Sunday, 31 July 2011

உலகின் மிகப் பெரிய குகையான ஹாங் சொன் டொங்கின் மிரட்டலான உட்பக்கம் (பட இணைப்பு)

 
‘ஹாங் சொன் டொங்’ என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும்.
இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படுகின்றது.
வியட்நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகையானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இக்குகையின் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் குகையினுள்ள இருந்து வெளியாகிய மிரட்டலான மர்ம ஒலியால் அவர் அதனுள் நுழைய முயவில்லை. அந்த மர்ம ஒலிக்கான காரணம் அதனுள் பாயும் ஆற்று நீரின் சத்தம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அதனை கண்டுபிடித்தைத் தொடர்ந்தே இது தொடர்பில் வெளியுலகிற்கு தெரியவந்தது.

இதன் நீளம் 2.5 மைல்கள் உயரம் 800 அடி என்பதுடன் அகலம் 300 அடியெனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இக்குகையின் உள்ளேயே காடு அமைந்திருப்பது இதன் விசாலத்திற்கு ஓர் உதாரணம்.
மேலும் சுமார் 150 குகைகள் இப் பிரதான குகையோடு இணைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இக் குகையானது 2 முதல் 5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்‌கேற்று பரபரப்பு

   
காரைக்கால் திருநள்ளாரில், கொம்யூன் ஊராட்சியின் தங்கும் விடுதி, கட்டணக் கழிப்பறை, கடை ஆகியவற்றின் ஏலத்தில் பிச்சைக்காரர்கள் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.காரைக்கால் திருநள்ளாரில், பிரசத்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்@தாறும் ஆயிரக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கிலும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் தேவஸ்தானம், கொம்யூன் ஊராட்சி ஆகியவை கழிப்பறை, தங்கும் விடுதிகளைக் கட்டியுள்ளது.
இவை ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம்.‌கோவில் குளத்தின் அருகே உள்ள கொம்யூன் ஊராட்சியின் கழிவறை மற்றும் தங்கும் விடுதி, வணிக வளாகத்தில் உள்ள 13வது எண் கடை ஆகியவற்றிற்கு நேற்று கொம்யூன் ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் நடந்தது. காலை 11.30 மணியில் இருந்து ஏலம் எடுக்க ஒவ்வொருவராக அலுவலகத்திற்கு வந்து முன்வைப்புத் தொகையைக் கட்டினர். திடீரென, மூன்று பிச்சைக்காரர்கள், ஏலம் விடும் அறைக்கு வந்தனர்.இவர்கள், திருநள்ளார் பகுதியில் சுற்றித்திரியும் சங்கரன்பந்தல், வைத்தீஸ்வரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் கணேசன், சண்முகம் மற்றும் மாணிக்கம்.
கையில் தட்டுடன் வந்த அவர்கள், அதில் ஏலத்தின் முன்தொகையாக ஒவ்வொருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து, கொம்யூன் அதிகாரிகளிடம் வழங்கி தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். பின், ஏலம் நடந்த இடத்தில் முன்வரிசையில் அமர்ந்து ஏலத்தை கவனித்தனர். ஏலம் துவங்கியதும், அனைவரும் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். அப்போது பிச்சைக்காரர் மாணிக்கம், 50 ஆயிரம் வரை ஏலம் கேட்டார்.
அங்கிருந்த ஆணையர் சுபாஷ், ஏலத்தொகை கட்ட உங்களிடம் பணம் உள்ளதாக என கேட்டார். அதற்கு, எங்களிடம் கோடி ரூபாய் பணம் உள்ளது என்று தெரிவித்தனர். ஏலம் எடுத்துவிட்டு நீங்கள் கிளம்பி விடுவீர்கள், எனவே பணம் வைத்திருப்பதற்கான வங்கி ஆவணம், இருப்பிட ஆவணம் எதையாவது ஒன்றை காட்டுங்கள் என்று ஆணையர் சுபாஷ் கேட்டார். அதன்பின், பிச்சைக்காரர்கள் அமைதியாக அமர்ந்துவிட்டனர். பின், தொடர்ந்து ஏலம் விடப்பட்டது. ஏலம் 1.26 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.ஏலத்தில் பிச்சைக்காரர்களும் கலந்து கொண்டது, திருநள்ளார் கொம்யூனில் பரபரப்பாக பேசப்பட்டது.

பேயை போத்தலில் அடைக்கும் சிங்கள சூனியக்காரர் (காணொளி )

  
நம்பினால் நம்புங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சூனியக்கார வைத்தியர்கள் பேய்களைப் போத்தல்களில் அடைக்கின்றார்கள். பேய்கள் ஆருக்காவது கெடுதல்கள் செய்கின்றபோது பிடித்து அடைக்கின்றனர். ஷெகான் என்கிற சிறுவன் கண்களால் பேய்கள், தெய்வங்கள் போன்றவற்றை தெளிவாக காண்கின்றார் என்று கூறி உள்ளார்.


இது மாத்திரமின்றி ஆவி தனக்கு மிகவும் அருகில் ஆவி வருவதாகவும் அது ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாகவே காணப்படுகிறதாவும் குறிப்பிட்டுள்ளார். இதனை மக்களுக்கு நம்ப வைப்பதற்காக அவர் காணும் பேய்களை பிடித்துக்காட்டும் படி கூறிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரின் வேண்டுகோளுக்கு இணக்க குறித்த இளைஞன் தனது மாமாவுடன் சேர்ந்து ஆவிகளை பிடித்து போத்தலில் அடைக்கும் காட்சிகளை நீங்களும் காணலாம். மேலும் இது பற்றி ஏராளமான விடயங்களை இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது அவர் தெரிவித்துள்ளார். போத்தல்களில் அடைக்கப்பட்ட பேய்களை நீங்கள் வீடியோக்களில் காணலாம்.

கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்ததால் கணவனைக் கொலை செய்த மனைவி: பரபரப்பு வாக்குமூலம்

 
கள்ளக்காதலனை 2ம் திருமணம் செய்ய இடையூறாக இருந்ததால் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வேலு. சென்ட்ரிங் கான்டிராக்டர். இவரது மனைவி செல்வி(35). இவருக்கு இதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கரிகாலன்(30) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது.

கடந்த 27ம் தேதி வீட்டில் வேலு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொள்ளையர்கள் தன்னை கட்டிப் போட்டு கணவரை கொன்றுவிட்டு ரூ.5 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றதாக செல்வி போலீசாரிடம் தெரிவித்தார்.
விசாரணையில் கூலிப்படையை ஏவி கள்ளக்காதலன் உதவியுடன் செல்வியே கணவரை கொலை செய்தது தெரியவந்தது.
உசிலம்பட்டி டிஎஸ்பி குமார் தலைமையிலான போலீசார் கொலையாளிகளை தேடினர். விசாரணையில் செல்வி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக கரிகாலனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். அவரை 2ம் திருமணம் செய்ய இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன் வேலு மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்றோம்.
அவர் தப்பினார். இதையடுத்து கரிகாலன் மூலம் கூலிப்படையினருக்கு ரூ.3 லட்சம் கொடுத்து கணவரை கொல்ல முடிவு செய்தோம்.
இதற்காக அவர்களுக்கு ரூ.1.6 லட்சம் கொடுத்தோம். கரிகாலன், நண்பர் சரவணன், நாகராஜ், ஜெயக்கொடி, மாலுச்சாமி(19), சதீஷ்(19) ஆகியோர் வைத்து சதித்திட்டம் தீட்டினர். கடந்த 26ம் தேதி நள்ளிரவில் கரிகாலன் வீட்டுக்கு வந்தார்.
முதலில் வேலுவை மூச்சுத் திணறடித்துக் கொலை செய்ய முயன்றனர். கணவர் போராட தொடங்கியதால் நான் கால்களை பிடித்துக் கொள்ள, வேலுவின் கழுத்தை அவர்கள் அறுத்ததுடன், மார்பு, வயிறு பகுதிகளிலும் சரமாரியாக குத்தியதில் அவர் இறந்தார். இவ்வாறு வாக்குமூலம் அளித்தார் என்றனர்.
இவ்வழக்கில் செல்வி, கரிகாலன், அன்னம்பார்பட்டி சரவணன்(29), நாவார்பட்டி சசிக்குமார், கருக்கட்டான்பட்டி நாகராஜ், மாலுச்சாமி மற்றும் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பண்ணைப்பட்டி ஜெயக்கொடியை தேடிவருகின்றனர். கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைக்கப்பட்டனர்.

பிளேபோய் தந்த ரூபா. 7.5 கோடி வாய்ப்பை மறுத்த தீபிகா

 
பொலிவூட் திரையுலக நட்சத்திரங்களுக்கு அடிக்கடி பெரிய தொகைக்கு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வாய்ப்பு வரும் எதற்கு தெரியுமா அரைநிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணத்துடன் போஸ் கொடுப்பதற்கே அது.
ஏற்கெனவே ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், ப்ரியங்கா சொப்ரா போன்றவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வந்தது அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை இந்த வாய்ப்பு ராணா நாயகி தீபிகா படுகோனேவுக்கு அடித்தது.

உலகப் புகழ்பெற்ற பிளேபோய் பத்திரிகையிடமிருந்து. ரூ 7.5 கோடி வரை தருகிறோம், பிளேபோய் செப்டம்பர் மாத இதழுக்கு அரை நிர்வாணமாக… அதாவது மேலாடை இல்லாமல் போஸ் தர வேண்டும் என்று கேட்டார்களாம்.

ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம் தீபிகா. பிளேபாய்க்கு விளம்பர படங்கள் எடுத்துத் தரும் அந்த சர்வதேச நிறுவனம் எவ்வளவோ முயன்றும் இந்த வாய்ப்பை ஒப்புக் கொள்ளவே இல்லையாம் தீபிகா.

பிளேபாய் வாய்ப்புக்காக ஹொலிவூட், பொலிவூட் நடிகைகள் தவம் கிடக்கையில், தீபிகா உறுதியாக மறுப்புத் தெரிவித்திருப்பது அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது சக பொலிவூட் நடிகைகளை.

காரைக்குடியில் கல்விப் பிச்சை!

‘பிச்சை புகினும் கற்கை நன்றே!’ என்கிறது மூதுரை. காரைக்குடி பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளி செல்வராஜ் பிச்சை எடுத்து 13 ஏழைக் குழந்தைகளைப் படிக்கவைத்துக்கொண்டு இருக் கிறார்.

”எனக்குச் சொந்த ஊரு உசிலம்பட்டிங்க. அஞ்சு வயசு இருக்கிறப்ப, திண்ணையில் இருந்து கீழே விழுந்து காய்ச்சலில் படுத்துட்டேன். அப்போ என் கால் முடமாகிப்போச்சு. இருந்தாலும் தன்னம்பிக்கையோட, 1966-ல் பி.ஏ. பொருளாதாரம் முடிச்சேன். படிச்சு முடிச்சதும் மின் வாரியத்துலயும் லைப்ரரியிலயும் வேலை கிடைச்சது.
ஆனா, அதுக்கு லஞ்சமா 2000 ரூபாய் கேட்டாங்க. குறுக்கு வழியில் வேலையில் சேர எனக்குப் பிடிக்கலை. அதுக்காக, சும்மா இருக்கவும் பிடிக்கலை. சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட ஆரம்பிச்சேன். அப்படியே சைக்கிள் மெக்கானிக் வேலைகளைக் கத்துக்கிட்டு, மதுரை, சென்னை, புதுச்சேரி, எர்ணாகுளம், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம்னு ஊரு ஊராப் போனேன். எங்கேயும் எனக்கு வேலை நீடிக்கலை. நான் படிச்ச படிப்பு எனக்கு வேலை கொடுக்கலை.
இருந்தாலும் அந்தப் படிப்பு வீணாப் போயிடக் கூடாதுனு நெனச்சேன். எங்கே போனாலும், தங்கி இருக்கும் இடத்தில் நாலைஞ்சு பிள்ளை களுக்கு இலவசமா டியூஷன் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். அங்கே இங்கே சுத்திட்டு, கடைசியா காரைக்குடிக்கு வந்து சேர்ந்தேன். ‘நான் ஒண்டியாளு.. எந்த வேலை கொடுத்தாலும் பாக்குறேன்’னு சொல்லி பல இடங்கள்ல வேலை கேட்டேன். செட்டியார் ஒருத்தரு சைக்கிள் கடையில் 50 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குக் கூப்பிட்டாரு. 50 ரூபாயைவெச்சு என்ன பண்றது? அதனால, கௌரவம் பாக்காம பஸ் ஸ்டாண்டுல கையேந்த ஆரம்பிச்சுட்டேன். தன்மானத்தை விட்டு பிச்சை எடுக்குறது எனக்கும் பிடிக்கலைதான். ஆனா, என்ன பண்றது… வயிறு இருக்கு.
என்னை நம்பி 13 புள்ளைங்க வேற இருக்கு. யாராச்சும் வேலை கொடுத்தா, இப்பவே இந்தப் பொழப்பை விடுறதுக்கு நான் தயாரா இருக் கேன்!” அழுத்தமாகச் சொன்ன செல்வராஜ், ”காலையில் 7 மணியில் இருந்து 11 மணி வரை பஸ் ஸ்டாண்டுல பிச்சை எடுப்பேன். அப்புறம் மதியச் சாப்பாட்டை பார்சல் வாங்கிட்டு வீட்டுக்குப் போவேன். குளிச்சு சாப்பிட்டுட்டு, மறுபடியும் பஸ் ஸ்டாண்டுக்குப் போவேன். 5 மணி வரைக்கும் பொழப்பைப் பாத்துட்டு வீட்டுக்குக் கௌம்பிடுவேன். 5.30 மணிக்கு எல்லாம் என்கிட்ட டியூஷன் படிக்கிற குழந்தைகள் வீட்டுக்கு வந்துடுவாங்க. 8 மணி வரைக்கும் அவங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். பிளாஸ்டிக் சாமான்கள் விக்கிறவங்க, பினாயில் விக்கிறவங்க பிள்ளை களுக்குத்தான் நான் டியூஷன் எடுக்குறேன்.

எனக்கு வர்ற வருமானத்துல, நோட்டுப் புத்தகங்கள், ஜியோமென்ட்ரி பாக்ஸ் வாங்கிக் கொடுப்பேன். போன வருஷம் அதுக்காக 2000-ம் ரூபாய் வரைக்கும் செலவாச்சு. இந்த வருஷம் 1500 ரூபாய் செலவாச்சு. நான் வாங்கித் தர்றதைப் பாக்கும்போது, அந்தப் புள்ளைங்க முகத்தில் நிறைஞ்ச சிரிப்பு வரும். அதுக்காகவே என்ன வேணாலும் பண்ணலாம் சார்!” கும்பிட்டு விட்டு தரையில் காலை இழுத்தபடி நகர்ந்து செல்கிறார் செல்வராஜ்!

வீடியோ கேம் விளையாட சொந்தப் பிள்ளைகளை விற்ற தம்பதி

சீனாவைச் சேர்ந்த இளம் தம்பதி ஒன்று வீடியோ கேம் விளையாடுகின்றமைக்காக சொந்தக் குழந்தைகளை விற்பனை செய்து உள்ளது. லி லின், லி யு ஆன் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் 2007 ஆம் ஆண்டு முதன் முதல் நெட் கபே ஒன்றில் சந்தித்துக் கொண்டனர். திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.
நெட் கபேயில் வீடியோ கேம் விளையாடுகின்றமைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கின்றமைக்காக மூன்று குழந்தைகளையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விற்று இருக்கின்றார்கள். மூன்றாவது குழந்தையை விற்பனை செய்து கொண்டபோது லி லினின் தாய் கண்டுபிடித்து விட்டார்.

வீட்டின் ஒவ்வொரு அறையிலும் இரகசிய கமெராக்கள்: மாணவிகள் அதிர்ச்சி

அமெரிக்காவில் மாணவிகள் இருவர், தாம் தங்கியிருந்த வீட்டின் அறைகளில் இரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை அவதானித்து அதிர்ச்சியுற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
புளோரிடா மாகாணத்திலுள்ள தொடர்மாடிக் கட்டிடமொன்றிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல்கேரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கோடைக் காலத்தை கழிப்பதற்காக வந்த வான்யா அமோக்கோவரீவா (வயது 22) ரலிஸ்டா தாம்போவா (வயது 23) ஆகிய இரு பெண்களும் குறித்த தொடர் மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் தங்கியுள்ளனர்.
இவர்கள் தங்கியிருந்த வீட்டின் குளியலறை உட்பட ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக குறித்த பெண்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் கமெராக்கள் மூலம் யாரோ அவதானித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இக்கருவிகள் புகை எச்சரிக்கைக்கான கருவிகளாக இருக்கும் என்றே இம்மாணவிகள் ஆரம்பத்தில் கருதியிருந்தனர். ஆனால் அவை கமெராக்கள் என்பதை அறிந்து அவர்கள் மிக அதிர்ச்சியடைந்துள்ளனர்.
'இது உண்மையில் பயங்கரமானது. இவ்வாறான சம்பவம் எனக்கும் எனது நண்பிக்கும் நடக்குமொன்று கொஞ்சமேனும் எதிர்பார்க்கவில்லை.
'நாங்கள் ஒரு கோடைப் பருவத்தை அமெரிக்காவில் கழிக்கவும் இங்கு வேலை செய்யவுமே வந்தோம்' என தாம்பஸோவோ தெரிவித்துள்ளார்.
இக்கமெராக்களை யார் பொருத்தினார்கள் என்பதை கண்டறிவதற்கு புலனாய்வாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Saturday, 30 July 2011

மனநலம் படிக்கப் போய் மனநிலை தவறிய பிரிட்டிஷ் பெண்!

Ms Jacobs
லண்டன்: மனநலம் குறித்த படிப்பை படித்துவந்த லண்டன் பெண், திடீரென ஒரு நாள் மனநலம் பாதிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் தனது நினைவுகளை இழந்து அவதிப்பட்டார்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் நவோமி ஜாக்கப்ஸ் (34). இவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு ஒரு நாள் காலையில் தனது படுக்கையில் இருந்து எழுந்தார். அப்போது அவரது 17 வருட நினைவுகள் அனைத்தும் மறந்து போயின.

கடந்த 1992-ம் ஆண்டு அவர் 15 வயது சிறுமியாக இருந்த போது பள்ளியில் முழு ஆண்டு தேர்வு எழுதியது தான் நினைவுக்கு வந்தது. அவரது மகன் அம்மா என்று அழைத்ததை அவரால் எற்றுக் கொள்ள முடியவில்லை.

தன்னை ஒரு சிறுமி போன்று பாவித்தார். எனவே, அவரை டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஞாபக மறதி நோய் பாதிக்கும் முன்பு அவர் மன நலம் குறித்த கல்வி படித்து வந்தார். அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இந்த ஞாபக மறதி வந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

3 ஆண்டு சிகிச்சைக்கு பிறகு தற்போது இவருக்கு ஓரளவு பழைய நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்துள்ளன. ஞாபக மறதியால் தான் பட்ட கஷ்டங்களை அவர் புத்தகமாக எழுதியுள்ளார்.

தனது நோய் முற்றிலும் குணமடைந்தததும் முகத்தை கண்ணாடியில் பார்த்ததாகவும் அப்போது சுருக்கமடைந்த முகத்துடன் வயதான தோற்றத்தில் தான் தெரிந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது மகன் தன்னை அம்மா என்று அழைத்த போதுதான் தனது நிலையை புரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

யோஹன் - அத்தியாயம் ஒன்று: விஜய் நடிக்கும் கவுதம் மேனன் படம் அறிவிப்பு!

Yohan: Adhyayam Ondru
நண்பன் படம் முடிந்ததும் விஜய் நடிக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தப் படத்தை இயக்குபவர்... கவுதம் மேனன்! படத்துக்குப் பெயர் யோஹன்- அத்தியாயம் ஒன்று!!

இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே டேக்லைனாக 'மிஷன் -1 நியூயார்க் சிட்டி' என குறிப்பிட்டுள்ளனர். வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கவுதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைக்கு ஏ ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு மனோஜ் பரமஹம்ஸா, பாடலுக்கு தாமரை, கலை இயக்கத்துக்கு ராஜீவன் என கவுதம் மேனனின் பரிவாரம் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகிறது.

பக்கா ஆக்ஷன் படமான யோஹா, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகிறது!

திருவாரூரில் மறியல் போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார் குடியில் இன்று இரவு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சென்றார்.
அங்கிருந்து அவர் திருவாரூக்கு காரில் சென்றார். திருவாரூர் மாவட்ட எல்லையான திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னுமிடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டிருந்தனர்.
மு.க.ஸ்டாலின் வந்ததும் அந்த பகுதிக்கு பொலிசார் விரைந்து வந்தனர். நேற்று சமச்சீர் கல்வியை எதிர்த்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்திய போது பள்ளியில் இருந்து மாணவர்கள் பஸ்சில் திரும்பியபோது கொரடச்சேரி அருகே பஸ் கவிழ்ந்து விஜய் என்ற மாணவர் பலியானார்.
இதற்கு பூண்டி கலைவாணன் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவரை கைது செய்ய பொலிசார் வந்திருந்தனர். இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அவரை பொலிசார் கைது செய்தனர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன் மற்றும் விஜயன் எம்.பி. உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆணா, பெண்ணா என்ற குழப்பத்தில் ஹிலாரி கிளிண்டன்: பேஷன் நிபுணர் கிண்டல்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தான் ஆணா, பெண்ணா என்று குழப்பத்தில் இருப்பதாக பிரபல அமெரிக்க பேஷன் நிபுணர் டிம் கன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல பேஷன் நிபுணர் டிம் கன். அவர் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ளார். அவர் நியூயோர்க் செனட்டராகவும், முன்னாள் முதல் குடிமகளாகவும் இருந்துள்ளார். பின் ஏன் இப்படி ஆடை அணிகிறாரோ?
ஹிலாரி தான் ஆணா, பெண்ணா என்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் தொள தொளவென உள்ள ஆண்களின் ஆடைகளை அணிகிறார். அது அவருக்கு சற்றும் பொருந்தவில்லை என்றார்

அமெரிக்காவை விட அதிகளவு இருப்பு வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம்

அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் உள்ள ரொக்க இருப்பு அமெரிக்க அரசின் ரொக்க இருப்பை விட அதிகம் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்திடம் 75.87 பில்லியன்(ஒரு பில்லியன்=100 கோடி) டொலர் ரொக்க இருப்பு உள்ளது. ஆனால் அமெரிக்க அரசின் கருவூலத்தில் 73.76 பில்லியன் டொலர் மட்டுமே ரொக்க இருப்பு உள்ளது.
அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று குடியரசு, ஜனநாயக கட்சிகள் கோரிவருவதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் கருவூலம் அளித்த பதிலில் இருந்து இந்த விவரம் பெறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசிடம் உள்ள ரொக்க இருப்பு இந்த அளவிற்குத்தான் என்பதால் கடன் உச்ச வரம்பை உயர்த்த முடியாது என்று பதிலளித்துள்ளது.
அமெரிக்க அரசிற்கு தற்போது 14.3 டிரில்லியன்(ஒரு டிரில்லியன்=1000 பில்லியன்) டொலர் உள்ளது. இதற்கு மேலும் கடன் வாங்கினால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதித்துவிடும் என்று அமெரிக்க கருவூலம் கூறியுள்ளது.
சந்தை மூலதனமாக 363.25 பில்லியன் கொண்டுள்ள ஆப்பிள் அமெரிக்காவின் மிகப் பெரும் எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. 3ஜி அலைபேசி வர்த்தகத்தில் அடியெடுத்து வைத்த பிறகு அதன் வளர்ச்சி அபரீதமான அளவிற்குச் சென்றுள்ளது

ஈழத் தமிழனைப்போல் புலம்பெயர் தமிழன் ஒன்றுபடவேண்டும்

வருடா வருடம் வருகின்ற எத்தனை சோக நாட்களை ஈழத் தமிழன் மனதில் சுமக்கின்றான்? நமது மக்களையும், மாவீரர்களையும், மாமனிதர்களையும் பறிகொடுத்த நாட்களெல்லாம் நினைவு தினங்களாகி ஈழத் தமிழனின் நாட்காட்டிகள் நிறைத்துவிட்டன.
சுனாமி போன்ற இயற்கையின் கொடூரங்கள்கூட எமக்கு அழிவுகளைத் தந்து அதன் சோக நினைவுகளை பதிவு செய்துவிட்டு சென்றுள்ளன. அதுவும் ஆடி மாதம் என்றாலே 1983 இல் இலங்கை அரசினால் அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அதிஉச்ச பயங்கரவாதக் ‘கொலைக்களமே’ அனைவருக்கும் நினைவில் வரும்.
அதிக உயிர் உடமைகளை ஈழத் தமிழன் ஆரம்ப காலகட்டத்தில் பலிகொடுத்த ‘கறுப்பு ஜூலை’ என்பது ஈழத் தமிழன் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒன்று. அறுபது ஆண்டு உரிமைப் போராட்டம் இன்றுவரை தொடரவே செய்கிறது. இடையில் வந்த ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தபோதும், அதனால் ஆயிரக்கணக்கில் நம் உறவுகளை இழந்தபோதும், சொந்த மண்ணில் தமக்கிருக்கும் உரிமைகளை பெற்று வாழவேண்டும் என்ற தமிழனின் உணர்வு இன்னும் சாகவில்லை என்பதை இவ்வருட ஆடிமாத நினைவு நாட்களில் இடம்பெற்ற உள்ள+ர் தேர்தலின் முடிவுகள் சுட்டி நிற்கிறன.
கோடிக்கணக்கில் செலவு செய்து, வடகிழக்கில் தேவையில்லாத ஒரு தேர்தலை நடாத்தி மூக்குடைபட்டு நிற்கிறது இலங்கை அரசு. என்ன நோக்கத்துக்காக இந்தத் தேர்தல் இலங்கை அரசால் நடாத்தப் பட்டதோ, அதன் நோக்கம் நிறைவு பெறவில்லை. அதி உச்சமான கொடுமைகள் நடந்தேறி இரண்டு வருடங்கள் கடந்துவிட்டதால், ஏற்பட்ட அழிவுகளை தமிழன் மறந்திருப்பான் என்று தப்புக் கணக்குப் போட்டது அரச தரப்பு.
அழிவுகளால் வாடி வதங்கி நிற்கும் தமிழன் அற்ப சலுகைகளுக்கும், பெய்யான வாக்குறுதிகளுக்கும், சாராயப் போத்தலுக்கும் அடிமையாகிவிடுவான் என்று நினைத்து அரச பரிவாரங்களை களத்தில் இறக்கியிருந்தார் இலங்கை அதிபர். கூடவே ஒட்டுக் குழுக்கள் புடைசூழ, அபிவிருத்திக்கு அடிக்கல் நாட்டும் போர்வையில் வடக்கை வலம்வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனாலும் எதையுமே சாதிக்க முடியவில்லை. ஈழத் தமிழர்கள் தங்கள் உணர்வில் உறுதியாக இருந்தது தேர்தல் முடிவில் வெளிவந்தது.
‘அபிவிருத்தி...!’ என்ற சொல்லுக்கு தங்க முலாம் பூசி தேர்தலில் குதித்தது இலங்கை அரசு. ‘அரசியல் தீர்வு!’ என்ற அறுபது வருடகால அடிப்படைப் பிரச்சனையை முன்வைத்தது தமிழர் தரப்பு. முப்பது வருடகாலம் தொடர் இழப்புகளை சந்தித்தும், இன்னமும் மரத்தின் கீழும் குடிசைகளிலும் முகாம்களிலும் வாழும் நிலையிலும்கூட, பட்டினி வாழ்வு வாழ்ந்தாலும் தமது சொந்த மண்ணில் உரிமையுள்ள மனிதராய் வாழவேண்டும் என்பதே தங்கள் முடிவு என்பதை மக்கள் முதன்மைப் படுத்தியதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன
நாடி பிடித்துப் பார்த்த இந்த ஆடி மாதத் தேர்தல் முடிவுகள் சம்பந்தப்பட்ட சிலரை ஆடி அடங்க வைத்திருக்கிறது. அனியாயமாக பணத்தை கொட்டிக் கொடுத்து தோற்று விட்டோமே என்று குமுறுவது அவர்களது வார்த்தைகளில் தெரிகிறது. அவர்கள் ஒன்றை புரிந்தகொள் வேண்டும்!
எங்களது மக்களை கடந்த முப்பது ஆண்டுகளாக பட்டினியோடும், குடிசை வாழ்வோடும் வாழப் பழக்கிவிட்டவர்கள் இலங்கை அரசுகள்தான் என்பதும், அவற்றுக்கு பழக்கப் பட்டதனால்தான் அபிவிருத்தியை விடவும், தமது மண்ணில் நிம்மதியோடு தலை சாய்க்கும் உரிமை தமக்கு வேண்டும் என்பதை முதன்மைப் படுத்தி இலங்கை அரசுக்கு புரியவைத்திருக்கிறார்கள்.
முப்பது ஆண்டுகளாக பொரளாதார தடை போட்டு, வெளிநாடுகள் கொடுத்த மாவையும் சீனியையும் மட்டுமே பிச்சையாகப் போட்டு மக்களை வாட்டி வதைத்து அவர்களது உயிர்களையே துச்சமாக மதித்தவர்கள்,
சுனாமியால் தமிழினம் இழப்புகளை சந்தித்தபோது கூட, வெளிநாட்டு உதவிகள் வவுனியாவை நெருங்க முதலே பறித்து திசை திருப்பியவர்கள்,
இப்போது வடகிழக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் வெளிநாட்டு உதவிகளை பெற்று தேர்தலில் வெல்ல நினைத்தார்கள். எதுவுமே பலிக்கவில்லை ஈழத் தமிழனிடம்.
அரசியல் தீர்வின் மூலம் அன்னியப் படைகளின் ஆதிக்கம் இல்லாத, சம உரிமையுள்ள தீர்வைத் தந்தால், நாட்டின் அபிவிருத்தியை தமிழன் தானாகவே உயர வைப்பான் என்பது ஏனோ சிங்களவனுக்கு புரியவில்லை.
அதேவேளை, தாயகத் தமிழனிடம் கற்றுக்கொள்ள வெண்டிய பாடம் நிறையவே புலம்பெயர் தமிழனுக்கு இருக்கிறது. ஒற்றுமைப் படவேண்டும் என்ற உணர்வு மட்டுமே தமிழனை வாழவைக்கும்.

இலங்கையில் சுமார் 5000 காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் அவசியம் - ஐக்கிய நாடுகள் சபை

 
காணாமல் போய் 17 மாதங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட மனித உரிமை நடவடிக்கையாளரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
பட்டானி ராசிக் என்ற புத்தளத்தை தளமாகக்கொண்ட இந்த மனித உரிமை நடவடிக்கையாளர், கடந்த 2010 ஆம் ஆண்டு பொலநறுவையில் வைத்து காணாமல் போனார்.
இந்தநிலையில் அவர் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள வீடு ஒன்றின் புதைக்குழியில் இருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரத்தின் பேச்சாளர் ரவீனா சம்தாசனி, இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியமானது. ஏற்கனவே இவ்வாறான பல காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில், இன்னமும் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ரவீனா வலியுறுத்தினார்.
குறித்த மனித உரிமைகள் நடவடிக்கையாளரின் கொலை தொடர்பிலான சந்தேகநபர்கள், அரசியல் செல்வாக்கு காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பே கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த கொலையின் பிரதான சந்தேகநபர், இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பர் என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்தக்கொலை விசாரணையில் காட்டிய முனைப்பை இலங்கை காவல்துறையினர், ஏனைய காணாமல் போனோர் விடயத்திலும் காட்டவேண்டும் என்று மன்னிப்பு சபை கேட்டுள்ளது.
இலங்கையில் தற்போது வரையில் 5653 காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் தேங்கியுள்ளன.

உலகின் மிகப்பெரிய Remote Control விமானம் (வீடியோ இணைப்பு)

 
NASA வால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய Remote Control விமானத்தை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். இந்த விமானத்தின் பெயர் x-48 B என்பதாகும்.





சொக்லேட்டினால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் (படங்கள் இணைப்பு)

 
சிற்பங்கள் கற்கள் மணல் மற்றும் பல வினோதமான பொருட்களை வைத்து செய்யப்பட்டதை நம்முடைய தளத்தில் பார்த்திருக்கிறோம். அப்படி வினோதமான சிற்பம் தான் இந்த சொக்லேட் சிற்பங்கள்.











இலங்கை ஐ.நாவுக்கு எதிராக பாடல்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இலங்கை அவற்றுக்கு பதிலளிப்பதை விடுத்து தம் தவறை மறைப்பதற்காக பல்வேறு மட்டங்களில் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து வருகிறது.

மனித உரிமை மீறல்களுக்கும், போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறுவதை தட்டிக் கழித்து, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் பணிகளுக்கு சர்வதேசம் தடையாக இருப்பதாக அரசாங்கம் குற்றம்சாட்டிவருகிறது.

இந்தவகையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சனல் 4 தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு எதிராக இலங்கையின் பாடகர் ருக்ஷான் பெரேரா “Shame on You” என்ற தலைப்பில் பாடல் ஒன்றை இயற்றியுள்ளார்.

போருக்குப் பின்னர் அனைத்து இலங்கையர்களும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அவர்களது அனைத்து காயங்களும் குணமடைந்து வருகின்றது.

மற்றும் ஐ.நாவும், சனல் 4 தொலைக்காட்சியும் நாட்டை பிளவுபடுத்த முற்படும் பிரிவினைவாதிகளுடன் இணைந்து செயற்படுகின்றன என்ற தொனியில் குறித்த பாடல் அமைந்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் மேலும் கேலிக்குரிய ஒன்றாக மாறிவருகின்றது என்பது தெட்டத்தெளிவு.

Friday, 29 July 2011

புதுமுக நடிகையுடன் காதல் தோல்வி: நடிகர் அஜய் திடீர் தற்கொலை

 
அம்புலி என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜய். இது 3டி படமாகும். ஓர் இரவு என்ற திகில் படத்தை எடுத்த இரட்டை இயக்குனர்கள் ஹரி சங்கர், ஹரீஸ் நாராயணன் ஆகியோர் டைரக்டு செய்கின்றனர். படப்பிடிப்பு முடிந்து அம்புலி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் அஜய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் சாவுக்கு காரணம் தெரியவில்லை.

அம்புலி படத்தில் அஜய் ஜோடியாக நடித்தவர் புதுமுக நடிகை சனம். இவரும் பெங்களூரை சேர்ந்தவர். சனம் மீது அஜய் காதல் வயப்பட்டதாகவும் ஆனால் சனம் காதலை ஏற்காததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியுள்ளது.

போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அஜய் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.

இதுபற்றி அம்புலி படத்தின் இயக்குனர் ஹரி சங்கர் கூறியதாவது:-

அம்புலி படத்தை முடித்து விட்டு அஜய் பெங்களூர் சென்று விட்டார். டப்பிங் பேசும் போது அழைக்கிறோம் என்று அவரிடம் சொல்லி அனுப்பினோம். அஜய்க்கு தமிழில் பேச தெரியும். எனவே தான் குரல் பொருத்தமாக இருந்தால் அவரையே பேச வைக்கலாம் என முடிவு செய்தோம்.

ஆனால் திடீரென்று தூக்கில் தொங்கி அஜய் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனடியாக பெங்களூர் சென்றோம். அஜய் வீட்டுக்கு போய் துக்கம் விசாரித்தோம். தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

அம்புலி படத்தில் கதாநாயகியாக நடித்த சனத்தை அஜய் காதலித்தாரா என்பதும் எங்களுக்கு தெரியாது. அஜய் பெற்றோர் எங்களிடம் விசாரித்தனர். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஏதேனும் சம்பவங்கள் நடந்ததா என்று கேட்டனர். எங்களுக்கு தெரிந்த வரை அப்படி எதுவும் இல்லை என்றோம்.

அஜய் இறந்ததால் அம்புலி படத்தில் அவருக்கு வேறு ஆள் வைத்து டப்பிங் பேச வைத்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜய் உதிரம் என்ற படத்திலும் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இதனால் அந்த படக்குழுவினர் தவிப்பில் உள்ளனர்.

சாக்கடைக்குள் தலை கீழாகத் தொங்கி தொலைபேசியைத் தேடிய அமெரிக்கர்!

சாலையோரத்தில் உள்ள சாக்கடை கழிவு நீரினுள் விழுந்த கைத்தொலைபேசியைத் தேடி குழிக்குள் தலை கீழாகத் தொங்கி தலையை வைத்து தேடும் ஒருவரையே படத்தில் காண்கிறீர்கள்.

21 வயதான Jared Medeiros என்ற அமெரிக்கரே மேற்படி வீரதீரச் செயலில் இறங்கியவராவார்.

இறுதியாக தீயணைப்பு வீரர் ஒருவரின் உதவியுடன் கைத்தொலைபேசி மீட்க்கப்பட்டது.

60 வயதுக் குழந்தையைப் பிரசவித்த 92 வயதுப் பாட்டி (படங்கள் இணைப்பு)

 
92 வயது மூதாட்டி ஒருவர் 60 வயதுக் குழந்தை ஒன்றை சீனாவில் சில நாட்களுக்கு முன் பிரசவித்து உள்ளார். என்ன அதிசயமாக இருக்கின்றதா? மூதாட்டியின் பெயர் Huang Yijun. சீனாவின் தென்பகுதியைச் சேர்ந்தவர். குழந்தை இறந்துதான் பிறந்து இருக்கின்றது. இவர் உண்மையில் ஒரு கல் குழந்தையைத்தான் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சுமந்து வந்திருக்கின்றார்.

வயிற்றில் உருவான சிசு 1947 ஆம் ஆண்டு இறந்து இருக்கின்றது. இறந்த சிசுவை வெளியில் எடுக்க வெண்டும் என்று வைத்தியர்கள் அந்நாட்களில் சொல்லி இருக்கின்றனர். ஆனால் வறுமை காரணமாக இவர் பேசாமல் இருந்து விட்டார்.

இறந்த சிசு வயிற்றுக்குள் கல்லைப் போல் ஆகி விட்டது. இது மிகவும் அரிதாக ஏற்படக் கூடிய நோய்.

முட்டை கருப்பைக்குள் வெளியில் தங்கி விடுகின்ற அதே சமயம் மகப் பேறு தோல்வி அடைகின்றபோது இந்நோய் ஏற்பட்டு விடுகின்றது.





Thursday, 28 July 2011

தன் குஞ்சை பாம்பிடமிருந்து பாதுகாக்க போராடும் பறவை (வீடியோ இணைப்பு )

மறபொத்துக்குள் இருக்கும் தனது குஞ்சை உள்ளே நுழைந்த பாம்பிடமிருந்து பாதுகாக்க பாதுகாக்க போராடும் ஒரு தாய் பறவையின் போராட்டம்

இராணுவ இறுதி மரியாதை செய்ய தெரியாமல் தவித்த ராணுவ வீரர்கள் -காணொளி

இராணுவ இறுதி மரியாதை செய்ய தெரியாமல் தவித்த ராணுவ வீரர்கள்-இவர்களால் இராணுவத்திற்கும் கேவலம்,நாட்டுக்கும் கேவலம்.

புலிகளின் பாணியில் தமிழர்கள் வேட்டு: ஆனால் வோட்டு !



புலிகள் அரசை எப்படி துப்பாக்கி வேட்டுகள் மூலம் தாக்குவார்களோ அதனைப்போல தமிழர்கள் வோட்டு (வாக்களித்து) இலங்கை அரசு மீது தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக நெதர்லாந்தில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி தெரிவித்துள்ளது. நெதர்லாந்தின் உலக வானொலி இவ்வாறன ஒரு செய்தியை தனது தலைப்பாக இட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் விடுதலைப் புலிகளின் வாசனை தெரிவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு தமது நாட்டில் மனித உரிமை மீறப்படவில்லை, யுத்தக்குற்றங்கள் இடம்பெறவில்லை, தமிழர்கள் சம உரிமையோடு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்று கூறிவந்தாலும், நடந்து முடிந்த தேர்தல் அவை அனைத்தையும் கிழித்து எறிந்துள்ளது என அவ்வானொலி தெரிவித்துள்ளது.

புலிகள் துப்பாக்கி வேட்டுகள் கொண்டு தாக்குவார்கள் தமிழர்கள் வோட்டுகளைக் கொண்டு தாக்கியுள்ளனர் என அது குறிப்பிட்டுள்ளது பல அர்த்தங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புகளையும், இனச் சுத்திகரிப்புகளையும் அது சுட்டிக்காட்டத் தவறவில்லை. சமாதானத்துக்காவும் மக்களை மீட்கவுமே தாம் போர் புரிந்தோம் என இலங்கை அரசு கூறிவந்தது. அது உண்மை என்றால் மீண்ட மக்கள் ஏன் இலங்கை அரசுக்கு வாக்களிக்கவில்லை என்ற கேள்விகளையும் அவ்வானொலி மேலும் எழுப்பியுள்ளது

விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை... கேரவனை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்


சென்னை: நடிகர் விஜய்யின் நண்பன் படப்பிடிப்பில் ரசிகர்கள் திடீரென்று புகுந்த ரகளை செய்தனர். கேரவனை அடித்து நொறுக்கினர். இந்தியில் ஹிட்டான அமீர்கானின் 3 இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் தயராகிறது.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கின்றனர். எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்றைய படப்பிடிப்பின்போது 200 பேர் திடீரென அந்தக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டனர்.

அவர்கள் விஜய் உள்ளிட்ட நடிகர்களை பார்க்க முண்டியடித்தனர். நிலைமையை உணர்ந்து விஜய், ஜீவா போன்றோர் ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து விட்டுச் சென்றார்கள். ஆனால் கூட்டத்தினர் திரும்பிச் செல்லவில்லை. அவர்கள் படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிகர்களின் கைகளை பிடித்து இழுக்க துவங்கினர்.

இதனால் படப்பிடிப்பை ஷங்கரால் நடத்த இயலவில்லை. ரசிகர்களிடம் கலைந்து செல்லும்படி வேண்டினார். அவர்கள் போகவில்லை. அரங்குகளை சேதப்படுத்தி ரகளை செய்தனர். கேரவன் கண்ணாடிகளையும் உடைக்க ஆரம்பித்தனர். அவர்களின் இந்த நடவடிக்கையால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியானார்கள்.

உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை வெளியேற்றினர். இந்த சம்பவத்துக்கு பிறகு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

நாடுகளுக்கிடையே உள்ள எல்லைகள் (படங்கள் இணைப்பு)


ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு எல்லை கோடு உள்ளது. அந்த எல்லை கோட்டை கடந்தால் வேறு நாட்டிற்கு சென்று விடுவோம். அப்படி உலகில் உள்ள சில நாடுகளின் எல்லை பகுதிகள் இதோ உங்களுக்காக.

LAOS, MYANMAR & THAILAND

GERMANY & CZECH

SPAIN & FRANCE

INDIA & PAKISTAN

PAKISTAN & CHINA

US & CUBA

ITALIA & FRANCE

SOUTH & NORTH KOREA

NEPAL & INDIA

ENGLAND & SCOTLAND

இலங்கை போற் குற்ற ஆணை சிப்பாய்களுக்கு வேலையை முடிக்க உத்தரவிடப்பட்டது - சனல்4 (வீடியோ இணைப்பு)

 
இராணுவத் தளபது சவேந்திர சில்வா கருத்துத் தெரிவிக்கையில், ராஜபக்ஷவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின்படியே மக்களை சுட்டதாக கூறியிருந்தார்.


ஈழப்போர் இறுதி நாளில் 58வது, 59வது படைகளின் மும்முர படையெடுப்பினாலேயே பயங்கரவாதத்தை முற்றிலும் அழித்ததாக கூறுகின்றார்.

இவ் இறுதிப் போரின் போது காண்போர் எல்லோரையும் சுடுவதற்கு ஒவ்வொரு சிப்பாய்க்கும் உரிமை இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க கருத்துத் தெரிவிக்கையில், எனது ஆட்சிக் காலத்தில் இவ்வாறான பெருந்திரளான மக்களை கொல்லவில்லை எனவும், தனது பிள்ளைகளும் இலங்கையின் படுகொலைக் களம் ஆவணத் திரைப்படத்தைப் பார்வையிட்டு, இவ் ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இப்படியான கொடுமையா நடந்தது என பயந்து, நாங்களும் ஒரு இலங்கைச் சிங்கள இனத்தைச் சேர்ந்தோம் என சொல்வதற்கே வெட்கமாக இருக்கின்றது என கூறியதாக சந்திரிக்கா தெரிவித்திருந்தார்.


நன்றி தமிழ்வின் இணையம்

நடிகர் விஜய், தமிழீழம் மலரவும், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் எப்போதும் பாடுபடுவார்! - அவரது தந்தை லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வி (ஓடியோ இணைப்பு)


இலங்கையின் போர்க்குற்றவாளியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்�ஷவை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு நடிகர் விஜய் அவர்கள் ஆதரவு வழங்க மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.


அதனை நாமும் எமது செய்தித்தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

அத் தகவலின் உண்மை நிலையினை அறிந்து கொள்வதற்காக பிரபல திரைப்பட இயக்குனரும், இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தையாருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களை லங்காசிறி வானொலி நிறுவனத்தினர் தொடர்பு கொண்டபோது,

இளைய தளபதி விஜய் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக யாரும் சந்திக்கவில்லை எனவும்,

இளைய தளபதி விஜய் அவர்கள் கையெழுத்திட மறுக்கவில்லை எனவும்,

இது அரசியல் காரணங்களுக்காக ஒரு தரப்பினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட செய்தி எனவும்,

இளைய தளபதி விஜய் அவர்கள் தமிழீழம் மலரவும், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் எப்போதும் பாடுபடுவார் எனவும் அவரது தந்தையாரான S.A சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தையார் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவத்தை நீங்கள் இங்கே கேட்கலாம்.

நன்றி தமிழ்வின் இணையம்

ஜீவாவிடம் மன்னிப்பு கேட்ட விஜய்... (படங்கள் இணைப்பு)


ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'நண்பன்'. இதேவேளை, ஜீவா கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளிவரவுள்ள திரைப்படம் 'ரௌத்திரம்'. இந்தப் படத்தின் பாடல் வெளியீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

தன்னுடைய ரௌத்திரம் படத்தின் பாடல்களை இயக்குனர் ஷங்கர், விஜய் மற்றும் இலியானா ஆகியோரை வைத்து வெளியிட ஜீவா தீர்மானித்திருந்தார். அதற்கான அழைப்பினையும் அவர்களுக்கு விடுத்திருந்தார்.

ஜீவாவின் அழைப்பை ஏற்று தாங்கள் வந்து 'ரௌத்திரம்' திரைப்படத்தின் பாடல்களை வெளியிட்டு வைப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் நண்பன் படத்தின் பட்பிடிப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்தானதால் அவர்களால் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

அவர்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்த ஜீவா, பின்னர் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து பாடல் சீடியினை வெளியிட்டார்.

பாடல் வெளியீட்டு விழாவுக்கு கடைசிநேரத்தில் வராமல் போனதால் நடிகர் விஜய் மற்றும் டைரக்டர் ஷங்கர் ஆகியோர் ஜீவாவிடமும் அவரது தந்தையும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.பி.சௌத்ரியிடமும் மன்னிப்பு கேட்டுள்ளனர். இருப்பினும் இலியானா பற்றி தகவல் ஏதும் இல்லை