Sunday, 29 January 2012

சசிகுமாருடன் இணைந்து பாலுமகேந்திரா இயக்கும் புதிய படம்!


திரைப்படங்களை இயக்குவதோடு நின்றுவிடாமல், நடிப்பு, தயாரிப்பு என இயக்குபவர் சசிகுமார்

'சுப்பிரமணியபுரம்', 'பசங்க', 'போராளி' உள்ளிட்ட படங்கள் இவர் தயாரிப்பில் வெளிவந்துள்ளன. 'பசங்க' திரைப்படம் தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றது.

'போராளி'க்குப் பிறகு சசிகுமார் என்ன படம் தயாரிக்க இருக்கிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் சத்தமில்லாமல் குறைவான பட்ஜெட்டில் புதிய படமொன்றை தயாரித்து வருகிறார் சசிகுமார். படத்தை இயக்குபவர் பாலு மகேந்திரா.

தனுஷ், ப்ரியா மணி நடித்த 'அது ஒரு கனாக்காலம்' படத்தினை அடுத்து இப்படத்தினை இயக்கி வருகிறார் பாலுமகேந்திரா.

படத்தின் பட்ஜெட் மொத்தமே 90 லட்சம் தான். முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வருகிறார்கள். ஒரே ஒரு காட்சிக்கு மட்டுமே சசிகுமார் நடிக்க இருக்கிறார்.

படத்தின் மொத்த கதையுமே சென்னை புறநகரில் உள்ள ஒரு வீட்டில் நடைபெறுவது போல வடிவமைத்து இருக்கிறாராம் பாலு மகேந்திரா.

No comments: