளியாகி உள்ளது.

தற்போது சீனாவின் இணையத்தளத்தில் இதுவே மிகவும் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக உள்ளது.

தனது கணவன் இன்னொரு பெண்ணுடன் தப்பான உறவு வைத்துக் கொண்டமை கையும் கைளவுமாக பிடித்த பெண் கணவன் மீது அதிகம் கோபம் கொண்டே இவ்வாறு நடந்து கொண்டதாக பொலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஏ.ரி.எம். இயந்திரம் மூலம் பணம் எடுக்கும் பிச்சைக்காரன்


 
கால ஓட்டத்தினால் பல பரிணாம மாற்றங்கள் உலகின் பல்வேறுபட்ட பகுதிகளில் நடந்தேறி வருகின்றது.

இவ்வாறான மாற்றங்கள் மனித வாழ்வில் நினைத்துக் கூட பார்க்க முடியாதளவுக்கு அதன் வேகமும், செயற்றினும் அமைந்துள்ளது.

அத்துடன் இவ்வாறு நடைபெறும் சம்பவங்களைக் கண்டு நாம் வியந்து போய், இப்படியுமா? என கேள்வி எழுப்பியதும் உண்டு.

அதன்படி தான் பிச்சை எடுத்துத் தனது வாழ்வைக் கழிக்கும் ஒரு பிச்சைக்காரன், ஏ.ரி.எம். இயந்திரம் ஊடாக பணத்தை எடுப்பதற்குக் காத்திருக்கின்றான்.

எப்படியிருக்கிறது நிலைமை?

மனிதாபிமானம் எங்கேபோனது?... செத்துவிட்டதா?.. (வீடியோ இணைப்பு)


இரண்டு வயது குழந்தை வாகனத்தில் அடிபட்டு வீதியிலே உயிருக்குபோரடிக்கொண்டு இருக்க அந்த வீதியால் செல்லும் மக்கள் கண்டும் காணாததுபோல் செல்லும் காட்சி நடந்தது சீனாவில் வீடியோவில் அக்காட்சி பதிவாகியுள்ளது நீங்களும் பாருங்கள் மனிதாபிமானம் எங்கே என்று


மனித நேயம் அற்றுப்போன இந்த உலகம்!

இந்த உலகத்தில் மனிதனும் இப்போ தேவைப் போடுகின்ற ஓன்று பணம் , புகழ் , கௌரவம்.

இந்த அடிப்பதில்ல தான் மனித இந்த உலகத்தில் இப்போ வாழ்ந்து கொண்டு இருக்கிறன்.

இந்த உலகம் மனித நேயத்துக்கு 1 % க்கும் சொல்லமுடியாத உலகம்.

ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை: ஆர்ஜென்டீனாவில் இறுதிகாலத்தை கழித்தார்?


சர்வாதிகாரி ஹிட்லர் 1945ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவர் ஆர்ஜென்டீனாவில் இறுதி நாட்களை கழித்த நிலையில் இயற்கை மரணம் எய்தியதாகவும் புதிய புத்தகமொன்று உரிமை கோருகிறது.

தென் அமெரிக்காவில் வயதாகி ஹிட்லர் இறந்தமைக்கான சான்றுகள் தனக்கும் மேற்படி ஆய்வில் பங்கேற்ற சிமொன் டங்ஸ்டனுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகவியலாளரான கெரார்ட்வில்லியம்ஸ் ஞாயிற்றுக்கிழமை “ஸ்கைநியூஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

1945ஆம் ஆண்டு பெர்லின் நகரிலுள்ள நிலக்கீழ் அறையொன்றில் ஹிட்லர் இறந்ததாக பல வரலாற்று அறிஞர்கள் உரிமை கோருகின்றனர்.

ஆனால் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆவண ஆராய்ச்சிகள் மற்றும் இரசாயன பரிசோதனைகள் என்பவற்றின் மூலம் ஹிட்லர் தனது இறுதிக் காலத்தை ஆர்ஜென்டீனாவில் கழித்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வில்லியம் கூறினார்.

“நாங்கள் வரலாற்றை மீள எழுத விரும்பவில்லை ஆனால் ஹிட்லர் தப்பிச்சென்றமை அலட்சியம் செய்யப்பட்டுள்ளதை எமக்கு கிடைத்த ஆதாரங்கள் வெளிப்படுத்துவதாக உள்ளது’ என அவர் தெரிவித்தார்.

ஹிட்லரும் அவரது காதலி ஈவாபிறவுணும் இறந்தமைக்கான இரசாயன பரிசோதனை மேற்கொள்ளப்படாத நிலையில் அவர் பெர்லின் நகரில் தற்கொலை செய்து கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டதாக கூறுபவர்களின் சோடிக்கப்பட்ட கதைகளை நம்புவது ஏற்புடையதல்ல என வில்லியம்ஸ் கூறினார்.

ஹிட்லரும் அவரது காதலியான ஈவாபிறவுணும் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜேர்மனியை விட்டு சென்று பாஸிஸவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஆர்ஜென்டீனாவில் தஞ்சமடைந்திருந்ததாக தெரிவித்த வில்லியம்ஸ் அந்நாட்டில் ஹிட்லர் 17 வருடங்கள் வாழ்ந்ததாகவும் அவருக்கு இதன்போது இரு பெண்குழந்தைகள் பிறந்ததாகவும் கூறினார்.

1962ஆம் ஆண்டு ஹிட்லர் மரணமடைந்ததாக வில்லியம்ஸ் மற்றும் சிமொன் டஸ்ட்டன் ஆகியோரால் கூட்டாக எழுதப்பட்ட கிரே வூல்ப் என்ற இந்த புதிய புத்தகம் கூறுகிறது.

ஹிட்லர் இறந்தமை குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆவணங்களிலிருந்து தம்மால் பெறப்பட்ட சான்றுகளை ஏன் அமெரிக்க புலனாய்வு குழுவினர் அலட்சியம் செய்தனர் என மேற்படி புத்தகம் கேள்வி எழுப்பியுள்ளது.

பெர்லின் நிலக்கீழ் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்லரது என கூறப்படும் மண்டையோடு உண்மையில் இளம் யுவதியொருவருக்கு சொந்தமானது என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளமை தொடர்பிலும் வில்லியம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிட்லர் தனது காதலி ஈவாபிறவுணுடன் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜேர்மனியை விட்டு புறப்பட்டார். அவர் ஆர்ஜென்டீனாவில் 17 வருடங்கள் வாழ்ந்து 1962ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

பஸ்சை எடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்த ஒரு பெண் டிரைவர். (வீடியோ இணைப்பு)


அமெரிக்காவில் ஒரிகான் மாகாண போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று போய்க்கொண்டிருந்தது. ஹில்ஸ்பிரோ என்ற பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பஸ்ஸை நிறுத்திய டிரைவர் அவசரமாக இறங்கி பஸ்ஸின் பின்னால் சென்று நின்று கொண்டார்.



ஏதேனும் பிரச்சினையோ? என்று பதறிய பயணிகள் சிலர் டிரைவர் பின்னாலேயே சென்று பார்த்தனர். அப்போது அவர் பஸ்சில் அழும் குழந்தையை அழுவதை நிறுத்தச் சொல்லுங்கள். அல்லது அந்த அம்மாவையும், குழந்தையையும் இறங்கச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் என்னால் பஸ் ஓட்ட முடியாது என்று கூறினார்.
குழந்தை அழுவதற்கும் பஸ் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம், அது ஒன்றும் சிரமமில்லையே, பஸ்ஸை எடுங்கள்’ என்று சிலர் சொல்லிப்பார்த்தார்கள். ஆனால் பஸ் ஓட்டுவதைப் பற்றி உங்களுக்கென்ன தெரியும். உங்கள் வேலையைப் பாருங்கள் என்று கூறிவிட்டார் டிரைவர்.

அழுதது 2 வயதிற்குட்பட்ட சிறிய குழந்தை அந்தக் குழந்தையின் தாயாருக்கு ஆதரவு தெரிவித்த சிலர், குழுவாக சேர்ந்து பஸ் டெப்போவுக்கு சென்று முறையிடத் தொடங்கிவிட்டனர். அப்போதும் அந்த டிரைவர் அடம் பிடித்தார் இந்தக் குழந்தை சும்மா சாதாரணமாக அழவில்லை. ரொம்ப நேரமாக கத்திக் கொண்டே இருக்கிறது. நானும் எவ்வளவு நேரம்தான் பொறுத்துக் கொள்வது? பெரிய நகருக்குள் பஸ் ஓட்டுகிறேன். அந்த அழுகுரல் என்னை தடுமாறச் செய்கிறது. அதனால்தான் இறங்கச் சொன்னேன் என்றார்.

இப்படிச் சொன்ன அந்த டிரைவரும் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த சண்டை சத்தத்தை ஒருவர் ரெக்கார்டு செய்திருக்கிறார். அதுவும் இந்தப் புகாரில் ஒரு ஆதாரமாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால்...? � அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை


சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை அமெரிக்கா அது பற்றிய எந்தவொரு முடிவுக்கும் வராது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வொசிங்டனில் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனரிடம், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போதுமானதா என்பதைத் தீர்மானிப்பதற்கு, அது வெளியிடப்படும் வரை அமெரிக்கா காத்திருக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை அது தொடர்பான எந்த முடிவையும் அறிவிக்க தாம் விரும்பவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருந்தார்.

“குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க வேண்டியது சிறிலங்கா அரசின் பொறுப்பு. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசின் விசாரணைகள் வெளிப்படையானது என்பதை நிருபிக்க வேண்டிய தேவை உள்ளது“ என்றும் மார்க் ரோனர் மேலும் கூறியுள்ளார்.

“சிறிலங்கா அரசாங்கம் அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால், சுதந்திரமான பொறிமுறை குறித்த அழுத்தங்களை சந்திக்க நேரிடும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த உள்நாட்டுக்குள்ளேயே இதைச் செய்ய வேண்டியது முக்கிமானது.சிறிலங்கா அதனை தாமாகவே செய்து கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அதை அவர்கள் செய்யாது போனால், நாங்கள் பலமுறை கூறிவிட்டோம் -. ஏனைய பல பொறிமுறைகளின் மீது கவனம் செலுத்துவதற்கான அனைத்துலக அழுத்தங்கள் அதிகரிக்கும்.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.