![]() |
| இலங்கை அரசியலை இடியப்பச் சிக்கலாக்கி வரும் சகோதரர்களால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பெரும் தலையிடி உருவாகி உள்ளது.அனைத்துலக அரங்கிலும் தேசிய அளவிலும் இன்று ஜனாதிபதி எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் பல. இலங்கை அரசியலை இடியப்பச் சிக்கலாக்கி வரும் சகோதரர்களால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பெரும் தலையிடி உருவாகி உள்ளது.அனைத்துலக அரங்கிலும் தேசிய அளவிலும் இன்று ஜனாதிபதி எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் பல. * ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை * போர் குற்ற விசாரணை * சனல் 4 வீடியோ காட்சிகள் *ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையால் ஏற்படும் இழப்பு * கூட்டணியுடனான பேச்சு முறிவு * அரசியல் தீர்வுக்கான சர்வதேச அழுத்தம் *தமிழ் நாட்டு அரசின் கடும்போக்கு என்று, ஜனாதிபதி சந்திக்கும் தலையிடிகள் அனேகம் இவற்றைச் சமாளிக்க எதைச் செய்வோம் எப்படிச் செய்வோம் என்று தத்தளிக்கிறார் ஜனாதிபதி.இந்தப் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்றில் ஒரு மூலையில் தவறு ஏற்பட்டாலும் அவை அனைத்துக் கும் நாட்டின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதியே பொறுப்புக் கூறவேண்டியுள்ளது. இதனை உணராது ஜனாதிபதியின் சகோதரர்கள் ஏறுக்கு மாறாக எழுந்தமானமாகக் கருத்துக்களை தெரிவிப்பது வேறு ஜனாதிபதிக்குத் தலையிடியாக உள்ளது. ஜனாதிபதியின் பிரதி நிதியாக, நாட்டுக்கு ஏற்பட் டுள்ள களங்கத்தை நீக்க மூத்த அரசியல் வாதியான வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சர்வதேச நாடுகளுக்குப் பறந்து திரிகின்றார். அவர் ஏற்றுள்ள பாத்திரத்தை அவர் சிறப்பாகவே செய் கின்றார். இன்று எவை எல்லாம் நாட்டின் நலன் கருதி செய்யப்பட்டவை என்று அவர் வாதிடுகின்றாரோ அவை அனைத்தும் அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகங்கள்,மனித உரிமை மீறல்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியில் தான் இருந்தபோது வசைபாடினார் என்பதை அமைச்சர் பீரிஸ் வசதியாக மறந்துவிட்டார் என்பது அரசியல். ஆனால் அவர் பறந்து பறந்து கஷ்டப் பட்டு சிறுகச் சிறுகச் சேர்க்கும் நற்பெயரை கோத்தபாய ராஜபக்ஷ இருந்த இடத்தில் ஒரு சுழல் கதிரையில் சுற்றிய படியே ஒன்றும் இல்லை என்றாக்கி விடு கிறார். "தம்பி உடையான் சண்டைக்கு அஞ்சான்'' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஆனால் ராஜபக்ஷவுக்கு இப்போது தம்பி இருப்பதுதான் அச்சத்துக்குக் காரணம் என்றாகிறது.ஆனால் செய்வதற்கு வழி ஒன்றும் இல்லை. ஏனெனில் மொத்த ராஜபக்ஷ குடும்பமும்தான் இன்று நாட்டை ஆள்கிறது. அதில் இருந்து ஓர் "ஆணி'' யைப் பிடுங்கினாலும் ஆபத்துத்தான். *அதிஉயர் பதவியான ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ * நாடாளுமன்றின் சபாநாயகராக சமல்ராஜபக்ஷ *பலமிக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பஸில் ராஜபக்ஷ *பிரதி அமைச்சராக நிருபமா ராஜபக்ஷ *பாதுகாப்பு அமைச்சராக கோத்தபாய ராஜபக்ஷ *நாடாளுமன்ற உறுப்பினராக நாமல் ராஜபக்ஷ இலங்கை அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு குடும்ப அரசியல் பின்புலமும், பதவி வழிப்பாது காப்பும் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் அமைந்த தில்லை. ஆரம்ப கட்டத்தில் குறிப்பாக போர்க்காலங்களில் இந்தச் சகோதரர்கள் ஜனாதிபதி யின் கரங்களைப் பலப்படுத்தவும், அரசியலில் உறு தித் தன்மையை ஏற்படுத்தவும் மிகவும் உறுதுணை யாக இருந்து செயல்பட்டனர். ஆனால், அண்மைக்காலங்களில் இந்த ராஜபக்ஷ சகோதரர்கள் வெளியிட்டு வரும் மாறுபட்ட முன் னுக்குப்பின் முரணான கருத்துக்கள் ஜனாதிபதியை மிகவும் தர்மசங்கடங்களுக்குள் தள்ளி விடுகின்றன. ராஜபக்ஷ சகோதரர்கள் வெளியிட்டு வரும் ஏட் டிக்குப்போட்டியான கருத்துக்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம். ஜனாதிபதி: வடக்கில் இடம்பெற்ற உள்ளூ ராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது தெரிவித் ததாவது: நான் உங்கள் சொந்தக்காரன். உங்களு டைய பிரச்சி னைகளுக்கு விரைவில் தீர்வுகாண் பேன். தெற்கில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் எல்லா நன்மை களையும் வடக்கில் வாழும் தமிழ் மக்களும் பெற்று வாழ வழியேற்படுத்துவேன், அர சியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவேன் என்றார். கோத்தபாய ராஜபக்ஷ: நாட்டில் இருந்தது பயங்கரவாதம் மட்டுமே. அதனை முற்றுமுழு தாக அழித்து ஒழித்து கட்டிவிட்டோம். இப்போது இங்கே பிரச்சனை ஏதும் இல்லை. தமிழர்களுக்கு என்று விசேடமாக எதையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இலங்கைக்கு என ஒரு அர சமைப்பு உண்டு. இதில் எல்லா அம்சங்களும் சிறப்பாகவே இருக்கின்றன. புதிதாக ஒரு திருத் தமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எவருடனும் பேச வேண்டிய தேவையும் இல்லை. எதற்காக அரசியல் தீர்வு? பஷில் ராஜபக்ஷ: தமிழ் மக்களின் பிரச்சினை யைத் தீர்ப்பதற்கும் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும்தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எதையா வது செய்ய வேண்டும் என்பதற்காக தெரிவுக் குழு அமைக்கப்படவில்லை. வழமைபோல் காலம் கடத்துவதற்காகவோ அல்லது இழுத்தடித்து ஏமாற்றுவதற்காகவோ இது இல்லை. தீர்வுத்திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பித்து விட வேண்டும் எனக் காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இதே பஷில் ராஜபக்ஷ தான் இனப்பிரச்சினை பிச்சைக்காரன் காலில் உள்ள புண் என்றும் அதனை ஆறவிடாமல் கிண்டிக் கிளறிவிட்டுக் கொண் டிருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் என்றும் யாழ்ப்பாணத்துத் தேர்தல் மேடைகளில் புலம்பியவர். அமைச்சர் பஸில் ராஜபக்ஷவால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே போன்று ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டி யிட்டு வெற்றிபெற்ற வேலணை, நெடுந்தீவு, ஊர் காவற்றுறை ஆகிய மூன்று பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். 19 பிரதேச சபைகளைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோ, உப தலை வர்களோ, உறுப்பினர்களோ அழைக்கப்பட வில்லை. ஜனாதிபதி கூறும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இவை ஒருபோதும் உதவப் போவதில்லை. பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சர் முழு நாட் டுக்குமே பொதுவானவர். ஆனால் இந்தக் கூட்டத்தில் பேசும்போது டக்ளஸ் தேவானந்தா தாம் வெற்றி பெற்ற மூன்று சபைகளுக்கும் அபிவிருத்தி செய்யும் படி ஜனாதிபதியிடம் கேட்டார் என்றும் அத னாலேயே அந்த மூன்று சபைகளையும் உடன் அபி விருத்தி செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டார் என்றும் தெரிவித்தார். இது தேர்தலில் தங்களை ஆதரிக்காத மக்க ளைப் பழிவாங்கும் ஒரு நடவடிக்கையாகத் தெரி கிறது. ஓர் அரசு இதனை ஒரு போதும் இப்படி வெளிப் படையாகச் செய்யக்கூடாது. ஆனால் பொறுப் பற்றதனமாக அமைச்சர் பஸில் இதனைப் பகிரங் கமாக ஒரு கூட்டத்திலேயே அறிவித் துள்ளார். இந்தச் சம்பவம் நடந்த அதே தினத்தில் ஓகஸ்ட் 25 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப் பின ரும் ஜனாதிபதியின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தமிழ் ஊடகவியலாளர்களைத் தனிப் பட்ட முறையில் அழைத்து ஊடகத்துறையினரு டன் பரஸ்பர நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள ஜனாதிபதி விரும்புகிறார் என்று தெரிவித்தார். தமிழ் ஊடகவியலாளர்கள் எந்த நேரத்திலும் தன் னுடன் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறிய துடன் தனது உதவியாளர்களையும் அழைத்து ஊடக வியலாளர்கள் வரும்போது அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இப்படி தனது சகோதரர்களாலேயே ராஜபக்ஷ கடும் தலையிடிக்கு உள்ளாகி உள்ளார். அவரது விருப் புக்கும் எதிர்பார்ப்புக்கும் மாறாக இவர்கள் நடந்து கொண்டு பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கு கின்றனர். ஜனாதிபதி தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது மட்டும் உறுதி. |
Thursday, 8 September 2011
தொல்லை தரும் சகோதரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment