சிறிலங்காவின் தலைமையை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளை முறியடிக்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் நாடியுள்ளது. ![]() சிறிலங்கா அரசை குறிவைத்து விடுதலைப் புலிகள் போர்க்குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் நிலையிலேயே, சிறிலங்கா அரசு இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் சிறப்பு தூதுவராக அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஒஸ்லோ சென்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மையும், நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜெனாஸ் கார்ஸ்ரோரையும் தனித்தனியாகச் சந்தித்து, இதுதொடர்பாகப் பேசியுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன. ஜெனிவாவில் விடுதலைப் புலிகளுடன் நடத்திய இரண்டு சுற்றுப் பேச்சுக்களிலும் அரசதரப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவையே, நோர்வேயிடம் உதவி கோருவதற்கு சிறிலங்கா அதிபர் அனுப்பி வைத்துள்ளார். இவருடன் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவும் ஒஸ்லோ சென்றுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் பரப்புரைகளை முறியடிப்பதற்கு சிறிலங்கா அதிபர் இவர்களுக்கு முழுமையான அதிகாரங்களையும் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜுலை மாதம் ஒஸ்லோவில் தனிநபர் ஒருவர் நடத்திய தாக்குதல் ஒன்றில் சுமார் 80 பேர்வரை கொல்லப்பட்டதை அடுத்து- தீவிரவாதத்துக்கு எதிராக நோர்வே எடுத்துள்ள கடுமையான நிலைப்பாட்டை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிறிலங்கா அரசு போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க நோர்வேயைப் பயன்படுத்த முனைவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
Sunday, 23 October 2011
போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க சொல்ஹெய்மிடம் சரணடைந்தது சிறிலங்கா
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment