| இந்த அறையானது ஜேர்மனிய வடிவமைப்பாளர்களான மார்செல் கிறிங்சினாலும் செபஸ்ரியான் முலாசரினாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இவர்கள் ‘கசூலோ’ என அழைக்கின்றனர்.கசூலோவிற்குள் தேவையான அனைத்துமே உள்ளன. கசூலோவை நகர்த்துவதற்கு இருவர் போதும். இது 375 இறாத்தல்கள் நிறை மட்டுமே கொண்டதாகும். இதனை இன்னும் 330 இறாத்தலிற்குக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கசூலோ கடைகளில் இன்னும் கிடைக்கவில்லை. ![]() ![]() ![]() கசூலோவிடம் ஒரு படுக்கையறைக்குத் தேவையான அனைத்தும் உள்ளது.உங்களது தளபாடங்களை மீளப்பொருத்தக் கருவிகள் தேவையில்லை. எல்லாத் தளபாடங்களையும் பொருத்துவதற்கு 7 நிமிடங்களே ஆகுமென இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கசூலோவை உருவாக்கியவர்கள் கூருகையில் தங்களது வடிவமைப்பு, நீங்கள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்கையில் உங்களுக்கு நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்துகின்றது என்கின்றனர். கசூலோவிற்குள் ஒரு படுக்கையறை, மேசை, தட்டுகள், களஞ்சியப்படுத்தும் பெட்டிகள் என்பவை உள்ளன. கசூலோவில் சிறிய இடைவெளிக்குள்ளேயே உங்களது படுக்கையை வைத்துக்கொள்ள முடியும். இவையனைத்தும் ஏழு நிமிடங்களில் தயாராகிவிடுகின்றன. |
Wednesday, 10 August 2011
ஏழு நிமிடங்களில் தயாராகும் அதிசய அறை(வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment