Monday, 4 July 2011

உங்களுக்குத்தெரியுமா?

1936 - 37இல் ஆட்சிக்கு வந்த இராசகோபாலாச்சாரியார் போதிய நிதி வசதியில்லை என்று காரணங்கூறி கிராமப்புறத்தில் இருந்த 2,200 துவக்கப் பள்ளிகளை இழுத்து மூடிய அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்காக ரூ. 12 லட்சம் செலவில் வேத பாடசாலையைத் துவக்கினார் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியை அசைத்தபடி ஓடிய தமிழர்: பெரும் பரபரப்பு

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஈழத்தமிழன் ஒருவர் தமிழீழ தேசியத் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சிறீலங்கா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிறிக்கெட் போட்டி 03-07-2011 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஈழத்தமிழன் ஒருவர் தமிழீழ தேசியத் கொடியை ஏந்தியவாறு மைதானத்தில் ஓடியுள்ளார்.


பிரித்தானியத் தமிழ் இளையோரால் சிறீலங்கா கிறிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் புறக்கணிப்பு போராட்டத்தின் முக்கிய நாளான இன்றைய தினம் மத்திய லண்டன் பகுதியில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் சிறீலங்காவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையிலான இறுதிப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போதே ஈழத் தமிழ் வீரன் பிரசன்னா தமிழீழத் தேசியக்கொடியுடன் மைதானத்துக்குள் குறுக்காக ஓடி அங்கு நிறைந்திருந்த பார்வையாளர்கள் உட்பட அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
உடனடியாக விளையாட்டு மைதானத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் சென்று அந்த இளைஞ்ஞனை கைதுசெய்து அப்புறப்படுத்தினர். பின்னர் பிரித்தானிய காவல்துறையினரிடம் அந்த ஈழத்தமிழன் கையளிக்கப்பட்டு காவல்துறையினரால் வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டார்.

உடனடியாகவே அங்கு நின்ற மக்கள் சிலரும், இளையோரும் தமக்கு தெரிந்த சட்டவாளர்களுக்கு தெரிவித்து அந்த இளைஞ்ஞனை வெளியில் கொண்டுவர ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டதையும் காணமுடிந்தது.

இந்த வீரத் தமிழனின் செய்கையால் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக மைதானத்துக்குள் நிறைந்திருந்த மக்கள் வெளியில் வந்து ஆர்ப்பாட்டத்தை பார்த்ததோடு மட்டுமன்றி எதற்காக செய்கிறீர்கள் என்ற விளக்கத்தை கேட்டு தமது ஆதரவையும் தெரிவித்து இளையோரால் வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களையும் பெற்றுச்சென்றனர்.

இன்று தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட 7வது புறக்கணிப்பு போராட்டம் நூற்றிக்கும் அதிகமான மக்களுடன் எழுச்சிகரமாக நடைபெற்றது. வயது வேறுபாடின்றி சிறுவர் முதல் பெரியோர் வரை இன்றைய இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து இளையோருக்கு தோள் கொடுத்தார்கள்.

மைதானத்தில் ஈழத்தமிழன் ஒருவர் தமிழீழ தேசியத் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதை இங்கிலாந்தின் பிரபல்யமான ஸ்கை தொலைகாட்சி ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேட்டோ தாக்குதலை நிறுத்தாவிட்டால் ஐரோப்பாவை தகர்ப்போம்: கடாபி

லிபியாவில் வான்வழித் தாக்குதலை நிறுத்தா விட்டால் ஐரோப்பாவை தாக்குவோம் என லிபிய அதிபர் கடாபி எச்சரித்து உள்ளார். லிபியாவில் பொது மக்களை பாதுகாக்கவும் போராட்டக்காரர்களுக்கு உதவவும் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த பன்னாட்டுப் படையில் பிரான்ஸ், கனடா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நேட்டோ படைகள் லிபிய ராணுவ தளங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்துகின்றன.
இந்த நிலையில் கடாபியின் பல ஆயிரம் ஆதரவாளர்கள் தலைநகர் திரிபோலியின் கிறீன் சதுக்கத்தில் குவிந்தனர். அவர்கள் பச்சைக் கொடியை அசைத்தவாறு கடாபியை புகழ்ந்து கோஷம் போட்டனர்.
லிபிய தலைநகர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தொலைபேசி வழியாக பேசினார். நேட்டோ படையினர் தங்களது வான்வழித் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் ஐரோப்பாவில் உள்ள அலுவலகங்கள், குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துவோம் என கடாபி எச்சரித்தார்.
நேட்டோ படைகள் உடனடியாக விலகுவது அவர்களுக்கு நல்லது. இல்லையென்றால் விபரீத விளைவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ராணுவ மையங்களை தகர்ப்பதற்காக லிபியாவில் வீடுகள், அப்பாவி பொது மக்கள் மீது நேட்டோ படைகள் தாக்கி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

ஒபாமா சுட்டுக் கொலை: ஆதரவாளர்கள் அதிர்ச்சி

அமெரிக்கா அதிபர் ஒபாமா சுடப்பட்டதாக பொக்ஸ் தொலைக்காட்சியின் டுவிட்டர் இணையதளத்தில் தகவல் பரவியதால் அதை படித்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அமெரி்க்காவின் முன்னணி தொலைக்காட்சியான "பொக்ஸ் நியூஸ்" பயன்படுத்தி வரும் டுவிட்டர் இணையதளப் பக்கத்தில்,"ஜூலை 4 மிகவும் வருத்தமான தினம். அதிபர் ஒபாமா இறந்துவிட்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்" என்று கூறப்பட்டிருந்தது.
பின்னர் ஜான் பைடன் என்பவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படித்தவர்களில் பலர் அதை உண்மை என்று நம்பி தங்கள் அனுதாபக் கருத்தையும் பதிவு செய்தனர். இன்னும் சிலரோ புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்து எழுதினர்.
ஜூலை 4 அமெரிக்காவின் தேசிய தினம் என்பது குறிப்பிடத்தக்கது. யாரோ சில விஷமிகள் "பொக்ஸ் நியூஸ்" தொலைக்காட்சியின் டுவிட்டர் இணையப் பக்கத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஒபாமா குறித்து தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே ஒபாமா பற்றிய தகவலை வெளியிட்டதற்கு பொறுப்பு ஏற்பதாக "த ஸ்கிரிப்ட் கிட்டீஸ்" என்ற இணையதளக் குழுவினர் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
மே 2011ல் பொக்ஸ் பொழுதுபோக்கு குழுமத்தின் "பொக்ஸ்.காம்" இணையதளத்தை மென்பொருள் விஷமிகள் ஏற்கெனவே சேதப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சிறையில் அடைப்பு

சேலத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் டி.எஸ். செல்வராஜ் இவர் கந்தன் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

சினிமா வினியோகஸ்தரான என்னை சன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமையை வாங்கும்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்னை வற்புறுத்தினார்.

அதன் பேரில் ரூ.1 1/2 கோடி கடன் வாங்கி கொடுத்து அந்த படத்தின் வினியோக உரிமையை வாங்கினேன். ஆனால் அந்த படத்தை சக்சேனாவே சேலம் பகுதியில் வெளியிட்டு விட்டார். நான் கொடுத்த ரூ.1 1/2 கோடி பணத்தையும் திருப்பி தரவில்லை.

அந்த படத்திற்கு வசூலான 83 லட்சத்து 53 ஆயிரத்து 374 ரூபாயை தரும்படி கேட்டேன். ஆனால் சக்சேனா பணத்தை தராமல் இழுத்தடித்தார். இதுபற்றி கடந்த ஜனவரி மாதம் கேட்ட போது என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தரும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.

இந்த புகார் மீது சென்னை கே.கே.நகர் போலீசார் கடந்த 1-ந்தேதி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். நேற்றிரவு அவர் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த போது விமானநிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்திய சட்டப்பிரிவு 406 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி), 385 (ஏமாற்றுதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சக்சேனாவை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

ஸ்கைபில் பேசி ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை கறந்த பெண்: திடுக்கிடும் தகவல்

வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது என அறியப்படுகிறது. இப் பெண்ணின் பெயர் தர்ஷனா எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து முதலில் பேஸ் புக் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தும் இவர் பின்னர் ஸ்கைப் ஊடாக சுவிஸ் லண்டன் எனப் பல நாடுகளில் உள்ள தமிழர்களைத் தொடர்புகொண்டு தான் தாய் தந்தை இழந்தவர் என்றும் பிரித்தானியாவுக்கு மாணவர் விசாப் பெற முயற்சிப்பதாகத் தெரிவித்து, அதற்காக வங்கியில் பணத்தைப் போடால் தான் இலகுவாக விசாவைப் பெறமுடியும் எனக் கூறி பலர் தலையில் முழகாய் அரைத்துள்ளார். இவர் ஸ்கைப் ஊடாகப் பேசும்போது இரவுநேர உடையணிந்தும், மிகவும் கவர்ச்சிகரமாகவும் பேசுவதால், பலர் நம்பி பணத்தை வாரி இறைத்துள்ளனர்.

இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார். குறித்த பெண் தன் கைகளை தானே வெட்டி காயப்படுத்தி அதனை வெப் காம் கமரா மூலம் காட்டிக் கூட சிலரிடம் பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி பலர் இவருக்கு பணத்தைக் கொடுத்துள்ளனர். வங்கியில் பணத்தைப் போட்டுக் காட்டி, மாணவர் விசா கிடைத்தபின்னர் அப்பணத்தை திருப்பித் தருவேன் என்றும் இவர் கூறிய ஆசைவார்த்தைகளை நம்பிய பலர் இவரது வங்கிக் கணக்கில் பணத்தை இட்டுள்ளனர். பணம் கிடைத்தவுடன் குறித்த நபர்களுடனான தொடர்பை இவர் கட் பண்னிவிடுவார். ஸ்கைப் திரையில் தோன்றவும் மாட்டார் ! இதுவே இவரின் வாடிக்கை !


யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி என்றும் கூறப்படுகிறது. இப் பெண்ணின் கணக்குக்கு வரும் பணத்தை உடனடியாக தனது கணக்குக்கும் மாற்றும் நபரும் இவரே எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நபரின் பெயர் ஜெய்சன் என்றும் சொல்லப்படுகிறது.

கட்டிலில் படுத்திருந்து, கைகளை பிளேடால் வெட்டி, இரவு நேர உடையணிந்து, குளைந்து பேசி, இவ்வாறு வித்தியாசமான கோணங்களில் இவர் பணப்பறிப்பு கொடிகட்டிப் பறந்துள்ளது. தற்போதும் ஒரு நபர் இவர் கதையில் ஏமாந்து, கொழும்பில் உள்ள தனது உறவினர் ஒருவரூடாக இப் பெண்ணின் வங்கிக் கணக்கில் பணத்தைப் போடச் சொல்லியுள்ளார். குறிப்பிட்ட உறவினர் பணத்தை வங்கியில் போடச் சென்றவேளை அவர் அப்பெண்ணின் வங்கிக் கணக்கில் சுமார் 1கோடியே 40 லட்சம் காசு இடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேகமுற்ற அவர் விடையத்தை பிரித்தானிய நபருக்கு தெரிவிக்க இப் பெண் குறித்து அவர் சில விசாரணைகளை நடத்தியுள்ளார். இதேவேளை இப் பெண்ணால் ஏற்கனவே ஏமாந்த மற்றுமொரு நபரையும் இவர் எதேச்சையாகச் சந்தித்துள்ளார்.

இவர்கள் கலந்துரையாடலில் வெளியான செய்திகளையே நீங்கள் தற்போது பார்க்கிறீர்கள். ஊரில் பல குடும்பங்கள் கஷ்டப்பட்டும், பல சிறுவர்கள் பெற்றோரை இழந்து தவிக்கும் நிலையில் அவர்களுக்கு உதவ சொற்பமான சிலரே முன்வருகின்றனர். ஆனால் அழகா இருந்தால் இல்லை கவர்ச்சி வார்த்தைபேசினால் மயங்கி உதவ பலர் இருக்கிறார்கள் போலும் !

இந்தியாவை எதிர்த்து முதல்முறையாக பிரித்தானியா எச்சரிக்கை

உலகத் தமிழர் பேரவையானது (GTF) தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவுடன் (APPG-T) இணைந்து ஒரு நாடாளுமன்ற வரவேற்பு நிகழ்வை வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள போர்ட்கல்லிஸ் இல்லத்தின் அற்லி அறையில் (Attlee Suite of Portcullis House) 2011 சூலை 5ஆம் நாள், செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ளது. இந்நிகழ்வில் பங்குபற்றுவோரென உறுதிசெய்யப்பட்ட பேச்சாளர்களில் வெளியுறவு மற்றும் பொதுநலவாய நாட்டு அலுவல்களுக்கான அரசத் துணைச் செயலரான அலிஸ்ரெயர் பேர்ட், நா.உ., நிழல் வெளியுறவுச் செயலரான டக்லஸ் அலெக்சான்டர, நா.உ. தொழில் உறவுத்துறை நுகர்வோர் மற்றும் அஞ்சல் துறைகளுக்கான அமைச்சரான எட் டேவி, நா.உ. ஆகியோர் அடங்குவர்.

மேலும் பல அமைச்சர்கள், மூன்று முதன்மைக் கட்சிகளையும் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபுகள் சபை உறுப்பினர்கள் என 30 க்கும் மேற்பட்டோர் இதில் பங்குபற்றுவார்கள். அத்தோடு இலண்டனிலுள்ள வெளிநாட்டுத் தூதராலயச் சான்றாளர், அனைத்துலக மனிதவுரிமை அமைப்புகள், ஊடகவியலாளர், கல்விமான்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றி தமிழ்ச் சமூகச் சான்றாளர்களுடன் கூடி அளவளாவுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் 2011 நவம்பர் மாத முடிவுக்குள் நம்பகரமான பக்கசார்பற்ற விசாரணை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யத் தவறுமேயானால் அனைத்துலகச் சமூகம் 'அனைத்து வழிவகைளையும்' நாடும் ஒரு நிலைக்கு வழிவகை செய்யுமெனப் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இக்கூட்டத்தில் மீளவலியுறுத்துவார் என்று அறியப்படுகிறது. அமெரிக்கர்களும் இதனையே இலங்கையிடம் திரும்;பத் திரும்பக் கூறிவந்துள்ளனர். ஐக்கிய அமெரிக்காவுக்குத் தற்சமயம் வருகை தந்துள்ள இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் திரு. றணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் இதே செய்தியைச் சென்ற வாரம்கூட அமெரிக்கா கூறியுள்ளது.

அத்தோடு அமெரிக்க அரசச் செயலர் ஹிலாறி கிளின்ரன் மற்றும் அரச உதவிச் செயலர் றொபேட் ஓ'பிளேக் ஜூனியர் ஆகியோரைச் சந்திப்பதற்கு முயன்ற றணிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையை விட்டுப் புறப்படுமுன்பாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் வேளையில் தான் அமெரிக்க அரசச் செயலரைச் சந்திக்கப்போவதாக றணில் இலங்கை சனாதிபதியிடம் சொல்லி இருந்தார். 'இராஐபக்சவின் முகவர்' ஆகத் தற்போது செயற்பட்டுவரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலுக்கு இம்மறுப்பு ஒரு தெளிவான அவமதிப்பாக அமைந்துள்ளதென கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகச் சமூகத்திலுள்ள பலர் கருதுகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு இலங்கை வந்திருந்த மூவரடங்கிய இந்தியத் தூதுக் குழுவும் இந்நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தி இருந்தது. அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரைத் தவிர இலங்கையிலுள்ள சம்பந்தப்பட்ட மற்றைய எல்லா அரசியல் குழுக்களையும் தலைவர்களையும் சந்தித்தனர். தனது குடும்பத்தில் ஏற்பட்ட இறப்பின் காரணமாக அவர்கள் தம்மைத் தொல்லைப்படுத்த விரும்பவில்லை என்று றணில் அவர்கள் இதற்கு விளக்கம் கூறியுள்ளார். இந்தியக் குழுவினர் கொழும்புக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே றணிலின் தாயார் இறந்துவிட்டார் என்பதே உண்மை.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கீ மூன் அவர்களை றணில் 2011 சூலை 6ஆம் நாள் புதன்கிழமை சந்திக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது இந்த ஆண்டு இறுதிக்குள் நம்பகரமானதும் பக்கசார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை பான் கீ மூன் வலியுறுத்துவார் என நம்பப்படுகின்றது. அரசியல் உறுதிப்பாடும் நீதியும் ஒன்றோடொன்று கைகோர்த்துச் செல்லவேண்டியதன் அவசியத்தையும் பான் கீ மூன் எடுத்துரைப்பார். இவற்றில் ஒன்றில்லாமல் மற்றையது நிலைக்குமாற்றல் அற்றது.

உலகத் தமிழர் பேரவையும் தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவும் இணைந்து இலண்டன் நாடாளுமன்றத்தில் ஒழுங்குபடுத்தியுள்ள மேற்படி வரவேற்பு நிகழ்வானது பெரும் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. சனால் 4 இல் வெளியான 'இலங்கையின் கொலைக் களங்கள்' என்ற ஆவணக் குறுந் திரைப்படமும் அதனைத் தொடர்ந்து தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லீ ஸ்கொற், நா.உ. அவர்கள் முதலமைச்சரின் கேள்வி நேரத்தின் போது எழுப்பிய கேள்விகள் மற்றும் துணைத் தலைவர் சியோப்ஹெயின் மக்டொனா, நா.உ. தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் முயற்சியை நிறுத்துவதற்குக் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஓர் அவசர விவாதத்திற்கு அழைப்பு விடுத்தமை போன்றவை இந்த ஆர்வ ஈர்ப்புக்குக் காரணமாக அமைந்துள்ளன. பக்கசார்பற்ற நம்பகமான ஒரு விசாரணை கட்டாய தேவையென ஐக்கிய நாடுகளின் முதலமைச்சர் அடுத்தடுத்துக் கூறியுள்ளார். மேலும், அவ்வாறான எந்தவொரு செயல்முறையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஈடுபாடு இருத்தல் வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

வலிமை மிக்க சனல் 4இன் ஆவணக் குறுந் திரைப்படமானது அவுஸ்திரேலியாவின் ஏபீசீ 1இல் சூலை 4, திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு சமகாலச் செய்தி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும்.இலங்கையின் சண்டே ரைம்ஸ(http://sundaytimes.lk/110703/Columns/political.html) செய்தித்தாளில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு டெல்கியிலுள்ள முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் சனல் 4இன் 'இலங்கையின் கொலைக் களங்கள்' ஆவண வீடியோப் படத்தை ஒளிபரப்புச்செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது. இந்த உரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் சனால் 4க்கும் இந்திய ஒளிபரப்பாளருக்குமிடையே பேரம் பேசுவதில் உலகத் தமிழர் பேரவை முக்கிய பங்காற்றியுள்ளதெனவும் அச்செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டுத் தமிழர் மட்டுமல்லாது அனைத்து இந்திய மக்களும் இந்திய அரசியல் மேலிடமும் இலங்கையில் அப்பாவித் தமிழருக்கெதிராக நடந்தேறிய போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கெதிரான குற்றங்கள் பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட உருப்படியான சான்றுகளை அறியச் செய்வதை உலகத் தமிழர் பேரவையானது அதன் உத்தியாகக் கொண்டுள்ளதென அவ்வமைப்புடன் தொடர்புடைய நம்பகமான வட்டாரமொன்று எமக்கு அறியத்தந்துளது. இந்தியா ருடே குழுமத்தைச் சேர்ந்த ஹெட் லைன்ஸ் ருடே, ஆஜ் ரக் (Headlines Today, Aaj Tak TV � India Today Group) ஆகியன 'இலங்கையின் கொலைக் களங்கள்' ஆவண வீடியோப் படத்தை சூலை 7, வியாழக்கிழமை மாலை 10 மணிக்கும் சூலை 8, வெள்ளிக்கிழமை மாலை 11 மணிக்கும் சூலை 9, சனிக்கிழமை மாலை 10 மணிக்கும் ஒளிபரப்புச் செய்யவுள்ளன.

இந்த அமைப்பின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படவுள்ள இந்த ஆவண வீடியோப் படத்தை தமிழ் நாட்டுச் செய்தித் தாள்கள், சென்னையிலுள்ள விளம்பரப் பதாகைகள், இந்தியாவில் பரந்துபட்ட வானொலிகள் தொலைக்காட்சிகள் ஆகியனவற்றில் விளம்பரப்படுத்துவதற்கு இந்த முன்னணி அலைபரப்பு அமைப்பு (India Today Group) கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது. அண்மையில் பிரதமர் மன் மோகன் சிங் அவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழரின் பிரச்சினைகள் பற்றியும் போர்க் குற்றங்கள் பற்றிய குற்றச் சாட்டுகளுக்கெதிராக அவசரமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் முனைப்பிட்டுக் காட்டிய மனு ஒன்றைக் கையளித்து இலங்கையில் நடைபெற்றது தமிழருக்கெதிரான இனப்படுகொலையே எனக் கூறிய தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களிடம் இந்தப் படம் பற்றிய கருத்துக்களை நேர்காணல் ஒன்றின் மூலம் பெற்றுப் பதிவு செய்வதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் முடிவடைந்துவிட்டது என இலங்கை அரசு அறிவித்து இரண்டாண்டுகள் சென்ற பி;ன்னரும் இந்தியா இலங்கைத் தீவிலுள்ள சிறுபான்மைத் தமிழரின் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்புவதன் மூலம் அண்மைத் தீவில் வாழும் தமிழரின் அவலங்களைத் தென்னகத்தில் வாழும் பெருந்தொகைத் தமிழரினதும் பிற இந்திய மாநிலங்களில் வாழும் மற்றைய சமூகங்களினதும் உணர்வுகளை மீண்டும் தூண்டி எழுப்பலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இலங்கை இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் : ஜெயலலிதா
 
இலங்கை, இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய ஆபத்து காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானைப் போன்றே சீனாவும் பல வழிகளில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேபாளம் மற்றும் இலங்கையுடன் குறித்த இரண்டு நாடுகளும் இணைந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்குமாறு மத்திய அரசாங்கத்தை தொடர்ச்சியாக தாம் வலியுறுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத் தடை விதித்தல் மற்றும் கச்சதீவை மீளப் பெற்றுக் கொள்ளல் ஆகிய தீர்மானங்கள் ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் பயண கட்டணங்கள் குறைப்பு

 
கொழும்பிலிருந்து பல பாகங்களுக்கு செல்லும் விமான சேவை கட்டணங்களில் போட்டித்தன்மையுடன் கூடிய நெகிழ்வான குறைப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இதன்படி மாணவர் விசாவில் இலண்டன், கோலாலம்பூர் மற்றும் பங்களூருக்கு ஒருவழிப் பாதை விமானச்சீட்டுக்கு விசேட கட்டணமும், மத்திய கிழக்கு நாடுகளான டோகா, டுபாய் மற்றும் சவுதி அரேபிய நாடுகளுக்கு பணிக்காக செல்பவர்களுக்கு விசேட கட்டணமும், யாத்திரிகளாக இந்தியா, ஜித்தா மற்றும் தாய்லாந்துக்கு செல்பவர்களுக்கு விசேட கட்டணமும் அறவிடப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.
இதன்படி இவர்களுக்கு 15 தொடக்கம் 20 சதவீதம் வரை கழிவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

95 அடி உயரத்தில் பறந்து புதிய உலக சாதனை படைத்த நபர்(வீடியோ இணைப்பு)

பிரான்சை சேர்ந்த 35 வயது டய்க் கிறிஸ் 3 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். அந்த வீரர் பாரிஸ் கிறிஸ்தவ ஆலயம் முன்பாக 95 அடி உயரத்தில் பறந்து வந்து புதிய சாதனை படைத்தார்.

ஆயிரக்கணக்கான மக்கள் அவரது சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அவர் ரோலர் ஸ்கேட்டிங்கில் மிக உயரமான இடத்தில் இருந்து சறுக்கி வந்து அதிக உயரத்தில் தாவி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

உடலில் இறக்கை கட்டி விட்ட வீரரை போல அவர் பறந்து வந்ததை பார்வையாளர்கள் மெய் மறந்து பார்த்தனர். அந்த வீரர் 95 அடி உயரத்தை நீளம் தாண்டுதல் வீரரைப் போல உயரமான இடத்தின் ஒரு பகுதியில் இருந்த இன்னொரு பகுதிக்கு தாவினார்.



அதே போன்று அவர் வானில் சீறி பாய்ந்த போது திடீரென அவர் குட்டிக்கரணம் அடித்து தனது இலக்கு நிலையான காற்றுப்பை உள்ள இடத்தில் வந்து விழுந்தார்.

இவர் முந்தைய சாதனையான 79 அடி உயர சாதனையை மிஞ்சினார். அந்த சாதனையை அமெரிக்க வீரர் டானி வே செய்திருந்தார்.

6 வயதில் இருந்து டய்க் கிறிஸ் ரேலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு அந்த வீரர் இரு வேறுபட்ட அளவை இணைக்கும் இடத்தில் 131 அடி உயரத்தை பாய்ந்தார். அந்த சாதனையை அவர் பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் முதல் தளத்தில் இருந்து நிகழ்த்தினார்.

எதற்கும் சாயாத சரித்திரப் புயல்கள் கரும்புலிகள் நாள் யூலை 5 (வீடியோ இணைப்பு)

சஹாரா பாலைவனத்தில் கிடைத்த அற்புதங்கள் (படங்கள் இணைப்பு)

வட ஆப்ரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா, 9 மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பைக்கொண்டது. இந்த பாலைவனத்தில் முற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் காண்டுபிடிக்கப்பட்டுள்ளது.













உலகின் மிகவும் அபாயகரமான மனிதன் (வீடியோ இணைப்பு)

 
நம்முடைய தளத்தில் இதுவரை பல விதமான தந்திர நிகழ்ச்சியை பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது நாம் பார்க்க போகும் தந்திரம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அதனால் தான் இவர் உலகில் அபாயகரமான மனிதன் என்று பெயர் பெற்றுள்ளார்.

சுல்தானின் பிரம்மாண்டமான யானை (வீடியோ இணைப்பு)

சுல்தானின் யானை ஒரு மிகப்பெரிய திறந்த வெளி நாடக மேடையாகும். மரத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த யானை அனைவரையும் வசீகரிக்க கூடிய வகையில் உள்ளது. மரத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த யானை 7 யானைகளின் எடைக்கு சமமாகும். 2006 ம் ஆண்டு Royal de Luxe என்ற பிரான்ஸ் நடக நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்டுள்ளது.





சுல்தானின் பிரம்மாண்டமான யானை (வீடியோ இணைப்பு)


சுல்தானின் யானை ஒரு மிகப்பெரிய திறந்த வெளி நாடக மேடையாகும். மரத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த யானை அனைவரையும் வசீகரிக்க கூடிய வகையில் உள்ளது. மரத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த யானை 7 யானைகளின் எடைக்கு சமமாகும். 2006 ம் ஆண்டு Royal de Luxe என்ற பிரான்ஸ் நடக நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்டுள்ளது.





கடலுக்கு அடியில் தொலைக்காட்சி பார்த்து சாதனை (வீடியோ இணைப்பு)


இங்கிலாந்திலுள்ள Basildon என்ற நகரத்தில் கடலுக்கு அடியில் 114 கால் பந்து வீரர்கள் இணைந்து தொலைக்காட்சி பார்த்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

04 Jul 2011