Saturday, 26 November 2011

'கொலவெறி' பாடலுக்கு பிரபலங்களின் பாராட்டுகளில் சில...


தனுஷ் எழுதி பாடியுள்ள ' WHY THIS KOLAVERI DI ' பாடல் தற்போது தமிழக இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் தற்போது வலைதளங்கள் மூலம் மிகப் பிரபலமாக உள்ளது.

இதுவரை YOUTUBEல் 41,00,000 மேற்பட்டோர் பார்த்து இருக்கிறார்கள். ஒரு தமிழ் பாடலுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பாடலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பால், இந்தி திரையுலக பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள், தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் என அனைவருமே ' 3 ' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்தி சேனல்கள் மற்றும் ஆங்கில இதழ்கள் என பல ஊடகங்களும்  'KOLAVERI BECOMES A VIRAL IN INDIA' என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

பிரபலங்களின்  பாராட்டுகளில் இங்கே சில :

அமிதாப் பச்சன் : 'கொலவெறி' பாடலை பற்றியே எங்கும் பேச்சாக இருந்ததால் அப்பாடலை கேட்டேன். அருமையாக இருந்தது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷிற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மேலும்  "This Kolaveri is veri veri endearing .. just not leaving the sound waves in the mind-u .. what-a what-a what-a do-u ... !! ha ha !! " என்று தெரிவித்துள்ளார்.

முன்னணி இயக்குனர் கரண் ஜோஹர் : கொலவெறி டி! கண்டிப்பாக இந்த வருடத்தில் இந்திய அளவில் பிரபலமான பாடல் இதுதான்.! ராக் ஆன் தனுஷ்! என்று வாழ்த்தியுள்ளார்.

முன்னணி இசையமைப்பாளர் இஷான் : கொலவெறி ராக்ஸ்! என்று பாராட்டியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா : கொலவெறி கண்டிப்பாக கேளுங்கள்... எப்போதுமே தென்னந்தியா வித்தியாசமானது தான் என்று சொல்லியிருக்கிறார். 

சல்மான் ருஷ்டி : "India obsessed by a slapped politician & the most ridiculously catchy song since Macarena.Must be a slow news moment. #Kolaveri #SharadPawar"

சோனாக்ஷி சின்கா : "was wondering wht #kolaveri was, so googled it. its my lovely Aishwarya di's @ash_r_danush song from 3! LOVE IT! ok mama, tune change-a ;)"

நீதிபதியின் கேள்வியும் ஜெயலலிதாவின் அண்டபுழுகு பதிலும்

என் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவிப்பாக சேர்த்துள்ளது தவறு என்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசராணை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் கடந்த அக்டோபர் மாதம் 21,22 ,23, 24 ஆகிய தேதிகளில் ஆஜரான முதல்வர் ஜெயலலிதா இந்த வழ்ககு தொடர்பான 1,339 கேள்விகளுக்கு பதில் அளித்தார். இத்துடன் ஜெயலலிதாவிடம் விசராணை முடிந்துள்ளது.

இன்று ஆஜரான ஜெயலலிதா 192 கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன் எழுத்துப்பூர்வமான விளக்கமும் தந்துள்ளார்.

விசாரணையின் போது ஜெயலலிதா கூறியது குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா விளக்குகையில்,

மக்கள் மத்தியில் எனக்கு இருக்கும் மதிப்பைக் குறைக்கவே இந்த சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. இது குறித்து ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கொடுத்த புகார் தவறானது.

நான் அந்த காலத்தில் 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். அப்படி நடிக்கையில் வகை, வகையான சேலைகள், அதற்கு மேட்சிங்காக செருப்புகள், நகைகள் எல்லாம் வாங்கினேன். சினிமாவில் ஒரு முறை பயன்படுத்தியதை மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள்.

அப்படி நான் நடிக்கும் காலத்தில் வாங்கிய பொருட்களை எல்லாம் சொத்துகுவிப்பு வழக்கில் சேர்த்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர்கள் மாதவன் மற்றும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் இந்த வழக்கு விசாரணையில் தலையிட்டு வழக்கை திசைதிருப்ப முயன்றனர். போயஸ் கார்டனில் உள்ள வீட்டைத் தவிர நான் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை.

அரசு அதிகாரிகளை நான் என் சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தினேன் என்ற கலெக்டரின் சாட்சியமும் பொய்.

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் எனது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தின்போது இசை நிகழ்ச்சி நடத்தினார். ஆனால் அவர் அதற்கு பணம் எதுவும் வாங்கவில்லை. மேலும் இந்த சொத்து குவிப்பு தொடர்பான நல்லம்ம நாயுடுவின் விசாரணையும் உண்மையன்று என்று ஜெயலலிதா கூறியதாக ஆச்சார்யா தெரிவித்தார்.

'ஏழாம் அறிவு' JOHNY TRI NGUYEN வில்லனானது எப்படி ?


தீபாவளிக்கு  திரைக்கு வந்த படம் 'ஏழாம் அறிவு'. சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தா. உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தார்.

'ஏழாம் அறிவு' படம் வெளியானதும் அப்படத்தில் நடித்த JOHNY TRI NGUYEN பற்றி தான் பேச்சாக இருந்தது. அவரது மிரட்டும் கண் பார்வை, அனல் பறக்கும் சண்டை காட்சிகள் என அனைத்து விதத்திலும் ரசிகர்களைக் கவரந்தார். சிறு குழந்தைககளுக்கும் கூட அவரை பிடித்துப் போனது.

'ஏழாம் அறிவு' படத்தில் நடிக்க இவரை எங்கு தேடி பிடித்தார்கள், ஒப்பந்தம் செய்தது எப்படி என்று விசாரித்த போது பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் நமக்கு கிடைத்தன. அத்தகவல்கள் இதோ :

'ஏழாம் அறிவு' படத்தில் JOHNY TRI NGUYEN நடிக்க முதற்காரணமாக இருந்தவர் சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன்.

பீட்டர் ஹெய்ன் 'அந்நியன்' படத்தில் செய்த சண்டை காட்சிகளை பார்த்து அவரது பேஸ்ஃபுக் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் JOHNY TRI NGUYEN. அப்படத்தில் வரும் SLOW MOTION சண்டைக்காட்சிக்களில் சுமார் 60 சண்டை கலைஞர்களை வைத்து படமாக்கினார்கள். இந்த காட்சியை பார்த்த JOHNY TRI NGUYEN பீட்டர் ஹெய்னிடம் நாங்கள் ஹாலிவுட்டில் இந்த சண்டைக்காட்சிகளை எல்லாம் 3Dல் தான் படமாக்குவோம் ஆனால் நீங்கள் எப்படி படமாக்கினீர்கள் என்று ஆச்சர்யப்பட்டு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

இதன் மூலம் கிடைத்த நட்பு நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். JOHNY TRI NGUYEN வியட்நாமில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலானவர்.

உலகம் முழுவதும் உள்ள சண்டை இயக்குனர்களுக்கிடையே கொடுக்கப்படும் TAURAS STUNT AWARD என்னும் விருதினை பீட்டர் ஹெய்னுக்கு 2ம் முறை சிபாரிசு செய்தது JOHNY TRI NGUYEN தான்.

'ஏழாம் அறிவு' படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் பீட்டர் ஹெய்னிடம் கூறியவுடன் முதலில் வில்லனாக நடிக்க சொல்லி கேட்டது  புகழ்பெற்ற JET LI -யிடம் தான். ஆனால் அவரோ கதை சீன நாட்டிற்கு எதிராக இருப்பதால் நடிக்க முடியாது என்று விலகி விட்டாராம்.

JETLI  நடிக்க முடியாது என்ற கூறியதால் அடுத்த நிமிடமே JOHNY TRI NGUYEN-வை 'ஏழாம் அறிவு' படத்தின் வில்லனாக்கி விட்டார் பீட்டர் ஹெய்ன். இந்த சண்டைக் கலைஞர்களின் நட்பு குறித்து பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் மற்ற ஸ்டண்ட் கலைஞர்கள்.

விவாகரத்து தீர்ப்பின் போது இணைந்த தம்பதிகள்: தமிழ் சினிமாவையும் மிஞ்சிய திருப்பம்

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள கண்ணகி நகரில் மளிகை கடை வைத்திருக்கும் மணிகண்டன் (வயது 26) என்பவருக்கும், ஓமலூர் பக்கம் உள்ள பண்ணப்பட்டி குதிரைபள்ளம் பகுதியை சேர்ந்த ராஜு என்பவரின் மக்கள் சிந்துஜா, வயது 21 என்பவரும் நீன்ட நாள காதலர்கள்.

இவர்களின் காதலுக்கு சிந்துஜாவின் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டு ஓமல்லோரில் நண்பர்களின் துணையோடு தனிக்குடித்தனம் நடத்தினார்கள்.


திருமணம் முடிந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர், ஒரு நாள் சிந்துஜாவின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், நீ வீட்டை விட்டு வந்த பின்னர் உனது நினைவாகவே அம்மா இருக்கிறார் என்றும், நீ  மட்டும் ஒருமுறை வந்து அம்மாவை பார்த்துவிட்டு வரலாம் என்று ராஜு வந்து தனது மகளை அழைத்து சென்றுள்ளார்.


இப்போது வருவார், காலையில் வருவார் என்று மணிகண்டன் காத்திருந்தார், ஆனால், போன சிந்துஜா திரும்பி வரவே இல்லை. இரண்டு மாதங்களுக்கு பின்னர் சிந்துஜாவிடம் இருந்து மணமுறிவு (விவாகரத்து) கேட்டு வழக்குறைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.


வாழவெட்டியா போறதுக்கு பொம்பளையே தயாரா இருக்கும் போது உனக்கு என்னடா..? நீ ஆம்பாளை சிங்கம் உனக்கு இன்னும் நாலு கல்யாணம் செய்யலாமடா தம்பி என்று மணிகண்டனின் உறவினர்கள் சொல்ல, சிந்துஜாவின் விருப்பப்படி தனக்கும் மணமுறிவு செய்துகொள்ள சம்மதிப்பதாக மேட்டூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மணிகண்டன்.

கடந்த ஒன்னரை வருடமாக மணமுறிவு வழக்கு நடந்து வந்தது. ஒவ்வொரு வாய்தாவிற்க்கும் மணிகண்டனும், சிந்துஜாவும் மேட்டூர் நீதிமன்றத்துக்கு வந்தாலும், இருவரும் பக்கத்தில் நெருங்காதபடி பார்த்துக்கொண்டார் சிந்துஜாவின் அப்பா ராஜு.


24.11.2011 அன்று மதியம் நீதிமன்றத்துக்கு வந்த சிந்துஜாவையும் மணிகண்டனையும் அழைத்த நீதிபதி ஜெயந்தி அவர்கள், நீங்கள் இருவரும் பிரிந்து செல்ல சம்மதிக்கின்றீர்களா..? என்று கேட்டுள்ளார்.


அப்போது காதல் மனைவியை கண்களால் மணிகண்டன் பார்த்துள்ளார். மணிகண்டனை நேருக்கு நேராக சிந்துஜா பார்த்துள்ளார். எனக்கு விருப்பம் இல்லை என்று இருவரின் கண்களும் பேசியது...

என்ன குழப்பம்...? உங்களை பிரிந்து போக சொல்லி யாராவது நிர்பந்தம் செய்கிறார்களா..? தைரியமாக சொல்லுங்கள் நீங்கள் பிரிந்து போக மனப்பூர்வமாக சம்மதிக்கிறீர்களா..? என்று மீண்டும் அழுத்தி கேட்டுள்ளார் நீதிபதி.


எனக்கு என்னுடைய மனைவியை பிரிய விருப்பம் இல்லை... என்னையும், என்னுடைய தாயாரையும் மிரட்டி நீ விவாகரத்து கேட்டு கோர்ட்டுல கேஸ் போட்டு என்று மிரட்டினார்கள் அதனால் தான் நான் இந்த கோர்ட்டுல மனுதாக்கல் செய்தேன் என்று சொல்லியுள்ளார் மணிகண்டன்.


சிந்துஜாவிடம், நீ என்னம்மா சொல்லறே ...? என்று நீதிபதி கேட்க... சிந்துஜாவும், நான் என்னுடைய கணவருடன் தான் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்... ஆனால், என்னுடைய அப்பாதான் எங்களை பிரிக்கிறார், “எங்களை நீங்கள் தான் சேர்த்துவைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் சொல்லி விட்டார்.

மணிகண்டன், சிந்துஜா இருவரும் போட்ட விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயந்தி, மேட்டூர் காவல் ஆய்வாளரை நீதிமன்றத்துக்கு அழைத்து இருவரையும் சேர்ந்து வாழ தேவையான பாதுகாப்பை இருவருக்கும் கொடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.


விவாகரத்து வாங்க வந்த காதல் திருமண தம்பதிகளை, நீதிமன்றத்திலிருந்து மேட்டூர் போலீசார் பாதுகாப்புடன் ஓமலூருக்கு அழைத்து வந்து மணிகண்டனின் வீட்டில் விட்டுள்ளனர்.

சிம்புவுக்கு வந்த சிக்கல்; ஒஸ்தி படம் தலைப்பு மாற்றப்படுமா?


சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு `ஒஸ்தி' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் ரிலீசாகிறது. இந்த நிலையில் ஒஸ்தி தலைப்பை மாற்ற வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளது.
தமிழ் அமைப்பு கழக தலைவர் லக்குவனார் திருவள்ளுவர் நடிகர் சிம்புக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழ் பெயர்கள் தாங்கி திரைப்படங்கள் வரும் இக்கால கட்டத்தில் ஒஸ்தி என கொச்சைப் பெயரை படத்துக்கு வைத்திருப்பது சரியல்ல. இது போன்ற கொச்சையாக பெயர் வைத்தால் தான் படம் வரவேற்பு பெறும் என்று இல்லை. உசத்தி அல்லது ஒசத்தி என்று பேச்சு வழக்கிலாவது பெயர் வைத்து இருக்கலாம்.

நல்ல தமிழ் பெயர் சூட்டினால் சந்தோஷப்படுவோம். தங்கள் பாடல் எழுதும் போது கூட அயல்மொழி கலாவாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். `ஒஸ்தி' பெயரை மாற்றா விட்டால் அப்படத்தை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. `ஒஸ்தி'' பெயரை மாற்றலாமா என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி நெருங்குவதால் தலைப்பை மாற்றுவது சிரமம் என்கின்றனர்.


'கொலைவெறி..'படலை தொடர்ந்து 2வது பாடலும் வெளியானது


' 3 ' படத்தில் இடம் பெறும் ' WHY THIS KOLAVERI DI ' பாடலை யாரோ வலைதளங்களில் தயாரிப்பு தரப்புக்கு தெரியாமல் வெளியிட்டதால், அந்த ஒரு பாடலை மட்டும் அதிகாரபூர்வமாக ஆடியோ ரிலீஸ் செய்தார்கள். 

அதன் பின்னர், அப்பாடல் மிகப் பிரபலமாகி, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் அப்பாடலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இப்பாடலை தனுஷ் எழுதி பாட, புதுமுக இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

இந்நிலையில் ' 3 ' படத்தில் இருந்து இன்னொரு பாடல் தற்போது YOUTUBE இணையத்தில் வெளிவந்து இருக்கிறது. அப்பாடல் வரிகள் இங்கே:

உன்னை பெத்தவேன் பெத்தானா செஞ்சானா
பதிலே தெரியாமா கிறுக்கு ஆனேன்..
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
ஊரு கண்ணு எல்லாம் அவ பின்னால

அடி பெண்ணே உன் மேலேதானே லவ்ஸ் லவ்ஸ்
உன்னை கண்ட முதல் நாள் மத்தது எல்லாம் தினுசு தினுசு...
எம் மாமன் எம் மாமன் பெத்த முத்தழகியே
எம் மனசோரம் மல்லு கட்டும் பேரழகியே

ஏ  பஸ் ஸ்டாண்டு ஓரத்துல முன்னப்போகும் ஓரத்துல
பின்னாலே நாய் போலே வந்தானே உங்கப்பன்
அவன சமாளிச்சு உன்னை நான் டாவடிச்சு
காலத்த ஓட்டுரண்டி நாலஞ்சு மாசமா

காரித் துப்பினாலும் பீல் பண்ணா மனசு இது
கரெக்ட் பண்ணாம போகாது என் உசுரு
உன்னை நானும் வச்சுருக்கேன் ஹார்ட்டுபீட்டுல
கூட்டுட்டு போவேனே என் சொந்த வண்டியில

அய்யோ அவ லுக்கு அதுதான் செம கிக்கு
அவ ரெட்டை ஜடை கட்டின ஸ்டைலு மாமு
அதுல ஒத்த ரோஜா வச்ச அவ மாமா நானு

பட்டுவேட்டி கட்டிக்கிட்டு மஞ்சகலர் சொக்கா போட்டு
மாரியம்மன் திருவிழாவுக்கு வந்தேண்டி உன்ன தேடி
ஃபாரின் சென்ட் அடிச்சு பட்டிணத்து வாட்சு கட்டி
பம்பரம் போல உன்னை சுத்தி வந்தேண்டி

மனசுல நான் இருந்தும் ஏண்டி நீ மறைக்கிற
பதிலே சொல்லாம என் மனச உடைக்கிற
உங்கப்பன் கழுத்துல வைப்பேண்டி KNIFE
அப்புறம் நீதாண்டி என்னோட WIFE
WIFE WIFE WIFE... LIFE LIFE LIFE

உங்கப்பன் ஒரு TORTURE... உங்கண்ணன் ஒரு TORTURE..
எப்படி இதை சமாளிக்க போறேன் நானு
தெரியல பொண்ணே உன்னால கண்ணே  உன்னால தொல்லை
உன்னால தூங்கி நான் பல நாளே ஆச்சு

' WHY THIS KOLAVERI DI ' பாடலை போல இந்த பாடலும் பரபரப்பாக பேசப்படுமா என்பது போகப் போகத் தெரியும். போகிற போக்கைப் பார்த்தால் படம் இசை வெளியீடு நடப்பதற்குள் எல்லாப் பாடல்களும்
இப்படியே இணையத்தில் வெளியாகி விடுமோ

வீட்டில் அடைத்து மாதக்கணக்கில் சீரழித்தனர்: எம்.எல்.ஏ.மீது பெண் புகார்


உத்தர பிரதேசத்தில் ஆளுங் கட்சி எம்.எல்.ஏ. நீரஜ் மவுரியா மீது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். உ.பியில், பாலியல் புகாருக்கு ஆளாகும் 10வது பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. நீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேச மாநிலம் ஜலால்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நீரஜ் மவுரியா. ஆளும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். அவர் மீது ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.

ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் பருல்பவார் முன்பு அந்த பெண் அளித்த வாக்குமூலம் வருமாறு,

கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் நீரஜ் மவுரியாவின் ஆட்கள் என்னை கடத்திச் சென்று ஜலாலாபாத்தில் உள்ள அவரது வீட்டில் ஒரு மாதத்துக்கு மேலாக என்னை அடைத்து வைத்திருந்தனர். அப்போது எம்.எல்.ஏ.வும், அவரது கூட்டாளிகளும் என்னை பலமுறை கற்பழித்தனர். பின்னர் ஹரியானாவில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று அங்கு எனக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுத்தனர்.

தினமும் பலர் என்னை கற்பழித்தனர். இதில் நான் கர்ப்பமானேன். அப்படியும் அவர்கள் என்னை விடவில்லை. குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை கற்பழித்தனர். எனக்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் என்னை அந்த பண்ணை வீட்டிலேயே விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

நான் அந்த வீட்டில் கைக்குழந்தையுடன் சில நாட்கள் தனியாக இருந்தேன். என் உடல்நிலை கொஞ்சம் தேறியதும் அங்கிருந்து வெளியேறி வீடு வந்து சேர்ந்தேன். எனது தந்தையை அழைத்துக் கொண்டு சென்று உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, எம்.எல்.ஏ. நீரஜ் மவுரியா, அவரது கூட்டாளிகள் மற்றும் புகாரை பதிவு செய்ய மறுத்த போலீசார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள 10வது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. நீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தனது கட்சி எம்.எல்.ஏ. ஒவ்வொருவராக பாலியல் புகாரில் சிக்குவது முதல்வர் மாயாவதியை கடுப்பாக்கியுள்ளது.

'விக்ரம் நடிக்கும் கரிகாலன் என் கதை' - டிவி இசையமைப்பாளர் புகார்


நடிகர் விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' படக்கதை என்னுடையது என சொந்தம் கொண்டாடி டி.வி. தொடர் இசையமைப்பாளர் ராஜசேகரன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

ராஜசேகரன் என்ற நாகராஜ் (வயது 41) சென்னை போரூரை சேர்ந்தவர். நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் கொடுத்த பரபரப்பான புகார்:

நான் டி.வி. தொடர் இசையமைப்பாளராக உள்ளேன். நடிகர் விக்ரம் நடித்து, விரைவில் வெளிவரவுள்ள 'கரிகாலன்' படக்கதை என்னுடைய கதையாகும். அந்த கதையை நான் முறையாக பதிவு செய்து வைத்துள்ளேன்.

இந்தக் கதையை வைத்து படம் எடுக்க பல்வேறு படக்கம்பெனிகளை தொடர்பு கொண்டு வந்தேன். இப்போது அந்த கதையை வைத்து என்னிடம் அனுமதி பெறாமல் 'கரிகாலன்' படம் எடுக்கப்படுகிறது. விரைவில் அந்த படம் வெளிவர உள்ளது.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 'கரிகாலன்' படம் வெளிவருவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ள உறவு: அதிமுக ஆதரவு கவிஞர் சினேகன் கைது செய்யப்படுவாரா?


மடிப்பாக்கம் எஞ்ஜினீயர் மனைவியை கடத்தியதாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில், சினேகன் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

பிரபல சினிமா பாடல் ஆசிரியரும், நடிகருமான சினேகன் மீது, எஞ்ஜினீயர் பிரபாகரன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

அதில், தனது மனைவியையும், குழந்தையையும் கடத்திச் சென்றுவிட்டதாக கூறியிருந்தார். அந்த புகார் மனு அடிப்படையில் பிரபாகரனிடமும், அவரது மனைவியிடமும் வரதட்சணை ஒழிப்பு போலீசார் கவுன்சிலிங் மூலம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த புகார் அடிப்படையில் கவிஞர் சினேகன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சென்னை நகர சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணனிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், "சினேகன் மீது புகார் கொடுத்த பிரபாகரனிடமும், அவரது மனைவியிடமும் வரதட்சணை ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்த கட்டமாக சினேகனிடமும் விசாரணை நடத்தப்படும். தவறு செய்திருந்தால் கண்டிப்பாக சட்டபூர்வ கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார்.

சினேகன் அதிமுக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா படம் மிரள வைக்கும் ! : விஷால்


'அவன் இவன்' படத்தினை தொடர்ந்து பாலா இயக்கத்தில்  நடிக்க மீண்டும் ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால். தற்போது நடித்து வரும் 'சமரன்', அடுத்ததாக லிங்குசாமி படம், அதனைத் தொடர்ந்து பாலா படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்.

பாலா படத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறித்து விஷால் கூறியிருப்பது " அவன் இவன் படத்தினை தொடர்ந்து மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று பாலா சார் கூறினார். ஆனால் அப்படம் இவ்வளவு சீக்கிரமாக ஆரம்பமாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

'அவன் இவன்' படத்தினை போல இந்த படத்தில்  மாறுகண் உடையவராக எல்லாம் நடிக்கவில்லை. ஆனால் இந்த படத்தில் எனது பாத்திரப் படைப்பு படம் பார்ப்பவர்களை மிரள வைக்கும். இப்போதே அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது. கண்டிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது விருந்தாக அந்த படம் அமையும் " என்று தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு அரிசி 1000 ரூபாய்! : திண்டுக்கல் பரபரப்பு

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள வடமதுரை, நத்தம், சாணார்பட்டி ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிலர் கடந்த சில ஆண்டுகளாக சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


16 ஆண்டுகளுக்கு முன் சிறுமலையில் மான்கள், கேளை ஆடுகள் மற்றும் அரிய வகைக் குரங்களை சமூகவிரோதக் கும்பல் வேட்டையாடி வெளிமாவட்டங்களில் விற்பனை செய்து வந்தனர்.




10 ஆண்டுகளுக்கு முன் நவரத்தின கற்களை குறைந்த விலையில் தருவதாக கூறி போலி கற்களை விற்பனை செய்து வந்தனர்.

இதனால் பணத்தை இழந்தோர் திண்டுக்கல் தாலுகா, வடமதுரை, நத்தம், சாணார்பட்டி காவல்நிலையங்களில் புகார் செய்தனர்.

இதையடுத்து போலீசார் மோசடி கும்பலை சேர்ந்த பலரை கைது செய்தனர்.

சமூக விரோத கும்பல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ குணம் கொண்ட மணியன் பாம்பு இருப்பதாக பலரை ஏமாற்றி பணம் பறித்தனர். சில மாதங்களுக்கு முன்பு கை, கால்கள் செயல் இழந்தவரை வலம்புரிசங்கு, நாகக்கல் மூலம் குணப்படுத்தமுடியும் என கூறி பணம் பறித்துகொண்டிருந்தனர்.


இந்நிலையில், ஒரு கும்பல் பூஜை அரிசிஎன்ற பெயரில் நூதன மோசடியை ஆரம்பித்துள்ளது. ஒரே ஒரு அரிசியின் விலை ரூ.1000 எனவும், இந்த அரிசியை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வம் பொங்கும், வியாபாரம் பெருகும், குழந்தைகளுக்கு கல்வி அறிவு வளரும் என கூறி வருகின்றனர். இதை நம்பி பலரும் ஏமாந்து வருகின்றனர்.


இதுகுறித்து சமூக ஆர்வலர் சுப்புராஜ் கூறுகையில், திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள நத்தம், வடமதுரை, சாணார்பட்டி பகுதிகளில் தொடர்ந்து நூதனமோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமூக விரோத கும்பலால் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.

பணத்தை இழந்த ஒரு சிலரே புகார் கொடுக்கின்றனர். பலர் குடும்ப கவுரவத்திற்காக காவல்நிலையங்களில் புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி சமூக விரோதக் கும்பல் ஏராளமானோரை ஏமாற்றி பணம் பறித்து வருகிறது. இவர்கள் மீது மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.


இதுகுறித்து திண்டுக்கல் எஸ்பி ஜெயசந்திரன் கூறுகையில், “இதுபோன்ற புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

சந்திரபாபு வாழ்க்கையை படமாக எடுத்து வெற்றி பெற்றேன் :டைரக்டர் பாக்யராஜ்


ஒரு கிராமத்து சிறுமிக்கும், உலக நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளினுக்குமான உணர்வுப்பூர்வமான நட்பை கருவாக வைத்து, `சாப்ளின் சாமந்தி' என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்கள்.


இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள `பேம் நேஷனல்' தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

பாடல்களை, டைரக்டர் கே.பாக்யராஜ் வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

"சாப்ளின் சாமந்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை இந்த படத்தின் டைரக்டர் பிரகாஷ் என்னிடம் கொண்டுவந்து கொடுத்தபோது, படத்தின் கதையை சொன்னார்.

கதையை கேட்டு முடித்ததும், அவர் மீது எனக்கு பொறாமை ஏற்பட்டது. இப்படி ஒரு கதையை நாம் யோசிக்கவில்லையே என்பதால் ஏற்பட்ட பொறாமை அது.


எப்போதுமே நிஜ வாழ்க்கையில் நாம் சந்தித்த கதாபாத்திரங்களை படமாக்கினால், நிச்சயம் வெற்றி பெறலாம். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையை கருவாக வைத்துதான் `அந்த 7 நாட்கள்' படத்தை எடுத்தேன். சந்திரபாபு முதல் இரவு அன்றே மனைவியின் காதல் பற்றி கேள்விப்பட்டு, மனைவியை காதலருடன் அனுப்பி விடுவார்.


அந்த சம்பவத்தை மையப்படுத்தி எடுத்த `அந்த 7 நாட்கள்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுபோல் இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும்’’என்று பேசினார்.