Thursday, 22 September 2011

இந்தியக் கடற்படையின் முற்றுகையில் திருகோணமலைத் துறைமுகம் (படங்கள் இணைப்பு)


சிறிலங்கா கடற்படையுடன் போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக வந்துள்ள இந்திய கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதிகளவிலான பாரிய போர்க்கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

கடந்த 19ம் நாள் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தப் போர்க்கப்பல்கள், எதிர்வரும் 24ம் நாள் போர்ப்பயிற்சிகள் நிறைவடைந்த பின்னரே புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் அதிகளவிலான வெளிநாட்டுப் போர்க்ப்பல்கள் தரித்து நிற்பதை தொலைவில் இருந்தே பொதுமக்கள் பார்வையிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




No comments: