| 2011- 10- 20 லிபியர்களின் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். காரணம், அந்நாடு முழுமையாக சர்வாதிகாரியின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது. காலை 8.30 - கடாபி மற்றும் அவரது சிறிய படையணியொன்றும் சிர்தே நகரைவிட்டுத் தப்பியோட முயற்சித்த போது அப் படையணி மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கடாபியின் முக்கிய ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். காலை 11.05 - லிபிய இடைக்கால அரசபடைகள் அந்நாட்டின் இறுதிப் பகுதியான சிர்தே நகரை முற்றிலுமாகக் கைப்பற்றியதுடன், மீதமிருக்கும் கடாபி ஆதரவாளர்களைத் தேடிக்கொண்டிருப்பதாக அறிவித்தனர். பகல் 2.00 - இதில் தப்பித்த கடாபி கொன்கிறீட் குழாய் ஒன்றினுள் நுழைந்து பதுங்கியுள்ளார். பின்னர் அவ்விடத்திற்கு வந்த இடைக்கால நிர்வாக அரச படையினர் அவரை அதற்குள் இருந்து இழுத்து வெளியே எடுத்துள்ளனர். அதன்போது அவரிடம் தங்கத் துப்பாக்கியொன்று இருந்துள்ளது. தனது உயிருக்கு அஞ்சிய கடாபி தன்னைச் சுட வேண்டாம் எனக் கெஞ்சியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் கோபத்தில் அவரை மோசமாகத் தாக்கியுள்ளனர். இறுதியில் அவரது தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பகல் 2.30 - கடாபி கொல்லப்பட்டதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். பகல் 2.45 - கடாபி கொல்லப்பட்டமையை கடாபி ஆதரவு ஊடகமொன்று மறுக்கின்றது. பகல் 3.00 - லிபியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்குகின்றன. மக்கள் வெற்றியைக் கொண்டாடுகின்றனர். பகல் 3.44 - கடாபி கொல்லப்பட்ட காட்சி வெளியாகிறது. பகல் 4.30 - கடாபி கொல்லப்பட்டுள்ளதாக லிபியாவின் இடைக்கால பிரதமர் மஹுமூட் ஜிப்ரில் தொலைக்காட்சியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றார். பகல் 4.31 - கடாபியின் மகன்முடாசிம் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இரவு 7.50 கடாபியின் மகன் சயிப் கொல்லப்பட்டுள்ளதாக அல்ஜெசீரா ஊடகம் செய்தி வெளியிட்டது இவ்வாறு கடாபி மற்றும் அவரது எஞ்சிய படையணியின் ஓட்டம் முடிவுக்கு வந்தது. எனினும் கடாபி கொல்லப்பட்ட விதம் தொடர்பில் பல சமூக ஆர்வலர்கள் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மனிதாபிமானமற்ற முறையில் அவர் தனது இறுதித்தருணத்தில் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Sunday, 23 October 2011
சுட வேண்டாம் சுட வேண்டாம் கடாபியின் கடைசி வார்த்தை (படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment