Monday, 30 January 2012

காதலில் சொதப்புவது எப்படி? என்ற படத்தின் ட்ரெய்லர்

எனது நிஜ வாழ்க்கையில் ஏராளமான தடவைகள் காதலில் சொதப்பியுள்ளேன். அண்மையில் கூட ஒருவருடன் காதலில் சொதப்பிவிட்டேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 14இல் வெளியாகவுள்ள அமலா போல் மற்றும் சித்தார்த் நடித்துள்ள காதலில் சொதப்புவது எப்படி? என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் போதே இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படம் குறித்து சித்தார்த் பேசுகையில், யூடியூப்பில் வெளியான 10 நிமிட படம் எனக்கு பிடித்துப்போனதால் இயக்குனர் பாலாஜி மோகனிடம் இப்படத்தில் நாயகனாக நான்தான் நடிப்பேன் என உரிமையுடன் படம் குறித்து பேசினேன்.
10 நிமிட படத்தினை 2 மணித்தியாலமாக மாற்றி காதலில் இளைஞர்கள் எப்படியெல்லாம் சொதப்புகிறார்கள் என்பதைக் காட்டியுள்ளோம். படம் காதலர் தினமான பெப்ரவரி 14இல் வெளியாகும்.
நிஜ வாழ்க்கையில் என்னை விட யாரும் காதலில் சொதப்பியிருக்கமாட்டார்கள். எனது பள்ளிப்பருவம் முதல் இன்று வரை ஏராளமான முறை காதலில் சொதப்பியுள்ளேன். அண்மையில் ஒருவருடன் சொதப்பிவிட்டேன்.
கடந்த 4 மாதங்களில் தொடர் படப்பிடிப்புக்களால் சொதப்பலுக்கு இடைவெளி விட்டுள்ளேன். எனது சொதப்பல்களின் எண்ணிக்கை அளவில்லாதது.
மேலும் தமிழில் அதிகம் நடிப்பதில்லையே எனக் கேட்கிறார்கள். தமிழில் யாரும் எனக்கு வாய்ப்புக்கள் தருவதில்லை. தமிழில் வாய்ப்புக்கள் வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார்.
அது சரி அண்மையில் சொதப்பியது உலக நடிகரின் மகளிடம் தானே!!!

157ஆண்டுகள் பழமையான ரெயில் என்ஞ்சின் இயக்கம்

AGE NO BAR: The EIR 21 steam locomotive being cheered during the heritage run to mark the Republic Day, in Chennai on Thursday. Photo: S.R. Raghunathan

பாரம்பரிய தினத்தை நினைவு கூறவும் , நீராவி எஞ்சின் ரெயிலைப் பற்றிப் பொது மக்கள் அறிந்து கொள்ளவும் குடியரசு தினத்தை ஒட்டியும் சென்னை எழும்பூரிலிருந்து கிண்டி வரை 157 ஆண்டுகள் பழமை வாய்ந்த இ.ஐ.ஆர் 21 என்ற நீராவி எஞ்சின் ரெயிலை தெற்கு ரெயில்வே இயக்கியது.

கடந்த 1855ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரான இந்த ரயில் எஞ்சின், 130 குதிரைத்திறன் கொண்டது. 20 முதல் முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்திய ரெய்ல்வேக்கு 55 ஆண்டுகள சேவை செய்த பின்னர், கடந்த 1909 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று ஜமால்பூர் ரெய்ல்வே அருங்காட்சியகத்தில் இடம் பெற்றது. இந்த ரெயில் என்ஜின் மறு ஓட்டத்திற்காகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரம்பூர் லோகோ பணிமனைக்குக் கொண்டு வரப்பட்டு அழகு படுத்தப் பட்டது.

ஒரே நேரத்தில் கமல் மற்றும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் கேத்ரீனா கைப்.

விஸ்வரூபம்’ படத்தினை அடுத்து கமல் நடிக்க இருக்கும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கமல் இயக்கி நடித்த ‘தசாவதாரம்’ படத்தினை தயாரித்தார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அடுத்து அவர் தயாரிக்க இருக்கும் படத்தில் கமல்  நடிக்க இருக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
இரு மொழிகளில் வெளியாக இருக்கும் அப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கேத்ரினா கைஃப் ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
ரஜினியின் ‘ கோச்சடையான் ‘ படத்திற்காக தனது கால்ஷீட் தேதிகளை ஒதுக்கிக் கொடுக்க திட்டிமிட்டு வருகிறார் இந்தி திரையுலகின் முன்னணி நடிகை கேத்ரினா  கைஃப்.
இந்நிலையில் கமல் – ஆஸ்கர் ரவிச்சந்திரன் இணையும் படத்தில் நாயகி வேடத்திற்கும் கத்ரீனாவிடம்  பேசி வருகிறார்கள்.  கேத்ரினா  மட்டுமன்றி படத்தில் இன்னொரு நாயகியும் இருக்கிறாராம்.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் ” எல்லாம் ஆரம்ப நிலையில் தான் இருக்கின்றன.. கேத்ரினாவை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். எதுவும் இன்னும் முடிவாகவில்லை.” என்று தெரிவித்துள்ளார்

பஜாஜ் பள்சர் – 2012 (Pulsar 200 NS) சற்று முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (Pictures)

இந்தியாவின் முன்னனி மோட்டார் நிறுவனமான பஜாஜ் இன் இரு சக்கர வாகனங்களில் பள்சர் பிரசித்தமானது. இவ் பள்சர் 10 வருட கால பின்னனியை கொண்டது. 2012 ஆம் ஆண்டுக்குரிய பள்சர் மொடெலான Pulsar 200 NS ஆனது இன்று (30.01.2012) சற்று முன்னர் மும்பையில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திடகாத்திரமான வடிவமைப்பு, அதி சக்கிவாய்ந்த எஞ்சின் என்பவை Pulsar 200 NS  க்கு பெருவெற்றியை ஈட்டித் தரும் என பொறியியல் வல்லுனர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
Pulsar 200 NS  இன் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்:
200cc SOHC Engine
3 Spark Plugs 
Liquid Cooled Engine
23 BHP @ 9500 RPM
18.3 Nm Torque @ 8000 RPM
145 KG Kerb Weight
12 Litre Fuel Tank




கௌதமும், ஹா‌ரிஸும் இப்போதைக்கு இணையப் போவதில்லை.

கௌதமும், ஹா‌ரிஸும் மீண்டும் இணைகிறார்கள். சென்னை குடிசையை ஆக்கிரமிக்கும் தீ மாதி‌ரி இந்த‌ச் செய்தியை அடிக்கடி கொளுத்திப் போடுகிறார்கள். இந்த‌ச் சூடு ஹா‌ரிஸ் காதுவரைக்கும் சென்றிருக்கிறது. இதற்கு தனது பாணியில் சூசகமாக பதிலளித்திருக்கிறார்.

நண்பன் படத்தின் இசைக்கு கிடைத்த பாராட்டை பற்றி குறிப்பிடும் போது நடுவில் கௌதம் மேட்டரையும் சேர்த்திருக்கிறார். கௌதமுடன் வேலை பார்ப்பீர்களா என்று கேட்கிறார்கள். நான் இது பற்றியெல்லாம் யோசிக்கிற நிலையில் இல்லை, வேறு படங்களில் பிஸியாக இருக்கிறேன் என்று விட்டேத்தியாக அவர் சொன்ன பதிலிலுக்கு ஒரேயொரு அர்த்தம்தான்.

இப்போதைக்கு இவர்கள் இணையப் போவதில்லை.

நெடியவனை கைது செய்ய சர்வதேச பிடியாணை!

 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயட்பட்டளர் நோர்வேயில் இருந்து செயல்பட்டு வருகின்ற நெடியவனுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.நெடியவனின் சொந்தப் பெயர் சிவபரன் பேரின்பநாயகம்.1976 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி பிறந்தவர். பிறந்த இடம் வட்டுக்கோட்டை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வயதில் சேர்ந்தவர். தலைவர் வே. பிரபாகரனுக்கு மிக நெருக்கமான ஒருவரானார்.  கே.பி என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று சுயம் பிரகடனம் செய்து கொண்டார் நெடியவன்.
பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக இவரை கைது செய்கின்றமைக்கு உதவி செய்ய வேண்டுமென சர்வதேச பொலிஸாரிடம் இலங்கை கோரி உள்ளது.

8 வயது சிறுமிக்கு இரக்கமற்ற முறையில் கை உடைத்துத் தண்டனை :/ - படங்கள் இணைப்பு

இது ஈரான் நாட்டில் நடந்த சம்பவம்.
கடையொன்றில் பாண் திருடிய 8 வயது சிறிமியொருவர் வீடியோ கமெரா மூலம் அகப்பட்டுள்ளார். (வறுமைக்கொட்டிற்கு கீழேயுள்ள சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது. )
 
அச் சிறிமிக்கு ஈரானிய சட்டத்தின்படி ( இஸ்லாமியச்சட்டம் என சொல்லப்படுகிறது.) கைகளின் மீது வாகனம் ஏற்றப்பட்டுள்ளது. 
வாகனம் ஏற்றப்பட்ட பின்னர் அக் கையின் செயற்பாடுகள் முற்றாக செயல் இழந்ததால் இனி வாழ் நாள் முழுவதும் அப் பிள்ளையால் அக் கையை பயண்படுத்த முடியாது போயுள்ளது.
 
சாதாரணமாக, சட்டம் என்பது தவறை ஏன் செய்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கு தீர்வானதாக இருக்கவேண்டும். (விதிவிலக்குகள் இருக்கலாம்.)
அப் பிள்ளை பசியின் காரணமாகவே பாணைத்திருடியுள்ளது. ஒரு வேளை அப்பிள்ளைக்கு தினசரி உணவு கிடைக்கும் பட்சத்தில் இத்தவறை செய்திருக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. 
அத்துடன் தற்போது கை செயல் இழந்ததால் இனி அப் பிள்ளையின் எதிர் காலம் போராட்டமானதாகவே அமையப்போகிறது. அரசு தன்மீதுள்ள குறைகளை நீக்காது அனைவரிடமும் ஒரே சட்டத்தை பின் பற்றுவது வருந்தத்தக்கதே.
 
இதைப்படிக்கும் இஸ்லாமிய நண்பர்களிடம் ஒரு சந்தேக கேள்வி...
ஈரானில் பயண்பாட்டிலுள்ளது உண்மையிலேயே இஸ்லாமிய சாட்டமா? 
இஸ்லாமில் இப்படித்தண்டனைகள் உண்டா?
 
தண்டனைப் படங்களைப் பாருங்கள்...
 
 
 
 
 

மைத்துனியின் கள்ளக் காதலை கண்டித்த வாலிபரை மின் கம்பத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்ற மனைவி


மைத்துனியின் கள்ளக் காதலை கண்டித்த வாலிபரை மின் கம்பத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்ற மனைவி, அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே பெருமுடிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (35). லாரி டிரைவர். இவரது மனைவி சுஜாதா (31). நேற்று முன்தினம், பலத்த தீக்காயங்களுடன் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேகர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று இறந்தார்.

பெரியபாளையம் போலீசில் சுஜாதா புகார் கொடுத்தார். அதில் உடல் நிலை சரியில்லாத எனக்கு பம்ப் ஸ்டவ்வில் சேகர் கஞ்சி காய்ச்சினார். அப்போது தீ விபத்து ஏற்பட்டு, உடல் கருகி சேகர் இறந்தார்ÕÕ என கூறியிருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே ஸ்டவ் வெடித்து சேகர் இறக்கவில்லை. சுஜாதாவும் சிலரும் சேர்ந்து அவரை கொளுத்திவிட்டனர் என போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுஜாதா, அவரது அப்பா சுகா ரெட்டி, அக்கா மேகலா ஆகியோரை போலீசார், காவல் நிலையத்துக்கு நேற்றிரவு  அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் தெரியவந்த தகவல் குறித்து போலீசார் கூறியது: குடும்ப தகராறு காரணமாக சுஜாதாவின் அக்கா மேகலா, கணவரை பிரிந்தார். அவர் சுஜாதா வீட்டில் தங்கியிருந்தார். அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் சேட்டு என்பவருடன் மேகலாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதை சேகர் தட்டிக் கேட்டுள்ளார். சேட்டுவையும் எச்சரித்துள்ளார். மனைவி உள்பட உறவினர்கள் அனைவரும் சேகருக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த சேகர், மனைவியை அடித்திருக்கிறார். ‘உன் அக்கா மேகலா, என் வீட்டில் இருக்கக் கூடாது என கூறியிருக்கிறார்.

இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சுஜாதாவும் அவரது குடும்பத்தாரும் சேர்ந்து போதையில் இருந்த சேகரை, வெளியே தூக்கிச்சென்று அங்குள்ள மின்கம்பத்தில் கட்டியுள்ளனர். பின் அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டனர். பாதி உடல் எரிந்த அவரை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் இறந்ததும் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க, சமையல் செய்தபோது தீப்பிடித்து சேகர் இறந்துவிட்டார் என புகார் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து, சுஜாதா, மேகலா, சுகா ரெட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சேட்டுவை தேடி வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் உறவினர்களுடன் சேர்ந்து கணவரை மனைவியே எரித்துக் கொலை செய்திருப்பது ஊத்துக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் இதை விட மோசமான ஆடை வடிவமைப்பு இருக்கவே முடியாது!

ஆடை வடிவமைப்பில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு கலைஞரும் தங்கள் மூளையை குடைந்து கிளியல்களுடனும், முன்பக்கமும் பின்பக்கமும் காற்றோட்டமாக ஜன்னல்களை வைத்தும் ஆடைகளை வடிவமைப்பதுண்டு, இம்முறை முற்றிலும் மாறுப்பட்டு எளிதில் உள்ளீடு விளங்குகின்ற ஒளி ஊடுருவும் தன்மையுள்ள ( transparent ) பிளாஸ்டிக் உடையோன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

பிரெஞ்சு நாட்டைச்சேர்ந்த 26 வயதான அழகியின் உடலுக்கு முதன்முதலாக இந்த உடை அணிவிக்கப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டது இதுவரை உருவாக்கப்பட்ட ஆடைகளில் இது மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக கண்காட்சிக்கு வருகை தந்தவர்கள் குறிப்பிட்டனர்.

NRJ AWARDS 2012 என்ற விருது வழங்கும் விழாவில் இந்த ஆடைவடிவமைப்பாளருக்கு சிறந்த வடிவமைப்பிற்கான விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில் தவிப்பு!


நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை இதே நாளில் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த ஒரு வீரரின் குடும்பம் இன்று வரை வறுமையால் தீரா சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

1948 ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி மகாத்மா காந்தியை டெல்லி பிர்லா மாளிகையில் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தியை படுகொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த வீரரின் பெயர் தேவ் ராஜ் சிங் தாகூர்.

1952-ம் ஆண்டு நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் கையால் வீரதீர செயலுக்கான விருதைப் பெற்றவர்.

இமாசலப்பிரதேசத்தின் நகான் நகரில் தாகூரின் குடும்பம் வசித்து வருகிறது. இந்திய விமானப் படையில் பணியாற்றி வந்த தாகூருக்கு மனநிலை பாதிக்கப்பட கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. 14 ஆண்டுகாலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் 1987-ல் தாகூர் காலமானார்.

தாகூர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் வறுமையோடு போராடி வருகிறது.

நாட்டின் தேசப்பிதாவை சுட்டுக் கொன்ற கோட்சேவை பிடித்துக் கொடுத்த வீரர் என்ற அடிப்படையில் அரசுப் பணிக்காக இமாசலப்பிரதேச அரசிடம் அவரது குடும்பம் நீண்டகாலமா கோரிக்கை விடுத்தாலும் நிறைவேறியபாடில்லை. இதுபோன்ற அடிப்படையில் எல்லாம் அரசுப் பணி வழங்க முடியாது என்பதில் இமாசலப்பிரதேச அரசு அதிகாரிகள் பிடிவாதம் காட்டுகின்றனர்.

ஆண்டுதோறும் ஜனவரி 30-ந் தேதி மகாத்மாவை நினைவுகூறும் நமக்கு கோட்சேவின் நினைவும் வராமல் போவது இல்லை... இருவரது பெயரும் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதை போல தேவ்ராஜ்சிங் தாகூரின் பெயரும் இடம்பெற வேண்டும்.

'1.5 நயன்' - டோலிவுட்டில் ஒரே புகைச்சல்!


நயன்தாரா தான் நடிக்கவிருக்கும் புதிய தெலுங்குப் படத்திற்கு வாங்கியுள்ள சம்பளத்தைக் கேட்டு டோலிவுட்டில் ஒரே புகைச்சலாய் இருக்கிறதாம்.

நயன்தாரா பிரவுதேவாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. அதனால் அவர் சினிமாவுக்கு குட்பை சொன்னார். தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் தான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்த நயன் கண்ணில் அருவி கொட்டியது. இந்நிலையில் பிரவுதேவா-நயன் இடையே லடாய் ஏற்பட்டு அவர்கள் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், தெலுங்கில் தசரத் இயக்கத்தில் நாகர்ஜுனா நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒன்றரை கோடி ரூபாய். நடிக்க மாட்டேன்னு சொல்லிவிட்டு போன நடிகையை வலியக்க அழைத்து வந்து இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கிறார்களே என்று தெலுங்கு பட உலகில் உள்ள பலருக்கும் வயிற்றெச்சலாம்.

தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகைகளுக்குக் கூட இந்த சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பது தான் பலரையும் கடுப்பாக்கியுள்ளது.

இப்பவே ஒன்றரை கோடி என்றால் இனிமேல் எவ்வளவு வாங்குவாரோ?

ரகசியமாக ! எளிமையாக நடந்த ரஜினியின் ' கோச்சடையான் ' பூஜை


ரஜினி உடல்நிலை சரியானதைத் தொடர்ந்து அவர் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ' கோச்சடையான் ' படத்தில் நடிக்க இருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

' கோச்சடையான் ' படத்தில் சரத்குமார், சிநேகா, ஆதி மற்றும் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். படத்திற்கான இசையமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இவ்வாறு அனைத்து பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் ரஜினி படப்பிடிப்பில் எப்போது கலந்து கொள்கிறார், படத்தின் பூஜை என்று நடைபெற இருக்கிறது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

' கோச்சடையான் ' படத்தின் பூஜை மிகவும் எளிமையாக நடைபெற்று இருக்கிறது. இது குறித்து லதா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் இணையத்தில் "   மலர்கள்..  ஆரத்தி.. ( பட ) பூஜைக்காக தேங்காய் உடைக்கப்பட்டது.. மீண்டும் என் கணவர் மேக்கப் சேரில் அமர்ந்திருக்கிறார்.. கோச்சடையான் !  இது அற்புதமாக தருணம்.  "என்று தெரிவித்து இருக்கிறார்.

படத்தின் இயக்குனரான செளந்தர்யா ரஜினிகாந்த் தன் தந்தையுடன் கோச்சடையான் வேலைகளைத் தொடங்கியது குறித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லதே செய்வார்- மனைவி லதா பேட்டி

 



சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மனைவி லதா அளித்த பேட்டி விவரம் வருமாறு:- 

கேள்வி:- சூப்பர் ஸ்டாரின் மனைவி என்ற வகையில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் பொதுமக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுவதுண்டு. அதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

பதில்:- இது சுலபமானது அல்ல. கண்ணாடி வீட்டுக்குள் வசிப்பது போன்றது. மற்றவர்கள்போல் சுதந்திரமாக இருக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டுவதில்லை. பொதுமக்கள் பார்வையில் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் அல்ல. 

கேள்வி:- உங்கள் கணவர் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது விளைவுகள் ஏற்பட்டுள்ளதா?

பதில்:- நிறைய விளைவுகளை சந்தித்து இருக்கிறேன். அதன் வாயிலாக ஏராளமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. ரசிகர்கள் மத்தியில் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், வீட்டில் சூப்பர் ஸ்டார் என்ற உணர்வுடன் அவர் நடப்பதில்லை. ஒரு நல்ல குடும்ப தலைவராகவே நடந்து கொள்வார். 

கேள்வி:- உலகம் ரஜினியை சூப்பர் ஸ்டாராக பார்க்கிறது. நீங்கள் ஒரு நல்ல மனிதராக அவரை பார்க்கிறீர்கள். இந்த இரண்டு அம்சங்களையும் நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?

பதில்:- ரஜினியை உலகம் உயர்ந்த அந்தஸ்தில் வைத்து பார்ப்பதற்காக, அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இதை எங்களுக்கு கிடைத்த ஆசியாக நாங்கள் உணர்கிறோம். அவருக்கு இரண்டு பக்கங்கள் கிடையாது. எப்போதும் நல்லவராக, முக்கியமானவராகவே இருந்து வருகிறார். 

கேள்வி:- எப்போதும் பிஸியாக இருக்கும் ரஜினியால் எப்படி இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள முடிந்தது?

பதில்:- குழந்தைகளுக்கு எப்போதுமே அவர் ஒரு நல்ல தந்தையாக இருந்து வந்திருக்கிறார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், குடும்பத்துடன், குழந்தைகளுடன் நல்ல முறையில் பொழுதை கழித்து வந்துள்ளார். விடுமுறை காலங்களில் எங்களை வெளியில் அல்லது வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வார். 

கேள்வி:- உங்கள் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரும் சினிமா துறையில் ஈடுபட்டுள்ளனரே? உங்கள் கருத்து என்ன?

பதில்:- அவர்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்துள்ளனர். இதைதான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த விரும்பவில்லை. இருவரும் இயல்பாகவே மிகவும் திறமையானவர்கள். ஐஸ்வர்யா நல்ல எழுத்தாளர், பேச்சாளர், பாடகர் மற்றும் நடனம் ஆடக்கூடியவர். சவுந்தர்யா ஒரு நல்ல ஓவியர். சினிமாவில் அவர்களுக்கு பிடித்த துறையை அவர்களாகவே தேர்வு செய்துள்ளனர். 

கேள்வி:- பிசியான வாழ்க்கையில் கல்வியாளர், சமூக சேவகர். இப்படி உங்களை எப்படி மாற்றிக் கொள்ள முடிந்தது?

பதில்:- இது ஒரு தனிமனித வாழ்க்கையின் ஒரு அங்கம் என்று கருதுகிறேன். நானும், எனது கணவரும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இருவருமே பக்தி மார்க்கம் கொண்டவர்கள். அவரிடம் கூடுதலாக ஞானமார்க்கமும் உண்டு. 

கேள்வி:- உங்கள் கணவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்:- இதுபற்றி அவரிடம் நான் பேசவில்லை. பேசவும் முடியாது. ஆனால், அவரால் நிறைய நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதை உறுதியாக கூறுவேன். அவர் எப்போதுமே தன்னால் முடிந்த தர்ம காரியங்களையும், உதவிகளையும் செய்து வருபவர். அரசியலுக்கு வருவது முழுக்க முழுக்க அவரது விருப்பத்தை பொருத்தது. ஆனால், எதை அவர் செய்தாலும், அதை நல்லவிதமாக செய்வார். 

இந்த விஷயத்தை பொருத்தவரை அவரிடம் இருந்தே விருப்பம் வெளிப்பட வேண்டும், அவரிடம் இருந்தே தகவல் வரவேண்டும் என்று விரும்புகிறேன். அரசியல் உள்ளிட்ட எந்த விஷயத்திலும் அவரை நான் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ மாட்டேன். என்னைப் பொருத்தவரை, அவரது தனிப்பட்ட விருப்பம், தனிப்பட்ட உணர்வுகள் முக்கியம். அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லதே செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு


இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.   இந்திய அணி தான் விளையாடிய 4 டெஸ்டிலும் தோற்று மிகுந்த அவமானம் அடைந்தது. மெல்போர்ன் டெஸ்டில் 122 ரன்னிலும், சிட்னி டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்னிலும், பெர்த் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்னிலும், அடிலெய்ட்டு டெஸ்டில் 298 ரன்னிலும் மோசமாக தோற்றது.

இந்திய அணி 4 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் (0-4) செய்யப்பட்டது. தொடர்ச்சியாக இப்படி நடந்துள்ளதால் வீரர்கள் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.

வெளிநாட்டில் இந்திய அணி தொடர்ந்து 8 தோல்வியை சந்தித்து உள்ளது. இதன் காரணமாக இந்திய அணியை அதிரடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

டோனி தற்போது 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி) கேப்டனாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக அவரது டெஸ்ட் கேப்டன் பதவி பிறக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுக்கிறது.

இந்திய டெஸ்ட் அணியின் மாற்றத்தின் ஒரு பகுதியாக அவர் கேப்டன் பதவியை இழக்கிறார். ஆனால் ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டியில் டோனி கேப்டனாக நீடிப்பார். டெஸ்ட் தொடர் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் போதே 2013-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக டோனி அறிவித்திருந்த முடிவால் அவர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்துள்ளது. அந்த நேரத்தில் 2013-ம் ஆண்டை பற்றி டோனி பேச தேவையில்லை என்று கிரிக்கெட் வாரிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அவரது இந்த அறிவிப்பு அணிக்குள் பிளவு இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோசமான தோல்வி, அவரழ நடவடிக்கை ஆகியவற்றின் எதிரொலியாக டோனி டெஸ்ட் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது. 

டோனிக்கு பதிலாக டெஸ்ட் அணிக்கு ஷேவாக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஷேவாக்கை பொறுத்தவரை அவர் தனது வழியில் செயல்படுவார். டோனியின் வழியை பின்பற்ற மாட்டார் என்று தெரிகிறது. 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்யும் முறை, பீல்டிங் அமைக்கும் முறை ஆகியவை பற்றி தானே முடிவு செய்துக் கொள்வார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் ஷேவாக் முன்னுரிமை கொடுப்பார். சீனியர் வீரர்களான தெண்டுல்கர், டிராவிட், லட்சுமண் ஆகியோருக்கு டோனியின் கேப்டன் பதவியில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஷேவாக் தலைமையில் விளையாடுவதில் பிரச்சினை இருக்கலாம்.

இதற்கிடையே சீனியர் வீரர்கள் யாரும் ஓய்வு பெற மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் டெஸ்டில் தொடர்ந்து தேர்வு செய்யப்படுவர்கள் என்று தெரிகிறது. சீனியர் வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான ரோகித்சர்மா, ரெய்னா, புஜாரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sunday, 29 January 2012

மீண்டும் தேதி மாறியிருக்கிறது சகுனி படம்

மாஸ் ஹீரோக்களின் படங்கள் திருவிழா தினங்களில்தான் வெளியிட வேண்டும் என்று பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, மே தினம், தீபாவளி என ஐந்து தினங்களை மட்டுமே தயா‌ரிப்பாளர்கள் சங்கம் ஒதுக்கியிருக்கிறது.

இந்த புதிய விதிமுறையால் பிப்ரவ‌ரியில் வெளியாவதாக இருந்த சகுனி ‌ரிலீஸ் ஏப்ரல் 13ஆம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. இந்தப் படம் மட்டுமின்றி பிப்ரவ‌ரியில் வெளியாவதாக இருந்த தனுஷின் கொலவெறி படமும் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது.

தொலைக்காட்சி லாட்டரியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள்

“விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு” என்ற கோஷத்துடன் லாட்டரிச் சீட்டு திட்டத்தை அண்ணாதுரை அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில்  தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஆனால் தனியாரும் லாட்டரி தொழிலில் வந்த பிறகு மக்களி்ன வருமானம் அதில் கரைந்து போய், குடும்பங்கள் சீரழிந்தன இதனால் முந்தைய ஆட்சிகாலத்தில் ஜெயலிலதா அவர்களால் தடைசெய்யப்பட்டு இன்றளவும் அமலில் உள்ளது.

ஆனால் மக்களின் ஆசை என்ற பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு டி.விக்கள் வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான கொள்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏதாவது ஒரு பரிசு திட்டத்தை அறிவித்து விட்டு குறிப்பிட்ட எண்ணுக்கு SMS அனுப்புங்கள் என்று  சொல்வதை நம்பி பல லட்சம்  மக்கள் SMS அனுப்புகிறார்கள் அதில் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானம். அவர்கள் தரும் பரிசுத்தொகைவிட பல நூறு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியாது,

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஒடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியை கேட்டு அதற்கான விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் டி.வியில் ஒளிபரப்பானது. அவர்களின் கேள்விக்கு உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கூட தெரியும் எனவே ரூ.5000 பரித்தொகை பெற்றுவிடும் ஆசையில் உடனே ஆர்வலர்கள் தொடர்பு கொள்ள முயல்வார்கள் ஆனால் ஒருவருக்கும் சிறிது நேரம் லைன் கிடைக்குது அவர்களின் ரேட்டிங் உயரும்.

ஆனால் நிமிடத்திற்கு ரூ.10 என மக்களின் பணம் கரைந்து கொண்டிருக்கும் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் ரூ. 20 போய்விடும் இந்த ரூ. 20 யில் 14 ரூபாய் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மீதி கூட கொள்கையடிக்கும் செல்போன் நிறுவனத்திற்கும் சேரும். சுமார் ஒரு லட்சம் போர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்து கொண்டாலும் மொத்த வருமானம் ரூ. 20 லட்சம் பரிசுத்தொகை உள்ளிட்ட எல்லா செலவும் ரூ.2 லட்சம் மட்டுமே மீதியெல்லாம் கொள்ளை லாபம்.

 இதற்கும் ஒரு படி மேலே போய் மக்களை கோடிஸ்வரன் ஆக்கிடுவோம் என்று  மக்களை ஏமாற்ற பெரிய நிறுவனம் கவர்ச்சி நடிகர் என மக்களின் பணத்தை சுரண்ட ஒரு பெரிய பட்டாளம் இறங்விட்டார்கள. இந்நிகழ்ச்சிக்கு குறைந்தது 2sms அனுப்ப வேண்டும். 



தமிழகத்தின் ஏழு கோடி மக்களில்  தினமும் 10 லட்சம் மக்களையாவது பலிகட ஆக்க வேண்டும் என்பது இவர்கள் திட்டம். டி.வி. நியுஸ் பேப்பர். பேஸ்புக். Fm அனைத்திலும் மிகப்பெரிய விளம்பரம் செய்து  ஒருநாளுக்கு SMS மூலம் செல்போன் நிறுவனங்களின் தினமும் வருமானம் 1கோடி. நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு ரூ. 50 லட்சம் இப்படி 7 நாட்களின் வருமானம் 7 கோடி இது 10லட்சம் பேரின் கணக்குதான் இதுவே தினம் 1கோடி மக்கள் கூட SMS அனுப்புகிறார்களாம் அப்படி என்றால் வருமானம் ????

பரிசு பெரும் அந்த நபர் 10 லட்சமோ 15 லட்சமோ தான் இருக்கும்  இது தவிர விளம்பரம்  போன்றவை மொத்தமாக பார்த்தால் ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 20 கோடி வருமானம் கிடைக்குமாம்.

இப்படி தழிழர்களின் பணத்தை சுரண்டப்படுவதை பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை அரசாங்கமும் இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.

உதாரணமாக எனது சகோதரர் முதல் வாரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் sms அனுப்பி ரூ. 120 இழந்துள்ளார்.  இப்படி பல கோடி மோசடி செய்து இன்னும் அந்தகோடீஸ்வர நிழ்ச்சி இன்னும் ஆரம்பித்ததாக தெரியவில்லை.

கோடிகளுக்காக அலைந்து தெருக்கோடியில் நிற்கும் ஏமாளி தழிழர்களா நாம்???????????

இலங்கையை சிக்க வைக்க ஊடகவியலாளர்கள் இரகசிய சதி திட்டம்!- அரசாங்கம் குற்றச்சாட்டு.

ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருபகுதியும் மேலதிக நேர வேலையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக ஊடகவியலாளர்களும் கூட இந்த இரகசியச் சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலும், வடக்கு, கிழக்கிலும் அண்மைக் காலத்தில் இடம்பெறும் போராட்டங்கள், இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தும் நோக்கத்தைக் கொண்டவை என்றும் அரசாங்கம் விமர்சித்துள்ளது.
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் பெப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறுவதற்கு முன்னர், அடுத்த சில வாரங்களுக்கு இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்கள் மேலும் தீவிரமடையலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் அரச வட்டாரங்கள் எதிர்வு கூறியுள்ளன.
ஐதேக, ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களே அரசாங்கத்திற்கு எதிராக இந்த இரகசிய சதியில் ஈடுபட்டுள்ளதாக அரச தரப்பினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரெயிலில் 2 இளம் பெண்களுடனும் உல்லாசமாக

மைசூரில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில் வெள்ளிக்கிழமை காலை 10 30 மணிக்கு புறப்பட்டது. இந்த ரெயிலில் மைசூர் ரெயில் நிலையத்தில் புத்தக விற்பனை கடை வைத்திருக்கும் அருண்குமார், டீ கடை வைத்திருக்கும் சந்தோஷ் ஆகிய 2 வாலிபர்கள் முதல் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் ஏறினார்கள்.
ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அருண்குமார் செல்போனில் 2 இளம் பெண்களிடம் தொடர்பு கொண்டு பேசி அசோக்புரம் ரெயில் நிலையத்தில் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் ஏறும்படி கூறி உள்ளார். அதன்படி அந்த 2 இளம் பெண்களும் அசோக்புரம் ரெயில் நிலையத்தில் ஏறினார்கள். அவர்கள் ரெயிலில் ஏறியதும் அருண்குமார், சந்தோஷ் ஆகிய இருவரும் முதல் வகுப்பு பெட்டி அறையை திறக்க முடியாதவாறு உள்புறம் பூட்டி விட்டு 2 பெண்களுடனும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மைசூர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது. உடனடியாக அவர்கள் சாம்ராஜ்நகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். சாம்ராஜ்நகர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்ததும், முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிக்கு ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அறை கதவை தட்டினார்கள். உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. கதவை திறக்க முடியவில்லை.
எனவே ரெயில் பெட்டி அறை கதவு லாக்கரை திறக்கும் நிபுணர்களை போலீசார் அழைத்து வந்து கதவை திறந்தனர். அங்கு 2 இளம் பெண்கள் உள்பட 4 பேரும் விபசாரத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சாம்ராஜ்நகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசாரத்தில் ஈடுபட்ட அருண்குமார், சந்தோஷ் மற்றும் 2 இளம் பெண்களையும் கைது செய்தனர்.

இங்கே தமிழனை விட மலையாளி பல படி மேல்

 


சில புகைப்படங்களைப் பார்க்கும் போது எம்மையறியாமல் மனதிற்குள் சந்தோசம் பொங்கும்.அதே போல் சில படங்களைப் பார்க்கும் போது வெறுப்பும் கோவமும் ஒருங்கே ஏற்படும்.இந்தப் படத்தைப் பார்த்த மானமுள்ள தமிழனுக்கு மேலே சொன்னதில் எந்த உணர்வு ஏற்ப்படிருக்கும் என்று நான் சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை.

எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால்,அந்த அம்மாவின் காலில் இப்படி பகிரங்கமாக சாஷ்டாங்கமாக விழுந்து சில்லறை பொறுக்கி  விட்டு,தன் மனைவி,பிள்ளைகள் முன் மீசையை முறுக்கிக்கொண்டு எப்படித் திரியமுடிகின்றது என்பதுதான்.

ஏதோ நான் பெண் ஆதிக்கவாதி என்று முத்திரை குதிவிடாதீர்கள்.இதே போல் ஓர் ஆண் அரசியல்வாதி காலில் விழுந்திருந்தாலும்,இதே உணர்வே ஏற்ப்பட்டிருக்கும்.

பெற்ற தாய்,தந்தை காலில் விழுந்து வணங்கத்தயங்கும் நமது சமுதாயம்,இப்படியான அரசியல் வாதிகளின் காலில் விழுவதுதான் வேதனையாக உள்ளது.காலப் போக்கில் இதுவும் அரசியல் கலாச்சாரமாகிவிடும்.ஆனால் காமராசர் போன்ற அவதாரபுருசன் என்றால் வேறு கதை.

அந்த அம்மாவும் தன் கறைபடியாத கரத்தால்,எப்படி ஆசீர்வதிக்கின்றார்...................அன்னை தெரேசா கூட இப்படி போஸ் கொடுத்து நான் பார்த்ததில்லை. எல்லாம் காலத்தின் கொடுமை!!!!!

அருகில் உள்ள படம்,கேரளா முதலமைச்சருடையது.
கற்றுக் கொள்ளுங்கள் மலையாளிகளிடம் இருந்து,இத்தகைய நற்ப்பண்புகளை..........................

ஏதோ நான் மலையாளி மக்களை உயர்த்தியும்,தமிழனை கேவலப்படுத்தியும் விட்டதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமையே.

--எப்படியோ,இந்தப் படத்தைப் பார்த்ததால் எனக்கு ஏற்ப்பட்டவயிற்றெரிச்சலில் ஒரு பகுதியை இங்கே கொட்டித் தீர்த்துவிட்டேன்.--

அமிதாப் - ரஜினி இணைந்து நடிக்கிறார்கள்


அமிதாப் பச்சன், ரஜினி இருவரும் இறுதியாக சேர்ந்து நடித்த படம் அந்தா கானூன்.  இப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. எனக்கு மிகவும் பிடித்த படம் அது. ஐந்து முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். மறுபடியும் இருவரும் சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தினை இயக்க இருக்கிறார் பூரி ஜெகன்நாத். 

இது குறித்து அவர் கூறியிருப்பது " சமீபத்தில் ரஜினி சாரை சந்தித்துப் பேசியபோது, நான் அமிதாப் பச்சனை வைத்து இயக்க போகும் படம் குறித்து பேசினேன். அப்புதிய படத்தில் நீங்களும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். ரஜினி சார் அவ்வேண்டுகோளை ஏற்றுக்  கொண்டார். அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து அவர் சந்தோஷம் தெரிவித்தார். நீண்ட காலமாகவே ரஜினி சாரை இயக்க வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது.  அதேசமயம், இரு பெரும் ஸ்டார்களான அமிதாப் மற்றும் ரஜினியை இணைத்து இயக்கப் போவது எனக்கே மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

அமிதாப் நாயகனாக நடித்த 'Buddah Hoga Tera Baap' என்ற படத்தை இயக்கியவர் பூரி ஜெகன்நாத் என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் இருவரும் இணைந்து நடித்து வெளிவரும் அந்த நாளை எதிர் பார்த்து காத்திருப்போம்.

பதவிக்காக தன்னை நாடி வந்த சில பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சசிகலா ராவணனின் அட்டகாசங்கள் ?

 


கான்ட்ராக்டரை மிரட்டிய வழக்கில் கைதாகியுள்ள, மன்னார்குடி கும்பலைச் சேர்ந்த ராவணன் மீது, சென்னையில் மேலும் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. அவர் மீது, மேலும் புகார்கள் வந்தவண்ணம் இருப்பதால், "ஏழரை' துவங்கிவிட்டது.


பாலியல் புகாரும் வருது...: கடந்த 2001-06 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பதுங்கி, எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த ராவணன், கடந்த ஐந்தாண்டுகளில், கொங்கு மண்டல பொறுப்பாளராக மாறிய பின் தான், தன் அரங்கேற்றத்தை துவங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், பாலியல் புகாரும் இவர் மீது வருவதாகக் கூறப்படுகிறது. பதவியை நாடி வரும் சிலரிடம் இவர், கேட்கும் பரிகாரமே வேறு என்று எதிர்தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பதவிக்காக தன்னை நாடி வந்த சில பெண்களை இவர், மிரட்டி பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவையும் விரைவில் வெளியாகும்.

ராவணனின் அட்டகாசம்: சசிகலா கும்பலில் அனைவருமே அட்டகாசம் செய்தனர் என்றாலும், அவர்களை விட ராவணன் ஒரு படி அதிகம் என்றே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன், வேட்பாளர்கள் பட்டியல் முடிவு செய்வது முதல், ஆட்சியை பிடித்த பின், அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரையில் தேர்வு, தூக்கியடிப்பு உள்ளிட்ட பல வேலைகளை செய்து வந்தார். கூடுதலாக, டெண்டர் போன்ற பல விவகாரங்களில் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தி வந்தார். உளவுத் துறை போலீசார் இதை கண்காணித்து, விவரங்களை சேர்த்து வந்தாலும், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வழி, சசிகலாவால் தடுக்கப்பட்டிருந்தது.

புகார்களுக்கு வழிகிடைத்தது: தற்போது, உளவுத் தகவல்களும், ராவணன் குறித்த தகவல்களும்முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, தனிப்படை போலீசார், ராவணனை குறி வைத்து தூக்கிச் சென்று விசாரணை நடத்தி, அனைத்து தகவல்களையும் கறந்தனர். அதன் பின் தான், அண்மையில் நடந்த அதிகாரிகள், அமைச்சர்கள் களையெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ராவணனால் பாதிக்கப்பட்ட பலர் மோசடி, கொலை மிரட்டல், அபகரிப்பு உள்ளிட்ட புகார்களை ஆங்காங்கே கொடுத்து வருகின்றனர்.

ராவணன் கைது: இப்படி கொடுக்கப்பட்ட, ஒரு மிரட்டல் வழக்கில் தான் நேற்று முன்தினம், ராவணன் கைது செய்யப்பட்டுள்ளார். காரமடையைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற கான்ட்ராக்டரை கடத்தி, 10 லட்சம் ரூபாய் பறித்துக் கொண்டதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்த விசாரணையும் நடத்தப்பட்டு, மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். சூலூர் பகுதியில் ஜீப் மீது லாரி மோதிய வழக்கிலும் ராவணன் மீது புகார் வந்துள்ளது.

ரூ.1 கோடி மோசடி: இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்த, திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், ராவணன் உள்ளிட்டோர் மீது மோசடி புகார் ஒன்றை அளித்தார்.
திருப்பூரில், ஆர்.கே.ஐமே பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி. அவர் கொடுத்திருக்கும் புகாரில் உள்ள விவரப்படி; ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் இவர், கரூர் மற்றும் திருச்சி பகுதியில் மணல் குவாரி எடுக்க விரும்பினார். இது தொடர்பாக, ராவணனின் உறவினர் சத்யா என்பவர் மூலம், ராவணனின் உதவியாளர் ராஜாவை அணுகி, அவர் மூலம் ராவணனிடம் பேசி, குவாரி லைசென்ஸ் பெற்றுத் தர கோரினார். அதற்கு, ராவணன் தரப்பினர் ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளனர்.


மூன்று பிரிவுகளில் வழக்கு: தொடர்ந்து, ஜூன் மாதம் முதல் வாரத்தில், சென்னை நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் பகுதியில் உள்ள, ராவணன் உறவினர் வீட்டில், பணத்தை கிருஷ்ணமூர்த்தி கொடுத்துள்ளார். ஆனால், இரண்டு இடங்களிலும் மணல்குவாரி லைசென்ஸ் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைக்கவில்லை. பணத்தையாவது திருப்பித் தரும்படி, ராவணன் உள்ளிட்டோரை சந்தித்து கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார். பணத்தை திருப்பித் தர மறுத்ததுடன், கிருஷ்ணமூர்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து, புகாரில் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில், ராவணன், உறவினர் சத்யா மற்றும் ராவணன் உதவியாளர் ராஜா ஆகியோர் மீது, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

துவங்கியிருச்சு ஏழரை: இந்த வழக்கு தொடர்பாக ராவணனை கோர்ட் அனுமதி பெற்று தங்கள் வசம் வைத்து போலீசார் விசாரணை செய்ய உள்ளனர். அடுத்து, யார் மீது வழக்கு பாயுமோ என்ற அச்சத்தில் சசிகலா தரப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ராவணன் மீது தற்போது இரண்டு வழக்குகள் உள்ள நிலையில் மேலும் சிலர் புகார் அளித்துள்ளதால், ஏழரை துவங்கிவிட்டது. விரைவில் அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற கருத்தும் நிலவுகிறது.


வசூல் புகாரும் சேருகிறது...! ராவணன் மீது வடவள்ளியில் நிலம் அபகரிப்பு, நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., செயலர் செல்வராஜ் விபத்தில் பலியானது, திருப்பூரில் நில மோசடி என, பல்வேறு புகார்களும் வழக்குகளாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த வழக்குகள் எதிலுமே அவருக்கு, நேரடித் தொடர்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த வழக்குகளின் எதிரொலியாக, ராவணன் தரப்பால் பாதிக்கப்பட்ட அல்லது மிரட்டப்பட்ட வேறு யாரிடமிருந்தாவது புகார் வரும் என்ற எதிர்பார்ப்பு, போலீசாரிடம் உள்ளது. தமிழகத்திலுள்ள குவாரிகள், கிரானைட் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களில் ராவணனின் பெயரில் பெரும் தொகை வசூலிக்கப்பட்டதாகவும் பரவலான புகார்கள் உள்ளன.

நாசாவுக்கே அதிர்ச்சியளித்த இந்துமதம்

' இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
 இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
 ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
  
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.'
 இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
 எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

படு கவர்ச்சியாக ப்ரியாமணி ? (ஹாட் வீடியோ)


தமிழில் என்னவோ கருத்தான ரோலில் நடித்து வந்த ப்ரியாமணி, இப்போது தெலுங்கில் கவர்ச்சியாக படு க்ளாமர் நடிகையாக மாறிவிட்டார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ராஜ் படம் இப்போது, தமிழில் மகாராணியாக டப் செய்யப்படு, இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.

கதைப்படி இரண்டு தோழிகளுக்குள் நடக்கும் ஈகோ பிரச்னையால் அவர்கள் இறுதியில் எந்த அளவுக்கு கஷ்படப்படுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பது தான் கதை.

இதில் நெருங்கிய தோழிகளாக ப்ரியாமணியும், விமலாராமனும் நடித்துள்ளனர்.

ஹீரோவாக நாகர்ஜூனாவின் அக்கா மகன் சுமந்த் நடிக்க ஆதித்யா இயக்கியுள்ளார். படத்தில் ப்ரியாமணி படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.


தமிழில், பட வாய்ப்பு இன்றி தவித்து வரும் ப்ரியாமணிக்கு, இந்த "மகாராணி" படமாவது, அவரை "மகாராணி"யாக மாற்றுமா...?! என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

ஆடம்பரத்துக்காக படித்த பெண்களும் விபச்சாரத்தில்..

பட்டதாரி பெண்களும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பணத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கு, உச்சநீரிமன்றத்தில் நீதிபதிகள் அல்டமஸ் கபீர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மறுவாழ்வு நடவடிக்கை

அப்போது நீதிபதிகள் கூறுகையில், "இன்றைய தினம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண்களும், பட்டதாரிகளும் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதை காண்கிறோம். அவர்கள் தாங்களாக விருப்பப்பட்டு இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்துடைப்பு கூடாது

விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக, நாம் எத்தனையோ கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துகிறோம். ஆனால் அத்துடன் அந்த பிரச்சினையை முடித்துக்கொள்கிறோம். உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஏதாவது நடவடிக்கை எடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அது நமது மனசாட்சிக்கு திருப்தியாக அமைய வேண்டும். வெறும் கண்துடைப்பாக அமைந்துவிடக்கூடாது. எனவே, மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வரும்," என்றனர்.

மேலும், வக்கீல்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு கமிட்டி செயல்பட சட்ட கமிஷன் அலுவலகத்தில் 3 வாரங்களுக்குள் இடம் ஒதுக்குமாறு கூடுதல் அட்டர்னி ஜெனரல் பி.பி.மல்கோத்ராவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உ .பி :தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் அதற்க்கு காரணம் ராகுல்: பவார் பாய்ச்சல்


உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் ,அந்த பழி  ராகுல் காந்தியை சேரலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார் .

மேலும் ,ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியில் ஒரு முக்கிய அங்கமாக  இருக்கும் வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறுகையில்:காங்கிரஸ் முக்கிய மாநிலங்களில் நன்கு என்றாலும் உடனடியாக ராகுல் காந்தியை  பிரதமர் வேட்பாளர் என்று கணிக்க சாத்தியம் இல்லை.

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முக்கிய பிரச்சாரகரார் திக்விஜய் சிங் மற்ற வேறு எந்த தலைவர்களும் இல்லை காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் எதுவும் சொல்லலாம் ஆனால் தேர்தல் பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியம் அது அவர்களிடம் இல்லை

தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும்  நல்ல முடிவுக்கு பிறகு உடனடியாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என்பது   எனக்கு தெரியாது. காங்கிரசின் அடுத்த திட்டம் கூட எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.தேசிய தலைமையில் பிரதமர் வேட்பாளர்  என்ற அடிப்படையில் எந்த மாற்றத்தையும் இன்று வரை நான் பார்க்கவில்லை என கூறினார்.

கலாமின் "புரா' திட்டம் அமலுக்கு வருகிறது


கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, அப்துல்கலாம் முன்வைத்த, "புரா' திட்டத்தை கொண்டு வருவது குறித்தும், தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்குவதும் குறித்தும், தலைமைச் செயலருடன் அணுமின் நிலைய அதிகாரிகள், பேச்சு நடத்தி உள்ளனர். இதற்கு, மாநில அரசு ஒப்புதல் அளித்ததாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பாக, தமிழக தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கியுடன், இந்திய அணுமின் கழக அதிகாரிகள், மின்வாரிய சேர்மன், எரிசக்தி துறை செயலர் ஆகியோர், நேற்று முன்தினம் பேச்சு நடத்தினர்.

கூடுதல் மின்சாரம் : 

இதில், தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் குறித்து, எரிசக்திதுறை செயலர் விளக்கி இருக்கிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் உற்பத்தி துவங்கியதும், 1,000 மெகாவாட் மின்சாரத்தை முழுமையாக, தமிழகத்திற்கு தர வேண்டும்; அதன்பின், இரண்டாவது உலையில் உற்பத்தி துவங்கியதும், கேரளா, புதுவை மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு தரலாம் என, அவர் பரிந்துரைத்து உள்ளார். இதுதவிர, தமிழகத்திற்கு கல்பாக்கத்திலிருந்து, 75 சதவீத மின்சாரம் தருவது போல், கூடங்குளத்தில் இருந்தும், 75 சதவீத மின்சாரத்தை தர வேண்டும் என்றும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கூடங்குளம் பகுதி மக்களுக்கு, பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றும், அரசின் சார்பில் பேசப்பட்டுள்ளது; தற்போது செய்த சமூக பாதுகாப்பு மக்கள் திட்டங்கள் போதாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"புரா' திட்டம் : 

இதற்கு, அணுமின் கழக சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி, தப்கீர், பதில் அளிக்கையில், "அப்துல்கலாம் பரிந்துரைந்த, "புரா' திட்டப்படி, மீனவர்களுக்கு குளிர்பதன கிடங்குகள், கப்பல் இறங்குதளம், உயர்தர மருத்துவமனை, கல்வி மையங்கள், அதிக வேலைவாய்ப்பு போன்ற திட்டங்களை செய்து தர முடியும்' என, கூறி உள்ளார்.

மாநில அரசு ஒப்புதல் :

இதை தமிழக அரசு ஏற்று, வரும் 31ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில், அணு எதிர்ப்புக் குழுவினருடன் சமரசம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும்; அணு எதிர்ப்புக் குழுவின் மூலமே, அப்பகுதி மக்களுக்கு அச்சம் தீர்க்கவும், அவர்களுக்குரிய கூடுதல் நலத்திட்டங்களை மேற்கொள்வது குறித்தும், பேச்சு நடத்தப்படும் என, தமிழக அரசு தரப்பில் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு, தமிழக அரசு மற்றும் அணுமின் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

தி.மு.க., அறிவாலயத்துக்கு சிக்கல் : 'அனாதை இல்லம்' என்ற பெயரில் ஆக்கிரமிப்பு


ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதாகக் கூறி, சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய இடத்திற்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். விதிப்படி ஆதரவற்றோர் இல்லம் அமைக்காததால், சிறப்பு அனுமதியை ரத்து செய்து, திறந்த வெளி இடத்தை மாநகராட்சியிடமே ஒப்படைக்கும் வகையில், அரசு ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, சென்னை மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். இதனால், அறிவாலயஇடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும் கேள்வி நேரம் நடந்தது. கவுன்சிலர் ஆறுமுகம் (எ) சின்னையன், ""அறிவாலயத்தில் திறந்த வெளி நிலங்களுக்கு சி.எம்.டி.ஏ., மூலம் தான பத்திரம் வழங்கி, பத்திரப்பதிவு செய்திருக்கின்றனரா, பொதுமக்கள் அங்குள்ள பூங்காவை பயன்படுத்த அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா?'' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து சைதை துரைசாமி பேசியதாவது: கடந்த 1980ல் எம்.ஜி.ஆர்., ஆட்சி கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சியின் போது, தி.மு.க., அறக்கட்டளை ஒரு கோரிக்கை வைத்தது. அறிவாலய இடத்தில் பல மாடி கட்டடம் கட்ட, அரசாணை வெளியிடப்பட்டது. இதில், 10 சதவீத திறந்தவெளி நிலத்தை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

ஆறு ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க., அறக்கட்டளை சார்பில், சில சலுகைகள் கேட்டு அரசாணையில் திருத்தம் வேண்டி மேல்முறையீடு செய்தனர். அது நிலுவையிலேயே இருந்தது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், கவர்னர் ஆட்சியின் போது, "அனாதை இல்லம்' கட்டுவதாகக் கூறி, அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றனர். கடந்த 2004ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது, அறக்கட்டளைக்கு அனுமதி அளித்ததை ஏன் ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்து தி.மு.க., ஆட்சிவந்ததும், 2007ம் ஆண்டில்,தி.மு.க., அறக்கட்டளை எழுதிய விளக்க கடிதத்தை ஏற்று, மேல் நடவடிக்கை தேவையில்லை என கோப்பு முடிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்றோர் இல்லம் கட்ட சிறப்பு அனுமதி பெற்று, இதுவரை அதை செயல்படுத்தாமல் இருப்பதால், தி.மு.க., அறக்கட்டளை திறந்தவெளி நிலத்தை பதிவு செய்யாமல் பெற்ற சிறப்பு ஆணையை ரத்து செய்யவும், நிலத்தை மாநகராட்சிக்கு வழங்க அரசு ஆணை பிறப்பிக்கக் கோரி, அரசுக்கு பரிந்துரைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்தார். இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அவர்களை பேச விடாமல் சத்தம் போட்டனர். இதனால், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. "அந்த இடத்தில் பூங்கா உள்ளது; பொது நூலகம் உள்ளது. மன்றத்தில் தவறான தகவல்களை மேயர் தருகிறார்' எனக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர்
போஸ் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் போஸ் கூறும்போது, ""தி.மு.க.,வினர் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதிக்கப்படுவதில்லை. வீடியோகிராபர்களை உள்ளே அனுப்ப மறுக்கின்றனர். மன்றம் மன்றமாக நடக்கவில்லை. மேயர் சர்வ அதிகாரம் படைத்தவர் போல் செயல்படுகிறார். எனவே,வேறு வழியின்றி தான் வெளிநடப்பு செய்தோம்,'' என்றார். கவுன்சிலர் மீது தாக்குதல்: தி.மு.க., கவுன்சிலர் வாசு, "விரிவாக்கப் பகுதிகளில் ஏற்கனவே கட்டிய கட்டடங்களின் மேல், கட்டடம் கட்டப்படுகிறது. இதில் விதிமீறல் இருந்தால் என்ன செய்வது' என, கேள்வி எழுப்பினார். பதிலளித்த மேயர், "எவ்வித கட்டடமாக இருந்தாலும், விதிமுறைப்படி தான் கட்ட வேண்டும். புதிதாக கட்டுமானப் பணி துவங்கும்போதே, விதிமுறை மீறல் உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது' என்றார். வாசு மேலும் கேள்விகள் கேட்க முயன்றபோது, "ஒரு துணை கேள்வி தான்; அதற்கு மேல் அனுமதிக்க முடியாது,'' என்று மேயர் அனுமதி மறுத்தார். அப்போது வாசு, மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்படுவதாகக் கூறி, தி.மு.க., கவுன்சிலர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்தனர். வெளியேறிய வாசுவை, பெண் கவுன்சிலர்கள், கையில் இருந்த தீர்மான நோட்டு மற்றும் கைகளைக் கொண்டு தாக்கினர். ஆத்திரமடைந்த கவுன்சிலர் சத்தம் போட்டுக் கொண்டே மேயர் இருக்கை நோக்கிச் சென்றார். அவரது சத்தம் கேட்டு, தி.மு.க., கவுன்சிலர்களும் வந்தனர். மேயர் இருக்கை அருகே சென்று தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்துவிட்டு மீண்டும் வெளியேறினர்.