Monday, 13 February 2012

ரஜினியின் கோச்சடையான் புதிய ஸ்டில்லை வெளியிட்டார் சௌந்தர்யா


கோச்சடையான் படத்தில் ரஜினியின் புதிய ஸ்டில்லை இன்று வெளியிட்டுள்ளார் ரஜினியின் மகளும் படத்தின் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினி.

இந்த ஸ்டில்லில் வில்லேந்தி நிற்கிறார் ரஜினி. இது முழுக்க பர்பார்மென்ஸ் கேப்சரிங் எனும் முறையில் டிசைன் செய்யப்பட்ட ஸ்டில் ஆகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் முதல் டிசைனை வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் ஸ்டில் ஒரிஜினல் ரஜினியைக் கண்முன் நிறுத்தியது.

இப்போது வெளியாகியுள்ள ஸ்டில்லில் உள்ள ரஜினி அனிமேஷன் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கோச்சடையானில் சரத்குமார், நாஸர், ஜாக்கி ஷெராப், ருக்மினி உள்பட பலர் நடிக்கின்றனர். தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார்.

ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

நயன்தாரா பற்றி கேள்வி! பதில் சொல்லாமல் புறப்பட்ட பிரபுதேவா!

 


பிரபல நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவா சனிக்கிழமை (11.02.2012) ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் ராகு கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜையில் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் பூஜை செய்தார். பின்னர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானபூங்கோதை அம்மையாரை தரிசனம் செய்தார்.


தரிசனம் முடிந்ததும் அவருக்கு கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் தீர்த்தப்பிரசாதங்கள், சாமிபடங்களை கோவில் நிர்வாகிகள் வழங்கினர். காலை 11.30 மணிக்கு கோவிலுக்கு வந்த அவர் பகல் 1 மணிக்கு கோவிலை விட்டு வெளியே வந்தார்.


அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், தற்போது இந்திப்படம் ஒன்றில் நடித்து வருகிறேன். ரவுடி ராத்தோடு' என்ற அந்த இந்திபடத்தில் நான் தான் கதாநாயகன். வருகிற ஜுன் மாதம் 15ந் தேதி படம் வெளியாகிறது. ரசிகர்கள் இந்த படத்தை ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்" என்றார்.


தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் உங்களுக்கும், நயன்தாராவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு நோ கமெண்ட்ஸ்'. நான் சாமி தரிசனம் செய்ய வந்தேன். தற்போது அதைப்பற்றி பேசவிரும்பவில்லை என கூறி விட்டு வேகமாக சென்று விட்டார்.

தனுஷின் சச்சின் பாடல் YOUTUBE-இல் இருந்து நீக்கப்பட்டது

 


தனுஷ், மனைவி ஐஸ்வர்யாவுடன் நேற்று முன்தினம் ( பிப்ரவரி 08 ) திருப்பதிக்கு சென்றார்.  அவர்களுடன் இசையமைப்பாளர் அனிருத் சென்று இருந்தார்.

தனுஷ் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்திய பின்னர், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன நேரத்தில் தரிசனம் செய்தார்கள்.

தரிசனம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வந்த நடிகர் தனுஷ் நிருபர்களிடம்  " எனது மாமனார் நடிகர் ரஜினிகாந்த், ஏழுமலையான் அருளால் பூரண நலத்துடன் இருக்கிறார்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் '3' படத்திற்காக நான் சொந்தக் குரலில் பாடிய 'WHY THIS KOLAVERI' பாடல் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட புகழ் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தானில் இந்த பாடலுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாக அங்குள்ள எனது ரசிகர்கள் தெரிவித்தனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பற்றி பாடியுள்ள பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.

எனவே, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் நான் தொடர்ந்து சினிமாவில் சொந்த குரலில் பாடுவேன். " என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் தனுஷ் உருவாக்கிய சச்சின் பாடலை YOUTUBE இணையத்தில் இருந்து நீக்கி விட்டார்கள். இதற்கு தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " யாரோர் சச்சின் பாடலை இணையத்திலிருந்து நீக்கச் செய்திருக்கிறார்கள். ஒரு வாரமாக இரவு பகல் பாராமல் அப்பாடலுக்காக உழைத்திருக்கிறோம். அதை நீக்கிக் செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. சீக்கிரமே மீண்டும் இணையத்தில் அப்பாடலை வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். சட்டப்படி இதனை எதிர்கொள்வோம்." என்று தெரிவித்தார்.

தற்போது சச்சின் பாடல் மீண்டும் YOUTUBE இணையத்தில் மீண்டும் இணைக்கப்பட்டுவிட்டது.

மீண்டும் 'TRENDING'ல் தனுஷ்! (வீடியோ)


தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் வெளியாகி அனைவரது வரவேற்பை பெற்றது. டிவிட்டர் TRENDINGல் தொடர்ந்து 3 நாட்கள் முதல் இடத்தில் இருந்தது.

இதனால் KOLAVERI பாடல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானது. பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் BOOST நிறுவனம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினுக்காக ஒரு பாடல் தயார் செய்து தருமாறு தனுஷை கேட்டுக் கொண்டது.

இப்பாடல் எப்படி தயாராகி வருகிறது என்பது குறித்து தனுஷ் பேசி முதலில் ஒரு TEASER ஒன்றை வெளியிட்டார்கள். தற்போது அதன் முழு வீடியோ பதிவையும் வெளியீட்டு இருக்கிறார்கள்.

அவ்வீடியோ பதிவு வெளியான 1 மணி நேரத்திற்குள் இந்தியா முழுவதும் TWITTER TRENDINGல் 7ம் இடத்தை பிடித்து இருக்கிறது. சச்சினுக்காக தனுஷ் உருவாக்கி இருப்பதால் கொலவெறி பாடலை விட இப்பாடல் பெரும் வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

வெளியான 1 மணி நேரத்திற்குள் TWITTER TRENDINGல் இடம் பெற்று இருப்பதால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தனுஷ் மற்றும் அனிருத்.

அப்பாடல் வீடியோ வடிவில்...


அப்பாடல் வரிகள் :

Yo Boys...
I am Sing Song..
Cricket Song
Sachin Song

Sachin... Sachin.... Sachin....

Super Mama... Ready... 1, 2, 3, 4...

One Plus one-u two -u two -u
If not sachin who-u? who-u?
28 states glue-u glue-u
nothing else to prove-u prove-u

Hey you are my pride-u
Hey roller coster ride-u
Every players guide-u
we are your side-u
We unite in your name sachin

Hey come-u Mama...
Hey hit- u Mama...
Hey six-u Mama...
hey Super-u Mama...

Hey come-u Mama... Sachin...
Hey hit- u Mama... Sachin...
Hey six-u Mama... Sachin...
Hey Super-u Mama... Sachin...

One day test u t20
Entertainment Guarantee...
89 your entry
Bringing Honour to our country..

Hey every Bowler-u Fear-u Fear-u
Cricket balls Tear-u Tear-u
Bharath Ratna Near-u Near-u
Come on India Cheer-u cheer-u

Darling of the mass-u
Demi god Face-u
oh little master
master blaster
you are our Boost-u..

11 மணிநேர மின்வெட்டு: கோவையில் பல்லாயிரம்பேர் ஆர்ப்பாட்டம் - போலீஸ் தடியடி!


கோவையில் 8 மணி நேர மின்வெட்டைக் கண்டித்து 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

11 மணிநேர மின்வெட்டு

கோவையில் தினசரி குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல், அதிக பட்சமாக 11 மணிநேரம் வரை மின் தடைநீடிப்பதால் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். மின் தடையைக் கண்டித்து கோவையில் உள்ள 36 தொழில் அமைப்பினர் கூட்டாக இணைந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோவையில் உள்ள வேலாண்டிபாளையம், ஆவாரம்பாளையம் பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, சின்ன வேடம்பட்டி, சிகோ, அரசூர், மலுமிச்சம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் என்ஜினீயரிங், குறுந்தொழில் கூடங்கள், வார்ப்பட தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சில தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

இது தவிர கோவையில் உள்ள காட்டூர், பழையூர், இடையர்பாளையம், ஒண்டிப்புதூர், உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் பம்பு, உதிரிபாகங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டு கிடந்தன.

ஆர்ப்பாட்டம்- கஞ்சித்தொட்டி

இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 10.30 மணிக்கு கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு தொழில் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொடிசியா தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழில் அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி, பலர் கைகளில் கறுப்பு கொடிகள், சிம்னி விளக்குகளை பிடித்தபடி கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் தடையில்லாமல் மின்சாரம் வழங்கு, பாரபட்சம் இல்லாமல் மின்சாரம் வழங்கு, உடலுக்கு தேவை உயிரோட்டம், தொழிலுக்கு தேவை மின்னூட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கஞ்சி தொட்டிகளை திறந்து, தொழிலாளர்களுக்கு இலவச கஞ்சி வழங்கினர்.

ரூ.250 கோடி உற்பத்தி இழப்பு

இது குறித்து போராட்டக்குழுவினர் சிலர் கூறுகையில், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொடிசியா, சிமா, இந்திய தொழில் வர்த்தக சபை, தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர் சங்கம், சிஸ்பா, காட்மா, டேக்ட் ஆகிய குறுந்தொழில் சங்கங்கள், கோவை சிறுமின் விசை பம்பு உற்பத்தியாளர் சங்கம், கோவை மாவட்ட வார்ப்பட சங்கம், சிறு வார்ப்பட ஆலை உரிமையாளர் சங்கம், கோப்மா, உள்ளிட்ட 36 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உரிமையாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர்.

கோவையில் ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு, 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ரூ.250 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்றனர்.

மறியல்- தடியடி

சில அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இருந்து கிளம்பி, கோவை டவுன் பஸ் நிலையம் எதிரே உள்ள சிக்னல் பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை.

ஆவேசத்துடன் அவர்கள் கோஷம் போட்டவாறு அங்கிருந்து செல்லாமல் அடம் பிடித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நாலா புறமும் கலைந்து ஓடினர்.

வாகனங்களில் வந்த பலரும் பீதியடைந்து ஓடினார்கள். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண், மற்றும் ஓட்டல் தொழிலாளியான முருகன் ஆகியோர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் காயம் அடைந்த முருகனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயத்துடன் அந்த பெண், அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பினார்.

இதைத் தொடர்ந்து போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பிய சில தொழிலாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பதில் பெருமை! - சரத்குமார்

 


சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரத் குமார்.

கோச்சடையானில் தனக்கு அடுத்த முக்கியத்துவம் மிக்க வேடத்தை சரத்துக்கு கொடுத்திருக்கிறார்.

நேற்று நடந்த பிரஸ் மீட்டில் இதுபற்றி சரத்குமார் கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானில் நான் நடிப்பது பெருமையாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி என்னிடம் ஒரு கதை பற்றி விவாதித்தார். மிக அருமையான கதை அது. ஆனால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. ஆனால் கதை இன்னும் என் மனசில் அப்படியே இருக்கிறது.

இப்போது மீண்டும் கோச்சடையான் மூலம் அவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அவர் இந்த நாட்டின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் நடிப்பது மகிழ்ச்சியான விஷயம்," என்றார்.


ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய திரையில் சினிமா படம் ஒளிபரப்பு


ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் உலகிலேயே மிகப்பெரிய வடிவிலான திரையில் சினிமா படம் திரையிடப்பட்டது. அதற்காக அங்குள்ள இமாஸ் திரையரங்கில் 29.7 மீட்டர் உயரம், 35.7 மீட்டர் அகல அளவில் திரை கட்டப்பட்டது.

அந்த திரை ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டது. அதில் 350 எடை சில்வர் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டது. அவை கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 800 கிலோ எடையுள்ள அந்த திரை 20 பாய் மரக்கப்பலில் கட்டப்படும் திரை அளவு கொண்டதாக இருந்தது.

இதில் 3டி (முப்பரிமாணம்) போன்று அந்த படம் தெரிந்தது. இதை அதற்குரிய கண்கண்ணாடி மூலமும் மற்றும் வெறுங்கண்ணாலும் பார்க்க முடிந்தது. இதற்கு அந்த திரையில் அடிக்கப்பட்ட விஷேச சில்வர் பெயிண்ட்டின் தரமே காரணம் என இமாஸ் திரையரங்கின் தலைமை செயல் அலுவலர் மார்க் பிரதர்டன் தெரிவித்தார்.

7-ஆம் வகுப்பு மாணவியை 6 மாதமாக கற்பழித்த ஆசிரியர் கைது


கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கொர்லா கண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியராக வேலை பார்த்தவர் அனுமந்தப்பா (38). இவர் 7-வது வகுப்பு மாணவிகளுக்கு கணக்கு பாடம் எடுத்து வந்தார்.

இந்த வகுப்பில் பாடம் படித்த 13 வயது மாணவியிடம் ஆசிரியர் அனுமந்தப்பா, “நீ இப்படி படித்தால் 'பாஸ்' ஆக முடியாது. எனவே வகுப்பு முடிந்த பிறகு உனக்கு தனியாக பாடம் எடுக்கிறேன் வாஎன்றார். ஆசிரியரின் வார்த்தையை நம்பி அந்த மாணவி பாடம் படிக்கச் சென்றார்.

ஆரம்பத்தில் பாடம் சொல்லிக் கொடுத்த அவர், பின்னர் மாணவியின் ஆசையை தூண்டும் வகையில் நடந்து கொண்டார். மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியரின் விருப்பத்துக்கு மாணவி உடன்படவில்லை. எனவே, “நான் சொல்வது போல் நீ நடக்காவிட்டால் உன்னை 7-வது வகுப்பில் 'பெயில்' ஆக்கி விடுவேன்என்று மிரட்டினார்.

இதனால் பயந்துபோன மாணவியை ஆசிரியர் அனுமந்தப்பா கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார். இதுபோல் 6 மாதம் அந்த மாணவியை தன் ஆசைக்கு அவர் பயன்படுத்தி இருக்கிறார்.

குடியரசு தினவிழா அன்று பள்ளிக்கு சென்ற மாணவியை, தனியாக வரும்படி ஆசிரியர் அழைத்துள்ளார். ஆனால் மாணவி அவரது பிடியில் சிக்காமல் வீட்டுக்கு சென்று விட்டாள். இதனால் ஆசிரியரின் தொந்தரவு அதிகமானது.

தனது மன உளைச்சல் குறித்து மாணவி தனது தோழிகளிடம் தெரிவித்தார். தகவல் தலைமை ஆசிரியருக்கு சென்றது. தாய் இல்லாத அந்த மாணவி தனது பாட்டியுடனும், விவசாயியான தந்தையுடனும் வசித்து வந்தார்.

அவளுக்கு நடந்த இந்த கொடுமை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஆசிரியர் 6 மாதமாக மாணவியை மிரட்டி கற்பழித்த உண்மை தெரிய வந்தது. இதையடுத்து, பள்ளி வளர்ச்சி கண்காணிப்புக் குழு மூலம் ஆசிரியர் அனுமந்தப்பா குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆசிரியர் வேலையில் இருந்தும் அனுமந்தப்பா 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.


தனுஷ் - சிம்பு மோதல்!


தனுஷும் சிம்புவும் வெளியில் சிரித்துப் பேசி கட்டிப் பிடித்து போஸ் கொடுத்தாலும், உள்ளுக்குள் அப்படி இல்லை என்பது கோலிவுட் அறிந்த சமாச்சாரம்.

கொஞ்ச நாள் அடங்கியிருந்த இவர்களின் பகை, மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது, ட்விட்டர் வழியாக.

சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு பாடலை உருவாக்கியிருந்தார் தனுஷ். இந்தப் பாடல் யு ட்யூபில் வெளியானது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பாடலை யுட்யூப் நீக்கிவிட்டது. அதற்குள் 4.5 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டிருந்தனர்.

உடனே தனுஷ், "அடுத்தவர் துன்பத்தைப் பார்த்து சிலர் சிரித்து மகிழ்கிறார்கள். மனித இனம் அன்பு செலுத்த படைக்கப்பட்டது என்ற உண்மை புரியாத அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்," என்று ட்வீட் செய்திருந்தார்.

உடனே சிம்பு தனது ட்விட்டரில், "காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமா இருக்காங்களே," என்று ட்வீட் பண்ணியிருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் தனுஷ்: "பிரதர், அந்தப் பாட்டை சச்சினுக்காக இலவசமாதான் செய்து கொடுத்தேன். பாடல் உருவாக்கத்துக்கான செலவு மட்டும் பூஸ்ட் நிறுவனம் கொடுத்திருக்கு," என்று கூறியிருந்தார்.

உடனே பதிலுக்கு சிம்பு, "உலகில் யாரும் யாருக்கும் எதிரியில்லை. வெற்றிதான் ஒருவரை உலகுக்கு காட்டுகிறது. தோல்வியோ உலகை உனக்குக் காட்டுகிறது," என தத்துவமழை பொழிந்திருந்தார்.

"போங்கப்பா... பொழப்பை சரியா பாருங்க... இல்லன்னா உங்களை ஒருத்தனும் பார்க்க மாட்டான்" - இது குறுக்கில் புகுந்த ஒரு ரசிகரின் கமெண்ட்!

இதெப்டி இருக்கு!

காப்பி அடிக்கப்பட்டது தான் தோனி :பிரகாஷ்ராஜ் ஒப்புதல் வாக்குமூலம்


நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்கி வெளிவந்திருக்கும் படம் தோனி. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். பிரபல தொலுங்கு இயக்குனர் பூரி ஜகநாத்தின் மகன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபு தேவா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். 



இதில் மாணவன் சரியாக படிக்கவில்லை என்றால், அவன் முட்டாள் இல்லை. அவனுக்குள் இருக்கும் வேற திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். படிச்சு மார்க் வாங்குவது மட்டும் தான் கல்வி என்பதை மாற்றி நம் கல்வி முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது தான் படத்தின் மையக் கருத்து.

இந்த படம் மராத்தி படமான ஷீக்‌ஷநச்சிய ஆய்ச கோஎன்ற படத்தின் தழுவலில் அமைந்துள்ளது. படிப்பில் கவனம் செலுத்தாத மாணவன், தோனி மாதிரி கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறான். அதை புரிந்து கொள்ளாத தந்தையும் ஆசிரியரும் அவனை துன்புறுத்துவதால், அந்த மாணவன் கோமாநோய்க்கு தள்ளப்படுகிறான். அந்த நோயிலிருந்து மகனை தந்தை போராடி மீட்டெடுத்து, மீண்டும் கிரிக்கெட்டில் உற்சாகப்படுத்துவது தான் கதை.

இதைப்பற்றி பிரகாஷ் பேசும்போது, நல்ல கதையை எங்கிருந்து எடுத்தால் என்ன? நான் சினிமாவை வியாபாரமாக பார்ப்பவன் அல்ல. என் நிருவனமான டூயட் மூவீஸ் தாயாரிக்கும் அனைத்து படங்களும் தரமான நல்ல படங்களாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் தோனி படத்தை நானே தயாரித்து இயக்கி இருக்கிறேன் என்றார்.

மராத்தியில் வெளியான ஒரு படம் தான் இப்படத்துக்கு இன்ஸ்பிரேஷன். நல்ல கதைகளை எந்த மொழியில் இருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதில் எந்த தவறும் இல்லை.

கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்பதையும், மாணவர்களுக்கு இருக்கும் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் இந்தியில் வெளியான தாரே ஜமீன் பர்”, “ 3 இடியட்ஸ்" போன்ற படங்கள் உணர்த்தின. அதே கருத்தை உணர்த்தும் வகையில் தோனிபடமும் அமைந்திருக்கிறது.