சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை அமெரிக்கா அது பற்றிய எந்தவொரு முடிவுக்கும் வராது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. ![]() வொசிங்டனில் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனரிடம், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போதுமானதா என்பதைத் தீர்மானிப்பதற்கு, அது வெளியிடப்படும் வரை அமெரிக்கா காத்திருக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை அது தொடர்பான எந்த முடிவையும் அறிவிக்க தாம் விரும்பவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருந்தார். “குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க வேண்டியது சிறிலங்கா அரசின் பொறுப்பு. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசின் விசாரணைகள் வெளிப்படையானது என்பதை நிருபிக்க வேண்டிய தேவை உள்ளது“ என்றும் மார்க் ரோனர் மேலும் கூறியுள்ளார். “சிறிலங்கா அரசாங்கம் அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால், சுதந்திரமான பொறிமுறை குறித்த அழுத்தங்களை சந்திக்க நேரிடும். நல்லிணக்கத்தை ஏற்படுத்த உள்நாட்டுக்குள்ளேயே இதைச் செய்ய வேண்டியது முக்கிமானது.சிறிலங்கா அதனை தாமாகவே செய்து கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதை அவர்கள் செய்யாது போனால், நாங்கள் பலமுறை கூறிவிட்டோம் -. ஏனைய பல பொறிமுறைகளின் மீது கவனம் செலுத்துவதற்கான அனைத்துலக அழுத்தங்கள் அதிகரிக்கும்.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
Sunday, 23 October 2011
சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால்...? � அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment