சீனாவைச் சேர்ந்த இளம் தம்பதி ஒன்று வீடியோ கேம் விளையாடுகின்றமைக்காக சொந்தக் குழந்தைகளை விற்பனை செய்து உள்ளது. லி லின், லி யு ஆன் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் 2007 ஆம் ஆண்டு முதன் முதல் நெட் கபே ஒன்றில் சந்தித்துக் கொண்டனர். திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.நெட் கபேயில் வீடியோ கேம் விளையாடுகின்றமைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கின்றமைக்காக மூன்று குழந்தைகளையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விற்று இருக்கின்றார்கள். மூன்றாவது குழந்தையை விற்பனை செய்து கொண்டபோது லி லினின் தாய் கண்டுபிடித்து விட்டார்.

No comments:
Post a Comment