Friday, 19 August 2011

அனைவரையும் வியக்க வைக்கும் வயிற்று நடனம்

இடுப்பு நடனம் பாத்திருப்பீர்கள். வயிற்றினை மட்டும் வியக்கும் வகையில் அசைப்பதினை பார்த்ததுண்டா?. நீங்களே கீழள்ள வீடியோவினை பாருங்கள்.வயிற்றினை இச்சிறுவன் எவ்வாறெல்லாம் இயக்குகின்றான்என


அதற்காக வெட்கப்படுகிறேன்... சேரன் சுளீர் பேச்சு


aa
 தற்போதைய தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம் இருக்கிறது. சில  படத்தை மக்களிடத்தில் வெகுவாக கொண்டு சேர்க்க படத்தின் தயாரிப்பாளர் சில நலத்திட்ட உதவிகளை வழங்குவார். பணம் போட்டது தயாரிப்பாளராக இருந்தாலும், அதை வெட்கம் இல்லாமல் மக்களுக்கு வழங்கி போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பார் சம்பந்தப்பட்ட படத்தின் ஸ்டார் நடிகர்.




சென்னையின் பல இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதில் பல இடங்களில் எவண்டி உன்ன பெத்தான்? அவன் கைல கெடச்சா செத்தான்! என்ற தத்துவ பாடல்களுக்கு ஜிகுஜிகு நடனங்கள் அரங்கேறின.ஆனால், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கமல்ஹாசன் மக்கள் நற்பணி மன்ற இளைஞர்கள், மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை சார்பில் ஒரு அர்த்தமுள்ள சுதந்திர தின விழாவை கொண்டாடினார்கள். விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்பிலான ஊக்கப் பரிசுகள் மாணவர், மாணவியர், ஆசிறியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த விழாவில் நடிகர் சேரன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். விழாவில் மிகவும் வெளிப்படையாக எதார்த்தமான உண்மையை பேசினார் என்பது சிறப்பு.
இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு சந்தோஷம், இளைஞர்கள் இப்படி பட்ட செயல்களை செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று வழக்கமான முன்னுரையோடு தன் பேச்சை துவங்கிய சேரன், இது போன்ற விழாக்களில் கலந்துகொள்ளும் போது எனக்கு மனதில் ஒரு கேள்வி எழும். நடிகனாக, இயக்குனராக நான் அறியப்படாலும்... இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பதில் எனக்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கிறது.

அதற்காக நான் வெட்கப்படுகிறேன்! இந்த உதவிகளில் எந்த ஈடுபாடும் எனக்கு இல்லை. அதில் 10பைசா கூட நான் உதவியாக கொடுக்கவில்லை. அப்படி எதுவுமே செய்யாமல் இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பது கூச்சமாக தான் இருக்கிறது.  
யார் இதற்காக உண்மையாக உழைத்தார்களோ, உதவி செய்தார்களோ அவர்களுக்குத்தான் அந்த புகழ் சென்றடைய வேண்டும். உலகில் தலை சிறந்த விஷயம் தர்மம் தான்.

மக்கள் நற்பணி மன்ற இளைஞர்கள் இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். அடுத்த வருட நிகழ்ச்சிக்கு நான் வருகிறேனோ இல்லையோ என் பங்கும் நிச்சயம் இதில் இருக்கும் என்றார்... திரண்டிருந்த பொதுமக்களின் பலத்த கரவொலியோடு.

விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகளை சிறையில் அடைத்த என்.பி.ராஜேந்திரனுக்கு ஜனாதிபதி பதக்கம்


சென்னை ஜாம்பஜார் போலீஸ் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் என்.பி. ராஜேந்திரன். இவரது சேவையை பாராட்டி ஜனாதிபதியின் மெச்சதக்க காவல் பணிக்கான சுதந்திர தின காவல் பதக்கம் இவருக்கு கிடைத்துள்ளது.

1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்த என்.பி.ராஜேந்திரன் கொடுங்கையூர், அயனாவரம், திருமங்கலம், குமரன் நகர், கோட்டூர்புரம், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் பணியாற்றியபோது குற்ற வழக்குகளில் களவுபோன நகைகள், பொருட்கள், வாகனங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்ததுடன் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தவர்.


100-க்கும் மேற்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தவர்.   2002-ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனராக விஜயகுமார் இருந்தபோது விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய என்.பி.ராஜேந்திரன், பல திரைப்பட நடிகைகளையும், டி.வி. நடிகர்-நடிகைகளையும், விபசார புரோக்கர்களையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தவர்.

நடிகைகள் மாதுரி, வினிதா, புவனேசுவரி, சொப்னா, சுவேதா, சாய்ரா பானு என பலபேரை கைது செய்ததுடன் கன்னட பிரசாத், பாம்பே நாகேசுவ ரராவ், சோனாலட்சுமி, விக்கி, நிரஞ்சன்குமார் ஆகிய விபசார புரோக்கர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து பெயரை எடுத்தவர்.

திருவேற்காட்டில் பல ஏக்கர் அரசு நிலங்களை மீட்டு கொடுத்து, கோட்டூர்புரத்தில் 2005-ம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்தபோது பொதுமக்கள் பலரை காப்பாற்றியது, குமரன் நகரில் சைக்கோ கொலையாளிகளை கண்டு பிடித்தது என பல்வேறு சாதனை புரிந்தவர். இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் ஆற்காடு பொன்னம்பலம் ஆகும். ஜனாதிபதி பதக்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட என்.பி.ராஜேந்திரனுக்கு அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆரை ரோல் மாடலாக வைத்து நடிகர் விஜய்...: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி


நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் வருகிற 28 ந் தேதி மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்க உள்ளது. இது குறித்து விஜய்யின் தந்தையும், பொருளாளருமான எஸ்..சந்திரசேகரன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

விஜய் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். கடந்த மாதம் சேலத்தில் பெரிய விழா நடந்தது. இந்த மாதம் 28 ந் தேதி மதுரையில் தெண்டரணி தலைவர் மகேஸ்வரன் முயற்சியில், மாநகர தலைவர் தங்கப்பாண்டியன், புறநகர் தலைவர் இன்பராஜ் ஆகியோர் பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த விழாவிற்கான இடத்தேர்வு முடிந்து, புதூர் மூன்றுமாவடியில் உள்ள சி.எஸ்.. மைதானத்தில் விழா நடக்க உள்ளது.


நடிகர் விஜய் 92 ல் நடிக்க வந்தார். அப்போது ரசிகர் மன்றமாக ஆரம்பித்து, நற்பணி இயக்கமாக உருவாகி, தற்போது மக்கள் இயக்கமாக மாறி ஒரு சமூக இயக்கமாக செயல்படுகிறது. இந்த இயக்கம் ஏழை மக்களுக்கும், தமிழர்களுக்கும் குரல் கொடுத்து, பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம். மக்கள் இயக்கத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை நாங்கள் செய்து வருகிறோம்.


விஜய்க்கு நடிகர் எம்.ஜி.ஆரை ரொம்ப பிடிக்கும். நடிகனாக வாழ்க்கையை தொடங்கி, முதல்வராகி இன்றும் அவரை வாழ்க்கை முடியாமல் உள்ளது. அவர் மறைந்தும், மறையாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் செய்த நல்ல விஷயங்கள் விஜய்க்கு ரொம்ப பிடிக்கும்.


எனவே அவரை ஒரு ரோல் மாடலாக வைத்து தான் இது போன்ற நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

அன்னா ஹசாரே யார்? ராமதாஸ்


செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

அன்னா ஹசாரே யார்? அவர் இவ்வளவு நாட்களாக எங்கு இருந்தார். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இல்லை. பிரதமரையும் லோக்பால் சட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்பது பற்றி பாராளுமன்றத்தில்தான் சட்டம் நிறைவேற்ற வேண்டும். வெளியில் இருந்து அன்னா ஹசாரே போராட்டம் நடத்துவது ஏதோ உள்நோக்கம் உள்ளதாக தெரிகிறது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

ஈழ விவகாரம்-எம்.பிக்களை குழப்ப கூட்டம் போடும் சுதர்சன நாச்சியப்பன்!

 இந்திய, இலங்கை மீனவர்கள் உறவு மற்றும் பிரச்சினை குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் டெல்லியில் இன்று ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்.இக்கூட்டத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களை அவர் அழைத்துள்ளார். ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்த விவாதம் ராஜ்யசபாவில் அடுத்த வாரம் வரும் நிலையில் சுதர்சன நாச்சியப்பன் கூட்டியுள்ள இக்கூட்டம் எம்.பிக்களை குழப்ப காங்கிரஸ் மேற்கொள்ளும் முயற்சியாக கருதப்படுகிறது.

டெல்லியில் இருந்தபடி இயங்கி வரும் உலகளாவிய வளர்ச்சிக்கான மனித உரிமைக்கான எம்.பிக்கள் அமைப்பு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் சுதர்சன நாச்சியப்பன். இக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களை மட்டும் இலங்கைக்கு அழைத்துச் சென்று கூட்டி வந்தது நினைவிருக்கலாம். அந்தக் கூட்டத்தில் சுதர்சன நாச்சியப்பனும் ஒருவராக இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, சிபிஐயைச் சேர்ந்த எம்.பி அப்பாத்துரை உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தக் கூட்டம் இலங்கையின் ரகசிய ஆதரவுடன் நடைபெறும் கூட்டம் என்ற சந்தேகம் இருப்பதால் டி.ராஜா கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.

மேலும் இந்தக் கூட்டம் தொடர்பாக தன்னை சந்தித்த எம்.பி. அப்பாத்துரையிடம் சுதர்சன நாச்சியப்பன் பேசுகையில், இலங்கையில் நடந்த தவறுக்கெல்லாம் விடுதலைப் புலிகள்தான் காரணம், இலங்கை அரசி்ன் சமரச முயற்சிகளுக்கு புலிகள்தான் தொடர்ந்து ஊறு விளைவித்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளும் பிரச்சினையை பெரிதுபடுத்தி விட்டனர். உண்மையில் பிரச்சினைகளுக்கு தமிழக அரசியல்வாதிகள்தான் காரணம் என்று கூறினாராம் நாச்சியப்பன். மேலும் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக தான் கருதவில்லை என்றும் நாச்சியப்பன் தெரிவித்தாராம்.

இதன் மூலம், இன்றைய கூட்டத்தின் மூலம் ஈழப் பிரச்சினை குறித்த எம்.பிக்களின் கருத்தை குழப்ப காங்கிரஸ் கட்சி ரகசியத் திட்டம் தீட்டியுள்ளது தெளிவாகிறது என்று ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


நாள்முழுக்க நின்றால் 1 லட்சம் மதிப்புள்ள டெலிவிஷன்! - சினேகா தொடங்கி வைத்த திட்டம்


ஒரு நாள் முழுக்க அதாவது 24 மணிநேரம் நிற்க வேண்டும். காலைக் கூட மாற்றாமல் நின்ற இடத்தில் அப்படியே இருக்க வேண்டும். இப்படி நிற்பவர்களுக்கு பரிசாக ரூ 1 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் டிவி இலவசம்...! என்ற திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை சென்னையில் முறைப்படி நடிகை சினேகா தொடங்கி வைத்தார்.

ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக எலக்ட்ரானிக் பொருள் விற்பனை நிலையங்களை நாடு முழுக்க திறந்து வருகிறது. சென்னையிலும் இந்த கிளையைத் திறந்துள்ளது. அனைத்து முன்னணி நிறுவனங்களின் டிவி, ப்ரிட்ஜ், ஏசி உள்ளிட்ட அத்தனை எலெக்ட்ரானிக் தயாரிப்புகளும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் இந்த கடையை அமைத்துள்ளது ரிலையன்ஸ்.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் சென்னை, அண்ணா நகர் கிளை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமை நடிகை சினேகா தொடங்கி வைத்தார்.

இந்தக் கடையை பிரபலப்படுத்தும் நோக்கில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டப்படி, ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவன அலுவலக வாயிலில் 1 நாள் முழுக்க 24 மணி நேரமும் நின்றுகொண்டே இருப்பவருக்கு ரூ 1 லட்சம் மதிப்புள்ள நவீன டிஜிட்டல் டிவி பரிசாக வழங்கப்படும். இந்தத் திட்டத்தை நடிகை சினேகா முறைப்படி அறிவித்தார்.

இப்போதே பலரும், "1 நாள்தானே, நின்றுவிட்டுப் போகலாம்" என்று ரிலையன்ஸ் முன்னாள் திரள ஆரம்பித்துள்ளார்களாம்!

மத மாற்றம் நடந்தால்தான் மற்றதெல்லாம்... நயன்தாராவை இறுக்கிப்பிடித்த அதிகாரி?

 


நயன்தாராவின் ரிஜிஸ்தர் மேரேஜ் எங்கு நடக்கப் போகிறது தெரியுமா? பிரபுதேவாவுக்கு பிடித்த இடமான சென்னையிலோ, அல்லது நயன்தாராவின் சொந்த மாநிலமான கேரளாவிலோ அல்ல. மும்பையில்! ஏனிந்த மூன்றாமிட முடிவு என்பதெல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்று. ஆனால் ஏன் மதம் மாறினார் என்பதை விசாரிக்கும் உரிமை இருக்கிறதே?

நமக்கு கிடைத்த தகவல் இதுதான். பதிவு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் குறிப்பிட்ட தினங்களுக்கு முன்பே மணமக்கள் பற்றிய முழு விபரத்தையும் பதிவு திருமண அதிகாரியிடம் எழுத்து பூர்வமாக கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில்தான் நயன்தாராவை இந்து மதத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்களாம்.

சற்று பேஸ்த் அடித்த அதிகாரி, அதற்காக புரூப் கேட்க, தடுமாறிப் போனது மாஸ்டர் தரப்பு. பிறகுதான் மதம் மாற்ற சான்றிதழ் இருந்தால்தான் பதிவு திருமணம் நடக்கும் என்று கூறினாராம் அதிகாரி. அதன்பின்புதான் அவசரம் அவசரமாக சென்னைக்கு நயன்தாராவை வரவழைத்து மத மாற்றம் செய்திருக்கிறார்கள். உடனடியாக அதற்கான சான்றிதழும் பெறப்பட்டு மும்பையில் பதிவு செய்யப்பட்டதாம்.

கல்யாணம் மும்பையில் நடந்தாலும், வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இல்லவே இல்லை என்கிறது சினிமாக் கழுகு!

அன்னா ஹசாரேவின் கைதும் அமைதி காக்கும் கோடம்பாக்கமும்...



நாடு முழுவதும் ஆழிப்பேரலை போல ஆர்ப்பரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது அன்னா ஹசாரேவின் கைது! ஊழலுக்கு எதிரான இந்த போர் மத்திய அரசுக்கு பெரிய தர்ம சங்கடத்தை விளைத்திருக்கிறது. இந்த நிலையில் நாடெங்கும் அவருக்கு ஆதரவான குரல்கள் கேட்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது மக்களால்.

இதுபோன்ற தருணங்களில் தாங்கள் விரும்பும் ஹீரோக்கள் என்ன சொல்கிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு தோன்றுவது இயற்கைதான். வட நாட்டில் வெளிப்படையாக பேசும் நட்சத்திரங்களை போல தென்னாட்டிலும் பேசுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கும் இவர்களுக்கு இதுவரை காதில் விழுந்தது கம்மிய குரலில் ஒரு மியாவ் சப்தம்தான்.

தமிழ்சினிமாவில் முதலில் குரல் கொடுத்திருப்பவர் மாதவன். இவருக்கு அடுத்தபடியாக குரல் கொடுத்திருக்கிறார் கமல். மக்களிடம் வரி மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல் அடிப்படை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணம் லஞ்சம், ஊழல் என போகிறது. ஆனாலும் நாட்டின் மீது உள்ள பற்று காரணமாக இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். என்னை மாதிரி உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இது கமலின் அபிப்ராயம். ஆனால் பேச வேண்டிய சில முன்னணி ஹீரோக்களுக்கு முதல் வகுப்பிலிருந்து பாடம் எடுத்தால்தான் புரியுமா? அல்லது தெரிந்தும் தெரியாதது போலிருக்கிறார்களா தெரியவில்லை. இன்னும் கருத்து எதுவும் தெரிவித்தபாடில்லை.

மத்திய அரசின் கைகளில் வருமானவரித்துறை இருக்கிறது. அநேக நட்சத்திரங்கள் தங்கள் கருப்பு பணத்திற்கு கேடு வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள்! சூழ்நிலை இப்படி முடிச்சு போட்டுக் கொண்டிருக்கும் போது அன்னாவுக்கு ஆதரவாக இவர்களெல்லாம் எப்படி குரல் கொடுக்க முடியும்? அப்படி குரல் கொடுத்தாலும் மத்திய அரசு சந்து வழியாக சங்கடத்தை அனுப்பி வைக்காதா என்று சந்தேகிக்கிறார்கள் சற்று யோசிக்க தெரிந்த ரசிகர்கள்.

மீனவர் பிரச்சினை படமாகிறது... கதை- வசனம் ஜெயமோகன்; இயக்கம் மணிரத்னம்!

சிங்கள கடற்படையினரிடம் சிக்கி தமிழக மீனவர்கள் படும் பாடுகளை திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம்.

இந்தப் படத்துக்கான கதை வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார்.

தமிழக மீனவர்களுக்கும் சிங்கள கடற்படையினருக்கும் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. நடுக்கடலில் தமிழ் மீனவர்களை மடக்கி நிர்வாணப்படுத்தி துன்புறுத்தும் சிங்கள வெறியர்கள், பல நேரங்களில் சுட்டுக் கொன்றுவிடுவதும், கைது செய்து இலங்கைச் சிறைகளில் அடைப்பதும் தொடர்கிறது.

இதனை இந்திய அரசு இதுவரை தட்டிக் கேட்கவில்லை. தமிழக அரசின் எதிர்ப்புக் குரலை பொருட்படுத்துவதும் இல்லை மத்திய அரசு.

இந்த தொடர் அவலத்தை ஜெயமோகன் கதை வசனத்தில் ஒரு திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம்.

இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயின் என அனைவரும் புதியவர்களே. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கெனவே பம்பாய் படத்தில் மணிரத்னமும் ராஜீவ் மேனனும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தை முழுக்க முழுக்க கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வர கடற்கரைகளில், கடல்பகுதிகளில் எடுக்கிறாராம் மணிரத்னம்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டம் குறித்து அரைகுறையாக கருத்து ('இது ஆயுத வியாபாரிகளின் போராட்டம்') சொல்லி தமிழ் உணர்வாளர்களின் கண்டனத்துக்கு ஆளானவர் மணிரத்னம். இந்த முறை மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான விஷயத்தைக் கையிலெடுக்கிறார்.

அதை எப்படி எடுக்கப் போகிறார் என்பதை தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்கள்!


அன்புள்ளங்கொண்ட தாயாய் நின்று உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்!- தமிழர் நடுவம், ஜெயா அம்மையாரிடம் வேண்டுகோள்

அன்புள்ளங்கொண்ட தாயாய் நின்று உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள். நீதிமறுக்கப்பட்ட,  இந்த இளம் தமிழர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும் என்று, தமிழர்கள் நாம் பூரணமாக நம்புகின்றோம். இவ்வாறு பிரான்சிலுள்ள தமிழர் நடுவம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரிடம் வேண்டுகொள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழர் நடுவம் - பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையாருக்கு!
தூக்குமரத்தின் நிழலில் நின்றபடி வாழ்வின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்ற, நீதிமறுக்கப்பட்ட இளம்தமிழர் மூவரின் உயிர்காக்கும் தவிப்புடன் உங்களிடம் வேண்டிக்கேட்கின்றோம், அன்புள்ளங்கொண்ட தாயாய் நின்று உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்.
காந்திதேசம் கருணை அற்றதா?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை நிகழ்வின், நிழலில், இருபத்தியாறு பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மரணதண்டனைத் தீர்ப்பெழுதியது.
தூக்குக் கயிற்றின்முன் நிறுத்தப்பட்ட இருபத்தியாறு பேரில், பத்தொன்பது பேரை குற்றமற்றவர்கள் என முடிவுசெய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.
மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையாகவும், நாலு பேருக்கு மரண தண்டனையாகவும் அது தண்டனையைக் குறுக்கியது.
மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட இளம் தாய் நளினி ஆயுட்தண்டனைக் கைதியாகி, இருபத்தியொரு ஆண்டுகளாக தன் இனியவாழ்வை இருண்ட சிறைகளில் கழித்துக்கொண்டிருக்கின்றார்.
தூக்குத் தண்டனைக் கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று இளம் தமிழர்கள், தமது மரண தண்டனையை விலக்கக்கோரி, இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த கருணை மனுக்கள், பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போதைய குடியரசுத் தலைவரால், நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்தி, உலகத் தமிழர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நூற்றாண்டின், மிகப்பெரும் மனித அழிவையும், அவலத்தையும் சுமந்து தேற்றுவார் இன்றியும், துயர் ஆற்றுவார் இன்றியும் தவிக்கும் ஈழத்தமிழ் இனம், மீண்டும் மீண்டும் சோக நெருப்பில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
மீளவும் மீளவும் வஞ்சிக்கப்படுகின்ற இனமாகிப்போனோமா நாம் என்ற ஏக்கமே எம்மில் மிஞ்சிநிற்கின்றது.
மனித கண்ணியங்களும், மனித உரிமைகளும் தமிழர்கள் விடயத்தில் காற்றில் பறக்கவிடப்படுகின்றனவா? காந்திதேசம் தமிழர் விடயத்தில் கருணைக் கண்ணை இழந்துவிட்டதா? என்ற கேள்விகளே விஞ்சிநிற்கின்றன.
இளமை கரைத்து, வசந்தம் தொலைத்து சிறைக்கப்பிகளுக்குப் பின், மரணத்தின் நிழலில் காலம் கடந்தேனும் ஒரு வசந்தம் தோன்றாதா என்ற ஏக்கத்துடன் தவித்திருக்கும் இந்த இளம் தமிழர்கள் மீதான அரசியல் படிந்த கொடிய தீர்ப்புக்களும், கருணை மனுக்கள் நிராகரிப்பும் இந்தியா குறித்த எங்கள் அபிப்பிராயங்களில், மேலும் சந்தேகக்கோடுகளையே தோற்றுவித்துள்ளன.
ஈழத்தமிழ் இனத்தினதும், உலகத்தமிழ் இனத்தினதும், நம்பிக்கைக்குரியவராய் எதிர்பார்ப்பிற்கு உரியவராய், தமிழகத்தின் முதல்வராய் பொறுப்பேற்றிருக்கின்ற உங்கள் மீதே நாம் கடைசி நம்பிக்கை கொண்டுள்ளோம்.
நீதிமறுக்கப்பட்ட, இந்த இளம் தமிழர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும் என்று, தமிழர்கள் நாம் பூரணமாக நம்புகின்றோம்.
உலகத் தமிழினத்தின் நலன்சார்ந்து, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவவொரு அடியிலும் நம்பிக்கைவளர்த்து நிற்கின்றோம்.
கருணை உள்ளங்கொண்டு, உங்கள் பிள்ளைகளைக் காக்கும் அன்புக்கரம் கொண்ட தாயாகவே பார்க்கின்றோம்.
செய்யாத குற்றத்திற்காய், இருபத்தொரு ஆண்டுகள், கொடுஞ்சிறையில் வாழ்வின் இழமைகளை இழந்தவர்களின், உயிர்களைக் காப்பீர்கள் என்ற அசையாத நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
நிட்சயம் உங்களுக்கு உலகத் தமிழினம் நன்றிக்கடன் பட்டிருக்கும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)


பாலஸ்தீன நாட்டு விடுதலைப் போராளிப் பெண் ஒருவரின் கதை இது. இவரின் பெயர் ரீம் அல் ரியாஸி. 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். காஸா நகரத்தைச் சேர்ந்தவர். ஹமாஸ் இயக்கத்தில் இணைந்து கொண்டார். சின்னக் குழந்தைகள் இருவரின் அம்மா.

2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி இஸ்ரேலிய படையினர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இவரது தற்கொலைத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டன்ர்.

பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த 08 ஆவது பெண் போராளி இவர்.

ஆனால் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த இரண்டாவது தாய் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

ஹமாஸ் இயக்கத்தில் பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த முதல் பெண் போராளியும் இவரே ஆவார்.

பாலஸ்தீன விடுதலைப் போராளிகளில் அநேகர் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவர் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.

இஸ்ரேலியர்கள் மீது பாய்ந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது 13 ஆவது வயதில் இருந்து இவரின் இலட்சிய வேட்கையாக இருந்து வந்தது.

பாலஸ்தீனத்தின் முதல் தற்கொலைப் போராளியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

- கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகளை தந்து உள்ளார். நான் என் குழந்தைகளை மிகவும் நேசிக்கின்றேன். ஆனால் தாய் நாட்டின் மீதான எனது பற்றுதலுக்கு குழந்தைகள் மீதான பாசம் ஒருபோதும் தடையாக இருந்து விடாது - இவ்வாறு அடிக்கடிச் சொல்லிக் கொண்டார்.

தாக்குதல் தினத்தன்று காலையில் இவர் இரண்டு கிலோ குண்டை அணிந்து கொண்டு ஒரு கட்டிடத்தை நோக்கிச் சென்றார். காஸாவில் இருந்து இக்கட்டிடத்துக்கு வந்துதான் பாலஸ்தீனர்கள் கைத்தொழில் வலயத்துக்கு செல்ல வேண்டி இருந்தது.

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இங்கு ஒவ்வொரு நாளும் திரள்வார்கள். சோதனைச் சாவடியில் சோதனைகள் செய்யப்பட்ட பிற்பாடே கைத்தொழில் வலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இவர் இஸ்ரேலிய இராணுவத்தை நோக்கி முன் நகர்ந்தார். எச்சரிக்கை ஒலி எழுப்பியது சோதனையில் ஈடுபட்டு இருந்த இராணுவத்தினரின் கருவி . இவர் சமயோசிதமாக செயல்பட்டார். முடவரைப் போல் நடித்தார்.

காலில் பொருத்தப்பட்டு இருக்கின்ற உலோகத் தகடுகள் காரணமாகவே கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பியது என இராணுவத்தினருக்கு சொன்னார்.

முழுமையாக இவரை சோதனை செய்ய வேண்டும் என்று இராணுவத்தினர் முடிவெடுத்தனர். வேறு ஒரு பகுதிக்கு இவரை கொண்டு சென்றனர். இப்பகுதியில் இராணுவத்தினர் சிலரும், பொலிஸாரும் பாலஸ்தீனர்களின் பைகளை சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.

பெண் ஒருவர் வந்து சோதிப்பார் என்றும் அது வரை காத்திருக்க வேண்டும் என்றும் இவருக்கு அறிவிக்கப்பட்டது. உடலில் பொருத்தி வைத்து இருந்த குண்டை இவர் தகுந்த தருணம் பார்த்து வெடிக்க வைத்தார்.

இவரது இத்தாக்குதலில் இஸ்ரேலிய சிப்பாய்கள் இருவர், பொலிஸ் ஒருவர், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டமையுடன் இஸ்ரேலியர்கள் ஏழு பேரும், பாலஸ்தீனியர்கள் நான்கு பேரும் காயம் அடைந்தனர்.













புதுடெல்லிக் கருத்தரங்கில் ஈபிடிபியை ஒதுக்கியது இந்தியா

சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் ஈபிடிபியை இந்திய அரசாங்கம் ஒதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசாங்கத்தின் பின்புல ஆதரவுடன் புதுடெல்லியில் அடுத்த வாரம் நடைபெறவள்ள கருத்தரங்கிற்கு ஏழு தமிழ் அரசியல்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் வடக்கு அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஈபிடிபிக்கு இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

எதிர்வரும் 23,24ம் நாட்களில் புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கை உலக அபிவிருத்திக்கும், மனிதஉரிமைகளுக்குமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிராசாவும், ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரனும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஆனந்தசங்கரியும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதனும், புளொட் சார்பில் சித்தார்த்தனும், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் சார்பில் வரதராஜப்பெருமாள் மற்றும் சிறிதரன் ஆகியோரும், ஈஎன்டிஎல்எவ் சார்பில் பரந்தன் ராஜனும் இந்தக் கருதரங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் ஈபிடிபி பிரதிநிதிகள் எவரும் இந்தக் கருத்தரங்கிற்கு அழைக்கப்படவில்லை.

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் புதுடெல்லி வர இந்திய அரசாங்கம் எவ்வாறு அனுமதி அளித்தது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்தநிலையிலேயே ஈபிடிபியை இந்தியா ஒதுக்கத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கழுத்தறுத்து கொலை செய்ய தமிழ் பெண் திட்டம்: INTERPOL பிடியாணை ?

திருகோணமலையில் வைத்து கழுத்தறுத்து ஒருவரைக் கொலைசெய்ய முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் 02.08.2010 அன்று இச் சம்பவம் நடந்ததாக பொலிசில் பதிவாகியுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து சென்ற கந்தையா சிவபாலன் என்பவரை அவரது உறவினர்கள் சிலர் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதில் பெண் இக் கொலை முயற்சிக்கு மூலகாரணமாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

இப் பெண் தனது உறவினர்கள் சிலரை வைத்து சிவபாலனைக் கொலைசெய்ய முற்பட்டுள்ளார். அவர் அனுப்பிய ஆட்கள் தலைக் கவசம்(ஹெல்மெட்) அணிந்து சிவபாலன் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளனர். அதிஷ்டவசமாக இவர் உயிர்தப்பினார். சந்தேக நபர் இலங்கையில் இருந்து தப்பி சுவிஸ் வந்து விட்டதாகத் தெரிவித்துள்ள பொலிசார் அவரைக் கைதுசெய்து தரும்படி இன்ரர் போல் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.( அதன் பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளது)

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தவரை பொலிசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளைப் பொலிசார் எடுத்துள்ளனர். குடும்பச் சண்டை காரணமாகவே பெண் சிவபாலனை தீர்த்துக்கட்ட எண்ணியதாக அவர் தெரிவித்தார்.

தான் இலங்கை சென்றவேளை அங்கே இருக்கும் உறவினர்கள் மற்றும் மேலும் ஒரு ஆயுததாரியையும் காசுக்கு அமர்த்தி இக் கொலைமுயற்சியை அவர் மேற்கொண்டார் என சிவபாலன் தெரிவித்தார்.

08.08.2011 அன்று வெளியான முன்னைய செய்தி :

சுதந்திரம் அடைந்த இலங்கையில் சமாதானமே நிலவி வருவதாக நினைத்து புலத்தில் இருக்கும் தமிழர்கள் இலங்கைக்கு விடுமுறையில் சென்று வருவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்படுகின்றது.திருகோணமலையில் சமாதானமும் சகச நிலையும் வந்துவிட்டது என்று நினைத்து சுவிஸில் வசித்து வந்த கந்தையா சிவபாலன் குடும்பத்தினர் திருகோணமலைக்கு சென்றனர்.

ஆனால் அங்கே அவரை குறிவைத்து யுத்தம் நடந்த காலத்தில் நடப்பதைப் போல் தலைக்கவசம்(ஹெல்மெட்) அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு 8909 என்னும் இலக்கத்தை உடைய மோட்டார் சைக்கிளில் வந்தோரால் 02.08.2010 மாலை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்கள். அவர் தெய்வாதீனமாக கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

இது விடயமாக காவற்துறையில் முறைப்பாடு செய்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்தோடு திருகோணமலை மாவட்டத்தில் நடக்கும் இப்படியான பயங்கர சம்பவங்களுக்கு சிவிலுடையில் வருகின்ற கடற்படைக்கும் யுத்தகாலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்த கும்பலுக்கும் தொடர்புள்ளதாக அறியப்படுகின்றது.

இவ் விடயங்களை மேலிடம் அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு சமாதானத்தை நிலைநாட்ட பாடுபடும் பாதுகாப்பு செயலாளர் கவனத்திற்கு எடுத்து திருகோணமலையில் மூவின மக்களும் நிம்மதியாகவும் சமாதானமாகவும் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கும்பலால் மக்கள் தினமும் பீதியுடனேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர்.