ஐ.நா சபையின் இருப்பும் செயற்திறனும் அது தனது உருவாக்கத்தின் அடிப்படை கோட்பாடுகளை சொல்லில் மட்டுமன்றி செயலிலும் காட்டத்தவறின் இழிநிலைக்கு சென்றுவிடும் என கடும் தொனியில் கருத்துத் தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர் Nஐhன் பெயட் அவர்கள் அவ்வாறான செயற்திறமையின்மைக்கான உதாரணங்களில் ஒன்றாக சிறு ஒழுங்குவிதியை காரணம் காட்டி தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை ஏற்று சிறீலங்காவில் புரியப்பட்ட நம்பிக்கைக்குரிய முறைப்பாடுகளைக் கொண்ட போர் குற்ற அறிக்கை குறிந்து மேலதிக நடவடிக்கை எடுப்பதை ஐ.நா தவிர்த்தது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.![]() தற்போது நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் 66வது ஐ.நா கூட்டத்தொடரில் கனடிய அரசின் சார்பில் செப்டம்பர் 26ஆம் நாள் திங்கட்கிழமை மாலை பொதுச்சபையில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் ஐ.நா கூட்டத் தொடாரில் சிறீலங்கா குறித்து பொதுச்சபையில் கருத்துத் தெரிவித்த ஒரே நாடு கனடா என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளை செயற்படுத்துவதில் காட்டிவரும் முன்னுக்கு பின் முரணான செயற்பாடுகளால் தாழ்வு நிலைக்குச் செல்வதை கனடா தொடர்ந்தும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர் அதற்கு உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாபிரிக்க இனவெறி அரசை கொமென்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்வதற்கு கனடா தெரிவித்த எதிர்ப்பை சுட்டிக் காட்டியுள்ளார். கனடிய பிரதமர் ஸ்ரீபன் காப்பர் சிறீலங்காவின் நிலைமைகளில் பாரிய மாற்றம் ஏற்படவில்லையாயின் தான் அங்கு 2013இல் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் மகாநாட்டில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை எனப் பகிரங்கமாக அண்மையில் அறிவித்திருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது. ஓக்டோபர் மாதத்தில் 2011இற்கான கொமன்வெல்த் நாடுகளின் மகாநாடு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் இங்கு சிறீலங்கா விடயம் முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதிற்கான முன்னறிவித்தலாகவே கனடிய வெளிவிவகார அமைச்சரின் ஐ.நா உரை கொள்ளப்படுகின்றது. ஐ.நா சபையின் பெரிய எதிரிகள் அதன் செயற்பாடுகளை வெளிப்படையாக குறை கூறுபவர்கள் அல்ல மாறாக அமைதியாக அதன் கொள்கைகளை உதாசீனம் செய்பவர்கள் இன்னும் மோசமானவர்கள் ஒன்றுமே செய்யாமல் ஐ.நா கீழ்நிலைக்கு செல்வதை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் நாங்கள் அவ்வாறு அமைதியாக இருக்கமுடியாது என மேலும் தெரிவித்தார் கனடிய வெளிவிவகார அமைச்சர் Nஐhன் பெயட் அவர்கள். நாடுகளின் தனித்துவத்தை கனடா மதித்தாலும் சிறுபான்மையினருகான மனித உரிமைகள் அடிப்படை சுதந்திரங்கள் மறுக்கப்படுகின்றபோது முகத்தை திருப்பிக் கொண்டு மறுபக்கம் பார்க்க மாட்டோம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் அடக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பது எம் அனைவரின் பொதுக்கடமை எனவும் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக கனடிய வெளிவிவகார கொள்கையில் சிறீலங்கா குறித்து தொடர்ச்சியாக வெளிப்பட்டுவரும் பல்வேறு மாற்றங்களின் தொடர்ச்சியாகவே கனடிய வெளிவிவகார அமைச்சரின் ஐ.நா உரையும் பலரால் கொள்ளப்படுகின்றது. |
Tuesday, 27 September 2011
சிறீலங்கா போர்குற்ற விடயத்தில் ஐ.நாவின் செயற்திறமையின்மைக்கு கனடா கடும் கண்டனம்
இந்தியாவில் அதிசயம் : உயிருள்ள பாலங்கள் (படங்கள் இணைப்பு)
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள சோரா என்கிற ஊரில் ஒரு வகை மரங்களின் உயிருள்ள வேர்களில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு பழங்குடி மக்கள் இவ்வித்தையை அறிந்து வைத்திருக்கின்றனர். இப்பாலங்கள் மிகவும் பலமானவை. ஆனால் பாலங்கள் முழுமை பெறுகின்றமைக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை பொதுவாக எடுக்கின்றது. பல நூற்றாண்டு காலத்துக்கும் நீடிக்கக் கூடியவை. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
ஜெனிவாவில் கலக்கத்துடன் நாட்களை எண்ணும் சிறிலங்கா பிரதிநிதிகள்
![]() |
| ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடர் முடிவுக்கு வர இன்னமும் நான்கு நாட்களே உள்ள நிலையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதும் கொண்டு வரப்பட்டால் அதைத் தடுப்பது பற்றிய கவலையுடன் சிறிலங்கா பிரதிநிதிகள் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானங்களை முன்வைப்பதற்கான காலக்கெடு கடந்த வியாழக்கிழமையுடன் முடிவடைந்த போதும், சிறிலங்கா பிரதிநிதிகள் கலக்கத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அதற்கு முதல் நாளான திங்கட்கிழமையே கொழும்பு திரும்பியிருந்தார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்றை கொண்டுவர கனேடிய பிரதிநிதிகள் குழு ஜெனிவாவில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அது தொடர்பாக இந்தக் கூட்டத்தொடரில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து நிகழ்ச்சி நிரலில் சேர்க்க கனேடிய பிரதிநிதிகள் முயற்சித்தனர். இதுபற்றிக் கலந்துரையாட கனேடிய பிரதிநிதிகள், ஜெனிவாவில் இருந்த ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த எதிர்பாராத நகர்வை அடுத்து, ஜெனிவாவில் இருந்த சிறிலங்கா அமைச்சரவையின் மூத்த சட்ட ஆலோசகர் மொகான் பீரிசை அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அமைச்சர் மகிந்த சமரசிங்க கேட்டுக் கொண்டார். அவரும் அந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றி, சிறிலங்கா விவகாரம் குறித்து முன்கூட்டியே தீர்மானம் எடுக்கக் கூடாது என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை பொறுத்திருக்குமாறும் கேட்டுள்ளார். தீர்மானங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் வியாழக்கிழமை என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அத்தகைய தீர்மானம் ஏதும் சமர்ப்பிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தாம் கருதியதாக சிறிலங்கா குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் கூறியுள்ளார். ஆனாலும் கடைசி நேரத்திலும் அதிர்ச்சியை சந்திக்கலாம் என்று கருதியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது ஜெனிவாவில் உள்ள மகிந்த சமரசிங்க தொடர்ச்சியாக வெளிவிவகார அமைச்சர் பீரிசுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடி வருகிறார். நியுயோர்க்கிலுள்ள மகிந்த ராஜபக்சவுக்கும் இது தொடர்பான உடனுக்குடன் தகவல்களை தெரியப்படுத்தி வருகின்றனர். சிறிலங்காவுக்கான பரப்புரையில் மகிந்த சமரசிங்க, ஜீ.எல்.பீரிசும் இணைந்திருப்பது இதுவே முதல்முறை என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
வாதப்பிரதிவாதங்கள், குறுக்கு விசாரணைகள், குற்றச்சாட்டுகள் நிறைந்த பான் கீ மூன் - மகிந்த சந்திப்பு
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பு வாதப்பிரதிவாதங்கள், குறுக்குவிசாரணைகள், குற்றச்சாட்டுகள் நிறைந்த சந்திப்பாகவே நடந்திருப்பதாக நியுயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன. ![]() ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் அவசரகாலச்சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர், அவசரகாலச்சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டதாகவும், ஆனால் விடுதலைப் புலிகள் தலையெடுப்பதைத் தடுக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் பதிலளித்துள்ளார். போர் முடிவுக்குள் வந்த பின்னரும் வடக்கில் சிறிலங்காப் படையினரை அதிகளவில் நிலை கொள்ள வைத்திருப்பது ஏன் என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் சிறிலங்கா அதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமே சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ளதாகவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் புறம்பாக அபிவிருத்தி செயற்பாடுகளில் படையினரை ஈடுபடுத்தியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச பதிலளித்துள்ளார். வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாலேயே, சிறிலங்காப் படையினரை அந்தப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச காரணம் கூறியுள்ளார். போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருதரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் கூறப்படுக்கிறது. அதேவேளை, கடந்த ஆண்டு பான் கீ மூனைச் சந்தித்த போது, வெளியிடப்பட்ட அறிக்கையில் தருஸ்மன் தலைமையிலான நிபுணர்குழு தனக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்ததாகவும், ஆனால் அந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். வடக்கில் மேற்கொள்ளப்படும் மீள்குடியமர்வு நடவடிக்கை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மேறகொள்ளப்படும் முயற்சிகள், தமிழ்க்கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் தொடர்பாகவும் பான் கீ மூனிடம் சிறிலங்கா அதிபர் எடுத்த்து கூறியுள்ளார். சிறிலங்காவுக்கு தெரியாமல் நிபுணர்குழு அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாகவும் மகிந்த ராஜபக்ச, ஐ.நா பொதுச்செயலரிடம் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஐ.நாவின் வழிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் ஐ.நா பொறிமுறை மீதான நம்பகத்தன்மையை பாதித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளை, ஐ.நாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் தொடர்பாடல் குறைபாடுகள் இருந்ததை பான் கீ மூன் ஒப்புக்கொண்டதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு இறுக்கமானதாகவும் � வாதப்பிரதிவாதங்கள் கொண்டதாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்தே சிறிலங்கா அதிபர் தன்னுடன் ஆறு பேரை அழைத்துச் சென்றுள்ளதாக கருதப்படுகிறது. அதேவேளை ஐ.நா பொதுச்செயலரும் அதற்குத் தயாராக தனது ஆலோசகர்கள், அதிகாரிகளுடன் சந்திப்பில் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்புத் தொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்கா அதிபருடன் ஜி.எல்.பீரிஸ், பாலித கொஹன்ன, ஜாலிய விக்கிரமசூரிய. லலித் வீரதுங்க, காமினி சேனாரத், சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது. ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளாதது முக்கியமானது என்றும் நியுயோரக் தகவல் ஒன்று கூறுகிறது. ஐ.நா பொதுச்செயலருடன் அவரது அரசியல் விவகாரச் செயலர் லைன் பாஸ்கோவும், பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் கலந்து கொண்டதாகவே பந்துல ஜயசேகரவின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நவி பிள்ளையின் மனிதஉரிமைகள் ஆணைய நியுயோர்க் பிரதிநிதி ஐவன் சிமோனோவிக், பாலியல் வன்முறைகள், மற்றும் மோதல் குறித்த சிறப்பு ஆலோசகர் மாகொற் வோல்ஸ்ரோம் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்ட போதும் அதுபற்றிய தகவலை இந்தச் செய்திக்குறிப்பில் மறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. |
அமெரிக்காவில் இருந்து ஓடமாட்டாராம் மகிந்த
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், அவர் தனது அமெரிக்கப் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன. ![]() மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியுயோர்க் நீதிமன்றத்தில் கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து சிறிலங்கா அதிபர் தனது பயணத்தை இடைநிறுத்தி விட்டு கொழும்பு திரும்புவார் என்று விடுதலைப் புலிகளும், தமிழீழம் அமைக்கும் திட்டத்தை கொண்டிருப்போரும் நம்பியதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. எனினும் சிறிலங்கா அதிபர் தனது அமெரிக்க நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்காமல், அங்கேயே தங்கியுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கண்டு ஓடிவிட போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளதாகவும் கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
மகிந்தரின் வாயால் வெளிவந்த ரகசியம் அம்பலம்! (வீடியோ இணைப்பு)
| ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சனிக்கிழமை இரவு சந்தித்த பின்னர் மின்தூக்கி அருகே காத்திருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹண தெரிவித்த தகவல்களை இன்னர்சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஒளிநாடாவையும் பதிவு செய்து தமது இணையத்தளத்திலும் அதனை இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்டிருக்கின்றது. "நாங்கள் அவருக்கு அனுப்பியிருந்த ஒளிநாடாவை அவர் ஏற்கனவே பார்த்துள்ளார்" என்று பான் கீ மூன் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜுபக்ஷவிடம் பாலித கோஹண தெரிவித்திருக்கின்றார். "இலங்கையின் கொலைக் களங்கள்" என்ற பிரித்தானிய சனல் -04 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்துக்குப் பதிலளிக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட "ஏற்றக்கொள்ளப்பட்ட பொய்கள்" (Lies Agreed To) என்ற ஆவணப்படத்தையே இதன் மூலம் அவர் குறிப்பிடுகின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது எனவும் இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிடுகின்றது. 'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற ஒளிநாடாவானது ஐ.நா. மற்றும் பான் கீ மூனின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றது. அத்துடன் பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜய் நம்பியாரைச் சம்பந்தப்படுத்தியதாகவும் காணப்படுகின்றது. ஆனால், 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஒளிநாடாவை பான் கீ மூன் இதுவரையில் பார்க்கவில்லை என அவரது பேச்சாளர் மார்ட்டின் சேர்க்கி கூறியிருக்கின்றார். இந்த ஆவணப்படத்தின் இறுவட்டு பல மாத காலத்தின் முன்னரே அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. |
பார்ப்பவர்களை வாய்பிளக்க வைத்த பறக்கும் மனிதன்
| ஒரு wingsuit பைலட் மலைப்பகுதியிலிருந்து ஒரு குறுகிய பிளவு மூலம் அதிக உயரம் சென்று சாதனை படைத்திருக்கிறார். ஹெலி ஒன்றில் 6000 அடி உயரத்திலிருந்து தன்னை தயார் படுத்திக்கொண்டார் Jeb Corliss , 75mph வேகத்தில் வீசும் காற்றுக்கு குறுக்காக சீனாவின் ஹுனன் பகுதியில் Tianmen mountain எனப்படும் மலைத்தொடரிலே இந்த சாகசத்தை நிகழ்த்தினார். கால்கள் மற்றும் உடல் இடையே மெல்லிய சவ்வு போன்ற அமைப்பே இவரை காற்றில் நிலையாக வைக்க உதவுகிறது. உயரம் அதிகமாகும் போது ஏற்படும் புவியீர்ப்பு மாற்றத்தை தனக்கு சாதகமாக பயன்படித்தியே இவரின் பறப்பு அமைந்தது. தனது தலைக்கவசத்தில் இருந்த வீடியோ கமரா மூலம் மிகவும் துல்லியமாக படங்களும் எடுக்கப்பட்டது. மலையின் நடுவே இயற்கையாக அமைந்த குகை போன்றதொரு பகுதியினூடாக மிக வேகமாக நுழைந்து மறுபகுதியினூடாக வெளிவந்தார். இந்த சாகச நிகழ்வை கண்டுகளிக்க மலையடிவாரத்தில் பெரும் எண்ணிக்கையானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. |
புலிகளை வேட்டையாடிய புலனாய்வு அதிகாரியே பலி
![]() |
| அம்பாறை மகாஓயா சிறப்பு அதிரடிப்படை முகாமில், அதே முகாமில் பணியாற்றும் பிரதம ஆய்வாளரால் சுட்டுக்கொல்லப்பட்ட உதவிக் காவல்துறை அத்தியட்சகர் சிசிரகுமார முத்தெட்டுவேகம கிழக்கில் புலிகளுக்கு எதிலான போரில் தீவிரமாகப் பங்கெடுத்தவர் என்று தெரியவந்துள்ளது. உதவிக் காவல்துறை அத்தியட்சகர் சிசிரகுமார சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவில் முன்னர் பணியாற்றியவர். கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதேவேளை, தனது உயரதிகாரியை சுட்டுக்கொன்ற பிரதம காவல்துறை ஆய்வாளர் டி.எ. ஜயதிலக தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். படுகாயமடைந்த அவர், மகாஓயா மருத்துவமனையில் இருந்து ஆபத்தான நிலையில் உலங்குவானூர்தி மூலம் கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டபோது நடுவழியில் மரணமாகியுள்ளார் |
அபிஷேக்-ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தைகள் .மருத்துவர்கள் உறுதி
| பிரபல பாலிவுட் நட்சத்தித்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன் � ஐஸ்வர்யா ராய் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்க, இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இத்தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கப் போகிறது என்று மருத்துவர்கள் தரப்பு உறுதியளித்திருப்பதாக மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அபிஷேக் பச்சன் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகையில், “அபிசேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க உள்ளதாக டாக்டர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால் அமிதாப்பச்சன் மற்றும் ஜெயா பச்சன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அமிதாப்பின் பேரக்குழந்தைகளை எதிர்பார்த்து அளவு கடந்த மகிழ்ச்சியில் உள்ளனர்” என்றார். |
நாடுகளின் இணையவேகம்: சுவாரஸ்ய தகவல்
![]() |
| பிரபல இணையம் தொடர்பான தகவல்களை வழங்கி வரும் பெண்டோ நெட்வேர்க்ஸ் எனப்படும் நிறுவனம் உலக நாடுகளின் சராசரி இணைய வேகம் தொடர்பில் ஆய்வொன்றினை மேற்கொண்டது. சுமார் 224 நாடுகளின் இணைய வேகம் மற்றும் தரவிறக்கம் பூர்த்தியாக எடுக்கும் நேரம் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 20 மில்லியன் கணனிகளில் இருந்தான 27 மில்லியன் தரவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகநாடுகளின் சராசரி தரவிறக்க வேகம் 580 kpbs ஆகும். பல சுவாரஸ்யமான தகவல்கள் இவ்வாய்வின் போது வெளியாகியுள்ளன. ஆம், இப்பட்டியலில் முதலிடத்தினை ஓர் ஆசிய நாடு தனதாக்கிக் கொண்டுள்ளது. அது தென் கொரியாவாகும். அமெரிக்காவிற்கு கிடைத்திருப்பது 26 ஆவது இடமாகும். அமெரிக்காவில் வேகம் வெறும் 616 kpbs. இவ்வாய்வின்படி 2 ஆம் இடத்தினை ருமேனியாவும் 3 ஆம் இடத்தினை பல்கேரியாவும் பிடித்துள்ளன. முதல் 15 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடுகளே அதிகம் இடம்பிடித்துள்ளன. ஆய்வின் முடிவுகளுடன் கூடிய வரைபடம். via chartsbin.com இலங்கையின் வேகம் 89 kbps. எமது நாட்டின் வேகத்தினை விட நைஜீரியா, அங்கோலா, அல்ஜீரியா, நைகர், சம்பியா ஆகிய நாடுகளின் வேகம் அதிகம். தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த கனடா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு முதல் 15 இடங்களுக்குள் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
சமரச பேச்சுவார்த்தையை ரகசியமாய் படம்பிடித்த சோனா!
![]() |
| பாடகர் எஸ்பிபி சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சோனா பொலிசில் முறைப்பாடு ஒன்றை கொடுத்திருந்திருந்தார். இப் பிரச்சினையில் சோனாவை சமரசம் செய்ய வெங்கட் பிரபு உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையை வீடியோவில் பதிவு செய்து பொலிசில் கொடுத்துள்ளார். மங்காத்தா படத்தின் வெற்றிக்காக தி.நகரில் உள்ள நடிகர் வைபவின் வீட்டில் மது விருந்து நடைபெற்றது. இதில் நடிகை சோனா, இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ், பின்னணி பாடகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்வின் போது, எஸ்.பி.பி. சரண், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் நடிகை சோனா பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பாண்டிபஜார் பொலிசில் புகார் அளித்த அவர், 2 முறை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திலும் முறையிட்டார். எஸ்.பி.பி. சரண் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கான வீடியோ ஆதாரத்தையும் கமிஷனர் திரிபாதியிடம் சோனா ஒப்படைத்தார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் நடிகை சோனா, பாண்டி பஜார் பொலிஸ் நிலையத்துக்கு திடீரென சென்றார். எஸ்.பி.பி. சரணுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை இன்ஸ்பெக்டர் அழகுவிடம் அவர் ஒப்படைத்தார். வீடியோ ஆதாரம் தொடர்பாக சுமார் 30 நிமிடத்துக்குமேல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது எங்கு வைத்து அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது என்பது பற்றிய விவரத்தை சோனா பொலிசாரிடம் விளக்கி கூறினார். சோனா கொடுத்த வீடியோ ஆதாரத்தை பொலிசார் போட்டு பார்த்தனர். அதில் சோனாவுடன் சமாதான பேச்சு வார்த்தை நடப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த வீடியோ ஆதாரத்தால்இயக்குநர் வெங்கட் பிரபு சோனாவிடம், சரணை மன்னித்து சமாதானமாக போகும்படி கூறுவது போன்ற காட்சிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. பேச்சு வார்த்தை நடைபெற்ற இடத்தில் யாருக்கும் தெரியாமல் கெமராவை பொருத்தி இந்த காட்சிகளை சோனா பதிவு செய்துள்ளார். இதனை அவர் பொலிசிலும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து எஸ்.பி.பி. சரண், வெங்கட் பிரபு ஆகியோரிடமும் விசாரிக்க பொலிசார் திட்டமிட்டுள்ளனர். |
மஹிந்தவுக்கு எதிராக கர்ணல் ரமேஷ் மனைவி வழக்கு (உருத்திரகுமாரன் செவ்வி)
| விடுதலைப்புலிகளின் கர்ணல் ரமேஷ் இலங்கையில் நடந்து முடிந்த போரின் போது விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த கர்ணல் ரமேஷ், போரின் இறுதிக் கட்டங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறி, அவரது மனைவி, வத்சலா தேவி, அமெரிக்காவின் நியூயார்க் நகர சிவில் நீதிமன்றம் ஒன்றில் இழப்பீடு தரக்கோரி இரண்டு வழக்குகளை தொடுத்திருக்கிறார். ரமேஷ் மனைவி வழக்கு : உருத்திரகுமாரன் செவ்வி இதில் ஒரு வழக்கில் இலங்கையின் இராணுவ உயர் அதிகாரி , மேஜர் ஜெனரல் ஷவீந்தர சில்வாவையும், மற்றொரு வழக்கில் , இலங்கை முப்படைகளின் தளபதி என்ற வகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பிரதிவாதிகளாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். மஹிந்த, ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான வழக்கு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே என்கிறார் உருத்ரகுமாரன். கேட்கmp3 இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும் மாற்று மீடியா வடிவில் இயக்க போரின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியில் வரவேண்டும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த வழக்கை தாக்கல் செய்ததாகக் கூறுகிறார், வத்சலா தேவி சார்பில் இந்த வழக்கை தாக்கல் செய்த விஸ்வநாதன் உருத்ரகுமாரன். மக்களுக்கான நீதி கிடைக்கக்கூடிய அரசியல் மற்றும் சட்ட ரீதியிலான வாய்ப்பு இலங்கையில் இல்லாத காரணத்தினாலேயே இந்த வழக்கை தாம் அமெரிக்காவில் தாக்கல் செய்ததாகவும் உருத்ரகுமாரன் கூறுகிறார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அழைப்பாணையை பிறப்பித்துள்ளதாகவும், ஆனாலும் இதுவரை அந்த அழைப்பாணையை பிரதிவாதிகளிடம் கையளிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். |
தவளை பானம் (Frog Juice) குடிக்கும் குடிமக்கள்!! (வீடியோ இணைப்பு)
| தவளை ஜூஸ் குடிக்கும் இவர்களை பாருங்கள். ஒரு கண்ணாடி பெட்டிக்குள் உயிருடன் தவளைகள் இருக்கின்றன அதில் உங்களுக்கு பிடித்த தவளையை நீங்கள் கை காட்டினால் போதும். அதை கடைக்காரர் பிடித்து உங்கள் கண் முன்னாலேயே கொலை செய்து உடனே ஜூஸ் செய்து உங்களுக்கு தருவார்கள். இதை குடிப்பவர்கள் இது தங்களுக்கு மிகவும் உற்ச்சாகம் தருவதாக கூறுகின்றனர். இதை நீங்களும் பாருங்கள். |
பல கூறுகளாக பிளவுபடும் அபாயத்தில் Yahoo
![]() |
| Yahoo நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Carol Bartz பதவி விலக்கப்பட்டதையடுத்து, அந்நிறுவனம் பல கூறுகளாக பிளவுபடும் அபாயமுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. Yahoo வை நடத்திச் செல்வதற்கு புதிய தலைவர் ஒருவரை தேடுவதற்குப்பதிலாக அதன் பங்குதாரர்கள் தமது பங்குகளை விற்பனை செய்வதற்கு கேள்விதாரர்களை தேடி வருகின்றனர். Yahoo வின் பங்குகளை கொள்வனவு செய்ய Microsoft, News Corp., Disney ஆகிய நிறுவனங்களும், விளம்பர நிறுவனமான Glam Media வும் முன்வந்துள்ளன. மேலும் AOL மற்றும் yahoo ஒன்றிணைவு குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Yahoo தமது நிறுவனத்தை விற்பதற்குப்பதிலாக அதனையும் அதன் சொத்துக்களையும் பராமரிப்பது தொடர்பாக நல்ல திட்டங்களுடன் கூடிய தலைமைத்துவத்தை பெறுவதில் கவனம் செலுத்தலாம். |
வெடிக்கும் நிலையில் மேலும் இரு ஆயுதக்கிடங்குகள் (படங்கள் இணைப்பு)
வீரவில சிறிலங்கா படைமுகாமில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தை அடுத்து முகாமுக்குள் பற்றிக் கொண்ட தீ நள்ளிரவுக்குப் பின்னரும் எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ![]() ![]() மறைந்த பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவுக்கு சொந்தமான சனசும விடுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமிலேயே இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து சிறிய ஆயுதக்கிடங்கிலேயே தீ விபத்து ஏற்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். படையினர் தங்கியிருந்த பகுதியில் இருந்து சற்றுத் தொலைவிலேயே, ஆயுதக்கிடங்கு அமைந்திருந்ததால் பாரிய உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து வீரவில படைமுகாமில் இருந்த படையினரும் முகாமைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த பொதுமக்களும் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த ஆயுதக்கிடங்கிற்குப் பொறுப்பான அதிகாரி மேலும் இரு படையினருடன் அங்கு சென்றபோதே வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், கூடச் சென்ற இரு படையினரும் காயங்களுடன் திரும்பியுள்ளதாகவும் தங்காலை காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் ஆயுதக்கிடங்கிற்குப் பொறுப்பான அதிகாரி பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். பற்றியெரியும் படைமுகாமுக்குள் படையினர் எவரேனும் சிக்கியுள்ளனரா என்பது பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை என்று கூறியுள்ள அவர், தீயினால் ஏற்பட்டுள்ள கடும் வெப்பமும், கரும்புகையும் முகாமுமைச் சூழ்ந்துள்ளதாலும், தொடர்ந்து வெடிப்புகள் இடம்பெறுவதாலும் முகாமை நெருங்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வெடிப்பு நிகழ்ந்த முகாம் பிரதேசம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அருகில் உள்ள படை முகாம்கள், காவல் நிலையங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பெருமளவு படையினரும் காவல்துறையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடித்துச் சிதறிய ஆயுதக்கிடங்கிற்கு சற்றுத் தொலையில் உள்ள ஏனைய இரு ஆயுதக்கிடங்குகளையும் பாதுகாப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அணிகள் வீரவிலவுக்கு வான்வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிந்திய செய்தி வீரவில படைமுகாமில் நேற்று் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த சிறிலங்கா படைச்சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டார் பிளேக், கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னார் கோத்தாபய - விக்கிலீக்ஸ்
வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் கூறியபோது, காலநிலை சரியில்லாததால் இரண்டு நாட்களாக ஜெட் போர் விமானங்கள் பறக்கவில்லையே என்று ஏளனமாகப் பதிலளித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. கொழும்பில் இருந்து அப்பேதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் இதுபற்றி வொசிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களம் மற்றும் தூதரகங்களுக்கு 2009 மார்ச் 12ம் நாள் அனுப்பி வைத்துள்ள தகவல் குறிப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவ்ல வெளியிட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, 2009 மார்ச் 10ம் நாள் பாதுகாப்பு வலயத்தில் பலத்த பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுவதாகவும், இதில் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 254 பேர் காயமுற்றதாகவும் ஐ.நா பிரதிநிதி தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து 2009 மார்ச் 12ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்து, பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்வுபு வலயம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பலமுறை வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் இருந்தாலும் கூட பீரங்கித் தாக்குதலை நடத்த வேண்டாம் என்றும் கோத்தாபய ராஜபக்சவிடம் கேட்டுக் கொண்டதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு கோத்தாபய ராஜபக்ச, சீரற்ற காலநிலையால் இரண்டு நாட்களாக ஜெட் விமானங்கள் பறக்கவில்லையே என்று தொடர்புல்லாமல், ஏளனமாகப் பதிலளித்ததுடன் பொதுமக்கள் கொல்லப்பட்டனரா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் தான் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று உள்ளூர் தளபதிகளுக்கு உத்தரவிடுமாறும் கூறிவிட்டு பிளேக் திரும்பியதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது. |
Sunday, 25 September 2011
உள்நாட்டு விவகாரங்களில் அன்னியத் தலையீடு கூடாது: ஐ.நா. சபையில் மன்மோகன் வலியுறுத்தல்
![]() |
| சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது' என்று ஐக்கிய நாடுகள் சபையின் 66-வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். "ஒரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை சர்வதேசச் சமூகத்துக்கு இருக்கிறது. ஆனால் ஒரு நாட்டின் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்று வெளியிலிருந்து பரிந்துரைப்பதும் அதை அமல்படுத்த ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது. ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத் தன்மையையும் மதிக்கும் வகையிலும் காப்பாற்றும்வகையிலும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். வளர்ச்சிக்கு உற்ற சூழலை மக்கள் உருவாக்க உதவ வேண்டிய கடமை ஒவ்வொரு அரசுக்கும் இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் அடிநாதமாகவும் அடிப்படை மனித சுதந்திரத்தின் சாரமாகவும் இருக்கிறது. உலக நாடுகளின் பிரச்னைகளைத் தீர்க்க நம்மிடையே ஒத்துழைப்பு அவசியம்; முரண்பட்டு மோதலில் இறங்கினால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது. தெற்கு சூடானுக்கு வரவேற்பு: நம்மிடைய புதிய உறுப்பினராக பங்கேற்கும் தெற்கு சூடானுக்கு இந்தியாவின் சார்பில் வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமற்ற சூழல்: சர்வதேச அரங்கில் இப்போது பொருளாதார ரீதியாக நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. உலக மயமாக்கல், ஒன்றை மற்றொன்று சார்ந்திருத்தல் போன்ற தத்துவங்கள் காரணமாக எல்லா நாடுகளுக்கும் தானாகவே பலன் கிடைத்துவிடும் என்ற நிலைமை முன்னர் இருந்தது. இப்போதோ தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் போன்றவற்றை அமல்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறைப் பயன்களைச் சமாளித்தே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். பொருளாதார நெருக்கடி: சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. 2008-ல் தோன்றிய நிதி நெருக்கடி நிலை இன்னமும் தீரவில்லை. பல துறைகளில் இந்த நெருக்கடி மேலும் தீவிரம் அடைந்திருக்கிறது. உலகப் பொருளாதாரத்துக்கே உந்து சக்தியாக விளங்கும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் இப்போது வெவ்வேறு காரணங்களால் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இதனாலேயே சர்வதேச அளவில் மூலதனச் சந்தையிலும் பங்குச் சந்தைகளிலும் நிலையற்ற தன்மையே காணப்படுகிறது. வளரும் நாடுகளுக்கு பாதிப்பு: இதனால் வளரும் நாடுகளுக்கு பாதிப்பு அதிகம். அவை சர்வதேசச் சந்தைகளில் காணப்படும் நிலைமைகளால் உற்பத்தி இழப்பு, வேலை இழப்பு, வருமானம் இழப்பு ஆகியவற்றைத் தாங்கியாக வேண்டும், அத்துடன் உள்நாட்டில் நிலவும் பணவீக்க விகித அதிகரிப்பால் உயர்ந்துவரும் விலைவாசியையும் சமாளித்தாக வேண்டும். தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை உயர்வாலும் உலக நாடுகள் அனைத்துமே பாதிப்படைந்து வருகின்றன. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இப்போது எல்லா நாடுகளிலுமே அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலை உயர்வாலும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், பழங்கள், காய்கறிகளின் விலை உயர்வாலும் எல்லா நாடுகளிலுமே அரசுகள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அரசியல் கலகங்கள்: மேற்காசியா, வளைகுடா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள நாடுகளில் மக்கள் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகிறார்கள். தங்களுடைய வறுமை, வேலையில்லா திண்டாட்டத்துக்குக் காரணம் ஆட்சியாளர்களின் அக்கறை இன்மையே என்று கருதுகிறார்கள். பயங்கரவாத அச்சுறுத்தல்: இதனிடையே பயங்கரவாதம் வேறு உலகின் பல்வேறு நாடுகளில் தலைதூக்கி வருகிறது. ஏராளமான அப்பாவிகள் இந்த பயங்கரவாதத்துக்கு இரையாகி வருகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டிய கட்டாயம் சர்வதேச சமூகத்துக்குக் குறிப்பாக இந்த பொதுச் சபைக்கு இருக்கிறது. வறுமை, வேலையில்லா திண்டாட்டம்: வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் பல்வேறு துணைப் பிரச்னைகளைத் தூண்டிவிடுகின்றன. சமூகங்களுக்கு இடையே சமமற்ற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பில் ஒரு சில பிரிவினருக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுதல், அடிப்படை மனித உரிமைகளுக்குக்கூட வழியில்லாதிருத்தல் போன்றவற்றால் இளைஞர்கள் புரட்சிப் பாதைக்குச் செல்கின்றனர். இது பல நாடுகளுக்குப் பெருத்த தொல்லையாக உருவெடுத்து வருகிறது. புதிய ஆபத்துகள்: சர்வதேச அளவில் வணிபம் அதிகரிக்க வேண்டிய கட்டத்தில், சர்வதேச வணிகத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக இந்துமகா சமுத்திரத்தில் கடல் கொள்ளைக்காரர்களின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது. இந்தச் சவால்களையெல்லாம் நாம் சந்தித்தே தீர வேண்டும். பாலஸ்தீனப் பிரச்னை: பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்கு இன்னமும் தீர்வு காணப்படாமலேயே இருக்கிறது. இதனால் மத்திய ஆசியாவில் வன்முறையும் அரசியல் நிலையற்றப்போக்கும் தொடருகின்றன. பாலஸ்தீனம் தனி நாடாக உருவாகும் நாளை இந்தியா ஆவலோடு எதிர்நோக்குகிறது' என்றார் மன்மோகன் சிங். |
5 வாரத்தில் விழும்; பூமியை நோக்கி வரும் மற்றொரு செயற்கை கோள்
![]() |
| பூமியை நோக்கி வரும் மற்றொரு செயற்கை கோள் இன்னும் 5 வாரத்தில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1991-ம் ஆண்டு காற்று மண்டல ஆராய்ச்சிக்காகவும், புவியியல் ஆய்வுக்காகவும், அமெரிக்காவில் இருந்து 6 டன் செயற்கைகோள் அனுப்பப்பட்டது. அந்த செயற்கைகோள் 14 ஆண்டு பணி முடிந்ததும் கடந்த 2005-ம் ஆண்டு செயல் இழந்தது. விண்வெளியில் செயலற்ற நிலையில் இருந்த அந்த செயற்கைகோள் மெல்ல மெல்ல நகர்ந்து பூமியை நெருங்கியது. 200 துண்டுகளாக உடைந்து சிதறிய அதன் 500 கிலோ பகுதி சிதறல் நேற்று கனடாவில் ஓகோடோக்ஸ் என்ற இடத்தில் விழுந்தது. இது பூமியில் விழுந்த போது மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் செயலிழந்த மற்றொரு செயற்கை கோள் பூமியை நோக்கி வருகிறது. அது ஜெர்மனியால் விண்ணில் அனுப்பப்பட்டது. “ரொசாத்” என அழைக்கப் படும் இந்த செயற்கைகோள் கடந்த 1999-ம் ஆண்டிலேயே செயல் இழந்து விட்டது. கடந்த 12 ஆண்டுகளாக இது விண்ணில் இருந்து படிப்படியாக நகர்ந்து பூமியை நோக்கி வருகிறது. 2 முதல் 4 டன் எடையுள்ள அந்த செயற்கைகோள் பூமியை நெருங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே அது இன்னும் 5 வாரத்தில் பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியை நெருங்கும்போது தூள் தூளாக நொறுங்கி வெப்பத்தில் எரிந்து முழுவதும் சாம்பலாகிவிடும். ஆகவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். |
கடாபி நலமுடன் இருக்கிறார்” மகள் தகவல்
| ||
| லிபியாவில் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு போராட்டத்தின் மூலம் மக்கள் முடிவு கட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். அவரது மனைவி ஷபியா, மகள் ஆயிஷா மற்றும் 2 மகன்கள் குடும்பத்துடன் அல்ஜீரியா நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். அங்கு அவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது அங்கு புதிய அரசு அமைந்துள்ளது. ஆனால் கடாபி எங்கு இருக் கிறார் என்பது மர்மமாக உள்ளது. இந்த நிலையில் தனது தந்தை கடாபி நலமுடன் இருப்பதாக அவரது மகள் ஆயிஷா தெரிவித்துள்ளார். சிரியாவை சேர்ந்த அராஸ் என்ற டெலிவிஷனுக்கு டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவரது டெலிபோன் பேச்சு அந்த டி.வி.யில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. டெலிபோன் செய்தியில் ஆயிஷா கூறியிருப்பதாவது:- எனது தந்தை கடாபி மிக்க நலமுடன் உள்ளார். அவரை தலைவராக பெற லிபியா மக்கள் பெருமைப்பட வேண்டும். புரட்சியாளர்களுக்கு எதிராக அவர் போராடி வருகிறார். அவருக்கு எதிராக புரட்சி செய்த தலைவர்களை நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக பொங்கி எழுந்து நசுக்க வேண்டும். புதிதாக ஆட்சி அமைத்துள்ளவர்கள் தேச துரோகிகள் என்று குறிப்பிட்டுள்ளார். |
மகிந்தவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை அவசரமாக நாடு திரும்புவார்?
![]() |
| அமெரிக்காவில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நியுயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. கேணல் ரமேசின் மனைவி நியுயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ‘தேவி எதிர் ராஜபக்ச‘ வழக்கிலேயே சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக ஈஐஎன் செய்தி கூறுகிறது. இந்த வழக்கை சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22ம் நாள் தாக்கல் செய்திருந்தார். கேணல் ரமேசின் படுகொலை மற்றும் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அவர் அவசரமாக நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
அமெரிக்காவின் வாயை அடைக்க புதிய சட்டம் கொண்டு வருகிறது சிறிலங்கா
![]() |
| பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ளது போன்று உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக லக்பிம நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் 2012 மார்ச்சில் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் புதிய சட்டத்தை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான், மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அனைத்துலக சமூகம் கொழும்பு மீது கொடுத்து வரும் அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ளது போன்று தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக சிறிலங்காவின் சட்டமா அதிபர் ஈவா வணசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார். |
வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!
| தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்ட் நார்ட் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் கோஸ்டா ஒலிவரா (90). விவசாய பண்ணையில் வேலை பார்த்து வந்தவர். வயதாகிவிட்டதால் தற்போது ஓய்வில் இருக்கிறார். இவருக்கு 2 மனைவிகள், 50 பிள்ளைகள், 100-க்கும் அதிகமான பேரக் குழந்தைகள் இருக்கின்றனர். இவரது முதல் மனைவி பெயர் பிரான்சிஸ்கா. அவருக்கு 17 குழந்தைகள் பிறந்தன. உடல்நலம் பாதிக்கப்பட்டு பிரான்சிஸ்கா இறந்த பிறகு, மரியா சில்வா என்பவரை ஒலிவரா 2-வது திருமணம் செய்தார். அவர் மூலமாக 17 குழந்தைகள். இதற்கு நடுவே, அக்காவுக்கு ஒத்தாசையாக இருப்பதற்காக மரியாவின் தங்கை ஒசலிட்டா அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வந்துபோனார். குழந்தைகளை குளிப்பாட்டுவது, பத்துப் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற உதவிகளை செய்து வந்தார். மச்சினி செய்யும் பணிவிடைகள் ஒலிவராவுக்கு ரொம்ப பிடித்துப்போனது. அவரையும் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார். அவர் மூலம் 15 குழந்தைகள். 2 மகளும் வாழ்க்கை நடத்துவதை பார்க்க, அவர்களது அம்மா வந்தார். அவரையும் ஒலிவரா விடவில்லை. அவர் மூலமாகவும் ஒரு குழந்தை பிறந்துவிட்டது. 17+17+15+1 என்று மொத்தம் 50 குழந்தைகள். கூட்டம் அதிகமானதால் இரண்டு வீட்டில் ஜாம்ஜாம் என்று குடித்தனம் நடத்தி வருகிறார் ஒலிவரா. பெண்கள் பற்றிய பேச்சு எடுத்தாலே புல்லரிக்கிறார். ‘‘கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான். விவசாயம், வேலை என்று நான் கழித்த நாட்கள் வீண் என்று இப்போது புரிகிறது. இவர்கள் 4 பேர் தவிர மேலும் பலருடன் ஜாலியாக இருந்திருக்கிறேன். அனேகமாக என் குழந்தைகள் இந்த ஏரியாவில் மேலும் பலர் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகள் பலரது பெயர்கூட எனக்கு ஞாபகம் இல்லை. கடந்த 40 ஆண்டுகளாக தம் அடிப்பதில்லை. மது குடிக்கவில்லை. தலைவலி, முதுகுவலி என எந்த வலியும் இல்லாமல் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். மனைவிகள்தான் என் சந்தோஷத்துக்கு காரணம்’’ என்கிறார் கில்லாடி தாத்தா ஒலிவரா. |
போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்! (வீடியோ இணைப்பு)
| மனிதர்கள் போதை ஏறி தள்ளாடி தடுமாறி விழும் காட்சிகளை நீங்கள் நிறையவே பார்த்திருப்பீர்கள். ஆனால் காட்டு விலங்குகள் போதை ஏறி ஆடித்திரிவதை பார்த்திருக்க மாட்டீர்கள்.. காட்டு விலங்குகள் எப்படி போதை ஏற்றும் என்றுதானே யோசிக்கிறீர்கள்? ஆம் காட்டில் வளரும் ஒரு வகை மரத்தின் பழங்களில் தான் போதை காணப்படுகிறது. இது தெரியாமல் விலங்குகளும் அவற்றை புசித்து உண்டு போதை தலைக்கேறி தள்ளாடி விழுத்து திரிகின்றமையை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. குறிப்பிட்ட இந்தப்பழம் மருளா பழம் என்று அழைக்குப்படுகிறது. இவ்வகை பழங்கள் ஆபிரிக்க காடுகளில் அதிகம் காணப்படுகிறது. இந்தப்பழங்களை பறித்து ஆபிரிக்கர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் மதுபானங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆபிரிக்க காடுகளை அண்டி வாழும் குடிவாசிகளும் இவ்வகை பழங்களை புசித்து வருகிறார்கள். இந்தப்பழங்களை புசித்த யானை முதல் குரங்கு வரை போதையில் போடும் ஆட்டங்களை நீங்களும் ரசியுங்கள் |
இரண்டு மைல் நீளமான ஆடையுடன் வித்தியாசமாக நடைபெற்ற திருமணம்
| திருமணத்திற்கு 3km நீளமான ஆடையுடன் ஊர் முழுவதும் வலம்வந்த இந்த ஜோடி கின்னஸ் சாதனைப்புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது. தேவாலயத்தில் இருந்து திருமண மண்டபம் வரை இவர்கள் வீதிவழியே ஊர்வலமாக சென்றனர். இதில் மணப்பெண்ணின் நண்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர், 6000m நீளமான பட்டு துணியில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடை முந்தைய சாதனையை விட 28 மடங்கு நீளமானது. ![]() ![]() ![]() ![]() |
திருகோணமலை வர்த்தகக் கண்காட்சியில் போராயுதங்கள் � பொதுமக்கள் அதிர்ச்சி (படங்கள் இணைப்பு)
| திருகோணமலையில் நடைபெற்று வரும் ஈஸ்ட் எக்ஸ்போ -2011 வர்த்தகக் கண்காட்சியில் சிறிலங்காப் படையினரின் போர்த்தளபாடங்களே பெருமளவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, கிராமிய உற்பத்தி, கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் திருகோணமலையில் பிரமாண்டமான வர்த்தகக் கண்காட்சி நேற்று தொடக்கம் நடைபெற்று வருகிறது. சுமார் 500 வரையான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை நேற்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச திறந்து வைத்தார். வர்த்தகக் கண்காட்சி என்று கூறப்பட்டுள்ள போதும் சிறிலங்காப் படைகள் அரங்குகளை அமைத்து தமது போர்த்தளபாடங்களை இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர். சிறிலங்கா விமானப்படை பெல் மற்றும் எம்.ஐ 24 தாக்குதல் உலங்குவானூர்திகளையும், பி.ரி-6 பயிற்சி விமானத்தையும் காட்சிப்படுத்தியுள்ளது. சிறிலங்கா கடற்படை படகுகள் மற்றும் போராயுதங்களைக் கொண்ட அரங்குகளை அமைத்துள்ளது. சிறிலங்கா இராணுவம், 85,மி.மீ, 122 மி.மீ,130 மி.மீ நீண்டதூர ஆட்டிலறிகள், பல்குழல் பீரங்கி, போர் டாங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான சுடுகலன்கள், படைத்தளபாடங்களையும் இந்தக் கண்காட்சியில் பார்வைக்கு வைத்துள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு மிரட்சியூட்டும் வகையில் படைத்தளம் போன்ற அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. வர்த்தக கண்காட்சியில் சிறிலங்காப் படையினர் அரங்குகளை அமைத்து ஆயுதங்களைக் காட்சிப்படுத்தியிருப்பது இதனைப் பார்வையிட்ட பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
நயினை நாகபூசணியின் புனிதத் தன்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் சிங்கள மக்கள்!!! (வீடியோ இணைப்பு)
| வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாளாந்தம் அலைகடல் என மக்கள் வருகை தருவது அதிகரித்து வருகின்றது. இதில் தென்பகுதியில் இருந்து வரும் சிங்கள மக்களின் அளவு மிக மிக அதிகமாகவே காணப்படுகின்றது. இப் பகுதியில் விகாரை இருப்பதுவே இதற்குக் காரணம் எனலாம். இவ்வாறு விகாரைக்கு விஜயம் செய்யும் சிங்கள மக்கள் நயினை நாகபூசணித் தாயையும் தரிசிக்கத் தவறுவதில்லை. அவ்வாறு தரிசிக்க வரும் சிங்கள மக்கள் தாங்கள் அணிந்திருக்கும் பாதணிகளை ஆலயத்திற்குள் போட்டுக் கொண்டு செல்வதும், அல்லது ஆலய முன்றலில் கழற்றி விட்டுச் செல்வதும் ஆலயத்தின் புனிதத் தன்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் ஒரு செயற்பாடாகவே அமைகின்றது. ஆனால் இவ்வாறு பாதணிகளைக் கழற்றி விட்டுச் செல்லும் மக்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என ஒரு வயதுபோன ஐயா வழமையாக கூறிக் கொண்டிருப்பார். இருந்தும் அவரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுச் சிலர் பாதணிகளை ஆலய முன்றலில் கழற்றி விட்டுச் செல்கின்றனர். அல்லது தாங்கள் கொண்டு வரும் பைக்குள் பாதணிகளைப் வைத்துக் கொண்டு அப்படியே ஆலயத்திற்குள்ளும் செல்கின்றனர். அவ்வாறு கழற்றி விட்டுச் செல்லும் பாதணிகளை இந்த ஐயா தான் வைத்திருக்கும் தடியால் தட்டி விடுவதும் வழமை. இவ்வாறு நாளாந்தம் நடைபெறுவது வழமையாகி விட்ட ஒன்று. இருந்தும் முழுக்க முழுக்க நாம் சிங்கள மக்கள் மீது குறைகூறுவது தவறான விடயம். ஏனென்றால் இந்து ஆலயங்களின் நடைமுறைகள் சிங்கள மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அதனை நாம் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் விளங்கப்படுத்திப் பதாகைகளைத் தொங்க விடுவது கட்டாய தேவையாகும். இதனை ஆலய பரிபாலன சபை முதன்மைப்படுத்தி செய்ய வேண்டிய ஒன்றாகும். |
சர்வதேச ரீதியான தீர்வு சாத்தியப்படாது!- ஐ.நா. கூட்டத்தில் ஜனாதிபதி உரை (வீடியோ இணைப்பு)
கடந்த கால கசப்பான அனுபவங்களை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 66ம் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முயற்சிக்கப்படும். மக்களின் மனதில் ஏற்பட்ட துன்பியல் உணர்வுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கு மாகாணத்தில் படையினர் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்றனர். வடக்கு மாகாணத்தில் மிகவும் சொற்ப அளவிலான படையினரே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். யங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து திடமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். உலகில் சிறிய நாடுகள் உதாசீனம் செய்யப்படக் கூடாது, அவ்வாறான நாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனித உரிமை என்னும் பெயரில் நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கியூபாவிற்கு பூரண ஆதரவினை தெரிவிப்பதாகவும், நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படும் போது ஒட்டுமொத்த சனத்தொகை மற்றும் எதிர்கால சந்ததியினர் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எமது நாட்டு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு சர்வதேச ரீதியான தீர்வுகளை வழங்க முடியாது, அது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ரீதியான தீர்வு சாத்தியப்படாது- மகிந்த ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ இலங்கையில் நிலவும் பிரச்சனைகளுக்கு சர்வதேச ரீதியில் தீர்வு தேடுவது என்பது சாத்தியமற்ற விடயம் என்று கூறியுள்ளார். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கிலிருந்து கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தை அணுகக்கூடாது என்றும் நியூயோர்க்கில் ஐநா பொதுச்சபையின் 66வது அமர்வில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தொலை தூரத்திலுள்ள நாடுகளிலிருக்கும் நண்பர்கள், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வரலாற்றின் புதிய தருணத்தில் தாங்கள் சந்தித்திருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் நட்புறவு மற்றும் நல்லெண்ண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் மகிந்த கூறினார். உள்நாட்டில் ஏற்படுகின்ற தீர்வு மூலமே இலங்கைச் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று தமது மக்கள் நம்புவதாக கூறிய மகிந்த, உலகளாவிய ரீதியில் தீர்வை தேட முனைவது யதார்த்தத்தில் சாத்தியமற்றது எனவும் குறிப்பிட்டார். இது தவிர, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்றும் ஐநா பொதுச்சபையில் கூறிய இலங்கை ஜனாதிபதி சுற்றுச்சூழல் மாசடைதல், உலகமயமாதல், சர்வதேச நிதிக் கொள்கைகள் தொடர்பாகவும் இலங்கையின் நிலைப்பாட்டை தெரிவித்தார். |
இலங்கையின் அமைவிடத்தை தெரியாத அரச எம்.பி (வீடியோ இணைப்பு)
| இலங்கையின் அமைவிடம் குறித்து சரியாக தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கின்றார். இவ்ர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகர்களில் ஒருவர். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் கடந்த காலங்களில் முக்கியமான அமைச்சுப் பதவிகளையும் வகித்து இருந்தவர்,கவிஞரும்கூட. ஆம். இவர் சாட்சாட் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பிதான். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அமர்வு ஒன்றில் கலந்து கொண்டு இவர் உரையாற்றி இருந்தார். இலங்கை தென்மேற்கு ஆசியாவில் அமைந்து உள்ளது என பேச்சின் இடையில் சொன்னார். அஸ்வர் பேசி முடித்தவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஹர்ஷா டி சில்வா எழுந்து பேசினார். புவியியல் பாடத்தை அஸ்வர் எம்.பி சரியாக படித்து இருக்கவில்லை, ஏனெனில் இலங்கை தென்மேற்கு ஆசியாவில் அமைந்து இருக்கவில்லை, தெற்கு ஆசியாவில் அமைந்து உள்ளது, தரம் 02 இல் பயில்கின்ற மாணவர்களுக்குகூட இது தெரியும் என்றார். எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஸ்வரை கிண்டல் செய்து எக்காளமிட்டு சிரித்தனர். |
கொட்டும் மழையிலும் ஐ நா முன்றலில் பொங்கியெழுந்த பொங்கு தமிழர் (படங்கள் இணைப்பு)
| வெள்ளிக்கிழமை, செப்டெம்பர் 23, 2011 காலை 10 மணிக்கு ஆரம்பனான நாடு கடந்த தமிழீழ அரசால் ஒழுஙுகு செய்யப்பட்ட வடஅமெரிக்கத் தமிழரின் பொங்கு தமிழ்ப் பேரணி, கொட்டும் மழையிலும் பல சாதனைகள் படைத்து உலகத் தமிழினத்தைப் பெருமைப்பட வைத்துள்ளது. இதுவரை ஐநா சபை கண்டிராத அளவுக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் மானத் தமிழர்களின் உணர்ச்சிவசமான பேரொலியும், கோசங்களும், அதற்கும் மேலாக அவர்கள் தாங்கிநின்ற பதாதைகளும் அங்கு வ்ந்த உலகத் தலைவர்களையும் அவர்களின் உள்ளத்தையும் உறுத்தும் அளவிற்கு பொங்கு தமிழ்ப் பேரணி அமைந்தது கண்டு பெருமையடையாத தமிழர் எவருமே இருக்கமுடியாது. நாடுகடந்த தமிழீழ அரசால் ஒழுஙுகு செய்யப்பட்ட இந்தப் பேரணியின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ராம் சிவலிங்கத்தின் ஆரம்ப உரையுடன் இந்த நிகழ்வு ஆரம்பமானது. அவர் தனது உரையில் தமிழர் தேசத்துக்கும் சிங்கள் நாட்டுக்கும் நடந்த யுத்தத்தில் சில சக்தி வாய்ந்த நாடுகள் சிங்கள அரசு பக்கம் சார்ந்து செயற்பட்டதாலும், பல நாடுகள் பார்த்தும் பாராமுகம் காட்டியதாலுமே இன்று நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார். எம்மை இந்த நிலைக்குக் கொண்டுவரக் காரணமான சர்வதேச சமூகம் எமக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறது என்றும், இவர்கள் எமக்கு உதவி புரிவதற்கான தகுந்த தருணம் இதுவே எனவும் அவர் தன்து உரையில் மேலும் தெரிவித்தார். கனடா நாட்டின் மார்க்கம் நகர கவுன்சிலர் லோகன் கணபதி தனது சிறப்ப்புரையில், ஆப்ரகாம் லிங்கனின் துணிவுமிக்க செயலால் சட்டமூலமாக அடிமைத்தனத்தை அகற்றிய இந்தப் புனித நாட்டிற்கு நான் கூறும் செய்தி என்னவென்றால் தமிழ் ஈழத்தில் தற்போதும் எம்மக்கள் திற்ந்த வெளி மறியலில்தான், இராணுவத்தின் மத்தியில், அடிமைகளாக இருக்கிறார்கள் என்றும், ஒபாமா அரசு இன அழிப்பைச் செய்த, போர்குற்றங்கள் புரிந்த, மனித உரிமைகளை மீறின ராஜபக்ச'வையும் அவருக்கு உடந்தையாகச் செயற்பட்ட மற்றைய சில குற்றவாளிகளையும் அடிமைத்தனத்தை அகற்றிய புனித நாடான அமெரிக்காவுக்குள் அனுமதித்திருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார். பிரதமர் கௌரவ விசுவநாதன் உருத்திரகுமாரன் உரையாற்றுகையில், ஐ நா சபையின் அறிக்கையை மக்கள் மயப்படுத்தியதன் அவசியத்தையும், அதன் பிரகாரம் நாம் எடுத்த கையெழுத்து வேட்டையின் தேவையையும் எடுத்தியம்பினார். சர்வதேச ரீதியில் கையெழுத்துப் போட்ட பத்து இலட்சம் மக்க்களுக்கும், அதன் வெற்றிக்கு உதவிய பல்வேறு கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசும் உலகத் தமிழினமும் நன்றி கூறுவதில் பெருமையடைகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில் தமிழ்த் தனிநாடு, அதாவது தனிநாடாம் தமிழீழம், மட்டுமே எமது தாகத்தைத் தணிக்கும் எனவும், அது கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் எனவும் பலத்த கரகோசத்தின் மத்தியில் திடமாகவும் திடகாத்திரமாகவும் கூறினார். அத்துடன் எமது நோக்கம் நிறைவுபெறும் வரை நாம் சட்ட ரீதியாகவும், அரசியல் அடிப்படயிலும் எமது எதிர்ப்பு நடவடிக்ககளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க் வேண்டியதன் அவசியத்தையும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார். ஐ நா அமைப்பும், சர்வதேச சமூகமும் தமிழினத்துக்கு நன்மைதரும் விதத்தில் விரைவில் ஓர் நல்ல தீர்வுக்கு வருவதற்கான வழிவகைகளுக்கான அத்தனை செயற்பாடுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்ந்தும் செய்துவரும் என்றும் உறுதியளித்தார். கலாநிதி ராம் சிவலிங்கம் தனது நன்றியுரையில், பொங்கு தமிழ் நிகழ்வைச் சிறப்பாக நடாத்த அங்கு வருகை தந்து சிறப்புரையாற்றிய கனடா நாட்டின் மார்க்கம் நகர கவுன்சிலர் லோகன் கணபதிக்கும், எமக்கு உறுதுணையாக இருந்து ஈடில்லா உதவி செய்த அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும், பொருளுதவி புரிந்த மருத்துவர்களுக்கும், வர்த்தகப் பெருமக்களுக்கும், நிகழ்வின் ஒழுங்குகளைக் கவனித்த நாடுகடந்த தமிழீழ அரசின் தொண்டர் படைக்கும், அதன் பிரதிநிதிகளுக்கும், கொட்டும் மழையிலும் வருகை தந்து சரித்திரம் படைத்த வட அமெரிக்க மறத்தமிழருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசு சார்பில் நன்றியைத் தெரிவித்து நிகழ்வை நிறைவுசெய்தார். இந்தப் பொங்கு தமிழ் தமிழ்ப் பேரணியின் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானம் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் அனுமதியுடன் நிறைவு செய்யப்பட்டமை இந்தப் பேரணியின் முக்கிய அம்சமாகும். இந்த நிகழ்வினை ஊடகத்துறை அமைச்சர் கௌரவ சாம் சங்கரசிவம் அவர்கள் தொகுத்து வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது. கலாநிதி ராம் சிவலிங்கம் துணைப் பிரதமர் நா. க.த. அ sivalingham@sympatico.ca ![]() ![]() ![]() |
ஈழத்தமிழ் அகதிகளுக்கு சார்பாக இந்திய நீதிமன்றத்தில் தீர்ப்பு
![]() |
| அகதிகள் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக தனியான சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய நீதிமன்றம் ஒன்று வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் 20 ஆண்டுகளாகத் தங்கியிருந்த அகதி ஒருவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்த இந்திய அரசுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே துவாரகா நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்த சந்திரகுமார் (வயது 39) என்பவர், போலிக் கடவுச்சீட்டு மூலம் இத்தாலிக்கு செல்ல முயன்ற போது புதுடெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஆறு மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது. சிறிலங்காவில் தனக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று அவர், இந்திய அரசின் நாடுகடத்தும் முயற்சிக்கு எதிராக துவாரகா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பை துவாரகா மெட்ரோ பொலிற்றன் மஜிஸ்ரேட் நீதிபதி அருள் வர்மா கடந்த 20ம் நாள் வெளியிட்டார். இந்தத் தீர்ப்பில் சந்திரகுமாரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்று நீதிபதி கூறியுள்ளார். அத்துடன், “ பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் சிறிலங்கா அகதிகளை வெளிநாட்டினர் என்று கருத முடியாது. அகதிகளை வரவேற்கும் இந்தியா, அவர்களுக்காக தனியான சட்டம் இயற்ற முன்வராதது வருந்தத்தக்கது. அகதிகளைக் கட்டாயப்படுத்தி தமது நாட்டுக்குத் திருப்பி அனுப்பவும் முடியாது. அகதிகளுக்கு தேசிய அளவில் சட்டம் இயற்றுவது அவசியம் என்று இந்திய சட்ட ஆணையமும், தேசிய மனிதஉரிமைகள் ஆணையமும் வலியுறுத்தியுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு அகதிகளுக்கு தனியான சட்டம் இயற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று நீதிபதி அருள் வர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வாதிட்ட சட்டவாளர் முத்துகிருஸ்ணன் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், “திகார் சிறையில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு சட்ட ஆலோசனை கிடைப்பதில்லை. இதனால் வேறு வழியில்லாமல் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக உள்ளது. அகதிகள் விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று சட்ட ரீதியாகப் போராட உள்ளேன். நீண்டகாலமாக இந்தியாவில் வாழும் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இந்தத் தீர்ப்பினால் சிறையில் வாடும் இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படமாட்டார்கள் என்று நம்புகிறேன்“ என்று தெரிவித்தார் |
200 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்தது :
| விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா “யூ.ஏ.ஆர்.எஸ்.” என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கடந்த 2005-ம் ஆண்டில் முடிவடைந்தது. இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கைகோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கைகோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் விழும் என “நாசா” விண்வெளி மையம் அறிவித்தது. நேற்று இரவு 10.30 மணியில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அது பூமியில் மோதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் அது பூமியில் விழவில்லை. இருந்தாலும் அது பூமியை நெருங்கி விட்டது. இன்றுக்குள் பூமியை மோதும் என “நாசா” விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் கனடாவின் ஓகோடோக்ஸ் மாகனத்தில் முற்பகலில் செயற்கைகோள் துண்டுகள் விழுந்துள்ளதாக ட்விட்டரில் “நாசா” விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் |
Saturday, 24 September 2011
சிறிலங்காவுடனான ஆறுநாள் போர்ப்பயிற்சியை இன்றுடன் இடைநிறுத்துகிறது இந்தியா
இந்திய - சிறிலங்கா கடற்படைகளின் ஆறு நாள் கூட்டுப் போர்ப்பயிற்சி நான்காவது நாளான இன்றுடன் திடீரென நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ![]() இன்றுடன் இந்தப் போர்ப்பயிற்சி முடிவுக்கு வரவிருப்பதாக சிறிலங்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சண்டேரைம்ஸ் ஒன்லைன் தகவல் வெளியிட்டுள்ளது. திருகோணமலையில் துறைமுக, கடல்சார், மற்றும் கடற்கொள்ளை முறியடிப்பு சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடுவது குறித்து இருநாட்டுக் கடற்படைகளும் இணைந்து கடந்த 19ம் நாள் தொடக்கம் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இருநாடுகளினது கடற்படைகளையும் சேர்ந்த 16 போர்க்கப்பல்கள் மற்றும் படகுகள் இந்தப் பாரிய போர்ப்பயிற்சி நாளை மறுநாள் 24ம் நாள் வரை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென நான்காவது நாளுடன் இந்தப் பயிற்சி நிறைவடைவதாக சிறிலங்கா அதிகாரி கூறியுள்ள போதும், அதற்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை. சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள பாமக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. அத்துடன் இராமேஸ்வரம் மீனவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடியாகப் போர்ப்பயிற்சியை நிறுத்தக் கோரியும் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த எதிர்ப்புகள் காரணமாக போர்ப்பயிற்சி இடைநடுவில் கைவிடப்படுகிறதா அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளதா என்பது பற்றிய விபரங்கள் ஏதும் இன்னமும் தெரியவரவில்லை. |
யாழ்ப்பாண மக்கள் செய்த பாவம்தான் என்ன...?
| யாழ்.குடாநாடு தமிழ் பேசும் மக்களின் கோட்டையாக இருந்து வருகின்றது. அந்த கோட்டையைத் தகர்த்தெறியும் நோக்கில் சில விசமிகள் அதீத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் இந்த விசமிகளுக்குப் பின்னர் சகல அதிகாரம் கொண்ட ஒரு படையணி இயங்கி வருகின்றது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. அந்தளவுக்கு இந்த விசமிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் தமிழ் மக்களின் நிம்மதியைக் குலைத்து அவர்களைக் குகைக்குள் அடைக்கும் ஒரு திட்டமிட்ட நயவஞ்சகச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட நாளுக்கு மர்ம மனிதன், கிறிஸ் பூதம் என சில விசமிகளால் வேண்டத்தகாத செயற்பாடுகள் முடுக்கி விடப்பட்டிருந்தது. பின்னர் அதற்கு ஓய்வு கொடுத்து விட்டு தமிழர் பகுதிகளில் களவுகள் என்ற போர்வையில் அவர்களின் வாழ்வியலைச் சிதைக்கும் ஒரு சதிவேலை நடந்தேறுகின்றது. இக் கொடுமைகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் தமது வாழ்க்கைக் கொண்டு செலுத்தும் மனோ நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சறுக்கி வருகின்றனர். என்ன செய்வது? சிறுபான்மையினம் என்ற ஒரு சொற்பதத்தைக் கொண்டு அவர்கள் மீது சொல்லொண்ணாத் துன்பங்களைக் கட்டவிழ்த்து விடுவதென்பது நாம் என்ன பாவம் செய்தோம் எனக் கேள்வி கேட்கும் அளவுக்கு தமிழ் மக்களைக் கொண்டு செல்கின்றது. இத்துணை துன்பங்களுக்கும் காரணம், எமக்கென்று ஒரு தலைமைத்துவம் இல்லை என்பதுடன், நாம் எமது பிரதிநிதிகள் எனப் பாராளுமன்றம் அனுப்பியவர்கள் தமது சொந்தப் பிரச்சினைகளை முதன்மைப்படுத்திக் கொண்டிருப்பதுவுமே காரணம் எனலாம். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக நடந்தேறி வருகின்ற அட்டூழியங்களை எதிர்த்து எந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர் எனக் கேள்வி எழுப்பினால், கையை விரிப்பதைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. சில வேளைகளில் யாழ்ப்பாணம் எங்கு இருக்கின்றது என்று கேட்டால் அவர்கள் தமது கையை விரித்துத் தெரியாது என்று கூறும் அளவுக்கு அவர்களின் செயற்பாடுகள் அமைந்து வருகின்றது. களவுகள், கொலைகள், மர்ம மனிதன் என எல்லாவிதமான துன்ப, துயரங்களைத் தமிழ் மக்கள் மீது சுமத்தி, அதில் சுகம் காணுகின்றது அரசு. அதற்குத் துணைபோகின்றனர் எம்மில் சிலர். |
கடற்புலிகளின் போர்த்தந்திரங்களை இந்தியாவுக்குக் கற்றுக் கொடுத்தது சிறிலங்கா (படங்கள் இணைப்பு)
| இந்திய-சிறிலங்கா கடற்படைகள் திருகோணமலைக் கடற்பரப்பில் மேற்கொண்டு வந்த கூட்டுப் போர்ப்பயிற்சி ஒரு நாள் முன்னதாக- நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. போர்ப்பயிற்சியின் இறுதி நாளான நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவும், இந்தியாவின் ஏவுகணைப் போர்கப்பலான ‘ஐஎன்எஸ் சிவ்லிக்‘ இல் இருந்து இறுதிநாள் போர்ப்பயிற்சிகளை அவதானித்துள்ளனர். செடெக் உலங்குவானூர்தி மூலம் இவர்கள் இந்தியப் போர்க்கப்பலுக்குச் சென்றிருந்தனர். இந்தப் போர்ப்பயிற்சியின் ஒரு கட்டத்தில் கடந்த ஆண்டில் இந்தியக் கடற்படையில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ‘ஐஎன்எஸ்.சிவ்லிக்‘ இல் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்க இயந்திரத்துடன், கட்டப்பட இந்தப் போர்க்கப்பலில் ரஸ்ய - இந்திய ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் போர்ப் பயிற்சியில் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் ரண்விஜய், ஐஎன்எஸ் சிவ்லிக், ஐஎன்எஸ் காரியல், ஐஎன்எஸ் கஞ்சர், ஐஎன்எஸ் செரியம், ஐஎன்எஸ் கோரதீவ் ஆக ஆறு போர்க்கப்பல்களுடன் கடற்படை உலங்குவானுர்திகளும், டோனியர் கண்காணிப்பு விமானம் ஒன்றும் பங்குபற்றியிருந்தன. சிறிலங்கா கடற்படையின் சார்பில் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான சாகர மற்றும் சமுத்திர, ஏவுகணைப் போர்க்கப்பலான நந்திமித்ர, அதிவேக பீரங்கிப் படகுகளான பிரதாப, ரணஜய மற்றும் ஆறு அதிவேகத் தாக்குதல் படகுகள் என மொத்தம் 11 போர்க்கலன்களும் பங்கேற்றிருந்தன. இந்தியக் கடற்படை சார்பில் சுமார் 1200 துருப்புகளும், கிட்டத்தட்ட அதேயளவான சிறிலங்கா கடற்படையினரும் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர். இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் போர்ப்பயிற்சியை அனைத்துலக சமூகமும், கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளும் கவனமான அவதானித்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிய படகுகளின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்த அனுபவங்கள் சிறிலங்கா கடற்படைக்கு நிறைவே இருப்பதாகவும், இத்தகைய தாக்குதல்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பது குறித்து தாம் அறிந்து கொண்டுள்ளதாகவும் இந்தப் போர்ப்பயிற்சிக்கு தலைமை தாங்கிய இந்திய கடற்படையின் கிழக்கு தளபதி றியர் அட்மிரல் எச்.சி.எஸ்.பிஸ்ற் தெரிவித்துள்ளார். சிறிய படகுகள் மூலமான தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த பயிற்சி ஊடகவியலாளர்களுக்கும் காண்பிக்கப்பட்டது. சிறிலங்கா கடற்படையின் சிறிய தாக்குதல் படகுகளைக் கொண்ட அணியொன்று இந்தியப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சிவ்லிக் மீது தாக்குதல் நடத்திய போது, மரபுசார்ந்த ஆயுதங்களைக் கொண்ட பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. அது பயனற்றுப் போக சிறிய ஆயுதங்களைக் கொண்ட படகுகள் மூலம் அந்தத் தாக்குதலை முறியடிப்பது போன்று அந்தப் போர் ஒத்திகை அமைக்கப்பட்டிருந்தது. இதன்போது கடற்புலிகள் சிறிய படகுகளைக் கொண்டு போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கையாண்ட போர் உத்திகளை சிறிலங்கா கடற்படை, இந்தியக் கடற்படைக்கு செயல்முறையில் விளக்கமளித்துள்ளது. இந்திய- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் முதலாவது கூட்டுப்பயிற்சி 2005ம் ஆண்டில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் போர்ப்பயிற்சி சிறிலங்காவில் போர் தீவிரமடைந்ததை அடுத்துக் கைவிடப்பட்டது. போர் முடிவுக்கு வந்த நிலையில் இந்தப் போர்ப் பயிற்சி மீளத் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டிருந்ததாகவும், இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார். இந்தப் போர்ப்பயற்சி கடந்த 19ம் நாள் தொடக்கம் 24ம் நாள் வரையான ஆறு நாள்கள் நடைபெறும் என்று முன்னதாக இருதரப்பினாலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன்னதாகவே இந்தப் போர்ப்பயிற்சி முடித்து கொள்ளப்பட்டுள்ளது. போர்ப்பயிற்சிகளை இன்று முடித்துக் கொண்டு திருகோணமலையில் இருந்து புறப்படத் திட்டமிட்டிருந்த இந்தியப் போர்க்கப்பல்கள், ஒருநாள் முன்னதாகவே பயிற்சிகளை முடித்துக் கொண்டு நேற்று மாலையே புறப்பட்டுச் சென்றுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். எனினும் ஒருநாள் முன்னதாகவே போர்ப்பயிற்சி முடித்துக் கொள்ளப்பட்டு, இந்தியப் போர்க்கப்பல்கள் அவசரமாக புறப்பட்டுச் சென்றதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
களியாட்டங்களுக்கு சென்றதால் கைமேல் கிடைத்தது பலன்
நடிகை சோனியா அகர்வால் விவாகரத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் எப்படி வாய்ப்பு தேடுகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?![]() பிரபலங்கள் கொடுக்கும் அனைத்து பார்டிகளிலும் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். பார்ட்டி என்றால் பல பேர் வருவார்கள். புதிதாக பலர் அறிமுகமாவார்கள். அதன் மூலம் படவாய்ப்புகள் கிடைக்கும் என்பது சோனியாவின் கணிப்பு. அவர் கணிப்பு தவறாகவில்லை. ஆம், பார்ட்டிகளுக்கு சென்றது வீண் போகவில்லை. தற்போது கை நிறையப் படம் வைத்திருக்கிறார் சோனியா. குணசித்ர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, ஒரு கை பார்த்துவிடலாம் என்று ஒப்புக் கொள்கிறார். |
சோனாவின் பலாத்கார வீடியோ தமக்கு கிடைக்கவில்லையாம் போலீசார் கவலை!
![]() |
| நடிகர் எஸ்.பி.பி. சரண் தன்னிடம் தவறாகநடந்து கொண்டதாக கூறப்பட்ட வீடியோஆதாரத்தை நடிகை சோனா கொடுக்கவில்லை என்று காவல்துறை மறுத்துள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையரை நேரில்நடிகை சோனா நேற்று சந்தித்து புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், எஸ்.பி.பி. சரண் மீதுவிளம்பரத்துக்காகவோ பணத்துக்காகவோபாலியல் புகார் கூறவில்லை. தன்னிடம் எஸ்.பி.பி. சரண் தவறாக நடந்துகொண்டதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் அதை ஆணையரிடம் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார். ஆனால் நடிகை சோனா வீடியோ ஆதாரம் எதுவும் தரவில்லை என்று காவல்துறை தரப்பில்மறுக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு சென்ற பின் வீடியோவை உதவியாளரிடம் கொடுத்து அனுப்புவதாக கூறிய சோனா, ஆனால் இதுவரை வீடியோ ஆதாரத்தைஅனுப்பி வைக்க வில்லை என்று காவல்துறை உயரதியாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் இது பற்றி கருத்து கேட்க நடிகை சோனா தொடர்பு கொண்டபோதுசெல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எஸ்.பி.பி. சரணை மிரட்டுவதற்காகவே சோனா இப்படி வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறியதாக தெரியவந்துள்ளது ![]() |
சட்டி சுட்டதடா... மீண்டும் தனி பாதைக்குத் திரும்பிய விஜயகாந்த்!
![]() |
| தேமுதிக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கட்சி தொடங்கிய இந்த 7 ஆண்டு காலத்தில் தொடர்ந்து தனித்தே போட்டியிட்டு வந்த தேமுதிக இடையில் சட்டசபைத் தேர்தலில் மட்டும் கூட்டணி அரசியலுக்குள் புகுந்து தற்போது மீண்டும் தனியே வந்துள்ளது தேமுதிகவின் எதிர்காலத் திட்டம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. தேமுதிகவின் இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. 2004ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் வைத்து தனது கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். தொடங்கியது முதல் தொடர்ந்து அனைத்துத் தேர்தல்களிலும் தனித்தேப் போட்டியிட்டு வந்தது தேமுதிக. 2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிட்டது. ஆனால் விஜயகாந்த் மட்டும் விருத்தாச்சலத்தில் வென்றார். இருப்பினும் அக்கட்சிக்கு கிடைத்த 27.64 லட்சம் ஓட்டுக்கள் அனைவரையும் வியக்க வைத்தது. ஒரு இடத்தில் மட்டும் அக்கட்சி அப்போது ஜெயித்தாலும் கூட பல தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர்களின் தோல்விக்கு வித்திட்டது. இதனால் தமிழகத்தில் முதல் முறையாக யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையை ஏற்படுத்தினார் விஜயகாந்த். பின்னர் 2009ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் தேமுதிக அசத்தலான வாக்குகளை அள்ளியது. இந்த முறை 30 லட்சத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றது தேமுதிக. ஆனால் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. அதேசமயம், அதிமுகவின் பல வெற்றிகளை தட்டிப் பறித்தது. திமுகவுக்கு இது சாதகமாக அமைந்தது. தோற்கும் எனக் கருதப்பட்ட திமுக கூட்டணி வெற்றி பெற விஜயகாந்த் பிரித்த வாக்குகளே காரணம் என்று தெரிய வந்தது. இதனால்தான் கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது கடுமையாக முயன்று விஜயகாந்த்தை தன் பக்கம் இழுத்தார் ஜெயலலிதா. விளைவு, அதிமுகவுக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்தது. தேமுதிகவுக்கும் அதிமுகவின் புண்ணியத்தால் 29 தொகுதிகள் கிடைத்தன, கூடவே எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் கிடைத்தது. அதுவரை வெறும் ஓட்டுப் பிரிக்கும் கட்சியாகவே இருந்து வந்த தேமுதிக, ஒரு முழுமையான அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியது இந்த தேர்தலில்தான். தொடர்ந்து தனித்தே போட்டியிட்டு வந்த விஜயகாந்த், போகும் இடமெல்லாம் மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கூறி வந்தார். ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது மட்டும் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். அப்போது அவரது முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் திமுகவின் மீதான மக்களின் கடும் அதிருப்தி, அதிமுகவுடன் இணைந்ததால் கிடைத்த பலம் ஆகியவற்றாலும், அவருக்கென்று இருந்த வாக்கு வங்கியாலும் அந்தப் பிரசாரம் தவிடுபொடியானது. அதிமுக கூட்டணி வென்றது. இப்போது உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தில் அதிமுகவால் கேவலப்படுத்தப்பட்ட விஜய்காந்த் மீண்டும் தனியாக வந்து விட்டார். இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமான பிரிவா என்பது தெரியவில்லை. தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வந்த தேமுதிக சின்ன பிரேக்குக்குப் பின்னர் மீணடும் தனிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இது அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் தங்களது பலத்தை நிரூபித்துக் காட்டினால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவே தங்களிடம் ஓடி வரும் என்று விஜய்காந்த் கருதுகிறார். இல்லாவிட்டால், திமுகவை கழற்றிவிடும் திட்டத்தில் உள்ள காங்கிரசுடனும் அவர் கூட்டணி சேரலாம். எது எப்படியோ மீண்டும் ஒரு வாக்குப் பிரிப்புக்கு தேமுதிக தயாராகி விட்டது. தற்போதைய நிலவரப்படி திமுக, அதிமுக, பாமக, மதிமுக, தேமுதிக என கிட்டத்தட்ட முக்கியக் கட்சிகள் அனைத்துமே தனியாக நிற்கின்றன. இதனால் அடிபடப் போவது யார், அள்ளப் போவது யார் என்ற அரசியல் விளையாட்டு சூடுபிடித்துள்ளது. |
பிரான்ஸில் உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க 11வது உலக மாநாடு
| உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை நடாத்தும் 11 வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு செப்டம்பர் 24ம், 25 ம் திகதிகளில் பிரான்ஸில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய மாநாட்டு அமைப்பாளரும் செயலாளர் நாயகமுமாகிய துரை கணேசலிங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய செயலாளரும் மாநாட்டின் துணைத் தலைவருமாகிய இ.ராஜசூரியர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளைத் தலைவரும் மாநாட்டு தலைவருமாகிய விசு செல்வராசா, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை செயலதிபரும் மாநாட்டின் செயலாளருமாகிய ம. இரவீந்திரநாதன் ஆகியோர் இணைந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர். ![]() அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள்: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் கிளையினால் இவ் ஆண்டு புரட்டாதி மாதம் 24, 25 ம் திகதிகளில் திருவள்ளுவர் ஆண்டு 2042 சனி ஞாயிறு இரு தினங்களில் பிரான்ஸில் எவ்றி மாநகரில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இவ் இயக்கம் தென் ஆபிரிக்காவை தலைமையகமாகக்கொண்டு செயற்பட்டு வருவதோடு உலகத்தமிழ் மக்களை ஒன்றிணைப்பதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளது. இவ் இயக்கத்தின் கிளைகள் 42 நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 1977ல் சென்னையிலும். 1980ல் மொரீஸிசியசிலும் 1985ல் சேலத்திலும்.1989ல் மலேசியாவிலும்.1992ல் அவுஸ்ரேலியாவிலும். 1996ல் கனடாவிலும். 1999ல் சென்னையிலும். 2001ல் தென் ஆபிரிக்காவிலும். 2004ல் புதுவையிலும்.2007ல் மலேசியாவிலும் ஆக பத்து உலகத்தமிழ் மாநாடுகளை நடத்திய பெருமையோடு 11வது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற உள்ளது. உலகத் தமிழர் மொழி, பண்பாட்டு. வாழ்வியல் மேம்பாடு என்ற கருப்பொருளில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதுவரை இவ் இயக்கம் உலகளாவிய மாநாடுகளின் மூலம் தமிழர் கலைகள் பண்பாடு ஊக்குவிப்பு.தமிழ் ஆண்டு, தமிழ் மொழிக்கல்வி. தமிழர் வரலாற்று ஆவண சேமிப்பு. தூய தமிழ் வழக்கு. தமிழ் செம்மொழி உருவாக்கம். உலகத்தமிழர் ஒற்றுமை பேணல்.முதலான விடயங்களில் பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளது. இந்த நோக்கத்துடன் தமிழ் வழி இறை வழிபாடு. தமிழ் மரபுகளை நிலைப்படுத்துதல்.தமிழர் இறையாண்மை. தமிழ்ப்பாதுகாப்பு. தமிழ்க்கலை மீட்பு. தமிழ்க் கல்வி. தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு.மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றுத் தேடல்கள்.எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள். தமிழ் ஊடகங்கள். போன்ற விடயங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். மாநாட்டு ஆய்வுகளும் தமிழ் அறிஞர்கள் துறைசார் புத்தாய்வுகளும் கொண்ட மாநாட்டு மலர் வெளியிடப்படும். மாநாட்டில் தமிழ் மொழி. தமிழ் இனம். தமிழ்ப்பண்பாடு. தொடர்பான ஆவணக்காட்சியும். தமிழர் வாழ்வியல் வரலாறு. மொழி இலக்கியம் சார்ந்த நூல்கள். இறுவெட்டுக்கள். ஒலி இழை நாடாகள். நிழற்படங்கள். முதலியன கண்காட்சிக்கு வைக்கப்படும். அத்துடன் மா நாட்டுக் கருப்பொருளை ஒட்டி உலகளாவிய கட்டுரைப் போட்டி. கவிதைப் போட்டி. என்பன இடம் பெறுவதுடன் உலகளாவிய அளவில் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும். உலகளாவிய தமிழர் சமூகத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனும் இலங்கை இந்திய நாடுகளில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் குறிக்கோளுடனும் அரசியல் சார்பற்று இன மத பேதங்களைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் என்ற ஒரே குடையின் கீழ் செய்ற்படுவதற்கும் தமிழ் மொழியை மறந்தவர்களை மொழி உணர்வாளர்களாக மாற்றும் நேர்த்தியான கொள்கைகளுடனும் 1974 ம் ஆண்டு தை திங்கள் 8ம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மா நாட்டில் பல நாட்டு அறிஞர்கள் ஒன்றிணைந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை உருவாக்கினார்கள். எனவே வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் மா நாட்டு மலருக்கு ஆக்கங்களைத்தர விரும்புவோர்கள். கண்காட்சிகளில் இணைந்து கொள்ள விருபுவோர்கள். அனைவரும் வரும் 31.07.2011 க்கு முன்பாக மாநாட்டுப்பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் |
Subscribe to:
Comments (Atom)














































