Wednesday, 10 August 2011

பத்திரிகை படித்துக்கொண்டே அதிவேக ரயில் ஓட்டியவர்!

பிரித்தானியாவில் ப்லைமவ்த் நகரில் இருந்து பட்டிங்டொன் நகருக்கு சென்று கொண்டிருந்த அதிவேக ரயிலில் பத்திரிகை படித்தபடி ஓட்டிய ஓட்டுனர் எதேற்சையாக எடுக்கப்பட்ட புகைப்படத்தினால் பிடிபட்டார். ஜிம் கேல்ஸ் எனும் 64 வயது முதியவர் குகை ஒன்றை கடந்து வந்த ரயிலை எதேற்சையாக புகைப்படம் எடுத்த போது மணிக்கு சுமர் 60km/h வேகத்தில் சென்றுகொண்டிருந்த ரயிலில் அதன் ஓட்டுனர் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி ரயில்வே திணைகளத்தில் கேல்ஸ் புகார் தெரிவிக்க, அவ் ஓட்டுனர் உடனடியாக வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். அவ் ஓட்டுனர் ஓட்டுனர் சேவையில் முதல் வகுப்பில் (Class I) கடமையாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: