Tuesday, 15 November 2011

தெய்வீக குரலுக்கு ஆண்டு 50 – கே.ஜே. யேசுதாஸ் சாதனை(video)

கர்நாடக இசை மேதையும் பிரபல பின்னணிப் பாடகருமான, கே.ஜே. யேசுதாஸ் திரைத்துறையில் பாடகராக அறிமுகமாகி 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்துள்ளார். திரைப்படத்துறையில் இது மிகப்பெரிய சாதனையாக போற்றப்படுகிறது.

எப்போதெல்லாம் நல்ல இசை கேட்கிறோமோ அந்த நிமிடங்களில் மனம் நனைந்து கரைந்து உருகும் அதிசய அனுபவத்தைப் பெறுகிறோம். மொழிகளுக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது இசை மட்டுமே. எதிரியே பாடினாலும் நின்று கேட்க வைக்கும் அபார சக்தி இசைக்கு மட்டுமே சொந்தம். அந்நிய மொழிக்கு சொந்தக்காரராக இருந்தாலும் தெய்வீக குரலுடைய கே.ஜே. யேசுதாஸ் பாடிய பாடல்கள் அனைத்து பாடல்களுமே கேட்கக் கேட்க திகட்டாதவை.

50 ஆண்டுகள் சாதனை

கேஜே.யேசுதாஸ் ஒரு பாடகராக அறிமுகமாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தனது 50 ஆண்டுகால கலை வாழ்க்கையில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி. பெங்காலி, ஒரியா, குஜராத்தி, துலு, மராத்தி, ஆங்கிலம், ரஷ்யன் உள்ளிட்ட 14 மொழிகளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார்.

விருதுக்கு விருது

தெய்வீகப் பாடகர் எனப் போற்றப்படும் யேசுதாசுக்கு கலை மற்றும் கலாசாரத்தில் தன்னிகரற்ற பங்களிப்புகளிப்பிற்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் மத்திய அரசின் விருது பெற்றுள்ளார். திரைத்துறையில் சிறந்த பாடல்களை பாடியதற்காக 7 முறை தேசிய விருதும் 17 முறை மாநில விருதும் பெற்றுள்ளார்.

இவரது புகழினை பரப்பும் வகையில் இவரது இளையமகன் விஜய் யேசுதாஸ் புகழ்பெற்ற பின்னணி பாடகராக உருவெடுத்துள்ளார்.

முதல் திரைப்பட பாடல் 







தமிழில் முதல் திரைப்பட பாடல் 



3 '. பட பாடலை சுட்டுப் போட்டவருக்கு நன்றி ! : தனுஷ்(பாடல் இணைக்கப்பட்டுள்ளது )



தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் ' 3 '. இப்படத்திற்கு அனிருத் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். டிசம்பர் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் , ஜனவரி மாதம் படத்தினையும் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ' WHY THIS கொலவெறி கொலவெறிடி? ' என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. படக்குழு எப்படி அந்த பாடல் அதற்குள் வெளியானது என்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்பாடல் ROUGH CUT எனப்படும் முழுமை பெறாத நிலையில் தான் வெளியாகியுள்ளது. பாடல் வரிகள் அனைத்துமே இளைஞர்களை கவர்ந்துள்ளது.

இதனால் ஓரிரு நாட்களில் ' WHY THIS கொலவெறி கொலவெறிடி?'  முழுமையான பாடலை மட்டும் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ROUGH CUT முறை பாடலே வரவேற்பை பெற்று இருப்பதால், முழுவடிவம் அடங்கிய பாடலும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

இது குறித்து தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " ' 3 ' படத்தின் ஒரு பாடல் புதன்கிழமை வெளியாகிறது. இணையத்தில் வெளியாகி இருக்கும் ' WHY THIS கொலவெறி கொலவெறி டி? ' பாடல் ஒரிஜினல் பாடலோடு  ஒப்பிடும் போது வெறும் 2% மட்டுமே. யார் அப்பாடலை வெளியிட்டார்களோ.. அவர்களுக்கு நன்றி... நாங்களே கூட இவ்வளவு விளம்பரப்படுத்தி இருக்க மாட்டோம்.." என்று தெரிவித்துள்ளார்.

'மயக்கம் என்ன' படத்தில் சில பாடல்களை எழுதிய தனுஷ், '3' படத்தின் அனைத்து பாடல்களையும் தனுஷ் எழுதி இருக்கிறார்.





வியாழக்கிழமை முதல் பெட்ரோல் விலை குறைகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத் துக்கு ஏற்ப இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை இந்திய எண்ணை நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதன்படி கடந்த 3-ந் தேதி பெட்ரோல் விலை ரூ.1.80 உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலை சுமார் ரூ.10 உயர்ந்து விட்டது. சென்னையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.63-க்கு விற்றது. தற்போது அது ரூ.73 ஆக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலையைத் தொடர்ந்து டீசல், சமையல் கியாஸ், விலையும் உயரலாம் என்று கூறப்பட்டதால் மக்களிடம் அதிருப்தி அதிகரித்தது. இந்த நிலையில் கச்சா எண்ணை விலை குறைந்தது. கடந்த மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணை 125 டாலராக இருந்தது.

தற்போது அது 115 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. கச்சா எண்ணை விலை குறைவால் பெட்ரோல் விலையை குறைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுத்திரிகரிப்பு வரி உள்பட எல்லா செலவினங்களும் குறைந்துள்ளதால், எண்ணை நிறுவனங்கள், பெட்ரோல் விலையை குறைக்க சம்மதித்துள்ளன.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1 வரை குறைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் லிட்ட ருக்கு ரூ.2 வரை குறைக்க எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. எண்ணை நிறுவனங் களின் ஆலோசனை கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் விலை குறைப்பு முடிவு எடுக்கப்படும்.

 நாளை இரவு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 17-ந் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வரும். 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்துக்கு பிறகு பெட்ரோல் விலை குறைய இருப்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற கூட்டம் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்த கூட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கு முன்னதாக பெட்ரோல் விலையை குறைத்து எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல் விலை குறைப்பு மூலம் கூட்டணி கட்சியான திரிணாமூல் காங்கிரசின் மிரட்டலை புறக்கணிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.    

'தனியாக போட்டியிட்டிருந்தால் தேமுதிகவுக்கு 'சிங்கிள்' சீட் கூட கிடைத்திருக்காது'

சட்டசபைத்தேர்தலிலும் அத்தனை கட்சிகளும் தனியாக போட்டியிட்டிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், தேமுதிகவுக்கு ஒருசீட் கூட கிடைத்திருக்காது. ஆனால் எங்களுக்கு 6 சீட் கிடைத்திருக்கும் என்று பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், பாரதீய ஜனதா கட்சி வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதன் பயணம் தமிழகத்தில் 5 ஆண்டிற்கு ஆளும் கட்சியாக வேண்டும். இது முடியுமா? முடியாதா? நடக்குமா, நடக்காதா? என்று எண்ணிக் கொண்டிருக்க கூடாது.

இந்த உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித் தனியாக நின்றதால் மூன்று கட்சிகள் லாபம் அடைந்திருக்கிறது. ஒன்று அ.தி.மு.க.,, இரணடாவது ம.தி.மு.க., மூன்றாவது பாரதீயஜனதா.

தமிழகத்தில் பா.ம.க. பிளவுபட்டுள்ளது. அக்கட்சி முக்கிய பிரமுகர்கள் என்னை சந்தித்திருக்கிறார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம்.

உள்ளாட்சி தேர்தலை போல அனைத்து கட்சிகளும் சட்டமன்ற தேர்தலையும் சந்தித்திருக்க வேண்டும். அப்படி தனித்தனியாக போட்டியிட்டிருந்தால் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைத்திருக்காது. பா.ஜ.க பெற்ற ஓட்டு விகிதத்தை பார்த்தால் ஆறு இடம் கிடைத்திருக்கும்.

இந்த நிலை மேலும் வளரும், பாஜக ஆளுங்கட்சியாக மாறும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஒஸ்தியை ரிலீஸ் செய்கிறார் டி.ஆர்.


சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஒஸ்தி படத்தை தானே ரிலீஸ் செய்யப்போவதாக கூறியிருக்கிறார் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர். மலையாக இருந்தாலும் அதை கூழாங்கல்லாக உருட்டி பார்க்கலாமே என்று நினைப்பவர் டி.ராஜேந்தர். அப்படிப்பட்ட டி.ராஜேந்தரின் தன்னம்பிக்கைக்கே ரிலையன்ஸ் நிறுவனத்தால் வந்திருக்கிறது சோதனை. ஒஸ்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடலாம் என்று நினைத்து அக்ரிமென்ட்டும் போட்டுவிட்டார்கள் இவர்கள். ஆனால் விநியோகஸ்தர்களிடம் போனால், சிம்பு நடிச்ச "வானம்" படம் அவ்வளவு பெரிசா போகலையே என்கிறார்களாம். ரிலையன்ஸ் கொடுத்த பணத்திற்கும், வாங்க வந்தவர்கள் சொன்ன விலைக்கும் ரொம்ப வித்தியாசம்.

கையை பிசைந்து கொண்டு நின்ற ரிலையன்ஸ் நிறுவனத்திடம், படத்தை எங்கிட்ட கொடுத்திட்டு போங்க. நான் பார்த்துக்குறேன் என்ற சவால் விட்டுவிட்டார் டி.ஆர்,. அவர்களும் இதுதான் சந்தர்பம் என படத்தை கைமாற்றிவிட்டிருக்கிறார்கள். ரிலையன்சிடம் மவுனமாக விலையை குறைத்த அதே விநியோகஸ்தர்கள், டி.ஆரிடம் சிரித்துக் கொண்டே குறைக்க முயல, விடுங்கய்யா நானே ரிலீஸ் பண்றேன் என்று கூறி விட்டாராம் டி.ஆர்.

அமெரிக்காவில் மேயரான 18 வயது பள்ளி மாணவர்


அமெரிக்காவில் 18 வயதே நிரம்பிய பள்ளி மாணவர் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர்டால் என்ற சிறிய நகரத்தின் மேயராக வெற்றி பெற்றுள்ள மாணவருக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிகின்றன.

அமெரிக்காவின் அயோவாவில் உள்ள ஆர்டால் என்ற சிறிய நகரத்திற்கான மேயர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதய மேயர் விர்ஜில் ஹோமரை எதிர்த்து ஹாம்டன் துமாந்த் உயர்நிலைப்பள்ளியில் படித்து வரும் ஜெர்மி மின்னியர் என்ற 18 வயது மாணவர் போட்டியிட்டார்.

மாணவர் மின்னியருக்கு அமோக ஆதரவு பெருகியது. உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றும் மின்னியருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது. பலமான போட்டி நிலவிய நிலையிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விர்ஜில் ஹோமரை விட 24 வாக்குகள் அதிகம் பெற்று ஜெர்மி மின்னியர் வெற்றி பெற்றார். மாணவர் மின்னியருக்கு அவர் தங்கியுள்ள ஆர்டால் பகுதி மக்கள் அமோகமாக ஓட்டளித்து உள்ளனர்.

தந்தையும் மேயர்தான்

ஆர்டால் நகரின் மேயராக இருந்த விர்ஜில் ஹோமர் சரியாக நலப்பணிகளை செய்யவில்லை, நகரினை கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இதன் காரணமாகவே அவரை தோற்கடித்துவிட்டு மின்னியரை வெற்றி பெறச்செய்துள்ளனர். மின்னியர் வருகிற ஜனவரி 3-ந்தேதி மேயர் ஆக பதவி ஏற்கிறார். மாணவர் மின்னியரின் தந்தையும் முன்னாள் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் பெருமையை மின்னியர் தக்கவைத்து கொள்ளவாரா என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. 18 வயது மேயருக்கு பல பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.