Saturday, 29 October 2011

ரேடியோவைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி அல்ல


அந்த காலத்தில் தகவல் அனுப்பும் கருவியை கண்டு பிடிக்க பலர் முயன்றனர் அடிப்படை உண்மைகளை எந்த தனி மனிதனும் கண்டு பிடிக்கவில்லை. பலரின் கூட்டு முயற்சியே இது.





ஆனாலும் ரேடியோவை முறைப்படி கண்டுபிடித்தவர் யார் என விசாரித்து பார்த்தால், அந்த பெருமைக்கு சொந்தக்காரர் நிக்கோல டெஸ்லா என்பவர் தான்.

ஆனால் அந்த காலத்தில் காப்புரிமை சட்டங்கள் தெளிவாக இல்லாததால், இவர் காப்புரிமை பெறவில்லை. இதை சற்று மாற்றி பெயரை தட்டி சென்றார் மார்க்கோனி. ஆனால் அறிவியல் உலகில் மார்க்கோனியை விட டெஸ்லாவையே பெருமையாக பேசுகிறார்கள்.

7ஆம் அறிவு படத்தை பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி விடாதீர்கள் தமிழர்களே!


 
ஒரு முறை சுஜாதா அவர்களிடம் ஒருவர் 7 ஆவது அறிவு என்னவாக இருக்கும் என கேட்டதற்கு தொழிநுட்பத்தை .ஊடகங்கங்களை பயன்படுத்தி செய்யப்படுவது என கூறினார் . உதாரணமாக மனிதன் உருவாக்கிய கணணி மனிதனை விட வேகமாக வேலைகள் செய்யும் . அதே போல இயற்கை ஊடகங்களை(சக்திகளை ) பயன்படுத்தும் திறன் சித்தர்களுக்கு இருந்திருக்கிறது .அதானால் தான் இந்த பெயராக இருக்க வேண்டும் .

7 ஆம் அறிவு திரைப்படம் பற்றி விமர்சனமாக இந்த பதிவை வைக்க போவதில்லை . சில விமர்சகர்கள் என்போரின் விமர்சனங்களுக்காக எழுதும் பதிவு .

அதற்கு முதல் இப்போது இருக்கும் தமிழ் மேதைகள் கூட்டம் பற்றி ஒரு வித அறிமுகம் கொடுக்கிறேன் .

இந்த மேதைகள் கூட்டத்தால் எந்த பயனும் இதுவரை காலமும் தமிழுக்கு, சைவத்துக்கு இருந்ததில்லை . எழுத்துலக பிரம்மாக்கள் என்பவர்கள் இலக்கிய சொட்ட சிறு கதையையும் ,கவிதைகளையும் இணையம் முழுக்க கொட்டி வைத்திருக்கிறார்கள் . கவிதைகளுக்கு ,கதைகளுக்கும்,முக்கியமாக சினிமாவுக்கும் இணையத்தில் பஞ்சமில்லை . ஒரு விஞ்ஞானம் பற்றிய விடயமோ ,அது பற்றிய ஆராய்ச்சிகளோ இணையத்தில் இல்லை .தமிழை,தமிழின் தொன்மைகளை விஞ்ஞான பார்வையில் தேடினால் ஒன்றையும் காணக்கிடைக்காது .ஒரு சில பிளாக்கர்களின்(எண்ணலாம்) ஆக்கங்கள் தவிர .

இந்த நேரத்தில் போதிதர்மன் எனும் கதாப்பாத்திரம் 7 ஆம் அறிவில் இருக்கிறது என கேள்விப்பட்டேன் . இணையத்தில் தேடிய போது ஆங்கிலத்தில் பல விடயங்கள் கொட்டிக்கிடந்தது . தமிழில் ஏழாம் அறிவோடு சேர்ந்த செய்திகளாகவே போதிதர்மன் பற்றி தமிழில் காணக்கிடைத்தது .

யாராவது ஒருவர் தமிழின் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்தால் அதை பற்றி ஒருவர் கூட வாய் திறந்து பேசுவதில்லை . செம்மால் மானவை எனும் பேராசியர் திருக்குறளில் 140 குறள்களில் இருக்கும் நவீன மருத்துவம் பற்றிய தகவல்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள் . இவ்வளவு பெரிய பொக்கிஷத்தை வைத்துக்கொண்டு இத்தனை காலம் எப்படி இருக்கிறீர்கள் என்பது அவரின் கேள்வி??? .இது எத்தனை பேருக்கு தெரியும் .எத்தனையோ பேர் மருத்துவம் படிப்பீர்கள் .யார் தேடியிருக்கிறீர்கள் ! எத்தனை எஞ்சினியர்களுக்கு தஞ்சை பெரும் கோவிலின் கட்டடக்கலை தெரியும் ! எத்தனை பேர் நீங்கள் படிக்கும் துறையில் தமிழை நவீன மயப்படுத்த தயாராக இருக்கிறீர்கள் . இத்தனைக்கும் தகுதி இருந்தால் 7ஆம் அறிவை .முருகதாஸை நீங்கள் தவறாக விமர்சிக்க முடியும் .

வைரமுத்துவிடம் ஒரு பெரிய நடிகர் தமிழ் வருவது போல பாடலில் வரி எழுதி தாருங்கள் ,தாய் குலத்தோடு ஒரு சீன்,உழைக்கும் வர்க்கத்தோடு ஒரு சீன் என கேட்டு வாங்குகிறார்கள் ஒரு உழைப்பும் ஒரு விடயமும் இல்லாமல் . இது எதை, பாச உணர்வை தூண்டி ?யாரை முட்டாளாக்கி பணம் சம்பாதிக்கும் வழி ? இந்த நடிகரின் எல்லா பாடல்களிலும் தமிழ் வருவதை கவனிக்கலாம் . இது ஒரு விடயத்தை சொல்லி,வரலாற்றை சொல்லி தானே தமிழ் தமிழ் என்கிறார்கள் .அதை விட இது எவளவோ மேல்.

தமிழ் உணர்வை தூண்டி விட்டு பணம் சம்பாதிக்க முடியும் என்றால் அதில் எனக்கு பெருமையாக இருக்கிறது .தமிழ் உழைப்பது பெருமை தானே ! அவர் பணம் பண்ணுவது ,கருணாநிதி குடும்பம் பணம் பண்ணுவது ,சூர்யா விஜய் சண்டை ,வரலாறு தவறு ,முருகதாஸ் தவறு என்பதை விட்டு சொன்ன கருத்து புரிந்து கொண்டீர்களா முதல் ? அதற்காக செயற்படுவீர்களா ? .ஒருவருமே செய்யாத போது ஒருவன் செய்ததை மட்டம் தட்டி ,அன்றோடு மறந்து விடுவீர்கள் தானே .

போகி என்ற பெயரில் எங்கள் முக்கிய குறிப்புகளை அழித்தார்கள் என்பது முற்றிலும் உண்மை . எம் முன்னோர்களை சூரன் என்று ,நரகாசூரன் அளித்த நாளை எம்மையே கொண்டாட வைத்துள்ளார்கள் புத்திசாலி ஆரியர்கள் .இன்றும் பிராமணனுக்கு அடிமையாகி பணத்தை சும்மா இறைக்கிறோம் தானே ? தமிழனுக்கு எந்த மதமும் இருந்திருக்கவில்லை ,அவன் கண்டுபிடித்த விடயங்களை ,பொக்கிஷங்களை படையெடுப்புகள் மூலம் பின்னர் எம்மை ஆண்டவர்கள் அழித்தார்கள் என்பது உண்மை . சித்தர்கள் புத்தகங்களில் நவீன விஞ்ஞானம் இருப்பது போன்ற விடயங்கள் எமக்கு தெரியும் .ஆனால் சிலபஸ் படி படித்தோம் ,வேலை கிடைத்தது .பணம் பணம் என்று ஓடினோம் என்று போய்க்கொண்டே இருப்போம் . ஏன் இன்னும் அறிவியலுக்கு ஒவ்வாத சித்திரையை புதுவருடமாக நாம் கொண்டாடவில்லையா ??

இதுவரை தமிழ் சினிமா காட்டாத பக்கத்தை தைரியமாக தமிழை நம்பி எடுத்திருக்கிறார் முருகதாஸ் . முதல் நிமிடங்களில் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை காட்டும் போதே ஒரு வித திமிர் தொற்றிக்கொள்கிறது. சூர்யாவின் மிடுக்கான தோற்றம் ஒரு வீரனை முன்னிறுத்தியது . போதி தர்மன் பற்றிய முதல் 15 நிமிடங்களுக்கு மிகவும் உழைத்திருக்கிறார்கள் . இதே காட்சி சீனப்படத்தில் வந்திருந்தால் சங் சாங் என்று பேசியிருந்தாலும் பார்த்துவிட்டு இப்படி எல்லாம் தமிழ்ல எடுக்க மாட்டாங்களே என்று திட்டு வேறு . அதே தமிழில் எடுத்தால் ?

படத்தில் வரும் நோக்கு வர்மம் என்பது சித்தர்கள் பற்றி வாசித்தவர்களுக்கு தெரியும் . நோக்கு வர்மம் மட்டும் அல்ல .சித்தர்கள் பல கலைகள் பலருக்கு தெரியாது என்பது நம் துரதிஷ்டம் . ஒன்றுமே தெரியாதவிடத்து இப்படியொன்று இருக்கிறது,தமிழனின் பொக்கிஷங்களில் விஞ்ஞானம் இருக்கிறது என்று நினைவு படுத்தியது முருகதாசின் குற்றமாக இருக்கலாம் .

எம் முன்னோர்களை வணங்காமல் அவர்களை விஞ்ஞானிகளாக பாருங்கள் என்று ஒரு செய்தி வருகிறது . இது எத்தனை பேருக்கு புரிந்திருக்குமோ தெரியவில்லை .

இந்த திரைப்படத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஒரே பதில் சொல்லலாம் . "நம்மை இங்கு நாமே தொலைத்தோம் " . நிச்சயம் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் . பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி விடாதீர்கள்

12 கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்(படங்கள் இணைப்பு) 0 வயதான


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இந்த திருமணமோ ஒரு விந்தையானதாக மிளிர்கிறது. அவரவர் நிலையில் அவரவர் செய்வது சரி என்று ஓர் நீதி உண்டு. இத்தகையதொரு நிகழ்வு அஸ்ஸாமில் நடந்துள்ளது.



வாக்களர் பட்டியலின்படி இவருக்கு வயது 116. ஆனால், அவர் தனக்குச் சரியான வயது 120 என்று சொல்கின்றார். இரண்டு புதல்வர்கள், நான்கு புதல்விகள், பேரன், பேத்திகள் ஆகியோரைச் சேர்த்து இவரது குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 122.

SALIMA KHATUN என்ற பெயருடைய முதல் மனைவி 2005-ல் இறந்து விட்டார். இறந்த பெண்ணின் கணவரும் தலைப்பில் குறிப்பிட்டவருமான 120 வாலிபருக்கு ஆறு ஆண்டுகளுக்குப்பின் மறுமணம் செய்துகொள்ளும் ஆசை ஏற்பட்டது. மணமகள் கிடைப்பது மிகவும் கடினமானதொரு செயலாகவே இருந்தது.

ஒருவாறாகத் திரிபுராவின் வடக்கே உள்ள FOOLBARI கிராமத்தில் 60 வயதுடைய SAMOI BIBI என்னும் பெயருடைய மணமகள் கிடைத்தார். அவர் கணவரை இழந்தவர். வாரிசுகள் எவரும் இல்லாதவர். பின்னர் என்ன? கல்யாணம்தான்.

500 விருந்தினர்கள் முன்னிலையில், SATGHORI-ஐச் சேர்ந்த ஹாஜி அப்துல் நூர் மணமக்களிடம் திருமணத்திற்குச் சம்மதமா என்று கேட்டுச் சம்மதத்தையும் பெற்றுத் திருமணத்தை நடத்திவைக்கின்றார். அவர்கள் மொழியில் KUBOOL என்று கேட்டால் சம்மதமா என்று பொருளாம்.

பசியின் காரணமாக பல மைல் தூரம் மலை ஏறிய டைனோசர்கள்(வீடியோ இணைப்பு)


அதிக பசியின் காரணமாக டைனோசர்கள் பல மைல் தூரம் மலை ஏறியிருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.





உலகில் 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உயிரினம் டைனோசர். 16 கோடி ஆண்டுகள் உயிர் வாழ்ந்த இந்த இனம் ஆறரை கோடி ஆண்டுகள் முன்பு அழிந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உலகின் பல பகுதிகளிலும் நடக்கும் தொல்பொருள் ஆராய்ச்சிகளின் போது டைனோசர்களின் படிமங்கள், எலும்புகள், பற்கள் போன்றவை கிடைத்து வருகின்றன.

அமெரிக்காவின் உடா மாநில அருங்காட்சியகத்தில் டைனோசர்களின் பற்கள், எலும்புகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய ஆய்வின் போது கிடைத்த பற்களின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் ஹென்றி பிரிக் கூறியதாவது: டைனோசர் வாழ்ந்த காலம் ஜுராசிக் காலம் எனப்படுகிறது. இந்த கால கட்டத்தில் தாவரங்கள் தின்னும் டைனோசர்கள் பெரும்பாலும் மலையடிவாரங்களிலேயே வாழ்ந்திருக்கின்றன.

அங்கு உணவு கிடைக்காத சூழ்நிலையில் உணவு, தண்ணீர் தேடி மலைகளில் பல மைல் தூரம் டைனோசர்கள் அலைந்துள்ளன. டைனோசர்களின் 32 பற்களை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் சுதந்திரமான விசாரணை நடத்த பிரித்தானியப் பிரதமர் அழுத்தம்


போர்க்குற்றங்கள் தொடர்பாக பொருத்தமான விசாரணைகள் நடத்த சிறிலங்காவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்றைய அமர்வில் உரையாற் றியபோதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

“கொமன்வெல்த் உலகில் மிகப் பெரியதொரு அமைப்பு. உலகின் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகையையும், 6 கண்டங்களின் 54 நாடுகளையும் கொண்ட மிகப்பெரிய வலையமைப்பு.

ஆனால் இந்த வலையமைப்புக்கு பலமான பெறுமானம் இருக்க வேண்டும்.

மதிப்புவாய்ந்தவர்களின் குழுவின் அறிக்கை இந்தப் பெறுமானத்தை குறிப்பாக உரிமைகள், சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அமையும் என்று நம்புகிறேன்.இது மிகவும் முக்கியமானது.

சிறிலங்கா அரசின் மனிதஉரிமை நிலைமை மிகவும் உன்னிப்பாக ஆராயப்பட்டு வருகிறது.

ஏனென்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அங்கு கொமன்வெல்த் மாநாடு நடக்கப் போகிறது.

தமிழ்ப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவின் ஆயுதப்படைகளால் போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

என்ன நடந்தது- என்னென்ன போர்க்குற்றங்கள் இடம்பெற்றன- யார் பொறுப்பு என்று கண்டறிய பொருத்தமானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.“ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய தினத்தில் வியாழன் கிரகத்தை காணலாம்(வீடியோ இணைப்பு)


சூரியனைச் சுற்றி வர பூமிக்கு ஆகும் காலம் 365 நாட்கள். பூமியில் இருந்து 59.2 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றி வர 393 நாட்களை எடுத்துக்கொள்கிறது.





இது வேகமாக சுற்றும் மிகப் பெரிய கிரகம் ஆகும். பூமியைப் போலவே ஒரு நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும் வியாழன், இன்று பூமி, சூரியன் ஆகியற்றுடன் இன்று முதல் நேர் கோட்டில் பூமிக்கு மிகவும் அருகில் வருகிறது.



எனவே, இன்று முதல் மாலை சூரியன் மறைந்ததும், கிழக்கு வானில் மிகுந்த ஒளியுடன் வியாழன் திகழ்வதைப் பார்க்கலாம். இதன் பிறகு இப்படிபட்ட காட்சியை 2022இல் தான் பார்க்க முடியும்.

அந்த அளவிற்கு வியாழன் பிரகாசமாக காட்சியளிக்கும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இவ்வாறு பூமிக்கு மிக நெருக்கமாக வியாழன் காட்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நெருப்பு மற்றும் கத்தியில் விளையாடும் மனிதன்(வீடியோ இணைப்பு)


 
பொதுவாக நெருப்பு என்றால் சுடும் என்பது எல்லோருக்கு தெரியும்.தொலைக்காட்சியில் ஒளிப்பாகும் Got Talent என்னும் நிகழ்வில் ஒரு இளைஞர் பங்குபற்றி செய்யும் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தியுள்ளது.







James Loughron என்ற இளைஞரே இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். நெருப்பினை தன் வாயினுள் செலுத்தி விழுக்குகின்றார். 2 1/2 நீளமுள்ள வாளினை முழுவதும் தன் வாயினுள் செலுத்தி பிரமிக்க வைக்கின்றார். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு வாளும், நெருப்பும் விளையாட்டு பொருட்களாக தெரிகிறது என்று தான் நினைக்கக்கூடும். இந்த காணொலியில் காணலாம்.

ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!!


ஏழாம் அறிவு படத்தில் சிறப்பாக நடித்ததாக மகள் ஸ்ருதியை கமல் ஹாஸனும், கவுதமியும் பாராட்டியுள்ளனர்.

லக் என்ற இந்தி படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஸ்ருதி ஹாஸன். பின்னர் தெலுங்குப் படங்களிலும் நடித்தார். இப்போது அவர் தமிழில் சூர்யா ஜோடியாக 7 ஆம் அறிவு படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்ருதி நடித்த முதல் தமிழ் படம் என்பதால் தந்தை கமல் ஆர்வமாக ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் போய் அப்படத்தைப் பார்த்தார். ஸ்ருதி நடித்த ஒவ்வொரு காட்சியையும் ரசித்தார். ஸ்ருதி நடிப்பு அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனது.

படம் பார்த்து முடிந்ததும் ஸ்ருதியிடம் சிறப்பாக நடித்து இருப்பதாக வெகுவாக பாராட்டித் தள்ளினாராம் கமல். நடிகை கவுதமியும் இந்தப் படத்தைப் பார்த்த பின், ஸ்ருதியை பாராட்டினார்.

குஜராத்தில் மாடுகளை ஓட விட்டு மிதிக்கச் செய்யும் வினோத நேர்த்திக்கடன்!


தரையில் படுத்துக்கொண்டு மாடுகளை ஓடவிட்டு மிதிக்க செய்யும், வினோத நேர்த்திக் கடனை குஜராத் மாநில பழங்குடியினர் மேற்கொண்டனர்.

குஜராத்தின் தஹோத் மாவட்டம் கர்பதா கிராம மக்கள், தங்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக "காய் கவுரி விரதம்' மேற்கொள்கின்றனர்.

தங்கள் குல தெய்வமான பாபா கோடா, சாமுண்டா ஆகிய தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு, அலங்கரிக்கப்பட்ட மாடுகளை தங்கள் மீது மிதிக்க செய்யும் சடங்கை செய்தனர்.

இதன் மூலம் மாடுகளுக்கு தாங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாக இந்தக் கிராம மக்கள் நம்புகின்றனர்.

இந்த விழாவை பார்ப்பதற்காக சுற்றியுள்ள கிராம மக்களும் இந்த கிராமத்தில் கூடினர். நேர்த்திக் கடனை செலுத்துபவர்கள் தரையில் படுத்துக்கொள்ள, மாடுகள் வரிசையாக இவர்களை மிதித்தப்படி ஓடுகின்றன.

இந்த நேர்த்தி கடனை செய்தவர்களுக்கு மாடு மிதித்ததில் எந்த காயமும் ஏற்படவில்லை.

தெய்வத் திருமகள் திரைப்படம் திருடப்பட்ட இடம் தெரியுமா? (வீடியோ இணைப்பு)


ஆங்கிலத்தில் I AM SAM என்ற திரைப்படைத்தை நகல் எடுத்து படமாக்கப்பட்டதுதான் தெய்வத்திருமகள்.

இந்தத் திரைப்படத்தை நடிப்பதற்க்காக மூளை வளர்ச்சி குன்றிய வைத்தியசாலையில் வைத்தியாரன தனது மனைவியுடன் அங்கு சென்று நடிக்க கற்றுக் கொண்டாராம் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் விக்ரம்

ஆனால் விக்ரம் வைத்தியசாலையில் சென்று கற்றுக் கொண்டாரா அல்லது இத் திரைப்படத்தைப் பார்த்து தெய்வத்திருமகள் கதாபாத்திரத்தை நடிக்க கற்றுக் கொண்டாரா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.









என் குழந்தையைக் காப்பாற்றுங்கள்! எரியும் கட்டிடத்திலிருந்து குழந்தையைப் போட்ட தாய் கதறல் (வீடியோ இணைப்பு)




இது ஒரு துயரமான சம்பவம். மூன்று வயதுக் குழந்தை ஒன்று எரிந்து கொண்டிருக்கும் கட்டிடத்தில் இருந்து அதன் தாயாரால் யன்னல் வழியே காப்பாற்றப்படும் காட்சி தான் இது.

மூன்று வயதான குழந்தையை கயிற்றில் கட்டி இறக்குகிறார்.

23 வயதான அம்மா தனது ஆறுமாத ஆண் குழந்தையை தீ விபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக யன்னல் வழியாக கீழே போடுகிறார்.

யாராவது எனது குழந்தையைக் காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுக்கிறார்.

தீ அணைப்பு துறையைச் சேர்ந்த ஆண் ஒருவரால் குழந்தை காப்பாற்றப்படுகின்றது

ரஜினியிடம் பாராட்டுப் பெற்ற சூர்யா ஜோதிகா (படங்கள் இணைப்பு)


மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ரஜினி, அதன்பின் வெளியே எங்கும் வராமலே இருந்தார்.



கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பதி பெருமாள் கோவிலுக்கு குடும்பத்தோடு வந்திருந்து எடைக்கு எடை கற்கண்டு செலுத்தினார் ரஜினி. தீபாவளியன்று நுங்கப்பாக்கம் லேக் ஏரியாவில் அமைந்திருக்கும் ஃபோர் பிரேம்ஸ் தியேட்டருக்கு தனது மகள் ஐஸ்வர்யாவுடன் வந்திருந்தார் ரஜினி.

பிற்பகல் மூன்று மணிக்கு அவர் வரப்போவதாக தியேட்டர் நிர்வாகி கல்யாணத்திற்கு தகவல் வர, அவரும் பரபரப்பாக காத்திருந்தார். மிகச் சரியாக மூன்று மணிக்கு காரில் வந்திறங்கிய ரஜினி, அதே துள்ளல் நடையுடன் துடிப்பான ஸ்டைலுடன் தியேட்டருக்குள் சென்றாராம். ரஜினியின் இந்த வருகை '7ஆம் அறிவு' திரைப்படத்தை காண்பதற்காகதான்.

சூப்பர் ஸ்டாரை வரவேற்க படத்தின் நாயகன் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும் காத்திருந்தார்கள். பின்பு படம் முடியும் போது மீண்டும் வந்த இருவரும் ரஜினியின் பாராட்டுதல்களை கேட்டு சந்தோசத்தில் மிகவும் பூரித்து போனார்களாம்

7 பில்லியன் மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிந்துகொள்வதற்கு


உலக மக்கள்தொகையானது ஏழு பில்லியனை நெருங்குகிறது. இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது. பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது இந்த இணைப்பு.



ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள். மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம்.

http://www.bbc.co.uk/news/world-15391515

பூமி சுழலுவதைப் போன்ற அபூர்வ காட்சிகள் வெளியீடு(வீடியோ இணைப்பு)


சர்வதேச விண்வெளி மையம் வடக்கு அமெரிக்காவை குறி வைத்து எடுத்த புகைப்படத்தில் மெய்மறக்கச் செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பூமி சுழலுவதைப் போன்ற காட்சியும் அதில் ஒன்றாகும். சுழற்சியானது நொடிக்கு 225 மைல்களுக்கு மேல் இருக்கிறது.





இதுகுறித்து நாசா கூறுகையில், புகைப்படக் கருவியை வடக்கு நோக்கி வைத்து எடுத்த போது ஆச்சர்யமான வட துருவமானது மினுமினுவென்று மின்னுவதை வீடியோவில் காணலாம் என்றார். விண்வெளி மையமானது மத்திய வடக்கு அமெரிக்காவை நோக்கி படம் எடுத்த போது மேகங்களால் சூழ்ந்த பெனிசுலாவின் மெக்சிகனும் காணப்பட்டது. சிகாகோவும், தெற்கு முனையில் உள்ள லேக் மெக்சிகனும் பில்லியன் ஒளியால் ஒளிர்ந்து கொண்டிருந்ததை வீடியோவில் காணலாம்.



மின்னலும், புயல்காற்றும் மேகங்கிடையே பளீச் சென்று இருந்ததும் வீடியோவில் காணமுடிகிறது. இதே மாதிரி காட்சியானது அட்லாண்டா, ஜார்ஜியா மீது எடுத்த போதும் கிடைத்ததாக ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

வீடியோவின் முடிவில் ப்ளோரிடா பெனிசுலாவைக் காண முடிந்தது. மேலும் பாஹாமஸ் முழுவதும் நீரின் நிழலால் சூழப்பட்டிருந்ததையும் காணலாம். சர்வதேச விண்வெளி ஆய்வு மையமானது 100 பில்லியன் டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளது. 16 நாடுகள் இணைந்து இதனை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பத்து வருடங்களுக்கு மேலாக நடக்கும் இப்பணியானது இந்த வருடம் முடிவடைந்து விடும். விண்வெளி மையத்தில் ஐந்து படுக்கை வசதி கொண்ட வீடுகளும், நிறைய ஆய்வு மையங்களும், தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. இதனைச் சென்றடைய 1.5 பில்லியன் மைல்களுக்கு மேல் பயணம் செய்ய வேண்டும். அதாவது 8 முறை சூரியனுக்கு சென்று வருவதற்கு ஈடாகும்.

காலணிகளால் உருவாக்கிய குரங்கு உருவம்(படங்கள் இணைப்பு)


பிரேஸிலில் ஆச்சரியப்படும் விதமாக மாணவர்கள் பல நூற்றுக் கணக்கான பாதணிகளைக் கொண்டு இராட்சதக் குரங்கொன்றை உருவாக்கியுள்ளார்கள். பலரும் வியக்கும் வகையில் அமைந்த இந்தக் குரங்கினை சாஓபாலோவில் உள்ள மாணவர்களே இந்தப் படைப்பினை உருவாக்கியுள்ளார்கள்.



கடந்த 2010 ஆண்டு நடைபெற்ற மாநாடு ஒன்றிற்காகவே இந்த அதிசயிக்க வைக்கும் குரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. புலோரன்தின் ஹொப்மான் என்ற கலைஞர் இதனை வடிவமைத்துக் கொடுத்ததனால் மாணவர்கள் இதனை நிர்மானித்து முடித்தனர். பிரேஸிலில் பாதரட்சைகள் வணிக சின்னமாக இந்த இராட்சதக் குரங்கு கருதப்படுகின்றது. இந்த உருவத்தை படத்தின் மூலம் காணலாம்.





பேஸ்புக்கின் பிரமாண்ட சேர்வர் பார்ம் : 5ஏக்கர் பரப்பளவில் ஆர்டிக் வட்டப் பகுதியில் அமையவுள்ளது (படங்கள், வீடியோ இணைப்பு)




அதிக பாவனையாளர்களைக் கொண்ட சமூகவலையமைப்பான பேஸ்புக் அதிகரித்து வரும் பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டு பிரமாண்ட 'டேட்டா சென்டர்' ஒன்றினை அமைக்கவுள்ளது.

பேஸ்புக் முதன்முறையாக சேர்வர் பார்ம் ஒன்றினை அமெரிக்காவுக்கு வெளியில் நிர்மாணிக்கவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

சுவீடன் நாட்டின் வட பகுதி நகரான லுலீயாவில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இது அமையவுள்ளது. இதற்கான மொத்த மின்சக்தித் தேவை 120 mw எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இச் சக்தியானது அருகிலுள்ள நீர்த்தேக்கத்தின் மூலம் உற்பத்திசெய்யப்படவுள்ளது.

எதிர்வரும் 2014 ஆம் ஆண்டளவில் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

'சேர்வர் பார்ம்' எனப்படுவது இணைய நிறுவனங்கள் தங்களது தரவுகளை முகாமை செய்யும் சேர்வர்களை ஒரே இடத்தில் பாரியளவில் நிறுவி செயற்படுத்தும் இடம் என இலகுவாக விளக்கமுடியும்.

ஆர்டிக் வட்டப் பகுதியில் இருந்து சுமார் 60 மைல்கள் தொலைவில் உள்ள இவ்விடத்தினை பேஸ்புக் தேர்ந்தெடுக்கப் பிரதான காரணம் குளிர் ஆகும்.

பொதுவாக சேர்வர்களை இலகுவாக வெளிப்பிரதேச வளியைக் கொண்டு குளிர்விக்க முடியுமென்ற காரணத்தினாலேயே குளிர்ப்பிரதேசங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இதன் காரணமாகவே கூகுளும் பின்லாந்தில் தனது சேர்வர் பார்ம் ஒன்றினை அமைத்தது, மேலும் மைரோசொப்ட்டும் சைபீரியாவில் சேர்வர் பார்ம் ஒன்றினை ஆரம்பிக்கும் திட்டத்தினைக் கொண்டிருந்த போதிலும் அதனைப் பின்னர் கைவிட்டது.

கூகுள் முதல் பேஸ்புக் வரையான மிகப்பெரிய இணைய நிறுவனங்களின் முதுகெலும்பு இத்தகைய 'சேர்வர் பார்ம்கள்' என்பது குறிப்பிடத்தக்கது.

யூரோ மக்களின் மிதக்கும் வீடுகள்(படங்கள் இணைப்பு)


பேறு நாட்டில் உள்ள ஏரியில் யூரோ மக்கள் மிதக்கும் வீடுகளை உருவாக்கியுள்ளதால் இத்தீவு மிதக்கும் தீவுகள் என அழைக்கின்றனர். திதிகாக்கா என்றழைக்கப்படும் இவ்வேரி வணிக நடவடிக்கைகளுக்காக உபயோகிக்கப்படுகின்றது. தரைமட்டத்திலிருந்து அதிஉயர்ந்த இடத்தில் அமைந்திருக்கிற இவ்வேரி 3811 மீற்றர் உயரத்தில் உள்ளது.



இங்கே வாழும் மக்கள் இவ்வேரியின் அருகே உள்ள மர இழைகளால் தமது வீடுகளை அமைத்து வாழ்கின்றனர். இத்தகைய மரநார்களை டொட்டாரா என்றழைக்கப்படும். இவை நீரில் மிதந்து கொண்டிருக்கும் போது இவை நகர்ந்து போகாமல் நிலத்துடன் தொடர்புடையவாறு பெரிய தடிகளால் இணைத்து கட்டப்பட்டிருக்கும்.



இவ்வேரியில் இத்தகைய மிதக்கும் வீடுகள் 42வரை காணப்படுகின்றன. இவை மக்களின் கைவண்ணத்தினால் கட்டப்படுகின்றன. இந்த மரநார்கள் விரைவில் நீரினால் பழுதடையக் கூடியதாக இருப்பதால் வருடத்துக்கு மூன்று தடவை புதிதாகக் கட்டப்படுகிறது.









கூந்தல் அழகிகள் என்று இவர்களைத் தான் சொன்னார்களோ? (படம் இணைப்பு)


 
பார்ப்பவர்கள் எல்லோரையும் அடடா! இந்தப் பெரிய நீளம் என வியக்க வைக்கும் கூந்தல்களுடன் நடை பயில்கின்றனர் இப் பெண்கள். பொதுவாகவே பெண்களுகள் அனைவருக்கும் கூந்தல் நீளமாக இருக்க வேண்டும் என்பது சராசரி விருப்பம்.

அதற்காக இப்படியா? வீதியில் உள்ள குப்பைகள் அனைத்தையும் இவர்கள் கூந்தலாலேயே கூட்டுகின்றார்கள் போல இருக்கு. இதை எப்படித்தான் பராமரிக்கின்றார்களோ தெரியவில்லை.

எங்கட பொட்டைகளின்ற தலையில இப்புடி முடி வளர்ந்தால் அதற்குள்ள எத்தனையோ புழுபூச்சிகள் வாழத் தொடங்கி விடும். இதற்குள்ள...?

குழந்தைகளை இலக்கு வைத்திருக்கும் பிரிட்டனின் மோசமான கொலையாளி - இதுவரை 13 பேர் பலி (படம் இணைப்பு)


64 வயது நிரம்பிய சாதாரண வான் ஒட்டுனாரான Robert Black பிரிட்டனின் இளவயது பெண்பிள்ளைகளை குறிவைத்து அடுத்தடுத்து கொலைகளை மேற்கொண்டுள்ளார்.

தனது வானில் கடத்தி பின்னர் ஒதுக்கு புறமான இடமொன்றில் இவ்வாறு கொலைகளை மேற்கொள்வதாக தெரியவருகிறது.

இவரால் கொலை செய்யப்பட்டுள்ள சிறார்களின் பட்டியலையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

# *April Fabb, aged 13, killed in Norfolk in 1969
# *Christine Markham, six, Scunthorpe, Lincolnshire, 1973
# *Mary Boyle, seven, from Ballyshannon, Co Donegal,
# 1977. Her body has never been found;
# *Susanne Lawrence, 14, Essex, 1979;
# *Pamela Hastie, 16, Johnstone, Scotland, 1981;
# *Colette Adam, 16, Keyworth, Nottingham, 1983;
# *Patsy Morris, 14, Feltham, west London, 1990.

கொலை செய்வதற்கு முன்னர் பாலியல் இச்சைகளை தீர்ப்பதாகவும் சில சடலங்களை வீட்டு தோட்டத்தில் புதைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

உலகிலேயே மிகவும் தட்டையான கார்(படங்கள் இணைப்பு)


உலகின் மிக வேகமாக செல்லும் கார் உலகின் நீளமாக கார் உலகின் மிகப்பெரிய கார் என எத்தனையோ விதமான கார்களை பாத்திருப்போம். இவற்றையும் விட ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் கார் வந்திருக்கிறது.

இந்தகார் தான் உலகில் மிகமிக தட்டையான கார் ஆகும். இந்த காரை வழக்கம் போல் நாம் பயணம் செய்யமுடியும். இப்படி பயணம் செய்யும் காரைப் படத்தின் மூலம் காண்போம்.







இரு நிறங்களில் கண்களைக் கொண்ட பூனை(வீடியோ இணைப்பு)


 
பூனை என்றதுமே அதன் கண்களின் நிறம் மஞ்களாக தான் இருக்கும்.
இங்கே உள்ள பூனையின் கண்களைப் பார்த்தால் இரு வேறு வண்ணங்களில் காணப்படுகிறது. இப்படி காணப்படும் பூனைகுட்டி கென்னி கிரேக் என்ற பெயருடன் றியாத் நகரில் இருந்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.







இந்த பூனை நீலநிறத்தில் ஒற்றை கண்ணையும், மஞ்சள் நிறத்தில் ஒரு கண்ணையும் கொண்டுள்ளது. இப்பூனை சவுதியில் உள்ளதாகும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவில் இடம்பெற்ற ‘Little Britain” எனும் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் விருது பெற்ற பூனையின் வயது 2ஆகும்

குளியலைறையில் வழுக்கி விழுந்து தலையில் அடி: மருத்துவமனையில் மனோரமா


நடிகை மனோரமா குளியலறையில் வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனோரமா முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை செய்து கொண்ட பிறகும் வலி குறையாததால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை தரப்பட்டது.

இதையடுத்து அவர் படங்களில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

7 ஆம் அறிவு படத்திற்கு இலங்கையில் தடை? (விமர்சனம் இணைப்பு)


7 ஆம் அறிவு படம் குறித்து வெவ்வேறு அபிப்ராயங்கள் இருந்தாலும், ஏகோபித்த பாராட்டு அப்படத்தில் இடம் பெறும் தமிழன் குறித்த வசனங்களுக்குதான். ஒட்டுமொத்த தியேட்டரும் கைதட்டி ஆர்ப்பரிக்கும் அந்த காட்சிகளில் வசனத்தை ஒப்புக்கு ஒப்பிக்காமல் உணர்ச்சி பிழம்பாக உச்சரித்திருக்கிறார் சூர்யா.

இவ்வளவு பேசிய பின் அந்த படத்தை இலங்கையில் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்குமா? படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க அந்நாட்டு அரசு தடை விதித்திருப்பதாக தகவல்.

புத்தருக்கு இணையானவர் போதிதர்மர் என்ற வசனத்திற்காகவும், திருப்பி அடிக்கணும் என்ற வசனத்திற்காகவும் தடை செய்யப்பட்டிருக்கிறது இப்படம். அதுமட்டுமல்ல, இலங்கையின் கோபத்தை கிளறிய இன்னொரு வசனம், ஒன்பது நாடுகள் ஒன்று சேர்ந்து அடிப்பது வீரமல்ல, துரோகம் என்பது.

மறு ஆய்வுக்குழுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம் படம். அங்கே ஏகப்பட்டு வெட்டுகளுக்கு பிறகு படத்தை அனுமதிப்பார்கள் போல தெரிகிறது. பார்க்கலாம்

7 ஆம் அறிவு விமர்சனம்

'பை பாஸ்' சர்ஜரியே அவசியப்படுகிற அளவுக்கு நெஞ்சில் அறைந்து கொண்டு, 'தமிழன்டா...' என்று சீறும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், அமைதியாக ஒரு பொறியை பற்ற வைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அது தீயாகவும் பற்றலாம். திரியிலேயும் புஸ் ஆகலாம். கோடிக்கணக்கான தமிழர்களின் ஸ்மரணையை பொறுத்த விஷயம் அது. அதே நேரத்தில் சீனாக்காரன் ஒருவனை அழைத்து வந்து, அதே சீனாக்கார்களை கெட்ட பசங்க என்று படம் எடுக்கவும் ஒரு திறமை வேண்டும். (தமிழன்டா!)

எடுத்த எடுப்பிலேயே போதி தர்மரின் வரலாற்றை டாகுமென்ட்ரி ஸ்டைலில் சொல்லிவிடுகிறார் டைரக்டர் முருகதாஸ். காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்கு போகும் பல்லவ நாட்டு இளவரசன் சூர்யா, போகிற இடத்தில் காட்டும் முரட்டு மோதலும் முயல்குட்டி சாந்தமும் அவ்வளவு ஈர்ப்பு. வினோத நோயால் சாகக் கிடக்கிற குழந்தையை ஈவிரக்கமில்லாமல் ஓரிடத்தில் போட்டு விட்டு வரும் சீனர்களிடமிருந்து குழந்தையை காப்பாற்றி தாயிடம் ஒப்படைக்கிற அந்த காட்சி, நெஞ்சை உலுக்கும் நெகிழ்ச்சி. அவர்களுக்கு வர்மக்கலையையும், மருத்துவ முறைகளையும் கற்றுத் தரும் போதி தர்மரை விஷம் வைத்து கொல்கிறார்கள் மக்கள். ஏனாம்? அந்த மண்ணில் அவர் புதைக்கப்பட்டால் தங்களை நோயே அண்டாது என்ற நம்பிக்கை. அது தெரிந்தும் புன்னகையோடு செத்துப் போகிற அவரை நினைத்தால் புல்லரிக்கிறது.

இன்னும் கொஞ்ச நேரம் காட்ட மாட்டார்களா என்று ஏங்குகிற நேரத்தில் பொசுக்கென்று கத்தரியை போட்டு நிகழ்காலத்திற்கு வருகிறார்கள். அப்புறம் எல்லாமே தமிழ்சினிமாவின் ஃபார்முலாவுக்குள் சிக்கிக் கொள்கிறது. கவனிக்காமல் போன வில்லன் 'இப்ப திரும்பி வந்து பார்ப்பான் பாரேன்...' என உள் மனசு நினைக்க, அப்படியே வருகிறான் அவன். 'லிப்ட் திறக்கும். அவன்தான் வரப்போகிறான்' என்றால் அதேதான் நடக்கிறது. இப்படி ரசிகர்களின் யூகங்களை பொய்யாக்காமல் நகர்கிறது மொத்த கதையும், அந்த க்ளைமாக்ஸ் உட்பட.

போதிதர்மரின் வம்சா வழியில் பிறந்தவர்களிடத்திலும் அவரது டி.என்.ஏ இருக்கும். அதைக்கொண்டு மீண்டும் போதி தர்மரின் திறமைகளை கொண்டு வரலாம் என்று நம்பும் ஆராய்ச்சி மாணவி ஸ்ருதிஹாசன் அதற்கான முயற்சியில் ஈடுபட, அவரை கொல்ல வருகிறான் சீனா வில்லன். இந்த ஆராய்ச்சி பற்றி இந்தியாவிலிருந்தே 'போட்டுக் கொடுக்கிறார்' புரபசர் ஒருவர். ஸ்ருதியை காப்பாற்ற துடிக்கும் போதி தர்மரின் வாரிசான சூர்யாவுக்கும் வில்லன் டாங்கேவுக்கும் (ஜானி) நடக்கிற யுத்தமும், அதற்கான முன்னேற்பாடுகளும்தான் மிச்ச மீதி.

ஆறாம் நு£ற்றாண்டு போதி தர்மரின் பிம்பத்திற்கு அவ்வளவு தத்ரூபமாக உயிர் கொடுத்திருக்கிறார் சூர்யா. ஆனால் சர்க்கஸ் சூர்யாவுக்கு அத்தனை வேலையில்லை. அவரே செய்வதாக சிலாகிக்கப்பட்ட சில சர்க்கஸ் காட்சிகளில் கூட கிராபிக்ஸ் நிரப்பல்கள்(?) தமிழனின் வீரம் குறித்து அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டர் அதிர்கிறது. 'ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு தமிழனை தாக்குறது வீரம் இல்ல. இலங்கையில் நடந்தது துரோகம். நிச்சயம் திருப்பி அடிக்கணும்' என்று சீறும் போது தமிழனின் டி.என்.ஏக்கள் அத்தனையும் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ளும். இப்படி ஒரு கதைக்காகவும் வசனங்களுக்காகவும் கோடிகளை அள்ளி இறைத்த தயாரிப்பாளர் உதயநிதிக்கும் மனசார பாராட்டுகள்.

சட்டை பட்டனை கூட கழற்றவில்லை. ஆனால் தியேட்டரையே ஆக்ஷன் மூடுக்கு கொண்டு வருகிறார் அந்த ஹாலிவுட் நடிகர் ஜானி. 'நோக்கு வர்மம்' மூலம் அவர் சிட்டியையே துவம்சம் ஆக்குவதும், ஒரு போலீஸ் ஸ்டேஷனையே அந்தல சிந்தலயாக்குவதும் கூட ஓ.கே. ஒரு மீடியா கூடவா இதைப்பற்றி விவாதிக்காது? அப்படி காட்டப்படுகிற ஒன்றிரண்டு நியூஸ் விஷுவல்களும் இடம் தப்பி அமைந்திருக்கிறது.

ஜானியின் பார்வையும் நடையும் எவ்வித அலட்டலும் இல்லாத சேசிங்கும் வில்லன் என்கிற கோட்பாட்டையெல்லாம் மறந்து ரசிக்க வைக்கிறது.

ஒரே ஒரு தெருநாய்க்கு செலுத்தப்படும் விஷக்கிருமி எப்படி அத்தனை மனித உயிர்களை பலிவாங்குகிற அளவுக்கு பரவுகிறது என்பதை சட் சட்டென்று புரிய வைக்கிற அந்த விஷுவல் காட்சிகளுக்காக முருகதாசுக்கு ஒரு சபாஷ்.

ஆராய்ச்சி மாணவி என்கிற பனங்காயை சுமந்த பரிதாபக் குருவியாக ஸ்ருதிஹாசன். அதற்கு மேல் என்ன சொல்வது?

ஹாரிஸ் ஜெயராஜின் 'முன்னந்தி சாரல் நீ' மட்டும் அழகான மெலடி. அடிக்கடி வரும் மற்ற பாடல்கள் குட்டி குட்டி இடைவேளைகள். பீட்டர் ஹெய்னின் சண்டை பயிற்சி நிஜமாகவே பிரமிப்பு. இந்த கதை இங்குதான் ஆரம்பித்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது ஆன்ட்டனியின் எடிட்டிங்.

ஏழாம் அறிவு, யாருக்கும் எட்டாத துணிவு...! அந்த வகையில் முருகதாஸ் டீமுக்கு ஒரு சபாஷ்.

சர்வதேச நீதிமன்றில் சரணடைவதற்கு விமானம் கோருகிறார் கடாபியின் மகன்


லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் மகன்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தன்னை லிபியாவின் தென் பகுதியிலுள்ள பாலைவனத்திலிருந்து வெளியேற்றுவதற்காக விமானமொன்று வேண்டும் எனவும் கேட்டுள்ளதாக லிபிய இடைக்கால கவுன்ஸிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேணல் கடாபி கடந்தவாரம் கொல்லப்பட்ட பின்னர் அவரின் புதல்வர்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம், லிபிய கிளர்ச்சிப் படையினரிடமிருந்து தப்பியோடிக்கொண்டிருக்கிறார். கிளர்ச்சியாளர்களின் கைகளில் அகப்படாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐ.சி.சி.) சரணடைவதற்கு அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், லிபியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் அப்துல்லா அல் செனூஸி சகிதம் தான் சரணடையத் தயாரென சயீவ் அல் இஸ்லாம் தெரிவித்திருப்பதாக இடைக்கால கவுன்ஸில் பேச்சாளர் கூறினார்.

அல் இஸ்லாமும் அல் செனூஸியும் கைது செய்யப்பட வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்கத்கது. கடந்த பெப்ரவரி மாதம் கிளர்ச்சியின்பொது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் புரிந்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றுக்கு தன்னை கொண்டு செல்வதில் மூன்றாம் நாடொன்றின் (பெரும்பாலும் அல்ஜீரியா அல்லது டியூனிஷியா) பங்களிப்பு வேண்டுமென சயீவ் அல் இஸ்லாம் விரும்புவதாக லிபிய இடைக்கால கவுன்ஸில் வட்டாரமொன்று தெரிவித்துள்ளது. தனக்கு ஒரு விமானம் வேண்டும் எனவும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் விரும்புகிறார் என அவ்வட்டாரம் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எனினும் கடாபியின் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச சட்டத்தரணியொருவர் இடைக்கால கவுன்ஸிலின் தகவலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளை சயீவ் அல் இஸ்லாம் சரணடைய முன்வந்தாக தெரிவிக்கப்படும் செய்திகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கும் அவர் மறுத்துள்ளார் எனவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

சயீல் அல் இஸ்லாமின் இருப்பிடங்கள், முயற்சிகள் என்பன செய்மதி தொலைபேசி அழைப்புகள் மூலம் கண்காணிக்கப்படுவதாக அவ்வட்டாரம் கூறியுள்ளது.

39 வயதான சயீவ் அல் இஸ்லாம் லண்டனில் கல்வி கற்றவர். கேணல் கடாபியின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட அவர் மேற்குல ஆய்வாளர்களால் மறுசீரமைப்பாளர் எனக் கருதப்பட்டார். ஆனால் கிளர்ச்சியாளர்கள் தொடர்பாக சயீப் தெரிவித்த கருத்துகள் அவர் பற்றிய விம்பத்தை மாற்றின.

இந்தியாவின் பணக்கார பெண் சாவித்ரி ஜிந்தால்:


போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பணக்கார இந்தியர்கள் பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ள சாவித்ரி ஜிந்தால் தான் இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆவார். முகேஷ் அம்பானி முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

பணக்கார இந்தியர்கள் பட்டியலை அமெரிக்காவின் முன்னணி பப்ளிஷிங் மற்றும் மீடியா நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் தொடர்ந்து 4வது முறையாக முதல் இடத்தில் உள்ளார் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி. அவரது சொத்து மதிப்பு 22.6 பில்லியன் டாலர். ஆனால் அவரது தம்பி அனில் அம்பானி 10வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

19.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள ஸ்டீல் நிறுவன அதிபர் லக்ஷ்மி மிட்டல் இரண்டாவது இடத்தில் உள்ளார். விப்ரோ நிறுவனர் ஆசிம் பிரேம்ஜி 3வது இடத்திலும், 9.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள சாவித்ரி ஜிந்தால் 5வது இடத்திலும் உள்ளனர். இன்றைய தேதிக்கு இந்தியாவின் பணக்காரப் பெண் சாவித்ரி ஜிந்தால் தான்.

இந்த பணக்கார பட்டியிலில் 14 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளன. இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ராகுல் பாட்டியா மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் பெயர்கள் முதன்முறையாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இந்த பட்டியிலில் இருந்த வினோத் கோயன்கா மற்றும் ஷாஹித் பால்வா ஆகியோரின் பெயர்கள் தற்போது இல்லை. அவர்கள் இருவரும் 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கி நிலநடுக்கம்: இரண்டு நாட்களுக்கு பின் குழந்தை உயிருடன் மீட்பு(வீடியோ இணைப்பு)


துருக்கியில் கடந்த வாரம் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் துருக்கியின் கிழக்குப்பகுதியில் கடும் சேதம் அடைந்தது. வேன் நகரில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடக்கிறது.





ஆயிரக்கணக்கானோர் இதில் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை 366 உடல்கள் மீட்கப்பட்டன. 1,301 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.





துருக்கியின் எர்சிஸ் மாவட்டத்தில் பிறந்து 3 வாரமே ஆன பச்சிளங் குழந்தை நில நடுக்கம் ஏற்பட்ட 2 நாட்கள் கழித்து இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது. பெற்றோரை இழந்த அந்த குழந்தையை நிவாரண முகாமில் வைத்து டாக்டர்கள் கவனித்து வருகிறார்கள்.

ஈரான் எல்லையில் உள்ள 75 ஆயிரம் மக்கள் வசித்த நகரில் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் தரைமட்டமானது. அடுக்குமாடி குடியிருப்புகளும் இடிந்தது. இதில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும். மீட்பு பணிக்கு வெளி நாடுகளின் உதவி தேவையில்லை என்று துருக்கி அரசு மறுத்துவிட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் சப்ளை செய்வதில் 26 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மீட்பு வாகனங்கள் எந்திரங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 3 ஆயிரம் வீரர்களும், 355 என்ஜினீயரிங் வாகனங்களும் ஈடுபட்டுள்ளன. 100 ஆம்புலன்சுகள் அவசர சிகிச்சை உதவிக்கு தயார் நிலையில் உள்ளது.

மீனை பிடித்து உண்ணும் பாம்பு(வீடியோ இணைப்பு)


பாம்பு என்றால் தவளையை தான் பிடித்து உண்ணும். இவ்வாறு உண்பதை சிலரும் பாத்திருப்பார்கள். இங்கு ஒரு பாம்பு கடற்கரைக்கு சென்று கடலில் உள்ள மீனைப் பிடித்து உண்கிறது. பாம்பு கடலினுள் சென்று மீனைப் பிடித்து வந்த நிலையை படத்தில் காணலாம்.



குரங்கின் செயலின் ஈடுபடும் நாய்(வீடியோ இணைப்பு)


பொதுவாக நாய்களுக்கு தன்னை வளர்க்கும் வீட்டின் நபர்களோடு விளையாடுவது என்பது ரொம்பவே பிடிக்கும். இந்த நாயின் சொந்தக்காரர் தனது நாயை குரங்கைப் போல் மாற்றுகிறார். இவர் தடியை வீச அதை எடுக்கின்றது இந்த நாய்க் குட்டி.





மேலும் அவர் அத்தடியை மரம் ஒன்றின் மீது வீசி விடுகின்றார்.தடி மரத்தில் தொங்கி விடுகின்றது. அத்தடியை மரத்தில் ஏறி மீட்கின்றது நாய். மரம் சிறிய மரம்தான். ஆனால் நாய் ஒன்று மரத்தில் ஏறுவது வியப்பிற்குரிய விடயம் என்பதை காணொலியில் காண்பொம்.

பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடிய கிராமம்


வவ்வால்களுக்காக பட்டாசு இல்லாத தீபாவளியை கிராம மக்கள் கொண்டாடினர்.தீபாவளி பண்டிகையென்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது விதவிதமான பட்டாசுகள். ஆனால், புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு அருகில் தமிழக பகுதியைச்சேர்ந்த கழுப்பெரும்பாக்கம் கிராம மக்கள், தீபாவளி சமயத்தில் ஊருக்குள் பட்டாசுகளை நெருங்க விடுவதில்லை.



கழுப்பெரும்பாக்கம் ஆலமரத்தில் ஊருக்குள் விருந்தாளியாக தங்கியுள்ள பழந்திண்ணி வவ்வால்களே கிராம மக்களின் இந்த தியாகத்திற்குக் காரணம். இந்த பழந்திண்ணி வவ்வல்களுக்காக தான் கடந்த 5 தலைமுறையாக இந்த கிராம மக்கள் பட்டாசுகள் வெடிக்காமல் சத்தமில்லாத தீபாவளியை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.

இரவில் உணவு வேட்டை நடத்திவிட்டு பகலில் மரக்கிளைகளில் தொங்கியப்படி ஓய்வு எடுக்கும் நேரத்தில் பட்டாசுகள் வெடித்தால் பழந்திண்ணி வவ்வால்கள் கலைந்து சென்றுவிடும் என்பதால் யாரும் வெடிப்பதில்லை.தீபாவளி பண்டிகை என்றில்லாமல் பல காலமாகவே இங்கு பட்டாசுகள் வெடிப்பதில்லை.

கிராமத்தில் திருமணம், காது குத்தல், ஊர் திருவிழா என பொது விஷேச நிகழ்ச்சிகள் களைக்கட்டினால் கூட பட்டாசு சத்ததைக் கேட்க முடியாது. இப்பகுதிகளில் பட்டாசு புகை, நெடி கூட அண்ட விடாமல் பல ஆண்டுகளாக கவனத்துடன் பாதுகாத்து பாராமரித்து வருகின்றனர்.

வழக்கம்போல, இந்தாண்டு தீபாவளி பண்டிகையான நேற்றும் இந்த கிராமத்தில் மக்கள் பட்டாசுக்களை வெடிக்கவில்லை. மற்றப்படி இனிப்புகள் செய்து, புத்தாடைகள் அமைதியாக தீபாவளியைக் கொண்டாடினர். இந்த ஊர் மக்களுக்குப் பழந்திண்ணி வவ்வால்கள் தான் செல்ல குழந்தைகளாக விளங்குகின்றன.

மரத்திற்கு அடியில் வவ்வால்கள் அடிப்பட்டு கீழே விழுந்து கிடப்பதை யார் கண்டாலும் அடுத்த நிமிடமே அக்கறையுடன் முதலுதவி சிகிச்சை கொடுத்து மீண்டும் மரக்கிளையில் ஏற்றிவிடுகின்றனர். இறந்துவிட்டால் சில நிமிட மவுன அஞ்சலிக்குப்பின் மண்ணில் புதைத்துவிடுகின்றனர்.

எக்காரணத்தைக் கொண்டும் வேட்டையாடுபவர்களை ஊருக்குள் நுழைய விடுவதே கிடையாது. மனிதனுக்கு மனிதனே மனிதநேயம் காட்ட தவறும் இந்த உலகில், வவ்வால்கள் மீது பாசம் வைத்து கடந்த 5 தலைமுறைகளாக பட்டாசுகளுக்கு "குட்-பை' சொல்லி வரும் கழுப்பெரும்பாக்கம் கிராம மக்களின் உயரிய பண்பு வியக்க வைக்கிறது.

6 அறிவு மக்களின் துன்பத்தை 7 ஆம் அறிவுப் பாடலுடன் ஒப்பிடும் காணொளி (வீடியோ இணைப்பு)




வன்னி மக்களின் சோகம் ஒரு பெரிய வடுவாக மாறியுள்ளது. அதனை யாராலும் மறக்க முடியாத நிலையில் எக் காணொளிகளையோ அல்லது புகைப்படங்களையோ பார்க்கும் போது அந்த சோகம் நிறைந்த நாட்கள் கண்களில் ஊசலாடும்.

அந்த வகையில்தான் 7 ஆம் அறிவுப் படப் பாடலுக்கு வன்னி மக்கள் பட்ட துன்பங்கள் காணொளியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

ரா வன் படத்தில் நம்ம சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந் வரும் காட்சி (வீடியோ இணைப்பு)


தமிழகத்திலும் திரையிடப்பட்ட சாருக்கான் தயாரித்து நடித்த ரா வன் திரைப்படத்தில் நம்ம ஊரு சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ஒரேயோரு காட்சியில் நடித்திருந்தார். அவர் நடித்த காட்சிகள் நம்ம ரசிகர்களுக்காக

கேணல் கடாபியை நானே கொன்றேன்: இளைஞன் வாக்குமூலம் (வீடியோ இணைப்பு)




லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் முவம்மர் கடாபியை தானே சுட்டுக் கொன்றதாக லிபிய புரட்சிப் படையைச் சேர்ந்த போராளியொருவர் கூறும் வீடியோவொன்று வெளியாகியுள்ளது.

கடாபி உயிருடன் இருப்பதை தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதால் தான் அவரை கொன்றதாக மேற்படி இளைஞர்கூறியுள்ளார். மேற்படி இளைஞனின் பெயர் விபரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நேட்டோ ஆதரவுகொண்ட புரட்சிப் படையினரால் கைது செய்யப்பட்ட கேணல் கடாபி கொல்லப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என லிபிய இடைக்கால அரசாங்கம் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த வீடியோ வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"நாம் அவரைப் பிடித்தோம் . நான் அவரின் முகத்தில் தாக்கினேன். போராளிகள் சிலர் அவரை அப்பால் கொண்டு செல்ல முயன்றனர். அப்போதுதான் நான் அவரை சுட்டேன். இரு தடவை தலையிலும் நெஞ்சிலும் சுட்டேன்'" என அந்த இளைஞர் வீடியோவில் கூறியுள்ளார்.

தனது கூற்றை நிரூபிப்பதற்காக இரத்தம் தோய்ந்த கடாபியின் ஆடை எனக்கூறப்படும் ஆடையொன்றையும் கடாபியினுடையது எனக்கூறப்படும் தங்க மோதிரமொன்றையும் அவர் வீடியோவில் காண்பித்துள்ளார்.

கடாபியின் சொந்த ஊரான சேர்ட்டே நகரில் கடந்த வியாழனன்று கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட கேணல் கடாபி பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட கேணல் கடாபி தாக்கப்படும் காட்சிகளும் அந்த வீடியோவில் அடங்கியுள்ளன.

இந்த ஆட்டோ செய்த பாவம்தான் என்ன? (படம் இணைப்பு)


ஆட்டோவுக்கு வாய் இருந்தால் ஐயோ என்று கத்தித் தனது வேதனையை வெளிப்படுத்தும். ஆனால் என்ன செய்வது ஆறறிவு படைத்த மிருகம் செய்யும் அத்தனை அநியாயங்களையும் தாங்கிக் கொள்ளும் மனது அதுக்கு ஆண்டவன் கொடுத்திருக்கிறான்.

அதனால்தான் என்னவோ ரெம்ப நல்ல ஆட்டோ என்று சொல்லுறாங்கள்.

நீ வாழ்வதற்கு கையும் காலும் முக்கியமா??.. (வீடியோ இணைப்பு)












இந்தியாவில் சிகப்புவிளக்கு பெண்களை மீட்பதில் ஆர்வம் காட்டும் வெள்ளைக்கார ஆண்மகன்!!.... (வீடியோ இணைப்பு)




விக்கிலீக்ஸ் தளத்தை தற்காலிகமாக மூட முடிவு:


விக்கிலீக்ஸ் இணைய தளத்தை முடக்க சிலர் சதி செய்வதாகக் கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்களை விவரமாக வெளியிட்டு உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இணையதளம் விக்கிலீக்ஸ். இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்சே.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல பரபரப்புத் தகவல்களால் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் பரபப்பு ஏற்பட்டது. இந்த இணைய தளத்துக்கு அரசுகளின் தரப்பில் எதிர்ப்பு கிளம்புவதும் வாடிக்கையானது. விக்கிலீக்ஸின் செயல்பாடுகளை முடக்க பல்வேறு வேலைகள் நடந்தன. நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூட கூறப்பட்டன.

இந்த நிலையில் அசாஞ்சே தனது தளத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எங்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து வங்கிகள் நிதி கையாளுதலை தடைசெய்துள்ளன. எங்களது கடன் அட்டைகள் பரிமாற்றம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது செயல்பாடுகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக எங்களது செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களது தளத்தை முடக்க சிலர் முயற்சிக்கின்றனர். சதி செய்கின்றனர். அதை நாங்கள் முறியடிப்போம். அவதூறுப் பிரசாரத்தை தவிடு பொடியாக்குவோம்” என்றார் அவர்.

விக்கிலீக்ஸ் நிறுவனத்துக்கு நன்கொடை உள்ளிட்டவற்றை தங்களது மாஸ்டர் கார்டு, விசா கார்டு, பேபால் உள்ளிட்டவை மூலம் வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பல முன்னணி வங்கிகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னராகும்போது “பக்கிங்காம் அரண்மனையை ஓட்டல் ஆக மாற்றுவேன்” இளவரசர் சார்லஸ் அறிவிப்பு


 
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சுயசரிதையை பி.பி.சி. ஒளிபரப்பாளர் ஆண்ட்ரூமார் என்பவர் புத்தகமாக எழுதியுள்ளார். அதில், இளவரசர் சார்லஸ் கடந்த 1982-ம் ஆண்டில் ராணி எலிசபெத்தின் அடுத்த வாரிசாக அறிவிக்கப்பட்டார். இருந்தாலும் ராணி எலிசபெத்துக்கும், அவருக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்து வருகிறது.

தற்போது 62 வயதாகும் இளவரசர் சார்லஸ்தான் மன்னராகும் போது பல திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக தற்போது தான் தங்கியிருக்கும் பக்கிங்காம் அரண்மனையில் பணி புரியும் ஊழியர்களை மாற்றி விட்டு புதியவர்களை நியமிக்கிறார். மேலும், பக்கிங்காம் அரண்மனையை அரசு ஆடம்பர ஓட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளார்.

எனவே, அங்கிருந்து வெளியேறி விண்டர் கேஸ்டலில் தங்குகிறார். அது குறித்து தனது குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த தகவல் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

பக்கிங்காம் அரண்மனையை விட்டு வெளியேறி அதை ஓட்டல் ஆக மாற்றுவது குறித்து இளவரசர் சார்லஸ் விரும்பவில்லை. அது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.