Sunday, 23 October 2011

பஸ்சை எடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்த ஒரு பெண் டிரைவர். (வீடியோ இணைப்பு)


அமெரிக்காவில் ஒரிகான் மாகாண போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று போய்க்கொண்டிருந்தது. ஹில்ஸ்பிரோ என்ற பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பஸ்ஸை நிறுத்திய டிரைவர் அவசரமாக இறங்கி பஸ்ஸின் பின்னால் சென்று நின்று கொண்டார்.



ஏதேனும் பிரச்சினையோ? என்று பதறிய பயணிகள் சிலர் டிரைவர் பின்னாலேயே சென்று பார்த்தனர். அப்போது அவர் பஸ்சில் அழும் குழந்தையை அழுவதை நிறுத்தச் சொல்லுங்கள். அல்லது அந்த அம்மாவையும், குழந்தையையும் இறங்கச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் என்னால் பஸ் ஓட்ட முடியாது என்று கூறினார்.
குழந்தை அழுவதற்கும் பஸ் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம், அது ஒன்றும் சிரமமில்லையே, பஸ்ஸை எடுங்கள்’ என்று சிலர் சொல்லிப்பார்த்தார்கள். ஆனால் பஸ் ஓட்டுவதைப் பற்றி உங்களுக்கென்ன தெரியும். உங்கள் வேலையைப் பாருங்கள் என்று கூறிவிட்டார் டிரைவர்.

அழுதது 2 வயதிற்குட்பட்ட சிறிய குழந்தை அந்தக் குழந்தையின் தாயாருக்கு ஆதரவு தெரிவித்த சிலர், குழுவாக சேர்ந்து பஸ் டெப்போவுக்கு சென்று முறையிடத் தொடங்கிவிட்டனர். அப்போதும் அந்த டிரைவர் அடம் பிடித்தார் இந்தக் குழந்தை சும்மா சாதாரணமாக அழவில்லை. ரொம்ப நேரமாக கத்திக் கொண்டே இருக்கிறது. நானும் எவ்வளவு நேரம்தான் பொறுத்துக் கொள்வது? பெரிய நகருக்குள் பஸ் ஓட்டுகிறேன். அந்த அழுகுரல் என்னை தடுமாறச் செய்கிறது. அதனால்தான் இறங்கச் சொன்னேன் என்றார்.

இப்படிச் சொன்ன அந்த டிரைவரும் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த சண்டை சத்தத்தை ஒருவர் ரெக்கார்டு செய்திருக்கிறார். அதுவும் இந்தப் புகாரில் ஒரு ஆதாரமாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

No comments: