| அன்பு தமிழ் உறவுகளே,தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூவரின் காக்க கோரி மக்களின் குரல்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்ய வழக்கறிஞர்கள் குழு திட்டமிட்டிருக்கிறது. அதன் பொருட்டு மனிதநேயமிக்க மக்களாகிய உங்களிடம் உங்கள் கோரிக்கைகளையும் கடிதங்களையும் நாடி வந்திருக்கிறோம். தயவு கூர்ந்து வழக்கு தாக்கல் செய்யும் திங்கள் கிழமைக்குள் தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் உங்கள் கடிதங்களை கீழுள்ள தொலைநகல்(FAX) எண்ணுக்கு அல்லது மின்னஞ்சல்(email) முகவரிக்கு அனுப்பிவிட்டு பின் naamtamizhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உடனடியாக அனுப்புமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம். President Prathiba Patil Fax: (0091) 11 230 172 90 or 230 178 24 presidentofindia@rb.nic.in Home Minister P.Chidambaram Fax: (0091) 11 230 942 21 hm@nic.in Prime minister Manmohan Singh Fax: (0091) 11 230 195 45 230 168 57 manmohansingh@sansad.nic.in Tamil nadu CM Jayalalitha 011 91 44 281 33510 011 91 44 24992255 011 91 44 24991414 011 91 44 24992121 cmcell@tn.gov.in அன்பு நியூ சிலாந்து தமிழ் உறவுகளே தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூவரின் காக்க கோரி மக்களின் குரல்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்ய வழக்கறிஞர்கள் குழு திட்டமிட்டிருக்கிறது. அதன் பொருட்டு மனிதநேயமிக்க மக்களாகிய உங்களிடம் உங்கள் கோரிக்கைகளையும் கடிதங்களையும் நாடி வந்திருக்கிறோம். தயவு கூர்ந்து வழக்கு தாக்கல் செய்யும் திங்கள் கிழமைக்குள் தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் உங்கள் கடிதங்களை கீழுள்ள மின்னஞ்சல்(email) முகவரிக்கு அனுப்புங்கள். Her Excellency Smt. Pratibha Devisingh Patil President of India presidentofindia@rb.nic.in Sri M.Hamid Ansari Vice-President of India vpindia@nic.in His Excellency Mr. Manmohan Singh Prime Minister of India manmohansingh@sansad.nic.in Mr. P.CHIDAMBARAM Home Minister of India hm@nic.in Hon'ble Mr. Justice S.H. Kapadia Supreme Court of India supremecourt@nic.in Smt.Sonia Gandhi soniagandhi@sansad.nic.in President, Indian National Congress Shri L.K. Advani Leader of Opposition in the Lok Sabha advanilk@sansad.nic.in Smt.Meira Kumar speakerloksabha@sansad.nic.in Hon’ble Lok Sabha Speaker His Excellency Thiru Surjit Singh Barnala Governor of Tamil Nadu govsec@tn.nic.in Dr. J. Jayalalitha Chief Minister of the state of Tamil Nadu cmcell@tn.gov.in Hon. Justice Shri K.G. Balakrishnan National Human Rights Commission of India chairnhrc@nic.in |
Saturday, 27 August 2011
அன்பு தமிழ் உறவுகளே,கடிதங்களை உடனடியாக அனுப்புங்கள்! ( மின்னஞ்சல்(email) இணைப்பு)
காந்திய தேசத்தின் அதிர்ச்சிச் செய்தி - யதார்த்தமான உண்மைகளும் தமிழர்களின் எதிர்பார்ப்பும்
![]() |
| காந்திய தேசத்திலிருந்து கிடைத்த உயிர்ப்பலிச் செய்தி மனிதாபிமானமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தீவிரவாதம், மிதவாதம் என்பதற்கு அப்பால் காந்தீயவாதம் என்ற அஹிம்சாவழிக்கொள்கை சக்தியுடையதாகவும் உயிர்ச்சேதமற்றதாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் உள்ளது. ‘கோபம் வேண்டாம் - மன்னித்துவிடு’, ‘அஹிம்சையின் உன்னதம் அதனை அடையும்போது தெரியும்’ என்றெல்லாம் போதிக்கிறது காந்தீயவாதம். துப்பாக்கி முனையில் நிற்கும்போதும் மௌனம் ஆயிரம் மடங்கு பலத்தினைக் கொண்டிருக்கும் எனப் போதிக்கப்பட்டு காந்தீயவாதம் முளைவிட்டு உயிர்பெற்ற இந்திய தேசத்திலிருந்தா இச்செய்தி வந்திருக்கிறது என்பதை எண்ணுகையில் உள்ளம் பதைபதைக்கத்தான் செய்கிறது. ஆம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட்டுக் கொலை செய்ய அந்நாடு தீர்மானித்திருக்கிறது. அதற்கான திகதியும் (செப்டம்பர்,9) முடிவாயிற்று. உலகின் அதியுச்ச தண்டனையாக மரண தண்டனை உள்ளது. பழிக்குப் பழியாக உயிருக்கு உயிர்தான் எடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையுடையதால் பல்வேறு சமூக அமைப்புகளும் நாடுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆரம்பகாலங்களில் குழுக்கள், இராணுவப் பிரிவுகளுக்கிடையிலான மோதல்களின்போது தமது அமைப்புகளுக்குத் துரோகம் இழைத்தோரை அம்புகளால், துப்பாக்கியால் சுட்டுத் தண்டனை வழங்கும் வழக்கம் இருந்தது. தென்னிந்தியக் கப்பல் நிறுவனமொன்றில் கடமையாற்றிய ரொபர்ட் நொக்ஸ் என்ற மாலுமியை பிரித்தானியா 1659 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு அனுப்பியது. இலங்கை அனுபவம் தொடர்பில் அவரால் எழுதப்பட்ட நூலொன்றில், யானையின் காலால் மிதித்து இலங்கையர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு காலத்துக்குக் காலம் மரண தண்டனை வழங்கப்பட்டு வந்தது. ஏன் சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய சட்டதிட்டங்களை கடுமையாக மதிக்கும் நாடுகளில் பகிரங்கமான இடங்களில் சாகும்வரை கல்லால் எறிந்து தண்டனை வழங்குவதும் உண்டு. சமுதாயத்தின் சிந்தனையோட்ட வளர்ச்சி அடிப்படையில் நோக்குகையில் மரண தண்டனை என்பது பழிக்குப் பழி வாங்கும் செயலாகவே கருதப்படுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலையாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ செய்யப்பட்ட கொலைக்காக, வேறு குற்றங்களுக்காக விலை மதிப்பற்ற மனித உயிரையே ஈவது என்பது மிகக் கொடுமையானது என்றே கூற முடியும். ஆக, ரஜீவ் காந்தி கொலை விடயத்தில் இரு தசாப்த காலம் சிறைத்தண்டனை அனுபவித்ததில் உள ரீதியாக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் பெற்றுக்கொண்ட தண்டனை மரணத்தை விட வலி கூடியது. இவர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை நீக்கக் கோரி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் ஒரு தேசத்தின் தலைவர் கொலை செய்யப்பட்டதில் அனுதாபமோ, பாரபட்சமோ பார்க்கக் கூடாது என இந்தியத் தேசம் நினைக்கிறது. இந்த மூவருக்கும் வழங்கப்பட்ட கருணை மனு இவ்வளவு காலம் கிடப்பில் கிடந்து தற்போது முழு மூச்சாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதன் பின்னணி குறித்துச் சிந்திக்கையில் பொங்கியெழும் தமிழ்ச் சமூகத்துக்கு மறைமுகமான பதிலடியாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எவ்வாறாயினும் தமிழக முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மரணத்தின் விளிம்பிலிருக்கும் இவர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கை உலகத் தமிழரிடத்தே உண்டு என்பது யதார்த்தமான உண்மையாகும். |
ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க முடியும்! தமிழகத் தலைவர்கள் கையிலேயே அது தங்கியுள்ளது!
இக் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் எனக் கருதப்பட்ட முக்கிய நபர்களான ஒற்றைக் கண் சிவராசன் மற்றும் சுபா உள்ளிட்டவர்கள் பெங்களுரிற்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியில் வைத்து ஆகஸ்ட் 19, 1991ல் கொல்லப்பட்டனர்.
அதன்பிறகு இடம்பெற்ற இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் உளவுப் பிரிவின் தலைவரான பொட்டு அம்மான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் தேடப்படுவோராக 1999ல் அறிவிக்கப்பட்டனர்.
2006ம் ஆண்டு விடுதலைப்புலிகள் தாங்களாகவே “ராஜீவ் காந்தியின் கொலை ஒரு துர்ப்பாக்கியம், அந்தத் தவறுக்கு வருந்துகிறோம்” என பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தனர்.
எனினும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் உளவுப் பிரிவின் தலைவரான பொட்டு அம்மான் வன்னி இறுதிப் போரில் இறந்து விட்டதாகக் கூறி அவர்களது பெயர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் தேதி வழக்கிலிருந்து இந்திய அரசால் உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டது.
அதுபோலவே வழக்குச் சோடிக்கப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்ட 26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதும் அதன் மீது தமிழர்களில் தொடரப்பட்ட மீள் வழக்கில் 22 பேருடைய மரண தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டு நால்வரே மரண தண்டனைக் கைதிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அதிலொருவரான சிறீகரன் நளினி அல்லது முருகன் நளினியுடனான சோனியா காந்தி மற்றும் அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோரது சந்திப்பையடுத்து அதுகூட ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இவ்வாறு முதன்மைக் குற்றவாளிகள் இல்லாமலேயே இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதும், ஏனைய குற்றஞ் சாட்டப்பட்டவர்களிற்கு தண்டனை குறைக்கப்பட்ட போதும் இந்த மூவருக்கும் நீதியானதொரு விசாரணைக்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருக்கிறது என்பதே பிரதான காரணமாகும்.
அத்தோடு இந்த வழக்கிற்கு தடாச் சட்டத்திற்குள் விசாரிக்கப்பட்டிருக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்தக் கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட ஜெயின் மற்றும் வர்மாக் கமிசன் அறிக்கைகள் நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக இருந்தவை மற்றும் இவர்கள் விடுவிக்கப்படுவதற்கு சோனியா குடும்பத்தினர் தாங்கள் தடையாக இல்லை என்று கருத்துத் தெரிவித்தமையாகும்.
மேலும் இவர்களது மனுவில் நியாயத்தன்மை இருந்தபடியால் தான் அது 11 வருடங்களாக பல ஜனாதிபதிகளால் விசாரிக்கப்பட்டிருக்கிறது அவர்கள் இந்த மனுவை நிராகரிப்பதற்குத் தயங்கியிருக்கிறார்கள் என்பனவும் வாதப் பொருட்களாகலாம் எனக் கருதப்படுகிறது.
இவ்வளவு பலவீனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு வழக்கு மீள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலேயே அதன் உண்மைத் தன்மை வெளிவரும்.

இலங்கைக்கான பயணத்தை சுஸ்மா சுவராஜ் ரத்துச்செய்தார்
இலங்கையின் வடக்கு, கிழக்கில் உண்மை நிலையைக் கண்டறியும் வகையில் சுஸ்மா சுவராஜ் இலங்கைக்கு பயணம் செய்யவிருந்தார்.
இலங்கையின் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் அழைப்பின் பேரில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் தனிப்பட்ட காரணங்களால் தமது பயணம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அவர் தமிழக தினமணி செய்தித்தாளுக்கு நேற்று தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 17-ம் திகதியன்று இரண்டுநாள் பயணமாக அவர் இலங்கைக்கு செல்லவிருந்தார். இதனை கடந்த வாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா உறுதிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் இலங்கைக்கு இந்திய நாடாளுமன்றக்குழு ஒன்று செல்லவுள்ளதாகவும் கிருஸ்ணா தெரிவித்திருந்தார்.
எனினும் தமது இலங்கை பயணம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுஸ்மா சுவராஜ், இலங்கைக்கு செல்லும் இந்திய நாடாளுமன்றக்குழுவில் இடம்பெறுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் ஒரே குழியில் 8 மனித மண்டை ஓடுகள் மீட்பு! அத்திபாரம் வெட்டும்போது வெளிக்கிளம்பின
உதவி அரச அதிபர் பணிமனைக்குப் பின்புறத்தில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சில தென்பட்டன.
எச்சங்கள் தென்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் அத்திபாரம் வெட்டும் பணிகள் உடனடியாக இடை நிறுத்தப்பட்டன.
இது தொடர்பாகப் பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து நேற்று ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா, சட்ட வைத்திய அதிகாரி எஸ். சிவரூபன் ஆகியோர் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது.
இதன்போது 8 மனித மண்டை ஓடுகள், எலும்புக் கூட்டு எச்சங்கள் என்பன அந்தக் குழியில் இருந்து மீட்கப்பட்டன.
இவற்றுடன் உடைகளோ வேறு எந்தவிதமான தடயப் பொருள்களோ காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த எலும்புக் கூடுகள் 10 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனச் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை குறித்த நெடுந்தீவுப் பிரதேசம் கடந்த பல வருடங்களாக டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சுஸ்மா சுவராஜூக்கு இலங்கை வர அழைப்பு
இந்திய லோக் சபாவின் எதிர்க்கட்சி தலைவர் சுஸ்மா சுவராஜை இலங்கைக்கு வருமாறு இலங்கையின் சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அழைப்பை ஏற்று சுவராஜ் எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதிகளில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என நேற்று லோக் சபாவில் கிருஸ்ணா குறிப்பிட்டார்.
அந்த அழைப்பை ஏற்று சுவராஜ் எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதிகளில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என நேற்று லோக் சபாவில் கிருஸ்ணா குறிப்பிட்டார்.
டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு (படங்கள் இணைப்பு)
| அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ரஜினி ஆதரவு ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று 10-வது நாளாக அவரது போராட்டம் நீடித்தது. நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகிவரும் இந்த போராட்டத்துக்கு, நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவை தெரிவித்து அறிக்கை விட்டு இருந்தார். அன்னா ஹசாரேயுடன் நடிகர் விஜய் சந்திப்பு நடிகர் விஜய் இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று டெல்லி சென்று ராம் லீலா மைதானத்தில் நடந்து வரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். அன்னா ஹசாரேயை சந்தித்து அவர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மைதானத்தில் கூடியிருந்த திரளான மக்கள் கூட்டத்தில் பேச வந்தார். அவரை பார்த்ததும் கூட்டத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- அன்னா ஹசாரே நடத்தி வரும் இந்த உண்ணாவிரதம் நம் தேச வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. 75 வயதிலும் 10 நாட்களாக அவர் இருக்கும் உண்ணாவிரதம் அவருடைய மனோ திடத்தை காட்டுகிறது. இந்த நாட்டுக்காக, பொது மக்களின் நலனுக்காக அவர் மன உறுதியுடன் செய்து வரும் இந்த அறவழிப்போராட்டம் அவருடைய தேச பக்தியை இந்த உலகத்துக்கே உணர்த்துகிறது. ஊழல் வேரோடு ஒழிக்கப்பட வேண்டும் என்ற உணர்வை இந்த தேசம் முழுவதும் விதைத்து, மகத்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் அன்னா ஹசாரே. முக்கியமாக இளைஞர்கள், மாணவர்கள் இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் எழுச்சியுடன் பங்கு பெற்று வருகிறார்கள். மக்களிடையே மகத்தான எழுச்சியை ஏற்படுத்தியுள்ள அவரது இந்த போராட்டம், எந்த அரசியல் கட்சியின் ஆதரவும் இல்லாமல் நடைபெறுவது போற்றுதலுக்குரியது, பாராட்டுக்குரியது. ஒரு தமிழன் என்ற முறையில் அவரை நேரில் சென்று வாழ்த்த வேண்டும் என்று விரும்பினேன். அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து வந்து இந்த உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றதை நான் பெருமையாக கருதுகிறேன். அன்னாஹசாரேவுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டும். தொடர்ந்து அவர் பொதுநல சேவை செய்ய வேண்டும். இந்த மேடையில் அவருக்காக நான் வேண்டிக்கொள்வது இதுதான். என் மக்கள் இயக்கம்உறுதுணையாக இருக்கும் அவருடைய இந்த அறவழி போராட்டத்துக்கு என் மக்கள் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு விஜய் பேசினார். ![]() ![]() ![]() |
நட்சத்திரத்தை விழுங்கும் கறுப்பு ஓட்டை(வீடியோ இணைப்பு)
| விண்வெளியில் பெரிய கறுப்பு ஓட்டைகள் நட்சத்திரங்களை விழுங்குவது உண்டு. இந்த அரிய காட்சியை இதுவரை நாம் கண்டது இல்லை. தற்போது முதல் முறையாக நட்சத்திரத்தை விழுங்கும் கறுப்பு ஓட்டையை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். ![]() உலக அளவில் வெளியான முதல் படம் இதுவாகும். இந்த நட்சத்திரத்தை விழுங்கும் நிகழ்வு 39 லட்சம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது. விண்வெளி ஆய்வாளர்கள் சக்தி வாய்ந்த நாசா நுண்ணோக்கி மூலம் இதனை படம் பிடித்துள்ளனர். ஆச்சரியம் தரும் வகையில் அவர்கள் தீவிரமான எக்ஸ்ரே ஒளி வீச்சுகளையும் பார்த்தனர். அப்போது நட்சத்திர மண்டலத்தில் சூரியன் போன்ற மிகப் பெரிய நட்சத்திரம் பெரும் கறுப்பு ஓட்டையில் மூழ்குவதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். பெரும் கறுப்பு ஓட்டைகள் கவர்ந்து இழுக்க கூடிய ஈர்ப்பு சக்தியை அதிகம் கொண்டதாகும். அந்த கறுப்பு ஓட்டைகள் ஈர்த்த நட்சத்திரத்தை மெல்ல சாப்பிட்டு விடும் தன்மை கொண்டது ஆகும். ![]() அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசியர் டேவிட் பர்ரோஸ் தலைமையிலான குழு இந்த அரிய நிகழ்வை படம்பிடித்துள்ளது. |
சுரங்கப் பாதையூடாக கடாபி அபேஸ்! (வீடியோ இணைப்பு)
லிபியத் தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அதன் ஒரு பகுதியை தம்வசப்படுத்தியுள்ளனர். 24 மணி நேரமும் ஆளில்லா அமெரிக்க வேவு விமானங்கள் லிபியா மேல் பறந்தவண்ணம் உள்ளது. அதுமட்டுமா ? நேட்டோப் படைகள் வேறு கண்காணித்து வருகிறது. போதாக்குறைக்கு நேட்டோ நாடுகளின் ஸ்பை சட்டலைட்( உளவு பார்க்கும் செயற்கைக்கோள்) வேறு கமராவில் விளக்கெண்ணையை ஊற்றி அவதானித்து வருகிறது. இது எல்லாம் இப்படி இருக்க அதிபர் கடாபி தலைநகரில் இருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்று எல்லாரும் குழப்பிப்போய் உள்ளனர். இதற்கு விடை நேற்று மாலைதான் கிடைத்தது ! அது என்ன வென்றால் பல மைல் நீளமான சுரங்கப் பாதை. லிபிய அதிபர் கேணல் கடாபியின் மாளிகைக்குள் இது இருக்கவில்லை என்பது அதை விட அதிர்ச்சியான விடையம். வழமையாக எல்லா அதிபர்களும் தமது மாளிகையில் இருந்து தப்பிச் செல்ல சுரங்கப் பாதையைக் கிண்டிவைத்திருப்பார்கள். ஆனால் கடாபி கொஞ்சம் வித்தியாசமானவர் போல ! சரி மாட்டருக்கு வருவோம். நேற்றைய தினம் மாலை கிளர்ச்சியாளர்கள் திரிபோலியில் உள்ள சாலை ஒன்றுக்கு அருகாமையில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். பல மைல்களுக்கு நீண்டு செல்லும் இச் சுரங்கபாதையின் கதவுகள் இருப்பால் ஆனவை. எவருக்கும் தெரியால் அமைக்கப்பட்டிருந்த இச் சுரங்கப் பாதை தலைநகரை விட்டு அடுத்த கிராமம் நோக்கிச் செல்கிறதாம். ஆனால் தப்பிச் சென்றவர்கள் அதனை இடைவழியில் உடைத்துவிட்டு தான் சென்றுள்ளனர். அதனால் அதன் முடிவு எங்கே எனக் கண்டுபிடிக்கமுடியவில்லையாம். இது இவ்வாறிருக்க சுரங்கப்பாதையின் உள்ளே சிறிய ரக வாகனம் ஓடக்கூடிய வைகையில் அது அமைக்கப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு தப்பி ஓடப் பயன்படுத்திய சிறிய வாகனம் ஒன்றும் தகர்க்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. எனவே கடாபி படு வேகமாக சுரங்கப்பாதைகள் ஊடாகத் தப்பிச் சென்றுள்ளார் ! பின்னர் அவ்வாகனம் தகர்க்கப்பட்டுள்ளது என நேட்டோப் படையினரும் பி.பி.சியினரும் தெரிவித்துள்ளனர். தற்போது கடாபியின் தலைக்கு பல கோடி ரூபா விலை வைக்கப்பட்டுள்ளது, சதாம் ஹுசைன்னுக்கு வைக்கப்பட்டது போல. ஆனால் சிக்குவாரா கடாபி என்பது தான் பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி ரேடியோவில் மட்டும் அவர் குரல் ஒலிபரப்பாகி வருகிறது. கிளர்ச்சியாளர்களை எதிர்த்து போராடுமாறு அவர் தொடர்ந்தும் வலியுறுத்திவருகிறார். |
பரபரப்பை ஏற்படுத்திய பறக்கும் குட்டி தேவதை! (வீடியோ இணைப்பு)
| மெக்சிக்கோவின் மேற்கு பகுதயில் பரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:- மெக்சிக்கோவை சேர்ந்த 22 வயதான பெண்மணி யோசி மல்டொனால்டொ என்பவர். இவர் தனது வீட்டில் விசித்திரமான ஒரு உயிரினத்தை கண்டுபிடித்துள்ளார். இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில் நான் ஆரம்பத்தில் இந்த உயிரினத்தைப்பார்த்ததும் ஏதோ தும்பி என நினைத்தேன். பின்னர் சற்று உற்றுப்பார்த்ததும் வியப்படைந்து விட்டேன் காரணம் அது ஒரு மூதாட்டி தேவதையாக காணப்பட்டது. அசையும் என பார்த்த போது அது இறந்த நிலையில் காணப்பட்டது என தெரிவித்தார். இந்த சம்பவம் மெக்சிக்கோ பகுதி எங்கும் காட்டுதீபோல பரவியது. இதனால் இந்த அதிசயத்தை காண மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளார்கள். இதுவரை 3000 க்கு மேற்பட்வர்கள் இந்த அரிய தேவதையை பார்த்து சென்றுள்ளார்கள். மேலும் மக்கள் வந்த வண்ணம் உள்ளதால் யோசி மல்டொனால்டொவின் வீட்டுக்குள் சென்று இந்த அதிசயத்தை பார்க்க ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருக்க நேரிமுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விசித்திர தேவதையை பார்ப்பதற்கு இறக்கைகளுடளும் மனித முக அமைப்புடனும் சுமார் 2செ.மீற்றர் உயரத்துடன் காணப்படுகிறது. இதைப்பார்வையிட அதிக நேரம் காத்திருக்க வேண்டியேற்படுவதால் அப்பகுதியில் இதனை புகைப்படம் எடுத்துவ விற்பனை செய்த வருகிறார்கள். மற்றும் இவரின் வீட்டிற்கு அருகில் குளிர்பாணம் சிற்றுண்டி என்பனவும் விசேசமாக விற்கப்படுகிறதாம். |
அப்பிள் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகினார் ஸ்டீவ் ஜொப்ஸ்
அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளைப் போல அப்பிள் நிறுவனம் தொடர்பான செய்திகளுக்கும் பஞ்சமில்லை. தற்போது வெளியாகியிருக்கும் செய்தியானது அப்பிள் நிறுவனத்திற்குs சற்று கவலையளிக்கும் விடயமாகும். ஆம், அப்பிள் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் ஜொப்ஸ் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளா. அப்பிளின் தந்தை என வர்ணிக்கப்படும் ஸ்டீவ் ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இமாலய வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர். கடந்த சில காலங்களாக அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அவரது ஆயுட்காலம் சிறிது நாட்களே என செய்திகளும் வெளியாகியிருந்தன. எனினும் தற்போது அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஸ்டீவ் ஜொப்ஸ்(56) தனது ராஜினாமா கடிதத்தினை அப்பிள் நிர்வாக சபையிடம் நேற்று புதன்கிழமை கையளித்துள்ளார். 1997 ஆம் ஆண்டு முதல் இவர் இப்பதவியை வகித்துவந்தார். இவருக்கு அடுத்த படியாக இப்பதவியை டிம் குக் ஏற்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சாதாரண கராஜ் ஒன்றினுள் ஆரம்பிக்கப்பட்ட அப்பிள் நிறுவனத்தை உலகத் தரமிக்கதாகவும் உலகின் தலைசிறந்த தொழிநுட்ப நிறுவனமாகவும் மாற்றியதில் பெரும் பங்கு ஜொப்ஸினுடையது. பதவியிலிருந்து விலகிய போதும் அப்பிள் நிறுவனத்தின் தலைவராக அவர் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது |
பாப் அல் அஷீசியா வளாகத்தினுள் கடாபி குடும்பத்தின் ஆடம்பர வாழ்வு அம்பலம்! (படங்கள் இணைப்பு)
| லிபிய கிளர்ச்சியாளர்கள் கடாபியின் 'பாப் அல் அஷீசியா' வளாகத்தினுள் நுழைந்து அவ்விடத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் அவரது வாசஸ்தலம் மற்றும் அதனுள் காணப்பட்ட வசதிகள் தொடர்பில் வெளியுலகுக்குத் தெரியவர ஆரம்பித்துள்ளது. கடாபியின் வளாகத்தினுள் சிறார்களுக்கான பூங்கா, சிறிய மிருகக்காட்சிசாலை என்பன காணப்படுகின்றன. கடாபியின் வாசஸ்தலத்தினுள் பெரிய நீச்சல் தடாகமொன்றும் காணப்படுகின்றது. மேலும் அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களால் வாசஸ்தலத்தின் பெரும்பாலான பகுதி மற்றும் தளபாடங்கள் ஆகியன சிதைவடைந்துள்ளன. கடந்த சில தினங்களாக அங்கு நடைபெற்றுவரும் உக்கிர மோதல்களில் சிக்கி 400 பேர் வரை கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ![]() ![]() ![]() ![]() ![]() |
Subscribe to:
Comments (Atom)

அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளைப் போல அப்பிள் நிறுவனம் தொடர்பான செய்திகளுக்கும் பஞ்சமில்லை. தற்போது வெளியாகியிருக்கும் செய்தியானது அப்பிள் நிறுவனத்திற்குs சற்று கவலையளிக்கும் விடயமாகும். 