Friday, 12 August 2011

தேசியத்தலைவர் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு ஏற்பாடு

விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வசிப்பிடத்தை விரைவில் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீடு முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வழியில் பிரதான வீதியில் இருந்து சுமார் 4கிலோ மீற்றர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது.
இந்த வீட்டிற்கு அண்மைக்காலமாக அதிகளவான தென்னிலங்கை சிங்கள மக்கள் வந்து செல்கின்றனர். இதனோடு பெருமளவில் பொலிஸாரும், இராணுவத்தினரும் கூட வந்து செல்கின்றனர்.
வெளியில் சாதாரண வீடுபோன்று தோற்றமளிக்கும் இந்த வீடு எத்தகைய தாக்குதலுக்கும் சிதைவுறாத வகையில் உள்ளே பாதுகாப்பான ஆழமான பதுங்குகுழிகளைக் கொண்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு பதுங்குகுழிப் பாதைக்கும் கனமான இரும்புக் கதவுகள் போடப்பட்டுள்ளது.
இதேவேளை இங்கு பிரபாகரன்தான் தங்கினார் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் அதன் அமைப்பு முறையை அவதானித்த இராணுவத்தினர் இங்கு பிரபாகரன் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

No comments: