Monday, 26 December 2011

ஜெயலலிதாவை கிண்டல் பண்ணும் விக்ரம் :அதிமுக வினர் கோபம்?

 சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ராஜபாட்டை திரைப்படம் நிலமோசடி கதையை அடிப்படையாக கொண்டது. நாடெங்கும் நில மோசடி தொடர்பான கைதுகளும், விசாரணைகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்நேரத்தில், படத்தில் நடித்த விக்ரம் மீது மாறாத கோபத்தோடு பல்லை நறநறக்கிறார்கள் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் சிலர்.

நில மோசடி வழக்கு பெரும்பாலும் திமுக வினருக்கு எதிராகவே இருக்கிறது. உண்மை அப்படியிருக்க, ஏன் அதிமுகவினருக்கு அதிருப்தி? வேறொன்றுமில்லை, இந்த படத்தில் வரும் அக்கா என்கிற கேரக்டர் யாரை குறிக்கிறது என்பது குறித்துதான் இந்த அதிருப்தியும் கோபமும்.

முதல்வர் ஜெயலலிதா போலவே நடை உடை பாவனைகளோடு ஒரு வில்லியை காட்டி, அவரையும் அடுத்தவர்கள் ம0��ரனை கூட மன்னித்துவிடலாம். ஆனால் படத்தின் கதையை இஞ்ச் பை இஞ்ச்சாக கேட்டு கரெக்ஷன் சொல்லி நடிக்கும் விக்ரம் இப்படி ஒரு பெண் வில்லி கேரக்�A minor-latin;">இப்படி ஒரு கதையை உருவாக்கிய சுசீந்திரனை கூட மன்னித்துவிடலாம். ஆனால் படத்தின் கதையை இஞ்ச் பை இஞ்ச்சாக கேட்டு கரெக்ஷன் சொல்லி நடிக்கும் விக்ரம் இப்படி ஒரு பெண் வில்லி கேரக்டருக்கு அனுமதி தந்ததே தவறு என்கிற கோணத்திலும் இந்த விஷயத்தை கவனிக்கிறார்களாம்.

இந்த நேரத்தில் பரபரப்பை கிளப்பினால் அது படத்திற்கு இன்னும் விளம்பரமாகி விடும் அபாயம் இருக்கிறது. எனவே கொஞ்சம் கேப்விட்டு விசாரிக்கலாம் என்றும் தகவல் கசிகிறது அதிமுக வட்டாரத்திலிருந்து.

சீயானுக்கு எதற்கு இந்த சிக்கலெல்லாம்?

மத்திய அரசின் சூப்பர் திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மதிய சத்துணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. 

தற்போது நாடெங்கும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினமும் காலை சுடச்சுட உணவு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உணவு அமைச்சகம் இதற்கான பரிந்துரையை செய்துள்ளது.

எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவிகளுக்கு முதல் கட்டமாக, இந்த திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அதிகரிக்கவும், கல்வி கற்றலில் இடைநிற்றல் குறையை நிவர்த்தி செய்யவும் கலை உணவுத் திட்டம் உதவும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. 

பாராளுமன்றத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவில் காலை உணவு திட்டத்தை சேர்க்க திட்டமிட்டிருந்தனர். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியதிருப்பதால், இத்திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இந்த திட்டத்தை அமல்படுத்தினால் ஒவ்வொரு ஆண்டும் 6.5 கோடி டன் உணவு தானியங்கள் காலை உணவுத் தயாரிப்புக்கு தேவைப்படும். இந்த தேவையை சமாளித்து விடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு சுடச்சுட காலை உணவு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தின் தயவின்றி கேரளா வாழவே முடியாது! - வைகோ


தமிழகத்தின் தயவின்றி கேரளாவால் வாழவே முடியாத நிலைதான் உள்ளது. தமிழர்கள் இப்போது கிளர்ந்தெழுந்துவிட்டனர். எனவே அணையை உடைக்க அவர்களால் இனி முடியாது, என வைகோ கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் மே 17 இயக்கம் சார்பில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினார்கள்.

இதில், வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நடந்த கூட்டத்தில் மக்களிடையே மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசினார்.

அவர் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணையை உடைக்க ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கேரள மந்திரி சொல்கிறார். மேலும், அந்த அணையை உடைப்பதால் கிடைக்கும் கற்குவியலை சாலைகள் அமைக்க பயன்படுத்துவோம் என்றும் கூறுகிறார்.

முல்லைப் பெரியாறு அணை பற்றி மத்திய அரசிடம் கேரள அரசு கொடுத்த அறிக்கையில், முல்லை பெரியாறு அணை 2 மாநில பயன்பாட்டுக்கு அல்ல. கேரளத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளது. உண்மையில் திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி மலையில் இருந்துதான் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் செல்கிறது. இந்த அணையில் நமக்குள்ள பாத்தியதை இயற்கையானது.

கேரளா நமது தயவு இல்லாமல் வாழவே முடியாது. ஏனென்றால், அங்குள்ளவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி என சகலமும் தமிழகத்திலிருந்துதான் போயாக வேண்டும்.

அதனால், மத்திய போலீஸ் படை அங்கு பாதுகாப்புக்கு வராவிட்டாலும், அவர்கள் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முடியாது. ஏனென்றால் தமிழக மக்கள் கிளர்ந்து எழுந்து விட்டனர். இந்த எழுச்சியைப் பார்த்து மிரண்டு நிற்கும் கேரளா, வறட்டுத்தனமாக புதிய அணை கட்டுவதாகப் பேசி வருகிறது.

இந்தப் பேச்சை முற்றாக நிறுத்திக் கொண்டு, பழையபடி 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்," என்றார்.

தங்கர் பச்சான்

இயக்குநர் தங்கர் பச்சான் பேசுகையில், "முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக, கேரள முதல் மந்திரி உம்மன்சாண்டி, எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் ஒன்றாக கூடி பிரதமரை போய் சந்திக்கிறார்கள். ஆனால், நமது அரசியல் தலைவர்கள் எங்கே போனார்கள்?

கேரள எம்.பி.க்களும் பிரதமரை ஒன்றாக சந்தித்தார்கள். ஆனால், தமிழக எம்.பி.க்கள் பிரதமரை தனித்தனியாக போய் சந்திக்கிறார்கள். ஏன் இந்த நிலை? இனியாவது தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் உரிமைப் பிரச்சினை என்று வரும்போது, அனைத்து அரசியல் தலைவர்களும் சொந்தப் பிரச்சினைகளை மறந்து ஒரே மேடையில் கூடவேண்டும்," என்றார்.


இரண்டாம் உலகம்: முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ்!


பிவிபி சினிமாஸ் தயாரிக்க, செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்கிறார்.

பழைய பாப்புலர் மெட்டுக்களை புதிதாக பாலீஷ் போட்டு, அது பழைய மெட்டு என்றே தெரியாத அளவுக்கு தருவதில் கில்லாடி ஹாரிஸ் ஜெயராஜ். உதாரணம், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு...

ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் இவரது இசைக்கு வரவேற்பு இருப்பதாக நம்புவதால், அவர் காட்டில் நல்ல மழை!

செல்வராகவன் படங்களுக்கு ஆரம்பத்தில் இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜிவி பிரகாஷ் குமாருடன் இணைந்தார் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார்.

இப்போது இரண்டாம் உலகம் படத்தை உருவாக்கி வருகிறார் செல்வா. ஆர்யா - அனுஷ்கா நடிக்கும் இந்தப் படத்தை, ராஜபாட்டை தயாரித்த பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை செல்வராகவனே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், "ஹாரிஸுடன் இணைவது உண்மைதான். நாங்கள் இருவரும் பக்கத்து பக்கத்து தெருக்களில் வசிப்பவர்கள். சிறு வயதிலிருந்தே நானும் ஹாரிஸும் நண்பர்கள். அப்போது நான் முரட்டுப் பையன். ஹாரிஸ் அமைதியாக இருப்பார். இப்போது இருவரும் இணைந்து படம் பண்ணுகிறோம். இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்," என்றார்.

ஜீவா கவுண்டவுன் ஸ்டார்ட்


இந்த ஆண்டு ஜீவாவிற்கு சிறப்பாக அமைந்தது. அதே போல் அடுத்த வருடம் சார் ரொம்ப பிசி. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'நீ தானே என் பொன் வசந்தம்' படத்திலும், மிஷ்கின் இயக்கத்தில் 'முகமூடி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு, எஸ்.பி.ஜனார்த்தனன் இயக்கத்திலும், வாமனன் இயக்குனர் அகமது இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இதனையடுத்து வசந்த பாலன் இயக்கத்தில் ஜீவா நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் ஸ்பெஷலாக ஷங்கரின் இயக்கத்தில் விஜய் மற்றும் ஸ்ரீகாந்த்துடன் ஜீவா நடித்துள்ள 'நண்பன்' வெளியாக இருக்கிறது. அப்போ அடுத்த வருடம் தொடக்கமும் ஜீவாவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது.

விஜயகாந்த் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை மறியல்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான தொண்டர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்திருந்தார்.அதன்படி கருப்புக் கொடி காட்டுவதற்காக இன்று காலை கிளம்பிய விஜயகாந்த்தை புறப்பட்ட இடத்திலேயே கைது செய்து கொண்டு சென்று விட்டது போலீஸ்.

இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவை, கரூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, திருச்சி, திண்டுக்கல், அவினாசி, கிருஷ்ணகிரி, ஓசூர், ராமேஸ்வரம், சிதம்பரம் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னையிலும் தேமுதிகவினர் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கைதானார்கள்.

ஒரே படத்தில் 50 வேடங்களில் விக்ரம்


ஒரே படத்தில் 50 வேடங்களில் நடித்து சாதனை செய்வேன் என்று விக்ரம் கூறினார். விக்ரம் நடித்து வெளிவந்துள்ள படம் ராஜபாட்டை’. இதில் அவர் 15 கெட்அப்களில் நடித்துள்ளார். படம் பற்றி விக்ரம் நிருபர்களிடம் கூறியதாவது: காசி’, ‘பிதாமகன்’, ‘தெய்வத் திருமகள்போன்ற கனமான படங்களில் நடித்தாலும் சாமி‘, ‘தூள்மாதிரி கமர்சியல் படங்களிலும் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு படம்தான் இது. ஜனரஞ்சக படங்களிலும் முழு ஈடுபாட்டோடு நடிக்கிறேன். இதுவரை நடித்த படங்களில் அதிக உழைப்பை கொடுத்த படம், ‘ராஜபாட்டைதான். காரணம் நிறைய கெட்அப்புகள் போட்டிருக்கிறேன். ஒவ்வோரு கெட்அப்பிற்கும் பலமணி நேரம் மேக்கப்பிற்காக செலவிட்டிருக்கிறேன். நிறைய கெட்அப்களில் நடிப்பது யாருக்கும் போட்டியாக இல்லை. என்னால், ஒரு படத்தில் 50 கெட்அப்பில் கூட நடிக்க முடியும். அப்படி நடித்து விரைவில் சாதனை படைப்பேன். எனது எல்லா படங்களிலும் மெசேஜ் இருக்கும். அதை நேரடியாக கூறாமல் உணர வைப்பதுதான் சினிமா. இதில் நில அபகரிப்பு பற்றி சொல்லியிருக்கிறோம். இவ்வாறு விக்ரம் கூறினார்.

ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங்

 


ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் படம், ‘கோச்சடையான்’. இதில் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். இதில் ரஜினி ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்டதாகத் தெரிகிறது. இதுபற்றி முடிவு தெரியாத நிலையில், சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அசின் நடிக்கலாம் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூப்பர் ரஜினி இன்னும் படத்தில் நடிக்கும் அளவிற்கு உடல் தகுதி அடையவில்லை. இதனையடுத்து ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங் நடைபெறும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி

 


அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, நடராஜன் உள்பட 14 பேர் நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுபற்றி எழுத்தாளர் சோவிடம் மாலை மலர் நிருபர் கேட்டதற்கு அவர் பதில் அளித்தார். 

கேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?.

பதில்:- சசிகலாவை நீக்கியதற்கான காரணத்தை அனுமானத்தின் அடிப்படையில்தான் கூறமுடியுமே தவிர முழு விஷயமும் எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவும், அவரது உறவினர்களும் நீக்கப்பட்டது நல்ல நிர்வாகத்தை அளிக்க ஜெயலலிதா மேற்கொண்ட தீர்க்கமான உறுதியான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன். 

தமிழகத்துக்கு நல்ல ஆட்சியையும், நேர்மையான நிர்வாகத்தையும் கொடுக்க ஜெயலலிதா விரும்புகிறார். ஆட்சியும், நிர்வாகமும் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு தடை ஏற்படுத்தும் விதமாக மாநிலத்தில் மற்றொரு அதிகார மையம் செயல்படுவதில் அர்த்தம் இருக்க முடியாது.

எனவே அந்த வகையில், இந்த நடவடிக்கை சரியானது, தீர்க்கமானது என்று கூறுகிறேன். இந்த நடவடிக்கை அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்க வாய்ப்பில்லை. சிலரின் நடவடிக்கைகள், அரசின் செயல்பாட்டுக்கு இடையூறாக இருப்பதாக அவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதுதான் என்னுடைய அனுமானம் 

கே:- சசிகலா கட்சியில் இருந்து விலக்கினாலும் மீண்டும் சிறிது நாளில் கட்சியில் சேர்ந்து விடுவார் என்றும் இதற்கு முன்பு இதேபோல் ஒதுக்கி வைக்கப்பட்டு பிறகு மீண்டும் சேர்ந்திருக்கிறார் என்றும் சிலர் கூறுகிறார்களே?

ப:- அந்த கட்சியினர் அப்படி நினைக்கவில்லை. அதற்கு மேல் சொல்ல எனக்கு ஒன்றுமில்லை. 

கே:- முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீங்கள் அவ்வப்போது ஆலோசனை வழங்குவதாக பேசுகிறார்களே?

ப:- நாட்டு நடப்பையும் அரசு நிர்வாகத்தையும் மிக நன்றாக அறிந்த முதல்- அமைச்சருக்கு நிர்வாக அனுபவமே சற்றும் இல்லாத நான் ஆலோசனை வழங்குவதாக சொல்வது மிகப்பெரிய தமாஷ். ஏற்கனவே 10 வருடம் முதல்-அமைச்சராக பதவி வகித்து வந்தவருக்கு ஒரு வினாடிகூட எந்த பதவியும் வகிக்காத என்னைப்போன்றவர்கள் ஆலோசனை வழங்குவதாக கூறுவது சரியல்ல. 

கே:- சசிகலா நீக்கப்பட்ட பிறகு அந்த இடத்துக்கு இன்னொரு அதிகார மையம் உருவாகும் வாய்ப்பு உள்ளதா?

ப:- இன்னொரு அதி காரமையம் என்ன என்பதை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால்தான் அது தெரியவரும். யார் அது? எந்த வகையில் அதிகாரம் செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அப்போதுதான் எதுவும் சொல்லமுடியும்.

கே:- இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது திடீரென சசிகலா நீக்கத்துக்கு உங்கள் ஆலோசனைதான் காரணம் என்று கூறப்படுகிறதே?

ப:- இவ்வளவு நாள் இல்லாத பேச்சாக உள்ளது. சசிகலா நீக்கத்திற்கு நான்தான் காரணம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏதோ இப்போதுதான் எனக்கும் முதல்-அமைச்சருக்கும் திடீரென நட்பு ஏற்பட்டதுபோல் பேசுகிறார்கள். எங்கள் நட்பு 50 வருடத்துக்கு மேலானது. அப்படி இருக்கும் போது இப்போது நான் திடீரென ஏதோ ஆலோசனை சொல்லிவிட்டதாக கூறுவதில் துளிகூட அர்த்தம் இல்லை. 

கே:- அ.தி.மு.க.வில் பெரிய அளவில் நடவடிக்கை எடுத்துள்ள ஜெயலலிதாவுக்கு தேசிய அளவில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறீர்களா?

ப:- தேசிய அளவில் அவர் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக எனக்கு தெரியாது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் எந்த பதவியிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் தேசிய அளவில் அவர் செயல்பட விருப்பம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு என கருதுகிறேன். எனவே தற்போதைய அதிரடி நடவடிக்கைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது.

 இவ்வாறு அவர் கூறினார்.

இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.கவினர் ஆர்ப்பாட்டம்

 


கேரளத்தைச் சேர்ந்த மலபார் கோல்ட் நிறுவனத்தின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இசைஞானி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

கேரளத்தவர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெருமளவில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கடையடைப்பு உள்ளிட்டவை நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.க. தொண்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். டிசம்பர் 28ம் தேதி மலபார் கோல்ட் நிறுவன இசை நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்கிறார். இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். மலபார் கோல்ட் நிறுவனம் கேரளாவைச் சேர்ந்ததாகும். இதனால் இதில் இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளக் கூடாது, அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.கவினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்களில் சிலர் வீட்டுக்குள் சென்று இசை நிகழ்ச்சியை இளையராஜா புறக்கணிக்க வேண்டும் என்று கோரி மனு ஒன்றையும் அளித்தனர்.

இந்தப் போராட்டம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது

எந்திரனை மறந்தால் நண்பன் பிடிக்கும்: பாடல் வெளியீட்டு விழாவில் ஷங்கர் பேச்சு


நடிகர் விஜய் நடித்துள்ள நண்பன் திரைப்படத்தின் பாடல்கள் கோவையில் வெளியிடப்பட்டன. நண்பன் ஆடியோ சி.டி.யை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட அதை நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:-

இயக்குனர் ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் என்னால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அவரது இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. நடிகர் சத்யராஜ் புதுமையான வேடத்தில் இப்படத்தில் தோன்றுகிறார். தான் ஒரு இயக்குனர் என்ற போதும் எவ்வித மறுப்பும் இல்லாமல் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.

நகைச்சுவை நடிகர் சத்யன் ஒவ்வொரு காலகட்டத்தில் நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். படத்தில் என்னுடன் நடித்துள்ள ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் எனது நண்பர்கள்.

ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜீவா கலகலப்பூட்டுவார். சோகமான காட்சிகளை சீரியசாக நடித்துக் கொண்டிருப்போம். அப்போதும் அவர் கலகலப்பூட்டுவார். என்னால் எந்த நேரத்திலும் சிரிப்பை அடக்க முடியாது. ஜீவாவின் கலாட்டாவை சிரித்து ரசித்தேன்.

இவ்வாறு விஜய் கூறினார்.

இயக்குனர் ஷங்கர் பேசியதாவது:-

எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, “த்ரி இடியட்ஸ்திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.

திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார்.

நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்.

சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்தார். நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.

சிவாஜி, எந்திரன் படங்களை போல நினைத்துக் கொண்டு நண்பன் படத்தை பார்க்க வரவேண்டாம். எந்திரன் படம் போல அனிமேட்ரானிக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. ஆனால் நண்பனில் நல்ல கதை உள்ளது. எனவே எந்திரனை மறந்துவிட்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பன் படத்தை பார்க்க வாருங்கள்.

இவ்வாறு ஷங்கர் கூறினார்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் பேசியதாவது:-

எனது மாணவர் உலகம் போற்றக்கூடிய இயக்குனராக வளர்ந்திருப்பது மிகவும் பெருமைப்படக்கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு படமும் வெளியாகும்போது அடுத்த படம் எப்படி இருக்கும் என்ற பயம் இயக்குனர் ஷங்கரிடம் இருக்கும். அதுவே அவரது வெற்றியின் அடிப்படையாக உள்ளது.

நண்பன் திரைப்படத்தை ஷங்கர் தயாரிக்க விரும்பினார். ஆனால் அதற்கான உரிமையை ஜெர்மினி சர்க்யூட் நிறுவனம் முன் கூட்டியே பெற்றுவிட்டது. இருப்பினும் அவர் விரும்பியபடியே இப்படத்துக்கு இயக்குனராகிவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர்கள் சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா, நடிகை அனுயா, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், பாடலாசிரியர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

ரஜினிக்குப் பின் அஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை!


ஒழுங்காக ஒரு வெற்றிப்படம் கூட தரமுடியாத நடிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் நானாக்கும் என்று விரலாட்டிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துவிட்டு அமைதி காக்கிறார் அஜீத்.

இவரும் கூட ஒரு காலத்தில் நானே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னவர்தான். ஆனால் பின்னாளில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைய எத்தனை பாடுகள் படவேண்டும், எத்தனை வெற்றிகள் தரவேண்டும், அந்த வெற்றிகளின் பிரமாண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்து அமைதியாகிவிட்டார் (இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஒரு படத்திலாவது அடிவாங்கினால் போதும் என்கிறார்!)

அஜீத் நடிக்க மங்காத்தா படம் மொத்தம் ரூ 130 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து அதிக வசூல் தரும் நாயகன் என்ற அந்தஸ்து அஜீத்துக்கு கிடைத்துள்ளது.

இந்த வெற்றி மற்றும் வசூல் காரணமாக, அஜீத்தின் அடுத்த படத்துக்கான வர்த்தகம் எகிறிவிட்டது. சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம், வேறு போட்டி நிறுவனங்கள் மறுபக்கம் என அந்தப் படத்தை வாங்கப் போட்டி போடுகின்றன!