Friday, 14 October 2011

ஸ்டீவ் இல்லாத அப்பிளின் 4 எஸ் இற்கு சவாலளிக்க வருகின்றது செம்சுங் கெலக்ஸி 3

பெரிய 4.6 அங்குல சுப்பர் எமொலெட் திரையுடன், 1.8GHz டுவல் கோர் புரசசருடனும், 2 ஜிபி ரெம் உடனும், 12 மெகாபிக்ஸல் வசதியுடனும் கூடிய கையடக்கத்தொலைபேசியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
ஆனால், உண்மையிலேயே அவ்வாறானதொரு கையடக்கத்தொலைபேசியை செம்சுங் இன்னும் சில நாட்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்பிள் தனது ஐ போன் 4 எஸ் ஐ அறிமுகப்படுத்தியுள்ள இந்நேரத்தில் தன் பங்கிற்கு செம்சுங் நிறுவனமும் ஒரு கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தும் என ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் செம்சுங்கின் அடுத்த வெளியீடாக இருக்கலாம் எனக் கருதப்படும் கையடக்கத்தொலைபேசியின் தகவல்கள் கசிந்துள்ளன.
தற்போது இது செம்சுங்கின் கெலக்ஸி வரிசை கைடயக்கத்தொலைபேசியின் 3 (Samsung-Galaxy-S-III) ஆவது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இக்கையடக்கத்தொலைபேசி அதிவேக 4 ஜி வசதியைக் கொண்டிருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே வெளியாகியுள்ள செம்சுங்கின் கெலக்ஸி எஸ் 2 அப்பிளின் ஐ போன் 4 எஸ் எஸ் இனை விட வேகமாக விற்பனையாகிவருகின்றது.
இந்நிலையில் இதுவும் வெளியாகி வெற்றிகரமாக விற்பனையானால் ஸ்டீவ் ஜொப்ஸ் இல்லாத அப்பிளுக்கு அது பாரிய அடியே!

No comments: