இன்று பிறந்தநாள் காணும் நடிகை சினேகா, தனது பிறந்தநாளை பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். ![]() முன்னணி நடிகைகளில் ஒருவரான சினேகா, ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களில் கொண்டாடி வருகிறார். ![]() அதேபோல இந்த ஆண்டு தனது பிறந்தநாளை இன்று காலை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தனது பெற்றோருடன் சென்று வழிபட்டார். பின்னர் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்துக்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அடுத்ததாக, அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க ஆட்டோ கிராப் படத்திலிருந்து ஒவ்வொரு பூக்களுமே பாடலையும் பாடி அவர்களை மகிழ்வித்தார். பின்னர் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவை தன் கையால் பரிமாறினார். |
Friday, 14 October 2011
மாற்றுத்திறனாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடினார் சினேகா(படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment