சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள உலகப் பல்கலைக் கழகம் என்ற அலங்காரப் பெயருடன் உலா வந்த ஒரு அமைப்பு சந்தையில் கத்தரிக்காய், புடலங்காய் விற்பது போல காசு வாங்கிக் கொண்டு டாக்டர் (முனைவர்) பட்டங்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தது. ஒரு 200 டொலர் கொடுத்தால் போதும். நாலு நாள் பொறுத்து அஞ்சலில் பட்டம் வந்து சேரும். கொஞ்ச நாட்களாகரொறன்ரோவில் இடறினால் ஒரு கவுரவ டாக்டர் மீதுதான் விழ வேண்டும் என்ற நிலமை இதுவே பேச்சாக இருந்தது.![]() இப்போது மீண்டும் அந்த வியாதி பரவத் தொடங்கி இருக்கிறது. கடந்த திங்கள் கிழமை (ஒக்தோபர் 10, 2011) நடந்த நாதசுர தவில் இசைசர்வதேச அமைப்பின் 14 ஆம் ஆண்டு விழாவில் அதன் தலைவர் முருகதாசுக்கு கராத்தே சங்கம் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்தது.கராத்தே சங்கம் சார்பில் ஒரு உச்சிக் குடுமி அர்ச்சகர் ஆறுமுகம்பிள்ளை முருகதாசுக்கு முடிசூடி சான்றிதழையும் கொடுத்தார். இது நிகழ்ச்சிநிரலில் இடம்பெறாத ஒரு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னரும் கராத்தே சங்கத்தின் பெயர் இங்கு அடிபட்டது. இங்குள்ள குருமார் சிலருக்கு இந்த அமைப்பு டாக்டர் பட்டம் வழங்கிக் கவுரவித்தது. ஆறுமுகம்பிள்ளை முருகதாஸ் ஒரு நாதசுவர இசைக் கலைஞர். பல பட்டங்களையும் பாராட்டுதல்களையும் பெற்றவர். கடந்த பலஆண்டுகளாக நாதசுர தவில் இசை சர்வதேச அமைப்பின் தலைவராக இருந்து நாதசுர தவில் கலையை வளர்த்து வருகிறார். தமிழ்நாடு, ஆந்திரா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து சிறந்த கலைஞர்களை வரவழைத்து இரசிகர்களுக்கு நல்ல இசை விருந்து படைத்துவருகிறார். அவர் கவுரவ டாக்டர் பட்டத்துக்குத் தகுதியானவர்தான். ஆனால் அது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் போன்ற ஒரு பல்கலைக்கழகத்தால் கொடுக்கப்பட வேண்டிய பட்டம். இசையோடு அறவே தொடர்பில்லாத கராத்தே சங்கத்திடம் இருந்து டாக்டர் பட்டம் வாங்குவதுகேலியானது. உண்மையான கலாநிதி பட்டம் பெறுவதென்றால் முதுகலைப் பட்டத்தை முடித்துக் கொண்டு மேலும் இரண்டு ஆண்டு நித்திரை முழித்துப்படித்து ஆய்வுக் கட்டுரை எழுதிப் பெறவேண்டும். உலகத்திலேயே டாக்டர் பட்டம் வாங்கிக்கொள்பவர்கள் ஒன்றில் மருத்துவரா இருத்தல் வேண்டும் அல்லது தத்தம் துறையில் படித்துஆராய்ச்சி செய்து கலாநிதிப்பட்டம் (PhD) பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதுதான் நியதி. இதுதான் ஒழுங்கு. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் பல்கலைக் கழகங்கள் தாராளமாக கவுரவ டாக்டர் பட்டங்களைவழங்கி வருகின்றன. கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் இந்தமாதிரி பட்டம் பெற்றவர்கள்தான். மிக அண்மையில் சிறீலங்காஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே மற்றும் அவரது இளவல் கோத்தபாய ஆகிய இருவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கி இருந்தது. இந்த கராத்தே சங்கம் தனது கடையை சிறீலங்காவில்தான் விரித்திருக்கிறது. சிறீலங்காவில் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்குவதில் அதுமுன்னணியில் நிற்கிறது. அனைத்துல போர்க்லைப் பல்லைக்கழகம் என யப்பானில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு அமைப்பின் மூலம்சிறீலங்காவில் இந்த கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறது. டாக்டர் பட்டம் கராத்தே துறையில் சிறந்து விளங்குபவர்களுக்குத்தான்வழங்குகிறார்கள் என்றில்லை. டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும் கராத்தேக் கலைக்கும் அல்லது எந்தவொரு போர்க்கலைக்கும் எது விததொடர்பும் இல்லை. கொஞ்சம் விசாரித்துப் பார்த்தால் ஒரு டாக்டர் பட்டத்திற்கு ரூபா. .20, 000 முதல் அவரவர் தகுதிக்கேற்ப வசூலிக்கிறார்கள்.ஒரு கையால் காசு கொடுத்தால் மறு கையால் டாக்டர் பட்டம் வாங்கிவிடலாம். ஆண்டொன்றுக்கு ஒருமுறை யப்பானிலிருந்து ஒரு கராத்தேவீரசை அழைத்து பட்டமளிப்பு விழா வேறு நடாத்துகிறார்கள். திரு முருகதாஸ் எவ்வளவு கொடுத்தார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அது ஓசியில் கிடைத்திருக்கலாம். இதைவிட மோசம் பேராசிரியர் பட்டம் வழங்குவது. கவுரவ பேராசிரியர் எனச் சான்றிதழ் வேறு அளிக்கிறார்கள். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்கூட இந்தக் கவுரவ பேராசிரியர் பட்டத்தை பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இந்த டாக்டர் பட்டத்தை அதிகமாக வாங்கிக் கொள்பவர்கள் யார் தெரியுமா? பல முதலாளிகள் � குறிப்பாக பெரியளவில் பலசரக்கு, அரிசி, மீன்என வியாபாரம் செய்யும் முதலாளிகள். அதைவிட சில அரசியல்வாதிகளும் இந்த டாக்டர் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவு?உண்மையாக உழைத்துப் படித்து பட்டம் பெற்றவர்கள் இன்று அந்தப் பட்டத்தைப் போட்டுக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். எங்கேதங்களையும் போலி டாக்கடர்கள் என்று நினைத்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இந்தப் போலி (அதாவது கவுரவ)டாக்டர்கள் தொல்லை அதிகரித்து விட்டது. சராசரி மனிதர்கள் இந்தக் கவுரவப் பட்டங்களுக்கு அலையும் மட்டும் கராத்தே சங்கங்கள் காட்டில் காசு மழை கொட்டிக் கொண்டுதான்இருக்கும்! |
Friday, 14 October 2011
டாக்டர் பட்டம் விற்பனைக்கு…. மலிவு விலையில் வாங்குவோர் வாங்கலாம்!
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment