| சுவிஸ்லாந்து அரசாங்கமானது 2010ஆண்டு இறுதியில் முறைகேடான முறையில் 235க்கும் மேட்பட்ட தமிழர்களின் தொலைபேசி இலக்கங்களை கொழும்புக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அதன் காரணமாக கொழும்பில் பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு, காணமல் போய் அல்லது நீதிக்கு புறம்பான முறையில் கொலை செய்யபட்டும் உள்ளார்கள் என சுவிஸ்லாந்து தேசிய தொலைகாட்சி நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.இவ்வாறு சுவிஸ் அரசாங்கத்தினால் வழங்கபட்டுள்ள தொலைபேசி எண்கள் யாவும் சுவிஸ்லாந்தில் உள்ள விடுதலை புலிகள் ஆதரவாளர்களினால் இலங்கையிலுள்ள தமது சொந்தங்களுடன் தொடர்பு கொண்ட இலக்கங்கள் ஆகும் என சுவிஸ்லாந்து ஜனநாயக கட்சியின் கென்டன் பாராளுமன்ற உறுப்பினர் லாதன் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார். சுவிசிற்கான முன்னாள் இலங்கை துதூவர் Maj.Gen.Jagath Dias வர்களே செய்யட்பாட்டை முன்னின்று செய்துள்ளதாகவும் அவாத் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட சுந்தரலிங்கம் " நாங்கள் இவ்வாறன மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பினோம் ஆயினும் சுவிஸ் அரசாங்கமானது இந்த கொடூர செயலுக்கு அனுமதி வழங்கி இருந்தது" என அவர் தெரிவிதார். இந்த ஆண்டு பல இலங்கை தமிழர்கள் விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பெயரில் சுவிஸ்சில் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரினதும் தொலைபேசி அழைப்புக்கள் நீண்ட காலமாக கண்காணிப்பு செய்யப்பட்டபின்னர் அது தொடர்பான தகவல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்த சட்டமுறையானது சுவிஸ் தமிழர்கள் தொடர்புகளை பேனுகின்ற இலங்கையில் உள்ள அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் பாரிய அச்சுறுத்தலை ஏற்ட்படுத்தி உள்ளது இதனால் தற்பொழுது சுவிஸ் அரச வழக்கரினர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியும் ஏற்பட்டுள்ளது என தொலைகாட்சி நிறுவனம் சுட்டி காட்டுகின்றது. சுவிஸ் அரசினால் வழங்கபட்டுள்ள அனைத்து தொலைபேசி எண்களுமே தமிழர்கள் அடிக்கடி தொலைபேசி அழைப்பு மேட்கொள்ளும் கடைகளின் தொலைபேசி எண்களாகும். இதன் காரணமாக பல தமிழர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. சுவிஸ் அரசினால் கைதுசெய்யப்பட்ட விடுதலை புலி அதரவாளர் ஒருவர் சார்பாக ஆஜராகும் வக்கீழ்Max Birke Mair கருத்து வெளியிடுகையில் இது முற்றிலும் சட்டதிட்கு புறம்பான செயல் என தெரிவித்தார். வழக்கறினர் Patrick Camon தான் இலங்கைக்கு தரவுகள் அனுப்புதல் தொடர்பாக அனுமதி வழங்கியவர் ஆவர். சுவிஸ்சில் இயங்குகின்ற உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்குபவர்களின் சங்கமானது அரசாங்க தரப்பு வக்கிலினால் மேட்கொள்ளப்பட இந்த உத்தரவிற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் இது இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்ற விசாரனையினை சுயதினமான முறையில் முன்நெடுத்து செல்ல தடையாக உள்ளது என தெரிவித்தனர். Rainer Senweizer சட்ட பேராசிரியரும் இந்த செயன் முறையினை வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் அவர் இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் செய்யட்பாடு எனவும் தெரிவித்தார். சுவிஸ்லாந்து போல் வேறு நாடுகளும் இலங்கைக்கு தொடர்ச்சியாக இவ்வாறன உதவிகளை செய்யுமானால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை தொடரும் என்பதில் ஐயமில்லை. |
Friday, 14 October 2011
சுவிசின் முறைகேடான சட்ட செய்யட்ட்படு தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது (வீடியோ இணைப்பு)
இரும்பு உடல் மனிதர்கள் இதைக்கொஞ்சம் பாருங்கோ! (வீடியோ இணைப்பு)
| நீங்கள் இதுவரை எத்தனையோ விதமான சாதனையாளர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் நாம் இன்று அறிமுகப்படுத்தும் சாதனையாளன் சற்று வித்தியாசமானவன். விபரீதமானவன். ஆம்.. எமது உடலில் சிறிய கல் துண்டு விழுந்தாலே இரத்தம் கசியும் அல்லது எமக்கு வலி ஏற்படும் அல்லவா? ஆனால் மிகப்பெரிய பாரம் கூடிய இரும்புக்கட்டிகளை எமது உடலில் மேலிருந்து கீழ் விழுத்தினால் எமது உடல் என்னவாகும்? நிச்சயம் எமது எலும்புகள் நொறுங்கிப்போகும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த மனிதனை பாருங்கள் இரும்கட்டிகளை தனது உடலில் தூக்கி தூக்கி போட்டு தள்ளி விடுகிறார். அது மட்டுமா? அவரது குழு செய்யும் சாதனைகளை பார்த்தால் நிச்சயம் நமக்கு கண்கள் வியக்கும். பாருங்கள்… |
டாக்டர் பட்டம் விற்பனைக்கு…. மலிவு விலையில் வாங்குவோர் வாங்கலாம்!
சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள உலகப் பல்கலைக் கழகம் என்ற அலங்காரப் பெயருடன் உலா வந்த ஒரு அமைப்பு சந்தையில் கத்தரிக்காய், புடலங்காய் விற்பது போல காசு வாங்கிக் கொண்டு டாக்டர் (முனைவர்) பட்டங்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தது. ஒரு 200 டொலர் கொடுத்தால் போதும். நாலு நாள் பொறுத்து அஞ்சலில் பட்டம் வந்து சேரும். கொஞ்ச நாட்களாகரொறன்ரோவில் இடறினால் ஒரு கவுரவ டாக்டர் மீதுதான் விழ வேண்டும் என்ற நிலமை இதுவே பேச்சாக இருந்தது.![]() இப்போது மீண்டும் அந்த வியாதி பரவத் தொடங்கி இருக்கிறது. கடந்த திங்கள் கிழமை (ஒக்தோபர் 10, 2011) நடந்த நாதசுர தவில் இசைசர்வதேச அமைப்பின் 14 ஆம் ஆண்டு விழாவில் அதன் தலைவர் முருகதாசுக்கு கராத்தே சங்கம் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்தது.கராத்தே சங்கம் சார்பில் ஒரு உச்சிக் குடுமி அர்ச்சகர் ஆறுமுகம்பிள்ளை முருகதாசுக்கு முடிசூடி சான்றிதழையும் கொடுத்தார். இது நிகழ்ச்சிநிரலில் இடம்பெறாத ஒரு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னரும் கராத்தே சங்கத்தின் பெயர் இங்கு அடிபட்டது. இங்குள்ள குருமார் சிலருக்கு இந்த அமைப்பு டாக்டர் பட்டம் வழங்கிக் கவுரவித்தது. ஆறுமுகம்பிள்ளை முருகதாஸ் ஒரு நாதசுவர இசைக் கலைஞர். பல பட்டங்களையும் பாராட்டுதல்களையும் பெற்றவர். கடந்த பலஆண்டுகளாக நாதசுர தவில் இசை சர்வதேச அமைப்பின் தலைவராக இருந்து நாதசுர தவில் கலையை வளர்த்து வருகிறார். தமிழ்நாடு, ஆந்திரா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து சிறந்த கலைஞர்களை வரவழைத்து இரசிகர்களுக்கு நல்ல இசை விருந்து படைத்துவருகிறார். அவர் கவுரவ டாக்டர் பட்டத்துக்குத் தகுதியானவர்தான். ஆனால் அது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் போன்ற ஒரு பல்கலைக்கழகத்தால் கொடுக்கப்பட வேண்டிய பட்டம். இசையோடு அறவே தொடர்பில்லாத கராத்தே சங்கத்திடம் இருந்து டாக்டர் பட்டம் வாங்குவதுகேலியானது. உண்மையான கலாநிதி பட்டம் பெறுவதென்றால் முதுகலைப் பட்டத்தை முடித்துக் கொண்டு மேலும் இரண்டு ஆண்டு நித்திரை முழித்துப்படித்து ஆய்வுக் கட்டுரை எழுதிப் பெறவேண்டும். உலகத்திலேயே டாக்டர் பட்டம் வாங்கிக்கொள்பவர்கள் ஒன்றில் மருத்துவரா இருத்தல் வேண்டும் அல்லது தத்தம் துறையில் படித்துஆராய்ச்சி செய்து கலாநிதிப்பட்டம் (PhD) பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதுதான் நியதி. இதுதான் ஒழுங்கு. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் பல்கலைக் கழகங்கள் தாராளமாக கவுரவ டாக்டர் பட்டங்களைவழங்கி வருகின்றன. கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் இந்தமாதிரி பட்டம் பெற்றவர்கள்தான். மிக அண்மையில் சிறீலங்காஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே மற்றும் அவரது இளவல் கோத்தபாய ஆகிய இருவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கி இருந்தது. இந்த கராத்தே சங்கம் தனது கடையை சிறீலங்காவில்தான் விரித்திருக்கிறது. சிறீலங்காவில் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்குவதில் அதுமுன்னணியில் நிற்கிறது. அனைத்துல போர்க்லைப் பல்லைக்கழகம் என யப்பானில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு அமைப்பின் மூலம்சிறீலங்காவில் இந்த கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறது. டாக்டர் பட்டம் கராத்தே துறையில் சிறந்து விளங்குபவர்களுக்குத்தான்வழங்குகிறார்கள் என்றில்லை. டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும் கராத்தேக் கலைக்கும் அல்லது எந்தவொரு போர்க்கலைக்கும் எது விததொடர்பும் இல்லை. கொஞ்சம் விசாரித்துப் பார்த்தால் ஒரு டாக்டர் பட்டத்திற்கு ரூபா. .20, 000 முதல் அவரவர் தகுதிக்கேற்ப வசூலிக்கிறார்கள்.ஒரு கையால் காசு கொடுத்தால் மறு கையால் டாக்டர் பட்டம் வாங்கிவிடலாம். ஆண்டொன்றுக்கு ஒருமுறை யப்பானிலிருந்து ஒரு கராத்தேவீரசை அழைத்து பட்டமளிப்பு விழா வேறு நடாத்துகிறார்கள். திரு முருகதாஸ் எவ்வளவு கொடுத்தார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அது ஓசியில் கிடைத்திருக்கலாம். இதைவிட மோசம் பேராசிரியர் பட்டம் வழங்குவது. கவுரவ பேராசிரியர் எனச் சான்றிதழ் வேறு அளிக்கிறார்கள். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்கூட இந்தக் கவுரவ பேராசிரியர் பட்டத்தை பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இந்த டாக்டர் பட்டத்தை அதிகமாக வாங்கிக் கொள்பவர்கள் யார் தெரியுமா? பல முதலாளிகள் � குறிப்பாக பெரியளவில் பலசரக்கு, அரிசி, மீன்என வியாபாரம் செய்யும் முதலாளிகள். அதைவிட சில அரசியல்வாதிகளும் இந்த டாக்டர் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவு?உண்மையாக உழைத்துப் படித்து பட்டம் பெற்றவர்கள் இன்று அந்தப் பட்டத்தைப் போட்டுக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். எங்கேதங்களையும் போலி டாக்கடர்கள் என்று நினைத்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இந்தப் போலி (அதாவது கவுரவ)டாக்டர்கள் தொல்லை அதிகரித்து விட்டது. சராசரி மனிதர்கள் இந்தக் கவுரவப் பட்டங்களுக்கு அலையும் மட்டும் கராத்தே சங்கங்கள் காட்டில் காசு மழை கொட்டிக் கொண்டுதான்இருக்கும்! |
சனல் 4 எதிரான இலங்கையின் ஆவணப்படம்: பிசு பிசுத்துப்போனது! (படங்கள் இணைப்பு)
| பிரித்தானியாவின் செனல்4 அலைவரிசை ஒளிபரப்பிய கொலை களம் காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் தயாரித்த ஆவணப்படம் முதற் தடவையாக பிரித்தானியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நேற்று இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணப் டம் காட்சிப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு கலந்துரையாடலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, பிரித்தானியாவிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் கலாநிதி க்ரிஸ் நோனிஸ் ஆகியோரும் பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர். செனல் 4 அலைவரிசையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. அங்கு கருத்து வெளியிட்ட பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் கலாநிதி க்ரிஸ் நோனிஸ், இலங்கையின் சமூகங்களுக்கிடையே நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் வகையிலும் பக்கச்சார்பற்ற செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக் களங்கள் என்ற 30 நிமிட ஆவணப்படத்தை வெளியிட்டது. அதனை பல நாடுகள் பார்வையிட்டது மட்டுமல்லாது பல நாடுகளின் பராளுமன்றிலும் அவை காண்பிக்கப்பட்டது. ![]() இதனால் இலங்கைக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டது. இதனை நிவர்த்திசெய்ய தாமும் ஒரு ஆவணப்படத்தை இலங்கை எடுத்தது. அதனை முதன் முறையாக பிரித்தானியாவில் காட்ட அது முற்பட்டது. நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அதனை பல எம்.பிக்களுக்கு முன் காட்ட இலங்கை அரசு முற்பட்டது. பல தமிழர்கள் அங்கே சென்று அதனைப் பார்வையிட்டு கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதனை முதலிலேயே அறிந்துகொண்ட இலங்கை அரசு பிரித்தானிய எம்பீக்கள் மட்டுமே இந் நிகழ்வுக்கு அணுமதிக்கப்படுவர் என அறிவித்தது. ![]() இதனால் தமிழர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்வி கேட்கும் வாய்ப்பு இல்லாது போனது. இருப்பினும் சாதுரியமாக 3 தமிழர்கள் அந்த நிகழ்வு நடக்கும் மண்டபத்துக்குள் நுழைந்தனர். முதலில் காணொளி காண்பிக்கப்பட்டது. பின்னர் அது குறித்த கேள்விகளை கேட்கலாம் என நேரம் ஒதுக்கபப்ட்டது. சுமார் பிரித்தானிய எம்.பிக்களில் 4 பேரே இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதிலும் அந்த 4 எம்.பிக்களில் மூவர் வெளியே சென்று விட்டனர். 1 எம்.பியோடு இந் நிகழ்வு நடைபெற்றது. சனல் 4 தொலைக்காட்சி பிரிவில் இருந்து யார் வந்தாலும் அவர்களை அனுமதிக்கவேண்டாம் என ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சாதுரியமாக ஊடுருவி இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் சனல் 4 வீடியோவைத் தயாரித்த தயாரிப்பாளரான பெண் மணி ஒருவர் அங்கே வந்து இலங்கை அரசைக் கேள்விமேல் கேள்வி கேட்டு சிக்கலில் தள்ளினார். சனல் 4 ஒளிபரப்பிய காணொளிக்கு எதிராக நீங்கள் பிறிதொரு காணொளியை படம் பிடித்து காட்டுகிறீர்களே, அதனை மேற்குலக நாடுகளில் காண்பித்து ஆதரவு தேட முனைகிறீர்களே, ஏன் மேற்குலகு சொல்வதைப் போல சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது? என்று நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு சரியான பதிலைக் கூறாது நழுவிய இலங்கைப் பேச்சாளர், மெளனம் சாதிக்க முன் வரிசையில் அமர்ந்திருந்த கம்சா அவர்கள் நிருபரை புகைப்படம் எடுத்து மற்றும் வீடியோவில் பதிவுசெய்து தாம் எல்லாவற்றையும் பதிவுசெய்வது போல மிரட்டினார். இதனையும் பொருட்படுத்தாது நிருபர் தொடர்ந்தும் தன் கேள்வியை முன்வைத்தார். அதற்குப் பின்னர் மற்றுமொரு தமிழர் எழுந்து தமிழ் பயங்கரவாதிகள் என்று ராஜீவ விஜயசிங்க குறிப்பிட்டதை வன்மையாகக் கண்டித்தார். தமிழ் பயங்கரவாதிகள் என நீங்கள் குறிப்பிடுவது அனைத்து தமிழர்களையும் தான் என்ற கருத்துக்கு அமைக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனை அடுத்து தாம் இவ்வாறு பேசியிருந்தால் மன்னிப்பு கோருவதாக ராஜீவ விஜயசிங்க தெரிவித்தார். சுமார் 150 சிங்களவர்கள் அமர்ந்திருந்த அவ்விடத்தில் 3 தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். ஒவ்வொரு முறை தமிழர்கள் பேச எழும் போதும் சிங்களவர்கள் கூச்சலிட்டும் நக்கலடித்தும் தமிழர்களை கொச்சைப்படுத்துவதை தமது வேலையாக நினைத்துச் செய்தார்கள். அங்கே வந்திருந்த சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக் களங்கள் தயாரிப்பாளரான பெண் மணி பேச முற்படும்போதும் சிங்களவர்கள் கூச்சலிட்டனர். எள்ளி நகையாடினர். இறுதியாக இந் நிகழ்வு முடிவுக்கு வரமுன்னர் அனைத்து தமிழர்களும் எழுந்து வெளியே சென்றவேளை அவர்களை சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிதுக் கொண்டனர். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இலங்கையின் காணொளி ஆரம்பமாகிய சில நிமிடங்களில் பிரித்தானிய எம்பிக்கள் தூங்க ஆரம்பித்து விட்டனர். 4 எம்பிகள் மட்டும் சமூகமளித்த நிலையில் அவர்களில் பலர் தூங்க ஆரம்பித்து விட்டனர். இலங்கை அரசின் ஊதுகுழல் பெண் மணி திருமதி ராஜேஸ்வரி அவர்கள் மட்டும் இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்க உதவுவதாகவும் குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமல்லாது விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைமை மீதும் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். மொத்தமாகச் சொல்லப்போனால் இலங்கையின் காணொளி நாடகம் பிரித்தானியாவில் பிசு பிசுத்துப் போனது என்பதே உண்மையாகும். 150 சிங்களவர்கள் வந்திருந்தாலும் 3 தமிழர்கள் எழுப்பிய கேள்விகள் சிங்கள அரசின் பேச்சாளர்களை கதி கலங்க வைத்தது என்பதே உண்மையாகும். |
ஆண்களே உங்களுக்கு மிகவும் தேவையான டிப்ஷ்
![]() |
| (1) உங்கள் மனைவிக்கு சின்னச்சின்ன வீட்டு வேலைகளில் உதவுங்கள்.. (2) நான் என்ன சொன்னாலும் என் கணவர் கேட்டுக்கொள்வார் என்று பெருமையாகக் கூறுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனர்.அதனால் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள். (3) வீட்டில் எப்போதும் சிரித்த முகமாகவே இருங்கள் (கஷ்டமான ஒன்று).இது பல பிரச்சினைகளைத் தீர்க்கும். (4) அவர்களது சமையலைப் பாராட்டிப் பேசுங்கள் (நிதானத்தில்). உங்கள் அம்மாவின் கைப்பக்குவம் என்று ஒரு புளுடா விடுங்கள்.அவள் உச்சி குளிர்ந்து போவாள். (5) கடையில் சென்று என்ன பொருள் வாங்கினாலும் மனைவியை அழைத்துச் செல்லுங்கள் (புடவைக்கடை,நகைக்கடை ஐ தவிர்க்கவும்). (6) அடிக்கடி நீ அழகாய் இருக்கிறாய் என்று (சொல்வது சரியான கடினம்) சொல்லிப்பாருங்கள்.அதன் பின்பு உங்கள் வாழ்க்கையே ஆகா...ஓகோ... |
சிறிலங்காவுக்கும் சவால்கள் காத்திருப்பதாக ஐ.நா எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)
| எதிர்வரும் ஒக்ரோபர் 31ம் நாளுடன் உலக சனத்தொகை 7 பில்லியனை எட்டுவதாகவும், சனத்தொகை அதிகரிப்பினால் சிறிலங்காவும் பல சவால்களை சந்திக்கும் என்றும் ஐ.நா சனத்தொகை நிதியம் எச்சரித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பினால் சிறிலங்கா சமூக, பொருளாதார ரீதியில் பல சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் ஐ.நா சனத்தொகை நிதியம் கூறியுள்ளது. வேலையின்மை அதிகரிப்பதுடன், சுகாதார மற்றும் கல்வி வாய்ப்புகளில் பிரச்சினைகளையும் சிறிலங்கா சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நாடாக சிறிலங்கா மாறி வருவதாகவும், ஐ.நா சனத்தொகை நிதியம் கூறியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் சிறிலங்காவின் சனத்தொகையில் 10 வீதமாக இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 2025இல் 20 வீதமாக உயரும் என்றும் ஐ.நா சனத்தொகை நிதியம் எதிர்வு கூறியுள்ளது. ![]() |
மோசடிகளை தடுக்க புதிய ஷெங்கன் விசா
![]() |
| லண்டன்: ஐரோப்பாவின், "ஷெங்கன்' நிலப் பரப்பில் அமைந்த நாடுகளுக்கு, ஐரோப்பியர் அல்லாதவர் செல்ல, புதிய விசா முறையை ஐரோப்பிய யூனியன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐரோப்பாவின் போர்ச்சுகல் முதல், நார்வே வரையிலான, 25 நாடுகள் கொண்ட நிலப் பரப்பு, "ஷெங்கன்' என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்குச் செல்ல, இந்நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வித விசாவும் தேவையில்லை. ஆனால், பிற நாட்டவர் செல்ல, "ஷெங்கன்' விசா வாங்க வேண்டும். இப்போது இந்த விசாவில் புதிய முறையை ஐரோப்பிய யூனியன் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, விரல் ரேகைகள், முகப் பதிவு உள்ளிட்ட, "பயோமெட்ரிக்' முறைகளைப் பயன்படுத்தி விசா வழங்கப்படும். இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட அறிக்கையில், "இதன் மூலம் விசா விண்ணப்பங்கள் தங்கு தடையின்றி விரைவில் வழங்கப்படும். விசா மோசடிகளும் தடுக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, 13 கோடி, "ஷெங்கன்' விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
![]() |
| போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிக்கரணை ராஜேஷ் நகர் நேரு தெருவை சேர்ந்தவர் சந்திரா. இவர் நேற்று காலை தனது மகள் ராஜேஸ்வரி, மருமகன் சக்திவேல், பேரன், பேத்தியுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனரை சந்திக்க அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. ஆத்திரம் அடைந்த சந்திரா, மகள், மருமகன், பேரன், பேத்தியுடன் கமிஷனர் அலுவலகம் வாசலில் வந்து நின்றார். அப்போது அந்தவழியாக வந்த பட்டினப்பாக்கம் செல்லும் தடம் எண் 27டி மாநகர பஸ் முன்பு குடும்பத்துடன் பாய்ந்தார். டிரைவர் உடனே பிரேக் போட்டதால் அவர்கள் உயிர் தப்பினர். பிறகு சந்திரா, மருமகன் சக்திவேல் அவரது மகன் சக்தி ஆகியோர் பஸ்சுக்கு அடியில் படுத்துக்கொண்டனர். “என்னுடைய நிலம் போச்சு, நிலம் போச்சு‘‘ என்று கத்தினர். போலீசார் எவ்வளவோ கூறியும் அவர்கள் பஸ்சுக்கு அடியில் இருந்து வர மறுத்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக மீட்டு கமிஷனர் அலுவலகத்திற்குள் இழுத்து சென்றனர். பின்னர் சந்திரா கூறுகையில், “நான் 18 வருடமாக அதிமுக உறுப்பினராக உள்ளேன். எனக்கு சொந்தமாக சைதாப்பேட்டை சின்னமலை கக்கன்புரத்தில் முக்கால் கிரவுண்ட் நிலம் இருந்தது. அதனை ஒருவர் திட்டமிட்டு அபகரித்து விட்டார். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. “இது பெரிய இடத்து விவகாரம் அதில் தலையிட வேண்டாம்“ என்று அங்குள்ள போலீசார் எங்களை மிரட்டுகிறார்கள். அதனால்தான் முதல்வர் தனிப்பிரிவில் புகார் செய்தேன். தற்போது கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ய வந்தேன். ஆனால் உள்ளே விட மறுக்கின்றனர். அதனால் இப்படி செய்தேன். எனது நிலத்தை மீட்டு கொடுப்பது போலீசின் கடமை“ என்றார். பிறகு அவர்களை எழும்பூர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச்சென்று எச்சரித்து அனுப்பினர். பஸ் டிரைவருடன் போலீஸ் வாக்குவாதம்: பஸ்சுக்கு அடியில் படுத்துக்கொண்ட சந்திராவையும் அவரது குடும்பத்தினரையும் வெளியே வருமாறு போலீசார் கூறியும் அவர்கள் வர மறுத்து விட்டனர். அங்கு போக்குவரத்து நெரிசலும் அதிகமானதால் திகைத்த போலீசார், பஸ்சை ரிவர்சில் எடுக்குமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால், ‘எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விடும்‘ எனக்கூறி டிரைவர் மறுத்துவிட்டார். இதனால் டிரைவருக்கும் போலீசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு போலீசார் பெரும்பாடு பட்டு சந்திராவையும், அவரது குடும்பத்தினரையும் பஸ்சுக்கு அடியில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். 2வது முறை தற்கொலை முயற்சி பஸ் முன்பு தற்கொலைக்கு முயன்ற சந்திரா, நிலமோசடி குறித்து முதல்வர் தனிப்பிரிவில் புகார் செய்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 10ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திக்க வந்த அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. அதனால் தலைமைச்செயலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். தற்போது கமிஷனர் அலுவலகம் முன்பு பஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். |
துப்பாக்கி முனையில் அதிரடிக் கொள்ளை! (வீடியோ இணைப்பு)
| தபால் நிலையத்துக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய முகமூடிக் கொள்ளையர்களின் கையில் சிக்காமல் நழுவும் அம்மாவும் குழந்தையையுமே கீழே உள்ள வீடியோவில் காண்கிறீர்கள். உள்ளே புகுந்த காடையர் குழு பணத்தை தேடி அலையும் காட்சி இரகசிய கமராவில் பதிவாகியுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள Tulse Hill, Lambeth என்ற இடத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொள்ளையர்கள் அங்கிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களை வெளியே செல்ல விடவில்லை. ஒரு கொள்ளையன் அங்கிருந்த காசுக் கவுண்டருக்கு தீ வைக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. ![]() குறித்த கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு 25 வயது இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
ஓன்லைன் மூலம் துணிகளை தொட்டு பார்த்து வாங்கலாம்(படங்கள் இணைப்பு)
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மக்கள் பெரும்பாலும் ஓன்லைன் ஷாப்பிங்கையே விரும்புகின்றனர். பேஸ்ட், பிரஷ், சோப், கமெரா, பீரோ, கட்டில் ஆகியவற்றை ஓன்லைன் ஷாப்பிங்கில் வாங்குவதில் பிரச்னை இல்லை. ![]() ஜவுளி என்றால், ஆயிரம் தான் டிஸ்பிளேயில் தெரிந்தாலும் முந்தானை உள்பட முழு புடவையின் டிசைனையும் பார்க்க முடிந்தாலும், புடவையை தொட்டுப் பார்த்து வாங்கினால் தான் பெண்களுக்கு திருப்தி. ஓன்லைனில் எப்படி தொட்டுப் பார்த்து வாங்குவது சாத்தியம் என்கிறார் ஷரோன் பர்லே. லண்டனின் ப்ரூனல் பல்கலைக்கழகத்தில் டிசைனிங் துறையில் பேராசிரியராக இருக்கிறார். இவரது தலைமையில் டிசைனிங் மற்றும் இணையதள நிபுணர்கள் கொண்ட குழுவினர் டிஜிட்டல் சென்சோரியா என்ற தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆராய்ச்சி பற்றி ஷரோன் கூறியதாவது: அனிமேஷனில் ஒரு வகை ஸ்டாப் மோஷன் அனிமேஷன். அதாவது பொம்மைகளை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி ஒவ்வொரு பொசிஷனையும் படமெடுத்து அதை படமாக ஓட்டுவது. இந்த டெக்னிக்கையும் தொடுதிரை(டச் ஸ்கிரீன்) தொழில்நுட்பத்தையும் இணைத்து புதுவித தொழில்நுட்பம் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். ஐபோன், ஐபேட், டேப்லட் கணணிகளின் டச் ஸ்கிரீன் உதவியுடன் நிஜத்தில் துணியை தொட்டுப் பார்ப்பது போன்ற உணர்வை பெற முடியும். அடிப்படை தொழில்நுட்பம் தயாராகிவிட்டது. அதை மேம்படுத்தி மெருகூட்டுவதற்கான ஆய்வு நடந்து வருகிறது என்றார். |
சமாதானம் பேச வந்து சிறிலங்காவுக்கு லியம் பொக்ஸ் ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்தாரா? (வீடியோ இணைப்பு)
| பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்சின் நண்பர் அடம் வெரிற்றியின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்ததாக சனல்-4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது. ![]() சிறிலங்காவின் உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி சனல்- 4 தொலைக்காட்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக லியம் பொக்சும், அவரது நண்பர் அடம் வெரிற்றியும் ஒவ்வொரு ஆண்டும் சிறிலங்காவுக்கு வந்து போனதாகவும், ஒவ்வொரு முறையும் வரும்போதும் லியம் பொக்ஸ் வெரிற்றியை அழைத்து வந்தாகவும், லியம்பொக்சின் விடுமுறைப் பயணத்தில் கூட அவர் சிறிலங்கா வந்ததாகவும் சிறிலங்கா உயர் வட்டாரங்கள் சனல்- 4 தொலைக்காட்சியிடம் கூறியுள்ளன. சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தவே லியம் பொக்ஸ் சிறிலங்கா சென்றதாக அவரது பேச்சாளர் கூறியுள்ளார். ஆனால் அடெம் வெரிற்றி ஆயுத பேரம் தொடர்பாக சிறிலக்காவுக்குத் தொடர்ச்சியான பயணங்களை மேற்கொண்டதாகவும், சிறிலங்கா அரசாங்கத்தின் செலவிலேயே அங்கு தங்கியிருந்ததாகவும் சிறிலங்காவின் மூன்று உயர்மட்ட வட்டாரங்கள் சனல் 4 தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் உள்ள மூத்த பிரமுகருடன் கலந்துரையாடும் ஒருவராகவே வெரிற்றி செயற்பட்டுள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. சிறிலங்கா அரசின் அந்த முக்கிய பிரமுகர், அடம் வெரிற்றியுடன் பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்கள், பாதுகாப்புக் கருவிகள், விமான உதிரிப்பாகங்களைப் பெறுவது குறித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் சிறிலங்கா உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தக் கலந்துரையாடல் எப்போது நடந்தது என்று தமக்குத் தெரியாது என்றும் மற்றொரு உயர்மட்ட வட்டாரம் சனல்-4 தொலைக்காட்சியிடம் கூறியுள்ளது. மற்றொரு உயர்மட்ட வட்டாரம், அடம் வெரிற்றி 2000ம் ஆண்டு தொடக்கம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு வந்ததாக கூறியுள்ளது. அத்துடன் சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக அளவில் நற்பெயரைத் தேடிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அனைத்துலக அளவில் சிறிலங்காவின் பெயர் மோசமாக கெட்டுப் போயுள்ள நிலையில், மேற்கு நாடுகளில் உள்ள பொதுமக்கள் உறவு நிறுவனங்களுக்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் பெரும் தொகைப்பணத்தை வழங்கியுள்ளனர். இதுபற்றிய கலந்துரையாடல்களில் வெரிற்றி பங்கேற்றதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக சனல்-4 கூறியுள்ளது. பிந்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சனல்-4 வெரிற்றியுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றும் சனல்-4 தெரிவித்துள்ளது. இதற்கிடையே சிறிலங்கா அரசுடன் எத்தகைய உறவு உள்ளது என்பது குறித்து பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரித்தானியா நிழல் பாதுகாப்பு அமைச்சர் எம்மா றெனோல்ட்ஸ் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். |
ஹெலிகப்டராக மாறிய ஓட்டோ(படங்கள் இணைப்பு)
நம் அனைவருக்கும் நீண்டநாட்களாக விமானத்தில் ஏறி வானில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் செல்வதற்கு வாய்ப்பும் கிடைக்காது. வாய்ப்பு கிடைக்காத மனிதர் என்ன செய்கிறார் என்பதை நீங்களே பாருங்கள். ![]() ஓட்டோ உரிமையாளர் ஒருவர் தனது ஓட்டோவை வானில் பறக்கும் ஹெலிகப்டராக மாற்றித் தரையில் ஓட விட்டுக்கின்றார்.எனவே குறைந்த செலவில் ஹெலியில் பயணம் செய்யலாம் நாமும் போகலமா? |
மனிதஉரிமை மீறல் விவகாரம் - மகிந்தவுடன் நேரில் பேசுவார் கனேடியப் பிரதமர்
அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் நேரில் பேசுவார் என்று நம்பப்படுகிறது. ![]() பேர்த் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள கனேடியப் பிரதமர் இந்த விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபருடன் நேரில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புவதாக சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் புரூஸ் லெவி தெரிவித்துள்ளார். சில ஊடகங்களில் கூறப்படுவது போல, 2013ம் ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டை கனேடியப் பிரதமர் புறக்கணிக்கமாட்டார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். கனேடியப் பிரதமர் சிறிலங்காவில் நடைபெறும் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறவில்லை என்றும், போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் அரசியல் நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னேற்றம் எட்டப்படாதவிடத்து இந்த மாநாட்டில் கலந்து கொள்வது நெருக்கடியானது என்றே அவர் குறிப்பிட்டதாகவும் புரூஸ் லெவி மேலும் விளக்களித்துள்ளார். சிறிலங்காவில் இந்த மாநாடு நடப்பதற்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான அனைத்துலக விசாரணைகள் பயன்மிக்க தாக இருக்கக் கூடும் என்று கூறியுள்ள அவர், ஆனால் அதனை சிறிலங்காவே முடிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவின் எதிர்காலத்துக்கு இந்த விசாரணைகள் மிகவும் அவசியம் என்று தாம் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சீனா, ஈரான் போன்ற நாடுகளுடன் சிறிலங்காவின் உறவுகள் நெருக்கமடைந்து வரும் நிலையில் பழைய நண்பர்களிடம் இருந்து அது விலகிச் செல்வதை சுட்டிக்காட்டத் தேவையில்லை என்றும் கனேடியத் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். யாரை நண்பராக வைத்திருக்க வேண்டும் என்று முடிவுகளை எடுக்கின்ற எல்லா உரிமைளையும் முதிர்ச்சி பெற்ற நாடான சிறிலங்கா கொண்டிருக்கிறது என்று கூறியுள்ள கனேடியத் தூதுவர், ஆனால் ஏதாவது ஒன்று தான் என்ற விளையாட்டு இங்கு தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
வரலாற்றில் முதல் முறையாக சுவிஸ் பாராளுமன்றில் தமிழன் குரல் ஒலிக்கட்டும்
| 24ம் திகதி சுவிஸ் ஈழத்தமிழரின் வெற்றியை நாம் லுசேன் நகரில் கொண்டாடலாம், சுவிஸ் ஈழத்தமிழருக்கு ஒரு விடுதலைச்சூரியனாக இருக்கப்போகிறார் திரு. லதன் சுந்தரலிங்கம் அவர்கள், நீங்கள் அந்த வெற்றியின் பங்காளராக திகழ உங்கள் வாக்குகளை ஈழத்தமிழருக்காய் அளித்திடுங்கள். தவறவேண்டாம், மறக்கவேண்டாம். உஙகள் கைகளில் வாக்கு அட்டை இருக்கிறது. சரியாக வாக்களியுங்கள் கனடாவில் ஒரு ஈழப்பெண்மணி பாராளுமன்றம் சென்றுள்ளார். சுவிசில் ஒரு ஈழத்தமிழ் மகன் பாராளுமன்றம் செல்வார் என்பது உறுதி. அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! உங்களால் என்ன செய்யமுடியும் என நீங்கள் நினைத்திருப்பீர்கள், உங்களாலும் முடியும் என்பதற்கான ஒரு விடயம் இருக்கிறது. சுவிஸ் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழனின் குரல் ஒலிக்கவேண்டும் என நாம் கனவு கூட கண்டிருக்கவில்லை, இன்று ஒரு இத்தகைய சந்தற்பம் கிடைத்திருக்கிறது. எமது ஈழமக்கள் துயரை எடுத்துரைக்க ஒரு பெரிய வாய்ப்பு இது. லுசேனில் SP கட்சி சார்பில் போட்டியிடும் திரு. லதன் சுந்தரலிங்கம் என்ற ஈழத்தமிழனை வெல்லச் செய்வதில் நாம் பல வெற்றிகளை பெறமுடியும். சுவிசில் உள்ள அனைவரும், லுசோன் மாநிலத்திலுள்ள தமிழர்கள் உங்கள் உறவுகளா?, நண்பரா? அல்லது வெளிநாட்டுகாரரா? அல்லது சுவிஸ் பிரசைகளா? தொடர்பு கொண்டு விடயத்தை கூறுங்கள்! 23ம் திகதி ஜப்பசி திங்கள் ஈழத்தமிழன் வெற்றி என கேட்டு மகிழ, அதனால் எம் இனம் விடுதலைபெற தேவையான அரசியல் வேலைகளை, ஏன் உங்கள் அகதி பிரச்சனை, வேறு பிரச்சனைகளையும் எமது ஈழ மகனிடமே கேட்க கூடிய வாய்ப்பு, சொல்லி அனுப்பகூடிய அற்புதமான சந்தற்பம் இருக்கிறது. தவறவிடாதீர்கள்! சிந்தியுங்கள், தவறாது செயல்படுங்கள்! எம் இனத்தைக்காக்க எமது இனம் தான் வேண்டும் என்பதை மறவாது, உங்கள் தொடர்பிலுள்ள லுசோன் வாசிகளுக்கு கூறி, 24ம் திகதி நாம் மகிழ உலகிலுள்ள தமிழர் அனைவரும் மகிழ வழிசெய்யுங்கள் தமிழ் மக்களே. இது தான் உங்கள் கடமை! ! உங்களால் என்ன செய்யமுடியும் என சொல்வீர்களே! உங்களால் இது முடியும் செய்யுங்கள்!. செய்வீர்கள் என நம்புகின்றேன்.! கார்த்திகை 15ம் திகதியின் பின் தமிழனுக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டும்! இது சத்தியம்! நிற்சயம்! அதற்காய் உழைப்போம், ஒற்றுமையை காட்டுவோம்! எமது மக்களுக்கு விடுதலையை பெற இதுவும் ஒரு வழி என்பதை மறவாதீர்கள்! பேதம் வேண்டாம், வாதம் வேண்டாம், செயல்மட்டுமே வேண்டும் |
மாற்றுத்திறனாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடினார் சினேகா(படங்கள் இணைப்பு)
இன்று பிறந்தநாள் காணும் நடிகை சினேகா, தனது பிறந்தநாளை பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். ![]() முன்னணி நடிகைகளில் ஒருவரான சினேகா, ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களில் கொண்டாடி வருகிறார். ![]() அதேபோல இந்த ஆண்டு தனது பிறந்தநாளை இன்று காலை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தனது பெற்றோருடன் சென்று வழிபட்டார். பின்னர் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்துக்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அடுத்ததாக, அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க ஆட்டோ கிராப் படத்திலிருந்து ஒவ்வொரு பூக்களுமே பாடலையும் பாடி அவர்களை மகிழ்வித்தார். பின்னர் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவை தன் கையால் பரிமாறினார். |
ஸ்டீவ் இல்லாத அப்பிளின் 4 எஸ் இற்கு சவாலளிக்க வருகின்றது செம்சுங் கெலக்ஸி 3
பெரிய 4.6 அங்குல சுப்பர் எமொலெட் திரையுடன், 1.8GHz டுவல் கோர் புரசசருடனும், 2 ஜிபி ரெம் உடனும், 12 மெகாபிக்ஸல் வசதியுடனும் கூடிய கையடக்கத்தொலைபேசியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆனால், உண்மையிலேயே அவ்வாறானதொரு கையடக்கத்தொலைபேசியை செம்சுங் இன்னும் சில நாட்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்பிள் தனது ஐ போன் 4 எஸ் ஐ அறிமுகப்படுத்தியுள்ள இந்நேரத்தில் தன் பங்கிற்கு செம்சுங் நிறுவனமும் ஒரு கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தும் என ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் செம்சுங்கின் அடுத்த வெளியீடாக இருக்கலாம் எனக் கருதப்படும் கையடக்கத்தொலைபேசியின் தகவல்கள் கசிந்துள்ளன.
தற்போது இது செம்சுங்கின் கெலக்ஸி வரிசை கைடயக்கத்தொலைபேசியின் 3 (Samsung-Galaxy-S-III) ஆவது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இக்கையடக்கத்தொலைபேசி அதிவேக 4 ஜி வசதியைக் கொண்டிருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே வெளியாகியுள்ள செம்சுங்கின் கெலக்ஸி எஸ் 2 அப்பிளின் ஐ போன் 4 எஸ் எஸ் இனை விட வேகமாக விற்பனையாகிவருகின்றது.
இந்நிலையில் இதுவும் வெளியாகி வெற்றிகரமாக விற்பனையானால் ஸ்டீவ் ஜொப்ஸ் இல்லாத அப்பிளுக்கு அது பாரிய அடியே!
பிரபல கிரிக்கட் வீரர் ஷேன் வோர்ன் அழகிகளுடன் உல்லாசம்
திருமணம் செய்து கொள்ளாமலேயே ஷான் வார்னுடன் வாழ்ந்து வரும் இங்கிலாந்து நடிகை எலிசபெத் ஹர்லி தற்போது வார்னை மணக்க சம்மதித்து விட்டாராம். கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் ஹர்லியை சம்மதிக்க வைத்துள்ளார் வார்ன். 
நேற்று இரவுதான் வார்னை மணக்க தனது சம்மதத்தைத் தெரிவித்தாராம் ஹர்லி. இனி நான் உங்களது பெண்ணாக இருக்க விரும்புகிறேன் என்று வார்னிடம் கூறி விட்டாராம் ஹர்லி. இந்தியரான அருண் நாயரின் மனைவிதான் இந்த லிஸ்.
ஆனால் அவரும், ஷான் வார்னும் முத்தமிட்டுக் கொள்வது போன்ற நெருக்கமான காட்சி அடங்கிய புகைப்படம் வெளியானதும் நாயர் மணமுடைந்தார். இதையடுத்து ஹர்லியை விட்டு அவர் பிரிந்தார். முதலில் அருண் நாயரை பிரியப் போவதில்லை என்று ஹர்லி கூறி வந்தார்.
பின்னர் அவரும் பிரிந்துவிட்டார். தற்போது வார்னை மணக்க அவர் சம்மதம் கொடுத்து விட்டார். இந்த அறிவிப்பை ஷான் வார்ன், ஒரு ஹோட்டலில் நடந்த இரவு விருந்தின்போது முறைப்படித் தெரிவித்தார். கடந்த ஒரு வருடமாகவே இருவரும் பழகி வருகின்றனர். இந்தப் பழக்கம் அருண் நாயர் வாழ்க்கையில் குண்டைப் போட்டது.

ஆனால் தற்போது ஷான் வார்ன் வாழ்க்கையில் புது வசந்தத்தைக் கொண்டு வருகிறது. ஷான் வார்ன் பல பெண்களுடன் பழக்கம் உள்ளவர். பெண்களை வீழ்த்தி தனது வலையில் விழ வைப்பதில் கில்லாடி. இருப்பினும் அவரை தனது வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார் ஹர்லி.
ஹர்லி தனது கணவர் நாயரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார். அதேபோல ஷான் வார்னும், கடந்த 2006ம் ஆண்டே சிமோனிடமிருந்து விவாகரத்து பெற்றுப் பிரிந்து விட்டார். இப்போது இந்த இருவரும் புது மண வாழ்க்கையில் இணையவுள்ளனர்.
வேகமாக வந்த சைக்கிளோட்ட வீரர் மீது பாய்ந்த மான்! பரபரப்புக் காட்சிகள்
வேகமாக வந்த சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவரை பாய்ந்து வந்த மான் ஒன்று முட்டி மோதி விழுத்தும் பரபரப்புக் காட்சிகள் வெளியாகியுள்ளன.குறித்த வீடியோக் காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியானதன் காரணமாக ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர்.
தென்னாபிரிக்காவின் மலை சைக்கிள் ஓட்டும் வீரரான Evan van der Spuy என்பவரே மேற்படி மானால் பாதிக்கப்பட்டவராவார்.
மானின் தாக்குதலில் இருந்து அதிஸ்டவசமாக உயிர் தப்பினார். எது எவ்வாறெனினும் இன்டர்நெட்டின் பிந்தைய சூப்பர் ஸ்டாராக உதயமாகி விட்டார் எவான்.
மளிகை சாமான் வாங்கி வரும் “நாய்’
விழுப்புரத்தில் மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வரும் அதிசய நாயை பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந் தவர் பாபு,42; தையல் தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா,37. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் வீட்டில் கடந்த ஓராண்டாக தங்களது செல்லப்பிராணியாக லேபர் வகையை சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். இதற்கு “ஹனி’ என பெயர் வைத்துள் ளனர். இந்த நாய் மளிகை கடைக்கு சென்று வீட்டின் உரிமையாளர் கொடுத்தனுப்பும் லிஸ்ட் படி கூடையில் பொருட்களை வாங்கி வருகிறது. இது மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று டிபன் மற்றும் சாப்பாடு, மெடிக்கல் கடையில் மருந்து வாங்கி வருவது உள்ளிட்ட வேலைகளை செய்கிறது. இந்த அதிசய நாயை பார்த்து அப்பகுதியினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.மைதானத்துக்குள் திடீரென ஓடிய நிர்வாண அழகிகள்!(படங்கள்)
Euro 2012 எனும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அரங்கின் திறப்பு விழா வைபவத்தில் உக்ரைன் நாட்டைச்சேர்ந்த இரண்டு பெண்கள் மேலாடையில்லாமல் அரங்கு முழுவதும் ஓடி அங்கிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் , அதுவும் மார்புகளில் பூக்களின் படங்களை வரைந்து ஒரு கலை வண்ணத்துடன் ஓடிய இவர்களை போலீசார் விரட்டிப்பிடித்தனர். உக்ரைன் நாட்டில் விபச்சாரம் தலைதூக்கியுள்ளதால் இவர்கள் விபச்சாரிகளாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது, உதைபந்தாட்டம் என்றாலே இதுபோன்று நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவது சாதாரணம் , எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி முதலாவது உதைபந்தாட்டம் இங்கு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது ,இந்த நிர்வாண ஓட்டம் ஒருவகையில் இந்த விளையாட்டுக்கு விளம்பரமாகவும் அமையலாம்.




திறந்த வெளியில் உறவில் ஈடுபடும் காதல் ஜோடிகள்!
அமரிக்காவின் பொருளாதாரம் ஆடிப்போன நிலையில் அங்குள்ள இளசுகள் அதை மேலும் ஆட்டிப்பார்க்க முனையும் நிலை தான் இது. சரியான வழிகாட்டல் , பொருளாதார வசதிகள் போன்ற குறைபாடுகளால் வீதிகளில் குடும்பம் நடத்தேவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட இந்த ஜோடிகள் ,
அறைக்குள் நடப்பவை அனைத்தையும் வீதியிலே செய்துவிட்டார்கள் , தமது உடைமைகள் அனைத்தும் வீதியோரத்தில் குவிக்கப்பட்ட நிலையில் தமது காலைக்கடன்களையும் அதே இடத்தில் கழிக்கவேண்டிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள் ,
போலீசார் இதுவரை 28 பேர்வரையில் கைதுகள் மேற்கொண்ட போதிலும் இது குறைந்த பாடில்லை , பாத சாரி ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில் Ive seen some making out, having sex. It doesnt look good.
அதாவது திறந்த வெளியில் சிலர் உறவில் ஈடுபடுவதாக இவர் தெரிவித்தார், கூட்டமாக கூடியிருக்கும் இவர்கள் ஆட்டம் பாட்டம் , அடிதடி இவ்வாறாக பொழுதை கழிக்கிறார்கள் , பெண்களும் கூடவே இருப்பதால் கசமுசா அதிகமாகவே இருக்கும்


அறைக்குள் நடப்பவை அனைத்தையும் வீதியிலே செய்துவிட்டார்கள் , தமது உடைமைகள் அனைத்தும் வீதியோரத்தில் குவிக்கப்பட்ட நிலையில் தமது காலைக்கடன்களையும் அதே இடத்தில் கழிக்கவேண்டிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள் ,
போலீசார் இதுவரை 28 பேர்வரையில் கைதுகள் மேற்கொண்ட போதிலும் இது குறைந்த பாடில்லை , பாத சாரி ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில் Ive seen some making out, having sex. It doesnt look good.
அதாவது திறந்த வெளியில் சிலர் உறவில் ஈடுபடுவதாக இவர் தெரிவித்தார், கூட்டமாக கூடியிருக்கும் இவர்கள் ஆட்டம் பாட்டம் , அடிதடி இவ்வாறாக பொழுதை கழிக்கிறார்கள் , பெண்களும் கூடவே இருப்பதால் கசமுசா அதிகமாகவே இருக்கும்


வாகன விபத்தில் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பொலிஸ்
வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை மீறியதால் அதிஸ்டவசமாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிர் தப்பினார்.
அதி வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை மீறியதால் அதிலிருந்து தூக்கி எறியப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சந்தியில் ஹொலிவூட் ஸ்டண்ட் கலைஞர்களைப் போல பல்டியடித்து எழுந்து நின்றார்.
வாகனமும் தடுமாறி உருண்டதால் சிறு இடைவெளியில் நல்ல வேளையாக வாகனத்துள் சிக்கி நசுங்காமல் தப்பித்துக் கொண்டார். விபத்து நடந்த அருகாக ஒரு அம்மாவும் பிள்ளையும் நடந்து செல்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதி வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை மீறியதால் அதிலிருந்து தூக்கி எறியப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சந்தியில் ஹொலிவூட் ஸ்டண்ட் கலைஞர்களைப் போல பல்டியடித்து எழுந்து நின்றார்.
வாகனமும் தடுமாறி உருண்டதால் சிறு இடைவெளியில் நல்ல வேளையாக வாகனத்துள் சிக்கி நசுங்காமல் தப்பித்துக் கொண்டார். விபத்து நடந்த அருகாக ஒரு அம்மாவும் பிள்ளையும் நடந்து செல்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
உலகத்தில் உள்ள முதல் 5 மிகப்யங்கரமான பாதைகள். (படங்கள் இணைப்பு)
உலகில் உள்ள மிகவும் ஆபத்தும் மிகவும் பயங்கரமான பாதைகள் ஏனென்றால் இந்தப்பாதைகள் ஒவ்வொரு ஆண்டுகளும் 300பேருக்கு மேர்ப்பட்டவர்களைப் பலிவாங்குகின்றது. இந்தப்பாலமானது எதோ ஒன்று மனிதர்களை உள்ளெடுக்கின்றது. நீங்கள் இந்தப்படங்களைப் பார்த்தால் தெரியும் எப்படியான பாதைகள் என்று இங்கு போக்குவரத்துகள் மிகவும் கடினம் ஏனென்றால் இவை வளைவும் நெளிவுமாகக் காணப்படுவதால்.
Dades Gorge Road, Morocco
Dades Gorge Road, Morocco
Passo dello Stelvio, Italy
Guoliang Tunnel, China
Yungas Road (Road of Death), Bolivia
Atlanterhavsveien (Atlantic Ocean Road), Norway
Subscribe to:
Comments (Atom)
























