![]() |
| மும்பையில் 24 வயது பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தன்னைத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியாக சம்பவமொன்று மும்பையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நிதி சிங் என்ற அவரது கணவர் சம்டாஷி பணிக்கு புறப்பட்டுச் சென்ற பின்னர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். செல்போன் கமராவை ஒன்செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அவர் தற்கொலை செய்யும் காட்சிகள் அந்த செல்போனில் பதிவாகி உள்ளன. தற்கொலை செய்வதற்கான காரணங்கள் எதையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும் தற்கொலை செய்துகொள்வதற்காக கணவரிடம் அவர் மன்னிப்பு கேட்டு குறிப்பு எழுதி வைத்துள்ளார். மேலும் அடுத்த பிறவியில் அவரது குடும்பத்துக்கும், கணவரின் குடும்பத்துக்கும் பொதுவானவராகப் பிறக்க வேண்டும் என்றும் அவர் கடிதமொன்றை எழுதிவைத்துள்ளதாக தெரிய வருகிறது. அவர் பதிவுசெய்து வைத்துள்ள செல்போன் காட்சி சுமார் 1.33 நிமிடங்கள் உடையதாக இருக்கின்றது. காதல் திருமணம் செய்துகொண்ட மேற்படி இருவரும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இருவரும் 4 மாதங்களுக்கு முன்புதான் அங்கு வாடகைக்கு குடிவந்ததாக மும்பை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். |
Saturday, 1 October 2011
தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த பெண்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment