| மும்பையில் நடந்த சதிகாரச்செயலில் சிக்கி பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் காயமுற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், குண்டுவெடிப்பு நடந்தது குறித்தும் நேரில் கேட்டறியவும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி புறப்பட்டு சென்றார். |
| ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நபர்களை சந்தித்து நடந்த விவரம் கேட்டறிந்தார். அத்வானி ஜாவேரி பஜார், ஓபேரா ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு. நிருபர்களிடம் அத்வானி பேசுகையில்: மும்பை பயங்கரவாதிகளின் முதன்மைக்குறியாக இருக்கிறது. நுண்ணறிவு பிரிவினரின் கையாலாகத்தனத்தை இது காட்டுகிறது. இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் தொடர்பு உள்ளது. இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பாகிஸ்தானில்தான் செயல்படுகிறது. இந்த அமைப்பிற்கு பாக்கிஸ்தான் உதவி செய்கிறது. மும்பையில் தொடர்ந்து வரும் இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத ஒழிப்பில் அரசின் தவறான கொள்கைகளே காரணம். இந்த கொள்கையை நீடிக்கும் பட்சத்தில் நாம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது, இதற்கு மாற்றம் கொண்டு வரவேண்டும். |
Friday, 15 July 2011
மும்பை தாக்குதலுக்கு பயங்கரவாத ஒழிப்பில் அரசின் தவறான கொள்கைகளே காரணம்: அத்வானி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment