Thursday, 8 September 2011

சிறிலங்கா அதிபரின் செயலர் பதவியையும் பிடித்தார் கோத்தாபய


சிறிலங்கா அதிபரின் பதில் செயலராக கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க வெளிநாடு சென்றுள்ளதாலேயே கோத்தாபய ராஜபக்ச பதில் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வழக்கத்தில் லலித் வீரதுங்க வெளிநாடு செல்கின்ற போது, சிறிலங்கா அதிபரின் பணியக தலைமை அதிகாரி காமினி சேனாரத் பதில் செயலராக கடமையாற்றுவார்.

ஆனால் இம்முறை கோத்தாபய ராஜபக்ச பதில் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். லலித் வீரதுங்க நாடு திரும்பும் வரை அவர் இந்தப் பொறுப்பில் இருப்பார்.

சிறிலங்காவின் அடுத்த பிரதமராக கோத்தாபய ராஜபக்சவை முன்னிறுத்த சிறிலங்கா அதிபர் முனைவதையே இது காட்டுவதாக அமைச்சர்கள் பலரும் விசனமடைந்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments: