Tuesday, 5 July 2011

இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை

தமிழக மீனவர்களை, பிடித்து செல்லும் இலங்கை கடற்படையினருடன், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்திய உளவு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

இலங்கை கடற்படை, அவ்வப்போது, தமிழக மீனவர்களை பிடித்து செல்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த மாதம், 23 மீனவர்கள் பிடித்து செல்லப்பட்டனர். தமிழக அரசு கோரிக்கைப்படி, மத்திய அரசு தலையிட்டதால், விடுவிக்கப்பட்டனர். நேற்றும், 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டனர்.தமிழக மீனவர்களை பிடிக்க வரும், இலங்கை கடற்படை கப்பலில், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி, தமிழக கியூ பிரிவு, டிடாச்மென்ட், மெரைன் போலீசார் மற்றும் மத்திய அரசின், "இன்டலிஜென்ஸ் பீரோ' ஆகிய உளவு பிரிவினர், சமீபத்தில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம், விசாரித்து வருகின்றனர்.

கடந்தாண்டு, கச்சத்தீவில் சீன வீரர்கள் முகாமிட்டிருந்ததை, திருவிழாவிற்கு அங்கு சென்ற தமிழக மீனவர்கள் பார்த்தனர். இந்நிலையில், இலங்கை கடற்படை கப்பலில் வரும் சீன வீரர்கள், தமிழக எல்லை பகுதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து, கண்காணித்து வருகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிறிலங்காவின் 'புதிய காணொலி' போலியானது - சிறிலங்கா ஊடகவியலாளர் குழு

'இலங்கையின் கொலைக்களம்' தொலைக்காட்சி விவாதம் : முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

 
 
தமிழீழத்தில் தமிழ் மக்கள் மீது இலங்கை இனவெறி அரசு நடத்திய போரின் போது பாரிய போர்க்குற்றங்களைப் புரிந்தது இலங்கை இராணுவம்.
அதனை அனைத்துலக மக்களுக்கு எடுத்து காட்டியது சனல் 4 ஒளிபரப்பிய “இலங்கையின் கொலைக்களம்” என்ற ஆவணப்படம்.தமிழன் தொலைக்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான், பேராசிரியர் பால் நியுமன் (டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் பங்காற்றியவர்), இனமான இயக்குனர் ஐயா மணிவண்ணன், பேராசிரியர் தீரன் ஐயா ஆகியோர் இதை பற்றி ஒரு விவாதத்தை முன்வைத்தனர்.

பாக்கி பணத்தை தராவிட்டால் கச்சா எண்ணெய் சப்ளை நிறுத்தம்: இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

குகையில் இயங்கும் பள்ளி (வீடியோ இணைப்பு)


கிராமங்களில் மரத்திற்கு அடியில் வகுப்புகள் நடைபெறுவதை பார்த்திருக்கிறோம். சீனாவில் Guizhou என்ற நகரத்தில் உள்ள குகை ஒன்றில் சிறுவர்களுக்கான பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது.





அதிபர் ஒபாமா சுட்டுக்கொலை: அதிர்ச்சியில் அமெரிக்கா !


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுட்டுக் கொலைசெய்யப்பட்டார் என அமெரிக்க செய்திச் சேவை தெரிவித்ததை அடுத்து பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. இச் செய்தி உலகம் பூராகவும் பரவி பலரை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பாக்ஸ் செய்திச்சேவை(FOX NEWS) மிகப் பிரபல்யமான ஒரு செய்தி ஊடகமாகும். அது பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதில் பேர்போன ஒரு ஊடகம் என்பது யாவரும் அறிந்த விடையம்.

இன்று மதியம் அந்த ஊடகத்துக்குச் சொந்தமான ருவீட்டர் கணக்கை சில கணனித் திருடர்கள் உடைத்து, அதனூடாக ஓபாமா சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இச் செய்தி வெளியாகிச் சில நிமிடங்களிலேயே அது பல மில்லியன் வாசகர்களைச் சென்றடைந்து விட்டது. பி.பி.சி, ரொய்டர்ஸ், மற்றும் அல்ஜசீரா உட்பட பல செய்திச் சேவைகள் இச் செய்தி தொடர்பாகக் குழம்பிப்போனார்கள். அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு பல நூறு தொலைபேசி அழைப்புகள் செல்ல ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து அவர் அதிபர் பராக் ஒபாமாவுடன் உடனடியாக தொடர்புகொண்டு நிலையை விளக்கியுள்ளார்.

பின்னர் இச் செய்தி எங்கிருந்து பரவுகிறது என அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எவ்.பி.ஐ விசாரணைகளை முடிக்கிவிட்டது. இதன் மூலம் ருவீட்டர் கணக்கு உடைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனை இஸ்லாமிய பயங்கரவாதிகள் சீன வல்லுனர்களுக்கு காசைக்கொடுத்து செய்திருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது. இதனை அவ்வளவு சுலபமாக விட்டுவிடமுடியாது என எப்.பி.ஐ தெரிவித்துள்ளதோடு, சூத்திரதாரிகளைக் கண்டறியும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் அல் கைடா தலைவர் ஓசாமா பின்லேடன் சுட்டுக்கொலைசெய்யப்பட்ட பின்னர் அதிபர் ஓபாமாவின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்நேரமும் தாக்கலாம் என்ற அச்ச சூழ் நிலை காணப்படுகிறது.

இந் நிலையில் அமெரிக்க அதிபர் கொல்லப்பட்டார் என்ற செய்தியை வேண்டுமெண்றே கிளப்பிவிட்டார்களா, இல்லை இது ஒரு எச்சரிக்கையா என்று தெரியாமல் அமெரிக்க உளவுப் படையினர் மண்டையை பிய்த்துக்கொண்டு உள்ளனராம் !

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம் இம் மாதத்தில் !


<>
2011 ம் ஆண்டில் ஜூலை மாதத்தில் ஒரு அதிசயம் இருக்கிறது. அதாவது இந்த ஜூலை மாதத்தில் 3ம் திகதி, 10ம் திகதி ,17ம் திகதி, 24ம் திகதி மற்றும் 31ம் திகதி ஆகிய தினங்கள் ஞாயிற்றுக் கிழமைகளாகும். அதாவது ஒரு மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வருவதற்கு பதிலாக 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. அதுமட்டுமா ? சனிக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் கூட இம் மாதத்தில் 5 தரம் வருகின்றது ஒரு பெரும் அதிசயமாகும். வழமையாக சிலவேளைகளில் கிழமைகளில் 1 நாள் கூடிக்குறையலாம். ஆனால் வெள்ளி, சனி , ஞாயிறு ஆகிய தினங்கள் இம் மாதத்தில் 5 தரம் ஒருமித்து வருகிறது. இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும் என்கிறார்கள் எண் கணித வல்லுனர்கள்.



சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வேலைசெய்தால் சம்பளம் ஒன்றரை மடங்காக வழங்கப்படும் கம்பெனிகளில் வேலைசெய்வோருக்கு இம் மாதம் குரு உச்சம்தான், ஆனால் சனி ஞாயிறு தினங்களில் ஓய்வு எடுப்போர் இம் முறை கொஞ்சம் நீண்ட நாட்கள் எடுப்பர். எப்படிப் பார்த்தாலும் இம் மாதம் ஒருவகையில் யோகம் தான்

பேஸ்புக் கின் வீடியோ செட்டிங் : புதனன்று வெளியீடு

 சமூகவலையமைப்பான 'பேஸ்புக்' எதிர்வரும் புதன்கிழமையன்று வீடியோ செட்டிங் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்தே பேஸ்புக் இச்சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் அண்மையில் தனது சமூகவலையமைப்பு அற்புதமான சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார்.

அவரது கருத்து அச்சேவை தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே இத்தகவல் கசிந்துள்ளது.

'பேஸ்புக்' தற்போது சுமார் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன், 'ஸ்கைப் ' 170 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.

'ஸ்கைப்'பை மைக்ரோசொப்ட் நிறுவனம் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேமாதம் கொள்வனவு செய்திருந்தது.

இதேவேளை கூகுள் நிறுவனம் அண்மையில் 'கூகுள் +' என்ற சமூகவலையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியது. ஒன்றினை அறிமுகப்படுத்தியது.



இதில் வீடியோ செட்டிங் வசதி உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே பேஸ்புக் இவ்வசதியை தனது பாவனையாளர்களுக்கும் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.