Saturday, 30 July 2011

இலங்கை ஐ.நாவுக்கு எதிராக பாடல்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இலங்கை அவற்றுக்கு பதிலளிப்பதை விடுத்து தம் தவறை மறைப்பதற்காக பல்வேறு மட்டங்களில் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து வருகிறது.

மனித உரிமை மீறல்களுக்கும், போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறுவதை தட்டிக் கழித்து, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் பணிகளுக்கு சர்வதேசம் தடையாக இருப்பதாக அரசாங்கம் குற்றம்சாட்டிவருகிறது.

இந்தவகையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சனல் 4 தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு எதிராக இலங்கையின் பாடகர் ருக்ஷான் பெரேரா “Shame on You” என்ற தலைப்பில் பாடல் ஒன்றை இயற்றியுள்ளார்.

போருக்குப் பின்னர் அனைத்து இலங்கையர்களும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அவர்களது அனைத்து காயங்களும் குணமடைந்து வருகின்றது.

மற்றும் ஐ.நாவும், சனல் 4 தொலைக்காட்சியும் நாட்டை பிளவுபடுத்த முற்படும் பிரிவினைவாதிகளுடன் இணைந்து செயற்படுகின்றன என்ற தொனியில் குறித்த பாடல் அமைந்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் மேலும் கேலிக்குரிய ஒன்றாக மாறிவருகின்றது என்பது தெட்டத்தெளிவு.

No comments: