விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்து வளர்ந்த, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டை நேற்று இரவோடு இரவாகப் படையினர் இடித்து அழித்து இருந்த இடம் தெரியாது அகற்றி உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். ![]() நேற்று இரவு 10.15 மணியளவில் பிரபாகரனின் வீட்டுக்கு இயந்திரங்களுடன் வருகை தந்த படையினர் அதிகாலை ஒரு மணி வரை இடிபாடுகளை அகற்றியுள்ளனர். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த எம்.கே. சிவாஜிலிங்கம், 'பிரபாகரனின் வீடு ஏற்கனவே இராணுவத்தினரால் இடித்து உடைக்கப்பட்டிருந்தது. இதேவேளை தெற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதனைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினர். ஆனால் தற்போது வீட்டின் இடிபாடுகள் இடித்து அழித்து இருந்த இடம் தெரியாது அகற்றப்பட்டுள்ளன. அந்த வீடு தனிநபர் ஒருவருக்கு சொந்தமானது. எனவே அதனை இடிப்பது சட்டவிரோதமான செயலாகும் எனத் தெரிவித்தார். |
Thursday, 25 August 2011
பிரபாகரனின் வீடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது:
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment