Monday, 7 November 2011

சிறிலங்கா மீது அமெரிக்கா உளவியல் போர்

சிறிலங்கா மீது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உளவியல் போர் ஒன்றைத் தொடுத்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்றின் அமெரிக்கச் செய்தியாளர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.சுமார் ஒரு மாதகாலமாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதிகாரபூர்வமற்ற வகையில் சிறிலங்கா அரசுக்கு தகவல்களை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நேரடியான ஆய்வுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், அவதானிப்புகள், பரிந்துரைகள், வெளிப்படைத் தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் இராஜாங்கத் திணைக்களம் அடிக்கடி கூறிவரும் கருத்து, சிறிலங்கா மீதான உளவியல் போரே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ள நிலையிலேயே அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் இந்த உளவியல் போரில் இறங்கியுள்ளதாகவும் அந்தச் செய்தியாளர் கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார், ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து பெரிதும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் அது உயர்ந்த தரத்தில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவமானத்தில் முடிந்த சிறிலங்காவின் இராஜதந்திர வெற்றி

சிறிலங்கா அதிபர், பிரித்தானிய மகாராணியாருக்கு கைலாகு கொடுக்கும் போது எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட ஒளிப்படம், போலியானது என்பது உண்மையானால், சனல் 04 ஆவணப்படம் போலியானது, ஏமாற்றுத்தனமானது என்று சிறிலங்கா எப்படிக் கூறமுடியும்? என்று ‘தி நேசன்‘ வார இதழில் எழுத்தியுள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார் ‘கலன சேனாரத்ன‘.
பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் ஒன்று கூடிய உச்சிமாநாடானது இந்த அமைப்பு 54 உறுப்பு நாடுகளிலும் இடம்பெறும் மனிதஉரிமை விடயங்கள் தொடர்பாகக் கையாள்வதற்கான திறனைக் கொண்டுள்ளதா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உச்சி மாநாட்டின் ஊடாக சிறிலங்கா இன்னொரு இராஜதந்திர வெற்றியையும் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடத்தும் தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகள் தமது சம்மதத்தைத் தெரிவித்ததானது, 'உண்மையில் அவமானமான' செயல் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை தனது கண்டன அறிக்கையில் தெரிவித்திருந்தது.

தற்போது இடம்பெற்று முடிந்த பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் குறிப்பிட்ட ஒரு மனிதஉரிமை அமைப்பின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.

அதாவது 'மக்களிற்கான பொதுநலவாயம்: சீர்திருத்தத்தை துரிதப்படுத்த வேண்டிய நேரம்' என்ற தலைப்பில் பிரபலமான மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் குழுவால் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்று பொதுநலவாய அமைப்பு நாடுகளின் அரச தலைவர்களின் கவனத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையில் உறுப்பு நாடுகளில் இடம்பெறும் ஜனநாயக, சட்ட நடவடிக்கை மற்றும் மனிதஉரிமை ஆகியவற்றில் இடம்பெறும் தீவிர மீறல்கள் தொடர்பாக நன்கு ஆராயப்பட்ட தகவல்களை பொதுச்செயலாளருக்கும், பொதுநலவாய அமைப்பின் செயற்பாட்டுக் குழுத் தலைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக- ஜனநாயகம், சட்ட ஆட்சி, மனித உரிமை விவகாரம் ஆகியவற்றுக்கான பொதுநலவாய ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்தப் பரிந்துரை தொடர்பாக பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட போது தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் சில நாடுகள் இதை மிகப் பலமாக எதிர்த்தன.

இது தொடர்பாகத் தனது வாதத்தை முன்வைத்த இந்தியா, இவ்வாறானதொரு ஆணையாளர் நியமனம் அவசியமற்றதெனவும், ஐ.நா அமைப்புக்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையே இவ் ஆணையாளரும் மேற்கொள்ள வேவண்டியிருக்கும் எனத் தெரிவித்தது.

இந்த விவாதத்தில் நிறைய உண்மைகள் உண்டு. ஆனால் இதற்குப் பின், சில பொய்யான காரணங்களும் உள்ளன.

பொதுநலவாய அமைப்பால் நியமிக்கப்படும் ஆணையாளர் ஒருவர் குறிப்பிட்ட நாடொன்றின் மனிதஉரிமை விவகாரங்கள் தொடர்பாக தனது தலையீட்டை மேற்கொள்வதானது, அந்த நாட்டின் தலைமைக்குப் பயங்கரத் தலையிடியாக இருக்கும் என்ற காரணமும் மறைமுகமாக உறுப்பு நாட்டுத் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

மனிதஉரிமைகள் ஆணையாளர் ஒருவரை நியமித்தல் என்ற பரிந்துரைக்கு இந்தியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதென்பது அதிர்ச்சி தரக்கூடிய விடயமல்ல. ஏனெனில் இந்தியாவில் பல மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அதாவது இந்திய ஆதிவாசிகள் மீதான படுகொலைகள், தலித்துக்களின் உரிமைகளைப் புறக்கணித்தமை, காஸ்மீரில் இடம்பெற்ற மிகப் பெரிய மனிதஉரிமை மீறல்கள், மாவோயிஸ்ட்டுக்களுடன் தொடர்புபட்ட மோதல்கள் எனப் பல மனிதஉரிமை மீறல்கள் இந்தியாவில் அரங்கேறியுள்ளன.

பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் அளவுகோல்களின் அடிப்படையில் ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என பிரபல மனிதஉரிமையாளர் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

ஆணையாளர் எவ்வகையைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என உறுப்பு நாடுகள் எதிர்பார்க்கின்றன?

இவ் உறுப்பு நாடுகளின் பிறிதொரு 'கைப்பொம்மையாக' இவ் ஆணையாளர் இருக்க வேண்டுமா?

இந்த அடிப்படையில் இவ் ஆணையாளரை தமது 'கைப்பொம்மையாக்க' விரும்பும் நாடுகள் எவையாக இருக்கும்?

அதாவது இவ் ஆணையாளர் பிரிட்டன் மற்றும் கனடாவின் செல்லப்பிள்ளையாக இருப்பாரா அல்லது இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளின் செல்லப்பிள்ளையாக இருப்பாரா? ஒட்டுமொத்தத்தில் இந்த விடயமானது எதனைப் பிரதிபலித்து நிற்கின்றது?

அதாவது பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளில் நிலவும் மனிதஉரிமை விவகாரம் தொடர்பாக, தீர்மானிக்கும் பொறுப்பு இந்த நாடுகளிடம் ஒப்படைக்கப்படுகின்ற போது- இது தொடர்பாக தீர்வை எட்டுவதில் எவ்வாறான சவால்களை பொதுநலவாய அமைப்பு எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை இதன் ஊடாக மிக எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதையே இது பிரதிபலித்துக் காட்டுகின்றது.

இவ்வாறான நிலைப்பாட்டில், உலக நாடுகள் அரசியல் அமைப்புக்களாக இருக்கின்ற காரணத்தினால் 'மனித உரிமைகள்' என்பது அரசியல் பிரச்சினையாக மாறிவருகின்றது.

இது பொதுநலவாய அமைப்பு சந்திக்கின்ற பிரச்சினையாக மட்டும் இருக்கவில்லை. இதேவிதமான பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையும் சந்திக்கின்றது.

ஆகவே, பரந்தளவில் பார்க்கின் பொதுநலவாய அமைப்பு நடந்து கொள்ளும் விதமானது அவமானம் தருவதாகவே உள்ளது.

அடுத்து சிறிலங்கா விவகாரத்தைப் பார்க்கின்ற போது, சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் பொதுநலவாய அமைப்பு மாநாடு தமக்கு 'வெற்றி’ எனத் தாமாகவே தெரிவித்திருந்தனர்.

அதாவது சிறிலங்கா மீது பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு இடம்பெறுவதற்கு முன்னர் இதன் மீது ஒருவிதமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட போதிலும் கூட, சிறிலங்கா அதிகாரிகள் தாம் இதில் வெற்றியைப் பெறுவார்கள் என்றே அறிவித்திருந்தனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு.

சிறிலங்காவிற்கு எதிராக அவுஸ்திரேலியத் தமிழர் ஒருவரால் தொடுக்கப்பட்ட வழக்கு அந்தநாட்டு அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டமை சிறிலங்கா தான் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் வெற்றி பெற்றுக் கொள்வேன் என நினைத்ததற்கான முதலாவது காரணமாகும்.

வழக்குத் தொடுத்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலே கலந்துரையாடப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதில் பொதுநலவாய அமைப்பு திறனற்றுக் காணப்பட்டது இரண்டாவது விடயமாகும். இந்த விடயமும் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

மூன்றாவதாக, 2013 இல் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை சிறிலங்காவில் மேற்கொள்வது தொடர்பில் வழங்கப்பட்ட மீள் உறுதிப்பாடாகும்.

தற்போது நடந்து முடிந்த பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக் கொண்ட ஆதரவானது மார்ச் 2012 இல் இடம்பெறவுள்ள ஐ.நாவின் மனிதஉரிமை சபையில் சிறிலங்கா எத்தகைய ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் என்பதையே காட்டிநிற்கின்றது.

இந்தியாவும் ஏனைய நாடுகளும் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் சிறிலங்காவிற்குக் காட்டிய அதேவிதமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் காட்டினால் சிறிலங்கா அதிலும் வெற்றியைப் பெற்றுக் கொள்ளும்.

ஐ.நாவால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு சிறிலங்கா தொடர்பாகத் தயாரித்த அறிக்கை மூலம் அந்த நாடு தண்டிக்கப்பட்டு விடும் என்ற அனுதாபத்தினால் இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் தமது ஆதரவை வழங்கவில்லை.

மாறாக தமது நாடுகளில் ஏற்பட்ட மனிதஉரிமை மீறல் சம்பவங்களைக் கருத்திற் கொண்டே அவை இவ்வாறு தமது ஆதரவை வழங்குகின்றன.
பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடானது இராஜதந்திர ரீதியான வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்பது தொடர்பில் சில விடயங்கள் அவதானிக்கப்பட வேண்டும்.

முதலாவதாக, அரசாங்கத்திற்கான 'வெற்றி' என்பது பொதுவாக வெளிநாட்டிலுள்ள புலிகளின் ஆதரவு சக்திகளை 'தோற்கடித்தமை' என்பதையே கருதுகின்றது.

ஆனால் உண்மையில், வெளிநாடுகளில் செயற்படும் புலிகள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக ஊடகங்கள் எதிர்மறைச் செய்திகளை வெளியிட்டுள்ள போதிலும், வெளிநாட்டில் செயற்படும் புலிகளுக்கான வெற்றியாகவே இது பார்க்கப்படுகின்றது.

இரண்டாவதாக சிறிலங்காவிற்கு எதிராக தீவிர குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக சிறிலங்காவுக்குள் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பொருத்தமான நீதி நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டால் சிறிலங்காவில் நீதியான சமாதானம் ஒன்று நிலைபெற்றிருக்க மாட்டாது.

மூன்றாவதாக, பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர கொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையானது நடுநிலைமையற்றதாகவும், சுயாதீனமற்ற விசாரணையாகவும் உள்ளதால் சிறிலங்கா தேசியளவில் கூட இன்னமும் நேர்மைத்தன்மையான விசாரணையை மேற்கொள்ளமாட்டாது என்பதையே குறித்து நிற்கின்றது.

குறிப்பாக, சிறிலங்காவின் இராணுவ வீரர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணையானது நீதித்தன்மையற்றதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

நான்காவதாக, சிறிலங்கா இராஜதந்திர ரீதியில் தனக்கான வெற்றியைப் பெற்றுக் கொண்ட போதிலும் கூட உள்நாட்டில் தற்போதும் மனிதஉரிமை மீறல்கள் தொடரப்படுகின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றவை இதற்கான உதாரணங்களாகும். இவ்வாறான விடயங்கள் சிறிலங்கா அரசாங்கம் மீது கண்டனத்தை மட்டும் மேற்கொள்ளவில்லை.

இவை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டுள்ள அதேவேளையில் இவை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தத்தையும் வழங்குகின்றன.

இறுதியில், சிறிலங்கா அதிபர், பிரித்தானிய மகாராணியாருக்கு கைலாகு கொடுக்கும் போது எடுக்கப்பட்ட ஒளிப்படமாகும்.

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் இந்த ஒளிப்படத்தில் மகாராணியாருக்கு அடுத்ததாக நின்றிருக்க வேண்டும். ஆனால் அந்த ஒளிப்படத்தில் அவரைக் காணவில்லை.

இது உண்மையாயிருந்தால், சனல் 04 தொலைக்காட்சி வெளியிடப்பட்ட ஆவணப்படமானது போலியானது, ஏமாற்றுத்தனமானது என்று சிறிலங்கா எப்படிக் கூறமுடியும் என்ற கேள்வி தீவிரமாக எழும்பும்.

அவ்வாறெனின் அந்த 'இராஜதந்திர வெற்றி' முற்றுமுழுதாக 'அவமானத்தில்' முடிவடைந்துள்ளது எனலாம்.
‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் ‘நித்தியபாரதி‘

இப்படித்தான் தற்கொலைத் தாக்குதல் செய்கிறதோ?

பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த காருடன் வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதி அவ் மோட்டார் சைக்கிளின் சிதறுகின்றது.
மோட்டார் சைக்கிளே இப்படிச் சிதறும்போது அதனை ஓட்டிச் சென்றவரின் நிலை...?

தண்டனையிலிருந்து தப்பிய அசுர வேகன்!

48 வயதை உடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான ரொபேட் மார்க் ஓன்ஸ் 600cc உடைய கவசாகி மோட்டார் சைக்கிளை நடை பாதையில் 150km அசுர வேகத்தில் செலுத்தியுள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டியது மட்டுமல்லாது அதனை வீடியோ செய்து யூ-டியூப்பில் இணைத்து தனக்கெதிரான அதாரமாக மாற்றியுள்ளார்.
இணையத்தில் சம்மந்தப்பட்ட வீடியோவை பார்த்த அநாமதேயர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுக்க மார்க் ஓன்ஸ் கைது செய்யப்பட்டு 51 வார கால சிறைத் தண்டனைக்கு உட்படுத்த உத்தேசிக்கப்பட்டார்.
பின் அது நீக்கப்பட்டு மாற்று தண்டனையாக பந்தயங்களில் பங்குபற்ற ஐந்து ஆண்டுத்தடை விதிக்கப்பட்டது.

வைரம், எலும்புகளால் உருவாக்கப்பட்ட ஐபேட்

தங்கம், வைரம், தைரனோசரஸ் டி ரெக்ஸ் எலும்புகளை கொண்டு 5 மில்லியன் பவுண்ட் விலையில் ஐபேட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை இங்கிலாந்தை சேர்ந்த டிசைனர் ஸ்டுவர்ட் ஹூகஸ் வடிவமைத்து அசத்தி உள்ளார். இதுகுறித்து ஸ்டூவர்ட் கூறியதாவது: வடிவமைப்பாளராக பணியை துவக்கிய நான், எப்பொழுதும் எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும், அதை சாதனையாக்க வேண்டும் என்று நினைப்பேன்.
அந்த வகையில் இந்த ஐபேட் வடிவமைப்பு இருந்தது. வித்தியாசமாக மேற்கொண்ட எனது முயற்சிக்கு தற்போது பலன் கிட்டி உள்ளது. இது தற்போதைய சாதனையாக உருவெடுத்து உள்ளது. இதை உருவாக்க அதிக கவனம் செலுத்தினேன்.
ஐபேட் 2 என பெயரிடப்பட்டுள்ள இதில் சுமார் 12.5 கேரட் வைரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் லோகோவுடன் தயாரிக்கப்பட்டுள்ள இதில் 53 விலை மதிப்பற்ற கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.
ஐபேடின் பின்புற பேட், தூய தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்புறம் அதிக சிறப்பு வாய்ந்தது. அமோலைட் என்ற சுமார் 75 மில்லியன் ஆண்டு பழமையான கல் மற்றும் டி ரெக்ஸ் எலும்புகள் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த எலும்பும் 65 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இது குறித்த அறிவிப்பு வெளியானதுமே ஏராளமானோர் என்னை தொடர்பு கொண்டு இந்த ஐபேடை வாங்கி கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதற்கு முன்பு பல்வேறு பொருட்களை தயாரித்து ஸ்டூவர்ட் சாதனை படைத்துள்ளார்.
அவற்றில் 2,19,995 பவுண்ட் மதிப்பிலான மாக்புக் ஏர் கம்ப்யூட்டரும், வைரங்கள் மற்றும் பிளாட்டினங்களை கொண்டு உருவாக்கப்பட்ட 20,995 பவுண்ட் மதிப்பிலான ஐபோனும் குறிப்பிடத்தக்கவை.
தற்போதைய ஐபேட் 2 மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று பெயர் வெளியிட விரும்பாத ஒருவருக்கு விற்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று மட்டுமே விற்பனைக்கு உள்ளது.

இறந்த தாயுடன் 2 நாட்கள் வாழ்ந்த 3 வயது சிறுமி உயிருடன் மீட்பு

நியூசிலாந்தில் இறந்த தாயுடன் 2 நாட்களாக இருந்த 3 வயது பெண் குழந்தையை உறவினர்கள் மீட்டனர்.
நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் வசித்தவர் லாரன்சில் பெரி(28). ஷைலா சில்பெரி என்ற 3 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
லாரன்சில் அடிக்கடி தனது தாய் மற்றும் சகோதரரிடம் போனில் பேசுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக லாரன்சில் யாருக்கும் போன் செய்யவில்லை.
நேற்று லாரன்சில் பெரிக்கு அவரது சகோதரர் பீட்சில்பொரி போன் செய்தார். ஆனால் யாரும் போன் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பீட்சில்பொரி லாரன்சில்சின் பக்கத்து வீட்டில் வசித்து தனது நண்பருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.
பக்கத்து வீட்டுக்காரர் லாரன் சில்சின் வீடு அருகே சென்ற போது பிணவாடை வீசியுள்ளது. இதில் சந்தேகமடைந்த அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பொலிசார் வந்த உள்ளே தாளிடப்பட்டிருந்த கதவை உடைத்து பார்த்தார்.
அப்போது லாரன்சில் பெரி இறந்து கிடந்தார். தாய் இறந்ததை அறியாத ஷைலா பெரி, அவரது அருகில் மயங்கி கிடந்தாள். லாரன்சில் இறந்து 2 நாட்களாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வீட்டை சோதனையிட்ட போது உணவுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது.
தாய் இறந்ததை அறியாத சிறுமி ஷைலா, பிரிட்ஜில் இருந்த வெண்ணெய், ரொட்டி, பால் ஆகியவற்றை எடுத்து சாப்பிட்டது தெரிந்தது. பிண நாற்றத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஷைலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். நல்ல உடல்நலத்துடன் இருந்த லாரன்சில் திடீரென இறந்த காரணம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மனிதம் செத்து போன மற மண்டைகளினால் நீரில் வீசப்படும் குழந்தைகள் ..!

அழகிய சிறுவன் சடலமாக மக்களினால் மீட்க படுகின்றான் .அதேபோல பிறந்த சிசு ஒன்று பொலித்தீன் பையினால் சுற்ற பட்டநிலையில் மிதந்து வருகின்றது அந்த குழந்தையிணையும் மீட்டு அவர்கள் எடுத்து ஓடும் அதிர்ச்சி காணொளிகள் பார்பவர்கள் விழியில் நீர் கசிய வைக்கும் அதிர்ச்சி காட்சிகள் .
இலங்கையில் ஆற்றில் வீச பட்ட அழகிய மூன்று வயது சிறுவன் மூச்சு திணறி உயிர் பிரிந்த நிலையில்

வேற்றுக் கிரக வாசிகளை அடையாளம் காண்பது எப்படி?

வேற்றுக் கிரக வாசிகளை சாதாரண மக்களாலும் அடையாளம் காண முடியும் என வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எமது பூமிக்கு அப்பால் வேறு உலக வாசிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வானியல் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது.
பூமியில் பலரும் இதனை கண்டதாகவும் நிரூபிக்கப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பூமியை நோக்கி வரும் வேற்றுக் கிரக வாசிகளை எவ்வாறு அடையாளம் காணலாம் என்பது பற்றி வானியல் விஞ்ஞானிகள் இலகுவான வழிமுறை ஒன்றை கூறுகின்றனர்.

அதாவது வெளி உலகில் இருந்து வரும் போது அவர்களின் வாகனத்தின் ஒளி எமது கண்ணுக்கு தெரியும். செயற்கையாக வரும் ஒளியைக் கொண்டு இவை வெளி உலகில் வருபவர்களின் அடையாளம் என்பதனை தெரிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர்.
தூரத்துக்கு ஏற்றவாறு பொருட்களின் ஒளி மாறுபடும். எனவே நிலையான ஒளியையும், செயற்கையாக வரும் ஒளியையும் இலகுவாக கண்டு கொள்ளலாம் என பௌதிக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நடனமாடி தனது பெற்றோரை காப்பாற்றும் 6 வயது சிறுமி

உடல் நிலை சரியில்லாத தனது பெற்றோரை வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார் சீனாவை சேர்ந்த ஆறு வயது சிறுமி Huang Doudou.
பள்ளிக்குச் சென்று பாடபுத்தகத்திலும், விளையாட்டிலும் கவனத்தை செலுத்த வேண்டிய வயதில் படிப்புடன் சேர்த்து தனது குடும்ப பாரத்தையும் சேர்த்து சுமக்கின்றார் Huang Doudou. வேலைக்குச் சென்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் இவரது பெற்றோருக்கு இடது காலில் காயம் உண்டானது. இதனால் இவர்களால் பணிக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளிமுடிந்து வீடு திரும்பிய பிறகு இரவு 11மணி வரை இரவு நேர விடுதியொன்றில் நடனமாடி பணம் சம்பாதிக்கிறார். வீட்டிலிருந்து தனது அம்மாவின் உதவியுடன் 1 மணி தியாளங்கள் பேருந்தில் பயணம் செய்து இரவு விடுதிக்கு செல்கிறார்.
மூன்று சுற்றுக்கள் வீதம் நாளொன்றிற்கு நடனமாடி மாதம் £80 சம்பாதிக்கின்றார். இரண்டு அறைகள் மட்டும் உள்ளடக்கிய இவர்களது வீடு வறுமையின் தோற்றத்தை பிரதிபலிக்கின்றது. முடக்கப்பட்ட நிலையில் உள்ள இந்த பெற்றோர்கள் Huang Doudou சிறுமியின் வருமானத்தை தான் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.


விரியன் பாம்பை மூக்கினுள் விட்டு வாயால் எடுக்கும் சீனர்!

எப்படி சுவாசிக்கிறார் இந்த மனிதர். அதுவும் பாம்பை மூக்கினுள் வைத்துக் கொண்டு..
மூன்று அடி நீளமான பாப்மை மூக்குக்கால் விட்டு வாயினால் எடுக்கிறார் இந்த அதிசய மனிதர்.
அதுவும் ஒரு பாம்பல்ல இரண்டு பாம்பை ஒரே நேரத்தில் மூக்கிலிருந்து வாயினால் எடுக்கிறார்.
சீனாவின் Jiangxi மாகாணத்தைச் சேர்ந்த 52 வயதான Liu Fei என்ற மனிதரே இவ்வாறு அசாத்தியமான செயல்களைச் செய்கின்றார்.
நிறைய பயிற்சிகள் மூலமே இந்த வித்தை சாத்தியம் ஆனது. பாம்புகள் கொடியவை அல்ல என்கிறார் இவர்.

என்ன ஒரு அழகு தேவதை!

உலகத்தில் அழகான பெண்கள் ஏஞ்சலினா ஜோலியும் ஐஸ்வர்யாராயும் என்று நினைக்கக் கூடாது. அவர்கள் அழகிய பிரபலங்கள் மட்டும் தான்.
அழகு என்பது பொதுவாக பெண்களின் கண்களில் இருக்கின்றது என்று பொதுவாக கூறுவர்.
என் கண்களும் மூளையும் இணைந்தே என் முக அழகை மெருகூட்டுகின்றது என்று கூறுகிறார் Fathima Kulsum Zohar Godabari.
இவர் வேறு யாரும் அல்ல சவூதி அரேபியாவின் வருங்கால இளவரசி.
சில நாட்களுக்கு முன்னர் niqab போட்டு முகத்தை மறைக்காத அவரது படங்கள் இணையத்தில் வெளியாகின.
அவரது அழகிய முகமும், சாம்பல்நிறக் கண்கள், கூர்மையான புருவம், அழகிய சீரான பல் வரிசை, சிவந்த உதடு போன்றன மிக மிக அழகாக இருக்கின்றன.
அவரது முகம் ஒரு இயற்கை அதிசயம் போல உள்ளது. ஒருவேளை இவர் தான் உலக அழகியாக இருக்கக் கூடும்.
உண்மையில் பிரம்மனின் விசேட படைப்பு தான் இந்த அழகு தேவதை...

இத்தாலி ஜெனோவா நகர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது- 6பேர் பலி- பலரை காணவில்லை

இத்தாலிய துறைமுக நகரான ஜெனோவாவில் ஏற்பட்ட கடும் மழை அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வெள்ளத்திற்கு அவர்கள் தஞ்சம் அடைந்திருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.
வெள்ளநீரில் அள்ளுப்பட்ட வந்த கார்களில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.
வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் மாடிக்கட்டடங்களில் ஏற வேண்டாம் என்றும் ஜெனோவா நகர பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. நகரிலிருந்து பலர் காணாமற்போய்விட்டதாகவும் கூறப்படுகின்றது.
இது எதிர்பாராத துக்ககரமான சம்பவம் என்று நகர மேயர் மார்த்தா விசென்சி தெரிவித்தார்.
இத்தாலியின் வடகிழக்கு நகரான ஜெனோவாவில் வெள்ள நீரூடாக மக்கள் நடந்து செல்வதையும் வெள்ள நீரில் கார்கள் மிதந்து போவதையும் தொலைக்காட்சி இத்தாலி தொலைக்காட்சிகள் காட்டின.
இரண்டு ஆறுகளின் கரைகள் உடைப்பெடுத்துள்ளதால் மேட்டுப்பாங்கான இடங்களுக்குச் செல்லும்படியும் மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்திலிருந்து மக்களை வெளியேற்ற ரப்பரிலான படகுகளை மீட்புப்பணியாளர்கள் பயன்படுத்துகின்றனர். வீதிப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மழைவெள்ளத்தோடு கடல் மற்றும் ஆற்று நீரும் புகுந்ததால் உல்லாசப்பிரயாணத்திற்கு பிரசித்தி பெற்ற துறைமுக நகரான ஜெனோவா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

இங்கிலாந்து M5 நெடுஞ்சாலையில் பாரிய விபத்து- பலர் உயிரிழப்பு- 43க்கும் மேற்பட்டவர்கள் காயம்!

இங்கிலாந்து எம்5 நெடுஞ்சாலையில்(near Taunton) இரவு நடந்த வாகன விபத்தில் பலர் கொல்லப்பட்டதுடன் 43க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 20சிறிய ரக வாகனங்களும், 6 பாரஊர்திகளும் சேதமடைந்துள்ளன.மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன. கார்கள் தீப்பற்றி எரிந்ததால் அவற்றில் பலர் சிக்கி இறந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் என் படத்தை வெளியிடமாட்டேன் – இயக்குநர் சசிகுமார்!

தமிழ்ப் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் தொடர்கிறது. அவர்கள் என்ன நமது படங்களுக்கு தடை விதிப்பது. இலங்கையில் எனது படத்தை திரையிட அனுமதி தரமாட்டேன்.
கோடம்பாக்கம் நினைத்தால் கொழும்பு வருமானத்துக்கே செக் வைக்க முடியும், என்று இயக்குநரும் தயாரிப்பாளருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய தமிழ் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிக்கிறது. புதுப்படங்களை அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்களை நீக்குகிறது. இஷ்டம் போல் காட்சிகளை வெட்டித் தள்ளி அரை குறையாக திரையரங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தீபாவளிக்கு வெளியான 7ஆம் அறிவு படத்திலும் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்கள் நீக்கப்பட்டன. இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பத்திரிகைப் பேட்டியில், “தமிழனாகப் பிறந்த எல்லோருமே ஈழ உணர்வாளர்கள்தான். இதயத்தைப் பிளந்து காட்டித்தான் அதை வெளிப்படுத்தணும்கிற அவசியம் இல்லை. சராசரி சசிகுமாராக அந்த துயரத்துக்காகத் துடிச்சிருக்கேன். கதறி இருக்கேன். உணர்வோ உதவியோ, என்னால் முடிஞ்சதை எப்பவுமே செய்றவன் நான். அதை வெளியே காட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்பவும் ´போராளி´ படத்துக்கான எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். ஒரு தயாரிப்பாளரா இந்த முடிவு என்னைப் பாதிக்கும்தான். ஆனால், கண்ணீரும் கதறுலுமா நம்ம சொந்தங்கள் அல்லாடித் தவிக்கிற அந்த மண்ணில் படம் ஓட்டிக்காட்ட நான் விரும்பலை.
முன்னாடிலாம் கிராமப்புறங்களில் வயதானவங்க இறந்துட்டா தூக்கம் விழிக்கணுங்கிறதுக்காக துக்க வீட்டில் சினிமா ஓட்டுவாங்க. உலகத்தையே உலுக்கிய துக்கத்துக்கும் நாம படம் ஓட்டிக்கிட்டு இருக்கிறது நியாயமா படலை.
அங்கே மிச்ச சொச்சமா இருக்கிற தமிழர்களும் படம் பார்க்கிற மனநிலையில் இல்லை. சுற்றுலாவும் சினிமாவும்தான் இலங்கையோட பொருளாதார ஆதாரம். தொப்புள்கொடி உறவுனு துடிக்கிற நாம் எதுக்காக இலங்கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை கொடுக்கணும்? எவ்வளவு லாபத்தை இழந்தாலும், இனி நான் எடுக்கப்போற எந்தப் படத்துக்குமே எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக் கப்போறது இல்லை.
தமிழ் உணர்வு களைத் தட்டி எழுப்புற மாதிரி ஒரு வசனம் வந்தால்கூட சம்பந்தப்பட்ட படத்தை இலங்கை அரசாங்கம் தடை பண்ணிடுது. சமீபத்தில்கூட இந்த மாதிரி கெடுபிடிகளை இலங்கை அரசு காட்டி இருக்கு. அவங்க என்ன நம்ம படங்களைத் தடை பண்றது?
கோடம்பாக்கம் மனசு வைத்தால் கொழும்புக்கே வருமானரீதியா செக் வைக்க முடியும். நமக்கும் இதில் இழப்பு இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது? உயிரையும் உயிரா நெனச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காக வருமானத்தை இழக்குறது தவறே இல்லை!´´ என்று கூறியுள்ளார். சசிகுமாரின் இந்த அதிரடி முடிவு தமிழ் உணர்வு கொண்ட பல தயாரிப்பாளர்களையும் யோசிக்க வைத்துள்ளது.