அங்குள்ள செபஸ்டின் என்ற விவசாயி, தன் மனைவி மரியபுஷ்பம் மற்றும் மூன்று குழந்தைகளுடன், ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீடு, செபஸ்டினின் முன்னோரால், 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
நேற்று காலை, வீட்டினுள் அவர் நடந்து சென்றபோது, நடுவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து, எட்டடி ஆழத்துக்கும், மூன்று மீட்டர் சுற்றளவுக்கும், பெரிய பள்ளம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட பள்ளத்திலிருந்து, "குபு...குபு...' என, நீரூற்று பெருகியது. இதைக் கண்டு, செபஸ்டின் திகைத்தார்.
செபஸ்டினின் மாமாவும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான அருளானந்தம்,69, கூறியதாவது: எனக்கு, 12 வயது இருக்கும்போது, இந்த வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில், 12 அடி ஆழத்துக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை.
அப்படியே அதை விட்டு விட்டு, நான்கைந்து ஆண்டுகள் கழித்து மூடிவிட்டோம். இவ்வாறு, அருளானந்தம் கூறினார். செபஸ்டின் வீட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், நிலநடுக்கம் ஏதும் வருமோ என, அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து, கலெக்டரிடமோ, புவியியல் துறையிடமோ, புகார் ஏதும் தெரிவிக்கவில்லை.

No comments:
Post a Comment