| குவாண்டமாலா நாட்டில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் அதிசயமான பண்றிக் குட்டி ஒன்று பிறந்துள்ளது. அதன் தலை வழமைக்கு மாறகவும் மற்றும் பண்றியின் தோற்றம் இல்லாது விசித்திர முகம் கொண்டதாகவும் உள்ளது. இக் கிராமத்தில் சமீபகாலமாக வேற்றுக்கிரக வாசிகள் வந்துசெல்வதாக ஊர்மக்கள் சொல்லுகின்றனர். வேற்றுக்கிரக வாசிகள் வந்துசெல்லும் பறக்கும் தட்டைத் தாம் கண்டதாவும் சிலர் தெரிவித்துள்ளனர். கிராமத்தில் உள்ள பண்ணைகளில் இரவுநேரங்களில் வேற்றுக் கிரக மனிதர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாகவே இப் பண்றிக் குட்டி இவ்வாறு பிறந்திருக்கிறது என அக் கிராம மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இப் பண்றிக்குட்டி வேற்றுக்கிரக மனிதர்களின் ஆராட்சியால் அல்லது அவர்களின் பறக்கும் தட்டில் இருந்து வெளிப்பட்ட கதிரியக்கத்தால் இப்படி பிறந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் இப் பண்றிக் குட்டி குவாண்டமாலா நட்டில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளில் தோன்றி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. |
Thursday, 8 September 2011
வேற்றுக் கிரகப் பண்றியா ? (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment